இந்த ஆண்டு இந்திய அரசியலில் புயல் வீசிய ஆண்டு. இந்திராகாந்தி அவர்கள் தன்னுடைய
பாதுகாவலர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து ராஜீவ் பிரதமரானார். அவர் உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு மக்களை சந்தித்தார். தமிழகத்திலோ எம்ஜியார் அவர்கள் உடல்நிலை மோசமாக பாதிக்கப் பட்டு போராடிக் கொண்டிருந்தார்.
அப்பல்லோ, புரூக்ளின், டயாலிசிஸ் போன்ற சொற்கள் அனைத்து தமிழர் நாவிலும் புழங்கிக்
கொண்டிருந்தன. வதந்திகளும் சுழன்றடித்துக் கொண்டிருந்தன. ராஜீவ் தேர்தலை சந்திக்க தயாரானதும், அப்போதைக்கு எம்ஜியாருக்கு நெருக்கமானவர்களாக இருந்த ஆர் எம் வீரப்பன்,பண்ருட்டி ராமசந்திரன் ஆகியோர் ஆட்சி மீதமிருக்கும் நிலையிலும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்ட மன்ற தேர்தலையும் நடத்தி விடலாம் என முடிவு செய்தனர். அவர்கள் இந்திரா, எம்ஜியார் அனுதாப அலை, ராஜீவின் வசீகரம் ஆகியவை வெற்றி தேடித்தரும் என்று நம்பினர். அது வீண்போகவில்லை.
இந்த தேர்தல் தான் ஜெயலலிதா முதன் முதலாக பிரச்சாரம் செய்த பொதுத் தேர்தல்.எம்ஜியாரின் மருத்துவமனைப் படங்களை வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட இரண்டாவது தேர்தல். அமெரிக்காவில் படுத்துக் கொண்டு ஆண்டிபட்டியில் எம்ஜியார் ஜெயித்த தேர்தல். முதன்முதலாக வீடீயோ பிரச்சாரம் அறிமுகமான தேர்தல்.(எம் ஜி யார் மருத்துவமனைக் காட்சிகள்).
ஆனால் தமிழ்சினிமா எந்த புற பாதிப்பையும் உட்கொள்ளாமல் தன் பாதையில் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. 117 திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டன.15 படங்கள் 100 நாட்களை தொட்டன. அதைப் பற்றிய ஒரு பார்வை.
சிறை
ஆர் சி சக்தி இயக்கத்தில், அனுராதா ரமணன் கதையில் ராஜேஷ், லட்சுமி நடிப்பில் வெளிவந்த படம்.
இந்தப் படத்தின் கதை விகடன் மணிவிழா போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. (அப்போதே 50000
ரூபாய்). இந்த பணத்தில் நூறு பவுனுக்கு மேல் வாங்கலாம் என்று பலர் அப்போது பேசிக் கொண்டார்கள்.
இன்றைய கணக்குக்கு 10 லட்சத்தை தாண்டும். ஒரு சிறுகதைக்கு (அதுவும் தமிழில்) இவ்வளவு பெரிய பரிசு இதுவரை வந்ததில்லை.
ஒரு பிராமணரின் மனைவியை (லட்சுமி), ஊர் மைனர் (ராஜேஷ்) பாலியல் பலாத்காரம்
செய்து விடுகிறார். லட்சுமியின் கணவர் அதை தட்டிக் கேட்காமல் இருக்கிறார். ஆனால் குடும்பத்தார் லட்சுமியை புழுப் போல நடத்துகிறார்கள். பொறுத்துப் பார்த்த லட்சுமி, கடைசியில் அந்த மைனர் வீட்டுக்கே பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று விடுகிறார்.
