கலைவானர் என் எஸ் கே தொடங்கி சந்திரபாபு, நாகேஷ் முதல் தற்போதைய வடிவேல், விவேக் வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் தமிழ்சினிமா ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பாணியை அமைத்து வெற்றிநடை போட்டவர்கள். யாருடனும் யாரையும் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஒவ்வொரு தலைமுறையிலும் நகைச்சுவைக்கென இருக்கும் அளவு கோள்கள் மாறி வந்திருக்கின்றன. எனவே என் எஸ் கே யுடனோ, நாகேஷுடனோ, வடிவேலுடனோ கவுண்டமணியை ஒப்பிடக் கூடாது.
நாடக நடிகராக இருந்த கவுண்டமணி பெரும் போராட்டங்களுக்குப் பின் 70 களின் மத்தியில் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்களை தமிழ் சினிமாவில் பெற்றார். அன்றிலிருந்து 2000 ஆவது ஆண்டு வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தார். இந்த 25 ஆண்டுகளில் அவருடைய கேரியர் மூன்று முறை சரிவை சந்தித்தது. ஒவ்வொருமுறை கவுண்டமணி சரிவில் இருந்து மீளும் போதும் முன் இருந்த அந்தஸ்தை விட கூடுதல் அந்தஸ்துடனேயே வலம் வந்தார்.
கவுண்டமணியின் பெரும் பலம் என்பது அவர் ஏற்று நடித்த வித்தியாச வேடங்களே. அன்றாட வாழ்வில் நாம் காணும் சாமானியர்கள் அமைப்பை எதிர்த்தோ, புனிதத்தை எதிர்த்தோ பேசுவது போல அமைக்கப்பட்ட வேடங்களே அவரை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலோனோரின் மனதில் படிந்திருப்பது அவர் செந்திலை திட்டி செய்த காமெடிகள்தான். சிலர் செந்தில் இருந்ததுதான் கவுண்டரின் பலம் என்று சொல்வார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. செந்தில் இல்லையென்றால் ஒரு முருகன் அவருக்கு கிடைத்திருப்பார். செந்தில் இல்லாமலேயெ கவுண்டர் பல படங்களில் அதகளம் பண்ணியிருப்பார். கவுண்டமணி இல்லாத செந்தில் சோபித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
கவுண்டமணியின் திரை வாழ்வை பின்வரும் பகுதிகளாக பிரிக்கலாம்.
1. 76ல் தொடங்கி 81 வரை ஏற்று நடித்த வேடங்கள். இதில் கிராமத்து, சிறுநகர எளிய மனிதர்களின் வேடத்திலேயே பெரும்பாலும் நடித்திருப்பார். அவர்கள் தொழில் சார்ந்து பழகும் மக்களிடையே நிகழ்த்தப்படும் (கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள்) நகைச்சுவையே பிரதானமாக இருக்கும் இந்தப் படங்களில்.
2.1982 முதல் 86 வரையிலான காலம்.
82ல் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான பயணங்கள் முடிவதில்லை பெரும் திருப்புமுனையைக் கொடுத்தது. பின் 84ல் வெளியான வைதேகி காத்திருந்தாளில் செந்திலுடன் இணைந்து நடித்த காட்சிகளின் வெற்றி. 86வரை இந்த வெற்றிப்பயனம் தொடர்ந்தது.
3. 86 முதல் 88 வரை
பணம் பத்தும் செய்யும், பிறந்தேன் வளர்ந்தேன், கிளி ஜோசியம் உட்பட 10 படங்களில் நாயகனாக நடித்தார். எதுவும் வெற்றி பெறவில்லை. சில வெளிவரவில்லை. இது ஒரு தேக்க நிலைக் காலம்.
