முதலில் ரஜினி,கமல் நடித்து வந்த படங்களை பாருங்கள்
ரஜினி
கழுகு, கர்ஜனை,நெற்றிக்கண்,தீ,தில்லுமுல்லு
கமல்
எல்லாம்இன்பமயம்,கடல்மீன்கள்,மீன்டும் கோகிலா, ராஜபார்வை, ராம்லட்சுமண், சவால்,சங்கர்லால்,டிக் டிக் டிக்
இதில் பெரிய வெற்றி பெற்றவை தில்லுமுல்லு (பாலசந்தர்).டிக் டிக் டிக் (பாரதிராஜா).
இனி இயக்குனர்களின் படங்களைப் பார்க்கலாம்.
பாலசந்தர்
47 நாட்கள்
சிவசங்கரி இதயம் பேசுகிறது புத்தகத்தில் தொடராக எழுதியது. பிரஜா ராஜ்யம் சிரஞ்சீவி பிரான்ஸ் பாரிஸில் பணிபுரிபவர். ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்தியா வந்து சமாஜ்வாடி எம் பி ஜெயபிரதாவை ஏமாற்றி மணந்து பாரிஸ் அழைத்து செல்கிறார். சைக்கோவான அவரிடம் கஷ்டப்படும் ஜெயபிரதா எப்படி தப்பித்தார்? இதை பாலசந்தரின் இயக்கத்தில் பாருங்கள். பாலசந்தரின் பேவரைட் சரிதா,சரத்பாபுவும் உண்டு.
தண்ணீர் தண்ணீர்
இப்படம் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் என்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது
அத்திப்பட்டி என்னும் ஊரில் கடும் தண்ணீர் பஞ்சம். கொலையாளி ஒருவன் அந்த ஊரில் அடைக்கலம் புகுந்து உதவி செய்கிறான். ஒருவழியாக தெளிவடையும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள். முடிவு என்னவாகும்?, கதானாயகியாக சரிதா. இப்படத்தில் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்தவர் வாத்தியார் ராமன். இவர் பின்னால் பல படங்களுக்கு தமிழ் தெரியாத நடிகைகளுக்கு வசன பயிற்சி அளித்தவர். இயக்குனர்கள் இவரை நம்ப காரணம் வயதும்,தோற்றமும். பாக்யராஜ் தெலுங்கு பெண்ணான பிரவீணாவுக்கு தமிழ் கற்றுத்தர சென்று அவரை திருமணம் செய்துகொண்டது
அனைவரும் அறிந்ததே
பாரதி ராஜா
அலைகள் ஓய்வதில்லை
மணிவண்ணன் கதையில், கார்த்திக்,ராதா அறிமுகமான காதலுக்கு மதம் தடை நிற்கும் படம். இந்த படத்தில் சில பாடல்களை கங்கை அமரன் எழுதியிருந்தார். அவரிடம் வாடி என் கப்பக்கிழங்கே என்று ஏன் எழுதினீர்கள் என கேட்ட போது அவர் சொன்னது " ராதா கேரளாவை சேர்ந்தவர், கிழங்கு மாதிரி இருந்தார், கேரளாவின் கப்பக்கிழங்கு பேமஸ் இல்லையா? அதனால் தான் அப்படி எழுதினேன் என்றார். மற்றொரு ஹிட் பாடலான ஆயிரம் தாமரை மொட்டுக்களே, தந்தன தந்தன தன்னானே என்னும் கும்மிப்பாடலின் சந்தததில் இருந்து உருவாக்கப்பட்டது. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்னும் பாடலும் இளைஞர்களை முணுமுணுக்க வைத்தது. இப்படத்துக்குப்பின் கமலா காமேஷ் ஏழைத்தாய் வேடத்துக்கு வாழ்க்கைப்பட்டார். இதில் நடித்த போது அவரின் வயது 25 தான் என்பார்கள். மேடைப்பாடகரான அவரது கணவர் காமேஷ் இறந்தபின் அவர் நடித்த படமிது.
டிக் டிக் டிக்
போட்டியில் வெல்லும் அழகிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி, அவர்கள் உடலில் வைரத்தை பதுக்கி கடத்தும் வில்லன், அவன் செய்த கொலைகளுக்கு தவறாக பழி ஏற்று துரத்தப்படும் மாடல் போட்டோகிராபர் கமல், மாதவி,ராதா,அருணா என அழகு மாடல்கள். கலாய்க்க தேங்காய், பிண்ணனி இசைக்கு இளையராஜா. திரில்லர் படத்துக்கு வேறென்ன வேண்டும்?
