June 20, 2009

தமிழ்சினிமாவில் உடையலங்காரம்

திரைப்படங்களின் உடை அலங்காரம் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்து இருந்தாலும், தமிழ்நாட்டில் சமூகத்தின் உடை அலங்காரத்தை நிர்ணயிப்பதில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு இருந்துவருகிறது.

37ல் வெளிவந்த பாலயோகினியில் பேபி சரோஜாவின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. சரோஜாவின் பெயரில் உடைகள். அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வந்தன. நதியா புகழ்பெற்ற காலத்தில் நதியா சுடிதார்,கம்மல்,வளையல் என சக்கை போடு போட்டது. இப்போதும் தீபாவளிக்கு ஸ்ரேயா ஸ்கர்ட் சினேகா புடவை, திரிஷா மிடி என புது வரவுகள் வந்துகொண்டேயிருக்கின்றன.

எம்ஜியார் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அணிந்த பேகிஸ் மாடல் பெல்ஸ் வருகையால் வழக்கொழிந்தது. சிகப்பு ரோஜாக்கள், நான் போட்ட சவால் காலம் வரை கொடிகட்டி பறந்த பெல்ஸ் அதன் பின் டைட் பேண்டாக உருமாறியது. ராஜா சின்ன ரோஜா, ராஜாதி ராஜா காலத்தில் பேக்கிஸ் திரும்பவும் வந்தது. பேஷன் என்பது சகிக்க முடியாதது. அதனால்தான் அது ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாறிக் கொண்டேயிருக்கிறது என ஆஸ்கார் வைல்ட் சொன்னதை நிரூபித்தது.


புதிய பறவை படத்தில் சிவாஜி அணிந்த கை மடித்து விடப்பட்ட ஸீ துரு வெள்ளை சட்டையும், வெள்ளை பேகியும், அரை இன்ச் அகல கறுப்பு பெல்டும் பலரது கனவு உடைகளாயின. அதில் சிவாஜி பனியன் போடாமல் இருந்ததால், பனியன் போடாமல் இருப்பது அப்போது பேஷனாகியது என்றும் சொல்வார்கள்.

ராமராஜனின் பளிச் மஞ்சள்,பிங்க்,ஆரஞ்ச் நிற சட்டைகள் கிராமப்புறங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. 90ஆம் ஆண்டு வெளியான புதுவசந்தம் படத்தில் சித்தாரா தன் நண்பர்களுக்கு பரிசளிக்கும் மஞ்சள் நிற சட்டையும், கறுப்பு நிற பேண்டும் அந்த தீபாவளியைக் கலக்கின.
நான் வழக்கமாக தைக்கக் கொடுக்கும் டெய்லர் கடையில் திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சள் நிற சட்டைதான்.இதை வெட்டி வெட்டி மஞ்சள் காமாலையே வந்துரும் போலிருக்கு என அந்த டெய்லர் அலுத்துக் கொண்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

காதல் தேசத்தில் அப்பாஸ் அணிந்து வந்த லைட்கலர் ஜீன்ஸ் மற்றும் பிளைன் சட்டைகளும் பலரைக் கவர்ந்தது. கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் பிரசாந்த் அணிந்திருந்த செல்போன் வைக்கும் வசதியுள்ள பேண்ட் அப்போது பிரபலமாகாவிட்டாலும் பின் அதனை என்ஹான்ஸ் செய்து ரஜினி படையப்பாவில் அணிந்த நாலு பாக்கெட் பேண்ட் மிக பிரபலமானது. அணிந்து வருபவரும் ஒர காரணி என உணர்த்தியது.
தீனாவில் அஜீத்தும் மின்னலேவில் மாதவனும் அணிந்த சார்ட் ஷர்ட்களும் மிக பிரபலம் ஆகின. இவை எம்ஜியார் சபாஷ் மாப்பிள்ளை படத்தில் ஏற்கனவே அணிந்ததுதான். காக்க காக்கவில் சூர்யா அணிந்து வந்த சார்ட் குர்தாவும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷ் அணிந்து வந்த சட்டைக்குள் சட்டை மாடலும் பின்னர் பிரபலமானது.

