June 23, 2009

28ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்பில் ஒரு புதுப்பதிவர்

நேரம் சரியில்லாத வாலிபர் ஒருவர் கேபிள் சங்கரின் ஜெயா டிவி நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு
”கொக்கரகோ கும்மாங்கோ” என்னும் வலைப்பதிவைத் தொடங்குகிறார். பத்து பதிவு எழுதியும் பல
திரட்டிகளில் இணைத்தும் பின்னூட்டம் வராததால் சோர்வடைந்த அவர் 28 ஆம் தேதி சென்னை
தி நகர் நடேசன் பார்க்கில் பதிவர் சந்திப்பு நடைபெறுவதாக அறிந்து, சக பதிவர்களின் ஆலோசனையைப்
பெற அங்கு விரைகிறார்.

சந்திப்பு 5 மணிக்கு என்றாலும் ஆர்வக்கோளாறில் நான்கு மணிக்கே சென்று விடுகிறார். அங்கே பாலபாரதி
சந்திப்பு நடக்கும் இடத்தில் யாரும் அமர்ந்து விடாதவாறு காவல்காத்துக் கொண்டிருக்கிறார்.
புதுப்பதிவர் அவரை நெருங்கி பதிவர் சந்திப்பு என ஆரம்பித்தவுடன் வாய்யா வாய்யா என கட்டியணைத்து
காவல் பணியில் ஈடுபடுத்துகிறார்.

தொடர்ந்து பதிவர்கள் வர ஆரம்பிக்கிறார்கள். பதிவர் நர்சிம்மிடம் உரையாட ஆரம்பித்து தன்
பிரச்சினையை சொல்லுகிறார்.

நர்சிம் : குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம் இதெல்லாம்
படிங்க. அப்புறம் அதை தற்கால சிச்சுவேஷனோட கம்பேர் பண்ணி பதிவுபோடுங்க. 40
பின்னூட்டம் கேரண்டி.

புது : கொன்றைவேந்தன் நாலுவரி செய்யுளே மனப்பாடம் பண்ண முடியாம தமிழய்யாகிட்ட அடி
வாங்குனவன் நான். சாரி பாஸ்.

கேபிள் : கோபிகிருஷ்ணா, தேவி கருமாரி, கிருஷ்ணவேணி

புது : இவங்கள்ளாம் பதிவர்களா?

கேபிள் : ம்ஹும். இதெல்லாம் சிட்டி தியேட்டர்ஸ். திருட்டு விசிடி காரங்க கூட மதிக்காத படமெல்லாம்
இங்க வரும். அதப் பார்த்துட்டு விமர்சனம் எழுதினா 2000 ஹிட்டு கேரண்டி.

புது : டிரை பண்ணுறேன். அங்க ஒருத்தரு நாம பேசுறத எல்லாம் நோட் பண்ணுறாரோ? அவர் யாரு
உளவுத்துறையா?

கேபிள் : உளவுத்துறை அளவுக்கு நாம ஒர்த் இல்லப்பா. அவர்தான் டோண்டு.

புது : வணக்கம் டோண்டு சார்.

டோண்டு : உங்க பிளாக் அட்ரஸ்ஸ சொல்லுங்க

புது : 8/3, நாலாவது குறுக்கு தெரு

டோண்டு : நான் கேட்டது உன் வலைப்பூ அட்ரஸ்.

புது : கொக்கரக்கோ கும்மாங்கோ. சார் எனக்கு யாரும் பின்னூட்டமே போடுறதில்ல.

டோண்டு : ஒன்னும் பிரச்சினையில்லை. நீங்க 40 வருஷத்துக்கு முன்னாடி வேலை பார்த்த அனுபவம்,
அப்பைக்கும் இப்போவுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை பத்தி எழுதினா நெறையா கிடைக்கும்.

புது : எது?. எனக்கு வயசே 22 தான். இப்போதான் வேலைக்கே போறேன்.

டோண்டு : அப்பன்னா நீங்க 40 வருஷம் கழிச்சே வலைப்பூ ஆரம்பிங்க.

புது : வேற வழியே இல்லையா?

டோண்டு : ஜெயா டிவி ராத்திரி பாத்தீங்கண்னா

புது : எனக்கு பின்னூட்டமே வேண்டாம் சார்.

