திரைப்படங்களை பொருத்தவரையில் மிக முக்கியமானது நாட் பிடிப்பது. அந்த விதையினை கொண்டுதான் முழு படமும் உருவாக்கப்படும்.
உதாரணமாக
காதல் கதையெனில் (சொல்லாமலா, பேசாமலா, பார்க்காமலா, என்ன பிரச்சினையில் கைகூடவில்லை? )
பழிவாங்குதல்/ ஆக்சன் கதையெனில் (யாரை? ஏன்? எப்படி? )
நகைச்சுவை படமென்றால் (ஆள் மாறாட்டமா, அதிகப்படி ஆசை)
குடும்ப/ சமூக படமா? (இருதாரமா, துரோகமா)
இதன் அடிப்படையில் ஒரு கதை உருவாக்கப்பட்டு, பின்னர் திரைக்கதை யாக அது வளர்க்கப்படும். இதில் முக்கிய அம்சம் சீன் பிரிப்பது. சராசரியாக இரண்டரை மணி நேர படத்துக்கு 80- 85 சீன்கள் வரை எழுதப்படும். இந்த சீன்களிலேயெ ஒளிப்பதிவு கோணம் முதல், நடை, உடை, பாவனைகள் வரை குறிக்கப்படும்.
ஒரு கதநாயகியின் அறிமுக காட்சி எனில்
கிராம பெண் எனில்- தாவணி, நகர மாணவி - சுரிதார், கவர்ச்சி/திகில் படம் எனில் - கவர்ச்சிகர உடை.
அதற்கேற்ப மேனரிஷங்கள்.
ஒளிப்பதிவு கோணம் :
கதானாயனின் பார்வையில் அறிமுகம் என்றால் - கண்கள் படபடக்கும், உதடு துடிக்கும் ஒரு குளோசப் ஷாட்
வில்லனின் / ரசிகனின் பார்வை எனில் - கவர்ச்சி பாகங்களை கேமரா ஜூம் செய்ய வேண்டும் (வாலி - சிம்ரன் )
அண்ணன்/அப்பாவின் பார்வை - முழுவதும் மூடிய முழு உருவத்தை காட்ட வேண்டும்.
இவ்வாறு படப்பிடிப்புக்கு முன் எழுதப்பட்ட ஸ்க்ரிப்டுடன் சென்று அதை காட்சிப்படுத்தும் இயக்குனர் என்றால் எஸ் பி முத்துராமன், பி வாசு, கே எஸ் ரவிகுமார், ஹரி ஆகியோரை சொல்லலாம். இவர்கள் படப்பிடிப்பு தளத்தில் பெரிய மாற்றங்களை செய்வதில்லை. இதன் மூலமே குறிப்பிட்ட நாட்களில் படத்தை சுருட்டி விடுகிறார்கள். இவர்களின் படங்களுக்கு ஆஸ்தான எடிட்டர்கள் இருப்பார்கள். இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்கு ஒர்க்காகும். எனவெ பணியும் எளிதாக இருக்கும்.
எஸ் பி முத்துராமன் - ஆர் விட்டல்
பி வாசு - பி மோகன் ராஜ்
கேஎஸ் ரவிகுமார் - கே தணிகாசலம்
90% படங்களில் இந்த இணையே இருக்கும்.
அடுத்த வகை இயக்குனர்கள் கிரியேட்டிவ் ஆக இருப்பார்கள்
ஸ்க்ரிப்ட்டை வைத்து படபிடிப்பை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதில் இம்ப்ரவைசேசன் செய்து கொண்டே இருப்பார்கள். செல்வராகவன்,பாலா,அமீர், தரணி(குருவி தவிர) போன்றவர்கள் படத்தை முடிக்க அதிக காலம் ஆக்குவதன் பிண்ணனி இதுவே. காட்சி தங்களுக்கு திருப்தியாகும் வரை விடமாட்டார்கள். பிரேமில் உள்ள எல்லாமே சரியாக இருக்கவேண்டும் என நினைப்பார்க்ள். புற சூழலுக்கு ஏற்ப காட்சி, கோணத்தை மாற்றுவார்கள். நடிகர்களின் ரியாக்சனை பல கோணங்களில் எடுப்பார்கள். ஒரே காட்சியை இருவிதமாக எடுப்பார்கள். நடிகர்கள் அதை உள்வாங்கி நடிக்கும்போதோ, படப்பிடிப்பில் இருக்கும்போதோ செய்யும் மேனரிஷங்களை காட்சிக்குள் புகுத்துவார்கள். (பாம்பே - கண்ணாளனே - அரவிந்த்சாமி - தூணில் கால் வைத்து சிறு ஜம்ப் செய்வது).
