June 12, 2009

பெண்களின் பிரச்சனைகளை பேசிய 94 ஆம் ஆண்டின் திரைப்படங்கள்

பெண்களுக்கு கருவறையில் இருந்தே பிரச்சினைகள் ஆரம்பித்து விடுகின்றன. அவை கல்லறை வரை ஓய்வதில்லை. ஆச்சரியப்படும் வகையில், பெண்களின் அனைத்துப் பருவங்களிலும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தான படங்கள் 94 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளன. அதைப் பற்றிய ஒரு பார்வை.

கருத்தம்மா

பாரதிராஜா இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த படம்.ராஜஸ்ரீ, மகேஸ்வரி ஆகியோர் நாயகிகளாக அறிமுகமான படம். பொன்வண்ணனுக்கு நல்ல கேரக்டர் அமைந்து, அவர் பெயர் சொல்லும் நடிகராக மாறிய படம். பெரியார் தாசன் குணசித்திர நடிகராக அறிமுகமான படம். தென்மாவட்டங்களில் பெண்ணுக்கு கல்யாணத்தின் போது வரதட்சணை கொடுத்து, பின் கடைசிவரையிலும் (பொறந்த வீட்டுக் கோடி) செலவழிக்க வேண்டியிருப்பதால், பெண் குழந்தை பிறந்தஉடனேயே அதற்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் வழக்கம் இருக்கிறது. (இப்போது குறைந்திருக்கிறது?)

இதை பதிவு செய்த படம்தான் கருத்தம்மா. மூன்றாவதும் பெண் குழந்தை என்று அறிந்ததும் அதை கொன்றுவிடச் சொல்கிறார் பெரியார் தாசன். அந்த ஊர் வாத்தியாரோ அந்தக் குழந்தையை காப்பாற்றி எடுத்துச் சென்று வளர்க்கிறார். பின் அந்தக்குழந்தை மருத்தவராகி, அந்த தந்தைக்கே வைத்தியம் செய்கிறாள். இடையில் முதல் பெண் குழந்தையை (சரண்யா) திருமணம் செய்து கொடுத்து படாத பாடு படுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பெண் குழந்தை (ராஜஸ்ரீ) தன் தந்தையை கஷ்டப்பட்டு கவனித்துக் கொள்கிறார். அவரது காதலர் அந்த ஊர் கால்நடை மருத்துவர் (ராஜா). பெண்கள் குடும்பத்தை தாங்குவதில் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பதிவு செய்த படம்.

இந்தப் படத்தில் போறாளே பொன்னுத்தாயி, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற பாடல்கள் இருந்தாலும், எப்போது கேட்டாலும் மனதை அறுக்கும் பாடல் ஒன்றும் உள்ளது. பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் போது பாடுவதாக வரும்,

”அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆம்பிளையா நீ பொறந்தா
பூமியிலே இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளியே ”

என தேனி குஞ்சரம்மா பாடும் பாடல்.

மகாநதி

தாயில்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் இரு குழந்தைகள். தந்தை எதிர்பாராத விதமாக சிறைக்குச் செல்ல நேரிட, ஆண் பையனோ ஒரு கழைக்கூத்தாடியிடம் தஞ்சம் அடைகிறான். பெண் குழந்தை? அது விபச்சார விடுதிக்குள் தள்ளப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்த தந்தை அந்த பெண்ணை மீட்கிறார். மீட்புக்குப் பின்னரும் அந்தப் பெண் படும் வேதனை?


அரண்மனை காவலன்


அனாதையாக விட்டால் மட்டும்தானா பெண்ணுக்குப் பிரச்சினை? பெற்றோர்கள் இருந்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளி தாளாளர், ஊர் பெரிய மனிதர். ஆனாலும் சின்ன புத்தி. பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்கிறார். ஊர் ஒன்று கூடி தண்டனை வழங்குகிறது. அதன் பின்னரும் அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள், அதற்கு ஒரு மீட்பர் எனப் படம்.