தமிழில் இதுவரை வந்திருக்கும் படங்களை கதை இயங்கும் தளத்தை வைத்து சில பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1.புராண/இதிகாச படங்கள்

சிவன், விஷ்ணு போன்றோரின் திருவிளையாடல்களை சொல்லும் படங்களும்,
ராமாயணம்,மகாபாரதம் போன்ற புராணங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்களும் (கர்ணன்,அபிமன்யூ,சம்பூர்ண ராமாயணம்,மாயாபஜார் போல) இந்த பிரிவில் வரும். மேலும் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, பாதாள பைரவி போன்ற மாயாஜால கற்பனைகளையும் இந்தப் பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை நடந்த காலம் என்பது சர்ச்சைக்குள்ளாகும் விஷயம்.

கற்காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடையே உள்ள ஏதோ ஒரு காலத்தில்தான் இவை நடந்ததாக நாம் நம்பிக்கொள்கிறோம். படம் எடுப்பவர்கள் தங்கள் வசதிக்காக அதை உலோகங்களின் காலத்தில் நடந்ததாக சித்தரிக்கிறார்கள். எனவே வில்,அம்பு,வாள், ஈட்டி, கேடயம், கிரீடம் என உலோகங்களால் செய்யப்பட்ட அணிகலன்களை நடிகர்களுக்கு அணிவிக்கிறார்கள்.

பாத்திரங்கள் குறிப்பிட்ட உடையைத்தான் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இந்த வகைப்படங்களுக்கு அதிகம். சிவன் என்றால் புலித்தோல்தான் அணியவேண்டும். புளூ கலர் ஜீன்ஸ் அணிந்தால் திரை கிழிந்துவிடும். அரசனுக்கு கிரீடம்,அரசிக்கு ஒட்டியாணம், மந்திரிக்கு தலைப்பாகை, குருவுக்கு குடுமி என விதிக்கப்பட்டுள்ள பாதையில்தான் உடையலங்கார நிபுணர் பயணிக்க வேண்டும். எனவே கற்பனை
அதிகம் சிறகடிக்க தேவையில்லை. வண்ண சேர்க்கை விகிதங்களை சரியாகக் கையாண்டால் போதுமானது.

2. வரலாற்று படங்கள்

குறிப்பிட்ட காலம், இடம் ஆகியவற்றுடன் வரும் படங்களை இந்தப்பிரிவில் சேர்க்கலாம். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், ராஜ ராஜ சோழன் போன்ற படங்கள் மட்டுமில்லாது, சுதந்திரத்திற்க்கு சற்று முந்தைய காலத்தை பிரதிபலித்த வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன் ஆகியவற்றையும், ஹேராம்,தசாவதார 12 ஆம் நூற்றாண்டு பகுதி, சுப்பிரமணியபுரம் போன்ற பீரியட் படங்களையும் இப்பிரிவில் சேர்க்கலாம். நமக்கு சற்று முந்தைய எதுவும் வரலாறுதானே?

இதில் காலம் சரியாக கணக்கிடப்படுவதால் மிக்க கவனம் தேவை. சோழர் காலத்தில் மூக்கு கண்ணாடி கிடையாது. தசாவதார 12 ஆம் நூற்றாண்டு காட்சியில் ஒரு வீரர் கண்ணாடி அணிந்திருந்தாராம். கடைசி நேரத்தில் இயக்குநர் ரவிகுமார் மானிட்டரில் பார்த்து அவரது கண்ணாடியை கழட்டச் சொன்னாராம்.

