March 17, 2009

1988 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா

1987 ஆம் ஆண்டு டிசம்பரில் எம்ஜியார் இறந்ததைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வரானார். பின்னர் ஆர் எம் விரப்பன், ப உ சண்முகம் ஆகியோரின் முயற்சியால் எம் ஜி யாரின் துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இதை ஜெயலலிதாவை ஆதரித்த எம் எல் ஏ க்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜானகி முதல்வராக தொடர நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற வேண்டும். அதற்க்கு ஜெயலலிதா ஆதரவு எம் எல் ஏக்களின் ஆதரவும் தேவை. எனவே ஜானகி அணியினர், இந்த எம் எல் ஏக்களை எப்படியும் சரிக்கட்டி ஆட்சியில் தொடரவேண்டும் என நினைத்தனர். ஜெயலலிதாவின் அப்போதைய போர்ப் படைத் தளபதிகளான கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், திருநாவுக்கரசு (சர்) தங்கள் தரப்பு எம் எல் ஏக்களை சொகுசு பேருந்துகளில் ஏற்றி மாநிலம், மாநிலமாக சுற்றினர். சரியாக வாக்கெடுப்பு நாளில் சட்டசபைக்கு இந்த எம் எல் ஏக்கள் வந்தனர். ஓட்டெடுப்பு அடிதடியில் முடிந்தது. கவர்னர் (பி சி அலெக்ஸாண்டர்) ஆட்சியை மத்திய அரசு கொண்டு வந்தது.

இவ்வாறு திரைப்படங்களை மிஞ்சிய சாகச காட்சிகள் 1988 ல் நடந்தன. பெரும்பாலான பட தயாரிப்பாளர்கள் அரசியல் சார்பு உடையவர்கள் என்பதாலோ என்னவோ அவர்கள் இதில் கவனம் செலுத்திய அளவுக்கு படத் தயாரிப்பில் கவனம் செலுத்தவில்லை. 87ல் 102 படங்கள் வெளிவந்தன. 89ல் 99 படங்கள் வந்தன. ஆனால் 88லோ 64 படங்கள் மட்டுமே வந்தன. ஆனாலும் ரசிக்கத்தக்க படங்கள் பல வெளியாகின. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா?.


இந்த ஆண்டிற்க்குப் பின்னர் கே பாக்யராஜ், டி ராஜேந்தர், எஸ் பி முத்துராமன் ஆகியோரது வெற்றி விகிதம் குறையத் தொடங்கியது.

பி வாசு, ஆர் வி உதயகுமார் ஆகிய இயக்குனர்கள் வெற்றிப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

கலைப்புலி நிறுவனம் இரண்டாகப் பிரிந்து தாணு தனியாகவும், ஜி சேகரன் தனியாகவும் படங்களை தயாரிக்கத் தொடங்கினர்.

குஷ்பூ, கௌதமி, நிரோஷா ஆகிய நடிகைகள் அறிமுகமானார்கள்.

ஜனகராஜ் முண்ணனி கதாநாயகனாக விளங்கினார்.

பாலசந்தரின் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்த கடைசி படம் உன்னால் முடியும் தம்பி வெளியானது. (இனிமேல் ஏதும் வாய்ப்பிருக்கிறதா?)

மணிவண்ணன் வில்லனாக கொடி பறக்குது படத்தின் மூலம் அறிமுகமானார்.

அக்னி நட்சத்திரம்

நாயகன் படத்தை முதலில் தயாரித்தவர் முக்தா சீனிவாசன். படம் அவருக்கு திருப்தி இல்லை. எனவே அவரது நண்பர்களை அழைத்து படம் பார்க்கச் சொல்லி, ஏதும் கூட்டல் கழித்தல் செய்யலாமா என்று கேட்டார். பின்னர் படத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணனான ஜி வெங்கடேஸ்வரனே படத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அதுவரை வினியோகஸ்தராக இருந்தவர் தயாரிப்பாளர் ஆனார். நாயகனின் வெற்றிக்குப் பின் ஜிவி தயாரித்த படமே அக்னிநட்சத்திரம். பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜெயசித்ரா,சுமத்ரா ஆகியோர் நடிப்பில் உருவானது இந்தப் படம். படத்தின் டெக்னீசியன்களான இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோரின் பெயர்களை பிரதானமாகக் கொண்டு சுவரொட்டிகள் தயாரிக்கப் பட்டன. நடித்தவர்களை விட இவர்களே பிரதானமாக பேசப்பட்டர்கள். இந்தப் படத்தின் காமெடி டிராக்கில் வி கே ராமசாமியும், ஜனகராஜும் புகுந்து விளையாடினார்கள். இதன்பின்னர் மணிரத்னம் தன் படங்களில் காமெடி டிராக்கை தவிர்க்கத் தொடங்கினார்.

