June 13, 2009

கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை - அடுத்தது என்ன?

நான் தென்மாவட்டத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் எனக்கு தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நண்பர்கள் அதிகம். 90களின் இறுதியில் கோவையில் சில ஆண்டுகள் வசித்த பொழுது பலரின் நட்பு கிடைத்தது. அதன்பின்னர் பணிபுரிந்த இடங்கள், படித்த இடங்களில் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் நட்பானார்கள்.

99 என நினைக்கிறேன். அப்பொழுது ஆடிட்டர் குப்பமுத்து என்பவரின் படம் தாங்கிய பல சுவரொட்டிகள் கோவையெங்கும் ஒட்டப்பட்டன. என் நண்பர்களிடம் அதைப் பற்றி விசாரித்த போது, அவர்கள் சொன்னது இது,

“ எங்க ஆளுங்க இப்படித்தான் மூணு வருஷத்துக்கு ஒருதடவை இப்படி ஏதாவது செய்வாங்க. ஆனா அப்புறம் புஸ்ஸுன்னு போயிடும். கோவை செழியன் காலத்தில இருந்து இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு.”

அப்படியே ஆனது. பின்னர் இந்த தேர்தலை ஒட்டி கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையினர் ஒரு மிகப்பெரிய மாநாடு நடத்தப் போவதாக செய்திகள் வந்த போதும் பலரை விசாரித்தேன். அவர்கள் சொன்னது,

”இந்த தடவ எங்க ஆளுங்க ரொம்ப துடிப்பா இருக்காங்க” என்பதே.

ஆனால் மாநாடு முடிந்ததும் அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள் என்றதும் குழப்பமே ஏற்பட்டது.

பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படதும் அவர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியதாக செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன. தேர்தலுக்கு ஒருவாரம் முன்னதாக கோவையிலும், ஈரோடு மாவட்ட கிராமம் ஒன்றிலும் நான்கு நாட்கள் தங்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது களத்தில் நான் அதிகம் கவனித்தது கொ மு பேரவையினர் எவ்வாறு வேலை செய்கிறார்கள்? என்பதையே.

உண்மையில் சொல்லப்போனால் உலகத்திலேயே அதிக பணக்காரர்களை தொண்டர்களாக கொண்ட கட்சி என்றால் அது கொ. மு. பே. தான். சாதாரண ஏரியா பொறுப்பாளர்களே கோடிக்கணக்கில்தான் சொத்து வைத்துள்ளார்கள். மாவட்ட அளவிலான நிர்வாகிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

மே 1 ஐ முன்னிட்டு கோவை வ உ சி பூங்காவில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள் கொ மு பே வினர். வந்த கூட்டம் ஜெயலலிதாவுக்கு கூட்டப்பட்ட கூட்டத்தை விட அதிகம். கூட்டம் முடிந்து கிளம்பிக் கொண்டிருக்கும் போது ஒருவர் குறைபட்டுக் கொண்டார்,

“ என்னப்பா ஏரியாவுக்கு 100 காருக்கு மேல வரக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க.லிஸ்டுல எங்க
காரையெல்லாம் விட்டுட்டீங்க. நானும் என் மருமகனும் அடுத்தவங்க கார்ல ஏறி வரவேண்டியதாப் போயிடுச்சு. அடுத்த தடவை எங்க காரை விட்டீங்கண்ணா நடக்குறதே வேற”.

அதற்கடுத்த நாள் ஈரோடு மாவட்ட கிராமம். நண்பரின் வீட்டில் காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, வேகமாக நண்பரின் பெரியம்மா வந்தார்.

அவர் நண்பரிடம் சொன்னது

“ ஏண்டா, நம்ம வீட்டில இவ்வளோ சின்னக் கொடியா கட்டியிருக்கீங்க, ஸ்டிக்கரும் ஒட்டலை.
என்னடா வேலை பார்க்குறீங்க?”

11 மணி அளவில் இளநீருக்காக அவர்களின் தோட்டத்தை நோக்கிய பயணம். வழியில் கிட்டத்தட்ட ஒரு கி மீ நீளத்திற்க்கு தோட்டத்துக்கான பாதுகாப்பு முள் வேலி. நான்கு மீட்டருக்கு ஒரு பட்டியக்கல். கல்லுக்கு ஒரு பேரவை கொடி.

நான் ஆச்சரியத்துடன் கேட்டேன், “யாருடா இவ்வளோ செலவு பண்ணுறது?”

நண்பர் சிரித்துக் கொண்டே, “எங்க சித்தப்பா தான்”.

சரி. அவர் என்ன பொறுப்புல இருக்காரு?

பதவியெல்லாம் இல்லை. உறுப்பினர் மட்டும் தான்.

அதோடு போகவில்லை ஆச்சரியங்கள்.

தொகுதி செலவுக்கு எங்க ஊர்ல இருந்து மட்டும் 10 லட்சம் டொனேஷன் கொடுத்திருக்கோம் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள். 40 ஓட்டு கூட இல்லாத தெருவுக்கு 50 பேர் போய் ஓட்டுக் கேட்கிறார்கள். அதில் ஓட்டுக் கேட்க வருபவர்களை உபசரிப்பதில் போட்டி வேறு.

நண்பரின் தாயார் வீரத்திலகமிடாத குறையாக அவனை ஒட்டு சேகரிக்க அனுப்பினார்கள். துணைக்கு நானும். ஆறேழு டம்ளர் காப்பி, ஐந்து வடை, நாலு கூல்ட்ரிங்ஸ் இரண்டு மணி நேரத்தில் எனக்கு மட்டும் கிடைதத்து.

சென்னை திரும்பியபின்னரும் நண்பர்களுடன் தொடர்ந்து இது குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.

ஒரு நண்பர் சொன்னார், அவர் தெருவில் ஓட்டுப் பதிவன்று 500 பிரியாணி பொட்டலங்களை வாங்கி ஒருவர் வினியோகித்தாராம். கொ மு பே சார்பாக. அவரும் உறுப்பினர்தான்.

பூத் ஸ்லிப் கொடுக்க உட்கார்ந்திருந்தவர்கள் தாகம் தணிக்க ரெண்டு கேஸ் அக்வா பினாவும்,
ஒரு கேஸ் பேண்டாவும் ஓட்டுப் போட வந்த ஒருவர் வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்றாராம்.
அவர் உறுப்பினர் கூட இல்லை. அனுதாபி மட்டும்.

ஒருவழியாக தேர்தல் முடிந்து சொல்லக் கூடிய அளவில் ஓட்டும் கிடைத்தது. அவர்களின் வாக்கு வங்கியை பலரும் உணார்ந்து கொண்டார்கள்.

சரி. அடுத்தது என்ன?

கொ மு பேவின் இலக்கு என்ன? முதல்வர் பதவியா?

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு. அண்டை மாநிலங்களில் எல்லாம் மெஜாரிட்டியாக உள்ள ஜாதியினரே முதல்வர் போட்டியில் இருப்பார்கள். இங்கே மைனாரிட்டிகளுக்கே வாய்ப்பு. இதில் தமிழர்களின் உளவியல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பெரும்பான்மையினர் என்று பார்த்தால் வடக்கே வன்னியர், மேற்கே கொங்கு வேளாளர்கள்,தெற்கே முக்குலத்தோர். தாழ்த்தப்பட்டவர்கள் பல கூறுகளாக பிரிந்து தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இந்த நான்கு பெரும்பான்மையில் இருந்து தமிழகத்திற்க்கு இன்றுவரை முதல்வர்கள் வரவேயில்லை. (ஓ பன்னீர் செல்வம் - தற்காலிக ஏற்பாடு).