பாக்யராஜ்
அந்த ஏழு நாட்கள்
ஒருவனின் காதலி மற்றொருவனுக்கு மனைவியாகலாம். ஆனால் ஒருவனின் மனைவி? இந்த கேள்வியை தாங்கி, பாக்யராஜ், அம்பிகா, ராஜேஷ்,கல்லாப்பெட்டி சிங்காரம், ஹாஜா ஷெரிப் நடிப்பில் எம் எஸ் வி இசையில் வெளியான படம். பாலக்காட்டு மாதவன் நாயராக பாக்யராஜ் அதகளப்படுத்தியிருப்பார். இது பின்னர் ஊ சாத் தின் என்னும் பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டது. அனில்கபூர் அறிமுகமானார். பின்னர் பாக்யராஜின் பலபடங்களின் ரீமேக்கில் (பேட்டா, மிஸ்டர் பேச்சாரோ) அவர் நடித்தார்.
இன்று போய் நாளை வா
சிற்றூரில் வாலிப வயது நண்பர்கள். இளம்பெண் தெருவில் புதிதாக குடியேறுகிறார். அவரை கவர என்னென்ன தகிடுதத்தம் செய்யலாம்?. அதுவும் பாக்யராஜ் மாதிரியான இயக்குனருக்கு எவ்வளவு தோன்றும்?. ஏ கிஸான் ஏ காவுமே ரகதாதா வை சொல்வதா? கழுதைபாலுக்கு அலைவதை சொல்வதா? தமிழின் சிறந்த 10 காமெடிபடங்கள் லிஸ்ட் எடுத்தால் இந்த படத்துக்கு கட்டாயம் அதில் ஒரு இடமுண்டு
மௌன கீதங்கள்
சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்யும் கணவன். மன்னிக்க தயாரில்லாத மனைவி. எம் எஸ் வி இசையில் பாக்யராஜ்,சரிதாவின் நடிப்பில் ஒரு இயல்பான படம். நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத படம்
விடியும் வரை காத்திரு
மனைவியை கொலை செய்து நம் மீது பழிவராமல் இருக்க என்ன செய்யலாம்?. இப்படத்தை பார்த்தால் ஒரு ஐடியா கிடைக்கும். பாக்யராஜ் எதிர்மறை நாயகனாக நடித்த படம். நல்ல த்ரில்லர். ஆனால் அப்போது பெரிய வெற்றி பெறவில்லை.
மகேந்திரன்
நெஞ்சத்தை கிள்ளாதே
திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு படித்த சுஹாசினி நடிகையாக மாரிய படம். சுஹாசினியின் அண்ணன் சரத்பாபு பிரியமானவர். அண்ணி நேரெதிர். சுஹாசினி மோகனை காதலிக்கிறார். அண்ணி எதிர்க்கிறார். பருவமே புதிய பாடல் பாடு என்னும் கிளாசிக் பாடலிலும், பிண்ணனி இசையிலும் ராஜா மிரட்டியிருப்பார். சுஹாசினி படத்தில் ஜாக்கிங் செய்துகொண்டெயிருப்பார், படமும் நன்கு ஓடியது. வெண்ணிற ஆடை மூர்த்தி தன் டிரேட் மார்க் தம்பீபீபீபீ யை இதில் தான் ஆரம்பித்தார்.
நண்டு
இப்படம் அப்போது எதிர்பார்த்த அளவு ஓடவில்லையென்றாலும் வித்தியாசமான கதை அமைப்பை கொண்டது. அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா பாடல் மிக பிரபலம். ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் அசத்தலாக இருக்கும்.
துரை - கிளிஞ்சல்கள்
இதுவும் மதம் காதலுக்கு குறுக்கே வரும் படம் தான். அலைகள் ஓய்வதில்லை விடலை காதன் என்றால் இது கொஞ்சம் பண்பட்ட காதல். இரண்டுபடத்தின் டிரீட்மெண்டும் இரு துருவங்கள். இரண்டும் நன்கு ஓடியவை. இப்படத்திற்க்கு இசை டி ராஜேந்தர். மோகன்,பூர்ணிமா நடித்தது.
ராபர்ட் ராஜசேகர் - பாலைவனசோலை
கலகலப்பான இளைஞர்கள். ஒரு இளம்பெண்ணின் வருகை. தொடர் முயற்சிகள். இன்று போய் நாளை வா தி மு க என்றால் இது அ தி மு க. சங்கர் கணேஷ் இசையில் மேகமே மேகமே, பௌர்னமி நேரம் பாவை ஒருத்தி போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்தது. சுஹாசினி கதானாயகி. சந்திரசேகர்,தியாகு, ஜனகராஜ் எல்லாம் இளம் பருவத்தில் இருப்பார்கள். முடிவு சோகம். இந்த படமும் 200 நாட்களை கடந்து ஓடியது.
