June 04, 2009

பாஸ்கட் பால்

இந்த முறையும் டிராபியை எடுத்துவிடுவோம் என்றே நம்பியிருந்தேன். இரண்டாம் பாதியில் பையன்கள் சொதப்பி விட்டார்கள். ரன்னர் அப் என்பது பரவாயில்லைதான். ஆனால் எங்கள் கல்லூரி சேர்மன் எதிலும் முதலிடம்தான் வரவேண்டும் என்று உடும்புப்பிடியாய் நிற்பவர். அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

விளையாட்டுகளில் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் தன் நிறுவனத்தின் இமேஜை உயர்த்த வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு செலவு செய்கிறார்.

நாங்கள் திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறோம். நேற்றோடு முடிவடைந்த ஒரு வார டோர்ணமெண்டின் களைப்பு எல்லோரிடமும். மற்ற பையன்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக இருக்கையில் இருந்து எழுந்து சற்று முன்னால் நடந்து சென்றேன்.

நாலு பேர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் ஒரு ஐபாடில் ஆளுக்கொரு ஹெட் போன் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.இரண்டு பேர் நல்ல தூக்கத்தில். ஒருவன் கல்லூரி ரப்பர் ஸ்டாம்ப் பொறிக்கப் பட்ட பாலை தன் ஆள்காட்டி விரலால் சுழற்றி எதிர் சீட் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தான்.

”ஆமா இதை மட்டும் பண்ணு. மேட்சுல கோட்டை விட்டுடு” என்று அவனது சகா அவனை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

வண்டியின் வேகம் குறைந்து கொண்டு வந்தது. விழுப்புரத்துல எஞ்சின் மாத்துவாங்க. இருபது நிமிசமாவாது நிற்கும் என்று அடிக்கடி அதில் பயணம் செய்யும் இரு நடுத்தர வயதினர் பேசிக்கொண்டார்கள்.

வண்டி நின்றது. ”பாய்ஸ் வாங்க, ஏதாவது சாப்பிட்டு வரலாம்” என்று அழைத்தேன்.இறங்கி கும்பலாக நடந்து வந்தார்கள். அவர்கள் கடையை மொய்க்கத் தொடங்கினார்கள். நான் சற்று ஒதுங்கி மொபைலை எடுத்து கல்லூரி தலைமை பி டி யிடம் எப்போது வந்து சேர்வோம் என்ற தகவலைச் சொன்னேன்.

மாணவர்கள் ஆண்டின் அடிப்படையில் குழுக்களாக பிரிந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புதிதாக அணியில் சேர்ந்திருந்த முதலாமாண்டு மாணவன் மட்டும் அகதியைப் போல தனித்து நின்று கொண்டிருந்தான்.இந்த ஆண்டு எப்படியும் நான்கைந்து முதலாமாண்டு மாணவர்களைச் சேர்த்து விடவேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த ஆட்டத்துக்கு பத்து, பன்னிரெண்டு வயதிலேயே பாலைத் தட்டி பழகியிருக்க வேண்டும். ரத்தத்தில் அப்போதே ஊறினால்தான் உண்டு. பதினெட்டு வயதில் சொல்லிக் கொடுப்பது கஷ்டம். ஸ்கூல் லெவலில் ஓரளவு ஆடியிருந்த இவன் மட்டும்தான் தேறியிருந்தான்.

அவனை சைகை காட்டி அழைத்தேன்.

என்ன கார்த்தி, ”தோத்துட்டமேன்னு பீல் பண்றியா” என்றேன்.

”கொஞ்சம் கஷ்டமாத்தான் சார் இருக்கு,அடுத்த டோர்ணமெண்ட் எல்லாம் விட்டுறக்கூடது சார்” என்று பதிலளித்தான்.


மனதுக்கு மிக சந்தோஷமாய் இருந்தது. ஆர்வமான பையன்.

சார், எனக்கு ஒரு சந்தேகம். ஏன் சார் மத்த டீமில ஆடுற பசங்களோட சொந்த ஊரு, ஸ்கூல் எல்லாம் விசாரிச்சுக்கிட்டே இருந்தீங்க?

கார்த்தி, அதுல ஒரு விஷயம் இருக்கு. இப்ப புட்பால்ல பார்த்தயின்னா இத்தாலி டீம் டிபெண்சுல நல்ல ஸ்ட்ராங்கா இருக்கும். பிரேசில் அட்டாக்கிங்லதான் கான்சண்டிரேட் பன்ணுவாங்க. ஜெர்மன் என்ன பிளானோட இறங்குனாங்களோ அத எக்ஸிகியூட் பண்னத்தான் பார்ப்பாங்க.