மேலும் முந்தைய கால உடைகளை சித்தரிக்கும் போது மிகுந்த கவனம் தேவைப்படும். இப்போது துணிகளுக்கு கிடைக்கும் பளீர் வெள்ளை நிறம் அப்போது கிடையாது. ஓரளவு பழுப்பு கலந்த வெள்ளை நிறத்திலேயே உடைகள் இருக்கும். மருதநாயகத்தின் உடையலங்கார நிபுணர் கௌதமி போர் வீரர்களுக்கான உடையை தயாரிக்கும் போது ஒரு உத்தி செய்தார். கிலோமீட்டர் கணக்கில் வெள்ளை காடாத் துணியை வாங்கி அதை தேநீர் டிக்காசனில் ஊறவைத்து பழுப்பு நிறம் வரச் செய்தார்.

3. விஞ்ஞானக் கற்பனைகள்


தமிழில் மிகச் சில படங்களே இப்பிரிவில் வந்துள்ளன. எம்ஜியாரின் ஜெனோவா, தக்காளி சீனிவாசன் தயாரித்த நாளைய மனிதன், அதிசய மனிதன் ஆகியவை இப்பிரிவில் வரும். கமலின் விக்ரத்தைக் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உடையலங்கார நிபுணரின் திறமைக்கு பெரும் சவால் இருக்கும்.
எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என கற்பனையை தூண்டிவிடவேண்டும்.

4.திரில்லர்/பேய்ப் படங்கள்

உடைகள் குறிப்பிட்ட மூடை தூண்டுவதாக இருப்பது அவசியம். இதில் விட்டலாச்சாரியார் டைப் படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். விட்டலாச்சாரியாரின் குட்டிப் பிசாசு காஸ்ட்யூம் (ஜெகன் மோகினி உள்ளிட்ட பல படங்களில் உபயோகப்படுத்தியது) தான் ஜுஜுவாக மறு பிறவி எடுத்து ஐபிஎல் லைக் கலக்கியது.


5.கௌபாய் படங்கள்


இவற்றுக்கு பெரும்பாலும் தோலிலால் ஆன உடைகள் தான். தொப்பி,ஷூ எல்லாம் தோல்தான். பெண்களின்
உடையில் தான் கவனம் தேவை.

6. தற்கால சமூகப் படங்கள்

இவைதான் தமிழில் அதிகம் வருபவை. உடையலங்காரத்தில் அதிகம் சொதப்புவதும் இவ்வகைப் படங்களே. கிராமப் படமாயிருந்தாலும் சரி, நகரப் படமாயிருந்தாலும் சரி சில முன் முடிவுகளுடனே உடை அலங்காரம் செய்யப்படுகிறது. இப்போது நளினி ஸ்ரீராம், அனீஸ் ஜீவா,அனுவர்தன் போன்றோரின் வருகைக்குப் பின்னர் இதில் மாற்றங்கள் தென்படத் துவங்கியுள்ளன.

எனவே தொடரும் பகுதிகளில் சமூகப் படங்களில் உடையலங்காரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அந்த மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், பிரபல உடையலங்கார நிபுணர்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

46 comments:

டக்ளஸ்....... said...

யாருண்ணே அந்த ஆளு ஆஸ்கார் வைல்ட்..?

டக்ளஸ்....... said...

இப்ப, அனு வர்தன் அந்த பிறகு கூட, தமிழ்த் திரையுலக் உடையலங்காரம் மாறத்துவங்கியிருக்கு தல..!
பில்லா, ஏகன் காஸ்ட்யூம்ஸ் பார்த்தீங்களா..?

டக்ளஸ்....... said...

இந்த உடையலங்காரம் மாதிரியே, அந்தந்த காலகட்ட சினிமாவுக்கேற்ப நம்மளோட சிகையலங்காரம் மாறுமே,
அதப் பத்தி ஒரு பதிவு எழுதினா என்ன தலைவரே..?
தேவர்மகன், பொன்னுமணி,கலைஞன் காலத்துல ஃபங்க் விடுறது பேமஸ்...!
விருமாண்டி கிருதா..!

ராஜா | KVR said...

எல்லோரையும் சொல்லிட்டு நதியாவை விட்டுட்டிங்களே!!! நதியாவின் பெயரில் வெளிவராத பெண்களுக்கான ஐட்டங்களே இல்லைங்கிற அளவுக்கு ஒரு காலகட்டத்தில் இருந்ததே!

