June 06, 2009

திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை - மனதிற்க்கு தோன்றிய சில காரணங்கள்.

அருமை நண்பர் ஜாக்கி சேகர் மற்றும் வந்தியத்தேவன் ஆகியோர் இது பற்றி சில கேள்விகளை
எழுப்பியிருந்தார்கள். அவர்களின் கேள்வியில் நியாயமான ஒரு கருத்து இருந்தது.

முதலில் தமிழகத்திற்க்கு பின்னர் தேசிய அளவில் என்று இருந்திருக்கலாமே? என்று.

என் மனதிற்க்குத் தோன்றிய சில காரணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1. சிறந்த திரைக்கதை அமைப்புடைய பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும், சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது நாம் பல படிகள் பிந்தங்கியே இருக்கிறோம். பல படங்கள் தேவையில்லாத காட்சிகள், லாஜிக் மீறல்களுடன் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. பல திரைக்கதை உத்திகள் இங்கு இன்னும் பரீட்சித்து பார்கப்படவே இல்லை. எனவே ஒரு உத்தியைச் சொல்லி, அதற்கு எடுத்துக் காட்டு வேண்டுமெனில் நாம் பிற நாட்டு படங்களையே சொல்ல வேணடியிருக்கிறது. அவை சரியான
ஆங்கில சப் டைட்டில்களுடன் எளிதில் கிடைக்கின்றன.

2. தமிழில் திரைக்கதையை சொல்லிக் கொடுக்க வேண்டுமெனில் நல்ல ஆசிரியர்கள் வேண்டும். தவறில்லாமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அதில் சந்தேகமே இருக்கக் கூடாது. இது போன்று வகுப்பு எடுக்கும் அனுபவம் உடையோர் இங்கு குறைவு. பாலு மகேந்திரா (இங்கு வகுப்பெடுத்தார்) போன்ற சிலரே
உள்ளனர். இனி அதிகமோனோர் உருவாவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. எனவே வேறு மொழி ஆட்களை அழைத்து வரும் போது ஆங்கிலம் இணைப்பு மொழியாக உபயோகப் படுத்தப்படுகிறது.

3. திரைக்கதை சம்பந்தமாக குறிப்புகள் அடங்கிய மெட்டீரியல்ஸ் (ஆங்கிலம்) கொடுக்கப்பட்டது. இதை தமிழில் மாற்ற பெரு முயற்சி தேவை.

4.இந்த நிகழ்வானது சென்னை ஐ ஐ டியின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக
நடத்தப் பட்டது. இரண்டு மாதம் முன்னர் அடூர் கோபாலகிருஷ்ணன் நடத்திய திரைக்கதை
புரிதல் அமர்வும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப் பட்டது. அதுவும் தேசிய அளவிலேயே நடத்தப்பட்டது.

ஐஐடி மத்திய அரசு நிறுவனம். அதில் மாநிலம் சார் நிகழ்ச்சிகள் மிக அரிது. எல்லாமே தேசிய கண்ணோட்டம்தான்.

5. இட வசதி, ஆசிரியர் மாணவர் விகிதம், மாணவர்களிடம் கல்வி சென்று சேரும் விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டு பார்த்தால் 250 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் சூழல் இருந்தது. ஆனால் இந்திய அளவில் உதவி இயக்குநர்கள் எவ்வளவு? எனவே சினிமாவைப் பற்றிய ஓரளவு அடிப்படைப் புரிதல் உள்ளவர்களையும்,சினிமாவை தொழிலாக கைக்கொள்ளப் போகிறவர்களையும் மட்டும் முதல் கட்டமாக அனுமதிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அவர்களை இனம் காணவே தங்களுக்குப் பிடித்த படத்தைப் பற்றிய அப்ஸ்ட்ராக்ட் கோரப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் புரிதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

6. தமிழிலும் இது நடைபெறும்.ஆனால் சில காலம் கழித்து.

(இதற்க்குமுன் அவ்வை சண்முகி பட தயாரிப்பின் போது, வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களைக் கொண்டு ஒரு பயிற்சிப்பட்டறை தமிழ் கலைஞர்களுக்காக கமல் நடத்தினார்.

மேலும் ஆளவந்தான் பட சமயத்திலும்
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு வகுப்பு நடத்தப் பட்டது.

மேலும் முழுக்க முழுக்க தமிழிலும் நடத்த பின்னாட்களில் வாய்ப்பு இருக்கிறது.)




நிகழ்வு பற்றிய சில உதிரி தகவல்கள்


மதிய உணவு பெரும்பாலும் சீன முறைப்படி இருந்தது. கமல்ஹாசன் அடிக்கடி பிளாக் டீ,
முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் எடுத்துக் கொண்டார் என கேட்டரிங்காரர்கள் கூறினார்கள்.

இளைஞர்கள் அதிகம். கேரளா, வங்கம், மும்பை அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருந்தது.
தமிழ் உதவி இயக்குநர்கள் நான் பார்த்த வரையில் 20க்கும் அதிகமானோர் இருந்தனர்.

வகுப்பு நடக்கும் போதும், கலந்துரையாடலின் போதும் கமல் அரங்கின் உள்ளேயே இருந்தார்.
நல்ல மாடரேட்டராக செயல்பட்டார்.

ஆனால் படம் திரையிடப்படும் போது, வெளி அரங்கில் சுற்றிவந்து பணிகளை கவனித்தார்.
தன்னார்வலர்கள்,பாதுகாப்பு பணியாளர்கள் என அனைவரின் சினிமா பற்றிய கேள்விகளுக்கும்
பதிலளித்தார்.