அதுபோல இங்கயும் சில ஸ்டைல் இருக்கு. மதுரை,திண்டுக்கல் டீம் பார்த்தியின்னா அதுல வத்தலகுண்டு பசங்களோட இன்புளூயன்ஸ் இருக்கும். டிரிபிள் பண்ணும் போது கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தாலும் பாலை நம்ம கிட்ட இருந்து பிடுங்கிடுவாங்க. ஷூட் பண்ணும்போது கேர்லெஸ்ஸா இருந்தா அவன் அடிக்கிற டேப்ல பால் காலரியில போய் விழும். திருநெல்வேலி, நாகர்கோயில் பசங்க ஸ்டெமினா தூக்கலா இருக்கும்.நாப்பது நிமிசமும் அதே எனர்ஜியோட விளையாடுவாங்க.

இதுமாதிரி அறந்தாங்கி,கரூர், உடுமலை, கோவைன்னு ஏரியாக் கேத்த ஸ்டைல் இருக்கு. நம்ம சென்னை பசங்க கிட்ட கில்லர் இன்ஸ்டின்க்ட் கொஞ்சம் கம்மியா இருக்கும். அதுக்கேத்த மாதிரி நாம பிளான் பண்ணி ஆடணும். அதுக்குத்தான் விசாரிக்கிறது என்று முடித்தேன்.


சார், இது அப்படியேவா வரும்? என்று சந்தேகத்துடன் கேட்டான்.

கார்த்தி, நான் டிஸ்ட்ரிக்ட், ஜோனல்,அண்டெர் 17,19, யுனிவர்சிட்டி அப்புறம் ஸ்டேட் வரைக்கும் விளையாடி, வந்த அப்சர்வேஷன் இது. அப்போ என்கூட விளையாடுனவங்களோட லெகஸீ அடுத்த செட்டுக்கு அப்படியே வரும். அதுபோக அங்க கோச்சாவும் இருக்குறவங்க முந்தைய செட் ஆளுங்கதானே. நீ இன்னும் ரெண்டு மூணு டோர்ணமெண்ட் வந்தா உனக்கும் பிடிபட்டுடும் என்றேன்.

அணி கேப்டன் மகேஸ், என்னைப் பார்த்து தயங்கி தயங்கி வருவதைப் பார்த்தேன். எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ வாங்கிட்டு வா என்று கார்த்தியை அனுப்பி வைத்தேன்.

மகேஸ் அருகில் வந்தான்.

என்னா மகி, எனி பிராப்ளாம்? என்றேன்.

நீங்க மெயின் பைவ்ல இறக்காம விட்டூட்டிங்கன்னு ரொம்ப அப்செட்ல இருக்கான் சார் நந்தா என்றான்.

நந்தா ஆறடி இரண்டங்குலம். அருமையான பீவட் பொசிஷன் பிளேயர்.

மகி, நீதான் பார்த்தேயில்ல செமீஸ்ல முதல்ல அவனதான் இறக்கிணோம். ரொம்ப கேர்லெஸ்ஸா ஆடுனான். 10 பாயிண்ட் ட்ரெயில் ஆயிட்டோம். அதுக்கப்புறம் ஆதியை இறக்கி எவ்வளோ கஷ்டப்பட்டு ஜெயிச்சோம்.

நானே உன்கிட்ட இதுபத்தி தனியா பேசணூம்னு நினைச்சேன்.நீதான் அவன் கூட எப்பவுமே இருக்குறியே. அவனுக்கு என்ன பிராப்ளம்? இந்த டோர்ணமெண்ட்ல அவன் ஆட்டிடியூட் ரொம்ப புவர் மகி என்றேன்.

ஆமா சார். அவன் மட்டுமில்லே சிவா,வெங்கட்டும் கூட ரொம்ப பீல் பண்ணுறாங்க சார். நம்ம கிரிக்கெட் டீம பார்த்து.

ஏம்பா, எல்லோரையும் ஒரே மாதிரி தானே ட்ரீட் பண்ணுறோம்?.