அச்சமில்லை அச்சமில்லை
அரசியலை மையமாகக் கொண்டு தமிழில் வெளிவந்த சில படங்களில் இதுவும் ஒன்று. ராஜேஷ் வளரத் துடிக்கும் அரசியல்வாதி. சரிதா காதலியாயிருந்து மனைவியானவர். பின் ராஜேஷ் அரசியல் சூழ்நிலை களால் கெடுவதைப் பார்த்து பிரிகிறார். கதைக்களமாக உள்ளூர்,கிராமப்புற அரசியல் இருந்தது.
மேகத்தை தூதுவிட்டா போன்ற அருமையான மெலடிப் பாடல்கள் இருந்தாலும், அப்போது கையில காசு வாயில தோசை என்னும் பாடலே பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பாக பாடப் பட்டது.
செத்தவனும் ஓட்டுப் போட வருவான், அந்த கடவுளும் வரிசையில நிற்பான் என்னும் வரிகள்
சிலாகிக்கப்பட்டன. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ஊர் எப்படி மாறுகிறது என்பதை அருமையாக காட்சிப் படுத்தியிருப்பார்கள்.
நாளை உனது நாள்
புத்தாண்டுக் கொண்டாட்டம். கலந்து கொண்ட அனைவரது பெயரையும் சீட்டில் எழுதிப் போட்டு குலுக்கி (எடுப்பது அனுராதா, ஆடிக்கொண்டே) எடுக்கிறார்கள். வந்த அனைவருக்கும் வெளிநாட்டுக்கு விமானப்பயணம் பரிசு. விமானம் கிளம்பி, கோளாறு காரணமாக ஒரு தீவில் தரையிரங்குகிறது.
செல்போன் இல்லாத காலம். வெளியுலகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு பங்களா மட்டும் தட்டுப் படுகிறது. அங்கே ஒரு சமையல்காரி மட்டும், உணவுப் பொருள்களுடன். அவளுக்கும் ஒரு விபரமும் தெரியவில்லை. உணவு மட்டும் தயாரித்து தருகிறாள்.
இரவில் பெண் குரலில் அமானுஷ்ய பாடல். ஒவ்வொருவராக தொடர்ந்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். யாரை சந்தேகப்படுகிறார்களோ அவர்கள்தான் அடுத்து இறக்கிறார்கள். முடிவு என்ன?. யார் இதை ஏற்பாடு செய்தது?
கடைசி வரை கிரிப்பாகச் செல்லும் இந்த திரில்லரை இயக்கியவர் ஏ ஜெகன்னாதன். விஜயகாந்த், ஜெய்சங்கர், மனோரமா,நளினி, சத்யராஜ் நடித்த இந்தப் படம் ஏன் எந்த டிவியிலும் வரவில்லை எனத் தெரியவில்லை.
விதி
மறைந்த பாலாஜி, வழக்கம் போல் தயாரித்த இந்தி ரீமேக். மோகன், பூர்ணிமா ஜெயராம் (பாக்யராஜ்), ஜெய்ஷங்கர், லட்சுமி, பூர்ணம் விஸ்வனாதன், மனோரமா நடித்த இந்தப் படத்துக்கு வசனம் ஆரூர் தாஸ். ஏமாற்றிய காதலனை கோர்ட் மூலம் காதலி கைப்பிடிக்கும் கதை.
மதிய நேர முடிதிருத்தகங்கள், டீக் கடைகள் போன்றவற்றில் இந்தப் படத்தின் வசன கேசட்தான் ஓடிக் கொண்டிருக்கும். தீபாவளி சமயங்களில் விடிய விடிய வேலை நடக்கும் டெய்லர் கடைகளில் இந்தப் பட வசனத்தைக் கேட்டுக்கொண்டுதான் பையன்கள் காஜா எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
பராசக்தி, மனோகரா வுக்குப் பின்னர் வசனத்திற்க்காகவே ஓடிய படம் இது என்று கூட சொல்லலாம்.
நீங்கள் கேட்டவை
என் டேஸ்டுக்கு எடுத்தாத்தான் பார்க்க வரமாட்டேங்கிறங்க. சரி. நீங்க கேட்குறதயே தர்றேன் என்று பாலு மகேந்திரா களம் இறங்கிய படம்.