பாரதி - வாசு - பன்னீர் புஷ்பங்கள்
ஸ்ரீதரின் உதவியாளர்களான சந்தான பாரதியும், பி வாசுவும் இயக்கிய விடலை பருவ காதல் கதை. சுரேஷ், சாந்தி கிருஷ்னா போர்டிங் ஸ்கூல் மாணவர்கள். பிரதாப் போத்தன் ஆசிரியர். இனிமையான பாடல்கள்.
டி ராஜேந்தர் - ரயில் பயணங்களில்
பாடகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் யோசிக்கிறாள். இந்நிலையில் அவளுக்கு திருமணம். கனவன் சந்தேகித்தே கொல்லுகிறான். காதலன் மனமுடைகிறான். டி ராஜேந்தரின் அருமையான இசையும் பாடல் வரிகளும் பலம். வசந்த காலங்கள், யாரோ பின்பாட்டு பாட போன்ற துள்ளல் பாடல்களும், சாந்தி என்னும் பெயர் கொண்ட பென்களை கலாய்க்க பயன்பட்ட "அமைதிக்கு பெயர் தான் சாந்தி" பாடலும் எப்பொதும் முணுமுணுக்க வைப்பவை.
கரையெல்லாம் செண்பகப்பூ
சுஜாதா வாரபத்திரிக்கையில் எழுதிய தொடர். நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சிக்கு கிராமம் செல்கிறான் நாயகன் (பிரதாப் போத்தன்). அங்கு அவன் தங்கும் பழைய வீட்டில் ஒரு புதையல். அதை எடுக்கும் திட்டத்துடன் ஒரு இளம்பெண், அவளுக்கு உதவியாளர்கள். அந்த கிராமத்துப்பெண் வெள்ளி (ஸ்ரீபிரியா). அவளை ஒரு தலையாக காதலிக்கும் நாயகன். அவளுக்கோ முறைப்பையன் மேல் ஆசை. கதையாகப் படித்தபோது அடைந்த பீல் படத்தில் கிடைக்காததால் படம் வெற்றி அடையவில்லை.
இப்படங்களைப் பார்த்தால் ஒன்று புலப்படும். ஹீரோ ஜீரோ. கமல் ரஜினிக்கு கூட பெரிய இயக்குனர் படங்கள்தான் வெற்றி தந்தன். மற்ற படங்கள் சொதப்பின. அந்த அளவுக்கு கதையம்ச படங்கள் வெற்றியடைந்தன.
51 comments:
அன்பு மு.க...
'தண்ணீர் தண்ணீர்' என்ற கே.பி. படம், கோமல் சுவாமிநாதன் அவர்களின் 'தண்ணீர் தண்ணீர்' நாடகத்தை ஆரத் தழுவி எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
நன்றி.
அனைத்தும் அருமை.
உங்கள் தகவலுக்கு நன்றி
நசரேயன், நன்றிகள்
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி வசந்தகுமார்.
பதிவில் இணைத்து விடுகிறேன்
ஆஹா...நான் பிறக்கும்போது இவ்வளவு நல்ல படங்கள் வந்துச்சா...? ம்ம்ம்ம்.... இப்பயும்தான் படங்கள் வருதே...?!
//அந்த ஏழு நாட்கள்//
கிட்டத்தட்ட இதே கதையைத்தான் இப்போக்கூட ஹிந்தியில எடுத்தாங்க..'ஹம் தில் தே சுக்கே சனம்'
அந்த சமயத்தில பாக்யராஜோட ஊரான கோவையில ஒரே காம்ப்ளக்ஸ்ல அவரோட மூணு படமும் ஒரே நேரத்தில ஓடுச்சாம்..
//நெஞ்சத்தைக் கிள்ளாதே//
ஜானகியம்மா பதினாறுவயசுப் பையனுக்கு குரல் கொடுத்துப் பாடிய பாடல் 'தம்பீ பேரு மாரி'.
இந்தமுறை பதிவுல சுவாரஸ்யம் குன்றாம அரசியலை அப்படியே லைட்டா மிக்ஸ் பண்ணி இருக்கீங்க...
நல்லா இருந்தது...
நல்ல தகவல்
சகலகலாவல்லவனும் முரட்டுக்காளையும் வராமல் இருந்திருந்தால்.................
வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் நன்றி தமிழ்பறவை.
குடுகுடுப்பை தங்கள் வருகைக்கு நன்றி
ஏ கிஸான் ஏ காவுமே ரகதாதா ///
பலருக்கும் அதுதானே அரிச்சுவடி.
அந்தப் படத்தின் முக்கிய வில்லன் நடிகர்........... அவரைப் பார்த்தாலே சிரிப்பு வரும்
தில்லுமல்லு...........