தமிழகத்தின் முதல்வராக வரவேண்டுமெனில் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை அறிமுகமான முகம் வேண்டும். கட்சித் தலைவரின் வாரிசாக இருப்பது ஒரு சௌகரியம். தமிழகம் முழுவதும் எளிதில் அறிமுகம் கிட்டும். அப்ப்டி இல்லாவிட்டால், ஒன்று ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியில் பிரகாசித்திருக்க வேண்டும் அல்லது சினிமா மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகமாகி இருக்க வேணடும்.

திமுக,அதிமுக, தேதிமுக ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் இந்த பிரிவினை சாராதவர்களே.

கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களாக மேற்குறிப்பிட்ட பிரிவினர் இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு அவர்களின் தொகுதிக்குள்ளேயே முடிந்து விடுகிறது.

சினிமாவில் பலர் இருந்தாலும் அவர்கள் அரசியல் ஆர்வம் இதுவரை காட்டவில்லை.

எனவே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்களில் இருந்து முதல்வர் வருவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஜாதிக்கட்சி என்ற வட்டத்தில் அடைபடும்பொது, மற்ற ஜாதியினர் இயல்பாகவே வாக்களிக்கத் தயங்குவார்கள்.

இம்மாதிரி கட்சிகள் வளர்ந்து சிறிது அதிகாரம் கிடைத்தாலும், பூசல்கள் தொடங்கி விடுகின்றன.

பா ம க வில் கூட கட்சி வளர்ந்தவுடன் பு தா அருள்மொழி, பு தா இளங்கோவன், தீரன் போன்ற பலர் வெளியேறியது கண்கூடு.

தெற்கில் கூட பார்வர்ட் பிளாக் (சந்தானம் பிரிவு, வல்லரசு பிரிவு), மூவேந்தர் முன்னேற்றக் கழகம், வாண்டையார் என பல குழுக்களாகவே இயங்கி வருகிறார்கள்.

எனவே கொ மு பே வினரே நிதர்சனத்தை உணர்ந்திருப்பார்கள். 2011 சட்டமன்றத்தேர்தலில் அவர்கள் வாக்கு வங்கியுள்ள தொகுதிகளில் (சுமார் 40-50 இருக்கும்) தனியாக நிற்பதா? இல்லை
பா ம க வழியில் செல்வதா என சிந்திக்க தொடங்கியிருப்பார்கள். தனியாக நின்றால் 5 சீட் வரை கிடைக்கக் கூடும். கூட்டணி என்றால் 10-15 நிச்சயம். பார்ப்போம்.

49 comments:

Raju said...

அப்போ, 2011 ல கொ.மு.பே தமிழ்நாட்டின் ஒரு தவிர்க்கமுடியாத கட்சியா இருக்கும்னு சொல்றீங்க.
2011 ல ஆட்சின்னு கேப்டன் வேற முழங்கிக்கிட்டு இருக்காபல.ஒரு வேளை அவர் கூட இவங்க கூட்டணி வச்சா, தெற்கே கொஞ்சம் செல்வாக்குள்ள கேப்டனுக்கு வடக்கேயும் செல்வாக்கு வரலாம். ம்ம்...பார்ப்போம் 2011ல கொ.மு.பே வோட, பேரம்
எந்த கட்சிகூட படியுதுன்னு. ஆயிரம்தான் இருந்தாலும் அண்ணே நீங்க ஒரு தீர்க்கதரிசிண்ணே.....!

\\ஆறேழு டம்ளர் காப்பி, ஐந்து வடை, நாலு கூல்ட்ரிங்ஸ் இரண்டு மணி நேரத்தில் எனக்கு மட்டும் கிடைதத்து.
\\
வட போச்சே....!

anujanya said...

முரளி,

என்ன இது; சரி சினிமா துறை உங்களுக்கு ஒருமனதாகத் தரப்பட்டு இருக்கிறது. சரி. நம்ம சினிமாக்காரர்கள் போலவே நீங்களும் அரசியலில் ?

என்னைப் போன்ற கத்துக் குட்டிகளுக்கு நீங்க சொல்றது எல்லாமே சரி போலத் தான் இருக்கு. பாப்போம் - ஜாம்பவான்கள் என்ன சொல்றாங்கன்னு.

எப்படி இருந்தாலும், அரசியல் பிரவேசத்திற்கு (!) வாழ்த்துகள்.

அனுஜன்யா

ஸ்ரீ.... said...

விரைவில் உங்களை வேட்பாளராக எதிபார்க்கலாமா? Tamilish மட்டுமல்ல. நேரிலும் வாக்களிப்போம்.

ஸ்ரீ....

சொல்லரசன் said...

மாதிரி தேர்தல் நடத்தபோகிறார்கள் அதை பொருத்துதான் சட்டமன்ற தேர்தலில்
கொ.மு.க வின் செயல்பாடு இருக்கும்.
இரு பெரும்கட்சிகளிலும் கொங்குமண்டல்த்தை சேர்தவர்கள் புறக்கணிக்கபடுவதே கொ.வே எழுச்சிக்கு காரணம்

லக்கிலுக் said...

//திமுக,அதிமுக, தேதிமுக ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் இந்த பிரிவினை சாராதவர்களே. //

இந்தப் பிரிவினை சார்ந்தவர்களே என்று வரவேண்டும் என நினைக்கிறேன் முரளி.



கொ.மு.க. இன்னொரு பா.ம.க.வாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உங்கள் பதிவை வாசிக்கும்போது தெரிகிறது.

போட்டியிட்ட பாராளுமன்றத் தொகுதிகள் எதிலும் டெபாசிட் வாங்கவில்லை என்றாலும் தோன்றிய மூன்று மாத காலத்திற்குள்ளாகவே பல தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளை கைப்பற்றிய கட்சி என்பதால் மிக சுலபத்தில் புறந்தள்ளிவிட முடியாது.

ஆனால், புதிய நீதிக்கட்சியின் வரலாற்றையும் நாம் திரும்பிப் பார்க்கவேண்டும். அவர்கள் கட்சி ஆரம்பித்த ஜோரில் சென்னையில் கூட்டிய கூட்டம் திமுக, அதிமுகவை மிஞ்சியிருந்தது. அதைப் பார்த்துதான் கலைஞர் 2001ல் கூட்டணி வைத்து ஏமாந்தார்.

நீங்கள் குறிப்பிட்ட தொடர்தீவிரத்தோடேயே அவர்களால் தேர்தல் நடக்காத காலக்கட்டங்களிலும் செயல்பட முடியுமானால் வருங்காலத்தில் பதினைந்து எம்.எல்.ஏ, மூன்று எம்.பி.க்கள், ஒரு கேபினட், ஒரு இணையமைச்சர் பதவி என்று செல்வாக்கோடு திகழமுடியும். ஆயினும் சட்ட, பாராளுமன்றங்களிலும் நுழைந்தபின்னர் இப்போதைய கள்ளுக்கடை கொள்கை மாதிரியான கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள் என்பதே நமக்கு கடந்த காலம் கற்பித்திருக்கும் பாடம்!

முரளிகண்ணன் said...

வாங்க டக்ளஸ்.

\\தெற்கே கொஞ்சம் செல்வாக்குள்ள கேப்டனுக்கு வடக்கேயும் செல்வாக்கு வரலாம்\\

கொ மு பே இருப்பது மேற்கே.

நன்றி அனுஜன்யா. காசா பணமா? முயற்சிதானே.

வாங்க ஸ்ரீ. எனக்கு தமிழ்மணம்,தமிழிஷ் ஓட்டு போதும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லரசன்.

முரளிகண்ணன் said...

வாங்க லக்கிலுக்.