கமலின் செல்போன் அவர் உதவியாளரிடமே இருந்தது. முக்கிய அழைப்புகள் மட்டுமே கமலிடம் தரப்பட்டன.

17 comments:

Raju said...

அண்ணே, நம்ம ஐஐடிலயா நடந்துச்சு..?
உங்க கமல் கிட்ட பேசுனீங்களா..?

SUREஷ்(பழனியிலிருந்து) said...
This comment has been removed by the author.
SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பல படங்கள் தேவையில்லாத காட்சிகள், லாஜிக் மீறல்களுடன் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.//


மாபெரும் வெற்றிப் படமும் திரைக்கதைத் திலகத்தால் திரைக்கதை அமைக்கப் பட்ட இது நம்ம ஆளு படத்தில் இருக்கும் லாஜிக் மீறல்கள் இங்கே உள்ளன

நர்சிம் said...

அசத்தல் முரளி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தமிழில் திரைக்கதையை சொல்லிக் கொடுக்க வேண்டுமெனில் நல்ல ஆசிரியர்கள் வேண்டும். தவறில்லாமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அதில் சந்தேகமே இருக்கக் கூடாது.//

உதவி இயக்குனர்கள் இயக்குநர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்களே....

ஆனால் சொல்லிக் கொடுக்கிறார்களா? என்று தெரியவில்லை..

பாரதிராஜாவின் மாணவர்கள் அளவுக்கு மற்ற இயக்குநர்களின் மாணவர்கள் வெற்றியடையாமல் போனது கூட இந்த சொல்லிக் கொடுக்கும் விஷயத்தின் காரணமாகவே இருக்கும் அல்லவா? தல....,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

திரைக்கதை வெற்றி சிறப்பாக அமைந்தால் கேவலான படங்கள் வெற்றி பெற்றுவிடுமே.

திரைச்சதையைவிட திரைக்கதைதான் முக்கியம் தல

வந்தியத்தேவன் said...

அருமையான பதிவு நண்பரே. ஞாநிக்கு இதனை அனுப்பினால் கொஞ்சமேனும் புரிந்துகொள்வார் என நினைக்கின்றேன்.

அக்னி பார்வை said...

நல்ல பதிவு முரளி நீங்கள் சொன்ன ப்ல விஷ்யங்களுடன் நான் உடன்படுகிறேன்

வினோத்குமார் said...

nice explanation

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஆசையிருக்கு யார்க்கர் போட அதிர்ஷ்டமிருக்கு புல்டாசாக//

இதோடு தொடர்புடைய யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன? இடுகையைப் படித்துவிட்டீர்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு முரளி

சின்னப் பையன் said...

நல்ல பதிவு.

வருண் said...

முரளி:

கமலஹாசன் என்ன முயற்சிக்கிறார்னு தெரியலை, எனக்கு.

***சிறந்த திரைக்கதை அமைப்புடைய பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும், சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது நாம் பல படிகள் பிந்தங்கியே இருக்கிறோம். ***

அதான் இவர் போயி 9-5, வாட் எபவ்ட் பாப், மிசஸ் டவுட் ஃபயரை எல்லாம் கொண்டு வந்து தமிழ் சினிமா தரத்தை முன்னேற்றினாரே?

இது ஒரு வகையில் செய்யும் முன்னேற்றமா இல்லை பின்னேற்றமா?

----------------------

என்னைப்பொறுத்தவரையில் இந்த தியரிட்டிகல் நாலட்ஜை எக்செக்யூட் பண்ணுவது கடினம்.

சும்மா வேஸ்ட் ஆஃப் டைம்!

ஏதோ கலைச்சேவை பண்ணுவதாக ஒரு ஷோ ஆஃப்.

இதற்கிடையில் எம் ஜி ஆருக்கு ஒரு ஜால்ரா வேற?

என்ன ஆச்சு இவருக்கு? தசாவதாரம் எடுத்ததில் இருந்து இவர் ரொம்பவே குழப்புறார்.

உண்மைத்தமிழன் said...

பல்வேறு மொழி பேசுபவர்கள் வந்திருக்கும் ஒரு இடத்தில் இணைப்பு மொழியில்தான் பேச முடியும்..

அவர் திரைக்கதைப் பயிற்சி வகுப்பு எடுத்தது தமிழகத்துக்காரர்களுக்காக மட்டுமல்ல.. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சேர்த்துத்தான்..

இதில் ஒன்றும் தவறில்லையே..

புருனோ Bruno said...

ஐயா பெரியவர்களே

நிகழ்ச்சி ஐ.ஐ.டியால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி

அங்கு கமல் கலந்து கொண்டார் அவ்வளவு தான்

இதற்கும் கமல் தனது வீட்டில், அலுவலகத்தில், அவராகவே நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சொந்த சீருந்தை ஓட்டுவது என்றால் எப்படி வேண்டுமென்றாலும் ஓட்டலாம்

அரசு பேரூந்தில் ஓட்டுனராக பணிபுரிந்தால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் தான் நிறுத்த வேண்டும்

அவ்வளவுதான்

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு.

ஆதவன் said...

ungaluku thamizh studio.com patri our sila vilakkangal kodutthullom. parkkavum.

http://thamizhstudio.blogspot.com/2009/07/blog-post.html

nanri,
arun m.