எந்த இயக்குநரின் திறமையால்?....
அது ரீமேக் அல்லவா?
மீசை ரஜினியின் உடை கூறும் அது ரீமேக் என்று...........
//1976 முதல் 1983 வரையிலான காலகட்டமாகும். இக்காலத்தில் எம்ஜியார் தீவிர அரசியலுக்கு சென்றுவிட்டதாலும், சிவாஜி,ஜெமினி போன்ற முன்வரிசை நாயகர்கள் கதானாயனுக்கு ஏற்ற தோற்றத்தை தொலைத்துவிட்டதாலும் தங்கள் ஆதிக்கத்தை சினிமாவில் இழந்திருந்தனர்.//
இன்றுள்ள நாயகர்களுக்கும் இது பொருந்தும்.. ஆனாலும் கதாநாயகர்களாக தொடர்கிறார்கள்..
நல்ல பதிவு முரளி கண்ணன்.. மீண்டும் ஒருமுறை..
நர்சிம்
//அத்திப்பட்டி என்னும் ஊரில் கடும் தண்ணீர் பஞ்சம்//
//மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள்//
அந்தப்பட்டி இந்தப்பட்டிதானா /
.// இன்று போய் நாளை வா தி மு க என்றால் இது அ தி மு க.//
ரெண்டுமே ஒன்னுதான்னு சொல்லறீங்களா?
//கதானாயனுக்கு ஏற்ற தோற்றத்தை தொலைத்துவிட்டதாலும் //
தொலைத்தால் என்ன? சிறந்த நடிப்பால் ஈடுகட்டி விடலாம் அல்லவா? { திரிசூலம்}
முரளி சார் ,
இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துமே அருமையிலும் அருமை !.
நான் இப்போதுதான் பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன் . எனக்கு பிளாக்கர்யில் தமிழில் எழுத முடிகிறது . கமெண்ட் மட்டும் ஆங்கிலத்தில் எழுத வருகிறது . இதற்கு என்ன செய்யலாம் ?.
சுரேஷ் தங்கள் வருகைக்கு நன்றி.
தில்லுமுல்லு கோல்மால் என்ற இந்திப்படத்தின் ரீமேக் என்றாலும், கேபி யின் டச் இருந்ததை மறுக்க முடியாது. காமெடி பட ரீமேக் சுலபமல்ல.
சுரேஷ்
//கதானாயனுக்கு ஏற்ற தோற்றத்தை தொலைத்துவிட்டதாலும் //
தொலைத்தால் என்ன? சிறந்த நடிப்பால் ஈடுகட்டி விடலாம் அல்லவா? { திரிசூலம்}
மசாலா படங்களுக்கு ஓக்கே. ஆனால் முதல் மரியாதை போன்ற கதை என்றால் பரவாயில்லை. கிளிஞ்சல்கள், நெஞ்சத்தை கிள்ளாதே க்கு எப்படி பொருத்தமாவார்?
நர்சிம், தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிகள்
முரளி சார்...
சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு படம் பார்த்தேன்... படத்தின் பெயர் 'இரட்டை மனிதன்' என நினைக்கிறேன். பெயர் சரியாக நினைவிலில்லை. கதாநாயகன் எஸ்.எஸ்.ஆர்...கதை இதேபோல் 'தில்லுமுல்லு' கதைதான்...
இதில் ஃபுட்பால் மேட்ச்சுக்குப் பதிலாக ஹீரோ ஆஃபீஸ் கட் பண்ணி விட்டு நாடகத்தில் நடிக்கப் போவார்..
தேங்காய் கேரக்டரில் வி.கே.ஆர் என ஞாபகம்...
பாதிப்ப்டம் பார்த்தேன்.. களம் மட்டும் வேறு.. காட்சியமைப்புகள் இதே...
இது கருப்பு வெள்ளைப் படமென நினைக்கிறேன்...
யாராவது தெரிந்தால் நினைவு கூ(ர்ந்து சொல்லு)றுங்கள்
சுரேஷ்
\\.// இன்று போய் நாளை வா தி மு க என்றால் இது அ தி மு க.//
ரெண்டுமே ஒன்னுதான்னு சொல்லறீங்களா?
\\
ஒரே கதை, ஆனால் எதிர் துருவத்தில் ட்ரீட்மெண்ட் என்பதால் அப்படி சொன்னேன்
இளைஞனாக...இளைஞியாக //
நான் வாழவைப்பேன்
நடிப்பு என்றாலே............
ஸ்டார்ஜான் தங்கள் வருகைக்கு நன்றி.
NHM writer, e kalappai allathu www.muthu.org
பயன்படுத்துங்கள். அதில் முதலில் டைப் செய்து பின்னர் கட் பேஸ்ட் செய்யுங்கள்.