இம்மாதிரி இயக்குனர்களுக்கு திறமையான எடிட்டர் அவசியம். எதை வைத்துக்கொள்வது, எவ்வளவு வைத்துக்கொள்வது,எங்கே வைப்பது என முடிவு செய்ய வேண்டும். நான்கு படத்திற்க்கு தேவையான காட்சிகளை சுட்டிருப்பார்கள் இயக்குனர்கள். அதில் இருந்து உருப்படியான ஒரு படத்தை தரவேண்டும்.
மற்றொரு வகை இயக்குனர்கள், ஸ்பாட்டில் வந்து சீன் சொல்லுவது, வசனம் எழுதுவது என இருப்பார்கள் (பாரதி ராஜா, பாலசந்தர், பாக்யராஜ்). இவர்கள் மூட், நடிக/நடிகையரின் பெர்பார்மன்ஸ் வைத்து மெருகெற்றுவார்கள். இவர்கள் திறமையான உதவி இயக்குனர்களை கொண்டிருப்பதால் எடிட்டிங் பணி ஓரளவு இலகுவாகவே இருக்கும்.
தற்போது தமிழில் நல்ல எடிட்டர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் என்றால்
பி லெனின்
சிவாஜிக்கு பல பா வரிசை வெற்றி படங்களை (பாசமலர், பாவ மன்னிப்பு) கொடுத்த இயக்குனர் பீம்சிங் கின் புதல்வர். மௌன ராகம்,நாயகன்,அஞ்சலி, தலைநகரம் போன்ற பல படங்களை தொகுத்தவர். ஊருக்கு நூறுபேர் போன்ற படங்களை இயக்கியவர். தற்போது குறும்பட இயக்கத்தில் ஆர்வம் கொண்டு தொகுத்தலை குறைத்திருக்கிறார். இவர் பல படங்கள் வி டி விஜயனுடன் சேர்ந்து செய்திருக்கிறார்.
வி டி விஜயன்
பாய்ஸ்,இந்தியன்,ஆறு,அன்னியன்,கனா கண்டேன்,தாம் தூம் என கலந்து கட்டி வேலை பார்ப்பவர். லெனினின் துணையாய் இருந்து இணையானவர்.
சுரெஷ் அர்ஸ்
தளபதி,ரோஜா,பாம்பே,உயிரே,சந்திரமுகி போன்றவற்றில் பணி புரிந்தவர்.
ஸ்ரீகர் பிரசாத்
ஆந்திராவை சேர்ந்தவர். அங்கே ஒக்கடு,அத்தடு, சைனிகுடு போன்ற படங்களில் பணி புரிந்தவர். இங்கே அலைபாயுதே, மொழி, கன்னத்தில் முத்தமிட்டால்.
ஆண்டனி
காட்சிகள் பறக்க வேண்டுமா? கூப்பிடு ஆண்டனியை. காக்க காக்க, நியூ,மன்மதன்,கஜினி,வேட்டையாடு விளையாடு, சிவாஜி இப்போது எந்திரன்.
தற்போது லீடிங் எடிட்டராக உள்ளவர் இவரே.
திரையரங்க எடிட்டிங் மற்றும் பல - அடுத்த பதிவில்
39 comments:
முரளி கண்ணன்.. வழக்கம்போல் அருமையான விபரங்களை தொகுத்துள்ளீர்கள்..
எடிட்டிங் நன்றாக இல்லை என்றால் எஸ் எஸ் சந்திரன் போன்றவர்கள் கடைசி ஃப்ரேம் வரை வசனம் பேசிக்கொண்டிருப்பதை நாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிவரும்..
நல்ல தொகுப்பு..
நர்சிம்
எக்கச்சக்க தகவல்கள்! எங்க இருந்துதான் பிடிக்கிரிங்களோ!!
//ஊருக்கு நாலு பேர் போன்ற படங்களை இயக்கியவர்//
அந்தப் படம் ஊருக்கு நூறு பேர்.