கரகாட்டக்காரன் வந்த சமயத்தில் கரகாட்டக்காரன் ஜாக்கெட்டும் கிராமங்களில் பிரபலம்.

முரளிகண்ணன் said...

டக்ளஸ், அவர் அயர்லாந்து நாட்டு எழுத்தாளர்.

அனுவர்தன்ன சேர்க்காமலா, டைப்பிங்ல மிஸ் ஆயிடுச்சு.

ஹேர்ஸ்டைல் அப்புறம் பார்க்கலாம்.

கேவிஆர் நதியா பற்றி எழுதியிருக்கனே. படிக்காம ஸ்கிப் பண்ணிட்டீங்களா?

ரொம்ப மொக்கையா எழுதிட்டனோ?

டக்ளஸ்....... said...

\\ராஜா | KVR said
நதியாவின் பெயரில் வெளிவராத பெண்களுக்கான ஐட்டங்களே இல்லைங்கிற அளவுக்கு ஒரு காலகட்டத்தில் இருந்ததே!\\

ராஜா அண்ணே, பதிவப் படிச்சீங்களா...?
:)

rambobala said...

mostly the physique of actor decides dresses in the movies especially of contemporary society.

sathyaraj- no t shirts
captain--- more black sleeveless in action scenes( to conceal fat)
karthick-cap on later stages
ramarajan-highly innovative for his age/character/location of the story.
i liked his fancy dresses when he got small belly.
arun pandiyan--with black baniyan
sarath kumar, captain, sathyaraj--looked good on village costumes.
surya-- formal when he came, tight shirts for kakka kakka, now with t shirts showing biceps?
dhanush--no tuck in loose shirts
vijay---fancy dresses with lean face on introduction, slightly fat in middle like "kannukkul nilavu"
again lean and youthful from pokkiri+sachin(due to physique)
kamal==dresses for character only, sometimes physique( dadavatharam scientist, hey ram trailer, panchathanthiram green t shirt with two lines not intersecting
rajini-i am too young to comment sorry

especially dresses of students changes first with reference to actors/movies.

ச்சின்னப் பையன் said...

//பேஷன் என்பது சகிக்க முடியாதது. //

ஆனா, பேஷன் டிவி எவ்ளோ தரம் பாத்தாலும் சகிக்காது!!!

அத்திரி said...

//ச்சின்னப் பையன் said...
//பேஷன் என்பது சகிக்க முடியாதது. //
ஆனா, பேஷன் டிவி எவ்ளோ தரம் பாத்தாலும் சகிக்காது!!!//


ஹிஹிஹி.......ரிப்பீட்டேய்

akbar said...

உங்கள் பதிவு கலக்கல் முரளி .

தலைவர் ரொமான்ஸ் லுக் சூப்பர்.

தமிழன்-கறுப்பி... said...
This comment has been removed by the author.
akbar said...

முரளி கண்ணனுக்கும், கோவி.கண்ணனுக்கும்

ஒரு ஒற்றுமை உண்டு அது என்ன?

Mahesh said...

ஒவ்வொரு துறையா அலசறது அம்சமா இருக்கு !!

தமிழன்-கறுப்பி... said...

அடுத்த பதிவுக்காக...

தமிழன்-கறுப்பி... said...

அடுத்த பதிவுக்காக...

starjan said...

ட்ரஸ் விசயத்துல நாம இங்கிலீஷ்காரனுக்கு நன்றி சொல்லணும் .


ஏன்னா உடை நாகரிகத்தை கற்றுக் கொடுத்ததே அவங்க தான்

சென்ஷி said...

// ச்சின்னப் பையன் said...

//பேஷன் என்பது சகிக்க முடியாதது. //

ஆனா, பேஷன் டிவி எவ்ளோ தரம் பாத்தாலும் சகிக்காது!!!//

சகிக்காதா இல்லை சலிக்காதா?! :)

starjan said...