இந்த பின்னுட்டம் தமிழில்தானே இருக்கிறது?.
//இந்தியா வந்து சமாஜ்வாடி எம் பி ஜெயபிரதாவை//
தலைவா! சமாஜ்வாடி எம்.பி-யை பிராக்கெட்டுக்குள் போடுங்க.
//அந்த 7 நாட்கள், மௌனகீதங்கள்//
இந்த படங்களை நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக பாக்யராஜின் பிற்போக்கன சிந்தனைகள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. சின்னவீடு, முந்தானைமுடிச்சு கூட இதே கேஸ் தான்.
//டிக் டிக் டிக்//
இந்தப் படத்தில் லதா ரஜினிகாந்த் ஒரு பாடல் பாடியுள்ளார். சரியா?
//இன்று போய் நாளை வா//
இந்தப் படத்தில் நகைச்சுவை காட்சிகள் இன்னும் மறக்க முடியாதவை.
அருமையான அலசல்.
ஏழாவது மனிதன் கூட 1981-ல் வந்தது தானே!
அருமையான பதிவு. பல புதியத் தகவல்கள்.
//தில்லிமுல்லு//
இந்தப்படம் ரீமேக்காக இருந்தாலும் விசுவின் பிரெஷ் வசனத்தால் அவ்ளோ சூப்பரா நம்மூர் படம் போல இருக்கும்:):):)
//47 நாட்கள்//
ஆனா நிஜமாகவே அந்தக் காலக்கட்டத்தில் பிரான்ஸில் குடியேறும் அந்நியனாட்டவர் பலர் இப்படி செய்தது உண்மை. அதனால்தான் இப்பொழுது மிகச் சிறப்பான மற்றும் கண்டிப்பான முறையில் அத்துணை விஷயங்களையும் திருமண விஷயத்தில் பார்க்கின்றனர்.
//அலைகள் ஓய்வதில்லை//
இது 'நீங்கள் கேட்டவை' போலவே, மக்களை பழிவாங்க மணிவண்ணன் படைத்த ஸ்கிரிப்ட் தானே(நிழல்கள் தோல்வியினால்). வாடி என் கப்பங்கிழங்கே பாட்டுக்காக தனிப்பட்ட முறையில் எம்ஜிஆரிடம் கங்கை அமரன் திட்டு வாங்கியதாகவும் கூறுவார்:):):)
//மேடைப்பாடகரான அவரது கணவர் காமேஷ் இறந்தபின் அவர் நடித்த படமிது//
இல்லை என்று நினைக்கிறேன், ஏனென்றால், இந்தப் படத்திற்கு அப்புறம் ஒருமுறை எம்ஜிஆர் இவர் வீட்டிற்கு வந்ததாகவும், அப்பொழுது இவரையும் இவர் கணவரையும் பார்த்து அதிசயப்பட்டு, எப்படி அந்த வயதான கேரெக்டர் செய்தீர்கள் என விசாரித்ததாகவும் அவர் பல சமயம் கூறுவார்.
டிக் டிக் டிக் தானே சரிகா நடித்த ஒரே தமிழ்ப்படம்?'நேற்று இந்த நேரம்' பாடல்தான் லதா அவர்கள் பாடிய பாடல். இதற்கு பாட்டெழுதும்போது கவியரசர் கண்ணதாசனோடு ஏற்பட்ட சுவையான அனுபவத்தை வைரமுத்து ஒவ்வொரு பேட்டியிலும் தவறாமல் கூறுவார்:):):)
//அந்த ஏழு நாட்கள்//
இது நீங்களே, பாக்கியராஜ் பற்றி கூறியது என நினைக்கிறேன். ஒருத்தரின் மனைவி இன்னொருத்தரின் மனைவியாக முடியும்ங்கறதை வெச்சு புதிய வார்ப்புகள், அதையே உல்டாவாக்கி அந்த ஏழு நாட்கள்.
//ஏ கிஸான் ஏ காவுமே ரகதாதா வை சொல்வதா//
என்னங்க சார் இப்டி சரித்திர முக்கியத்துவம் வாய்த்த வசனத்தில் வார்த்தைகள மாத்தி போட்டுட்டீங்களே:):):) 'ஏக் காவ மே, ஏக் கிசான், ரகுதாத்தா' இப்டித்தான் வரும்:):):) இந்தப் படம்தான் என்னைப் பொறுத்தவரை அவரோட மாஸ்டர் பீஸ்.
//நெஞ்சத்தைக் கிள்ளாதே//
//அண்ணி நேரெதிர்//
இவங்கதானே மெட்டி ஒளியில் நடிச்ச மாமியார்?