அப்போது அங்கே பதிவர் முரளிகண்ணன் வருகிறார். புது தன் பிரச்சினையை சொல்லுகிறார்.

முரளி : இப்போ உங்களை நாய் துரத்தினா என்ன செய்வீங்க?

புது : அலறியடுச்சு ஓடுவேன்.

முரளி : அதான். நீங்க ஓடக்கூடாது. அங்கேயே நின்னு யோசிக்கணும். எந்தெந்தப் படத்தில நாய்
துரத்துற சீன் வருதுன்னு. நாலஞ்சு தேறிச்சுன்னா பதிவா போட்டணும். 20 பின்னூட்டம் கேரண்டி.

புது : பின் னூட்டம் மட்டுமில்ல. ஊசி ஏத்தமும் கேரண்டி. அவர் யார் பாஸ்?
கையெல்லாம் வீங்கிப்போயி உட்கார்ந்திருக்காரு?

முரளி : அவர்தான் பதிவர் உண்மைத் தமிழன். இருங்க உங்களை அறிமுகப்படுத்துறேன்.

புது : என்ன சார் ஆச்சு?

உ த : முருகா

புது : சார். என் பேர் அதில்லை.

உ த : உன்னைச் சொல்லலை. எம்பெருமான் முருகன கூப்பிட்டேன். இந்த பிளாஸ்டிக் கீ போர்டு
எல்லாம் என் வேகத்த தாங்க மாட்டேங்குதுன்னு இரும்பு கீ போர்டு வங்குனேன். ராத்திரி
1000 பக்கம்தான் டைப் பண்ணுனேன். வீங்கிடுச்சு.

புது : ஆ!!! அவ்ளோ எதுக்கு சார் அடிச்சீங்க?

உ த : பதிவர் பைத்தியக்காரன் சிறுகதை போட்டி வச்சிருக்காருல்ல. அதுக்குத்தான்.

புது : அதுக்கு 1000 வார்த்தைதானே?

உ த : தம்பி, சிறுகதைன்னா என்னா தெரியுமா? கல்கியோட பொன்னியின் செல்வன், வெங்கடேசனோட
காவல் கோட்டம் இதெல்லாம் படிச்சிருக்கியா? ஜெயமோகன் முன்னாடி எழுதின விஷ்ணுபுரம், இப்போ
எழுதிக்கிட்டு இருக்குற அசோகவனம் எல்லாமே சிறுகதைகள் தான். குறைந்தது 1000 பக்கம்
இருந்தாத்தான் அது சிறுகதை. பாராவோட மாயவலை கூட சிறுகதை இல்ல. ஒருபக்கக் கதை.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பைத்தியக்காரன், அவசரம் அவசரமாக மறுக்கிறார்.

பைத்தியக்காரன் : உ த, 1000 வார்த்தைதான் நாங்க கேட்டிருக்கோம்.

உ த : அப்போ எஸ் எம் எஸ் போட்டின்னுல்ல நீங்க அறிவிச்சிருக்கணும்.

இதைகேட்டு புதுப் பதிவர் மயங்கி விழுகிறார். தராசு, ஸ்டார்ஜான் ஆகிய சக பதிவர்கள் அவரை
கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சோடா வாங்கிக் கொடுத்து தெளியவைக்கிறார்கள்.

இம்மாதியெல்லாம் நடக்காது. தைரியமா பதிவர் சந்திப்புக்கு வாங்க. உரையாடல் போட்டிக்கு கதை
அனுப்ப மறந்துடாதீங்க
.


சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

இடம் : தி நகர் நடேசன் பூங்கா

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

நாள் : 28- 06 -2009. ஞாயிற்றுக்கிழமை

இதற்கு அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவரும் அமைப்பாளர்களே.


சந்திப்பு பற்றிய் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள

பாலபாரதி – 9940203132

லக்கிலுக் – 9841354308

அதிஷா – 9884881824

கேபிள் சங்கர் - 9840332666

முரளிகண்ணன் - 9444884964

68 comments:

லக்கிலுக் said...

டெண்டு கொட்டாயிலே டிக்கெட் கொடுக்கறப்போ ‘விநாயகனே’ பாட்டு போட்டு கூட்டம் சேர்ப்பது மாதிரி.. நல்ல ஐடியா இந்தப் பதிவு. பாராட்டுகள்!

ஆஜர் சார்!

ராஜன் said...