கனவு காணும், பிள்ளை நிலா, அடியே மனம், ஓ வசந்த ராஜா என வெரைட்டியான பாடல்கள்.
இந்த பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பாடலை அதிமுகவினர் ரீ மிக்ஸ் செய்து ரெட்டை இலை இரண்டும் பச்சை இலை என பாடி கேன்வாஸ் செய்தார்கள்.
இது தவிர இந்த ஆண்டின் மிகச்சிறந்த நாட்டுப்புற/கானா என வகைப்படுத்தும் படி இரண்டு பாடல்கள் வந்தன.
டி கே எஸ் நடராஜன் பாடிய என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி பாடல் வாங்க மாப்பிள்ளை வாங்க என்னும் படத்திலும்,
என் அத்தை பெத்த மல்லிகைப் பூவே, ஏன் ஆசைக்கேத்த முல்லைப் பூவே மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா என்னும் பாடல் பேய்வீடு என்னும் இடம்பெற்று வெளியானது.
ரஜினிகாந்த்
ரஜினி இந்த ஆண்டு தமிழில் மட்டும் ஐந்து படங்களில் நடித்தார். ஒன்றுக்கொன்று மாறுபட்ட படங்கள் என்றும் சொல்லலாம். தம்பிக்கு எந்த ஊரு படம் ரஜினியின் படங்கள் குடும்பத்தோடு பார்க்கக்கூடியவை என்று அனைவர் மனத்திலும் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது. அடுத்து இதே ஆண்டில் வெளி வந்த நல்லவனுக்கு நல்லவனும் அதை உறுதி செய்தது. அன்புள்ள ரஜினிகாந்த்தில் ரஜினியாகவே
நடித்தார். சுமாரான ஓட்டமே. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கை கொடுக்கும் கையில் ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான வேடம். நான் மகான் அல்ல படம் மட்டுமே ரஜினியின் (அப்பொதைய)
டிரேட்மார்க படம்.
கமல்ஹாசன்
இந்த ஆண்டு கமலின் ஒரு படம் மட்டுமே வெளிவந்தது. எனக்குள் ஒருவன். இதில் ஷோபனா அறிமுகமாகி இருந்தார். படம் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியடையவில்லை. இந்த ஆண்டில் கமல் பெரும்பாலும் இந்தித் திரையுலகையே வட்டமிட்டுக் கொண்டிருந்தார். (சாகர் படப்பிடிப்பு).
விஜயகாந்த்
இந்த ஆண்டு விஜயகாந்த் 18 படங்களில் நடித்தார். வைதேகி காத்திருந்தாள் வெள்ளி விழா கொண்டாடியது.நூறாவது நாள், நாளை உனது நாள் ஆகியவை 100 நாட்களைக் கடந்தன.
சத்யராஜ்
அதுவரை துணை நடிகர் அளவில் தலையைக் காட்டிக் கொண்டிருந்த சத்யராஜை நம்பர் 1
வில்லன் ஆக்கியது இந்த ஆண்டுதான். இந்த ஆண்டில் வெளிவந்த தம்பிக்கு எந்த ஊரில் கூட ஒரு சிறு வேடம் தான். ஆனால் நூறாவது நாளும், 24 மணி நேரமும் அவரை தூக்கி விட்டன.
மோகன்
நூறாவது நாளில் ஆண்டி ஹீரோ, 24 மணி நேரம், நான் பாடும் பாடல் ஆகியவற்றில் நல்ல வேடம் என மோகனின் வண்டி வழக்கம் போல ஓடியது.
முரளி/அர்ஜூன்
முரளி பூவிலங்கு மூலமும், அர்ஜூன் நன்றி படத்தின் மூலமும் அறிமுகமானார்கள். பூவிலங்கில் அறிமுகமான பூவிலங்கு மோகனும், குயிலியும் இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் புகுந்து விளையாடுகிறார்கள்.
