June 26, 2009

பள்ளிக்கூடம் போகலாமா?

அன்பு நண்பர் பதிவர் ஸ்டார்ஜான் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். அவருக்கு நன்றிகள்.

நான் படித்த பள்ளி மற்றும் அந்த நினைவுகளைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சில முக்கிய நினைவுகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

பர்த் சர்டிஃபிகேட்

நான் ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் எங்கள் ஊர் அறியாத ஒன்று. தலையின் மேற்புறமாக வலதுகையைக் கொண்டு சென்று இடது காதின் மேல் நுனியை தொட வேண்டும். அப்படித் தொட்டு விட்டால் ஐந்து வயது ஆகிவிட்டது என்று பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். பின்னர் ஏப்ரல் 2ல் இருந்து தொடங்கி ஜுன் 30 வரை உள்ள தேதிகளில் ஒன்றை ரேண்டமாக தேர்ந்தெடுத்து டேட் ஆப் பர்த்தை அல்லகேட் செய்வார்கள்.

தமிழ்நாடு பென்சனர் பட்டியலில் என் தந்தையின் பென்சன் விபரங்கள் சரியாக இருக்கிறதா எனத் தேடியபோது, பலரின் பிறந்தநாள் தேதியும் ஏப்ரல்,மே, ஜூனிலேயே இருந்ததைப் பார்த்து சிரிப்பு வந்தது.ஏதாவது புள்ளியியல் அறிஞர்கள் இதை ஆராய்ச்சி செய்து, இந்த மாதங்களில் பிறப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என கிளப்பிவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்து.


ஸ்கூல் பீஸ்


மூன்றாவது வரை மூன்று ரூபாய், பின் ஐந்தாவது வரை ஐந்து ரூபாய்.ஆறாவதில் இருந்து பத்தாம் வகுப்பு வரை 12 ரூபாய்.என்பது அப்போதைய நிலவரம். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது விகடன் 90 பைசா, குமுதம் 60 பைசா.

அப்போது அரசாங்க வேலை நாட்கள் வாரத்துக்கு ஆறு. இரண்டாம் சனி மட்டுமே விடுமுறை. சனிக்கிழமை அலுவலகத்தில் இருந்து வரும் என் தந்தை இரண்டு ரூபாய் கொடுப்பார். விகடன், குமுதம் போக மீத காசில் எங்கள் ஊரின் பிரபல லாலா கடையில் எனக்கு சாப்பிட எதாவது வாங்கிக் கொள்வேன். இதில் ஒருவாரம் மட்டும் ஸ்னாக்ஸ் கட்டாகும். ஏனென்றால் மாலைமதி அப்போது மாதமொருமுறை.
அது 50 பைசா.

இப்போதைய விகடன் விலையோடு ஒப்பிட்டால் 75 ரூபாய் ஓராண்டு கல்விக்கட்டணம்.

கிளாஸ் லீடர்

கிளாஸின் பிரம்பு, டஸ்டர் ஆகிய பொருட்களின் சேப்டி லாக்கரை இப்படியும் சொல்லலாம்.அதைத் தவிர இன்னொரு முக்கிய வேலை பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியரின் தூதராகச் செல்வது.


சத்துணவு


அப்போது காமராஜரின் மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. நான் மூன்றாம் வகுப்பில் இருக்கும் போது எம்ஜியாரின் சத்துணவுத் திட்டம் அமலுக்கு வந்தது. உத்தியோகப் பூர்வமாக யோசிப்பவன் அதிகாரி, உணர்வுப் பூர்வமாக யோச்சிப்பவன் அரசன் என்று மெய்ப்பித்த நிகழ்வு இது. பல மாணவர்களின் இடை நிற்றலை நிறுத்திய நிகழ்வு இது. இந்த திட்டம் தொடங்கபட்டது எங்கள் ஊரில்தான். அன்னை தெரசா, எம்ஜியார் ஆகியோர் வந்து தொடங்கி வைத்தார்கள். அப்போது எங்கள் ஊர் மதுரை
மாவட்டத்தில் இருந்தது. கலெக்டர் ஆசிட் புகழ் சந்திரலேகா.
உணமையிலேயே வரலாறு காணாத கூட்டம். முதலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அமல் படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாண்டுகள் கழித்து, 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது.

நேர வித்தியாசம்.