வரலாம்ன்னுதான் இருந்தேன்.... வேணா, 40 வருஷத்துக்கு அப்புறமா முயற்ச்சிக்கின்றேன்....

நையாண்டி நைனா said...

எச்சூஸ் மீ...

இந்த பதிவிற்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.


எங்கள் தங்கம்,
தென்னகத்தின் சிங்கம்,
பதிவுலகின் பீஸ்மர்... எங்கள் அண்ணன், அண்ணன் உண்மை தமிழன் பெருமைக்கு சிறுமை சேர்க்கிறது இந்த பதிவு.

அது S.M.S போட்டி கூட இல்ல... கோடிட்ட இடத்தை நிரப்பு

வாழ்க உண்மை தமிழன்,
வளர்க அவரது புகழ்.
(அவரது பதிவு மட்டும் சுருங்குக).

இப்படிக்கு
நையாண்டி நைனா.
பொருளாளர்-
உண்மைதமிழ் மக்கள் முன்னேற்ற கலக்கம் (எழுத்துப்பிழை இல்லை)

'இனியவன்' என். உலகநாதன் said...

கலக்கீட்டீங்க.

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு.

அக்பர் said...

// முரளி : இப்போ உங்களை நாய் துரத்தினா என்ன செய்வீங்க?

புது : அலறியடுச்சு ஓடுவேன்.

முரளி : அதான். நீங்க ஓடக்கூடாது. அங்கேயே நின்னு யோசிக்கணும். எந்தெந்தப் படத்தில நாய்
துரத்துற சீன் வருதுன்னு. நாலஞ்சு தேறிச்சுன்னா பதிவா போட்டணும். 20 பின்னூட்டம் கேரண்டி //
// டோண்டு : உங்க பிளாக் அட்ரஸ்ஸ சொல்லுங்க

புது : 8/3, நாலாவது குறுக்கு தெரு

டோண்டு : நான் கேட்டது உன் வலைப்பூ அட்ரஸ்.

//

எப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள்...

சிரிச்சு சிரிச்சு வ‌யிறு புண்ணா போச்சு.

நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க.

http://sinekithan.blogspot.com/

கார்க்கி said...

//டெண்டு கொட்டாயிலே டிக்கெட் கொடுக்கறப்போ ‘விநாயகனே’ பாட்டு போட்டு கூட்டம் சேர்ப்பது மாதிரி.. நல்ல ஐடியா இந்தப் பதிவு. பாராட்டுகள்/

அட சொல்ல வந்தத ஏற்கனவே சொல்லிட்டாரு..

அந்த ஓட்டும் தானே காரணம் சகா?

அனுஜன்யா said...

இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன். உ.தமிழன் ...:))))))))

நல்ல வேளை. நான் இந்த வாரம் வருவதாக இருந்தேன். Now posponed.

அனுஜன்யா

அதிஷா said...

சூப்பர் ஆஜர் ஆஜர்

தமிழ் பிரியன் said...

நாய் துரத்துதலில்.. என்ன படங்கள் இருக்கு! யோசிச்சிட்டு வருகிறேன்..;-))
நீரோடை கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு...:)

செந்தழல் ரவி said...

ரொம்ப நாள் கழித்து மனம் விட்டு சிரித்த பதிவு முரளி.......

நர்சிம் said...

கலக்கல் முரளி.. மிக மிக ரசித்தேன்.. அதுவும், நாய் கடிச்சா மேட்டர்.. நம்ம குறுந்தொகை மேட்டர்.. எல்லாமே சிங்க் சூப்பர்.. குசும்பன் டெம்ப்ளேட்?பதிவும் அந்த அடிதான்.. கலக்கல்.

குடந்தை அன்புமணி said...

பதிவைப் படித்ததும் சிரிப்பு தாளவில்லை. உண்மையிலேயே பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது என்பதையே லக்கிலுக்-ன் பின்னூட்டத்தின் வாயிலாகத்தான் அறிய முடிகிறது.
(நைஜீரியாவிலிருந்து ராகவன் சென்னைக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறார்.)
நானும் சிறுகதை(போட்டிக்கு) போட்டிருக்கிறேன். பார்க்கவும்.

dondu(#11168674346665545885) said...

நிஜமாகவே 28-ஆம் தேதி சந்திப்பு இருக்கிறதா என்ன? அதுவும் கொசுக்களால் பீடிக்கப்படும் நடேசன் பார்க்கிலா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

டோண்டு சார்!

