February 15, 2009

ஜிம்மி ஜிப், அகேலா, ஸ்டெடி காம், ரெட் மற்றும் ஆவிட் எடிட்டிங்




ஜிம்மி ஜிப்



கடந்த 20 அண்டுகளில், உலக அளவில் திரைத் துறைக்கு உதவியாக பல உபகரணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமாக ஒளிப்பதிவிற்க்கும், எடிட்டிங்குக்கும் உதவியாக பல கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜிம்மி ஜிப், அகேலா கிரேன் போன்ற உபகரணங்களால் வேண்டிய கோணங்களில் விரைவாக படமாக்கும் வசதி அதிகரித்துள்ளது. ரெட் ஒன் போன்ற நவீன கேமராக்கள் உபயோகிக்கப் படுவதால் காட்சிகளின் தரம் அதிகரிக்கிறது. நான் லீனியர் எடிட்டிங் முறையான ஆவிட் எடிட்டிங் போன்றவற்றால் படத் தொகுப்பு எளிதாகவும், விரைவாகவும் முடிகிறது. இந்த தொழில்நுட்பங்கள் ஹாலிவுட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமான சில ஆண்டுகளுக்குள்ளேயேதமிழ்சினிமாவில் அறிமுகமாகிவிடுவது குறிப்பிடத்தக்கது.




ஜிம்மி ஜிப் /அகேலா கிரேன்

முன்பெல்லாம் டாப் ஆங்கிள் ஷாட் வேண்டுமென்றால் (எ.கா. கதாநாயகி வயல் வெளியிலோ அல்லது மழையிலோ ஆடும் போது மேலிருந்து அதன் சுற்றுப்புரத்தோடு காட்டும் காட்சிகள்) கிரேனில் காமிராவை வைத்து அதில் டெக்னீஷியன் உட்கார்ந்து (ஒளிப்பதிவு இயக்குனர் கோணம் வைத்தவுடன்) படமாக்குவார்கள். இதில் குறிப்பிட்ட உயரம் மட்டும் செல்லும் வசதி இருக்கும். பல சிக்கலான கோணங்கள் கடினம்.

உதாரணம்
தசாவதாரம் பட 12ஆம் நூற்றாண்டு காட்சியில் கேமரா கோபுரத்தின் மீது ஏறி, பின் கலசம் வழியாக படிப்படியாக இறங்கி தரைக்கு வந்து பின் யானை மீது வீற்றிருக்கும் குலோத்துங்க சோழனின் முகத்தில் போய் நிற்கும்.

முகுந்தா முகுந்தா பாடல் காட்சியில் கேமரா ராமானுஜ மடத்தின் மீது ஏறி பின் முற்றம் வழியாக இறங்கி வீட்டிற்க்குள் நுழைந்து அங்கே ஆடிக்கொண்டிருக்கும் சிறுமிகளிடம் போய் நிற்க்கும்.

இந்த மாதிரியான காட்சிகளை எளிதாக எடுப்பதற்க்கு ஜிம்மி ஜிப், அகேலா கிரேன் மாதிரியான உபகரணங்கள் உதவுகின்றன. நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் இவை அமைக்கப்பட்டிருக்கும். சீ சா என சொல்லுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். சீ சாவின் ஒருமுனையில் கேமராவும், இன்னொரு முனையில் அதற்க்குரிய கன்ட்ரோலும் கவுண்டர் வெயிட்டும் இருக்கும். இந்த கன்ட்ரோலின் மூலம் கேமராவை விரும்புமாறு உபயோகிக்கலாம். காட்சிகளின் கோணம், போக்கஸ் ஆகியவை
சரியாக இருக்கிறதா என்பதை மானிட்டரில் பார்த்து சரி செய்து கொள்ளலாம்.
தற்போது ஜிராபி என்னும் கிரேனும் தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஸ்டெடி காம்