ஒவ்வொரு சினிமா பதிவையும் அழகாக தொகுத்துள்ளீர்கள். அருமை. பதிவுலக சினிமா பிஹெச்டி ஆராய்ச்சியாளர் முரளிக்கு ஓ போடுங்கலே.......
முரளி.. பதிவுக்கு பதிவு உங்களோட திரைப்பட அறிவோட ஆழம் அதிகமாக தெரிஞ்சிட்டே இருக்கு.. எவ்ளோ விவரங்கள்!!! அதிலும் எடிட்டிங் பற்றிய மூன்று விதமான வெரைட்டி சூப்பர்.. உண்மையை சொல்லுங்க, உங்களுக்கு சினிமா துறை கூட நேரடி தொடர்பு இருக்குதானே!!!
மிக அருமையாக எழுதி இருக்கீங்க
படம் எடுக்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு இப்பதானே புரியுது
மீண்டும் மீண்டும் தொடரட்டும்
மிக அருமையாக எழுதி இருக்கீங்க
படம் எடுக்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு இப்பதானே புரியுது
மீண்டும் மீண்டும் தொடரட்டும்
எனது வலைப்பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி..
உங்களுடைய திரை சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. தொடரவும். வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி நர்சிம், வெண்பூ, அத்திரி
வருகைக்கு நன்றி குட்டி பிசாசு.
////ஊருக்கு நாலு பேர் போன்ற படங்களை இயக்கியவர்//
மாற்றி விடுகிறேன்.
வருகைக்கு நன்றி நசரேயன், அர்விந்த்
நல்ல தகவல்கள் முரளி.. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
செல்வராகவன்,பாலா,அமீர், தரணி,போன்றவர்கள் படத்தை முடிக்க அதிக காலம் ஆக்குவதன் பிண்ணனி இதுவே.
அருமையான கருத்துக்கள் சினிமா பதிவு என்றால் அது அண்ணா முரளி கண்ணன்தான் சந்தேகமே இல்லை என்பது என் கருத்து.
Antony, is now directors Choice.. Probably Young Director's choice. Reason.
1)Wavelenght set to the Youth
2) Able to grasp the Movies and let it goes as per the script, sp director will be happy
3)Make it short
எடிட்டிங்-இன் மூன்றாம் பகுதியை எதிப்பார்த்து காத்துருக்கும் பல பேர்களில் ஒருவன்:-)
அருமையாக தொகுத்திருக்கிங்க..;)
பி லெனின் தவமாய் தவமிருந்து படம் அருமையான ஒன்று ;)
அடடா திரையரங்க எடிட்டிங் என்று ஒன்று இருக்கா? ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
நாட் பிடிப்பதையும், சீன் பிரிப்பதையும் நீங்கள் விளக்கியுள்ள விதம் அருமையோ அருமை:):):)
//
எடிட்டிங் நன்றாக இல்லை என்றால் எஸ் எஸ் சந்திரன் போன்றவர்கள் கடைசி ஃப்ரேம் வரை வசனம் பேசிக்கொண்டிருப்பதை நாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிவரும்//
ஹா ஹா ஹா கலக்கலோ கலக்கல்.
தமிழ் பறவை, விலெகா, கோபிநாத், இளா, ராப் தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.
விறுவிறுப்பு மட்டுமில்லாமல் திரையில் டெக்னிக்கலாய் பல ஜிகினா வேலை செய்பவரும் ஆண்டனிதான் என நான் நினைக்கிறேன். சரியா முரளிகண்ணன்?
கலா போன்ற டான்ஸ் மாஸ்டர்களும், இவர் எடிட்டிங் என்றால், அதற்க்கு ஏற்றால் போல் நடனம் அமைக்கிறார்களாம். சிம்பு, இவரிடன் அசிஸ்டன்டாக இருக்கிறாராம்.
//எடிட்டிங் நன்றாக இல்லை என்றால் எஸ் எஸ் சந்திரன் போன்றவர்கள் கடைசி ஃப்ரேம் வரை வசனம் பேசிக்கொண்டிருப்பதை நாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிவரும்//
:-)))
சரவண குமரன் தங்கள் வருகைக்கு நன்றி. தாங்கள் கூறிய அனைத்தும் சரியே.