கடற்கரை ஞாயிறுக் கூட்டத்தில் பதிவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியவில்லை, அறிமுகப் படுத்திக் கொள்ள முடியவில்லை என்று தொடர்ந்து கம்ப்ளையண்டு வருவதாலேயே இம்முறை நடேசன் பார்க்.

பதிவர்கள் யாராவது நல்ல லொகேஷன் இருந்தாலும் சொல்லலாம். இது நமக்கு நாமே நடத்திக் கொள்ளும் மீட்டிங் தானே? மாதாமாதம் கிழக்கு மொட்டை மாடியை கேட்க கொஞ்சம் சங்கோஜமாகவே இருக்கிறது.

லக்கிலுக் said...

முரளி!

28ஆம் தேதி நிஜமாகவே நடக்கிறது என்று பதிவின் கீழே சேர்த்துவிடுங்கள். நேரம், இடமெல்லாம் கொஞ்சம் சீரியஸாக போடவும். ஏதோ காமெடிப் பதிவு என்று வராமல் இருந்துவிடப் போகிறார்கள் :-)

லக்கிலுக் said...

முரளி!

28ஆம் தேதி நிஜமாகவே நடக்கிறது என்று பதிவின் கீழே சேர்த்துவிடுங்கள். நேரம், இடமெல்லாம் கொஞ்சம் சீரியஸாக போடவும். ஏதோ காமெடிப் பதிவு என்று வராமல் இருந்துவிடப் போகிறார்கள் :-)

ராஜா | KVR said...

//உ த : தம்பி, சிறுகதைன்னா என்னா தெரியுமா? கல்கியோட பொன்னியின் செல்வன், வெங்கடேசனோட
காவல் கோட்டம் இதெல்லாம் படிச்சிருக்கியா? ஜெயமோகன் முன்னாடி எழுதின விஷ்ணுபுரம், இப்போ
எழுதிக்கிட்டு இருக்குற அசோகவனம் எல்லாமே சிறுகதைகள் தான். குறைந்தது 1000 பக்கம்
இருந்தாத்தான் அது சிறுகதை. பாராவோட மாயவலை கூட சிறுகதை இல்ல. ஒருபக்கக் கதை.//

சான்ஸே இல்ல. ஆஃபீஸ்ல இருக்கோமேன்னு சிரிப்பை எவ்ளோ தான் அடக்கிப் படிச்சாலும் இந்த இடம் வந்தது வெடிச்சிடுச்சு (சிரிப்பு தான்)

jothi said...

//28ஆம் தேதி நிஜமாகவே நடக்கிறது என்று பதிவின் கீழே சேர்த்துவிடுங்கள். நேரம், இடமெல்லாம் கொஞ்சம் சீரியஸாக போடவும். ஏதோ காமெடிப் பதிவு என்று வராமல் இருந்துவிடப் போகிறார்கள் :-)//

ஐயய்யோ,..அப்ப இது காமெடி பதிவு இல்லயா? நல்ல வேளை பின்னூட்டம் படிச்சேன்,.. (படிச்சும் ஒன்னும் ஆவப்போரதில்ல)

Mahesh said...

ஆஹா அங்க குத்தி இங்க குத்தி இப்ப சொந்தத்துலயே சூனியம் வெச்சுக்க ஆரம்பிச்சுட்டீங்க....

கலக்கல் முரளி....

முரளிகண்ணன் said...

நன்றி லக்கிலுக்.

ராஜன் நீங்க நிச்சயம் வரணும்.

வாங்க நையாண்டி நைனா

இனியவன் கண்டிப்பா வந்துடுங்க

வந்துடுறேன் அக்பர்

கார்க்கி டிக்கட் எடுத்தாச்சா?


அனுஜன்யா இந்த வாரம் வந்திருக்கலாமே?

jackiesekar said...

இரும்பு கீ போர்டல டைப் அடிச்சு முருகா முருகான்னு புலம்பற உண்மைதமிழனை கற்பனை செய்யறப்பவே எனக்க சிப்பு சிப்பா வர்து...

தண்டோரா said...

என்னைய ஆட்டத்துல சேர்த்துக்காத முரளியை கண்டிச்சு ஒரு கவிதை எழுதலாம்னு இருக்கேன்..