சார், கிரிக்கெட் டீம்ல ஆடுறவங்களுக்கு இந்தியா சிமெண்ட்ஸ், ஸ்பிக்,டிவிஎஸ்ன்னு ஏகப்பட்ட ஆபர் வருது சார். நம்ம பசங்களுக்கு ஒண்ணும் கிடைக்கலை. போன மாசம் நம்ம ஏரியாவில மட்டும் 20 சம்மர் கிரிக்கெட் கேம்ப் நடந்திருக்கு. காலேஜ் டீம் பசங்க எல்லோரையும் கேம்ப் நடத்துறவங்க அள்ளிட்டுப் போயிட்டாங்க. சின்னப் பசங்களுக்கு பவுலிங் போட,கத்துக் கொடுக்கன்னு. விண்டர் கேம்புக்கு கூட இவனுகள வரச்சொல்லியிருக்கங்களாம்.

ஐபிஎல் லயும் டீமுக்கு பத்து,இருபது ஸ்டாக் பிளேயர் எடுக்குறாங்க. ஒரு லெவெல் கூட விளையாடினாலே பிரைட் பியூச்சர் இருக்கு. இத விளயாடி என்ன ஆகப் போகுதுன்னு கேக்குறாங்க சார்?

சரி சரி நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன். நீ ரிலாக்ஸா இரு என்று அனுப்பி வைத்தேன்.

காலேஜ் பி டி யும் இதே மாதிரிதான் சொன்னார். புட்பால்,ஹாக்கி டீம தேத்துறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு என்று புலம்பினார்.

கிரிக்கெட் மட்டும் ஆடினாப் போதுமா? அப்போ மத்த விளையாட்டெல்லாம்?


கார்த்தி டீ வாங்கிக் கொண்டு அருகில் வந்தான். இன்னும் பத்து நிமிஷத்துல வண்டி கிளம்பிடுமாம் சார் என்றான்.

இவனுக்கும் இந்தப் பேச்சுகள் எட்டியிருக்குமா? என்று யோசனையுடன் டீயை வாங்கினேன்.

அவனே ஆரம்பித்தான். நீங்க, ஸ்டேட்டுக்கு அப்புறம் நேஷனல் ஆடலியா சார்? என்றான்.

இல்லப்பா. ஸ்டேட் ஆடுன டீமில அப்போ எல்லோருக்கும் நல்ல வேலை கிடைச்சது. ரயில்வே,கஸ்டம்ஸ்,என் எல் சின்னு. எல்லா ட்ரான்ஸ்போர்ட் கார்பரேசன்னிலயும் அப்போ டீம் இருந்தது. எனக்கும் ஒரு ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன்ல கிடச்சது. மூணு வருஷம் நல்லாப் போச்சு. அப்புறம் வந்தவங்க நிர்வாக சீர்திருத்தம் பண்றேன்னு, டீமெல்லாம் வேணாம்.அவங்களும் ஆபிஸ் வேலையை முழு நேரமாப் பார்க்கட்டும்னு சொல்லிட்டாங்க.

இருபத்தஞ்சு வயசெல்லாம் இந்த ஆட்டத்துக்கு பீக்கான வயசு. அப்பப் போயி பாலத் தட்டாம பேப்பரா புரட்டுறதான்னு குழப்பம். வேலையை ரிசைன் பண்ணீட்டு நார்த் சைட் போயிட்டேன். அங்க சில வருசம் பிரைவேட் கம்பெனி டீம்கள்ல ஆடுனேன். நம்ம காலேஜ் பிடி என்னோட சீனியர்தான். அவர்தான் இங்க கோச்சா வந்துடுன்னு கூப்பிட்டாரு.

எனக்கும் அதுதான் சரின்னு பட்டது. அடுத்த தலைமுறையை உருவாக்கணும்ல.

கார்த்தி இடைமறித்தான். ”நாம் எப்படி ஆடினாலும் இண்டர்நேஷனல் லெவெல்ல பின்தங்கி தான இருக்கோம். புரபஷனலா இத ஆடமுடியாதுன்னு சீனியர்ஸ் எல்லாம் பேசிக்கிறாங்க சார்” என்றான்.

அப்ப்டி இல்ல கார்த்தி. அமெரிக்கா,ஆப்ரிக்கா,யூரோப்ல நம்மளை விட பிசிக்கலா சுப்பீரியரா இருக்காங்க.அவ்வளவுதான். நம்ம நாட்டிலயும் கிராமப்புறங்கள்ல அது மாதிரி நிறைய ஆளுக இருக்காங்க. ஐடெண்டிஃபை பண்ணி ட்ரைனிங் கொடுத்தா போதும். கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற இம்பார்ட்டன்ஸ் மத்த ஆட்டத்துக்கும் கிடைச்சா நாமளும் சாதிக்கலாம்.