ஒருவர் ஓடும் காட்சி அல்லது, தூரத்தில் இருப்பவரை/பொருளை நோக்கி செல்லும் காட்சி போன்றவற்றை முன்னாட்களில் ட்ராலியை உபயோகப் படுத்தி எடுத்து வந்தார்கள். இம்மாதிரியான காட்சிகளில் டெக்னீஷியனின் திறமை முக்கிய பங்கு வகிக்கும். எவ்வளவு திறமையான டெக்னீஷியன் ஆனாலும் பிரேமில் ஷேக் வர வாய்ப்பு இருக்கும். ஆனால் ஸ்டெடி காமில் அதற்க்கான வாய்ப்பே இல்லை. அதனுள் உள்ள அமைப்பானது, ஒரு குறிப்பிட்ட தளத்தை ரெபெரென்ஸாக வைத்துக் கொள்ளும். கேமராவை தூக்கிக் கொண்டு வில்லன் பின்னாலோ,ஹீரோ பின்னாலோ ஓடினாலும் அதில் ஏற்படும் எந்த அதிர்வையும் தனக்குள் உள்ள மெக்கானிசம் மூலம் சமப்படுத்திக் கொள்ளும். எனவே எந்த வித குறைபாடும் இல்லாமல்
காட்சிகள் பதிவாகும். சேஸிங் காட்சிகளுக்கு இதன் தேவை மிக அதிகம்.

ரெட் ஒன்

இதைப் பற்றி கேபிள் ஷங்கர் ஏற்கனவே ஒரு அருமையான பதிவை இட்டுள்ளார். மார்கழி ராகம் திரைப்படத்தில் எட்டு ரெட் ஒன் கேமிராக்களை உபயோகித்து பி ஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த செய்தி ரெட் ஒன் யூசர் போரத்தில் இடம்பெற்று மேலை நாட்டவருக்கும் மிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசன்னா, சினேக நடிக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலும் இந்த கேமரா பயன்படுத்தப் படுகிறது. இத்திரைப்பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் முன்பு தமிழ் வலைப்பதிவில் மிக ஆர்வமுடன்
இயங்கி கலக்கியவர். கமல்ஹாசனின் மர்மயோகிக்கும் இந்த கேமராவை உபயோகிக்க இருந்தார்கள்.

ஆவிட் எடிட்டிங்

89 களில் உலகில் அறிமுகமான இந்த நான் லீனியர் எடிட்டிங் தொழில் நுட்பம் 93ல் மகாநதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தது. இது ஆரம்ப காலத்தில் செலவு பிடிக்கும் விஷயமாக இருந்ததால் பலரும் தயங்கினர். குறைந்தது ஒரு எடிட் ஷூட் அமைப்பதற்க்கு 50 லட்சத்துக்கு மேல் செலவானது. படமாக்கப்பட்ட காட்சிகளை ஒரு ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்து பின் நமக்குத் தேவையான காட்சிகளை விரும்பும் வரிசையில் எளிதாக தொகுத்துக் கொள்ளலாம். இந்த தொழில் நுட்பத்தையும் செலவு குறைவாக எளிதாக தமிழ் சினிமாவில் மாற்றியவர்கள் பாலாஜி, உருப்படாது நாராயணன் (பிரபல வலைப்பதிவர்), சேது பட எடிட்டர்களான ரகு-பாபு ஆகியோர். ஐந்து லட்சத்திற்க்கும் குறைவான செலவிலேயே இதை சாத்தியமாக்கினார்கள்.




தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அதை திரைப்படத்தின் சிறப்புக்கு உபயோகப் படுத்த தேர்ந்த இயக்குனர்களாலேயே முடியும்.
தசாவதாரம் 12 ஆம் நூற்றாண்டு தொடக்க காட்சிக்கு கமல் சொன்ன விளக்கம் " சைவம், வைனவம் எனப் பிரிந்து அடித்துக் கொள்ளும் சிறுபுத்திக் காரர்கள் என காட்சிப்படுத்தவே டாப் ஆங்கிளில் மனிதர்களை எறும்பு போல காண்பித்தோம்".

40 comments:

அத்திரி said...

உள்ளேன் தல

அத்திரி said...

நல்ல தொகுப்பு...................

கார்க்கிபவா said...

தல,

முத்து படத்தில் ஒரு காட்சி. மீனாவின் மாமா டைகர் பிராபகர் அறிமுகமாகும் காட்சி. அதில் கேமரா மேலிருந்து வந்து பின் அவரின் இரு கால் சந்தில் நுழைந்து ரஜினியில் முகத்தில் சென்று முடியும். எப்ப்டி இது போன்ற கிரேன்கள் அந்த சிரிய கேப்பில் செல்ல முடியும்? zoom மும் கிடையாது. ஏனெனில் கேமராவின் கோண்ங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்

anujanya said...

