June 25, 2009

ராகுல் காந்தியுடன் விஜய், சிம்பு சந்திப்பு

தனித்து நின்றால் மற்ற மாநிலங்களில் கூட ஒன்றிரணடு எம்பி சீட் கிடைக்கும். தமிழ்நாட்டில் தனியாக
நின்றால் ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியாது என்ற வந்த உளவுத்துறை தகவலை அடுத்து
குலாம் நபி ஆஸாத்தை அழைக்கிறார் ராகுல்.

ராகுல் : கியா ஆஸாத்ஜி? தமிழ்நாட்டில கட்சி இவ்வளோ மோசமா இருக்கே? அங்க இருக்குற
தலைவர்களை உடனே வரச் சொல்லுங்க. நாளைக்கு இங்க மீட்டிங்.

ஆசாத் : ஜி, இந்த ரூம்ல எப்படி 10000 பேரை உட்கார வைக்குறது?

ராகுல் : ஓ மறந்துட்டேன். வழக்கம் போல சீட்டு குலுக்கிப் போட்டு நாலு பேரைக் கூப்பிடுங்க.


தங்கபாலு, வசந்த்குமார், சுதர்சனம், அன்பரசு ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள். ராகுல், சச்சின் பைலட்,
ஜோதிராதித்யா சிந்தியா, ஜிதின் பிரசாதா, மிலிந்த் தியோரா சகிதம் ஆலோசனையை துவங்குகிறார்.

ராகுல் : என்ன நாலு பேருமே வயசான ஆளுகளா இருக்காங்க?

ஆசாத் : 4000 பேர கூப்பிட்டிருந்தாலும் வயசான ஆளுகதான் வருவாங்க.

ராகுல் : கட்சிய வளர்க்க ஏதாச்சும் ஐடியா கொடுங்க சுதர்சனம்ஜி.

சுதர் : நம்ம கட்சிக்கு ஒரு டிவி சேனல் வேணும்.

பாலு : ஏன் மெகா டிவி இருக்கே?

வசந்த் : ஏன் வசந்த டிவி இருக்கே?

அன்பு : உங்க நெஞ்சில கைவச்சு சொல்லுங்க. உங்க வீட்டில யாராச்சும் இதைப் பாக்குறாங்களா?

பைலட் : தமிழ்நாட்டில் டிவி செய்திகள் மீதான நம்பகத்தன்மை குறைஞ்சுக்கிட்டு வர்றதா சர்மா கமிட்டி
அறிக்கை சொல்லுது.

சுதர் : சரி விடுங்க. ஒரு பேப்பராவது ஆரம்பிங்க.

பாலு : முதல் பக்கத்தில எங்க கோஷ்டி நியூஸ்தான் வரணும்.

அன்பு : எந்த பக்கத்தில வேணும்னாலும் வரட்டும். ஆனா 2 பக்கம் எங்களுக்கு ஒதுக்கணும்.

சிந்தியா : பேப்பார் படிக்கிறவங்க யாரும் தமிழ்நாட்டில ஓட்டுப்போடுறதில்லன்னே வர்மா கமிட்டி
அறிக்கை சொல்லுது.

பிரசாதா : தமிழ்நாட்டுல சினிமா ஸ்டார் சொன்னாத்தான் ஓட்டுப்போடுவாங்கண்ணு

அன்பு : ஏதாச்சும் குர்மா கமிட்டி அறிக்கை சொல்லுதா?

ராகுல் : கூல் கூல். சினிமா ஆளுங்கள நம்ம கட்சியில சேர்க்கப் பாருங்க.

வசந்த் : எம் பையன் கூட ரெண்டு படத்துல நடிச்சிருக்கான்.

பாலு : அப்போ அவன நீங்க இன்னும் கட்சியில சேர்க்கலை. இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்.

ஆஸாத் : உங்க சண்டையை விடுங்கய்யா. பாப்புலர் ஹீரோ யாராச்சும் இருந்தா சொல்லுங்கய்யா.

அன்பு : விஜய்னு ஒருத்தர் அரசியலுக்கு வரப்போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.