\\\ akbar said...
முரளி கண்ணனுக்கும், கோவி.கண்ணனுக்கும்

ஒரு ஒற்றுமை உண்டு அது என்ன? ///.
.

முரளி கண்ணன் , கோவி. கண்ணன் ஒற்றுமையா !!

திடிரென குண்டைத் தூக்கி போடுறிங்க


அது என்ன !

ஆஹ் ! கண்ணன் பெயர் வருதே அதுவா

akbar said...

இல்லை ஸ்டார்ஜன் அந்த ஒற்றுமை எல்லோருக்கும் தெரியும்.

ஒரு க்ளு. இது பதிவுகள் சம்பந்தமா.

தங்கள் பதிலுக்கு நன்றி.

starjan said...

ஒன்னுமே புரியல .....

வெண்பூ said...

நல்ல அலசல் முரளி.. வித்தியாசமான தொகுப்பும் கூட..

//
எம்ஜியாரின் ஜெனோவா
//
இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. யாரும் இதுகுறித்து இந்தப்படம் பற்றி பேசியதாகவும் நினைவில்லை. மேலதிகல தகவல்கள் / சிடி கிடைக்குமா?

வெண்பூ said...

//
starjan said...
ட்ரஸ் விசயத்துல நாம இங்கிலீஷ்காரனுக்கு நன்றி சொல்லணும் .
ஏன்னா உடை நாகரிகத்தை கற்றுக் கொடுத்ததே அவங்க தான்
//

முற்றிலும் எதிர்க்கிறேன்.

நீங்க என்ன சொல்றீங்க, பேன்ட் சர்ட் போட்டவங்கதான் நாகரீக வாதிகளா? அப்படி பாத்தா நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் நாகரீகமே இல்லாம இருந்தவங்களா? இல்லை இப்ப வேட்டி கட்டுறவன் எல்லாம் நாகரீகம் தெரியாதவனா?

ஜப்பான் அணுகுண்டுகளுக்கு ஆணையிட்ட ஃபுல் எக்ஸிகியூட்டிவ் உடையில் இருந்த அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமெனை விட, ஒற்றை வேட்டி கட்டிக்கொண்டு திரிந்த காந்தியைத்தான் உலகமே கொண்டாடுது.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நம்ம போடுவது தான் உடை.., அதை பார்த்து ஆகணும் அது அவன் தலையெழுத்து

காதலிக்க நேரமில்லை== செலபா

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பெண்களின் உடை அலங்காரம்..,

நடமுறைக்கும் திரைக்கும் பெரிய இடைவெளியுடந்தானே இருக்கிறது?

akbar said...

ஹெல்லோ மைக் டெஸ்டிங்..

என்ன யாருக்கும் என் கேள்விக்கு பதில் தெரியலயா

அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறிங்களா..

(ஆவ்வ்வ்... அழுதுருவேன்)

ராஜ நடராஜன் said...

இப்ப உலக மயமாக்கலில் முதலில் உலக உடையலங்காரம் சினிமா மூலமா வந்து அப்புறம் சமூகத்துக்கு வருதுன்னு நினைக்கிறேன்.

சரவணகுமரன் said...

//இதை வெட்டி வெட்டி மஞ்சள் காமாலையே வந்துரும் போலிருக்கு என அந்த டெய்லர் அலுத்துக் கொண்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது.//

:-)

வழக்கம் போல் பதிவு, சூப்பர்

சரவணகுமரன் said...

உடை அலங்கார நிபுணர்களாக பணியாற்றும் நடிகர்களின் மனைவிகளை பற்றியும் சொல்லுங்கள்

T.V.Radhakrishnan said...

கலக்கல் முரளி

Toto - Cinema Paradiso. said...

