ஐ ஐ டி களில் எம் எஸ் (ஆராய்ச்சி) முதுகலை படிப்புகள் எல்லாத்துறைகளிலும் (பொறியியல்,அறிவியல்,கணிதம்) கற்பிக்கப்படுகின்றன. இதைல் பயில்வோருக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் உதவித் தொகை (ரூ 8000) மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
இதற்கும் எம் டெக்குக்கும் உள்ள வித்தியாசம்
எம் டெக் கில் துறை சம்பந்தமான பாடங்கள் முதல் மூன்று செமெஸ்டெர்கள் இருக்கும். மூன்றாவது மட்டும் நான்காவது செமெஸ்டரில் ப்ராஜக்ட் ஒர்க் இருக்கும்.
எம் எஸ்சில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆய்வுக்கு தொடர்பான பாடங்கள் (இது ஆய்வு வழிகாட்டியும், பொதுத் தேர்வு கமிட்டியும் தேர்ந்தெடுக்கும்) முதல் செமெஸ்டரில் கற்பிக்கப்படும். பின்னர் ஆராய்ச்சி மட்டுமே.
எம் டெக் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. எம் எஸ் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள், அதிகபட்சம் 3- 3.5 ஆண்டுகள்.
அடிப்படை தேவைகள்
1. கேட் தேர்வில் நடப்பு மதிப்பெண் வைத்திருக்க வேண்டும்.
அல்லது
2. இளங்கலை முடித்தபின் தொழிற்சாலை அனுபவம்
எப்பொழுது விண்ணப்பிக்க வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான நேர்முக தேர்வுகள் முறையே நவம்பரிலும், ஏப்ரலிலும் நடைபெறும். விண்ணப்பங்கள் முறையே செப்டெம்பெர் மற்றும் பிப்ரவரியில் வழங்கப்படும்.
கேட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் முதலில் எம் டெக் கில் அக்கறை காட்டுவார்கள்
காரணம்
1. வேலைவாய்ப்பில் எம் டெக் கிற்க்கெ அதிக வாய்ப்பு
2. குறிப்பிட்ட கால அளவு (2 ஆண்டுகள்)
3. எங்கும் வேலை கிடைக்காவிட்டாலும் விரிவுரையாளராகும் வாய்ப்பு உள்ளது. (எம் எஸ் படிப்பு, விரிவுரையாளர் பணிக்கான தகுதியாக இந்திய தொழில் நுட்ப கவுன்சிலால் அங்கீகரிக்கப்படவில்லை)
எனவே எம் டெக் கிடைக்காத மாணவர்கள் (மதிப்பெண் 94 முதல் 97 வரை உள்ளவர்கள் ) எம் எஸ் படிப்பிற்க்கு வருவார்கள்.
சரி, என்னால் கேட்டில் அவ்வளவு மதிப்பெண் பெற முடியாது. என்ன செய்யலாம்?
ஐ எஸ் ஆர் ஓ, டி ஆர் டி எல், டி எஸ் ஓ போன்ற அரசு நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சிகளை பல பிரிவுகளாக பிரித்து உயர் கல்வி நிறுவங்களுக்கு வழங்கும். (இதற்க்கு பல காரணங்கள் உள்ளன. அவை தனிப்பதிவில்). இந்த ஆராய்ச்சிகள் பேராசிரியர்களிடம் ஒப்படைக்கப் படும். அவர்கள் தங்களிடம் உள்ள ஆய்வுக்கூட வசதிகள், ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (எம் எஸ் மற்றும் பி எச் டி) உதவியுடன் அதற்க்குறிய தீர்வை அளிப்பார்கள்.
இவ்வாறு ஆய்வு செய்யும் பேராசிரியர்களை சந்தித்து, வாய்ப்பு கேட்டால் அவர்கள் இணைத்துக் கொள்வார்கள். பின் நம்மிடம் ஓரளவு கேட் ஸ்கோர் இருந்தாலும் நேர்முகத்தேர்வில் நம்மை நிருபித்தால் எம் எஸ் படிக்க அனுமதிப்பார்கள். ஆய்வுக்கு தேவையான பாடங்களை அங்கு படிக்க வேண்டும். பின் ஆராய்ச்சி, அது முடியும் போது எம் எஸ் வழங்கப்படும். இம்முறை துரு ப்ராஜெக்ட் எனப்படும்.
சரி, என்னிடம் கேட் ஸ்கோர் இல்லை. ஆனால் அனுபவம் இருக்கிறது. என்ன செய்யலாம்? நீங்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் ஆய்வு செய்யுமளவுக்கு வசதிகள் இருந்து, உங்கள் மேலாளர் அனுமதித்தால் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெற்றால் உங்கள் ஆய்வுக்கு தேவையான பாடங்களை மட்டும் ஒரு செமெஸ்டெர் படித்துவிட்டு, பின் கம்பெனிக்கு திரும்பிச்சென்று வழிகாட்டி உதவியுடன் ஆய்வை தொடரலாம். இதற்க்கு எக்ஸ்டெர்னல் ரெஜிஸ்ட்ரேஷன் முறை என்று பெயர். ஆனால் இவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெற முடியாது.