பாலு : ஏன் சிம்புன்னு கூட ஒரு ஆளு இருக்காரே?


ராகுல் : கூப்பிட்டு வாங்க. பேசுவோம்.


விஜய் : பய்யாண்னா நமஸ்தேபய்யண்ணா

ராகுல் : ??????

அன்பு : அவர் எப்பவுமே அண்ணா வனக்கங்ணா ந்னு தான் ஆரம்பிப்பார். நீங்க இந்தில அதான்.

ராகுல் : உங்களுக்கு அரசியல் தெரியுமா?

விஜய் : பய்யாண்னா, நடிப்பே தெரியாம நான் நடிகன் ஆகலியா ?

ராகுல் : தமிழ்நாட்டில எத்தனை தொகுதி இருக்குன்னு தெரியுமா?

விஜய் : அந்தத் தொகுதி, இந்தத்தொகுதியில்ல ஆல் தொகுதியிலயும் அய்யா கில்லி

ராகுல் : பிரச்சாரம் எப்படி பண்ணுவீங்க?

விஜய் : ஆந்திராவில சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ஜுனியர் என் டி ஆர் போன தேர்தல்ல பண்ண
பிரச்சாரத்தையெல்லாம் எங்கப்பா வீடியோ எடுத்து வச்சுருக்குறார். அதை ரீமேக் பண்ணி
பேசிடுவேன்.

ராகுல் : சரி ஆட்சியைப் பத்தி உங்க கொள்கை என்ன?

விஜய் : தயாரிப்பாளர், வினியோகஸ்தர்லாம் நஷ்டம் ஆகக் கூடாது. படம் பார்க்குறவன்
மட்டும் தான் கஷ்டப்படணும்னு சினிமால நான் ஒரு கொள்கை வச்சிருக்கேன். அதுபோல
தொழிலதிபர், அமைச்சர் எல்லாம் நல்லாயிருக்கணும், ஓட்டுப் போடுற மக்கள் மட்டும் கஷ்டப்
படணும்கிறது என்னோட அரசியல் கொள்கை.

அன்பு : நம்ம கட்சிக் கொள்கையை ஒட்டி இருக்கே. சேர்த்துக்கிடுவோம் ராகுல்ஜி.

அப்போது கறுப்புப் பூனை படைகளை ஏமாற்றிவிட்டு எஸ் ஏ சி உள்ளே புகுகிறார்.

எஸ் ஏ சி : என் பையன் தான் தமிழ்நாட்டில சூப்பர் ஸ்டார். யூத் எல்லாம் அவன் பாக்கெட்ல. அவன்
தான் வருங்கால பி.எம். நான் தான் ஜனாதிபதி. நீங்கதான் புள்ளியியல் மற்றும் அமலாக்கத்துறை
அமைச்சர்.

ராகுல் : மிஸ்டர் விஜய், உங்களை சேர்த்துக்கிடலாம்னு இருந்தேன். ஆனா உங்க அப்பா பேசுற
பேச்சுக்கு இனிமே விஜய்ங்குற பேர்ல கூட யாரையும் கட்சியில சேர்க்க மாட்டோம். கெட் லாஸ்ட்.
அடுத்து யாருப்பா?

ராகுல் : சிம்பு, உங்களுக்கு அரசியல் அனுபவம்?

சிம்பு : பழனி, பர்கூர்ல ஆரம்பிச்சு கள்ளக்குறிச்சி வரை பிரச்சாரம் பண்ணியிருக்கேன்.

ராகுல் : அதுல எததன எலக்‌ஷன்ல ஜெயிச்சுருக்கீங்க?

சிம்பு : யாரு மொதோ வந்தாங்கங்கிறது முக்கியமில்ல. யாரு கடைசியில இருந்து மொதோ வந்திருக்காங்க
அப்படீங்கிறதுதான் முக்கியம்.

சுதர் : எங்க கட்சி ஏற்கனவே அப்படித்தான் இருக்கு. இதுல நீ வேறயா?

ராகுல் : சரி, பிரச்சாரம்லாம் எப்படி பண்ணுவீங்க?