44 comments:
விஜயகாந்த் 18 படங்களில் நடித்தார். ////
அதனால தான் அரசியலுக்கு வந்து விட்டாரோ..??
அருமையான தொகுப்பு.
முரளி, தொடரவும்.
நன்றி வண்னத்துபூச்சியார்.
Nice collection of information. Nostalgic to think about those days.
'Naalai Unadhu Naal' seems to be inspired by Agatha Christie's 'And there were none'. A similar movie was made by Veenai balachander 'Nadu Iravil', though the setting and scenario were different.
A hindi film, 'Gumnaam' too was made long ago based on the same story.
நன்னா இருக்கு நண்பா....
ஒரு முறை விசிட் செய்யவும்: கடைசி பட கமண்டிற்காக.
http://naiyaandinaina.blogspot.com/2009/06/blog-post_05.html
முரளி...,
அர்ஜுன் அறிமுகமானது.. ‘இளஞ்சிங்கம்’ அல்லது ‘இளங்சிங்கங்கள்’-ங்கற குழந்தைகள் படத்தில். ஒரு 16-18 வயசிருக்கும்னு நினைக்கிறேன்.. அர்ஜுனுக்கு!
நூறாவது நாள் என்ற படம் கொஞ்சம் பரபரத்தது. அதன் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
ஓரே குடும்பத்தில் ஒன்பது பேரை கொலை செய்த ஜெயபிரகாஷ் பற்றி?
The original of 'கனவு காணும்' song is from the hindi film 'Upkaar'. (Kasme Vaade Pyaar Wafa)
I have read somewhere that there was a agreement between the music directors to exchange one of their songs. I make it clear that I am not accusing Illayarja of plagiarism . Illayarja had given one of his songs to the other music director.
You can refer
http://www.itwofs.com/tamil-ir.html
அந்த அரசியல் தகவல்கள் நன்றாக இருந்தது.
வழக்கம்போல் சுவையான பதிவு.
அச்சமில்லை அச்சமில்லை படத்தின் "ஆவாரம்பூவு" பாடலை குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே.
முரளி..விதி மலையாள படத்தின் ரீமேக்னு நினைக்கிறேன்
"ஆண்டவனப் பாக்கனும் அவனுக்கு ஊத்தனும்" நு வர்ற சத்தியராஜ் பாட்டு "அச்சமில்லை அச்சமில்லை" யா.."மக்கள் என் பக்கமா.."?
அப்போ, 1984 ல இருந்து சத்தியராஜை ஏத்திவிட்டது மணிவண்ணன் தானா...?
"என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்ரீங்களே" சத்தியராஜ் ட்ரேட்மார்க் வசனம் ரொம்ப பேசப் பட்டுச்சுல.
முரளிகண்ணன்,
சார்... நீங்க என் இன்றைய பதிவு
”சினிமாவில் “டைரக்ஷன்” காட்டுதல்”
படித்தீர்களா?
“டைரக்ஷன்” என்ற பெயரில்.......?
ம். நல்ல அலசல் முரளி வழக்கம் போலவே. அப்பாடா இந்த தடவை லிஸ்டிருக்கிற படங்களில் நிறையப் படங்களை நானும் பார்த்திருக்கேன்.
அச்சமில்லை அச்சமில்லை இந்த படத்தில் தானே ஒரு குல்ளாம மனிதருக்கு சுத்ந்திரம் என் பெயர் வைத்திருப்பார்
அலசு அலசுன்னு அலசி ஒரு வழி பண்றீங்களே தல........2009 இல் கலக்கிய பதிவர்கள்னு ஒரு பதிவு போட்டா கட்டாயம் உங்க பேர் அதுல இருக்கும்.....
@ Booksforlife
தங்கள் வருகைக்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி. மிக உபயோகமான லின்க் மற்றும் தகவல்கள்.
நையாண்டி நைனா, பின்னீட்டிங்க.