\\//திமுக,அதிமுக, தேதிமுக ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் இந்த பிரிவினை சாராதவர்களே. //\\

இவர்கள் இந்த நான்கு பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று கருத்தில் சொல்லவந்தேன்.


\\ஆனால், புதிய நீதிக்கட்சியின் வரலாற்றையும் நாம் திரும்பிப் பார்க்கவேண்டும். அவர்கள் கட்சி ஆரம்பித்த ஜோரில் சென்னையில் கூட்டிய கூட்டம் திமுக, அதிமுகவை மிஞ்சியிருந்தது. அதைப் பார்த்துதான் கலைஞர் 2001ல் கூட்டணி வைத்து ஏமாந்தார்.
\\

புதிய நீதிக்கட்சி யில் இரண்டு சமுதாயங்கள் (முதலியார்,வேளாளர்(பிள்ளை)) இருந்தனர். இருந்தும் வட மாவட்டங்களில் அவர்கள் மெஜாரிட்டி இல்லை. ஒரு தோல்விக்குப் பின் சுத்தானந்தன், சரவணப் பெருமாள் ஆகியோர் விலகியதும் பின்னடைவு.

இங்கே பெரும்பான்மை+ பணம். எனவே பாமக போல தாக்குப் பிடிக்க வாய்ப்பு அதிகம்.



\\நீங்கள் குறிப்பிட்ட தொடர்தீவிரத்தோடேயே அவர்களால் தேர்தல் நடக்காத காலக்கட்டங்களிலும் செயல்பட முடியுமானால் வருங்காலத்தில் பதினைந்து எம்.எல்.ஏ, மூன்று எம்.பி.க்கள், ஒரு கேபினட், ஒரு இணையமைச்சர் பதவி என்று செல்வாக்கோடு திகழமுடியும். ஆயினும் சட்ட, பாராளுமன்றங்களிலும் நுழைந்தபின்னர் இப்போதைய கள்ளுக்கடை கொள்கை மாதிரியான கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள் என்பதே நமக்கு கடந்த காலம் கற்பித்திருக்கும் பாடம்\\

மிகச் சரியான கருத்து லக்கி.

பாசகி said...

நல்ல பதிவு-ஜி!!!

//உண்மையில் சொல்லப்போனால் உலகத்திலேயே அதிக பணக்காரர்களை தொண்டர்களாக கொண்ட கட்சி என்றால் அது கொ. மு. பே. தான்.//

கொஞ்சம் உண்மைதான். ஆனா எல்லாமே உழைச்சு வந்த காசு ;)

இவங்க ஒரு கட்சிதான் உள்ளூர் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஓட்டு கேட்டாங்க. கண்டிப்பா இந்த மாதிரி ஒரு கட்சி எங்க ஊருக்கு தேவை. தொழில்துறை-ல எவ்வளவோ முன்னோடியா இருந்தும், அன்னிய செலவாணில முக்கிய பங்கு வகித்தும். எந்த அரசும் உருப்படியா எதுவும் செய்யல.

என்னை பொறுத்தவரைக்கும் சாதி கட்சிக்கு என்னோட ஓட்டு கிடையாது. நீங்க ஒரு விசயம் தவறவிட்டுடீங்க-ஜி. கட்சி பேர் கொங்குநாடு முன்னேற்ற பேரவை. சங்கமா இருந்தப்பதான் கொங்குவேளாளர் இருந்துச்சு.

கட்சிபேர்ல சாதிய சேர்க்கல, கட்சி கொள்கைகள்லயும் சாதி இல்லைனா கண்டிப்பா அடுத்தடுத்த தேர்தல்ல மாற்று சக்தியா வரும்.

லக்கிலுக் said...

முரளி!

மாலை கிழக்கில் நடைபெறும் ரவிசங்கரின் விக்கிபீடியா கூட்டத்துக்கு வருகிறீர்களா?

விக்கிபீடியா என்றால் ’விக்கிற பீடியா?’ என்று நர்சிம் சேட்டிங்கில் கேட்கிறார் :-(

முரளிகண்ணன் said...

வாங்க பாசகி,

\\கொஞ்சம் உண்மைதான். ஆனா எல்லாமே உழைச்சு வந்த காசு ;)
\\

உண்மைதான்.


\\நீங்க ஒரு விசயம் தவறவிட்டுடீங்க-ஜி. கட்சி பேர் கொங்குநாடு முன்னேற்ற பேரவை. சங்கமா இருந்தப்பதான் கொங்குவேளாளர் இருந்துச்சு\\

தவறாக அடித்துவிட்டேன். மாற்றி விடுகிறேன். மிக்க நன்றி.


லக்கி,

மாலை அங்கே வருகிறேன்.

செந்திலான் said...

கொங்கு வேளாளர் முன்னேற்றப் பேரவை - அடுத்தது என்ன?

கொங்கு வெள்ளாளர் முன்னேற்றப் பேரவை அல்ல அது கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை
வளர்ச்சி திட்டங்களில் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப் படுவது தொடர்கிறது.சென்னை மய்யவாதத்தால் வரும் விளைவு இது.மற்ற சாதியினர் வாக்களிக்கத் தயங்குவார்கள் என்பது ஓரளவு மட்டுமே உண்மை.எனது நண்பர் ஒரு செட்டியார் அவரும் வாக்களித்தார்.
எனது பக்கத்து கிராமத்தை சேர்ந்த மலையாள ஹோமயோபதி மருத்துவர் அவரும் வாக்களித்தார்.கொங்கு நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்குமான இயக்கமாக வளரும்போது ஓரளவு வெற்றியை எதிர்பார்க்கலாம்.

Raju said...

அப்ப ரைட்டு, மேற்குனு மாத்திக்கோங்க..!
நான் புவியியல்ல வீக்கு..
ஆமா, இந்த வடக்கு தெற்கு எல்லாம் புவியியல்தான வரும்...?

நாடோடி இலக்கியன் said...

சேலம்,ஈரோடு,கருர் மற்றும் கோவையின் ரிசல்ட் வேறுமாதிரி அமைந்ததற்கு காரணம் கொங்கு பேரவைதான்.சட்டமன்ற தேர்தலில் அவர்கள் தனித்து நின்றால் கண்டிப்பாக ஐந்து இடங்களுக்கு மேலே வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம்.இந்த எலக்சனில் அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அந்த அமைப்பினருக்கு உற்சாகத்தினையெ அளித்திருக்கிறது.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.

டக்ளஸ்ஸண்ணே முடியல.

வாங்க நாடோடி இலக்கியன். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

வெண்பூ said...

சரியான அனாலஸிஸ் முரளி. அவங்க பலமே பணமும் ஒத்துமையும்தான். மத்த சாதிக் கட்சிகளை மாதிரி அவங்களை உடைக்கிறது கஷ்டம்னுதான் நெனக்கிறேன்..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆஹா.....,

சரவணகுமரன் said...

ஆமாங்க முரளிகண்ணன், நானும் கூட பொள்ளாச்சி போனப்ப பார்த்தேன். எங்க பார்த்தாலும் அவுங்க கட்சி கொடிதான்.

கிரி said...

//உண்மையில் சொல்லப்போனால் உலகத்திலேயே அதிக பணக்காரர்களை தொண்டர்களாக கொண்ட கட்சி என்றால் அது கொ. மு. பே. தான்//

:-))))))

இவர்கள் கூட்டணி வைத்தால் குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவார்கள்..

இந்த முறை எங்கள் பகுதியில் தேர்தல் முடிவுகள் மாறியதற்கு இவர்களும் ஒரு முக்கிய காரணம்

ச.முத்துவேல் said...