சிம்பு : மந்திரா பேடி, ராக்கி சாவந்த எல்லோரையும் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டு வருவேன்

மிலிந்த் : ஆனா எலெக்‌ஷன் தமிழ்நாட்டிலதானே?

சிம்பு : தமிழ்நாட்டுக்கு தான் படம் எடுக்குறோம். இவங்க இருந்தனாலதான நான் நடிச்சும் மன்மதன்
படம் ஓடுச்சு.

அன்பு : பய விவரமாத்தான் இருக்கான்.

ராகுல் : சரி ஆட்சிக் கொள்கை?

சிம்பு : பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அநியாயம்.

ஆசாத் : என்ன இவன் முலாயம், சரத் யாதவ் மாதிரி பேசுறான்? அங்க போயிடுவானோ?

சிம்பு : 66% கொடுக்கணும். அதிலயும் 20 வயசுப் பொண்ணுங்களுக்கு 90% உள் ஒதுக்கீடு
கொடுக்கணும்.

சிந்தியா : எம்பி எம் எல் ஏ வுக்கு நிக்க 25 வயசு ஆகியிருக்கணுமே?

சிம்பு : அப்போ 90% 25 வயசு பொண்ணுங்களுக்கு.

பாலு : மீதி 10%?

சிம்பு : அது 27 வயசுக்கு உள்ள இருக்குற பொண்ணுங்களுக்கு.

சுதர் : இதுவரைக்கும் நம்ம கட்சிய வயசானவங்க கட்சி, உதவாக்கரை கட்சின்னு தான் சொல்லிக்கிட்டு
இருந்தாங்க. இவன சேர்த்தோம்னா கட்சிக்கு வேற பேரு வந்துரும்.

ராகுல் : ஜிதின், சச்சின், மிலிந்த், சிந்தியா இந்த 40 சீட் இல்லாம நாம் தனி மெஜாரிட்டி வர
வேற வழி இருக்கான்னு பாருங்க.

60 comments:

Busy said...

Enna achu !!!!!!!!

Trend Maruthu, Kusmbu sir kanam poitaru, neenga arambuchiteega !!

Nallathan erukku !!!!!!!

முரளிகண்ணன் said...

வாங்க பிஸி.

சும்மா ட்ரை பண்ணலாமேன்னு.

\\Nallathan erukku !!!!!!!
\\

நீங்க இப்படி இழுக்கும்போதே
தெரியுது இடுகை படு மொக்கையா
இருக்குன்னு.

இனி சோதிக்க மாட்டேன்.

அடுத்து எல்லாம் சினிமா பதிவுதான்.

ஷங்கி said...

சினிமா எக்ஸ்பிரெஸ்,இன்ஞின் மாத்தி பகடியில் கலக்குது போல?! நல்லாயிருக்கு.

நையாண்டி நைனா said...

அடி தூள் பண்ணிட்டே மாமு...

முரளிகண்ணன் said...

நன்றி சங்கா.

நன்றி நையாண்டி நைனா.

சரவணகுமரன் said...

ஹா ஹா ஹா :-)

//அன்பு : ஏதாச்சும் குர்மா கமிட்டி அறிக்கை சொல்லுதா?//

//தயாரிப்பாளர், வினியோகஸ்தர்லாம் நஷ்டம் ஆகக் கூடாது. படம் பார்க்குறவன்
மட்டும் தான் கஷ்டப்படணும்னு சினிமால நான் ஒரு கொள்கை வச்சிருக்கேன். //

//அன்பு : நம்ம கட்சிக் கொள்கையை ஒட்டி இருக்கே. //

காமெடி, போங்க... :-)

நர்சிம் said...

கலக்கல் முரளி.. குசும்பன் கண்ண மூடினாரு நீங்க திறந்துட்டீங்க..

கலக்குங்க. (சிரிப்பினூடே..)

தராசு said...

தலைவா,

கலக்கல், பூந்து விளையாடறீங்க. நடத்துங்க.

தராசு said...

//ராகுல் : உங்களுக்கு அரசியல் தெரியுமா?

விஜய் : பய்யாண்னா, நடிப்பே தெரியாம நான் நடிகன் ஆகலியா ?//

ஹா.. ஹா....ஹா....

