March 31, 2009

புதிய பதிவர்களை வரவேற்று சென்னையில் பதிவர் சந்திப்பு

கடந்த இரண்டாண்டுகளாக சென்னையில் அதிக பட்சம் ஓரிரு மாத இடைவெளியில் பதிவர் சந்திப்புகள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான சந்திப்புகள் கும்மி சந்திப்புகளாகவும், வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து வரும் பதிவர்களை சந்திக்கும் விதமாகவே இதுவரை நடத்தப் பட்டு வந்துள்ளது. மிக குறைந்த அளவிலேயே வரையறுக்கப் பட்ட நிகழ்ச்சிகளுடன் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன. முதன் முறையாக புதிய பதிவர்களை வரவேற்பதற்க்கு ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழ் வலைப்பதிவுலகம் என்றும் வற்றாத ஜீவநதியாய் பாய்ந்தோட முக்கிய காரணம் சிற்றோடைகளாய் வந்து சங்கமிக்கும் புதிய பதிவர்களே. அவ்வாறு கடந்த ஆறு மாதங்களில் பல புதிய பதிவர்கள் பதிவுலகிற்க்கு வந்துள்ளார்கள். அவர்களை வரவேற்கும் விதமாகவும், சென்னையில் இருந்தாலும் இன்னும் சந்திப்புகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் பதிவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்வதற்க்காகவும் வருகிற ஞாயிறு (ஏப்ரல் 5) மாலை ஐந்து மணி அளவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலபாரதி, லக்கிலுக், நர்சிம், டாக்டர் புருனோ, அதிஷா, கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறியுளார்கள். மேலும் வழக்கமாக சந்திப்புக்கு வரும் சிவஞானம்ஜி, இராமகி ஐயா, பைத்தியக்காரன், ஜியோவ்ராம் சுந்தர், வளர்மதி, ஆழியூரான், சுகுணா திவாகர், இளவஞ்சி, டோண்டு ராகவன், உண்மைத்தமிழன், அதியமான், நந்தா, எம் எம் அப்துல்லா, கடலையூர் செல்வம், வெண்பூ, கார்க்கி, ஜாக்கி சேகர்,தாமிரா, ஸ்ரீ ஆகியோரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (வழக்கமாக வருபவர்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை

இதற்கு அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவரும் அமைப்பாளார்களே.


சந்திப்பு பற்றிய் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள

பாலபாரதி – 9940203132

லக்கிலுக் – 9841354308

அதிஷா – 9884881824

கேபிள் சங்கர் - 9840332666

முரளிகண்ணன் - 9444884964

55 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Rajaraman said...

சென்னையில் மட்டும் தான் பதிவர் சந்திப்பு வைத்துகொள்கிரீர்களே.. ஏன் ஒரு முறை அருகிலுள்ள எங்கள் புதுச்சேரியிலும் வைக்கலாமே.. Any way Advance வாழ்த்துக்கள்..

நையாண்டி நைனா said...

HMMM Nadakkattum Nadakkattum

Anonymous said...

புதியவர்களை உற்சாகப்படுத்தும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் முரளி.

Raju said...

கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன்...

ஆண்ட்ரு சுபாசு said...

அதிஷா அவர்களிடம் என் வருகையை உறுதி செய்து உள்ளேன்.

Raju said...

Very Informative Message....
Keep it up Sampath...

Athisha said...

கும்மி அலவ்டா பாஸ்...சந்திப்புல?

Raju said...

கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன்...

கார்க்கிபவா said...

தல,

ஞாயிறு மாலையா? வழக்கம் போல ட்ரெய்ன பிடிக்க ஓடனும். சீக்கிரம் வந்து சீக்கிரம் ஜூட் ஆயிடறேன்..


கடைசிய என் டெம்ப்ளேட்டுக்கு வந்துட்டீங்க். ஏன்? என்னாச்சு?

முரளிகண்ணன் said...

@உலவு. காம்

விரைவில் இணைத்து விடுகிறேன்.

@ராஜாராமன்

வாழ்த்துக்கு நன்றி. வந்தால் மகிழ்ச்சி அடைவோம்.

@நையாண்டி நைனா
வந்துடுவீங்கதானே?

@வடகரை வேலன்

மிக்க நன்றி சார். சர்பிரைஸாக ஒரு முறை வந்ததுபோல் இம்முறையும் வாருங்களேன்

முரளிகண்ணன் said...

@டக்ளஸ் முயற்சி செய்யுங்கள்.

@ஆண்ட்ரு சுபாஷ் தாங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

@ அதிஷா நிச்சயம் அலவுடு.

தராசு said...

வரணும்னு ஆசை ஆசையா இருக்கு,

தற்சமயம் நாடு கடத்தப்பட்டு இருப்பதால் வர முடியாமைக்கு நானே வயித்தெரிச்சல் பட்டுக்கொள்கிறேன்.

முரளிகண்ணன் said...

கார்க்கி, கட்டாயம் கலந்துக்கிரணும்.