பி சி ஸ்ரீராம் இந்தப் படத்தில் பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். நின்னுக்கோரி வரணும் பாடலிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் ஒளிச்சிதறலின் மூலம் காட்சியின் அதிர்வை பார்வையாளனுக்கு தரும் உத்தியை கையாண்டிருப்பார். ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல் காட்சி சாதாரண ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப் பட்டிருக்கும். ஆனால் ஒளியமைப்பின் மூலம் மிகுந்த ரிச்னெஸ்ஸை கொடுத்திருப்பார். பிரபுதேவா இந்தப் பாடலில் தலையைக் காட்டியிருப்பார். தூங்காத விழிகள் ரெண்டு பாடலில் அமலாவின் தொப்புளை சுற்றி படர்ந்திருக்கும் பூனை முடிகளையும், வா வா அன்பே அன்பே பாடலில் நிரோஷாவின் தோள்பட்டை மயிர்க்கால்களையும் குளோசப்பில் கொண்டு வந்திருப்பார். ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி உமாபதி வில்லனாக அறிமுகமானர். பிரபு கார்த்திக் சந்திக்கும் காட்சிகளில் இளையராஜாவின் பிண்ணனி இசை கலக்கலாக இருக்கும்.

இது நம்ம ஆளு

கிட்டத்தட்ட கே பாக்யராஜின் கடைசி சூப்பர் ஹிட் எனலாம். இதன்பின் அவரது இரண்டு படங்கள் (ராசுக்குட்டி,சுந்தரகாண்டம்) ஓரளவு ஓடியிருந்தாலும் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிட்டோமானால் அவை சுமார் ரகமே. கமலுடன் எனக்குள் ஒருவன் படத்தில் ஜோடியாக அறிமுகமான ஷோபனா இதில் மீள் அறிமுகம் செய்யப்பட்டார். இந்தப் படத்தின் இயக்குநர் பாலகுமாரன். இயக்கம்- மேற்பார்வை என பாக்யராஜின் பெயர் வரும். கதைக் களம் பிராமண சமுதாயமாக அமைந்ததால் இந்த ஏற்பாட்டை செய்தார்களா என தெரியவில்லை. இதன் பின் பாலகுமாரன் வேறு படங்களை இயக்கவில்லை. வெற்றிகரமான வசனகர்த்தாவாக (குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், மன்மதன்) மட்டும் வலம் வந்தார்.

என் தங்கச்சி படிச்சவ

பி வாசு வின் தலை எழுத்தை மாற்றிய படம். இதன்பின் அவர் கமர்சியல் பாதையை விட்டு விலகவே இல்லை. பிரபு, ரூபினி, சித்ரா, நாசர், ஆனந்த் ராஜ் நடித்த இந்தப் படம் நல்ல கமர்சியல் வெற்றியைப் பெற்றது. இந்தப்படத்தில் தான் வில்லனின் அடியாட்களுக்கு முதன் முதலில் வெள்ளை வேட்டி வழங்கப்பட்டது. அதன்முன் வில்லன் கூட்டம் கரடு முரடான சட்டை, பேண்ட் அணிந்தே சித்தரிக்கப்பட்ட நிலையில் இந்தப் படம் அதை மாற்றியது. பின்னர் தொடர்ந்து பல படங்களில் வில்லன் அடியாட்களுக்கு வெள்ளை வேட்டி வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவின் சாபக்கேடான முத்திரை குத்தலுக்கு ஒரு உதாரணம், இந்தப் படத்தில் தங்கை வேடத்தில் நடித்த சித்ரா. பின்னாட்களில் நல்லெண்ணை சித்ரா என்று அறியப்பட்ட இவர், இப்பட வெற்றிக்குப் பின் தங்கை வேடங்களுக்கே நேர்ந்து விடப் பட்டார். பின்னர் கார்த்திக்குடன் திருப்புமுனை என்னும் படத்தில் நாயகியாக நடித்தும் எடுபடவில்லை. இந்தப் படம் பின்னர் இந்தியில் அமிதாப் அண்ணனாகவும், ராதிகா தங்கையாகவும் நடிக்க ஆஜ் கா அர்ஜூன் என ரீமேக் செய்யப்பட்டது.