பிரியங்கா

அடுத்த வீட்டில் வேலைக்குச் செல்லும் பருவ வயது பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையைச் சொல்லிய படம். ஒரு பெரிய பணக்கார வீட்டிற்க்கு வேலைக்குச் செல்கிறாள் ஒரு பெண். ஹோலி கொண்டாட்டங்களில் வீடே திளைத்திருக்க, அந்த வீட்டுப் பையன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவளை மானபங்கப் படுத்தி விடுகிறான். குடும்பமே சேர்ந்து அதை மறைக்கிறது. அந்த வீட்டு மருமகள்(ரேவதி), நியாயம் கேட்க புறப்படுகிறாள். கணவனின் (ஜெயராம்) குடும்பமே அதை எதிர்க்கிறது. நியாயத்திற்க்காக போராடும் ஒரு வழக்கறிஞர் (பிரபு) ரேவதிக்கு துணை நிற்கிறார். நியாயம் வெல்லுகிறது.

இந்தப் படம் முதலில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில், மீனாட்சி சேஷாத்ரி(மருமகள்),சன்னி தியோல் (வழக்கறிஞர்) வேடங்களில் நடிக்க இந்தியில் தாமினி என்ற பெயரில் வெளியானது. இந்தப்படத்திற்க்காக சன்னி தியோல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.


பதவிப்பிரமாணம்


ஒரு அரசியல்வாதி. அவர் முதல்வராக வேண்டுமெனில் குறிப்பிட்ட ஜாதகம் உள்ள பெண்ணை சுடுகாட்டில் திருமணம் செய்து, அங்கே முதலிரவு நடக்க வேண்டும் என்று ஜோசியர் சொல்கிறார். அப்படிப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடிக்கிறார்கள் அடிப்பொடிகள். அதற்கடுத்த நாள் அந்தப் பெண்ணுக்கு திருமணம். மண்டபத்தில் இருந்து சுடுகாட்டுக்கு பெண்ணைக் கடத்துகிறர்கள்.ஜோசியர் சொன்னது நடக்கிறது. அரசியல்வாதி முதல்வரும் ஆகப்போகிறார். இதை அறிந்த பெண்ணின் அண்ணன் (விஜயகாந்த்), அந்த
அரசியல்வாதியை கடத்தி, கொன்று அதை தடுக்கிறார்.

சரிகமபதநீ

வழக்கமான பார்த்திபன் பிராண்ட் படமென்றாலும், இதன் அடிநாதம் இன்னசெண்ட் வயதில் இருக்கும் பெண்ணை ஏமாற்றுவதால் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையும், அதன் பின்விளைவுகளுமே. பார்த்திபன் குழுவினர் ஒரு திருமணத்திற்கு செல்கிறார்கள். அங்கே வளையவரும் இளம்பெண் (சங்கீதா). தன் வழக்கமான பிளேபாய் வித்தைகளை அந்தப் பெண்ணிடம் காட்டுகிறார். இருவரும் சந்திப்பதைக் கண்டு (ஏதும் நடக்காவிட்டாலும்)மண்டபத்தில் வதந்தி பரவுகிறது. திருமணம் முடிந்ததும் பார்த்திபன் டாட்டா காட்டிவிட்டு செல்கிறார். வதந்தியால் குடும்பம் தீக்குளிக்கிறது. பெண்ணுக்கு சித்தப் பிரமை ஏற்படுகிறது. அவர்களின் உறவுப்பெண் (ரோஜா) அதற்கு பழிவாங்க வருகிறார்.


மே மாதம்

ஏழை, நடுத்தர பெண்ணுக்கு மட்டும்தான் பிரச்சினையா? வசதியான பெண்ணுக்கு?. இளம்பெண்ணுக்கு பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கிறார் தந்தை. பிடிக்காத ஆளை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். பெண் தப்பித்து சென்னை வருகிறாள். ஒரு போட்டோ கிராபரை காதலிக்கிறாள். துரத்தல்கள்.

தயாரிப்பாளர் ஜீ வியை புதைகுழிக்குள் தள்ளிய படங்களில் இதுவும் ஒன்று. பாலு இயக்கத்தில் வினீத், சோனாலி நடித்த படம். ஏ ஆர் ரகுமான் இசை. என் மேல் விழுந்த மழைத்துளியே, மார்கழி பூவே போன்ற அருமையான பாடல்கள் இருந்தும் படுத்துக் கொண்ட படம்.