எங்கே போனாய் என் அன்பனே!!!!!!!!!!
நான் ஒண்ணும் கார்க்கிய கூப்புடல, என் இன்னொரு நண்பனத்தான் கூப்புட்டேன்.

மணிஜி said...

முரளி..சத்தியமூர்த்தி பவனில் ஒரு டைலர் கடை போட்டு கிழிந்த துணி தைத்து கொடுத்தால் வியாபரம் அமோகமா இருக்கும்...

காமெடி நல்லாத்தான் எழுதறிங்க...கலக்குங்க...

முரளிகண்ணன் said...

நன்றி சரவணகுமரன்

நன்றி நர்சிம்

நன்றி தராசு

முரளிகண்ணன் said...

நன்றி தண்டோரா

Raju said...

இவிய்ங்க ரெண்டு பேத்தையும் அனுப்பி வச்சா, தமிழ் நாட்ட இந்தியாவுல இருந்தே பிரிச்சுருவாய்ங்க போலயே..!
ஆமா,என்ன திடீருன்னு காமெடியில இறங்கிட்டீங்க..?

Mahesh said...

முர்ளி சார் பின்னுது.... வவுர் வலிக்து !! நல்லா இர்க்க்து !!

Vidhya Chandrasekaran said...

ROTFL:)

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் முரளி,
அடிச்சு ஆடுங்க...வாரத்திற்கு ஒன்றாவது இதே மாதிரியான பதிவை போடுங்க.
ஜூப்பர்....

முரளிகண்ணன் said...

வாங்க டக்ளஸ்

மகேஷ், இன்னைக்கு என்ன சௌகார் பேட்டையில டியூட்டியா?

நன்றி வித்யா.

நாடோடி இலக்கியன்


\\வாரத்திற்கு ஒன்றாவது இதே மாதிரியான பதிவை போடுங்க\\

நெஜமாத்தான் சொல்லுறீங்களா?

உள்குத்து ஏதுமில்லையே?

சென்ஷி said...

//சிம்பு : அப்போ 90% 25 வயசு பொண்ணுங்களுக்கு.

பாலு : மீதி 10%?

சிம்பு : அது 27 வயசுக்கு உள்ள இருக்குற பொண்ணுங்களுக்கு.//

LOL :))

முரளிகண்ணன் said...

நன்றி சென்ஷி

Thamira said...

கலக்குறீங்க முரளி. கடைசி வரிகள் 'இந்த 40தை விட்டுத்தள்ளுங்கப்பா, வேற எதுனா பாக்கலாம்'னு முடிச்சது அட்டகாசம்.

Indian said...

Sooper...!

மங்களூர் சிவா said...

ஹா ஹா
கலக்கல்!
:))))

Anonymous said...

வரிக்கு வரி சிரிச்சேன் முரளி.

ரமேஷ் வைத்யா said...

சிரித்து சிரித்தே சென்னையில் ஒரு வாலிபன் மரணம்

முரளி கண்ணன் என்பவ‌ருக்கு போலீஸ் வலை வீச்சு.

அக்னி பார்வை said...

இப்பொது தான் வயிறு வலிக்கு சிகிச்சை பார்த்துவிட்டு வந்தேன் மீண்டுமா?

முரளிகண்ணன் said...

நன்றி ஆதி

நன்றி இந்தியன்

நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி

நன்றி ரமேஷ்ணா

நன்றி அக்னிபார்வை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அப்படியே விஷால், பரத் போன்ற ஆட்களையும் கூப்புடுங்க தல........

sasitharan said...

நம்மவர்கள் மாறவே மாட்டார்கள் .

பரிசல்காரன் said...

பின்றிங்க முரளி!

//
சுதர் : எங்க கட்சி ஏற்கனவே அப்படித்தான் இருக்கு. இதுல நீ வேறயா?//

இதுக்கு சிரிக்காதவன் மனுஷனா இருக்க முடியாது!

எக்ஸலென்ட்! டாக் ஆஃப் த வீக் பதிவு!

சின்னப் பையன் said...

:-))))))))))))
super

Sanjai Gandhi said...