ஹாலிவுட் பாலா, தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.
திருத்தி விடுகிறேன்
///"கடைசி வரை கிரிப்பாகச் செல்லும் இந்த திரில்லரை இயக்கியவர் ஏ ஜெகன்னாதன். விஜயகாந்த், ஜெய்சங்கர், மனோரமா,நளினி, சத்யராஜ் நடித்த இந்தப் படம் ஏன் எந்த டிவியிலும் வரவில்லை எனத் தெரியவில்லை."///
யாராவது ஸ்பான்ஸர் கொடுங்க சார்...
முரளி , நல்ல பதிவு
வாங்க என் வீட்டுக்கு...
ரவிஷங்கர் சார் தங்கள் வருகைக்கு நன்றி.
நூறாவது நாள் பாதிப்பில் தான் நான் கொலை செய்து சுவருக்குள் புதைத்தேன் என்று கூறிய ஜெயப்பிரகாஷ் தானே?
அவன் ஆயுள் தண்டனையா? இல்லை தூக்கில் இருந்து குறைத்தார்களா?
விடுதலை என்று கேள்விப்பட்டதாக நினைவு. சரியாக தெரியவில்லை.
நாடோடி இலக்கியன் தங்கள் வருகைக்கு நன்றி
வாங்க தண்டோரா. விதி இந்தி பட ரீமேக் என்று நினைவு.சரிபார்க்கிறேன்.
வாங்க டக்ளஸ், அந்தப் பாட்டு மக்கள் என் பக்கம்தான்.
மணிவண்ணன் களம் அமைத்து கொடுத்தார். சத்யராஜ் புகுந்து விளையாடினார்.
என் கேரக்டர் வசனம் அருமையான பஞ்ச்.
ரவிஷங்கர் சார், உங்கள் பதிவைப் படித்தேன். கலக்கீட்டிங்க. டிஆரை உங்க பங்குக்கு கொஞ்சம் டர் ஆக்கிட்டீங்க.
வருகைக்கு நன்றி வித்யா.
ஆமாம் அக்னிபார்வை.
வருகைக்கு நன்றி நேசன்.
வருகைக்கு நன்றி ஸ்டார்ஜான்
ரவிசங்கர் சார்,
உங்க பதிவிலே கமெண்ட் போட முடியலியே. கொஞ்சம் சரி பாருங்களேன்
இயல்பான பதிவு. விதி படத்தைப் பற்றிய கருத்துகள் அப்பட்டமான உண்மை. நான் சிறுவனாக இருந்தபோது பலமுறை கேட்டிருக்கிறேன்.. பிறர் கேட்டுக்கொண்டிருப்பதை.!
பொறக்குறதுக்கெல்லாம் முன்னாடியே... ம்.. அரிய தகவல்கள்.. பழைய படம் ஜாஸ்தி பார்த்ததில்லை... ஒரு அத்தியாவசிய பட்டியல் ரேஞ்சுல போடுங்க சார்.. வருஷத்துக்கொரு படம் மாதிரி..
பரிசுத்தொகை எவ்வளவு?
சொக்கா...............,,,,,,,
//எம்ஜியாரின் மருத்துவமனைப் படங்களை வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட இரண்டாவது தேர்தல். //
நுணுக்கமான தகவல்.
முதல் தேர்தலில் அந்தப் படங்கள் எந்த அளவு உபயோகப் படுத்தப் பட்டது என்பத் பற்றி யாராவது முழுவிவரங்கள் தாருங்களேன்.
//என் டேஸ்டுக்கு எடுத்தாத்தான் பார்க்க வரமாட்டேங்கிறங்க. சரி. நீங்க கேட்குறதயே தர்றேன் என்று பாலு மகேந்திரா களம் இறங்கிய படம். //
அது என்னமோ தெரியல தல..,
எனக்கு மூன்றாம் பிறையும், நீங்கள் கேட்டவை படமும் ஒரே தரத்தில்தான் தெரிகின்றன....