நிலா

வசதியான வீட்டுப்பெண் (வினிதா), ஒரு விபத்தால் சுய நினைவை இழக்கிறாள். குழந்தை தனமாக மாறி விடுகிறாள். குல்பி ஐஸ் விற்கும் ஜெயராம் அவளைக் காப்பாற்றி திருமணமும் செய்து கொள்கிறார். குழந்தை பிறக்கிறது. பெண்ணுக்கு சுய நினைவு திரும்புகிறது. அப்போது தான் தெரிகிறது, அவள் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று. பல போராட்டங்களுக்குப் பின் தெளிவு பிறக்கிறது. ஜெயராமுடன்
சேர்ந்து வாழத் தொடங்குகிறாள்.

மகளிர் மட்டும்

சரி திருமணத்தோடு பெண்ணின் பிரச்சினை முடிந்து விடுமா? என்ன?. வேலைக்குப் போகும் பெண்ணிற்கு? வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை பதிவு செய்த முக்கியமான படம் இது.சபல புத்தி மானேஜர் (நாசர்), சமத்துவப் பார்வை கொண்டவர் பெண்கள் விஷயத்தில். அது ஆடை வடிவமைப்பாளராக இருந்தாலும் சரி, அலுவல உதவியாளரானாலும் சரி, துப்புறவுத் தொழிலாளியாக இருந்தாலும் சரி. பெண் பெண்ணே என்னும் உயர்ந்த தத்துவத்தை கடைப்பிடிப்பவர். பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தொல்லை கொடுக்கிறார். வெகுண்டெழுந்த பெண்கள் அவருக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள். கிரேசி மோகன் வசனம், இளையராஜா இசை, கமல்ஹாசன் தயாரிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படம். தயாரிப்பாளர் தாணு தமிழ் ஆர்வலராக தலைகாட்டிய படம்.

பவித்ரா

நடுத்தர வயது பெண்ணுக்கு மட்டும் வராதா பிரச்சினை?. தன் மருத்துவமனையில் சேரும் நோயாளியை (அஜீத்) தாய்ப்பாசத்துடன் கவனிக்கிறார் நர்ஸ் (ராதிகா). கணவருக்கு (நாசர்) மனைவியின் நடத்தையில் சந்தேகம். வாழ்க்கை நரகமாகிறது.


இதைத்தவிர இந்த ஆண்டு வெளியான, அரவிந்த்சாமி, ரேவதி நடிக்க சுரேஷ் மேனன் இயக்கிய பாச மலர்கள் திரைப்படம் அனாதையாகும் பெண் குழந்தைகளை வளர்க்கும் தொழிலதிபர் என்னும் கருவை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் நடித்த அனைத்துக் குழந்தைகளும் பெண்களுக்கு ஏற்படும் எல்லாக் கொடுமைகளையும் இன்றும் அனுபவிக்கிறார்கள். பயப்பட வேண்டாம். அவர்கள் அனைவரும் இன்றைய முண்னனி டிவி சீரியல் நடிகைகள். முக்கிய உதாரணம் மெட்டி ஒலி காயத்ரி.

பருவப் பெண்களுக்கு வரும் வயதுக் கோளாறு, அதனால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொன்ன படம் பிளே கேர்ள்ஸ். இதுவும் இந்த ஆண்டுதான் வெளியானது. சில்க் ஸ்மிதா நாயகி. இந்தப் படத்தில் தான் ஷகீலா, ஷீத்தல் ஆகியோர் அறிமுகமனார்கள்.

31 comments:

சரவணகுமரன் said...

//பெண்களுக்கு ஏற்படும் எல்லாக் கொடுமைகளையும் இன்றும் அனுபவிக்கிறார்கள். பயப்பட வேண்டாம். அவர்கள் அனைவரும் இன்றைய முண்னனி டிவி சீரியல் நடிகைகள்.//

:-))

நையாண்டி நைனா said...

me secondu

நையாண்டி நைனா said...