4. 89 முதல் 95 வரை
89ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் மூலம் உச்சத்துக்குப் போனது கவுண்டமணியின் மார்க்கெட். பின் 95 வரை சீராக சென்றது. 90 களில் செந்திலை பல படங்களில் கழட்டிவிட்டு புது துணையைப் பிடித்தார் கவுண்டமணி. வேறு யாரும் இல்லை, அந்தந்த பட கதாநாயகர்கள் தான். வேலை கிடைச்சிடுச்சு, நடிகன் போன்ற படங்களில் கதாநாயகனுடனேயே வலம் வரும் வேடம் கிடைத்தது, அவை மிகவும் ரசிக்கப்படவும் அது தொடர்கதையானது. கனவுப் பாட்டில் கூட கதாநாயகனுட ஆடினார் கவுண்டமணி (ஜெண்டில்மேன்). இதே நேரத்தில்தான் வடிவேலும், விவேக்கும் சொல்லிக்கொள்ளும் படியாக வளர்ந்து கொண்டிருந்தார்கள்.
5. 96 முதல் 99 வரை
96ல் உள்ளத்தை அள்ளித்தா கொடுத்த மிகப் பெரிய வெற்றிக்குப் பின் கதாநாயகர்களுக்கு சமமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். அஜீத்,விஜய் போன்ற அப்போது வளர்ந்து கொன்டிருந்த நடிகர்களுக்கும் கவுண்டமணியின் தயவு தேவைப்பட்டது.
கவுண்டமணியின் வித்தியாச வேடங்கள், அமைப்புக்கு எதிரான கருத்துக்கள், போன்றவை வரும் பதிவுகளில்.
கவுண்டமணி குறித்தான உளவியல் பார்வைக்கு சுகுணா திவாகரின் இந்த பதிவுக்கு செல்லவும்.
43 comments:
நல்ல அலசல் முரளி, கவுண்டரின் நகைசுவையும் லொள்ளும் காலத்தால் அழியாதது
நன்றி நசரேயன்
நல்ல அலசல்...
வாழ்த்துகள் முரளிகண்ணன் சாரே!
அப்புறம்... கவுண்டமணி நமக்கு கொடுத்த எத்தனையோ வார்த்தைகள் பற்றியும் எழுதுங்களேன்..
அல்லக்கை
ங்கொக்கமக்கா
அடங்கொண்ணியா
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
etc..etc..
உங்களின் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வருகிறேன்.. இந்த பதிவுக்காக ரொம்ப நாளா எதிர் பார்த்தேன்..
//அமைப்பை எதிர்த்தோ, புனிதத்தை எதிர்த்தோ பேசுவது//
எல்லாரையும் பாரபட்சமில்லாம கலாய்ப்பார்.. எத்தனை ஆட்டோக்கள் அவர் வீடு சென்றனவோ..!!!
எனக்கும் எப்போதும் நகைச்சுவை பிடித்த நடிகர் கவுண்டமணிதான்..
கவுண்டரின் பலமே அதிகாரங்ளை நகைச்சுவைக்குள்ளாக்கியதுதான்...
இப்பொழுது அதை செய்வதற்கு யாரும் இல்லை...
கவுண்டரின் அடுத்தடுத்த பதிவுகளை ரொம்பவும் எதிர்பார்கிறேன்.. கலக்கணும்..
என்ன சொல்றது மீண்டும் கலக்கல் காம்பைளிங்.. அட போங்கப்பா.. எப்படித்தான் பாராட்டறதுன்னே தெரியல..
pathathu... innum athigama ethirpaarkiren...
கவுண்டரைப்பற்றி இன்னும் நிறைய இருக்கு அண்ணன் எதிர்பார்க்கிறேன்...
கவுண்டருக்கு நல்ல காம்பினேஷன் குடுக்கிறது மணிவண்ணன், சத்தியராஜ்,ரஜினி இவர்கள்தான்...
கலக்கலா இருக்கும்...