நல்ல அலசல். அவசியமான பதிவு. நீங்கள் சொல்லியிருக்கும் 4 பெரும்பான்மை சமுதாயங்களிலேயே மிகவும் முன்னேறியவர்கள் கொ.வே.கவுண்டர்கள். இவர்களின் கட்சிக்கு ஒரு சிறந்த தலைமை கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் மிகப் பெரிய சக்தியாக திரள்வது நிச்சயம்.மற்றபடி, எல்லாமே அவர்களிடம் உள்ளது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

முரளி..இந்த பதிவிற்கு நிறைய ஹோம் ஒர்க் செய்திருப்பது தெரிகிறது..நல்ல ..யோசிக்க வைக்கும் பதிவு.

Dr.Sintok said...

ஒரு சில சந்தேகங்கள்...??

அன்னா& கலைஞர் என்ன சாதி?

காமராச் என்ன மைனரிட்டியா???

சதுக்க பூதம் said...

//தமிழகத்தில் பெரும்பான்மையினர் என்று பார்த்தால் வடக்கே வன்னியர், மேற்கே கொங்கு வேளாளர்கள்,தெற்கே முக்குலத்தோர். தாழ்த்தப்பட்டவர்கள் பல கூறுகளாக பிரிந்து தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இந்த நான்கு பெரும்பான்மையில் இருந்து தமிழகத்திற்க்கு இன்றுவரை முதல்வர்கள் வரவேயில்லை. (ஓ பன்னீர் செல்வம் - தற்காலிக ஏற்பாடு).
//
இதில் ஒரு விதி விலக்கு. நாடார் சமூகமும் பெரும்பான்மை சமூகம் என்றே கூறலாம். காமராஜர் முதல்வராக வந்துள்ளார். முக்குலத்தோர் என்பது மூன்று வேறுபட்ட ஜாதி. அவர்களில் ஒரு பிரிவனர் மிகவும் பிற்படுத்த பட்டோரிலும், மற்றவர் பிற்படுத்த பட்டோரிலும் உள்ளனர்.

அந்திராவை பொருத்தவரை பிற ஜாதியினர் பெரும்பான்மை என்றாலும் பணம் மற்றும் ஆதிக்க பலம் உள்ளதனால் ரெட்டி மற்றும் நாயுடுக்கள் முதல்வராகிறார்கள். மேலும் அவர்கள் பெரும்பான்மை சமூகம் இல்லை என்று கேள்வி பட்டேன்

http://www.andhrarajakeeyam.com/2009/04/caste-to-play-key-role-in-andhra-pradesh/

Though Kammas and Reddys are about six and 10 per cent respectively of the state’s population, they are economically and politically powerful. A majority of the state’s 14 chief ministers were from these castes, and a Kapu has never made it to the top post.

தமிழகத்தை பொருத்தவரை முதல்வராக பெரும்பான்மை சாதியை சேர்ந்தவர் வர முடியவில்லையே தவிர, ஒவ்வொரு தொகுதியிலும் MLA மற்றும் MP ஆக வருவது அப்பகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரே.இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது. மற்ற மாநிலங்களில் ஆதிக்க ஜாதியை சார்ந்த சிறுபான்மையினரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் அல்லது ஒரு ஜாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.இத்ன் விளைவாக தான் மக்கள் பெரும்பான்மை ஜாதியினரை முதல்வராக ஆக வேண்டும் என்று நினைக்கவில்லையே என்று தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தின் வெற்றி, தேர்தல்களில் அனைத்து ஜாதியினருக்கும் சரியான வய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக கூட கருதலாம்.

அவர்களின் தோல்வியோ, பின் தங்கிய அனைத்து பெரும்பான்மையான ஜாதிகளிலிருந்தும், அவர்களை உண்மையிலேயே represent செய்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தலைவர்களை உறுவாக்க முடியாதது தான் என்றோ தோன்றுகிறது.

எம்.எம்.அப்துல்லா said...

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் கொங்கு பேரவை ஒரு பெரிய சக்தியாக வளர முடியாது. காரணம்

1)அங்கு தனித் தன்மை வாய்ந்த தலைவர்கள் என எவரும் கிடையாது.

2) அனைவரும் பணக்காரர்கள் எனவே ஒருவர் மற்றொருவரை தற்காலிகமாகவே ஏற்றுக்கொள்வரே தவிர பணக்கார ஈகோ தனத்தால் நீடித்து எவரும் எவரையும் ஏற்க மாட்டார்கள்.

3) சாதிய அடக்குமுறையில் அவர்கள் மனநிலை மிகவும் கடுமையானது. எனவே பிறரை அரவனைப்பதும், ஒருங்கினைப்பதும் கொங்கு பேரவையால் மிகவும் கடினம்.

எம்.எம்.அப்துல்லா said...

//அன்னா& கலைஞர் என்ன சாதி?

//

அண்ணா முதலியார்.அது மைனாரிடி சமூகம்

கலைஞர் இசை வேளாளர்.அது மிகவும் மைனாரிட்டி சமூகம்.

காமராஜர் நாடார். இன்று நாடார்கள் பொருளாதாரத்தில் வலுத்ததால் பெரிய சாதியினர் போலக் கருதப்படுகின்றனர். ஆனால் காமராஜர் காலத்தில் அவர்கள் தாழ்த்தப்பட சமூகம். கோவில் நுழைவு மறுப்பு, பெண்கள் மேலாடை அனியும் உரிமை போன்றவற்றைப் போராடிப் போராடிப் பெற்ற சமூகம் நாடார் சமூகம். தந்தை பெரியார் வைக்கம் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே நுழையும் உரிமைக்காகப் போராடினார் என்று வரலாற்றில் படித்து இருப்போமே! அது ஈழவர் எனப்படும் நாடார் சமூகத்தின் கோவில் நுழைவிற்கானப் போராட்டம்தான்.

முதல் சி.எம் குமாரசாமி ராஜா (ராஜீக்கள் சமூகம்)

ராஜாஜி (அய்யங்கார்)

காமராஜர் (நாடார்)

பக்தவச்சலம் (முதலியார்)

அண்ணா (முதலியார்)

கலைஞர் (இசை வேளாளர்)

எம்.ஜி.யார் (தமிழரே அல்ல)

ஜானகி (தமிழரே அல்ல)

ஜெயலலிதா (தமிழரே அல்ல)

முரளி அண்ணன் சொன்னது போல் ஓ.பி. மட்டுமே மெஜாரிட்டி சமூகமான முக்குலத்தோரில் இருந்து முதல்வரானவர். அதுவும் கூட தற்காலிகம்தான்.

எம்.எம்.அப்துல்லா said...

அப்பா அனானி சாமிகளா, எவ்வளவோ முயற்சி பண்ணுறேன்.அப்படியும் எனக்கு வாய் சும்மா இருக்க மாட்டேங்குது. சென்சிட்டிவான விஷயங்களில் என் கருத்தை பட்டுனு சொல்லிவிடுகின்றேன். என் கருத்தில் உடன்பாடில்லையெனில் தயவு செய்து என்னை மட்டும் திட்டவும்...என்னைச் சார்ந்தவர்களை பிளிஸ் வேணாம்

:)

தமிழன் said...

சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?
சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை
”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”


http://maanamumarivum.blogspot.com/

Starjan (ஸ்டார்ஜன்) said...

முரளி

சில மாதங்களுக்கு முன்பு ,
நான் உங்களை , விஜய் டிவியில் ஒளிபரப்பான கோவை இசைமழை நிகழ்ச்சியில் பார்த்தேனே !.

உங்க சொந்த ஊர் எது ? .

செந்திலான் said...

எம்.எம்.அப்துல்லா said...