/*
மகாநதி

தாயில்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் இரு குழந்தைகள். தந்தை எதிர்பாராத விதமாக சிறைக்குச் செல்ல நேரிட, ஆண் பையனோ ஒரு கழைக்கூத்தாடியிடம் தஞ்சம் அடைகிறான். பெண் குழந்தை? அது விபச்சார விடுதிக்குள் தள்ளப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்த தந்தை அந்த பெண்ணை மீட்கிறார். மீட்புக்குப் பின்னரும் அந்தப் பெண் படும் வேதனை?
*/

இது பெண்களின் பிரச்சினையை சொன்ன படம் அல்ல என நான் நினைக்கிறேன்..

சாதரண நடுத்தர மனிதனின் நாகரிக மோகமும், தன பிள்ளையை ஒரு நகரத்து நாகரிகத்தில் வளர்க துடிக்கும் அரு அப்பாவி அப்பாவின் போராட்டமும் நிலைகளும் தானே இந்த படம்.

அதிக பிரசங்கிதனமா சொல்லி இருந்தால் பொறுத்து, பதில் சொல்லவும்.

Raju said...

வாங்க தல..
இப்பதான் 1984 ல இருந்து 1994 க்கு வந்துருக்கீங்க..!
வெயிட்டிங் ஃஃபார் 2004...!!!

//இந்தப்படத்திற்க்காக சன்னி தியோல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.//
கருத்தம்மா படத்துல பெரியார் தாசன் தேசிய‌ விருது வாங்கினாரே..!

ஆஹா,ஷகீலாவோட முதல் படம் தெரிஞ்சுருச்சு.

Raju said...

\\சாதரண நடுத்தர மனிதனின் நாகரிக மோகமும், தன பிள்ளையை ஒரு நகரத்து நாகரிகத்தில் வளர்க துடிக்கும் அரு அப்பாவி அப்பாவின் போராட்டமும் நிலைகளும் தானே இந்த படம்.\\

இதுவும் படத்துல ஒருதான் நைனா..!
ஆனா, படத்துல மெயின் மேட்டரான‌ சோனாகாச்சிய மறக்க முடியாதில்ல.
அடிக்கடி நீங்க, நிரூபிக்கிரீங்கப்பா..!

நையாண்டி நைனா said...

/*இதுவும் படத்துல ஒருதான் நைனா..!
ஆனா, படத்துல மெயின் மேட்டரான‌ சோனாகாச்சிய மறக்க முடியாதில்ல.
அடிக்கடி நீங்க, நிரூபிக்கிரீங்கப்பா..!*/

நீ அடங்க மாட்டியா....???
குடும்பம் அப்படி சின்னாபின்னமாயிரும் என்று சொல்ல அந்த காட்சிகளை வைத்து இருக்காங்க.

முரளிகண்ணன் said...

வாங்க சரவணகுமரன்.


வாங்க நையாண்டி நைனா,

மகாநதி பெண்ணின் பிரச்சினையை சொன்ன படம் அல்ல. பெண்ணின் பிரச்சினையையும் சொன்ன படம்.

நீங்கள் கூறியுள்ளது, முக்கிய கதை. நடுத்தர மனிதன், நாகரீகம், குழந்தையின் கல்வி, சீட்டு கம்பேனி என திசை மாறுவது.

படத்தில் சில கிளைக்கதைகளும் ஒளிந்திருக்கிறன. ஜெயில் கொடுமைகள், இளம்பெண்ணின் பாதுகாப்பின்மை என. எனவே தான் மகாநதியை பட்டியலில் சேர்த்தேன்.


நல்ல கேள்வி தானே நையாண்டி நைனா.

\\அதிக பிரசங்கிதனமா சொல்லி இருந்தால் பொறுத்து, பதில் சொல்லவும்\\

நமக்குள் இது தேவையா? இது என்னை அன்னியமாக உணரச் செய்கிறது.


வாங்க டக்ளஸ்,

தாமினி வெளியானது 93ல். ரீமேக் பிரியங்கா 84ல். கருத்தம்மா 94ல்.