நல்ல இருக்கு நல்ல அலசல் இதை பற்றிய என்னுடைய பதிவு
http://technotamil.blogspot.com/2009/01/famous-dialouges-of-kounda-mani.html
கவுண்டர் ஒருவேளை என்னுடைய மற்றும் அண்ணன் ச்சின்னப்பையனோட வலைப்பூக்களைப் படிக்க நேர்ந்தால் இப்படித்தான் கமெண்ட் அடிப்பார்
“ பொழுது போகாதவன்,பொறம்போக்கல்லாம் பதிவராயிட்டான்”
)))))
கவுண்டரோட தொண்டரடிப்பொடி கோஷ்டில, யார் அவரோட பன்ச் வசனம் ஜாஸ்திஞாபகம் வெச்சிருக்காங்கன்னு போட்டில்லாம் நாங்க வெச்சிப்போம்:):):)
சூப்பர் பதிவு. வாய்ப்பி தேடும் காலங்களில் கவுண்டரோட தங்கிருந்தார் பாக்யராஜ்னு எப்பவோ படிச்ச ஞாபகம். கவுண்டர் மட்டுமில்லே, இன்னும் செந்தில் மாதிரி நெறயப் பேர் அங்கதான் தங்கிருந்தாங்கன்னு படிச்சிருக்கேன். ஆனா நெஜத்துலயும் செந்திலை எல்லாரும் இளக்காரமா நடத்தினாங்கன்னும். அதாலதான் அப்போ அதைப்பாத்து பீல் ஆன பாக்யராஜ் செந்திலை வளர்த்துவிட்டார்னும் படிச்சிருக்கேன்.
(தகவல் தப்புன்னா மன்னிச்சுக்கங்கோ)
திகட்டாத நகைச்சுவை காட்சிகள்னா அதுல கண்டிப்பா கவுண்டரோட நகைச்சுவைக்கு முக்கிய இடமுண்டு:):):)
// எம்.எம்.அப்துல்லா said...
கவுண்டர் ஒருவேளை என்னுடைய மற்றும் அண்ணன் ச்சின்னப்பையனோட வலைப்பூக்களைப் படிக்க நேர்ந்தால் இப்படித்தான் கமெண்ட் அடிப்பார்
“ பொழுது போகாதவன்,பொறம்போக்கல்லாம் பதிவராயிட்டான்”
)))))
//
அண்ணே, பக்கத்துலே சக்கரை இருந்தா கொஞ்சம் எடுத்து வாயிலே போட்டுக்குங்க. :-))))
கவுண்டரோட டைமிங் முன்னாடி யாருமே நிக்க முடியாது.
சின்னப்பையன்,பரிசல்காரன், சரவண குமார், கேபிள் சங்கர், கிங், அப்செர்வெர், தமிழன் -கறுப்பி, வெட்டிப்பயல், அப்துல்லா,ராப் அனைவரின் வருகைக்கு நன்றி.
உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.
//உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.//
தன்னடக்கமாம்...
(சும்மா கவுண்டர் ஸ்டைல்ல சொன்னேன்...)
நீங்க எப்படியும் பட்டையை கிளப்புவீங்கனு தெரியும் :)
அட்றா...சக்கை...அட்றா..சக்கை
//தன்னடக்கமாம்...//
தன்னடக்கமாம்..மாம்..மாம்..மாம்.. அது என்ன மாம்? தன்னடகத்துக்கு எக்கோ
முக்கியமான பதிவு!
சுருக்கமாக இருந்தது.
தொடருங்கள் நண்பரே!
தமிழ் சினிமா வரலாற்றில்
ஏன் உலகத்திலேயே எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத ஒரே நடிகன் நம் கவுண்டர்தான்.
இன்றுவரை எந்த பத்திரிகைக்கோ , டிவி களுக்கோ பேட்டி கொடுத்ததில்லை என்று கேள்விபட்டிருக்கிறேன்.அதேபோஅல் இன்றுவரை அவர் குடும்பத்தின் மீது மீடியாவின் நிழல் கூட விழா விட்டதில்லை.கவுண்டர் ஒரு மாமனிதருங்கோவ் ...