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் கொங்கு பேரவை ஒரு பெரிய சக்தியாக வளர முடியாது. காரணம்

// 1)அங்கு தனித் தன்மை வாய்ந்த தலைவர்கள் என எவரும் கிடையாது. //

எந்த ஒரு அமைப்புக்கும் தலைமை முதன்மையானதுதான் அனால் அதைவிட அதன் கொள்கைகளும்,அரசியல் அறமும் முதன்மையானது.தமிழ் சமுகத்தின் முட்டாள்தனமான தனி மனித வழிபாட்டு உளவியலால் உந்தப்பட்டதுதான் இந்த கருத்து.


// 2) அனைவரும் பணக்காரர்கள் எனவே ஒருவர் மற்றொருவரை தற்காலிகமாகவே ஏற்றுக்கொள்வரே தவிர பணக்கார ஈகோ தனத்தால் நீடித்து எவரும் எவரையும் ஏற்க மாட்டார்கள். //
90% உண்மை
//
3) சாதிய அடக்குமுறையில் அவர்கள் மனநிலை மிகவும் கடுமையானது. எனவே பிறரை அரவனைப்பதும், ஒருங்கினைப்பதும் கொங்கு பேரவையால் மிகவும் கடினம்.
//

தமிழகத்தின் வேறு எந்த பகுதியையும் விட இங்கு சாதிய மோதல்களும் சாதி கொடுமைகளும் குறைவே இதை புதுக்கோட்டையில் பிறந்து சென்னையில் வாழும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.இதை இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் சிறுபான்மையர்களின் நிலைமையோடு ஒப்பிட்டு ஆராய்ந்தும் முடிவுக்கு வரலாம்.

Arun Kumar said...

@
எம்.ஜி.யார் (தமிழரே அல்ல)

ஜானகி (தமிழரே அல்ல)

ஜெயலலிதா (தமிழரே அல்ல)@@

அப்துல்லா சார்
நீங்கதான் எல்லாருக்கும் தமிழர் சர்டிபிகேட் கொடுக்கும் அதாரிட்டியா?

ARIVUMANI, LISBON said...

//1)அங்கு தனித் தன்மை வாய்ந்த தலைவர்கள் என எவரும் கிடையாது.// 100% TRUE

2) //அனைவரும் பணக்காரர்கள் எனவே ஒருவர் மற்றொருவரை தற்காலிகமாகவே ஏற்றுக்கொள்வரே தவிர பணக்கார ஈகோ தனத்தால் நீடித்து எவரும் எவரையும் ஏற்க மாட்டார்கள்.// 100% TRUE

//
3) சாதிய அடக்குமுறையில் அவர்கள் மனநிலை மிகவும் கடுமையானது. எனவே பிறரை அரவனைப்பதும், ஒருங்கினைப்பதும் கொங்கு பேரவையால் மிகவும் கடினம்.//
100% TRUE




எம்.எம்.அப்துல்லா

Cable சங்கர் said...

அட சினிமாதான் கலக்கிறீங்கன்னா. அரசியல் பதிவிலயுமா..? என்ன சொல்றது.. ம்ஹும்.. நல்லாருக்கு.

ச.முத்துவேல் said...

அப்துல்லா முதல்வர்களின் ஜாதிப்பட்டியலை எழுதியுள்ளதால் நானும் இதைக் குறிப்பிடுகிறேன். சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் சுப்பராயன் முதல்வராக இருந்திருக்கிறார். இவர் கொ.வெ.கவுண்டர்.

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா முதல்வர்களின் ஜாதிப்பட்டியலை எழுதியுள்ளதால் //

பதிவர் டாக்டர்.சின்டோக் கேட்டதால் குடுத்தேண்ணே. மற்றபடி எனக்கு ஜாதியில் நம்பிக்கையும் இல்லை...உடன்பாடும் இல்லை.

:)

எம்.எம்.அப்துல்லா said...

//எந்த ஒரு அமைப்புக்கும் தலைமை முதன்மையானதுதான் அனால் அதைவிட அதன் கொள்கைகளும்,அரசியல் அறமும் முதன்மையானது.

//

அன்பின் செந்தில் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.ஆனால் அதே நேரத்தில் எந்தக் கருத்தும் ஒரு தனிமனிதனின் ஆளுமையினால்தான் அனைவரையும் சென்றடைகின்ரது என்பதும் வராலாற்று உண்மை. இதில் தமிழர் மற்றவர் என்ற பாகுபாடு உலக அளவில் இல்லை. பாசிசத்தை ஒரு இயக்கமாக மாற்றியதும் ஹிட்லர் என்ற தனிமனிதந்தான் எனப்தையும் மறக்காதீர்கள்.



//தமிழகத்தின் வேறு எந்த பகுதியையும் விட இங்கு சாதிய மோதல்களும் சாதி கொடுமைகளும் குறைவே இதை புதுக்கோட்டையில் பிறந்து சென்னையில் வாழும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

//

செந்தில் அண்ணே இதை நான் போற போக்கில் சொல்லவில்லை. ஆதாரத்தோடுதான் சொல்லுகின்றேன். போலிஸ் ரிக்கார்ட்படி கலவரம் நடக்கும் தென் மாவட்டத்தைவிட மேற்கு மாவட்டத்தில்தான் பி.சி.ஆர். வழக்குகள் அதிகம். காரணம் என்ன???

நான் புதுக்கோட்டையில் பிறந்து சென்னையில் வாழ்பவன்தான். ஆனால் தமிழகம் முழுவதும் உற்று நோக்குபவன்.

//இதை இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் சிறுபான்மையர்களின் நிலைமையோடு ஒப்பிட்டு ஆராய்ந்தும் முடிவுக்கு வரலாம்.
//

எந்த நாய் அப்படி செய்தாலும் தப்புதான்.இதில் இஸ்லாமியன் என்ன மற்றவன் என்ன???

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா சார்
நீங்கதான் எல்லாருக்கும் தமிழர் சர்டிபிகேட் கொடுக்கும் அதாரிட்டியா?

//

அன்பின் அருண் அண்ணே

தமிழக முதல் அமைச்சர்களில் யார் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற விவாதம் நடக்கும்போது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முதல்வர்களை மட்டும்தானே ஜாதிய அடிப்படையில் சிறுபான்மை,பெரும்பான்மை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்???

ஒருவரை யார் என்று நிர்னயிப்பது முதலில் அவர் மொழிதான். எம்.ஜி.யார் தாய்மொழி மலையாளம். ஜானகி தாய் மொழி மலையாலம். ஜெயலலிதா தாய்மொழி கன்னடம். இதை அவர்களே பலமுறை சொல்லியுள்ளனர். இதில் நான் எங்கே அத்தாரிட்டியாக வந்தேன்??? தயவுசெய்து என்மேல் தேவையற்ற,காரணமற்ற,அர்த்தமற்ற காழ்புணர்சி,வேண்டாமே...

Gokul said...

இங்கே முக்கியமாக பார்க்கவேண்டியது , கொங்கு மாவட்டங்களில் வசிக்கும் கொங்கு வேளாளர் அல்லாத மக்களுக்கு , இந்த கட்சியில் எவ்வளவு தூரம் வளர முடியும் என்பதை, அதன் பொருட்டே, இது பிராந்திய கட்சியா இல்லை சாதிகட்சியா என்று தெரியவரும். அதை காலம்தான் சொல்ல வேண்டும், மற்றபடி, கொங்கு நாடு இவ்வளவு தூரம் வளர்ந்ததிற்கு அவர்களின் புத்திசாலித்தனமான உழைப்பு காரணம் என்றாலும், சி.சுப்பிரமணியம் அவர்கள் (கொங்கு நாட்டை சேர்ந்தவர்) தொழில் துறை அமைச்சராக இருந்த காலத்தில் கொங்கு நாட்டிற்கு காண்பித்த சலுகையும் ஒரு காரணம்,ஆனால் இதை நான் குற்றசாட்டாகவோ , குறையாகவோ சொல்லவில்லை, மாறாக ஒரு சலுகை கொடுத்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வம், உழைப்பு அந்த மக்களிடம் இருந்தது , அது மறுக்க முடியாத உண்மை.