ந‌ல்ல‌ ப‌திவு. உடை விஷ‌ய‌த்தில் எம்ஜியாரின் அக்க‌றை ரொம்ப‌ பிடிக்கும். இன்னொரு த‌க‌வ‌ல்.. நெஞ்ச‌த்தைக் கிள்ளாதே, ஜானி ப‌ட‌த்திற்கு உடை வ‌டிவ‌மைத்த‌வ‌ர் ஓவிய‌ர் ஜெய‌ராஜ் !

-Toto
Http://film4thwall.blogspot.com

jackiesekar said...

மிக மிக அற்புதமான பதிவு முரளி, எவ்வளவு விடையங்கள், அதே போல் என் பழைய ஞாபகங்களை கிளரி விட்டு விட்டீர்கள்...

வெங்கிராஜா said...

செம அலசல்.. நிபுணர்களைப் பற்றிய அலசலையும் குறிப்பிட்டிருக்கலாம். புகைப்படங்கள் நிறைய போட்டிருக்கலாம். இருவர், பாரதி, வஞ்சிக்கோட்டை வாலிபன், அக்னி நட்சத்திரம், பில்லா, சுப்ரமணியபுரம் முதலிய படங்கள் டக்குனு ஞாபகம் வருது...

அது என்னப்பா ஒற்றுமை அது? கோவி (அ)கண்ணனுக்கும்? முரளி (அ)கண்ணனுக்கும்?

akbar said...

வெங்கி ராஜா சார்...

கேள்வி கேட்டது நானு

நீங்க பதில் சொல்லாம கேள்வி கேட்டா எப்படி ?

ஏன்னா எனக்கு கேள்வி கேட்கத்தான் பிடிக்கும்.

(ப்ளீஸ் கொஞ்ச‌ம் பொறுங்க‌ சொல்றேன்)

முரளிகண்ணன் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

இணையத்தொடர்பில் சிக்கல் இருப்பதால் கேள்விகளுக்கு உடனே விளக்கம் கொடுக்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.

சரியானவுடன் மீண்டும் வருகிறேன்.

ajay said...

வணக்கம் திரு.முரளி கண்ணன்,

T.R.ரகுநாத் என்று ஒரு director இருந்ததாக கேள்வி படுகிறேன். ஆச்சர்யமுட்டும் வகையில் திரையுலகை பற்றிய உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். T.R.ரகுநாத் பற்றி தகவல்களை தந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

அஜய்

பைத்தியக்காரன் said...

சென்ஷி,

'ஜெனோவா' எம்.ஜி.ஆர். நடித்த படம்தான். பொதுவாக பழைய தமிழ்ப் படங்களை விசிடி அல்லது டிவிடியில் வாங்க வேண்டுமென்றால், அதற்கு மதுரை மாடர்ன் சினிமா, ராஜ் டெலிவிஷன், இப்போது மோசர் பிர் நல்ல சாய்ஸ். மேலே சொன்ன 'ஜெனோவா'வை மதுரை மாடர்ன் சினிமாவில் வாங்கலாம். ரைட்ஸ் அவர்களிடம்தான் இருக்கிறது. சென்னை லேண்ட் மார்க்கிலும் பழைய படங்கள் கிடைக்கின்றன.

சென்னைக்கு வரும்போது தகவல் சொல்லுங்கள். தருகிறேன்.

அப்புறம், நீங்கள் அய்யனாருடன் இணைந்து தமிழ் அல்லாத உலக சினிமாக்களை ரசிப்பவராயிற்றே... 'ஜெனோவா' பார்ப்பீர்களா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பைத்தியக்காரன் said...

முந்தைய பின்னூட்டத்தில் கீ போர்டு ஸ்லிப்பாகிவிட்டது :-) சென்ஷி மன்னிக்க :-( அது நண்பர் வெண்பூவுக்கான பின்னூட்டம்.

அன்பின் வெண்பூ, அடுத்தமுறை நாம் சந்திக்கும்போது 'ஜெனோவா' தருகிறேன்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தண்டோரா said...

முரளி..ராஜபார்வையில் கமல் அணிந்த ஒரு டீ ஷர்ட்..கீழே எலாஸ்டிக் வச்சு ,ரெண்டு சைடு பாக்கெட்டுடன் ..அது ரொம்ப நாள் ஃபேஷனாக இருந்தது.

