March 02, 2009

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா? பகுதி – 2


முதல் பகுதியில் ஹாலிவுட் திரைத் துறையினர் தொலைக்காட்சியின் தாக்கத்தினால் அகலத் திரையை நோக்கிச் சென்றனர் எனப் பார்த்தோம். 1950களின் நடுவில் இது நிகழ்ந்தது. இந்த நிலை நம் தமிழ்சினிமாவுக்கு 90களில் தான் ஏற்பட்டது.


இதற்க்கு காரணங்கள்


கொடைக்கானலில் தொலைக்காட்சி சிக்னலை ஒளிபரப்பும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதும் தான் தமிழகத்தில் பரவலாக தொலக்காட்சிப் பெட்டிகளை மக்கள் வாங்கத் துவங்கினர். பெரும்பாலோனோர் முதலில் பார்த்த நிகழ்ச்சியே இந்திராகாந்தி அம்மையாரின் (1984) இறுதிச்சடங்கு நிகழ்ச்சிதான். பின்னர் தமிழ் ஒளிபரப்பு துவங்கப்பட்டது (அமைச்சர் : அஜீத் பாஞ்சா). அப்போது வழங்கப்பட்ட நிகழ்ச்சிகள் மக்களின் திரைப்பட ஆர்வத்தை குலைக்கும் வகையில் இல்லை. தனியார் தொலைக்காட்சிகள் வருகையும், திருட்டி விசிடியும் தான் அந்த புண்ணியத்தை கட்டிக்கொண்டன.

தொலைக்காட்சியை கட்டிக் கொண்டு அழுத அமெரிக்கர்களை திரையரங்குக்கு அழைத்துவர அகலத்திரையை ஆயதமாக பயன்படுத்த தொடங்கினர். அவர்கள் கையில் அப்பொழுது இருந்தது 70 எம் எம். ஆனால் அதை அவர்கள் உபயோகிக்க வில்லை.

காரணங்கள்

70 எம் எம் பிலிம் விலை அதிகம். போடப்படும் பிரிண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படப்பிடிப்பில் அதற்க்குரிய கேமிரா, அது கூட பிரச்சினை இல்லை. எல்லாத் திரையரங்குளுக்கும் புரஜெக்டரை மாற்ற வேண்டும். அது மிகவும் செலவுபிடிக்கும்.

70 எம் எம் திரையை நிரப்ப நிறைய மெனக்கெட வேண்டும். திரையில் வெற்றிடம் இல்லாமல் அழகாய் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது அது காட்சியின் தாக்கத்தை குறைத்துவிடக் கூடாது.

இது போன்ற காரணங்களால் பல இயக்குநர்கள் 35 எம் எம் முடன் திருப்திப் பட்டுக்கொண்டனர்.

ஆனால் தொலைக்காட்சி போட்டியை சமாளிக்க யோசித்ததன் விளைவாக 3 டி, 55 எம் எம் பிலிம், சினிராமா ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன. ஆனால் அவையும் அதிக செலவு பிடித்தவையாகவும், எளிதில் எல்லோராலும் மாற்ற முடியாததாகவும் இருந்தன.


அவர்களுக்கு அருமருந்தாக வந்தது, பிரான்சு நாட்டு பேராசிரியர் ஹென்ரி கண்டுபிடித்திரிந்த அனமோர்போஸ்கோப் என்னும் தொழில்நுட்பம். இதை அவர் 1920லேயே கண்டுபிடித்து பேடண்ட் வாங்கியிருந்தலும் சீந்துவாரின்றி கிடந்தது. இந்த முறைப்படி ஒரு லென்ஸை கேமிராவின் முன்னால் வைத்து அகலமான படக்காட்சியை குறுக்கி 35 எம் எம் பிலிமில் பதிவு செய்வது. பின்னர் புரஜெக்டரின் முன் அதற்க்கு மற்றொரு (ஒளிப்பதிவுக்கு உபயோகிக்கப்பட்ட லென்ஸின் காம்ப்ளிமெண்ட்) லென்ஸை வைத்து விரியச்செய்வது. இதன் மூலம் அகலமான பிம்பம் நமக்கு கிடைக்கும். படமெடுக்கும் கேமிராவை மாற்றத் தேவையில்லை. புரஜெக்டரை மாற்றத் தேவையில்லை. பின்னர் கேமிராவிலேயெ இந்த அனமோர்போஸ்கோப் லென்ஸ் பொருத்தப்பட்டது. முதல் படத்தில் அது எவ்வாறு திரையில் விரிகிறது என காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது படத்தில் உள்ள நான்காவது பிலிமே அனமோர்ஸ்கோப் முறையில் பதிவு செய்யப்பட்ட பட்ட பிலிம்.