கண் சிமிட்டும் நேரம்

கார்த்திக், அம்பிகா நடித்து சரத்குமார் தயாரித்த படம். இசை வி எஸ் நரசிம்மன், இயக்கம் கலைவாணன் கண்ணாதாசன். அம்பிகா வை கொலை செய்ய கார்த்திக் வருகிறார். ஆனால் விபத்தின் காரணமாக நினைவு தப்பி விடுகிறது. யாரென்று தெரியாமல் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் அம்பிகா. நினைவு திரும்பியவுடன் அம்பிகாவை கொல்ல விரட்டுகிறார் கார்த்திக். மிக நல்ல திரில்லர். இந்தப் படத்தின் வெற்றியால் சரத்குமார் மிஸ்டர் கார்த்திக்என்னும் படத்தை கார்த்திக் நடிப்பில் தயாரித்தார். அதன் தோல்வியால் பின்னர் முழு நேர நடிகரானார்.

ஊமை குயில்

அசத்தப் போவது யாருவை முழு படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?. யோகராஜ் என்பவர் பாக்கியராஜ் போல ஓரளவு தோற்றம் கொண்டவர். அவர் பாக்யராஜைப் போலவே இமிடேட் செய்து நடித்து,இயக்கிய படம் இது. ஓரளவு வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.

சத்யா

நாயகனின் வெற்றிக்குப் பின் வந்த கமல் படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்குனராக அறிமுகமான படம். சன்னி தியோல் நடித்த அர்ஜூன் என்னும் படத்தின் ரீமேக்கே இது.ஆனால் தமிழுக்கு தேவையான சில மாற்றங்களை செய்திருந்தார்கள். மொட்டையடித்து சிறிது வளர்ந்த முடி, கையில் காப்பு என கமலின் கெட்டப் பலரையும் வசீகரித்து அது போல மாற்றியது. அமலா இணை. வளையோசை கலகலவென பாடல் கவிதை. இப்பட்த்தின் மூலம் நாயகனில், கமலின் தந்தையாக சிறு வேடத்தில் நடித்திருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி வில்லனாக அறிமுகமானர் கிட்டி என்னும் பெயரில். இவர் நாயகனில் மணிரத்னத்தின் உதவி இயக்குனர். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் ரீ ரிலீஸ்களில் பலராலும் ரசிக்கப்பட்டது.

இந்தப்படம் பின் அப்போது வெங்கடேஷ், குஷ்பூ வை வைத்து தெலுங்கில் ரீ மேக் செய்யப் பட்டது. சின்னதம்பி பட வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட குஷ்பூ அலையின் காரணமாக அவர் அதற்க்குமுன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தவிர எல்லா வேற்று மொழிப்படங்களும் இங்கே டப்பாகி வந்தன. அப்போது இந்தப் படமும் ஜில்லா ரவுடி என்ற பெயரில் திரும்பி வந்து வாழ்க்கை ஒரு வட்டம் என நிரூபித்தது

கொடி பறக்குது

முதல் மரியாதையில் தென்றலைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நடந்த பாரதிராஜா இதில் புயலின் கையைப் பிடித்துக் கொண்டு பூமியை வலம் வந்தார். ரஜினியின் இணை அமலா. இசை அம்சலேகா. மணிவண்ணன் வில்லனாக அறிமுகம். இவருக்கு பிண்ணனி குரல் கொடுத்தவர் பாரதிராஜா. படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. அவற்றை வரும் பகுதிகளில் பார்ப்போம்.

33 comments:

Cable சங்கர் said...

//பாலசந்தரின் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்த கடைசி படம் உன்னால் முடியும் தம்பி வெளியானது. (இனிமேல் ஏதும் வாய்ப்பிருக்கிறதா?)//

ஏன் நல்லாத்தானே போயிட்டிருக்குது..?

Cable சங்கர் said...