முரளி,

இது போன்ற பதிவுகள் தாம் உங்களையும், எங்களையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். கூடிய வரையில் படங்களையும், குறிப்பிட்ட காட்சிகளையும் குறிப்பிட்டால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். (நீங்கள் அப்படிதான் செய்கிறீர்கள் - இனி வரும் பதிவுகளிலும் இது தொடரட்டும்). மகாநதியில் சராசரி ரசிகனுக்கு இந்தத் தொழில் நுட்பம் கவனத்துக்கு வந்ததா?

அனுஜன்யா

வெண்பூ said...

ஸ்டடி கேம் மற்றும் ஆவிட் எடிட்டிங் குறித்த தகவல்கள் முற்றிலும் புதிதாக உள்ளன. ரெட் கேமிரா போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பட செலவை குறைத்து இன்னும் நிறைய நல்ல படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் என்று நம்புவோம்..

Anonymous said...

முரளி,

சுப்பிரமணியபுரம் படத்தின் கடைசிக்காட்சி (கஞ்சாக் கருப்பு நடந்து வரும் காட்சி) ச்டெடி கேம் மூலமாக எடுக்கப்பட்டதா?

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி, வெண்பூ.

அனுஜன்யா தாங்கள் குறிப்பிட்டவாறு வரும் பதிவுகளில் முயற்சிக்கிறேன்.

கார்க்கி, வடகரை வேலன் - வரும் பதிவுகளில் விளக்கமாக எழுதுகிறேன்.

மிக்க நன்றிகள்

முரளிகண்ணன் said...

அனுஜன்யா,தொழில் நுட்பத்தை பார்வையாளன் உணராமல் இருப்பதே இயக்குனரின் வெற்றி.

ஆவிட் எடிட்டிங் படத் தொகுப்பை மிக எளிதாக்கும் சிஸ்டம். எத்தனை முறை வேண்டும்மானாலும் டிராக்குகளை மாற்றி மாற்றி பதியலாம்.

காமிரா உபகரணங்கள் உபயோகித்தல் பார்வையாளனை எளிதில் உணரச்செய்யும். ஆனால் எடிட்டிங் அவ்வாறு உணரச் செய்யாது.

Bruno said...
This comment has been removed by the author.
SPIDEY said...

THE FIRST MOVIE TO USE STEADICAM WAS ROCKY-1(ROCKY RUNNING THE STAIRS) FIRST TAMIL MOVIE TO USE STEADICAM WAS VIKRAM(I AM NOT SURE). ACCORDING TO ME IN TAMIL MOVIES STEADICAM WAS BEST USED IN SUBRAMANIAPURAM

Cable சங்கர் said...

///சுப்பிரமணியபுரம் படத்தின் கடைசிக்காட்சி (கஞ்சாக் கருப்பு நடந்து வரும் காட்சி) ச்டெடி கேம் மூலமாக எடுக்கப்பட்டதா?//

அதில் பல காட்சிகள் ஹேண்ட் ஹெல்டில் கூட எடுத்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான் விஷயம். சுப்ரமணிய புரம் திரைப்படம் சூப்பர் 16mmமில் எடுக்கப்பட்ட படம்.

Cable சங்கர் said...

//முத்து படத்தில் ஒரு காட்சி. மீனாவின் மாமா டைகர் பிராபகர் அறிமுகமாகும் காட்சி. அதில் கேமரா மேலிருந்து வந்து பின் அவரின் இரு கால் சந்தில் நுழைந்து ரஜினியில் முகத்தில் சென்று முடியும். எப்ப்டி இது போன்ற கிரேன்கள் அந்த சிரிய கேப்பில் செல்ல முடியும்? zoom மும் கிடையாது. ஏனெனில் கேமராவின் கோண்ங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்//

நம் பார்வைக்கு வேண்டுமானால் அது காலிடுக்கில் நுழைந்து போகும் படியாக தெரியும். ஆனால் கேமராவின் பார்வையில் அங்கிருந்து அங்கேயிருக்கும் ரஜினி முகத்துக்கு ஃபோகஸ் செய்திருப்பார்கள். அதற்காக சில சமயம் அந்த இடங்களில் சின்ன ட்ராலி கூட வைத்து இரண்டு மூவ்மெண்டுகளையும் ஒரு சேர பார்க்கும் போது தெரியாது..