முரளிகண்ணன் said...

அதிஷா நீ இல்லாமல?


வாங்க தமிழ்ப்ரியன்.

நன்றி செந்தழல்ரவி

நன்றி நர்சிம்

குடந்தை அன்புமணி, தாங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள். ராகவனையும் அழைத்துக் கொண்டு சந்திப்புக்கு வந்து விடவும்

டோண்டு சார், நடேசன் பார்க் 5-7 ஆவ்லுடன் எதிர்பார்க்கிறோம்

முரளிகண்ணன் said...

சேர்த்துடறேன் லக்கி.

நன்றி ராஜா/கேவிஆர்

நன்றி ஜோதி.

வாங்க மகேஷ்.

தண்டோரா, நீங்களும் ஜாக்கி,அக்னிப்பார்வையும் தான் அடுத்த டார்கெட்.

அனுமதி கேக்கலாம்னு இருந்தேன். இனி பிரச்சினையில்லை.

மதிபாலா said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசு விட்டு சிரிச்சேன் சார்...

அருமை.

ரமேஷ் வைத்யா said...

xlnt

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))))))

தராசு said...

//இதைகேட்டு புதுப் பதிவர் மயங்கி விழுகிறார். தராசு, ஸ்டார்ஜான் ஆகிய சக பதிவர்கள் அவரை
கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சோடா வாங்கிக் கொடுத்து தெளியவைக்கிறார்கள். //

பரவாயில்லப்பா, தெளிய வைக்கறதுக்காவது நம்மள சேர்த்துகிட்டீங்களே.

தலைவரே, கடைசி வரைக்கும் கலாய்க்கறீங்கன்னுதான் நெனச்சுகிட்டிருந்தேன். அருமையான அழைப்பிதழ் தலைவா.

வெளியூரிலிருக்கிறேன். முடிந்தால் வருகிறேன்.

Anonymous said...

//எந்தெந்தப் படத்தில நாய்
துரத்துற சீன் வருதுன்னு. //

இப்படி எல்லாம் கிண்டல் பண்ணப்புடாது..:))

துபாய் ராஜா said...

//"சந்திப்பு 5 மணிக்கு என்றாலும் ஆர்வக்கோளாறில் நான்கு மணிக்கே சென்று விடுகிறார். அங்கே பாலபாரதி
சந்திப்பு நடக்கும் இடத்தில் யாரும் அமர்ந்து விடாதவாறு காவல்காத்துக் கொண்டிருக்கிறார்.
புதுப்பதிவர் அவரை நெருங்கி பதிவர் சந்திப்பு என ஆரம்பித்தவுடன் வாய்யா வாய்யா என கட்டியணைத்து
காவல் பணியில் ஈடுபடுத்துகிறார்."//

அருமை.அருமை.பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இப்படில்லாம் கூப்பிட்ட பயந்துட மாட்டாங்க :) :) :)

பைத்தியக்காரன் said...

வாய்விட்டு சிரிச்சா... :-)

நல்லா இருக்கு முரளி...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஸ்ரீ.... said...

தொலைபேசியில் எனது சந்தேகத்தைத் நிவர்த்தி செய்ததற்கு மிக்க நன்றி. வித்தியாசமான அழைப்பு. கட்டாயம் கலந்து கொள்கிறேன்.

ஸ்ரீ....

உடன்பிறப்பு said...

//
dondu(#11168674346665545885) said...

நிஜமாகவே 28-ஆம் தேதி சந்திப்பு இருக்கிறதா என்ன? அதுவும் கொசுக்களால் பீடிக்கப்படும் நடேசன் பார்க்கிலா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

நடேசன் பார்க் கவிப்பேரரசு கண்ணாதாசன் விசிட் செய்யும் இடங்களில் ஒன்றாம், தோழர் லக்கி சொன்னது

லக்கிலுக் said...

//நடேசன் பார்க் கவிப்பேரரசு கண்ணாதாசன் விசிட் செய்யும் இடங்களில் ஒன்றாம், தோழர் லக்கி சொன்னது//

எதிரில்தான் கண்ணதாசன் வீடும் இருக்கிறது!

முரளிகண்ணன் said...

மதிபாலா

ரமேஷ் வைத்யா

சின்னப்பையன்

தராசு

நாய் சேகர்

தங்களின் வருகைக்கு நன்றி.