இன்னொரு வகையிலும் இந்த அகலத் திரை உணர்வை கொண்டுவரலாம். இது மேட் டெக்னிக் எனப்படும். 35 எம் எம் பிலிமின் மேலும் கீழும் சிறிது இடத்தை மறைத்துக் கொண்டு (அந்த பகுதியை எக்ஸ்போஸ் செய்யாமல்) படமெடுப்பது. இரண்டாவது படத்தில் உள்ள மூன்றாவது பிலிம் இதற்க்கு உதாரணம். ஜேம்ஸ் கேமரூன் தனது டெர்மினேட்டர் 2 மற்றும் டைட்டானிக் ஆகிய படங்களை இம்முறையிலேயே படமாக்கினார். ஆனால் இது பலரால் உபயோகப் படுத்தப் படுவதில்லை.



நீங்கள் கூட தமிழ்நாட்டில் பார்த்திருக்கலாம். முதல் சினிமாஸ்கோப் படம் 1973 ல் இங்கு எடுக்கப்பட்டிருந்தாலும், அதற்க்கு முன்னரே நன்கு அகலமான திரையே பெரும்பாலான திரையரங்குகளில் பயன்படுத்தப் பட்டு வந்தது. 1962 ல் ஜி. உமாபதி அவர்கள் ஆனந்த் 70 எம் எம் திரையரங்கை சென்னையில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போலவே அமெரிக்காவிலும் பெரும்பாலான திரையரங்குகளில் அகலத் திரை இருந்தது. (80களுக்குப் பின் வந்த மல்டிபிளெக்ஸ் கலாச்சாரத்தால் தான் குறைவான இருக்கை, சிறிய திரை அமைப்பு ஏற்படுத்தப் பட்டது). எனவே சினிமாஸ்கோப் நுட்பத்தை பயன்படுத்துவது எளிதாகிப் போனது. தேவை புதிய லென்ஸுகள் மட்டுமே.

இதனால் உற்சாகமடைந்த டுவெண்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் இந்த நுட்பத்தை உபயோகப் படுத்த துவங்கியது. கூடுதல் கவர்ச்சியாக நான்கு டிராக் ஸ்டீரியோ சப்தத்தையும் இணைத்தது. அதற்க்கு முன்னால் இருந்த 35 எம் எம் பிலிம்களில் இரண்டு டிராக்குகள் மட்டுமே (இடது,வலது) இருந்தன. பின்னர் மூன்று டிராக்குகளை உபயோகிக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு டிராக்குகள் (இடம், வலம், மையம், சுற்றுப்புறம்) கொண்ட சப்தமானது பார்வையாளருக்கு நல்ல கேட்டல் இன்பத்தை கொடுக்கக்கூடியது. இதில் மைய டிராக் வசனத்திற்க்காக்வும், இடம்,வலம் ஆகியவை வாத்தியங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. சிறப்பு சப்தம் நான்காவது டிராக்குக்கு. இந்த டிராக்குகளை இரண்டாம் படத்தின் நான்காவது பிலிமில் பார்க்கலாம்.


எனவே புரஜெக்டரில் இந்த ஒலியை மீட்டெக்கும் உபகரணத்தையும், சுவர்களில் ஸ்பீக்கர்களையும் பொருத்தி விட்டால் சுலபமாக ஸ்டீரியோ சப்தத்தைக் கேட்கலாம். இதை பொருத்தாவிட்டாலும் பரவாயில்லை, சப்தம் ஒற்றை டிராக்கில் (மோனோ) திரைக்குப் பின்னால் உள்ள ஸ்பீக்கர்களின் வழியாக கேட்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரே ஸ்பீக்கரில் இருந்து தான் சப்தம் கேட்கும். 1990க்குப் பின்தான் இது மாறிவருகிறது. இந்த நான்கு டிராக்குகளையும் பிலிமில் நான்கு காந்த நாடா வடிவில் ஒட்டி விடுவார்கள். (டப்பிங், இசைக்கோர்ப்பு முடிந்தபின்). அதனால் எளிதில் இசையானது ஸ்பீக்கர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.