நண்டு படத்தில் வடநாட்டில் வரும் காட்சிகளில் ஒரு ஹிந்திப் பாடல் வருமென்றும், அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அப்பாடலை படத்திலிருந்து தியேட்டர்களில் தூக்கி விட்டார்கள் எனவும் கேள்விப்பட்டிருக்கேன்.
மெட்டி படம் இதுக்கப்புறம் வந்ததா?இதுவும் ரொம்ப வித்தியாசமான படம், அதுவும் மெட்டி ஒலி காற்றோடு பாடல் அருமையாக இருக்கும்.
பாலைவனச் சோலைதான் எக்சாக்டாக அந்த பீரியடை பிரதிபலித்த படம் போல தோன்றும். ஒவ்வொருத்தரோட நடை உடை கேரெக்டர் அவ்வளவும், 'எண்பது எண்பது எண்பது' என்று வெளிப்படுத்துவது போலத் தோன்றும்.
டி. ஆர் இசையில் இந்த சமயத்தில் வந்த பாடல்கள் அத்துனையும் அருமை:):):)
//பன்னீர் புஷ்பங்கள்
//
இது அப்படியே அலைகள் ஓய்வதில்லைக்கு ஆப்போசிட், ஆனால் இது அவ்வளவாக ஓடவில்லையாமே:(:(:(
கலக்கல் ;))
தொடர்ச்சியான நீண்டகால உங்களின் சினிமா ரசனையை காட்டும் பதிவு.
ஒரு சின்ன திருத்தம்
அலைகள் ஓய்வதில்லை படத்தில் வைரமுத்து (விழியில் விழுந்து), கங்கை அமரன், இளையராஜா, பஞ்சு நால்வரும் இணைந்து பாடல்களாஇ எழுதினார்கள்
//சைக்கோவான அவரிடம் கஷ்டப்படும் //
47 நாட்கள் படத்தில் சிரஞ்சீவி சைக்கோ என்பதை விட இரு தார மணம் ( ஒன்று வெள்ளை) அதில் ஜெயப்பிரதாவை மட்டும் கொடுமைப்படுத்தும் பாத்திரம் என்ற வகையில் இருக்கும். நண்டு படம் மகேந்திரனின் விருப்பம் இல்லா இடைச்செருகலோடு சிதைக்கப்பட்ட படம் என்று அவரே சொல்ல்யிருக்கிறார். அதுவும் சிவசங்கரியின் நாவல்.
அருமையான தொகுப்பு வழக்கம் போல்.
முரளி கண்ணன்.. டிக்,..டிக்..டிக்.. அப்போதைய வெற்றி படமல்ல.. அதுவும் ஓருதோல்வி படமே..
தில்லு முல்லு ரஜினியை இப்போதுள்ளவர்கள் மிஞ்சமுடியாது.
அலைகள் ஓய்வதில்லை பாடல்களுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
பாக்யராஜின் படங்களில் இன்றளவும் அவருடைய திரைக்கதையை பேசப்படுகிறது.
ஆமா தூரல் நின்னு போச்சு திரைப்படம் எப்ப வந்தது. அவருடைய திரைக்கதை புத்திசாலித்தனத்திற்கு இந்த ஒரு படமே போதும். தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி எப்ப கேட்டாலும் இனிமைதான்.
வழக்கம் போல அசத்திட்டீங்க
தமிழ்பறவை,அத்திரி, தங்கள் வருகைக்கு நன்றி
குட்டி பிசாசு,
தலைவா! சமாஜ்வாடி எம்.பி-யை பிராக்கெட்டுக்குள் போடுங்க.
திருத்தி விடுகிறேன்.
//அந்த 7 நாட்கள், மௌனகீதங்கள்//
இந்த படங்களை நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக பாக்யராஜின் பிற்போக்கன சிந்தனைகள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. சின்னவீடு, முந்தானைமுடிச்சு கூட இதே கேஸ் தான்.
நல்ல கருத்து
//டிக் டிக் டிக்//
இந்தப் படத்தில் லதா ரஜினிகாந்த் ஒரு பாடல் பாடியுள்ளார். சரியா?
ராப் பதில் சொல்லி விட்டார்
ஏழாவது மனிதன் - சரிபார்க்கிறேன். தங்களின் விரிவான பகிர்தலுக்கு நன்றிகள்
ராப்
விசுவின் வசனங்கள் - (அய்யம்பேட்டை - கலக்கல்)
கமலா காமெஷ் செவிவழி செய்தி, எனவெ சரிபார்த்து திருத்தி விடுகிறேன்
இந்தி வசனமும் திருத்தி விடுகிறேன்
பன்னீர்புஷ்பங்கள் கவனிப்பை பெற்றாலும் வெற்றிஅடையவில்லை.