//அல்லக்கை
ங்கொக்கமக்கா
அடங்கொண்ணியா
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்//
டிஃபன் பாக்ஸ் தலையா, தார் ரோட்டு தலையா.. ஹலோ பரிசல் நில்லுங்க.. உங்கள் சொல்லல
நல்ல அலசல் முரளி. இன்றளவும் அவர் காமெடிகளைப் பார்த்தால் சிரித்தே வயிறு புண்ணாகிவிடும்:)
//கவுண்டமணியின் பெரும் பலம் என்பது அவர் ஏற்று நடித்த வித்தியாச வேடங்களே//
உண்மை
கட் ஷூ வாங்குங்கோ கட் ஷூ வாங்குங்கோ :-))
மக்கள் எப்படி போறாங்கன்னு பார்க்காதீங்க சார்... மத்த மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க.. :-)))
புண்ணாக்கு விக்கிறவன் குண்டூசி விக்கிறவன் எல்லாம் தொழிலதிபராம்..அடடா! நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலைப்பா..
அடேய்! கலர் கம்பி தலையா! இதுக்கு பேர் தாண்டா மேண்டில் ..இதுல இருந்து தான் பளீர் னு வெளிச்சம் வரும்...
போங்கண்ணே! இதுல இருந்தா..:-))))
ஏங்க! இளநில தண்ணிய இல்ல..ம்ம்ம் அந்த பைப் ல வரும் போய் பிடித்து குடிச்சுக்கோ ... ஏன்டா! ஒரு இளனிய எத்தனை நேரம்டா குடிச்சுட்டு இருப்பீங்க..
டேய்! நாராயணா! இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா! ஏதாவது மருந்து அடிச்சு கொல்லுங்கடா..
ஹலோ மிஸ்டர் வைத்தியநாதன் ..நாம டெல்லி ல மீட் பண்ணி இருக்கோம்.அப்ப மண்டையில் முடி இருந்தது மொட்டை இல்ல..க்லேட்டு மீட் யு ..
ஹேய்! நீ ரொம்ப பேசுறே....ஓகே குறைச்சுக்குறேன்
கவுண்டர் அடிச்சுக்க முடியாது.. :))
அமர்களம் ! தொடர்ந்து எழுதுங்கள்!
கிரியின் எடுத்துக்காட்டுக்களை படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை.அது தான் கவுண்டமணி.தொடருங்கள்....கிரி நீங்களும்தான்.
கவுண்டமணி பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது.
இந்தியனில் ஊர்மிளாவின் பாவாடைக்கு நாடாக் கோர்க்கும் கமல். கவுண்டர் திடீரென்று தரையில் துழாவி, தேடுவார்.
கமல் 'என்ன தேடற'
கவுண்டர் கையைத் தட்டிக்கொண்டே 'சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தாம்பா, அவனதான்'
இன்னிக்கும் எங்க வீட்டில நானும் என் சகோதரனும் ஒருவரை ஒருவர் (மனைவி சொல்லுக்கு தலையாட்டும் போதெல்லாம்) கலாய்ப்பது இந்த வசனம் பேசி தான்.
கவுண்டர் கவுண்டர்தான். தொடருங்கள் முரளி. 'அசத்தல்' சொல்லி அலுத்துவிட்டது.
அனுஜன்யா
வெட்டிப்பயல், கேபிள் சங்கர் - தொடர் ஆதரவுக்கு நன்றி
டி வி ராதாகிருஷ்ணன், மாதவராஜ், பிரபுஷங்கர், கார்கி,வித்யா,கிரி,வேங்கட சுப்பிரமணியன், அனுஜன்யா மிக்க நன்றிகள்
கவுண்டமணி பிரியரே பதிவு ஓ கே தானே?
பின்னல்.
இதுவரை உலக வரலாற்றில் முதல் முறையாக என்.எஸ்.கலைவாணர் என்று குறிப்பிட்டது முரளிகண்ணந்தான்!
அது சரி நீங்க பிஹெச்டி பண்றது இந்த சப்ஜெக்ட்ல தானா?
சார்....வழக்கம்போல் கலக்கல்....
அப்புறம் கவுண்டர் ஒரு படத்துல வெட்டியானா வந்து...ஒரு சீன்ல நம்மை அழவும் வைத்துவிடுவார்....