நையாண்டி நைனா said...

/*
\\அதிக பிரசங்கிதனமா சொல்லி இருந்தால் பொறுத்து, பதில் சொல்லவும்\\

நமக்குள் இது தேவையா? இது என்னை அன்னியமாக உணரச் செய்கிறது.
*/

அன்பு முரளி...
நீங்க மிக அருமையாக திரைப்படங்களை தொவச்சு தொங்க போடுற ஆளு. மேலும் உங்களோட சிந்தனையை கருத்தை நான் கேள்வி கேட்கும்போது நீங்கள் இதென்னா சின்ன புள்ள தனமா என்று நினைத்து விட கூடாது என்பதற்காகவும், எக்காரணம் கொண்டும் நட்பை இழக்க கூடாது என்பதற்காகவும் தான் பிழை பொறுக்கவும் என்று வேண்டி கொண்டேன்.

நீங்க கூறிய வார்த்தைகள் மிக மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி.

நட்புடன்
நையாண்டி நைனா

சென்ஷி said...

//பெண்களுக்கு ஏற்படும் எல்லாக் கொடுமைகளையும் இன்றும் அனுபவிக்கிறார்கள். பயப்பட வேண்டாம். அவர்கள் அனைவரும் இன்றைய முண்னனி டிவி சீரியல் நடிகைகள்.//


semma semma :))

நையாண்டி நைனா said...

/*பிளே கேர்ள்ஸ். சில்க் ஸ்மிதா நாயகி. இந்தப் படத்தில் தான் ஷகீலா, ஷீத்தல் ஆகியோர்
அறிமுகமனார்கள்.*/

"நட்சத்திர பங்கள" என்ற அஜீத் பாடலில் சகிலா வருவார் அது இந்த படத்திற்கு அப்புறம் வந்த படமா???

* * * * * * * * * * * * * * * * *
விட்டு போன ஒன்று,
மகாநதியை படம் என்ற லிஸ்டிலே சேர்க்காதீர்கள்.
அது பாடம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல அதே தொண்ணூற்றி நாலில் ரூப்கலா தேவி, தெய்வயானை ஆகிய பெண்களின் பிரச்ச்னைகளை அலசி ஆராய்ந்து ஒரு படம் வந்ததே தல..


மறந்துட்டீங்களே....,

அதையும் சேர்த்துக்கங்க..

அதிலும் பூட்டிய அறையில் நாயகனின் தொடையில் மச்சம் பார்ர்கும் அதிபயங்கர வன்முறைக் காட்சிக்கூட அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும்

கார்க்கிபவா said...

பவித்ரா.. நல்ல படம். மகாநதியும்..

/அதிலும் பூட்டிய அறையில் நாயகனின் தொடையில் மச்சம் பார்ர்கும் அதிபயங்கர வன்முறைக் காட்சிக்கூட அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும்
//

வீராவா? ஹாஹா

முரளிகண்ணன் said...

வாங்க சென்ஷி.

நையாண்டி நைனா,

நீங்கள் குறிப்பிடும் நட்சத்திர பங்களா பாடல்
இடம்பெற்ற படம் நேசம். அது 97ல் வெளியானது.

94ல் ஷகிலா கவுண்டமணியுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜல்லிக்கட்டுகாளை என்னும் படமும் வெளியானது. பிரபு,கனகா ஜோடி. படம் முடிந்து வெளியே வந்த பலரும் கவுண்டமணி ஜோடிய பிரபுக்கு போட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவிததனர். அவ்வளவு ஸ்லிம்மாக ஷகிலா இருப்பார் அந்தப்படத்தில்.

மேலும் பிளே கேர்ள்ஸ் இரண்டாண்டுகள் தயாரிப்பில் இருந்து வந்த படம்.

முரளிகண்ணன் said...

சுரேஷ் ரூப்கலா தேவிய நீங்க மறக்கலியா?

வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன் நீயும் போட்டுக்கோ என்ற அட்டகாச பாடல் இடம்பெற்ற படம்தானே?

வாங்க கார்கி

நாடோடி இலக்கியன் said...