டிவி இல்லாக் காலம். எனவே எவ்வளவு நேரம் விளையாடினாலும் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கி விடுவோம். காலை ஐந்து மணிக்கு இயல்பாக முழிப்பு வந்துவிடும். பள்ளி திறப்பது ஒன்பது மணிக்கு. பள்ளி வீட்டுக்கு மிக அருகில். எனவே காலையில் நான்கு மணி நேரம் கிடைக்கும். இதில் வயல் வெளி, கிணறு, தெரு ஆயா கடை ஆப்பம்,பனியாரம் என எல்லாச் சடங்கும் முடிந்தும் நேரம் கொட்டிக் கிடக்கும். இன்றைய குழந்தைகளை நினைத்தால்?. தூங்கி எழுந்தவுடன் அவர்கள் பள்ளிக்குச்
செல்வது போல் ஒரு பிரமை.


இந்தப் பதிவை தொடர பதிவர் சினேகிதன் அக்பர், தற்கால நிகழ்வுகளை செமையாக
கிண்டலடிக்கும் வலைமனை சுகுமார் சுவாமிநாதன், பதிவர் ஸ்ரீ ஆகியோரை அழைக்கிறேன்.

28 comments:

Sukumar said...

உங்க பள்ளிகூட நினைவுகள் அருமைங்க ....
அழைப்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றி...
ஏன் தலைவா என்ன போய் இழுத்து விட்டீங்க....
நாலு வரிக்கு மேல எனக்கு எழுத தெரியாதே ....
....முயற்சி பண்றேங்க..

நையாண்டி நைனா said...

present sir

முரளிகண்ணன் said...

முயன்றால் முடியாதது இல்லை சுகுமார்.

வாங்க நையாண்டி நைனா

அக்னி பார்வை said...

///கிளாஸின் பிரம்பு, டஸ்டர் ஆகிய பொருட்களின் சேப்டி லாக்கரை இப்படியும் சொல்லலாம்.அதைத் தவிர இன்னொரு முக்கிய வேலை பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியரின் தூதராகச் செல்வது.
////

அப்பொழுதெல்லாம் அது பெரும் தொல்லை நிம்மதியா லீவு போட்டுட்டு விளையாட முடியாது உடனே சொல்லிடுவானுங்க

Cable சங்கர் said...

/பலரின் பிறந்தநாள் தேதியும் ஏப்ரல்,மே, ஜூனிலேயே இருந்ததைப் பார்த்து சிரிப்பு வந்தது.//

இங்கேயும் உங்க புள்ளி விவர புத்தி போவுதா பாரூ..

Rajeswari said...

பள்ளிக்கூட பதிவு பல ஞாபக அலைகளை மனதடியில் இட்டுச்சென்றது.

சத்துமாவ நிஜமாலுமே மறக்கமுடியாது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்னையும் ஸ்டார்ஜன் பதிவிட அழைந்திருந்தார்,

நானும் சிநேகிதன் அக்பரை அழைத்திருக்கிறேன்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எனவே எவ்வளவு நேரம் விளையாடினாலும் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கி விடுவோம். //

கிராமங்களில் இபோதெல்லாம் ஒன்பது மணிக்கு ஊரடங்கி விடுகிறது தல..

எல்லா வீடுகளிலும் ஒரே நாடகம்.., தெருவழியாக நடந்து சென்றால் ஊர் முழுக்க அதே வசனங்கள் ஒலிக்கும் தல

சில நேரங்களில் பயமாகக் கூட இருக்கிறது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//, பலரின் பிறந்தநாள் தேதியும் ஏப்ரல்,மே, ஜூனிலேயே இருந்ததைப் பார்த்து சிரிப்பு வந்தது//

குறிப்பா மே1, 2

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆசிரியர் பிள்ளைகள் மட்டும் ஜூன் 2

ப்ரியமுடன் வசந்த் said...

அழகா அருமையா உங்கள் பள்ளி நினைவுகள்

முரளிக்கு வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னுடைய்ய அழைப்பை ஏற்று
அருமையாக பள்ளிப்பருவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டதுக்கு ,


முரளிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள் பள்ளி நினைவுகள் அருமை

சிநேகிதன் அக்பர் said...

தல சுரேஷும் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.
இப்ப நீங்களும் அழைத்திருக்கிறீர்கள்.

இந்த சந்தோசத்தை அனுபவிக்கவா வேண்டாமா என்று தெரியல..

தொடக்க நிலை பதிவரான என்னை அழைத்ததற்கு இருவருக்கும் நன்றி.