மற்றபடி இந்த கட்சி, காலத்தின் கட்டாயம்.

ஒரு சந்தேகம்,

முதலியார் - மைனாரிட்டி ஜாதியா? மெஜாரிட்டி என்றல்லவா நினைத்தேன்!

கலைக்கோவன் said...

//மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு. அண்டை மாநிலங்களில் எல்லாம் மெஜாரிட்டியாக உள்ள ஜாதியினரே முதல்வர் போட்டியில் இருப்பார்கள். இங்கே மைனாரிட்டிகளுக்கே வாய்ப்பு.//

கூடவே வேறு மாநிலத்தவரும் அல்லவா முதல்வர் ஆகி இருக்கிறார்..,
சொன்னா வெட்க கேடு

Arun Kumar said...

@அன்பின் அருண் அண்ணே


ஒருவரை யார் என்று நிர்னயிப்பது முதலில் அவர் மொழிதான். எம்.ஜி.யார் தாய்மொழி மலையாளம். ஜானகி தாய் மொழி மலையாலம். ஜெயலலிதா தாய்மொழி கன்னடம். இதை அவர்களே பலமுறை சொல்லியுள்ளனர். இதில் நான் எங்கே அத்தாரிட்டியாக வந்தேன்??? தயவுசெய்து என்மேல் தேவையற்ற,காரணமற்ற,அர்த்தமற்ற காழ்புணர்சி,வேண்டாமே...@

முதலில் நான் சொன்னது உங்களை புண் படுத்தி இருந்தால் என்னுடைய வருத்தங்களை சொல்லி கொள்கிறேன். காழ்புணர்ச்சி எல்லாம் பெரிய வார்த்தை. நான் விளையாட்டாக தான் அந்த கேள்வியை கேட்டேன்..soory boss.
தப்பாக எடுத்துகாதீங்க..


பிறப்பால் தமிழன் என்பது சரியாக வராது என்று நினைக்கிறேன்.. ஜாதி அல்லது மதம் தான் பிறப்பால் திணிக்கபடுகிறது. ஆனால் மொழி இனம் என்பது நாம் விரும்பி ஏற்று கொள்வது.

என் ஜி ஆர் ஜெயலலிதா எப்படி தமிழர்கள் ஆகாமல் போனார்கள் என்று தெரியவில்லை.

இப்படி பிறப்பை வைத்து தமிழர்கள் யார் என்று முடிவு செய்தால் குமாரசாமி ராஜாவை கூட தெலுங்கர் என்று சொல்லி விடலாமே..

எம்.எம்.அப்துல்லா said...

//நான் விளையாட்டாக தான் அந்த கேள்வியை கேட்டேன்..soory boss.
தப்பாக எடுத்துகாதீங்க..//


தவறாக புரிந்து கொண்டதற்கு என்னையும் மன்னியுங்கள்.



//இப்படி பிறப்பை வைத்து தமிழர்கள் யார் என்று முடிவு செய்தால் குமாரசாமி ராஜாவை கூட தெலுங்கர் என்று சொல்லி விடலாமே..

//

அருண் அண்ணே,

குமாரசாமி ராஜாவின் மூதாதையர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் வந்து குடியேறியவர்கள்.
குமாரசாமி ராஜாவுக்கு ஒரு
வார்த்தைகூட தெலுங்கில் எழுதவோ படிக்கவோ தெரியாது. அதனால்தான் நான் அவரை தெலுங்கராக கணக்கில் எடுக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர்,ஜானகி,ஜெயலலிதா
மூவரும் தமிழகதிற்கு வெளியே பிறந்து
பிழைப்பிற்காக தமிழகம் வந்து வந்த இடத்தில் சூழ்நிலை அமைந்ததால் முதல்வரானவர்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

//ஜாதி அல்லது மதம் தான் பிறப்பால் திணிக்கபடுகிறது. //

இல்லை அருண் அண்ணே,

ஜாதியம்கூட தொழில் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இன்று பலரும் குல தொழில் தவிர்தது பிறவற்றை செய்யத் துவகியபின் அநத் கட்டமைப்பும் பிறப்பால் இல்லை. மதம் நாளையேகூட நான் ஒரு கிருஸதுவனாகிவிட முடியும். அதுவும் பிறப்பில் இல்லை. ஆனால் நான் செத்தாலும் என் தாய்மொழி மாறாது. தூக்கததில் என்னை உதைததால் நான் கத்தும் மொழி என் அன்னை சொன்ன மொழியாக மட்டுமே இருக்கும். ஏற்றுக்கொண்ட மொழியாக இருக்காது. ஆக பிறப்பில் வருவது மொழி மட்டுமே.

பாசகி said...

//எம்.எம்.அப்துல்லா said...

//ஜாதி அல்லது மதம் தான் பிறப்பால் திணிக்கபடுகிறது. //

இல்லை அருண் அண்ணே,

ஜாதியம்கூட தொழில் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இன்று பலரும் குல தொழில் தவிர்தது பிறவற்றை செய்யத் துவகியபின் அநத் கட்டமைப்பும் பிறப்பால் இல்லை. மதம் நாளையேகூட நான் ஒரு கிருஸதுவனாகிவிட முடியும். அதுவும் பிறப்பில் இல்லை. ஆனால் நான் செத்தாலும் என் தாய்மொழி மாறாது. தூக்கததில் என்னை உதைததால் நான் கத்தும் மொழி என் அன்னை சொன்ன மொழியாக மட்டுமே இருக்கும். ஏற்றுக்கொண்ட மொழியாக இருக்காது. ஆக பிறப்பில் வருவது மொழி மட்டுமே.//

ஆழமான கருத்துக்கள், அற்புதமான சிந்தனைகள். பிடியுங்கள் பொற்கிளியை :)

Thamira said...

படித்தாயிற்று, சில விஷயங்கள் தெரிந்துகொண்டாயிற்று.

மதிபாலா said...

நல்ல பதிவு.

நான் கொங்கு நாட்டைச் சேர்ந்தவன் தான். இருந்தாலும் தேர்தல் சமயத்தில் ஊரில் இல்லை.

நான் கேள்விப்பட்டவரை இந்தப் பேரவை கொஞ்சம் ஆழ வேரூன்றித்தான் இருக்கிறது.

இன்னொன்று தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட இங்கே சாதி மோதல் குறைவு. சகிப்புத் தன்மை அதிகம்.

எனக்குத் தெரிந்து இந்தத் தேர்தலில் "தலித்" மக்களும் கூட இக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

ஆனாலும் தலைவர்கள் எல்லோரும் ஒரு சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அது சாதிக்கட்சியாக மட்டுமே பார்க்கப்படும்.

எனது தொகுதி சூலூர் ,அருகிலுள்ள பல்லடம் போன்ற தொகுதிகளில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதலிடம் கம்யூனிஸ்டும் , இரண்டாமிடம் கொ.மு.பேரவையும் பெற்றிருக்கின்றன. இதற்கும் சூலூர் தொகுதியில் கணீசமான அளவு முக்குலத்தோர்களும் , தெலுங்கு பேசும் நாயுடு இனத்தவர்களும் இருக்கிறார்கள்...

இருந்தும் கணிசமான வாக்குகளை பேரவை பெற்றதற்குக் காரணம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஊர்ப் பெரிசுகள் போட்ட நாட்டாமை உத்தரவுதான்.