கருத்தம்மா 95ல் வெளிவந்ததாக நினைவு.
:)
ஜல்லிக்கட்டு காளையில் கனகாவைவிட ஷகிலாதான் சூப்பரா இருப்பார்.

Vidhya Chandrasekaran said...

வழக்கம்போலவே கலக்கலான பதிவு. மகளிர் மட்டும் படம் எத்தனை தடவைப் பார்த்தாலும் சலிக்காது.

நர்சிம் said...

வழக்கமான பதிவு..

மகாநதி மறக்கமுடியாத படம்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நாடோடி இலக்கியன்

வாங்க வித்யா

வாங்க தலைவரே.

ப்ரியமுடன் வசந்த் said...

2014
ஆண்களின் ப்ரச்சனைகள் படமா வரும்ன்னு நினைக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கலான பதிவு.

அருண்மொழிவர்மன் said...

ந்ல்ல பதிவு முரளி... இதை சொலவும் வேண்டுமா...

கோலங்கள் திரைப்படமும் இந்த ஆண்டு வந்ததா? இல்லை, 95ஆ

ஸ்ரீ.... said...

1994 ஆம் ஆண்டுக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி. மிக அருமையான பதிவு.

ஸ்ரீ....

மணிஜி said...

திரும்பி பார்க்க வைக்கிறீர்கள்..முரளி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பிரியமுடன் வசந்த், டி வி ஆர் சார், அருண்மொழிவர்மன், ஸ்ரீ, தண்டோரா

Toto said...

Hi Murali,

I admire your blog and knowledge about cinema. Also, Pls don't restrict your posts to statistical matters. Keep up the good work.

Thanks,
Toto.
Http://Film4thwall.blogspot.com

கல்கி said...

80ல் வெளிவந்த 9 to 5 ஆங்கிலப்படத்தில் தமிழ் மசாலா கலந்து எடுக்கப்பட்ட படம் தான் மகளிர் மட்டும்.

புருனோ Bruno said...

//மே மாதம்//

மின்னலே பாடல் !!! ???

புருனோ Bruno said...

//பவித்ரா

நடுத்தர வயது பெண்ணுக்கு மட்டும் வராதா பிரச்சினை?. தன் மருத்துவமனையில் சேரும் நோயாளியை (அஜீத்) தாய்ப்பாசத்துடன் கவனிக்கிறார் நர்ஸ் (ராதிகா). கணவருக்கு (நாசர்) மனைவியின் நடத்தையில் சந்தேகம். வாழ்க்கை நரகமாகிறது. //

இந்த படம் வெளிவந்து பல வருடங்கள் கழித்த பிறகு ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரகுமான் படத்தில் நடிக்க ஆசை என்று அஜித் கூற ”அப்ப பவித்ரா படத்தில் நடித்தது யாரு” என்ற கேள்விக்கு அவரது முகத்தை பார்க்க வேண்டுமே :) :)

புருனோ Bruno said...

//(இப்போதாவது குறைந்திருக்கிறதா?)
//

கள்ளிப்பால் குறைந்திருக்கிறது

ஆனால் மருந்தகங்களிலிருந்து ஒரு பாட்டில் cough syrup வாங்கி மொத்தமாக கொடுப்பதாக கேள்வி

cough syrupல் தூக்க மருந்து சிறு சதவிதம் இருப்பதை இவர்களுக்கு சொல்லி கொடுத்தவர் யாரோ

புருனோ Bruno said...

//இந்தப் படத்தில் போறாளே பொன்னுத்தாயி, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற பாடல்கள் இருந்தாலும், எப்போது கேட்டாலும் மனதை அறுக்கும் பாடல் ஒன்றும் உள்ளது. பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் போது பாடுவதாக வரும்,
//

இந்த படம் விருது பெற்றதா ??

புருனோ Bruno said...

//ஏழை, நடுத்தர பெண்ணுக்கு மட்டும்தான் பிரச்சினையா? வசதியான பெண்ணுக்கு?//

ஆளுனரின் மகளுக்கு ??

ஒரு படம் மிஸ்ஸிங்