//இதுக்கு சிரிக்காதவன் மனுஷனா இருக்க முடியாது!//

கடவுள் சொல்லிட்டாரு.. நானும் சிரிச்சிடறேன்.. இல்லைனா மனுஷன்னு ஒத்துக்க மாட்டார் போல..:)))
( இப்போ மட்டும் எவர் ஒத்துக்கறார்?)

கோபிநாத் said...

கலக்கல் அண்ணே ;)

கடைக்குட்டி said...

முடிவு சூப்பர்..

இன்னும் இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க,.. ஆனா அளவ கொறச்சு தரத்தை உயர்த்தவும் :-)

(ரொம்ப நேரமா உங்க பதிவுலேயே இருக்கேங்க..

Cable சங்கர் said...

வர வர குசும்பு ஜாஸ்தியாருச்சு.. முரளி.. அதிலும் விஜயின் பயாண்ணா.. சூப்பர்..

♫சோம்பேறி♫ said...

ஆஹா.. சான்ஸே இல்ல முரளி. அசத்துறீங்க..

என்னை மாதிரி காமெடி விரும்பிகளுக்காக அப்பப்போ இந்த மாதிரி இடுகையும் பதிங்க..

Sukumar said...

// படம் பார்க்குறவன்
மட்டும் தான் கஷ்டப்படணும்னு கொள்கை வச்சிருக்கேன்....//
எப்டி தலைவா.....
எப்டி யோசிக்கிறீங்க...
சான்ஸ் இல்ல.... அடி பின்னுங்க.....

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு சிரிப்பு பதிவர் என்று பட்டம் கொடுக்கலாம்.

சிம்பை வச்சு வம்பு பண்ணிட்டிங்களே.

நம்ம பக்கமும் வந்து பாருங்க.

http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_24.html

Starjan (ஸ்டார்ஜன்) said...

பதிவுலக காமெடி கிங் முரளி

காமெடியில கல‌க்குறீங்க‌

புருனோ Bruno said...

//அன்பு : உங்க நெஞ்சில கைவச்சு சொல்லுங்க. உங்க வீட்டில யாராச்சும் இதைப் பாக்குறாங்களா?//

ஹி ஹி ஹி

புருனோ Bruno said...

//அதை ரீமேக் பண்ணி
பேசிடுவேன்.
//

:) :)

புருனோ Bruno said...

//படம் பார்க்குறவன்
மட்டும் தான் கஷ்டப்படணும்னு சினிமால நான் ஒரு கொள்கை வச்சிருக்கே//

ஆகா ....

//யாரு மொதோ வந்தாங்கங்கிறது முக்கியமில்ல. யாரு கடைசியில இருந்து மொதோ வந்திருக்காங்க
அப்படீங்கிறதுதான் முக்கியம்.


சுதர் : எங்க கட்சி ஏற்கனவே அப்படித்தான் இருக்கு. இதுல நீ வேறயா?//

:) :)

புருனோ Bruno said...

// ஜிதின், சச்சின், மிலிந்த், சிந்தியா இந்த 40 சீட் இல்லாம நாம் தனி மெஜாரிட்டி வர
வேற வழி இருக்கான்னு பாருங்க. //

நிதர்சணம் !!

வெட்டிப்பயல் said...

தல,
பதிவு சூப்பர்...

காங்கிரஸ், விஜய், சிம்பு யாரைப் பத்தி எழுதனாலும் காமெடி தான். திருவேணி சங்கமம் மாதிரி மூணும் சேர்ந்தது சிறப்பு ;)

உடன்பிறப்பு said...

விஜய்யோட பதிலகள் எல்லாமே சிவகாசி பட்டாசு மாதிரி வெடிக்கின்றன

குசும்பன் said...

அண்ணே செம கலக்கல்!

//யாரு மொதோ வந்தாங்கங்கிறது முக்கியமில்ல. யாரு கடைசியில இருந்து மொதோ வந்திருக்காங்க
அப்படீங்கிறதுதான் முக்கியம்.//

வாய்விட்டு சிரிச்சேன் செம கலக்கல்!