அப்படி கிடைக்கிறப்போ, கோச்,பிளேயர், இன்ஃபிராஸ்டிரக்சர் இல்லாம இருந்துச்சுனா, இந்த கேமே இங்க அழிஞ்சிடுமே. நாம அப்படி விட்டுடலாமா? வாய்ப்பு வரும். நாம அதுக்குரிய தயாரிப்புகளோட எப்பவும் இருந்துக்கிட்டேதான் இருக்கணும்.

நீ, எதுவும் மனசில வச்சிக்காத. நல்லா விளையாடு. நல்லது நடக்கும்.என்று அவனுக்கு பதிலளித்தேன்.

சேர்மன சமாதானப் படுத்தணும், நந்தா குரூப்ப மோட்டிவேட் பண்ணனும்,பக்கத்து கிராமங்களுக்கு ஞாயித்துக் கிழமை போயி பார்க்கணும் என மனதுக்குள் பல எண்ணங்கள். முடியுமா என ஒரு கணம் தோன்றியது.

எத்தனை மேட்ச் இருபது பாயிண்ட் ட்ரெயிலிங்ல போயி ஜெயிச்சிருக்கோம். இதையும் பார்ப்போம் என்று நினைத்தபடியே வண்டியில் ஏறினேன்.



உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் போட்டிக்கான சிறுகதை

37 comments:

J said...

கலக்கலா இருக்கு
பாதி படிக்கும் போதே இந்த கதையை
போட்டிக்கு அனுப்பிருக்கிங்க நினைச்சேன்
இன்னொரு முறையும்
கலக்கலா இருக்கு

முரளிகண்ணன் said...

வாங்க ஜோ.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நமக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு தல..,

பனிரெண்டில எஞினியரிங்க,மெடிக்கல் சீட்டு அதுக்கு சேதாராம் இல்லாமல் மதிப்பெண் வரணும். அதனால் முதல், இரண்டு குரூப் 11,12 மாணவர்களை சுத்தமா விளையாட்டை விட்டு தள்ளி வச்சிருவாங்க..,

அதுக்கப்புறம் காலேஜ்ல புதுசா விளையாடி பழகினால் எப்படி மேல போக முடியும்.

பள்ளி விளையாட்டுகளில் முத்திரை பதிக்கும் எத்தனையோ மாணவர்கள் கல்லூரி முடித்த பின் என்ன செய்வதென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

போலீஸ், மிலிட்டரி தேர்வுகள் வரும்போது மீண்டும் பயிற்சி.., கடைசி சில நாட்களில் சிபாரிசுக்கு ஆட்கள் தேடுவது. பின்னர் மீண்டும் வாழ்க்கைப் போராட்டம். சோறு என்பது இங்கு அனைத்தையும் நிர்ணயிக்கிறது.

எல்லா விளையாட்டுகளிலும் ஓரளவு வசதி உள்ளவர்கள் மட்டுமே விளையாடக்கூடிய சூழல் நிலவுகிறது

வெண்பூ said...

//
ஆசையிருக்கு யார்க்கர் போட அதிர்ஷ்டமிருக்கு புல்டாசாக
//

பர்ஃபெக்ட் யார்க்கர் முரளி.. வாழ்த்துகள்..

இயல்பான நடை, யதார்த்தத்தை மிஞ்சாத முடிவு.. அருமையா எழுதியிருக்கீங்க..

வித்யா said...

நல்லா வந்திருக்கு பாஸ். வெற்றிப்பெற வாழ்த்துகள்.

நர்சிம் said...

நல்லா இருய்ய்ய்யா நல்லா இரு..

’உங்க கத நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு’ சொல்லிட்டு இப்படி மொதொ பரிசுக் கதைய எழுதிட்டீங்களே தல... வாழ்த்துக்கள்..

முரளிகண்ணன் said...

சுரேஷ்

அந்த நிலை மாறவேண்டும். ஏனைய விளையாட்டுகளும் சம அந்தஸ்து பெற வேண்டும் என்பதே என் அவா.

நன்றி வெண்பூ.

நன்றி வித்யா.

நர்சிம்,
\\’உங்க கத நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு’ சொல்லிட்டு இப்படி மொதொ பரிசுக் கதைய எழுதிட்டீங்களே தல... வாழ்த்துக்கள்\\

தலைவரே, வக்கிரம் பக்கத்துல கூட இது வராது.

அதோட ட்ரீட்மெண்ட் எப்படி?