இந்த தொழில்நுட்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் சில குறைபாடுகளும் இருந்தன. நாள்பட்ட உபயோகத்துக்குப் பின் காந்த நாடா சேதமுற்று தரம் குறைந்த ஒலியையே வழங்கியது. இதன் அடுத்த கட்டமாக வந்தவையே டால்பி ஸ்டிரீயோ, டிடிஎஸ் ஆகியவை.

டால்பி ஸ்டீரியோ

70களின் பிற்பகுதியில் இருந்து இவர்கள் இந்த நுட்பத்தை வழங்கி வந்தாலும், 90களின் ஆரம்பத்தில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான திரையரங்குகள் டால்பி எஸ் ஆர் முறை ஒலி வழங்கியையே கொண்டுள்ளன. இந்த முறையில் பிலிமில் உள்ள துவாரங்களுக்கு இடையே ஒலி சேமிக்கப்படுகிறது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தன் படங்களுக்கு இன்னும் மேம்பட்ட ஒலி வேண்டுமென்பதற்க்காக பண உதவி செய்து உருவாக்கப் பட்ட தொழில் நுட்பமே டிஜிடல் தியேட்டர் சவுண்ட் எனப்படும் டிடிஎஸ்.

டிடிஎஸ்

இந்த முறைப்படி ஒலியானது பிலிமில் பதியப்படாது. தனி சிடியில் பதியப்படும். படம் திரையிடப்படும்போது, இந்த சிடியும் ஆன் செய்யப்படும். இந்தக் குறியீட்டிற்க்கு ஏற்ற ஒலியே தியேட்டரில் ஒலிபரப்பாகும்.

இப்போது ஒரு சந்தேகம் வரலாம். ஆப்பரேட்டர் சில காட்சிகளை வெட்டிவிட்டால் என்ன ஆகும்?. உதாரணமாக ஒரு பாடலை வெட்டிவிடுவதாக கொள்வோம். அடுத்து வரும் வசனக் காட்சிக்கு பாடல் பாடினால் ரசிகர்கள் தியேட்டர் சீட்டை கிழித்து விடுவார்களே? இந்தக் கவலையே வேண்டாம். பிலிமில் டைம்கோட் என்ப்படும் குறியீடு இருக்கும். இந்தக் குறியீட்டிற்க்கு ஏற்ற ஒலியே தியேட்டரில் சிடி மூலம் ஒலிபரப்பாகும் எந்தக் குழப்பமும் நேராமல் காட்சிக்கு தகுந்த வசனமே நமக்கு கேட்கும்.

சில திரையரங்குகளில் காலை ஒரு படம், மற்ற மூன்று காட்சிகள் வேறு படம் என திரையிடுவார்கள். (அந்த காலைக்காட்சி டிடிஎஸ் ஸில் இருக்காது, அது வேறு விஷயம்). காலைக்காட்சி பிரிண்டுக்கான சிடியை தவறுதலாக மாலைக்காட்சிக்கு உபயோகப் படுத்திவிட்டால்?. அந்தக் கவலையும் வேண்டாம். அதற்க்கும் பிரத்தியேக குறியீடு இருக்கும். எனவே காட்சிக்குத் தகுந்த வசனம் மட்டுமே ஒலிபரப்பாகும்.
இரண்டாம் படத்தில் முதல் பிலிம் ஊமைப் படத்துக்கானது. இரண்டாவது அனலாக் ஒலி அமைப்புடைய எடிசன் தயாரித்த பிலிம். ஐந்தாவது பிலிமில் எல்லா ஒலி அமைப்புகளும் எவ்வாறு இடம் பெறும் என மொத்தமாக காட்டப்பட்டுள்ளது. பிங் நிறத்தில் இருப்பது சோனி சரவுண்ட் சவுண்ட், துளைகளுக்கு இடையே இருப்பது டால்பி ஸ்டிரீயோ, கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இரண்டு கோடுகள் அனலாக் டிராக்குகள். விட்டு விட்டுத் தெரியும் கறுப்பு நிற கோடு டிடிஎஸ் டைம் கோட்.