ஸ்கூலில் டபுள் ப்ரொமோசன் கிடைத்த மாதிரி..
கண்டிப்பா எழுதிருவோம்..

அப்புறம் நண்பர் ஸ்டார்ஜன்னிடம் பேசினேன், உங்களிடம் பேசியதாக சொன்னார் ரொம்ப சந்தோசம்.

சிநேகிதன் அக்பர் said...

// தந்தை இரண்டு ரூபாய் கொடுப்பார். விகடன், குமுதம் போக மீத காசில் எங்கள் ஊரின் பிரபல லாலா கடையில் எனக்கு சாப்பிட எதாவது வாங்கிக் கொள்வேன்.//

அப்பவே வார இதழ்களின் வாசகரா..

Jackiesekar said...

ரொம்ப அற்புதமான நினைவுகள்..

வாழ்த்துக்கள் முரளி

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையாக இருக்கு

ஸ்ரீ.... said...

முரளி சார்,

என்னைத் தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் அளவு இயலாவிட்டாலும் ஓரளவு தரமாகத் தர முயற்சிக்கிறேன்.

ஸ்ரீ....

முரளிகண்ணன் said...

வாங்க அக்னிபார்வை, கேபிள் சங்கர்.

நன்றி ராஜேஸ்வரி.

சுரேஷ் சார்,

\\ஆசிரியர் பிள்ளைகள் மட்டும் ஜூன் 2

\\

:-)))

நன்றி பிரியமுடன் வசந்த்

முரளிகண்ணன் said...

வாங்க ஸ்டார்ஜான்.

நன்றி டிவிஆர் சார்.

வாங்க அக்பர்.

வீட்டில் தந்தை வார இதழ்கள் படித்ததால் சிறுவயதிலேயே அது தொற்றிக் கொண்டது.

நன்றி ஜாக்கிசேகர்.

கலக்குங்க ஸ்ரீ.

ஷங்கி said...

”இன்றைய குழந்தைகளை நினைத்தால்?. தூங்கி எழுந்தவுடன் அவர்கள் பள்ளிக்குச்
செல்வது போல் ஒரு பிரமை.” எனக்கு என்ன பிரமைன்னா, அவங்க ஸ்கூலுக்குப் போறாங்களா, இல்ல நாம ஸ்கூலுக்குப் போறோமான்னு!, எப்பப்பா என்னா ஒரு அவஸ்தை! புதுசா ஒரு இடுகை போட்டிருக்கேன், நேரமும், ஆர்வமுமிருந்தா படிச்சிப் பார்த்துக் கருத்து சொல்லுங்க தல!! (ஹி ஹி)

jothi said...

// தலையின் மேற்புறமாக வலதுகையைக் கொண்டு சென்று இடது காதின் மேல் நுனியை தொட வேண்டும். அப்படித் தொட்டு விட்டால் ஐந்து வயது ஆகிவிட்டது என்று பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். //

அருமை,.. பல விஷயங்களை உங்கள் பதிவு அசை போட வைத்துவிட்டது. பல விஷயங்களில் என் அனுபங்கள் உங்களுடன் ஒத்து போகிறது.

Raju said...

உள்ளேன் ஐயா..!
:)

முரளிகண்ணன் said...

நன்றி சங்கா, ஜோதி.

என்னாச்சு டக்ளஸ்?

நர்சிம் said...

முரளி.. பொசுக்க்குனு முடியுதே தலைவரே..இன்னும் நிறைய எழுதி இருக்கணுமோ?

காது தொடர மேட்டர்ல இருந்து சல்ல்லுனு போகுது ஃப்ளோ..

"உழவன்" "Uzhavan" said...

இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்...
இந்த பெர்த்டே மேட்டர்தான் சூப்பர்.. ஏன்னா இப்போதும் எனக்கு பெர்த்டே நு சொல்லி ஸ்வீட் குடுத்தா, உடனே எல்லாரும் கேட்கிற கேள்வி " சர்டிபிகேட் படியா இல்லை சாதகப்படியானுதான்..

இமா க்றிஸ் said...

//இன்றைய குழந்தைகளை நினைத்தால்?// ஆமாம், இயற்கையோடு இணைந்த சந்தோஷங்கள் பற்றி அதிகம் தெரியவே தெரியாது அவர்களுக்கு. ;(

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

வலைச்சர தள இணைப்பு : அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)