வரப் போகும் சட்டமன்றத் தேர்தல் இவர்களது எதிர்காலத்தை நிச்சயிக்கும்.

அனேகமாக இன்னும் உழைத்தார்களெனில் நகர்ப்புற தொகுதிகளைத் தவிர்த்து 5 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புண்டு.

அனேகமாக தொண்டாமுத்தூர் தொகுதி இடைத்தேர்தல் அதற்கான முன்னோட்டமாக அமைய வாய்ப்புண்டு. ஆனால் திமுக சார்பில் திரு.மு.கண்ணப்பன் அவர்கள் மீண்டும் நின்றால் பேரவைக்கான வாய்ப்பு குறையும்.

காரணம் இயல்பிலேயே திரு.கண்ணப்பன் மேல் கவுண்டர்களுக்கு உள்ள மரியாதைதான் காரணம்.

இன்னொன்று தொண்டாமுத்தூர் தொகுதி கோவை நகரத்தின் ஒரு பகுதியையும் கொண்டிருப்பதால் முடிவினை கணிக்க இயலவில்லை.

மகுடேசுவரன் said...

ம.பொ.சி. அவர்களின் தமிழரசுக் கட்சி, எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் நமது கழகம், ஈ.வி.கே. சம்பத்+கண்ணதாசன் ஆகியோர் ஆரம்பித்த கட்சி, ஆர். எம். வீரப்பனின் எம்.ஜி. ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியனவெல்லாம் இன்றைவிடவும் வெப்பமான அரசியல் சூழ்நிலைகளில் மதிப்பான கொள்கைகளை முன்மொழிந்து அருமையான அனுபவமிக்க தலைவர்களால் துவக்கப்பட்ட கட்சிகள். அக்கட்சிகளை இன்று அருங்காட்சியகத்தில் கூட காண முடியாது. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும், வைகோவின் ம.தி.மு.க.வும் எதிர்காலம் கேள்விக்குறியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. தே.மு.தி.க-வும் அ.தி.மு.க-வும் இன்னொரு தேர்தல் தோல்வி ஏற்பட்டால் கூடாரம் காலியாகும் அவலத்தைச் சந்திக்க வேண்டும். அரசியல் என்பது ஒருநாள் மட்டுமே வீதிக்கு வந்து காட்டும் வித்தை அன்று. தினத்தின் இருபத்து நான்கு மணி நேரத்தையும் வாழ்நாள் ஒட்டுமொத்தத்தையும் தொண்டுக்கும் செயலுக்கும் அர்ப்பணிக்க வேண்டிய இடம் ஆகும். நேற்றுவரை குளிர்பதன அறைக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் இன்று வீதிக்கு வந்து தோன்றினால் ஏமாந்துபோவதற்கு மக்கள் பழைய கைநாட்டுகள் அல்லர். இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்டப் பறித்தெடுத்து பலிபீடத்தில் வைக்கும் இலட்சிய வெறி இருந்தால் மட்டுமே அரசியலில் ஒரு முகவரி கிடைக்கும். தேவைப்பாடுகளை நிறைவு செய்ய முடியும் என்றால் தொழிலில் வெற்றி பெற்றுவிடலாம். அதே வழிமுறைகள் அரசியலுக்கு உதவாது. அங்கு உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் கலை தெரிய வேண்டும். இவ்விதிகளை எல்லாம் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நிறைவு செய்யும் பட்சத்தில் தான் அக்கட்சி தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் பாதையில் பயணிக்கிறது என்று பொருள். கள் இறக்குவதற்காக முன்னெடுக்கும் போராட்டம் நூற்றுக்கணக்கான தென்னைகளை உடைமையாகக் கொண்ட நிலப்பிரபுக்களுக்கே சாதகமாகும் என்பதால் மக்கள் அனுதாபத்தைப் பெறமுடியவில்லை. அது அதிகபட்சம் வருவாய்த்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தை வரைக்குமே பயன்பட்டது என்பதை உணர வேண்டும்.

செந்திலான் said...

// எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் நமது கழகம், ஈ.வி.கே. சம்பத்+கண்ணதாசன் ஆகியோர் ஆரம்பித்த கட்சி, ஆர். எம். வீரப்பனின் எம்.ஜி. ஆர். கழகம்,
//

"தொங்கல்" புகழ் எஸ்.டி.எஸ்.,ரஜினிகாந்த்தின் சினிமா படிமத்தை நம்பி கட்சி ஆரம்பித்த வீரப்பன் இவர்களெல்லாம் அருமையான அனுபவமிக்க தலைவர்களா? என்ன கொடுமை இது ?
இவர்களிடம் என்ன மதிப்பான கொள்கை இருந்தது என்று நீங்கள் தான் கூற வேண்டும்.

//தே.மு.தி.க-வும் அ.தி.மு.க-வும் இன்னொரு தேர்தல் தோல்வி ஏற்பட்டால் கூடாரம் காலியாகும் அவலத்தைச் சந்திக்க வேண்டும் //

தே.மு.தி.க வேண்டுமானால் அந்த நிலையை எட்டலாம் ஆனால் அ.தி.மு.கவிடம் இன்னும் ஒரு தலைமுறைக்கே அரசியல் செய்யும் அளவு அதன் பண பலம் இருக்கிறது.மேலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட தி.மு.க அணி ஆழிப்பேரலையாய் செலுத்திய பணம் தான் வெற்றியை மாற்றி அமைத்ததே தவிர முழுக்க மக்கள் பலத்தினால் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று நம்ப முடியாது.அ.தி.மு.கவிற்கு கிடைத்தது மீளவே முடியாத தோல்வியும் அன்று.இதைவிட மோசமான தோல்வியை அக்கட்சி கடந்த 96 தேர்தலில் பெற்ற பின்பும் மீண்டது.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை.


// அரசியல் என்பது ஒருநாள் மட்டுமே வீதிக்கு வந்து காட்டும் வித்தை அன்று. தினத்தின் இருபத்து நான்கு மணி நேரத்தையும் வாழ்நாள் ஒட்டுமொத்தத்தையும் தொண்டுக்கும் செயலுக்கும் அர்ப்பணிக்க வேண்டிய இடம் ஆகும். நேற்றுவரை குளிர்பதன அறைக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் இன்று வீதிக்கு வந்து தோன்றினால் ஏமாந்துபோவதற்கு மக்கள் பழைய கைநாட்டுகள் அல்லர். இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்டப் பறித்தெடுத்து பலிபீடத்தில் வைக்கும் இலட்சிய வெறி இருந்தால் மட்டுமே அரசியலில் ஒரு முகவரி கிடைக்கும் //

அய்யா எந்த காலத்துல இருக்கிறீங்க ? அப்படி இருக்கிற ஒரு தலைவன சொல்லுங்க பாக்கலாம்.மக்கள் கை நாட்டுகள் அல்லர் தான் ஆனால் நல்லா "கை நீட்டர்கள்" இரண்டு கையையும் நீட்டி பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள்.
தொண்டனோட இதயத்தில் வேண்டுமானால் பலி பீட லட்சிய வெறி இருக்கலாம் ஆனால் எந்த தலைவனிடமும் லட்சியமும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை யார் யாரோட கூட்டு சேர்ந்து எவ்வளவு பங்கு போடாலாம் என்ற "கொள்ளை" வெறி வேண்டுமானால் இங்கே இருக்கிறது.