பிசி ஸ்ரீராமின் அக்னி நட்சத்திரம் பற்றி.. வழக்கமாய் ஸ்கிரினில் ப்ளிச் வராமல் பார்த்து கொள்வதே ஒரு ஒளிப்பதிவாளரின் தலையாய கடமையாய் இருந்த காலத்தில் அதை ஒரு கதையின் கேரக்டராகவே பயன் படுத்தியிருப்பார் மணியும், ஸ்ரீராமும்.. படம் பெயர் அக்னி நட்சத்திரம், அதுவம் அண்ணன் தம்பிக்கிடையே நடக்கும் உக்கிரம் தான் கதை.. அந்த உக்கிரத்தை.. படம் பூராவும் வரும் ப்ளீச்சின் மூலம் உணர்த்தியிருப்பார்கள்.

பாலா said...

அக்னி நட்சத்திரத்தில் அந்த க்ளேர் எஃபெக்ட் வர்றதுக்காக.. எல்லா பைக், கார்களிலும் பல்பு, கண்ணாடிகளை மாத்தினாங்களாமே?

உண்மைங்களா?

அக்னி பார்வை said...

//ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி உமாபதி வில்லனாக அறிமுகமானர். (இப்போது சன் டிவியில் யோகாசன வகுப்பு நடத்துகிறார்). ///

புரியவில்லை உமாபதி இறந்துவிட்டார்.. யோகாசனம் நடுத்தும் பார்ட்டி வேறு

நசரேயன் said...

நல்ல தகவல் முரளி. ஒரு தகவல் களஞ்சியம் நீங்க

தமிழன்-கறுப்பி... said...

ஆமா அக்கினி நட்சத்திரம் படத்தில் ஒளிப்பதிவு கலக்கலா இருக்கும் பாடல்களை நானும் கவனித்திருக்கிறேன் நானும் கவனித்திருக்கிறேன்(நீங்கள் சொன்ன இடங்களையும்) இப்பகூட இரவுல கலைஞர் ரிவில போடுவாங்க...

தமிழன்-கறுப்பி... said...

\\
கௌதமி, நிரோஷா ஆகிய நடிகைகள் அறிமுகமானார்கள்.
\\
கொளதமி அப்பவா அறிமுகமானாங்க. ஐயையோ!! எனக்கப்ப எத்தனை வயசு! அந்த சின்ன வயசுலயே எனக்கு கௌதமிய புடிச்சுப்போச்சே ;)

தமிழன்-கறுப்பி... said...
This comment has been removed by the author.
கா.கி said...

Excellent Infos sir.. very interesting narration.. short and sweet.. expecting more.. :)

தமிழன்-கறுப்பி... said...

கோவிச்சுக்காதிங்க தவறுதலா வேறு பின்னூட்டம் இங்க வந்து விட்டது..
எப்படி இவ்வளவு தகவல் தொகுக்கிறிங்க...

சின்னப் பையன் said...

//ரெண்டு பாடலில் அமலாவின் தொப்புளை சுற்றி படர்ந்திருக்கும் பூனை முடிகளையும், வா வா அன்பே அன்பே பாடலில் நிரோஷாவின் தோள்பட்டை மயிர்க்கால்களையும் குளோசப்பில் கொண்டு வந்திருப்பார். //

ஹிஹி. நாந்தான் சரியா கவனிக்காமே விட்டுட்டேன்னு நினைக்கறேன்... சரி இப்பவே யூட்யூப் போறேன்... நன்றி...

முரளிகண்ணன் said...

கேபிள் சங்கர் சார்,

இப்போ கமல் வச்சுருக்குற புராஜக்ட், அவர் எடுத்துக்குற கதைகள், உபயோகப் படுத்தும் உத்திகள்,தொழில்நுட்பம்னு பார்த்தா கே பி யும் அவரும் இணைஞ்சு பண்ணறது கஷ்டம் போல தோன்றியது.

தங்களின் மேலதிக தகவல்களூக்கு நன்றி

முரளிகண்ணன் said...

ஹாலிவுட் பாலா வருகைக்கு நன்றி.

அக்னிபார்வை, அவர் யோகாசன வகுப்பு நடத்தியவர்தான்.

ஒருவேளை பழைய நிகழ்ழ்சி பார்த்த ஞாபகத்தில் எழுதினேனா இல்லை அவர்கள் ஏதும் மறு ஒளிபரப்பு செய்தார்களா எனத் தெரியவில்லை.
திருத்தி விடுகிறேன்.

வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

நசரேயன் நன்றிகள்.

தமிழன் கறுப்பி வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

கார்த்திக் கிருஷ்ணா நன்றி. அடிக்கடி வந்து போயிட்டு இருங்க.

சின்னப்பையன் வாங்க, பார்த்து எஞ்சாய் பண்ணுங்க

Dr.Sintok said...

//ரெண்டு பாடலில் அமலாவின் தொப்புளை சுற்றி படர்ந்திருக்கும் பூனை முடிகளையும், வா வா அன்பே அன்பே பாடலில் நிரோஷாவின் தோள்பட்டை மயிர்க்கால்களையும் குளோசப்பில் கொண்டு வந்திருப்பார். //

//ஹிஹி. நாந்தான் சரியா கவனிக்காமே விட்டுட்டேன்னு நினைக்கறேன்... சரி இப்பவே யூட்யூப் போறேன்... ///


:) :) :)
me 2

Vidhya Chandrasekaran said...

இந்த லிஸ்டில் அக்னி நட்சித்திரம், சத்யா, இது நம்ம ஆளு பார்த்திருக்கேன். ஆனா இது நம்ம ஆளு படம் ஹிட்டா என்ன. எனக்கு சூர மொக்கையாத் தான் தெரிஞ்சுது:)

புருனோ Bruno said...

// வளையோசை கலகலவென பாடல் //

அந்த பாடலை பாடியிருப்பது யார் ??

Cable சங்கர் said...

//// வளையோசை கலகலவென பாடல் //

அந்த பாடலை பாடியிருப்பது யார் ??//

அந்த பாடலை பாடியிருப்பது.. எஸ்.பி.பி. ஆஷா போன்ஸ்லே..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இவ்வாறு திரைப்படங்களை மிஞ்சிய சாகச காட்சிகள் 1988 ல் நடந்தன. //


சூப்பர் தல, நல்ல முன்னுரை. திரைப் படத் திறனாய்வில் ஒரு சரித்திரப் பதிவு.

முரளிகண்ணன் said...

டாக்டர் சிண்டோக் வருகைக்கு நன்றி.

வித்யா இது நம்ம ஆளு 100 நாள் ஓடிய படம்.

புருனோ, சங்கர் சார் நன்றிகள்

சுரேஷ்

\\சூப்பர் தல, நல்ல முன்னுரை. திரைப் படத் திறனாய்வில் ஒரு சரித்திரப் பதிவு\\

கும்மாங் குத்தா குத்துறீங்களே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் பதிவு

முரளிகண்ணன் said...

நன்றி டிவிஆர் சார்

ராமகுமரன் said...

நன்றி முரளி இதே போல ஒரு காமெடி டிராக்கையே மணிரத்னம் இதயத்தை திருடாதேவிலும் உபயோகப்படுத்தியிருப்பார். ஏன் அப்படி செய்தார் என்று தெரியவில்லை, பிறகு கதையோடு சேர்ந்து வரக்கூடிய‌ காமெடி காட்சிகளுக்கு மாறிவிட்டார்

முரளிகண்ணன் said...

நன்றி ராம்குமார். இதயத்தை திருடாதே டப்பிங் படம். அந்த டிராக்கில் டிஸ்கோ சாந்தியுடன் தலை காட்டுபவர் தெலுங்கு காமெடியன்.

Bleachingpowder said...

//வெற்றிகரமான வசனகர்த்தாவாக (குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், மன்மதன்) மட்டும் வலம் வந்தார்.
//

பாலகுமாரன் வசனத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் நாயகன் தான். அவருடைய திருஷ்டி தான் சிட்டிசன்

anujanya said...

புருனோ/சங்கர்,

எனக்கு 'வளையோசை' பாடல் பாடிய பாடகி லதா மங்கேஷ்கர் (எஸ்.பி.பி.யுடன்) என்று ஞாபகம். ஆஷா பாடியது ''செம்பகமே செம்பகமே' என்றும் நினைவு.

முரளி, உங்க மொழியில் சொல்லணும்னா 'வழக்/கலக்' :)

அனுஜன்யா

புருனோ Bruno said...