சொன்னால் எல்லாரும் சண்டைக்கு வர்ராங்க
//இந்த ஆண்டு விஜயகாந்த் 18 படங்களில் நடித்தார். //
20 நாளைக்கு ஒரு படம் ரிலீஸ்
அருமையான தொகுப்பு.
தல வழக்கம் போல் அருமை
//இந்த ஆண்டு விஜயகாந்த் 18 படங்களில் நடித்தார்.//
அடேங்கப்பா!
தேவா ஒரு படத்திற்கு எதோ ஒரு ஆண்டு 18 படத்திற்கு இசை அமைத்தார் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்..அதே போல நடித்து இருப்பது பெரிய சாதனை தான்.
வாங்க ஆதி.
வாங்க வெங்கிராஜா
வாங்க சுரேஷ். பரிசுத்தொகையை நினச்சாலே கண்ணக்கட்டுது.
முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது 67ல். எனவே யூத் பதிவர்கள் தான்
அதைப்பற்றி சொல்லவேண்டும்
வாங்க சின்னப்பையன்
நன்றி அத்திரி.
கிரி,
தேவாவுக்கு 18 எல்லாம் குறைவு தான். வைகாசி பொறந்தாச்சு வெற்றிக்குப் பின் கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் அவருக்கு 40 படம் புக்கானதாக நினைவு. சரிபார்த்து பின் தகவல் தருகிறேன்
முரளி... விஷயங்களை விடுங்க... நீங்க இன்னொரு ஃபிலிம் ந்யூஸ் ஆனந்தன்... ஆனா உங்க எழுத்து உங்க வலைப்பூ தலைப்பு மாதிரி இருக்கு... ரொம்ப ரசித்தேன் !!!
நாளை உனது நாள் மறக்க முடியாத படம்..அந்தக்காலத்தில் செம த்ரில்லர்
வழக் கலக் முரளி..
\\பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா \\
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ;)
பதிவு வழக்கம் போல கலக்கல் ;)
மகேஷ், நர்சிம், கோபிநாத்
தங்கள் வருகைக்கு நன்றி
எப்டி அண்ணே... உங்களால மட்டும் முடியுது... சான்ஸே இல்ல சூப்பர் பதிவு....
முரளி,
படம் பார்த்த நினைவுகளை கிளறி விட்டீர்கள். நீங்கள் கேட்டவையின் பாடல்கள் இப்போதும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன.
பகிர்விற்கு நன்றி.
‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்
அண்ணே, என்னைய 4 ஆம் வகுப்பு ‘அ” பிரிவில் உக்கார வச்சுட்டீக
:)
வருகைக்கு நன்றி சுகுமார் சுவாமிநாதன், அகநாழிகை, அப்துல்லா.
//என் அத்தை பெத்த மல்லிகைப் பூவே, ஏன் ஆசைக்கேத்த முல்லைப் பூவே மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா என்னும் பாடல் பேய்வீடு என்னும் இடம்பெற்று வெளியானது.//
மிக்க நன்றி ..,முரளிகண்ணன்.
இந்த பாடல் முதல் வரியை தான்
தேடி கொண்டிருந்தேன்..,
எப்போதோ கேட்டது ”செல்லம்மா பொன்னம்மா” மட்டும் தான் நினைவில் இருந்தது.
//வசனம் ஆரூர் தாஸ். //
இயக்கம் ???
Hi Murali, I came across your blog while searching for Rajini movies information. Your blog is superb. I could not move away from my computer and has completed your tamil movie information for all years from 1980 to 1993 in one stretch. You seem to be an encyclopedia on Tamil cinema. Great work.
I am a huge fan of Rajini. what is the fate of the following Rajini movies released in 1984
Kai Kodukkum Kai, Naan Magan Alla, Anbulla Rajini and Thambikku entha Ooru. I was born not even born when these movies were released.
Post a Comment