தற்போது உபயோகிக்கும் முறையான 5.1 ல் இடம்,வலம்,மையம், இடது சுற்றுப்புறம், வலது சுற்றுப்புறம் என ஐந்து மெயின் டிராக்குகளும், குறைந்த அலைவரிசை ஒலியை தரும் (LEF – low frequency effect ) என்னும் டிராக்கும் இதுவெ .1 என்று குறிக்கப்படுகிறது. (மூன்று முதல் 200 ஹெர்ட்ஸ் வரையிலான ஒலி). இதில் மைய டிராக் பெரும்பாலும் வசனத்துக்கே பயன்படுகிறது. நம் கண்களைப் போலல்லாமல் (146 டிகிரி பார்வை), காதுகள் 360 டிகிரியிலும் கேட்கும் சக்தி உள்ளதால் நல்ல கேட்டல் அனுபவம் கிடைக்கும். அதனாலேயே தற்போது 7.1 வரை வந்துவிட்டது.

நாம் டிராக் மாறி வந்து விட்டோம் என நினைக்கிறேன்.

நம் நோக்கம் ஏன் தமிழ் சினிமாவுக்கு சினிமாஸ்கோப் நுட்பம் வர 20 ஆண்டு தாமதம் ஏன்? என்பது.

1950களின் பிற்பகுதியில் எம்ஜியார், சிவாஜி ஆகிய நாயகர்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார்கள். ஸ்ரீதர் போன்ற இயக்குநர்கள் ரசமான படங்களை கொடுத்தார்கள். 70 களின் பிற்பகுதியில் பாரதிராஜா,மகேந்திரன், ரஜினி,கமல் என திரைத்துறை தொய்வில்லாமல் சென்றது. டிவியோ 90 வரை சிறப்பாக இல்லை.

அன்றைய கால கட்ட மக்கள் ஒரு ஸ்பீக்கருடன், 35 எம் எம் திரையுடன் திருப்தியடைந்து கொண்டனர். தியேட்டர் அதிபர்களும் புது நுட்பங்களை, உபகரணங்களை வாங்குவதில் தயக்கம் காட்டினர். மேலும் அன்றைய காலகட்டத்தில் கேமிரா போன்ற உபகரணங்களை சில கம்பெனியினர் மட்டுமே வாடகைக்கு கொடுத்து வந்தார்கள். அவர்கள் புது முதலீடுகளில் தயக்கம் காட்டினர். தற்போது எந்த தொழில்நுட்பம் வந்தாலும் உடனே இங்கு வந்துவிடுகிறது.

தமிழ் சினிமாக்கும் செண்டிமெண்டுக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்தது. ராஜ ராஜ சோழன் வெற்றி பெற்றிருந்தால் பலர் சினிமாஸ்கோப்புக்கு தாவியிருப்பார்கள். தோல்வி அடைந்ததால் பலரும் தயக்கம் காட்டினர். இன்னொன்று பட்ஜெட். 50களின் நடுவிலேயே கலர் படம் வந்திருந்தாலும் 80 வரை கறுப்பு வெள்ளையிலும் பல படங்கள் வந்தன்.

90 வரை பெரும்பாலான படங்கள் 35 எம் எம் மிலேயே வந்தன. 92ல் கூட சின்னக் கவுண்டர் படம் 35 எம் எம்தான். பாலு மகேந்திரா சதிலீலாவதி, ராமன் அப்துல்லா என 35 எம் எம் படங்களையே எடுத்து வந்தார்.

சினிமாஸ்கோப் எல்லாப் படங்களுக்கும் உபயோகப்பட்டதில் மிகவும் சந்தோஷ மடைந்தது நடனக் குழுவினர்தான். இருவர் மட்டுமே திரையில் ஆடினால் நிறைய வெற்றிடம் இருக்கும். நன்கு நடிப்பு, நடனம் தெரிந்தவர்கள் என்றால் குளோசப், நல்ல நடன அசைவு என்று ஒப்பேற்றிவிடலாம். மற்றவர்களை தனியாக திரையில் காட்டமுடியுமா?. எனவே இந்தப் பக்கம் 20 பேர் அந்தப் பக்கம் 20 பேர் என ஆட விட்டனர். மேலும் பில்டப் காட்சிகளுக்கு அதிகமான வாகனங்கள், ஆட்கள் தேவைப்பட ஆரம்பித்தனர். கலை இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு நல்ல தீனியும் கிடைத்தது. ஆனால் மொக்கைப் படங்களை சினிமாஸ்கோப்பில் பார்ப்பது கொடூரமானது.