இம்முறையில் டி வி எஸ், ஜி ஈ, லேலண்ட் போன்ற தனியார் நிறுவஙகளில் இருந்தும், ஐ எஸ் ஆர் ஓ, டி ஆர் டி எல் போன்ற அரசு பணியில் இருப்பவர்களும் இடம் பெற முடியும்.
எம் எஸ் சாதகங்கள்
1. நன்கு ஆய்வு செய்து இரண்டு,மூன்று ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தவ்ர்கள் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் பி எச் டி படிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கும். அங்கு உதவித்தொகை அதிகமாக இருக்கும். அதை முடிப்பவர்களுக்கு உச்ச பட்ச வாய்ப்புகள் கிடைக்கும்
2. இந்திய அரசு நிறுவன்ங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஐ ஐ டி எம் டெக் கிற்க்கு அடுத்து எம் எஸ் க்கே முன்னுரிமை கொடுக்கும். அதன் பின்னரே மற்ற கல்லூரி எம் டெக், எம் ஈ க்கு வாய்ப்பு கொடுக்கும்
3. தற்போது பெரும்பாலான மாணவர்கள் மென்பொருள் துறைக்கே செல்கின்றனர். இதனால் கோர் துறைகளில் திறைமை பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஏற்படும் என கணிக்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களில் நிபுணர்கள் இல்லாததால் தங்கள் சப் காண்டிராக்டர்கள்/ வெண்டார்கள் ஆகியோரிடம் இருக்கும் திறமையான்வர்களை டெபுடேஷனில் எடுத்துக்கொள்கிறார்கள். எனவே ஒரு பிரிவில் நன்கு ஆய்வு செய்து நிபுணத்துவம் பெற்றுவிட்டால் அருமையான வாய்ப்புகள் கிடைக்கும்.
மென்பொருள் துறைக்கு பல துறைகளில் இருந்து ஆட்கள் வருகிறார்கள். சர்வைவ் ஆகிறார்கள். ஆனால் கோர் துறைகளுக்கு மற்றவர்கள் எளிதில் வர இயலாது. போட்டி குறையும். ஆயிரம் வேலையிடம் எனில் இரண்டாயிரம் நபர்கள் தான் திறமையுடன் இருப்பார்கள். ஆனால் மென்பொருள் துறையில் வேலையிடம் குறைந்தால், அந்த வேலை இடங்களுக்கு போட்டியிட அதிகம் பேர் இருப்பார்கள். பின்னாட்களில் கடினம்.
எனவே இயந்திரவியல், அமைப்பியல், மின்னியல், மிண்ணனுவியல், தகவல் தொடர்பு, கணிப்பொறி அறிவியல் போன்றவற்றில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளவர்கள் இத்ற்கு முயற்சி செய்யலாம். பெரும்பாலோனரை தடுப்பது குறைந்த உதவித்தொகையே. முன்பு ரூபாய் 5000 ஆக இருந்தது தற்போது 8000ம் ஆக உயர்ந்துள்ளது. எனினும் மென்பொருள் துறையில் கொடுக்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிட்டு யாரும் தமிழ்னாட்டில் முயற்சி செய்வதில்லை. ஆந்திர,கேரள,வட மாநில மானவர்களே இந்த பயனை அனுபவிக்கிறார்கள்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் தொழில்னுட்பம், கணிதம்,மேலாண்மை போன்ற பிரிவுகளிலும் எம் எஸ் வழங்கப்படுகிறது.
30 comments:
பயனுள்ள பதிவு முரளி சார்....
பயனுள்ள பதிவு முரளி சார்....
இத..இத தான் நான் எதிபார்த்தேன்..
சரி இதை சொல்லுங்கள்.. ’ஐஐடி’க்கள் ஏன் மற்ற கல்லூரிகளை விட சிறந்ததாக இருக்கின்றன?
தமிழ்ப்பறவை said...
பயனுள்ள பதிவு முரளி சார்....
ரீப்பீட்டு
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி தமிழ் பறவை, பிஸி, விலேகா, அக்னி பார்வை.
@அக்னி பார்வை
\\சரி இதை சொல்லுங்கள்.. ’ஐஐடி’க்கள் ஏன் மற்ற கல்லூரிகளை விட சிறந்ததாக இருக்கின்றன?
\\
இதற்க்கு ஒரு தனிப்பதிவுதான் போட வேண்டும்.
அருமையான பதிவு
வினையூக்கி தங்கள் வருகைக்கு நன்றி
எதை எழுதினாலும் அதன் மூலை முடுக்கெல்லாம் சென்று தகவல்கள் சொல்றீங்க சகா. அருமை
//இதற்க்கு ஒரு தனிப்பதிவுதான் போட வேண்டும்.//
எதிர்பார்த்து கிடக்கிறோம்..
கார்க்கி வருகைக்கு நன்றி.
மிக நல்ல பணி முரளி கண்ணன்.. நிச்சயாமாக பயனளிக்கும் விவரங்கள்.