என்று நினைக்கிறேன்.???

Cable சங்கர் said...

முரளி.. வர..வர.. நீங்க பண்றது உங்களுக்கே நியாயமா இருக்கா../????
என்ன என்பது அடுத்த பின்னூட்டத்தில்.

கோபிநாத் said...

அப்படி போடு அருவாளை....அண்ணாச்சி சினமா உலகத்தில் புகுந்து விளையாடுறிங்க ;)))

புருனோ Bruno said...

//முத்து படத்தில் ஒரு காட்சி. மீனாவின் மாமா டைகர் பிராபகர் அறிமுகமாகும் காட்சி. அதில் கேமரா மேலிருந்து வந்து பின் அவரின் இரு கால் சந்தில் நுழைந்து ரஜினியில் முகத்தில் சென்று முடியும். எப்ப்டி இது போன்ற கிரேன்கள் அந்த சிரிய கேப்பில் செல்ல முடியும்? zoom மும் கிடையாது. ஏனெனில் கேமராவின் கோண்ங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்//

தல

இரண்டு காட்சிகளாக (ஷாட்) எடுத்து படத்தொகுப்பில் (எடிட்டிங்) சேர்த்து விடலாம்

Indian said...

why many scenes in 'Mumbai express' were grainy and of poor quality?

T.V.ராதாகிருஷ்ணன் said...

adengappaa

Vidhya Chandrasekaran said...

புதிய தகவல்களுடன் நல்ல தொகுப்பு:)

முரளிகண்ணன் said...

கேபிள் சங்கர் தங்களின் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி.

ஸ்பைடி தங்கள் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி

டாக்டர் தங்கள் விளக்கத்துக்கு நன்றி

டி வி ராதாகிருஷ்ணன், கோபிநாத், வித்யா தங்களின் வருகைக்கு நன்றி.

இந்தியன், வரும் பதிவுகளில் அதுபற்றி எழுத முயற்சிக்கிறேன்

ILA (a) இளா said...

//கேமரா கோபுரத்தின் மீது ஏறி, பின் கலசம் வழியாக //
இது cg ங்க.. 12ம் நூற்றாண்டுல வர் 80% காட்சிகள் CG

முரளிகண்ணன் said...

இளா வருகைக்கு நன்றி.
கோவில் கோபுரம் எல்லாம் சிஜி. நான் அந்தக் காட்சியை குறிப்பிட்டது காமிரா கோணத்தை விளக்கவே. தரையில் இருந்து யானை வழியாக நெப்போலியன் வரை ஏறிச்செல்லும் கோணம் மற்றும் அகெலா கிரேன் பயன்பாட்டுக்காக இந்த உதாரணத்தை எடுத்துக் கொண்டேன்.

மாதவராஜ் said...

பார்வையாளர்களை தெளிவுபடுத்துகிற பதிவு. தசாவதாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட காட்சிகள் பார்த்து, அசந்து போனேன். எப்படி எடுத்திருப்பார்கள் என்று பிரமிப்பு அடங்காமல் இருந்தேன்.

Thamira said...

புதிய தகவல்கள். ஆனால் ஹின்ட்ஸ் போல இருக்கின்றன.. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு இன்னும் விளக்கமாக படங்களோடு சுவாரசியப்படுத்தினால்.. பிச்சுக்கும்.!

Nilofer Anbarasu said...

உங்க பதிவுகளை தொடர்ந்து படிக்கும்போது, பாய்ஸ் படத்தில் செந்தில் சொல்லும் ஒரு வசனம் தான் நினைவுக்கு வருகிறது "இம்பர்மேசென் இஸ் வெல்த்". அந்த மாதிரி ஏதேனும் டயரி வச்சுரிக்கீங்களா? சினிமா சம்பந்தமா எல்லாத்தையும் சொல்லுறீங்க. விட்டா A.R.Rehman வீட்டுல எப்ப பிரியாணி போடுவாங்கன்னு கூட சொல்லுவீங்க போல :) (Just kidding)
நல்ல பதிவு. உயிரே படத்தில் "தைய தைய " பாடலில் கூட அகெலா கிரேன் உபயோகப்படுதியிருப்பார்கள்.