அடுத்த பகுதியில் சினிராமா, ஐமேக்ஸ்.



31 comments:

Vidhya Chandrasekaran said...

மீ த ஃபர்ஸ்ட்:)

Vidhya Chandrasekaran said...

சான்ஸே இல்ல சார். எப்படிங்க டெக்னிகல் விஷய்ங்களை போரடிக்காமல் எழுத முடியுது?? dts பற்றின தகவல்கள் சூப்பரப்பு:)

முரளிகண்ணன் said...

நன்றி வித்யா

மாதவராஜ் said...

தகவல்களை சிறிய வரலாற்றுப் பின்னணியோடு சொல்வது சிறப்பான உத்தியாக உங்களிடம் இருக்கிறது.உண்மைதான்.மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் தோல்வி, தொழில்நுட்பத்தை தமிழில் பின்னுக்குத் தள்ளியது.

Cable சங்கர் said...

மீண்டும் ஒரு சூப்பர் பதிவு.. இதை தவிர ஏதும் சொல்வதற்கில்லை.. ஹாட்ஸ ஆப்.. முரளி..

முரளிகண்ணன் said...

மாதவராஜ், கேபிள் சங்கர் தங்கள் வருகைக்கும் ஊக்கப்படுத்தலுக்கும் நன்றிகள்

புருனோ Bruno said...

டிடிஎஸில் ஒரு சிக்கல் / வரப்பிரசாதம் உள்ளது

உதாரணமாக ஒரு வசனத்தை / வார்த்தையை மாற்றவேண்டுமென்றால், வெறுமனே பிலிமை வெட்டி ஓட்டினால் போதாது. சிடியை மாற்ற வேண்டும்

இதையே மாற்றி யோசித்தால் ஒரு வசனத்தை மாற்ற வேண்டுமென்றால் சிடியை மற்றும் மாற்றினால் போதும். அனைத்து பிரிண்ட்களையும் மாற்ற வேண்டாம்

பிலிமை பிரிண்ட் போட்டு வெட்டி ஓட்டுவதை விட சிடியை மாற்றி நகலெடுப்பது வெகு எளிது !!

--

ஆனால் ஏதாவது சர்ச்சை வந்து, அந்த வரியை மாற்ற வேண்டாம் என்று நினைப்பவர்கள் சொல்லும் சால்ஜாப்பு - ”இது டிடிஎஸ். அதனால் மாற்றுவது முடியாது”

இந்த வசனத்தை கேட்டீர்கள் என்றால் நீங்கள் அதை கூறியவரின் உண்மை நிலையை / மனதை (மாற்ற விருப்பமில்லை என்பதை) புரிந்து கொள்ளலாம்

(பின் குறிப்பு - நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை)

ILA (a) இளா said...

nalla vilakkam.

சின்னப் பையன் said...

மீண்டும் ஒரு சூப்பர் பதிவு.. இதை தவிர ஏதும் சொல்வதற்கில்லை.. ஹாட்ஸ ஆப்.. முரளி..

King... said...

திரட்டித்தருகிற தகவல்களுக்கு நன்றி...

butterfly Surya said...

Xlent. Keep going.. Great Job..

கோபிநாத் said...

சூப்பரு ;)

ஜியா said...

Thala....Vaaippe illa... Ippathaan ellaa technologyum therinjathu... thodarnthu ezuthunga...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ராஜராஜ சோழன் வெற்றீ பெற்றிருந்தால் ஒருவேளை தமிழில் நிறையப் படங்கள் வந்திருக்கலாம்.