@ Busy
இன்னுமா இந்த உலகம் நம்மை நம்பிக்கிட்டு இருக்கு:))

@நர்சிம்//குசும்பன் கண்ண மூடினாரு//

அண்ணே நான் நல்ல ஆரோக்கியத்துடன் உயிரோட தான் அண்ணே இருக்கிறேன். கண்ணை எல்லாம் மூடவில்லை:))) (லீவ் உட்டா மேல அனுப்பிடுவீங்க போல)

எம்.எம்.அப்துல்லா said...

ROTFL

:))))))))

மணிநரேன் said...

கலக்கல்...

RRSLM said...

பதிவு வெகு அருமை........ படித்து, ரசித்து, சிரித்தேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

சிரிப்புக்கண்ணனுக்கு வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

சுரேஷ்,சசிதரன்,பரிசல்காரன்,
சின்னப்பையன், சஞ்சய் காந்தி, கோபினாத், கடைக்குட்டி, கேபிள், சோம்பேறி

தங்களின் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

நன்றி சுகுமார் சுவாமிநாதன், அக்பர், ஸ்டார்ஜான்

முரளிகண்ணன் said...

வாங்க புருனோ, வெட்டிப்பயல், உடன்பிறப்பு.


மிக்க நன்றி குசும்பன்.


நன்றி அப்துல்லா, ச்யாம்சேனா, ஆரார், மணிநரேன்,பிரியமுடன் வசந்த்

"உழவன்" "Uzhavan" said...

ஆஸாத்ஜி கேட்ட கேள்வியில ஆரம்பமான சிரிப்பு பின்னூட்டபோட்ட பிறகும் நிக்குமானு தெரியல :-)))

கார்க்கிபவா said...

அடுத்து தலய கிண்டலடிக்காவிட்டால் ஐ.ஐடிக்கு ஆட்டோ கிளம்பும் என்று சிரித்துக் கொண்டே சொல்லிக் கொள்கிறேன்

அத்திரி said...

// கார்க்கி said...
அடுத்து தலய கிண்டலடிக்காவிட்டால் ஐ.ஐடிக்கு ஆட்டோ கிளம்பும் என்று சிரித்துக் கொண்டே சொல்லிக் கொள்கிறேன்//

சகா நீ ஹைதையில் இருந்து ஆட்டோ அனுப்பு, நான் திருநெல்வேலியிலிருந்து அருவா அனுப்புறேன்.. தலய கவனிச்சிரலாம்

Unknown said...

தண்டோரா அண்ணன் 32 கேள்விய வச்சிக்கிட்டு அரசியல் தலைவர்களோட சிலம்பாட்டம் ஆடிக்கிட்டிருக்காரு. இங்க நீங்க வேற காங்கிரஸ் கமிட்டியோட காவடியாடுறீங்க... பொழுது போக்குறதுக்குப் பஞ்சமே இல்லை... ம்ம்ம்..... கிளப்புங்கள்.... தாரை தப்பட்டைகள் கிழிய வேண்டும்.....

சரவணகுமரன் said...

நீங்க சொன்னது நடந்துருச்சு :-)

நட்புடன் ஜமால் said...

ஜூப்பர் கலக்ஸுங்கோ

சுரேsh(பழனியினிலிருந்து) இவர் சொல்லி வந்தேன் இங்கு

செம காமெடிங்க

ஆனாலும் இவிங்க நம்மளை வச்சி நிஜமானா காமெடி பன்னிட்டு போய்ருவாய்ங்க ...

அபி அப்பா said...

யோவ் ஏற்கனவே வயித்து வலி! இதிலே இந்த பதிவை படிச்சது என் விதி:-)))))))))

PRABHU RAJADURAI said...

தயாரிப்பாளர், வினியோகஸ்தர்லாம் நஷ்டம் ஆகக் கூடாது. படம் பார்க்குறவன் மட்டும் தான் கஷ்டப்படணும்னு சினிமால நான் ஒரு கொள்கை வச்சிருக்கேன்

இதுன்னு இல்ல...உரையாடல் முழுவதுமே, புத்திசாலித்தனமான நகைச்சுவைதான்...