Gokul said...

முரளிகுமார்,

costume என்றால் அது ஹிந்தி படம்தான், கில்லியா போடுவாங்க , என்ன ஒரே பிரச்சினை , கொடுக்கிற பணத்திற்கு அங்கே இருக்கிற costumers கொஞ்சம் அதிகமாகவே சிந்தனை பண்ணிடுவாங்க, படத்தில் வசனமே இல்லாத கதா பாத்திரத்திற்கு கூட சூப்பரா கோட் மாட்டி விட்டுடுவாங்க.

பருத்திவீரன் , சுப்ரமண்யபுரம் போன்ற படங்களின் costumes கொஞ்சம் கவனிக்க வைத்தது.

வெண்பூ said...

//
அன்பின் வெண்பூ, அடுத்தமுறை நாம் சந்திக்கும்போது 'ஜெனோவா' தருகிறேன்...


தோழமையுடன்
பைத்தியக்காரன்
//

நன்றி பைத்தியக்காரன்...

அணுக‌வும் said...

எம்.ஜி ஆர் நடித்த கலையரசி, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கÛ[ சேர்க்காமால் விyடு விட்டீர்களே

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

முரளி ,

உங்களை ஒரு தொடர்ப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் ...

வருக வருக ...


பள்ளிக்கூடம் போகலாமா ..... தொடர்ப்பதிவு

புருனோ Bruno said...

//முற்றிலும் எதிர்க்கிறேன்.

நீங்க என்ன சொல்றீங்க, பேன்ட் சர்ட் போட்டவங்கதான் நாகரீக வாதிகளா? அப்படி பாத்தா நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் நாகரீகமே இல்லாம இருந்தவங்களா? இல்லை இப்ப வேட்டி கட்டுறவன் எல்லாம் நாகரீகம் தெரியாதவனா?

ஜப்பான் அணுகுண்டுகளுக்கு ஆணையிட்ட ஃபுல் எக்ஸிகியூட்டிவ் உடையில் இருந்த அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமெனை விட, ஒற்றை வேட்டி கட்டிக்கொண்டு திரிந்த காந்தியைத்தான் உலகமே கொண்டாடுது.//

வழி மொழிகிறேன்

அதே நேரம்

இங்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி பெண்கள் ரவிக்கை அணிய அனுமதி ஆங்கிலேயர்களின் காலத்தில் தான் வந்தது என்பதையும் பதிகிறேன்

புருனோ Bruno said...

ஹி ஹி ஹி

இவ்வளவு சொல்லிபுட்டு ஒரு முக்கிய படத்தை பற்றி விட்டு விட்டீர்களே - ஒரு கதாநாயகனுக்கு எப்படி உடையலங்காரம் செய்யக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக 2002ல் வெளிவந்து திரையை விட்டு வேகமாக ஓடிய படம் :) :) (ஒரு சில இடங்களில் சிலர் திரைப்பட பெட்டியையும் தூக்கிக்கொண்டு ஓடியது தனிக்கதை)

புருனோ Bruno said...

நேரடியாக சம்மந்தமில்லாதது

உடையலங்கார நிபுணரான ஒரு பெண்ணை மையமாக வைத்து சுபா நாவல் ஒன்று உள்ளது.

அட்டகாசமான காதல் + செண்டிமெண்ட் கதை

கிடைத்தால் படித்து பாருங்கள் :)

கிரி said...

//ராமராஜனின் பளிச் மஞ்சள்,பிங்க்,ஆரஞ்ச் நிற சட்டைகள் கிராமப்புறங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின//

பார்ப்பவர்கள் பலரின் கண்ணையும் பதம் பார்த்தன ;-)

//இதை வெட்டி வெட்டி மஞ்சள் காமாலையே வந்துரும் போலிருக்கு என அந்த டெய்லர் அலுத்துக் கொண்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது//

ஹி ஹி ஹி