எத்தனையோ சுவாரசியமான பகுதிகள் இருக்க ராஜ ராஜ சோழனின் ஒரு சிறிய அதுவும் சுவாரசியம் இல்லாத கதையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை ராஜ ராஜ சோழனை பத்துவருடம் முன்னரோ இருபது வருடம் பின்னரோ எடுத்திருந்தால் நிலமை மாறியிருக்குமோ.....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், எம்.ஜி.ஆர், கர்ணன் இவர்களின் காம்பினேஷன் ஏற்பட்டிருந்தால் கூட ஓரளவு தொழில்நுட்பம் முன்னேறிருக்கலாம்.

முரளிகண்ணன் said...

புருனோ, இளா, சின்னப்பையன்,கிங்,வண்ணத்துப் பூச்சியார்,கோபிநாத், ஜி, சுரேஷ் தங்களின் வருகைகு நன்றி.

புருனோ தங்களின் செறிவான பின்னூட்டங்கள் தொடரட்டும்.

சுரேஷ், தாங்கள் குறிப்பிட்டுள்ள காம்பினேஷன் அசத்தல்.

ஆதவா said...

சினித்துறையில் நீங்கள் நல்ல ஞானம் அடைந்தவராக இருக்கவேண்டும்..... ஒரு நிமிடம் எந்த ஒரு ஒலியையும் உள்வாங்காமல் உங்கள் பதிவைப் படித்து பிரமித்தேன்...

சான்ஸே இல்லை.........

கார்க்கிபவா said...

அடப் போங்கப்பா.. இவருக்கு வேற வேலையே இல்ல..

எம்.எம்.அப்துல்லா said...

//.சான்ஸே இல்ல சார். எப்படிங்க டெக்னிகல் விஷய்ங்களை போரடிக்காமல் எழுத முடியுது?? dts பற்றின தகவல்கள் சூப்பரப்பு:)

//

வித்யா சொன்னதுக்கு பெரிய ரிப்பீட்டு
:)

மாசற்ற கொடி said...

ரொம்ப ரொம்ப அருமை சார். இவ்வளவு techical விடயங்களை எளிதாக சொல்றது எப்படி சாத்தியம் ?

Hats off !

அன்புடன்
மாசற்ற கொடி

பாலா said...

பின்னிட்டான்யா... பில்கேட்ஸு

பிரேம்ஜி said...

வழக்கம் போல நிறைய தகவல்களுடன் அருமையான பதிவு.

ராமகுமரன் said...

உண்மையாகவே திரைஞானி தானய்யா நீர்

பரிசல்காரன் said...

வலையுலல ஃப்லிம் நியூஸ் ஆனந்தனிடமிருந்து, திரைஞானியாக உருவெடுத்து விட்டீர்கள்.

இந்த அரிய பகிர்தலை, வெறும் பதிவுகளோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தகமாக்க ஆவன செய்யுங்கள் தோழர்!

பரிசல்காரன் said...

ராஜராஜ சோழன் தோல்விப் படமென்பது எனக்கு புது நியூஸ்ங்க!

முரளிகண்ணன் said...

ஆதவா, கார்க்கி, அப்துல்லா,மாசற்ற கொடி, ஹாலிவுட் பாலா, பிரேம்ஜி, ராம் குமார், பரிசல்

தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி.

narsim said...

//தமிழ் சினிமாக்கும் செண்டிமெண்டுக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்தது. ராஜ ராஜ சோழன் வெற்றி பெற்றிருந்தால் பலர் சினிமாஸ்கோப்புக்கு தாவியிருப்பார்கள்//

அருமையான அலசல்..விவரங்கள்..அற்புதம் முரளி.. அடுத்த பதிவை நோக்கி..

நவநீதன் said...

கலக்கீடீங்க....!

விலெகா said...

ஐயா ரொம்ப நல்லா இருக்கு.

Unknown said...

//பாலு மகேந்திரா சதிலீலாவதி, ராமன் அப்துல்லா என 35 எம் எம் படங்களையே எடுத்து வந்தார்.//

அவர் எடுத்த ஜூலி கணபதி திரைப்படமும் 35mm என்றே நினைக்கிறேன்.

புருனோ Bruno said...

//இந்த அரிய பகிர்தலை, வெறும் பதிவுகளோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தகமாக்க ஆவன செய்யுங்கள் தோழர்!//
வழிமொழ்கிறேன் !!!