கவுண்டர் கவுண்டர் தான்....
\\இதுவரை உலக வரலாற்றில் முதல் முறையாக என்.எஸ்.கலைவாணர் என்று குறிப்பிட்டது முரளிகண்ணந்தான்\\
வைத்யாண்ணா திருத்தி விடுகிறேன்.. நன்றி
கமல் வருகைக்கு நன்றி
ஸ்டார்ட் மியூசிக்!
ஹலோ யாரு தன்ராஜா? சொல்லுங்க சொல்லுங்க
பொணத்த தூக்கும்போது எதுக்கு வெடி வைக்கிறாங்க? சரியா சாகலேன்னா, இதுலயாவது சாகட்டுமேன்னுதான்!
ஆனா ஒண்ணுடா, கரண்ட் பில்லு இதுவரைக்கும் கட்டுனதே இல்லடா!
அப்பா டேய்.. ராத்திரியிலே என்னென்ன பாவம் பண்ணினியோ, எனக்கு பார்வை போயிருச்சே..!
பாருங்க ஜனங்களே, இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்
இரு இரு ஒரு ரவுண்டு போயி சீட்டாடிட்டு வந்துர்ரேன்!
அட்ரா சக்க...
அட்ரா சக்க...
அட்ரா சக்க...
whats his real name ?
யோவ்..யாராவது அப்துல்லாவிடம் இருந்து பின்னூட்டம் இடும் அதிகாரத்தை பிடுங்குங்கய்யா... மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுற பதிவுல வந்து சிம்ப்பிளா ஒரு குத்து குத்துறாரு..அப்புறம் பதிவுல என்ன படிச்சோம்னே மறந்து போகுது..இதுல ராப் வேற வந்துட்டாங்க போல..
மிக நல்ல பதிவு முரளி.. கவுண்டரின் ஆரம்ப காலங்கள் பற்றிய விவரங்களுக்கு நன்றி.. இன்றும் அவரின் படங்களை பார்த்தால் மனது லேசாவது உண்மை..
பனங்காட்டான், அக்னிப்பார்வை, யாத்ரீகன் வருகைக்கு நன்றி.
நர்சிம் உணமையிலேயே அப்துல்லாவின் கமெண்ட் ராயல். சிரிச்சுக்கிட்டே இருந்தேன்.
மிக்க நன்றி தலைவரே.
Great Writeup Mr. Muralikannan. As they said, this should have gone to prestigious publication.
Here's my contribution to the great comedian:
http://grouchydays.blogspot.com/2008/12/goundamani-dark-superhero.html
மிக்க நன்றி ராகேஷ்குமார்
இன்று தான் இந்த பதிவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
கவுண்டமணியைப் பற்றிய மிக நல்ல அலசல்.
77ம் வருடம் என நினைக்கிறேன். எப்பவும் எல்டாம்ஸ் ரோட்டிலுள்ள எல்டாம்ஸ் ஹோட்டல் வாசலில் நின்றுக்கொண்டிருப்பார். ஒருமுறை நடிகர் சந்திரசேகர் அங்கு வந்தார் (அவரும் அப்போது தான் தலை தூக்க ஆரம்பித்திருந்தார்) என் நண்பரின் அறிமுகத்தில் அன்று நாங்கள் நால்வரும் எல்டாம்ஸ் ஓட்டலில் காப்பி சாப்பிட்டோம். மிகவும் கஸ்டப்பட்டே முன்னுக்கு வந்த நடிகர் இவர். சமீப காலமாக புதியவர்கள் இவரை அழைப்பதில்லை என நினைக்கிறேன்.
கவுண்டமணி பற்றிய நான்கு பதிவுகளையும் படித்து முடித்துவிட்டேன், அற்புதம், அருமையான நினைவு மீட்டல். அந்த படங்களின் கலக்சனும் அருமை. அதை வைத்து ஒரு டிவிடி போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.நன்றி சார்!
hi sir i'm ground kannan
gowndarin alasal padithathum niraiya thakaval therinthu konden thank you sir
Post a Comment