விரிவான பகிர்தலுக்கு நன்றி.
உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊட்டம்
வருகைக்கு நன்றி அருண்மொழிவர்மன்
\\அலைகள் ஓய்வதில்லை படத்தில் வைரமுத்து (விழியில் விழுந்து), கங்கை அமரன், இளையராஜா, பஞ்சு நால்வரும் இணைந்து பாடல்களாஇ எழுதினார்கள்
\\
விழியில் விழுந்து - வைரமுத்து
முதல் இரண்டு பாடல்களை பற்றி சொல்லிவிட்டு, பின் பேரை குறிப்பிடாமல் சொல்லிவிட்டேன்
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி கானாபிரபா.
வருகைக்கு நன்றி கேபிள் சங்கர்.
நான் மதுரை சுகப்பிரியாவில் அந்த படம் 100 நாட்கள் தாண்டி ஓடிய போஸ்டர், ஷீல்ட் பார்த்திருக்கிறேன். ஒருவேளை படத்தின் அர்பன் தன்மை (அப்போது) காரணமாக பி சி யில் எடுபடாமல் போயிருக்கலாம்
அடேங்கப்பா இவ்ளோ விசயமா....
கலக்கல் பதிவு தலைவா...
தீ படம் எனக்கு பிடித்த ரஜினி படங்களில் ஒன்று அதில் ரஜினிக்கும் சுமனுக்கும் சண்டை வரும் அப்போது ரஜினி இந்த போலீஸ் வேலையை வைத்து எதுவும் செய்ய முடியாது நீ என்ன சாதிச்சுட்டே என்கிற ரீதியில் பேசிக்கொண்டு இருப்பார் என்கிட்டே எல்லாமே இருக்கு உன்கிட்ட என்ன இருக்கு என்று கேட்டவுடன், என்னிடம் அம்மா இருக்காங்க என்று சொன்னதும் ரஜினி பேச முடியாமல் இருப்பது அருமையாக இருக்கும்.
தில்லு முல்லு எத்தனி முறை டிவி யில் போட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியாது என்று நினைக்கிறேன்..அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் ...சார் என் பெயர் சுப்ரமணிய பாரதி சுருக்கமா சுப்பி ..அப்பா இவரு பேரு பக்கிரிசாமி பக்கி ன்னு கூப்பிடலாமா? பாருப்பா அடிக்கடி புல்லரிக்க வைத்துடுரே! ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி போன்ற வசனங்கள் எப்போதும் மறக்கவே மறக்காது :-)))
//" ராதா கேரளாவை சேர்ந்தவர், கிழங்கு மாதிரி இருந்தார், கேரளாவின் கப்பக்கிழங்கு பேமஸ் இல்லையா? அதனால் தான் அப்படி எழுதினேன் என்றார்//
:-)))) அப்போது பார்த்தா ராதா அப்படி தெரியவில்லையே ;-)
//கும்மிப்பாடலின் சந்தததில் இருந்து உருவாக்கப்பட்டது. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்னும் பாடலும் இளைஞர்களை முணுமுணுக்க வைத்தது. //
செம பாட்டுங்க
//அந்த ஏழு நாட்கள்//
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ..எந்தடா கோபி ! :-))))))
//இன்று போய் நாளை வா//
ஹா ஹா ஹா தலை முடியை பிடித்து எழுத்து சொல்ல சொல்லும் பொது செம காமெடியாக இருக்கும் ..ஹிந்தி சொல்லி தருபவர் சமீபத்தில் தான் காலமானார்
//டி ராஜேந்தர் - ரயில் பயணங்களில்//
அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
முரளி கண்ணன் எங்க இருந்து தான் இத்தனை தகவல்களை பிடிக்கறீங்களோ !
யப்பா... நீங்க பெரியாளுங்க.. ஏன் சினிமாத் திறையில் PHD முயற்சி செய்யக் கூடாது?
//கோபிநாத் said...
கலக்கல் ;))//
repeatuuuuuuuu... :)))
//அருமையான தொகுப்பு வழக்கம் போல்.//
வழிமொழிகிறேன்
அதிஷா, கிரி, கார்க்கி, ஸ்ரீமதி, புருனோ தங்கள் மேலான வருகைக்கு நன்றி
// கார்க்கி said...
யப்பா... நீங்க பெரியாளுங்க.. ஏன் சினிமாத் திறையில் PHD முயற்சி செய்யக் கூடாது?//
//கிரி said...
//" ராதா கேரளாவை சேர்ந்தவர், கிழங்கு மாதிரி இருந்தார், கேரளாவின் கப்பக்கிழங்கு பேமஸ் இல்லையா? அதனால் தான் அப்படி எழுதினேன் என்றார்//
:-)))) அப்போது பார்த்தா ராதா அப்படி தெரியவில்லையே ;-)///
ரிப்பீட்டேய்..... :-)
1976 முதல் 1983 . அட ... நம்ம காலம்.