பதிவுதான் ஒரே மாதிரியா வெரைட்டி இல்லாம எழுதுறேன்.டெம்பிளெட்டாவது வெரைடியா இருக்கட்டுமேன்னுதான்

நையாண்டி நைனா said...

/*@நையாண்டி நைனா
வந்துடுவீங்கதானே?*/

எனக்கும் ஒரு முறையேனும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் உள்ளது. ஆனால் நான் இருப்பது மும்பை. என்ன செய்ய நான்?

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் முரளி

குடந்தை அன்புமணி said...

வரவேற்க வேண்டிய விடயம்தான்! உள்ளேன் போட்டுக்கிறேன், நானும்!

முரளிகண்ணன் said...

தராசு மிக்க நன்றி,

டிவி ராதாகிருஷ்ணன், குடந்தை அன்புமணி நிச்சயம் வரவேண்டும்

நையாண்டி நைனா முயற்ச்சி செய்யுங்களேன்

பாலராஜன்கீதா said...

உள்ளேன் ஐயா

narsim said...

சந்திப்போம்.

லக்கிலுக் said...

ஆஜர் ஆயிடுறேன் தல...

‘தினகரன் புகழ்’ மருத்துவர் வர்றாரு இல்லையா?

மனோ said...

நானும் புதிய பதிவர் தான், ஞாயிறு மாலையா? அன்று விழுப்புரத்தில் எனது அண்ணன் திருமணவிழா, என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை. அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயமாக கலந்துகொள்வேன். கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன்...

மனோ said...

நானும் புதிய பதிவர் தான், ஞாயிறு மாலையா? அன்று விழுப்புரத்தில் எனது அண்ணன் திருமணவிழா, என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை. அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயமாக கலந்துகொள்வேன். கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன்...

பாலா said...

நமக்கு கலந்துக்குற கொடுப்பினை இல்லீங்க. உங்க நம்பரை மட்டும் நோட் பண்ணி வச்சிகிட்டேன். :-)

butterfly Surya said...

முயற்ச்சிக்கிறேன்.

Positively will try to attend.

Thanx for the info Murali.

அகநாழிகை said...

நானும் கலந்து கொள்கிறேன் நண்பா.

- பொன். வாசுதேவன்

சின்னப் பையன் said...

சூப்பர். வாழ்த்துகள்.

இதற்கடுத்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமான்னு பாக்குறேன்...

முரளிகண்ணன் said...

@ பாலராஜன் கீதா , தாங்களை மிகவும் எதிர்பார்க்கிறோம்

@நர்சிம், நீங்க இல்லாமலா

@லக்கிலுக், தினகரன் புகழ் மருத்துவர் புருனோ தான் வரவேற்பே அளிக்கப் போகிறார்.

@மனோ, அடுத்த பதிவர் சந்திப்பில் நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்

முரளிகண்ணன் said...

@ ஹாலிவுட் பாலா, நீங்க சென்னைக்கு வரும்போது நாங்க அசத்திடுறோம் உங்களை.

@வண்ணத்துப்பூச்சியார், அவசியம் தேன் பருக வருக

@அகநாழிகை, ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

@சின்னப்பையன், அடுத்த தடவை வந்துடுங்க

நல்லதந்தி said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்!. :)

Kumky said...

சென்னை ரொம்ப ஹாட்..
இடத்தை மாத்தப்படாதா...
(பாண்டிக்கு ஒருவர் கூப்பிடுறார் கவனிங்க சாமியோ...)
ஏதோ போன தடவ நா வந்ததுனால மழை வந்தது எல்லோரும் தப்பிச்சிங்க.

anujanya said...

ஆஹா, நடத்துங்க. வாழ்த்துகள்.


கார்க்கி, டெம்ப்ளேட் செம் தான். ஆனாலும் கலர் பச்சை. அதுல ஒரு பிரபல பதிவர் வலைப்பூ இருக்கு தெரியும்ல.

அனுஜன்யா

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அன்று சென்னைக்கு ஒரு வேலையாக வரவேண்டியுள்ளது.இரவே திரும்ப வேண்டும். கலந்துகொள்ள முயற்சிக்கிறேண்.

முரளிகண்ணன் said...

@நல்லதந்தி, மிக்க நன்றி. அவசியம் வாருங்கள்

@கும்க்கி, பாண்டியில நடக்கும்போது நீங்க அவசியம் வரணும்

@அனுஜன்யா, மும்பைல எலெக்‌ஷன் பீவர் எப்படி இருக்கு?

@வேங்கட சுப்பிரமணியன், மிக ஆர்வமுடன் வரவேற்க்கிறோம். அவசியம் வருக

Thamira said...

தமிழ் வலைப்பதிவுலகம் என்றும் வற்றாத ஜீவநதியாய் பாய்ந்தோட முக்கிய காரணம் சிற்றோடைகளாய் வந்து சங்கமிக்கும் புதிய பதிவர்களே.//

நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா..

Thamira said...