ஒரே டோர்ணமெண்டுல ஆஸ்திரேலியாவும், நெதெர்லாந்தும்
ஆடுறதில்லையா?

அதுமாதிரி நானும் கலந்துக்கிட்டு இருக்கேன்

நாடோடி இலக்கியன் said...

முரளி எப்போ ட்ரீட்?

முரளிகண்ணன் said...

வாங்க நாடோடி இலக்கியன்.

\\முரளி எப்போ ட்ரீட்?\\


இதெல்லாம் ஓவரா இல்ல?

Raj said...

All the BEST.

முரளிகண்ணன் said...

நன்றி ராஜ்

வெங்கிராஜா said...

//ஒரே டோர்ணமெண்டுல ஆஸ்திரேலியாவும், நெதெர்லாந்தும்
ஆடுறதில்லையா?

அதுமாதிரி நானும் கலந்துக்கிட்டு இருக்கேன்//
தன்னடகமாமாம்!
நீங்க RIGHT UP THERE சார்! :D
அவரும் தான்.

டக்ளஸ்....... said...

எல்லா துறையிலயும் அப்டுடேட்டா இருக்கீங்களே தல...!
வாழ்த்துக்கள்..!

Cable Sankar said...

போட்டி கூடிட்டே போகுதே..

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி வெங்கி ராஜா, டக்ளஸ், கேபிள்ஜி

விக்னேஷ்வரி said...

நல்லா வந்திருக்கு முரளி கண்ணன். வாழ்த்துக்கள்.

அதிஷா said...

சரியா போட்டீங்க யார்க்கரா...

ஸ்டம்பு பறக்கும் சத்தம் காதை கிழிக்குது..

கலக்கல்ண்ணே.. வாழ்த்துக்கள் வெற்றிபெற..

T.V.Radhakrishnan said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்

Marathamizhan said...

விருவிருப்பான நடை,
சிறு சிறு விசயங்களையும் நன்கு அவதானித்து எழுதுகிறீர்கள்,
போட்டியில் வாகை சூட வழ்த்துக்கள் முரளி !!!

அன்புடன்,
மறத்தமிழன்.

அத்திரி said...

தல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆத்தி..!

எவ்ளோ பெரிய பதிவு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஸாரி சொல்ல மறந்திட்டேன்..

என் ஓட்டை நச்சுன்னு குத்திட்டேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மறுபடியும் ஸாரி..

கதையைப் பத்தி சொல்ல மறந்திட்டேன்..

நல்லாயிருக்கு.. இன்னும் கொஞ்சம் கதைக்குள்ளாற நாங்களும் புகுந்து போற மாதிரி இருந்திருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்..!

Anonymous said...

எக்ஸலண்ட் முரளி. அதுக்கு மேல எனக்கு வார்த்தை தெரியலை.

$anjaiGandh! said...

அற்புதம் முரளி.. கதை மாதிரியே இல்ல.. செம டெக்னிகல் சமாச்சாரங்கள் எல்லாம் சொல்லி இருக்கிங்க.. கிரிக்கெட்ல தான் நீங்க கில்லின்னு நினைச்சா கால்பந்து அணிகளையும் பிரிச்சி மேயறிங்க.. சபாஷ் முரளி.. :)

கோபிநாத் said...

"வித்தை தெரிஞ்சவன்டா அவன்" அப்படின்னு சொல்ல தோணுதுண்ணே ;))

கதைகளம் மிக அருமை...முடிவு அதை விட அருமை ;)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

முரளிகண்ணன் said...

நன்றி விக்னேஷ்வரி.

நன்றி அதிஷா

நன்றி டி வி ஆர் சார்

நன்றி மறத்தமிழன்

நன்றி அத்திரி

நன்றி உண்மைத்தமிழன் அண்ணா

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி அண்ணாச்சி.

சஞ்சய்

\\கதை மாதிரியே இல்ல\\

சத்தமா சொல்லாதீங்க, போட்டியிலெ
சேத்துக்காம போயிடப் போறாங்க. :-))

நன்றி கோபிநாத்

LinuxAddict said...

LeBron James Dunk!! Super aa keethu!!

முரளிகண்ணன் said...

நன்றி லினக்ஸ் அடிக்ட்

அறிவிலி said...

அருமையான நடை. மிகவும் நன்றாக வந்திருக்கிறது.

ராஜா | KVR said...