//கள் இறக்குவதற்காக முன்னெடுக்கும் போராட்டம் நூற்றுக்கணக்கான தென்னைகளை உடைமையாகக் கொண்ட நிலப்பிரபுக்களுக்கே சாதகமாகும் //
முழுக்க உணர்ச்சி வயப்பட்ட கருத்து இது ..
நுற்றுக்கணக்கான தென்னை மரம் வைத்திருந்தால் நிலப் பிரபுவா ? அய்யா இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலே சுமார் 150 மரம் வரை இருக்கும்(ஏக்கருக்கு 70-75 மரங்கள் என்ற அளவில்) .இரண்டு ஏக்கர் வைத்துள்ள விவசாயி எப்படி நிலப் பிரபு ஆவான் ? ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை கொண்ட விவசாயிகள் தான் நிலப் பிரபுக்கள்.எங்கள் பகுதியில் அப்படி பெரிய அளவு மரங்களை கொண்டிருந்தவர்கள் யாரும் கள்ளிரக்கவே இல்லை அவர்கள் அதை கௌரவமாக கருத வில்லை.தங்கள் தோட்டங்களுக்குள் பலர் வந்து கள் அருந்தி செல்வதை இழிவாக கருதினார்கள் மேலும்அவர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை .சிறிய விவசாயிகள் தான் பெருமளவில் வருமானத்திற்காக கள்ளை இறக்கி விற்று வந்தார்கள்.நீங்கள் நகர்ப் புறத்தில் இருக்கிறீர்கள் நேரடியான எந்த தொடர்பும் இல்லாத ஒரு விவாகரத்தில் இப்படி எவ்வாறு எளிதாக சொல்கிறீர்கள் என்றும் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.

செந்திலான் said...

//எம்.எம்.அப்துல்லா said...

செந்தில் அண்ணே இதை நான் போற போக்கில் சொல்லவில்லை. ஆதாரத்தோடுதான் சொல்லுகின்றேன். போலிஸ் ரிக்கார்ட்படி கலவரம் நடக்கும் தென் மாவட்டத்தைவிட மேற்கு மாவட்டத்தில்தான் பி.சி.ஆர். வழக்குகள் அதிகம். காரணம் என்ன??? //

நான் புதுக்கோட்டையில் பிறந்து சென்னையில் வாழ்பவன்தான். ஆனால் தமிழகம் முழுவதும் உற்று நோக்குபவன்.//

அப்துல்லா அண்ணே
முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.மேற்கு மாவட்டங்களில் பணப்புழக்கம் அதிகம்.ஆதலால் காவல் துறையினருக்கு இந்த வழ்க்குகளை கையாள்வதில் வருமானம் தாராளமாக இருக்கிறது எனவே தலித் மக்கள் வேறு பிரச்சினைக்காக அணுகினாலும் அதை வன்கொடுமை வழக்காக மாற்றி பணம் பண்ணி விடுகிறார்கள்.இதை நான் நேரிடையாகவே கண்டிருக்கிறேன்.இந்த அடிப்படை உண்மை கூடவா உங்களுக்கு தெரியவில்லை ? வெறும் புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு பேச வேண்டாம்.இது முதல்வன் பட ரகுவரனின் புள்ளி விவரங்களைப் போன்றது .மேலோட்டாமாக உற்று நோக்காதீங்க.நேரிடையான தொடர்பே இல்லாத ஒரு பகுதியின் விவகாரங்களில் வெறும் ஏடுகளின் செய்திகளை மட்டும் ஆதார தரவாக கொண்டு எதையும் முடிவுக்கு வராதீர்கள்.

arun velalar said...

to ABDHULLAAH

FROM ANAITHU MUDHALIARE VELLALAR PADHUGAAPU PERAVAI...

HELLO ABDHULLAH,DO U KNOW OUR COMMUNITY STRENGTH,
VELLORE: 3.2 LAKHS
THIRUVANMALAI:3 LAKHS
KANCHEEPURAM :2.6 LAKHS
THIRUVALOOR: 2.4 LAKHS
VILUPURAM :2.1 LAKHS
KADALOR: 2 LAKHS
ARIYALOOR: 1.7 LAKHS
CHENNAI: 2 LAKHS
ERODE:1.5 LAKHS
KAROOR:1.3 LAKHS
NAMAKKAL:1.3 LAKHS
COIMBATOR: 75 THOUSAND
THIRUPOOR: 1.4 LAKHS
THIRUCHI : 2Lkhs
tanjavoor: 1.7 lakhs
pudukottai: 1.2 lakhs
nagapattinam: 1 lakh
tootukudi: 1 lakh
tirunelveli:1.4 lakh
theni : 1 .3 lakh
madurai: 1.2 lakh
salem:1.7 lakhs
krishnagiri:1.5 lakh
dharmapuri:1 lakh.

in entire tamilnadu our presence is more than 65 lakhs..then how dare u r telling MUDHALIARS are minority like u muslims??
we r not like kongu goundars ,they just have presence in four districts,...kongu goundars are minority in entire tamilnadu u know..

we need ur contact number and ur addrfess abdullah...shut your mouth and do what u know,u f..k

raja said...

மக்கள் தொகையில் நாயக்கர் பங்கு :
மக்கள் தொகையில் அதிக அளவில் - நாயக்கர் பெல்ட் என்று கூறும் பகுதிகள் ::::::
=> இந்த மக்கள் தொகை கணிப்பு நீண்ட ஆய்வுக்கு பின் கொடுக்க படுகிறது .
=> நாமக்கல் மாவட்டம் ( நாயக்கர்களின் கோட்டை )
-34% மக்கள் ( தொட்டிய நாயக்கர் , பலிஜா , கவரா , ராஜகம்பளம், முத்தரையர் என்று பல பெயரோடு இருக்கும் நாயக்கர் இனம் )
இம்மாவட்டத்தில் பரமதிவேலுரை தவிர்த்து ஏனைய தொகுதிகளில் நாயக்கர் இனத்தவரே பெருன்பான்மை மக்கள் .
=> விருதுநகர் மாவட்டம்
கிராமங்களில் - 27 % மக்கள் தொட்டிய நாயக்கர் இனத்தவரும்
நகரங்களில் - 10% மக்கள் கம்மவார் இனமும்
மொத்தம் நாயக்கர்கள் 37% சதவிதம் கொண்டு பெருன்பான்மையாக வாழுகிறார்கள் .
சாத்தூர் , சிவகாசி , ராஜபாளையம் போன்ற நகரங்களில் கணிசமாக கம்மவார் மக்கள் உள்ளனர் .
=> தூத்துக்குடி ( வடக்கு)
- கோவில்பட்டி போன்ற பகுதிகளில் கம்மவார் சமுதாயம் அதிக அளவிலும்
- வில்லாதிகுலம் போன்ற பகுதிகளில் தொட்டிய நாயக்கர் சமுதாயமும் அதிக அளவில் உள்ளனர் .. மத்திய மற்றும் வடக்கு தூத்துக்குடியில் " நாயக்கர் " சமுதாயமே பெருன்பான்மை .

raja said...

நாயக்கர்கள் ::
ராஜகம்பளம்( தொட்டிய நாயக்கர் ,
பலிஜா, கவரா , காப்பு ரெட்டி ) = 90 லட்சம்( app)
முத்தரையர் ( முத்தரைய நாயக்கர் ,
அம்பலகாரர் , வளையல் நாயக்கர் ,
பாளையக்காரர் , ராஜ குலம்) = 70 லட்சம் ( app)
கம்மவார் நாயுடு / நாயக்கர் = 20 லட்சம் ( app )
மொத்தம் = 1.80 கோடி
ஏறக்குறைய இரண்டு கோடி மக்களை கொண்ட சமுதாயம் ..
வன்னியர்கள் , தலித் இனம் , நாயக்கர்கள் , முக்குலத்தோர் இது தான் மக்கள் தொகையின் படி வரிசை .