//எனக்கு 'வளையோசை' பாடல் பாடிய பாடகி லதா மங்கேஷ்கர் (எஸ்.பி.பி.யுடன்) என்று ஞாபகம். ஆஷா பாடியது ''செம்பகமே செம்பகமே' என்றும் நினைவு. //

இந்த குழப்பத்திற்கு தான் கேட்டேன்

அது சரி

அந்த பாடலை பாடியது கமல் என்று பலரும் கூறுகிறார்களே ஏன் :)

ராஜ நடராஜன் said...

வி.என்.ஜானகியை ஓரங்கட்டி ஜெயலலிதா முன்னுக்கு வந்த தகிடுதத்தம் எனக்கு இன்னைக்கு வரையும் புரியலீங்க.நெடுஞ்செழியன் உட்பட பலரையும் பின்னுக்குத் தள்ளியது சாதனையா?வேதனையா?

ராஜ நடராஜன் said...

பின்னுட்டங்களில் எதிர்க்கேள்விகள் நிறைய வருகிற மாதிரி தெரியுது.நிறைய படம் தகவல்கள் சொல்கிறீர்கள்.

அருண்மொழிவர்மன் said...

இயக்கம்- மேற்பார்வை என பாக்யராஜின் பெயர் வரும். கதைக் களம் பிராமண சமுதாயமாக அமைந்ததால் இந்த ஏற்பாட்டை செய்தார்களா என தெரியவில்லை. இதன் பின் பாலகுமாரன் வேறு படங்களை இயக்கவில்லை. வெற்றிகரமான வசனகர்த்தாவாக (குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், மன்மதன்) மட்டும் வலம் வந்தார்.//

இந்த படத்தை பாலகுமாரன் இயக்கினாலும் அதற்குரிய எல்லா பாராடுகளையும் பாக்யராஜே பெற்றுக்கொண்டார். அதே வேளை பிராமண சமூகத்தில் இருந்து வந்த எதிர்ப்பலைகளை எதிர்கொள்ள மட்டுமே பாலகுமாரன் ஒரு கேடயமாக பயன்படுத்தப்பட்டார். இதில் ஏற்பட்ட கசப்பனுபவங்களால் அதன் பின்னர் திரைப்படம் இயக்கும் முடிவையே கை விட்டதாக பாலகுமாரன் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அதே போல பாலகுமாரனை இதன் பிறகு வந்த ராசுக்குட்டி திரைப்பட காலங்களில் பாலகுமாரனுக்கு திரைப்படத்தில் காட்சிகளாஇ அமைக்கும் அனுபவம் துளியேனும் இல்லை என்று பாக்யராஜ் தொடர்ந்து கிண்டலடித்து பேட்டிகளில் சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்

அருண்மொழிவர்மன் said...

//மீண்டும் கார்த்திக் /

அந்த திரைப்படத்தின் பெயர் மிஸ்டர் கார்த்திக். கண் சிமிட்டும் நேரம் திரைப்படம் எடுத்த சரத்குமார் எப்படு இப்படி ஒரு திரைப்படம் எடுக்கும் என்று நம்பிக்கை வைத்தார் என்றூ நான் ஆச்சரியப்பட்டதுண்டு

முரளிகண்ணன் said...

பிளீச்சிங் பவுடர், அனுஜன்யா, புருனோ தங்கள் வருகைக்கு நன்றி.

ராஜநடராஜன்,

அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக (82ல் என நினைக்கிறேன்) ஜெயலலிதா நியமிக்கப்பட்டவுடன் அவர் தன்னுடைய கரிஸ்மாவால் நிறைய ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டார். நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமசந்திரன், ஆர் எம் வீரப்பன், காளிமுத்து ஆகிய சீனியர் அமைச்சர்கள் அவரை எதிர்த்தனர். ஆனால் கே கே எஸ் எஸ் ஆர், திருனாவுக்கரசு போன்ற ஜூனியர் அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

ஜானகியை விட ஜெயலலிதா திறமைசாலிதான். கூட்டம் சேர்க்கும் ஆற்றல் அவருக்கும் அவரது பேச்சுக்கும் இருந்தது.

முரளிகண்ணன் said...

அருண்மொழிவர்மன் தங்களின் விரிவான பகிர்தலுக்கு நன்றிகள்.

மிஸ்டர் கார்த்திக் என திருத்திவிடுகிறேன்.