//ஒரே டோர்ணமெண்டுல ஆஸ்திரேலியாவும், நெதெர்லாந்தும்
ஆடுறதில்லையா?//

ஆனா நெதெர்லாந்து இங்கிலாந்தை ஜெயிச்சிருக்கே ;-)

ராஜா | KVR said...

கதைல வர்ற டெக்னிகல் விஷயங்கள் சூப்பர்

அனுஜன்யா said...

முரளி,

என்ன சொல்வது. வித்தியாசமான கதைக் களம். அந்த சப்ஜெக்டில் நல்ல ஆழமான புரிதல். அசத்துகிறீர்கள் முரளி. அதுவும் ஒரு தீவிர கிரிக்கெட் விசிறியிடம் இருந்து இப்படி ஒரு கதை இன்னும் அழகு.

எத்தனை டெக்னிகல் விஷயங்கள்! நிச்சயமாக இது பரிசு பெறக் கூடிய கதை தான். 'வக்கிரமே' பொறாமைப் படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் பேசாமல் காக்கா, வடை கதையை ரீமிக்ஸ் செய்யலாம் என்று இருக்கிறேன்.

வாழ்த்துகள் முரளி. எல்லோருமே உங்களை நினைத்து பெருமைப் படலாம்.

அனுஜன்யா

வெட்டிப்பயல் said...

கலக்கல் கதை... அதுவும் பாஸ்கட் பால் நமக்கு பிடிச்ச விளையாட்டு.

எட்டாவதுல விளையாட ஆரம்பித்தது. பத்தாவது காலாண்டுல 380 மார்க். முதல்ல நிறுத்தியது பாஸ்கட் பால் கோச்சிங் தான் :(

ஹாஸ்டல் ஃபாதரே அப்பாக்கிட்ட படிக்கிற பையனுக்கு இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாரு.

பத்தாவதுல நிறைய மார்க் எடுத்து பதினொன்னாவதுல மறுபடியும் விளையாட ஆரம்பித்து, அதுல காலாண்டுல கொடுமையான மார்க். பள்ளியே மாத்திட்டாங்க... கடலூர்ல இருந்து ராசிபுரம் போயாச்சு.

அப்பறம் இங்க வந்து பாஸ்கட் பால் மேட்ச் பாக்கறதோட சரி :(

பாஸ்டன் செல்டிக்ஸ் மேட்ச் நேர்ல கூட போய் பார்த்திருக்கேன்...

ஆனா நீங்க சொல்ற ஸ்டாடிஸ்டிக்ஸ் சரியானு தெரியல. பள்ளிகள் லெவல்ல நடக்குற சீனியர், சூப்பர் சீனியர் மேட்ச்ல எல்லாம் திருச்சி காம்பைன், ஏற்காடு மௌண்ட் கார்மல் (?), எல்லாத்தை விட சென்னை டீம் தான் கலக்குவாங்க. எங்க ஸ்கூல் மூணாவது, நாலாவது லெவல்ல வரும். கடலூர் ஜெயிண்ட் ஜோசப். அங்க SAI (Sport Authority of India) பசங்க படிப்பாங்க. எங்களுக்கு கோச்சே இந்தியா லெவல்ல விளையாடினவரா தான் இருப்பாரு.

ஃபுட் பால், ஹாக்கி, பால் பாட்மிண்டன், கோ கோ நாலுத்திலயும் நான் படிச்ச நாலு வருஷமும் எங்க ஸ்கூல் தான் ஸ்டேட் ஃபர்ஸ். ரோலிங் கப் கூட வாங்கியிருக்காங்க.

முரளிகண்ணன் said...

அறிவிலி, ராஜா, அனுஜன்யா தங்கள்
வருகைக்கு நன்றி.

வெட்டிப்பயல், விரிவான பகிர்தலுக்கு நன்றி.

சென்னை அணியினர் அதிகம் வெற்றிவாகை சூடக் காரணம் அவர்களின் அணி, கோச் பலம்தான்.
அணி சிறிது தடுமாறினாலும் மனம்
தளர்ந்து விடுவார்கள் என ஸ்டேட் மேட்சுகளில் கோச்சுகள் பேசிக் கொள்வார்கள்.

நாங்கள் செமியில் தோத்தது கடலூரிடம் ஜெயிண்ட் ஜோசப் இடம் தான்.:-)))

புருனோ Bruno said...

//ஒரே டோர்ணமெண்டுல ஆஸ்திரேலியாவும், நெதெர்லாந்தும்
ஆடுறதில்லையா?
//

அப்படியா

நீங்க ஆஸ்திரேலியாவா