கல்வி தான் எங்கும் என்றும் நிரந்தரம்.. என்று பதிவிட்டு இங்கு வந்தால் அதைப்பற்றி அசத்தலான தகவல்கள்..
வாழ்க கல்வி!
மிகவும் பயனுள்ள தகவல்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. :)
வருகைக்கு நன்றி பீமோர்கன், நர்சிம்
நீங்கள் ஐஐடி பற்றி எழுத ஆர்ம்பித்ததில் இருந்து என்னுடைய நண்பர்களுக்கு உஙள் பதிவை சிபரிசு செய்கிறேன்..அதனால் அனைத்தையும் எழுதி புத்தகமாக வெளியிடுவதை பற்றி யோசியுங்கள்..
அக்னிபார்வை, முயற்சிக்கிறேன்
முரளி ,
பின்னிடீங்க .
உள்ளேன் ஐயா
வருகைக்கு நன்றி ஸ்டார்ஜான்,புருனோ
நல்ல அலசல் முரளி சார். இது போல ஐ ஐ டி யில் பி எச் டி வாய்ப்புகள் பற்றியும் நீங்கள் எழுதினால் நிறைய பேர் பயனடைவார்கள்
நானும் உயர் கல்வி வாய்ப்புகள் பற்றி எழுத யோசித்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஐ ஐ டி பற்றி எழுதுவது போல் நான் ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மன்யில் உள்ள வாய்ப்புகள் பற்றி எழுதலாம் என்று உள்ளேன்.
பார்க்கலாம் என்னால் எவ்வளவு முடிகிறது என்று.
வாழ்த்துக்கள் உங்க பதிவுக்கு :-)
Useful information.
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி விஜி,SK,EXPATGURU
பயனுள்ள பதிவு, ஆனால் இந்திய கலூரிகளில் (ஐ ஐ எம் நீங்கலாக) தியரி தான் அதிகம் சொல்லி கொடுக்கின்றனர்.
எனவே தான் நம் இளைஞர்கள் அமெரிக்கா, ஆச்ற்றலியா நோக்கி படை எடுக்கிறார்கள் எம் எஸ் படிக்க. நம் ஊர் கல்லூரிகளில் ஆங்கிலப் புலமையும் குறைவு.
குப்பன்_யாஹூ
நல்ல பயனுள்ள தகவல் முரளிகண்ணன்.
நீங்க கால் பதிக்காத துறையே இல்லபோல தெரியுது
முரளி சார்.. கலக்கிட்டீங்க... இத மாதிரி பயனுள்ள பதிவுகள் தொடரட்டும்....
உரத்த சிந்தனையில் தோன்றியது.... கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், கலை, இலக்கியம் இவற்றை எல்லாம் தகவலாக்கம் செய்யும் தனி தனி வலைப்பூக்கள் இருந்தால், அல்லது உருவாக்கினால், மிகவும் உதவியாக இருக்கும்... நம்ம வலைபதிவர்கள் மத்தியில் இது குறித்து விவாதித்தால் நன்றாக இருக்கும்...
tamilscience.blogspot.com
tamilcomputing.blogspot.com
tamilliterature.blogspot.com
tamilarts.blogspot.com
tamilhistory.blogspot.com
இதை போல ப்ளாக் நிறுவி, ஒத்த கருத்துடைய வலைப்பதிவர்கள் தங்களுடைய பதிவுகளை அதில் ஏற்றினால், மக்களை சென்றடைய ஏதுவாக இருக்கும்.
வருகைக்கு நன்றி குப்பன் யாஹூ, நசரேயன்.
நட்டி, நல்ல கருத்து. விவாதித்து நல்ல முறையில் செய்வோம்.
உபயோகமான பதிவு :)
fantastic post ,
முரளி ,
என்னுடைய வலை பதிவில் தமிழ் மனம் கருவிப்பட்டை பொருத்தமுடியவில்லை . கீழ் கண்ட தவறு வருகிறது. இதை எப்படி சரிசெய்வது ., தயவுசெய்து கொஞ்சம் விளக்கவும் .,
உங்கள் டெம்பிளேட்டை சேமிக்க முடியவில்லைபின்வரும் பிழையைச் சரி செய்து, டெம்பிளேட்டை மீண்டும் சமர்பிக்கவும்.
சரியான முறையில் வடிவமைக்கப்படாததால் உங்கள் டெம்பிளேட்டை அலச முடியாது. அனைத்து XML உறுப்புகளூம் சரியாக மூடபட்டதா என்பதை உறுதிப்படுத்தவும். XML பிழை செய்தி: The value of attribute "src" associated with an element type "null" must not contain the '<' character.
வருகைக்கு நன்றி பிரபாகர் சாமியப்பன்.
ஸ்டார்ஜான், எனக்கும் அது தெரியவில்லை. உங்கள் பிரச்சினையை பதிவர் யோசிப்பவர்க்கு அனுப்பியுள்ளேன். அவர் வழி சொல்வார் என நினைக்கிறேன். நன்றி
Post a Comment