நல்ல வேளை ஞாயிறு. சனிக்கிழமைன்னா ஹைதையிலிருந்து ட்ரெயின்ல வந்துகிட்டிருப்பேன். அப்புறம் வழக்கம் போல டிமிக்கி குடுத்துட்டான்னு அவப்பெயர் வந்து சேர்ந்திருக்கும்.

நா பிரெசென்ட் அண்ணாச்சி.!

எம்.எம்.அப்துல்லா said...

நானும் புதிய பதிவர்தான். இந்த ஜனவரிலேந்துதான் வலைப்பூ எழுதுறேன். சந்ஹேகமா இருந்தா ஃபுரபைலில் பாருங்க :)

அறிவிலி said...

ஹ்ம்ம் முடியலியே.... ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைன்னா ஜூன்ல இந்தியா வரும்போது எனக்கு அதிர்ஷ்டம் அடிக்குதா பார்ப்போம்.

சென்ஷி said...

:-)

வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாய் நடைபெற வாழ்த்துக்கள்

Anonymous said...

வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாய் நடைபெற வாழ்த்துக்கள்

Bruno said...

//ஆஜர் ஆயிடுறேன் தல...

‘தினகரன் புகழ்’ மருத்துவர் வர்றாரு இல்லையா?//

எதாவது பிரச்சனை என்றால் சொல்லுங்கள் தனியாக பேசி தீர்த்துக்கொள்ளலாம்

இப்படி பொது இடத்தில் போட்டு தாக்க வேண்டாமே :)

மாதவராஜ் said...

என்னால் கல்ந்து கொள்ள முடியவில்லையே என்ற் ஏக்கமிருந்தாலும், நம் மக்கள் சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதே சந்தோஷம்தானே!

முரளிக்கண்ணன்!
தகவலை பகிந்து கொண்டமைக்கு என் நன்றி.

Venkatesh Kumaravel said...

:D
ஜூன் மாதம் இதே மாதிரி ஏதும் நடந்தா சொல்லுங்க... லீவுக்கு அப்ப தான் ஊர் பக்கம் வர முடியும்! சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்!

Anonymous said...

நானும் புதுசுதான். வந்துடரேன்.

முரளிகண்ணன் said...

@ஆதி சந்தோஷம்.

@அப்துல்லா நீங்க போட்டிருகிற பின்னூட்டமெல்லாம் காலம் கடந்தும் நிக்குமேன்னே

@அறிவிலி ஜூன்ல நீங்க வாங்க. நிச்சயம் அதை ஒட்டியே சந்திப்பு நடத்துவோம்

முரளிகண்ணன் said...

ஷென்ஷி, கடையம் ஆனந்த், நசரேயன். டாக்டர் புருனோ தங்கள் வருகைக்கு நன்றி

மாதவராஜ், வெங்கி ராஜா,ஷிர்டி சைடைசன் தங்களுக்கு நன்றி

லக்கிலுக் said...

////ஆஜர் ஆயிடுறேன் தல...

‘தினகரன் புகழ்’ மருத்துவர் வர்றாரு இல்லையா?//

எதாவது பிரச்சனை என்றால் சொல்லுங்கள் தனியாக பேசி தீர்த்துக்கொள்ளலாம்

இப்படி பொது இடத்தில் போட்டு தாக்க வேண்டாமே :)//

ப்ரூனோ சார்!

தினகரன் புகழ்னு தானே சொன்னோம். ‘துக்ளக் புகழ்’னு சொல்லிடலையே? :-)

முரளிகண்ணன் said...

ஆஹா லக்கி பின்னூட்டத்தில பின்னுறீங்களே.

thanjai gemini said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகிறேன்

ஸ்ரீ.... said...

தங்களின் அறிவிப்பை எனது வலைப்பூவிலும் ஒரு பதிவாக்கி விட்டேன். கட்டாயம் நானும் எனது நண்பர்களோடு கலந்து கொள்கிறேன். ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி.

ஸ்ரீ....

அத்திரி said...

எப்பவும் சனிக்கிழமை நடைபெறும் பதிவர் சந்திப்பை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன்

தமிழன்-கறுப்பி... said...

நல்லா இருங்க!

ஊர்சுற்றி said...

//மாலை 5 மணி முதல் 7 மணி வரை//

என்று நேரத்தை சுருக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)))

எப்படியும் இதையும் தாண்டி பதிவர்கள் அங்கே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஷண்முகப்ரியன் said...

இப்போதுதான் இந்தத் தகவலைப் பார்த்தேன்.முடிந்தவரை நண்பர்களைச் சந்திக்க முயல்கிறேன்.நன்றி முரளிகண்ணன் சார்.

வினோத் கெளதம் said...

ம்ம்ம்...வாய்ப்பே இல்லை..கடைசி வரைக்கும் இதே மாதிரி படிச்சிட்டு தான் இருக்கணும் போல..
நான் இருக்கும் ஊரில் இதே மாதிரி ஏற்பாடுகள் நடந்தால் நன்றாக இருக்கும்.