சந்திப்பில் அவசியம் கலந்து கொள்ளவும்

முரளிகண்ணன் said...

நன்றி துபாய் ராஜா

ஜியோவ்ராம் சார், நம்ம ஆளுங்கள்ளாம் இதுக்கு பயப்படுறவங்களா?

நிச்சயம் வந்துடணும் சார்.

பைத்தியக்காரன் வந்துடுவீங்கதானே?

வந்துடுங்க ஸ்ரீ

உடன்பிறப்பு கண்டிப்பா கலந்துக்கிடணும்.

வால்பையன் said...

நல்லா சிரிக்க வச்ச பதிவு தல!

அக்னி பார்வை said...

நடேசன் பார்க்கா அங்க கொசுத் தொல்லை ஓவரா இருக்குமே முரளி...

உடன்பிறப்பு said...

//
அக்னி பார்வை said...

நடேசன் பார்க்கா அங்க கொசுத் தொல்லை ஓவரா இருக்குமே முரளி...
//

வரும்போது எல்லோரும் கொசுவத்தி சுருள் கொண்டு வந்துருங்க, டோண்டு சார் பிளாஷ்பேக் சொல்லுவதற்கு பயன்படும்

முரளிகண்ணன் said...

நன்றி வால்பையன்.

அக்னிபார்வை,

மெரினாவில் நடத்தும்போது, புது பதிவர்களை மற்றவர்களுக்கு
அறிமுகம் செய்வதை சிறப்பாக செய்ய முடியவில்லை.

மேலும் பல கவனச் சிதறல்கள் ஏற்படுகின்றன.

நடேசன் பூங்காவில் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய பேச இயல்பாக இருக்கிறது.

வேறு நல்ல இடம் இருந்தால் சொல்லுங்கள், அங்கே மாற்றிவிடுவோம்.

மயாதி said...

முடிந்தால் அப்படியே video conference வசதியும் செய்து விடுங்கள், நாங்களும் இங்கிருந்தே பங்கு கொள்கிறோம்.
ஹா ஹா ஹா.....

"அகநாழிகை" said...

முரளி,
கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். 29.06.09 அன்றுதான்
தேர்வுகள் முடிகிறது. சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நாடோடி இலக்கியன் said...

கலக்கிட்டிங்க முரளி..!

அக்பர் said...

முரளி ‍_ கோ.வி.
ஒற்றுமை கேட்டிருந்தேன் ஒருத்தரும் சொல்லவில்லை.

நானே சொல்றேன், அது வேற ஒன்னும் இல்லை

கோவி.கண்ணன் தலைப்புல காலம் இருக்கும்.
முரளி கண்ணன் பதிவுல எல்லாம் காலம் இருக்கும்.

Deepak Kumar Vasudevan said...

நன்றி அய்யா. எனது பதிவிலும் இது குறித்து ஒரு அறிவிப்பு போட்டுட்டேன்.


முகவரி

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
This comment has been removed by the author.
வித்யா said...

நல்லா சிரிச்சேன் முரளி:)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

முரளி ,

நல்லா இருக்கு , இது நல்லா இருக்கு

என்னையும் சேத்துக்கிட்டது ....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

காமெடி கிங் முரளி

பினாத்தல் சுரேஷ் said...

28, தி நகர்? ஒரு எதிர்பாராத பதிவர் வர சாத்தியக்கூறுகள் உள்ளனவே!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//பினாத்தல் சுரேஷ் said...

28, தி நகர்? ஒரு எதிர்பாராத பதிவர் வர சாத்தியக்கூறுகள் உள்ளனவே!//

அண்ணன் பினாத்தலார்..,
தனது கருப்பு சிங்கப்படையுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

--
நானும் உள்ளேன் அய்யா!
--
யாரேனும் மகானுபாவன்கள் கொசு வர்த்தி சுருளுடன் வந்தால்.. புண்ணியகோடி கடையிலிருந்து டீ வாங்கித்தரப்படும். :)

நசரேயன் said...

சரவெடி நகைச்சுவை

Sukumar Swaminathan said...

க்ரியேடிவ் அழைப்பிதழ் !!!

பாஸ்கர் said...

நல்ல பதிவு. மிகவும் இயற்கையாக உள்ளது. கூட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.எப்படியும் டோண்டு சார் "பதிவில்" படித்து விடலாம்.