ஆதவன் said...

alla thoguppu.. ungal blog aanadha vikatanil varaverparaiyil vandhamaikku yengal vazhthugal..

thanks,
arun m.

குசும்பன் said...

இயங்கி கலக்கியவர். கமல்ஹாசனின் மர்மயோகிக்கும் இந்த கேமராவை உபயோகிக்க இருந்தார்கள்.//

நல்ல பதிவு! கமலில் அடுத்த படம் தலைவன் இருக்கிறான் படத்தில் இதை உபயோகப்படுத்தபோவதாக சொல்லி இருக்கிறார்கள்!

நவநீதன் said...

கலக்கல் அண்ணே...!
உங்கள் பதிவுன்னாலே தெரிந்த / தெரியாத சுவாரசியமான தகவல்கள் நிச்சயம்...!

Cable சங்கர் said...

//why many scenes in 'Mumbai express' were grainy and of poor quality?//

மும்பை எக்ஸ்பிரஸ் படம் சாதாரண டிஜிட்டல் கேமராவான அப்போதைய நல்ல கேமராவும் ஆன பிடி 170 என்று நினைக்கிறேன். அதில் எடுத்தது.. அதெல்லாம் ஆரம்ப குறைபாடுங்கள் இப்போ எல்லாம் சும்மா நின்னு விளையாடுது. டிஜிட்டல் தொழில் நுட்பம்.

சின்னப் பையன் said...

அட்டகாசமான புதிய தகவல்கள் அண்ணே...

முரளிகண்ணன் said...

மாதவராஜ் மிக்க நன்றி.


தாமிரா, விரிவாக எழுத முயற்சிக்கிறேன்

ஆதவன், வாழ்த்துக்களுக்கு நன்றி

நிலோபர் அன்பரசு, குசும்பன்,அன்னா, சின்னப்பையன்,நவநீதன்,கேபிள் சங்கர் தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும நன்றி.

SANKAR said...

FROM THIS WEEK'S VIKATAN,I KNOW ABOUT YOUR BLOG.CINE NEWS ARE VERY SUPEB AND INFORMATIVE.PLEASE
WRITE ABOUT SIVAJ'S"PATTAKATHI BAIRAVAN"(ENGENGO SELLUM EN ENNANGAL AND DEVATHAI ORU DEVATHAI PONDRA SUPER HIT PADALGAL ULLA PADAM)

அரவிந்தன் said...

ரோஜா படத்தில் மணிரத்தினம் ஸ்டெடிகாமிரா வை பயன்படுத்தியிருப்பார்.

மதுபாலா அரவிந்சாமியை தேடிச்செல்லும் காட்சியில் ஸ்டெடிகாமிரா பயன்படுத்தியிருப்பார்.

அத்திரி said...

சகா என் கட பக்கம் வாங்க........... விருது கொடுத்திருக்கேன்.

முரளிகண்ணன் said...

சங்கர் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

நிச்சயம் பட்டாக்கத்தி பைரவன் படம் பற்றி எழுதுகிறேன்.

அரவிந்தன் மிக்க நன்றி. எடிட்டிங் பற்றிய மேலதிக தகவல்களுக்கு உங்களிடம் மீண்டும் வருகிறேன்.

அத்திரி நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா said...

"ஜிம்மி ஜிப், அகேலா, ஸ்டெடி காம், ரெட் மற்றும் ஆவிட் எடிட்டிங்"
//

என்னோட யாஷிகா கேமராவுல படம் எடுக்க இதெல்லாம் தேவையே இல்லை,வெரி ச்சீப் :)

எம்.எம்.அப்துல்லா said...

ரொம்ப பயனுள்ள தகவல்கள். ஒருமுறை ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் கல்யாணி ஸ்டூடியோக்கு நண்பருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்க ஆவிட் எடிட்டிங் ரூமில் 4 பேருக்கு மேல் உட்கார முடியாது. அவ்வளவு சிறிய இடமாக இருந்தது. தொழில் நுட்பம் எந்த அளவிற்கு சுருங்கி விட்டது என்பதை நான் அனுபவப்பூர்வமாக அங்கு உணர்ந்தேன்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அப்துல்லா அண்ணே

பழமைபேசி said...

தொழில்நுட்பத் தகவலுக்கு நன்றி!

Asokaa Photo said...

அ௫ைமயன தொகுப்பு