என் பார்வையில் ...
ரயில் பயணங்களில்:
இதைப் பற்றி என் அக்டோபர் பதிவில் "வைக்காத பொண்ணுமேல ஆச" உலக தரம் வாய்ந்த டைரகஷன் உள்ள இந்த படத்திற்க ஏன் ஆஸ்கர் கொடுக்கப்பட வில்லை என்ற அலசல் பார்க்கலாம்.
டிக் ..டிக் டிக்...
அட்டகாசமான விஷுவல்ஸ் அண்ட் உடை. Maestro Raaja full blast
தண்ணீர் தண்ணீர்:
பின்னணி இசை வேணுமென்றே அடக்கி வாசிக்கப்பட்ட படம்.satyajit Roy range film. Hats off to KB.
பன்னீர் புஷ்பங்கள்
"ஆனந்த ராகம்" என்ற பாடல் சிம்மேயிந்திர மத்யமத்தில் போடப்பட்ட மாஸ்டர் பீஸ். இதே சிம்மேயிந்திர மத்யமத்தில் போடப்பட்ட பாடல் "தாலாட்டும் பூங்காற்றும்" .ஒரே ராகத்தை இரண்டு விதமான மூடுகளுக்கு போட மாஸ்ட்ரோ ஒருவரால்தான் முடியும் .அந்த பாடல் ஹை பிட்சில் போகும் .இது ........பானுப்ரியவிடம் கேட்கலாம் .
பாலைவனசோலை
சந்திரசேகர்,தியாகு, ஜனகராஜ்,ராஜீவ் கைலாஷ் இவர்கள் கூட ,ரவி ஷங்கரும் சேர்ந்து சுஹாசினியை காதல் செய்தார்கள். இது ஒரு off beat படம் .ஸ்மிதா படேல் மாதிரி சுஹாசினி காட்டன் சாரீயில் வருவார் இளைஞ்சர்களை மிகவும் பாதித்த பாடம்.
நெஞ்சத்தை கிள்ளாதே
கேமிரா அட்டகாசம்..அட்டகாசம்.. அட்டகாசம்.. ஏ.. தென்றலே.... பாட்டில் ஊட்டியில் ஒரு ரோடில் honey moon car அழகாக வர .பின்னனியில் Raaja இசையில் ஹ்ம்மிங்
இதில் வரும் சுஹாசினி - பிரதாப் போத்தனை மௌன ராகம் ரேவதி - மோகனில் காணலாம் . Maestro Raaja இதிலும் full blast
முதலில்42வதாக வந்ததற்கு மன்னிக்கவும். என்ன அருமையான படைப்பு,நான் உங்களை பார்த்து வியக்கிறேன்.
சினிமா பதிவு என்றால் அது முரளி அண்ணாதான் என்பதை மீண்டும் நிருபித்துருக்கீறீர்கள்..
வாழ்த்துக்கள்!!
தொடரட்டும் இந்த அரிய பணி.
ரவிசங்கர் சார்
தங்கள் வருகைக்கும், மேலதிக தகவல்களுக்கும் மிக்க நன்றிகள். நீங்கள் பின்னூட்டத்தில் கூறிய பல தகவல்கள் (ராகம்) அருமை. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
விலெகா, வருகைக்கு நன்றி.
Murali,
/ஏ கிஸான் ஏ காவுமே ரகதாதா/
athu
/ஏ காவுமே ஏ கிஸான் ரகதாதா/
Oru oorla oru rajathaan
Thanneer thanner padam shooting nadapettrathu, MGRoda constituencynnu kelve patten...
//// கார்க்கி said...
யப்பா... நீங்க பெரியாளுங்க.. ஏன் சினிமாத் திறையில் PHD முயற்சி செய்யக் கூடாது?
////
வழிமொழிகிறேன்..
இப்பொ ஒரு phd ..சினிமால ஒரு phd double phd
முரளி கண்ணன் ..
’அக்ரஹரத்தில் கழுதை’ பற்றி என்னக்கு நிறைய தகவல் வேண்டும், அந்த் படத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்..
பாலுமகேந்திர பற்றி ஒரு தனி பதிவு வேண்டும்..அவருடைய சமக்கால படைப்புகளுடன்..
ஆமாம்.. பாலுமகேந்திரவின் ‘அழியாத கோலங்கள்’ ‘பாய்ஸ்;’ படம் மாதிரிய இருக்கும்?
In Mouna Geethangal- the Music Director was Gangai Amaran; Not M.S.Viswanathan.
-Afrid
Post a Comment