////நடேசன் பார்க் கவிப்பேரரசு கண்ணாதாசன் விசிட் செய்யும் இடங்களில் ஒன்றாம், தோழர் லக்கி சொன்னது//

எதிரில்தான் கண்ணதாசன் வீடும் இருக்கிறது//

கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24௨௪ம் தேதி. அவர் வீட்டுக்கு அருகில் தற்செயலாக கூடுகிறீர்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நள்ளிரவு 2 மணிக்கு மனம் விட்டு சிரிக்க வைத்தீர். நன்றி தோலரே!!!

ராஜராஜன் said...

சூப்பர் பதிவு .. ஆபீஸ்ல அதிகமா சிரிக்க முடியல , சிரிக்காம இருக்கவும் முடியல .

ஆனால் இந்த சந்திப்புக்கு என்னால் வர முடியாது . சில பல வேலை காரணமாக நான் வெளியூர் செல்கிறேன் .

வாழ்த்துக்கள் .

அறிவிலி said...

மிகவும் அருமை.

ஒரு நாளில் மிஸ் ஆவுது. ஹ்ம்ம்ம்... அடுத்த விஜயத்திலாவது எனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

முரளிகண்ணன் said...

நன்றி மயாதி. வீடியோ வாய்ப்பில்லை.

பரவாயில்லை அகநாழிகை, அடுத்தமுறை நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும்.

நன்றி நாடோடி இலக்கியன்.

அக்பர் :-)). சந்திப்புக்கு வந்துடுங்க

மிக்க நன்றி தீபக் குமார் வாசுதேவன்

முரளிகண்ணன் said...

நன்றி வித்யா

வாங்க ஸ்டார்ஜான்

அமீரக சிங்கம், கிரியேட்டிவிட்டி கிங், ஹஸ்பெண்டாலஜி புரபசர், பிளாஷ் ஸ்டார் பினாத்தாலாரை அன்போடு சென்னைப் பதிவர்கள் வரவேற்கிறோம்

தல,
\\யாரேனும் மகானுபாவன்கள் கொசு வர்த்தி சுருளுடன் வந்தால்.. புண்ணியகோடி கடையிலிருந்து டீ வாங்கித்தரப்படும். :)
\\
நீங்க ஒரு ராட்ஷச கொசுவலைக்கு ஆர்டர் கொடுத்துட்டதா தகவல் வந்ததே
உண்மையில்லையா?

முரளிகண்ணன் said...

நன்றி நசரேயன்

நன்றி சுகுமார் சுவாமினாதன். ஆஜராயிடுவீங்கள்ள?

நன்றி பாஸ்கர்

நன்றி குறையொன்றுமில்லை

பரவாயில்லை ராஜராஜன், அடுத்தமுறை நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும்.

அறிவிலி, அடுத்த முறை அவசியம் கலந்து கொள்ளுங்கள்

குடுகுடுப்பை said...

அருமை முரளிக்கண்ணன்.

Busy said...

Good One !!

Adyar Planotorium / Childeren Park / Besant Nagar Beach for Blogger Meeting

அக்பர் said...

அழைப்புக்கு நன்றி
நான் இப்போது ச‌வுதியில்..
ஊர் வ‌ரும்போது ச‌ந்திப்போம் த‌ல‌

ஆதிமூலகிருஷ்ணன் said...

அண்ணே.. ரொம்ப நாள் கழிச்சு ஊருக்குப்போறேனே.. ஊத்திக்கிச்சா? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. ஹிஹி நா எனக்குச்சொன்னேன்.!

அத்திரி said...

பிரபல பதிவருங்க எல்லாம் வருவாங்களா? தல........ அவ்வ்வ்வ்

வண்ணத்துபூச்சியார் said...

முரளி. கலக்கல் காமெடி..

நடேசன் பூங்காவை விட வேறு நல்ல இடம் தேர்வு செய்யலாம்..

கொசுக்கடி தாங்க முடியாது.

கடற்கரை காந்தி சிலையே பெட்டர்.

பரிசீலனை செய்யவும்.

சுரேஷ் கண்ணன் said...

//உளவுத்துறை அளவுக்கு நாம ஒர்த் இல்லப்பா. //

சிரிக்க வைத்த நகைச்சுவை. வி்த்தியாசமான அழைப்பு. நன்றாக இருந்தது.