லெனின், முன்பு "டிடி"க்காக ஒரு டெலிசீரியல் இயக்கியதாக ஞாபகம். டைட்டில் "சின்ன விஷயம்" என்று நினைக்கிறேன்(தவறாகவும் இருக்கலாம்). "என் இனிய இயந்திரா" ஒளிபரப்பப் பட்ட காலத்தில் ஒளிபரப்பப்பட்டது.
எனது வலைப்பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி..
உங்களுடைய திரை சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. தொடரவும். வாழ்த்துக்கள்.
ஹை அண்ணா ரொம்ப அழகா எழுதீருக்கீங்க... :)))))) (தயவு செஞ்சு என்னோட சினிமா தொடர் பதிவ மட்டும் படிச்சிடாதீங்க..:(( )
எப்படிங்க இவ்ளோ தகவல்களை அள்ளி விடறிங்க???
யொசிப்பவர் சொன்னது சரி தான் அந்த நாடகத்தின் பெயர் ‘சின்ன விஷயம்’.
மோசமான் எடிடிஙை நம்மாள் நன்றாகவே உணர முடியும் உ.த.
ஹீரோயின் வசனம் பேசிக்கொண்டிருக்கும் போது சம்மந்தமெ இல்லமல் ஹீரோவின் க்லொச்சப் ஷாட் ஒன்று ஒரு சில வினாடிகள் உணர்ச்சியெ இல்லத அந்த முகத்தை காட்டுவார்கள்..இது அந்த சீனி மூடையே கெடுத்துவிடும்..
அடுத பதிவை ஆவலுடன் எதிர்பர்க்கிறேன்..
அதுத்த பதிவர் சந்திப்பு எப்பொப்பா?
வருகைக்கு நன்றி பாசகி, அக்னிபார்வை.
\\அதுத்த பதிவர் சந்திப்பு எப்பொப்பா?
\\
பதிவர் சந்திப்பு அடுத்த வார இறுதியில் நடைபெறும் வாய்ப்புள்ளது. சக பதிவர்களிடம் பேசிக்கொண்டுள்ளோம். விரைவில் அறிவிக்கிறோம்.
முரளி...பதிவு வழக்கம் போல் கலக்கல். சமீபத்தில் எடிட்டிங்கில் ரசித்த படம் சென்னை 28. வீதி சிறுவர்கள் விளையாடுவதைக் காட்டி எழுத்து போடுவதில் தொடங்கி படம் முடியும் போது போட்ட "தொகுப்புக் காட்சிகள்" வரை துள்ளலாய்த் தொகுத்திருப்பார். யாரென்று பார்த்தால் நம்ம லெனின். உண்மையில் அவர் ஒரு ஜெம்.
தமிழ் திரையுலகில் படத்தொகுப்பு மூலமும் ரசிகர்களை கவரலாம் என்று உணரவைத்ததில் சின்ன சின்ன ஆசை பாடலுக்கு முக்கிய பங்கு உண்டு என்று நினைக்கிறேன்
செல்வம்,புருனோ தங்கள் வருகைக்கு நன்றி
எங்க இருந்து தான் உங்களுக்கு இது மாதிரி தகவல்கள் கிடைக்குதோ..
Universityல இந்த ஆய்வு தான் செய்யறீங்களோ??
ச்சும்மா.. லுல்லுலாய்க்கு..
அருமையா விளக்கி இருக்கீங்க...
வருகைக்கு நன்றி சென்.
என் பின்னுட்டத்த மட்டும் விட்டது ஏனோ அண்ணா?? :((
\\ ஸ்ரீமதி said...
என் பின்னுட்டத்த மட்டும் விட்டது ஏனோ அண்ணா?? :((
\\
ம்ம்ம்...சிம்பிள் உங்களை அவருக்கு பிடிக்கலைன்னு அர்த்தம்...கிகிகிகிகிகிகி ;))))
\ ஸ்ரீமதி said...
என் பின்னுட்டத்த மட்டும் விட்டது ஏனோ அண்ணா?? :((
\\
மன்னித்துக் கொள்ளுங்கள் ஸ்ரீமதி. தங்களின் வருகைக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
யோசிப்பவர், பிஸி தங்கள் வருகைக்கு நன்றி
//கோபிநாத் said...
\\ ஸ்ரீமதி said...
என் பின்னுட்டத்த மட்டும் விட்டது ஏனோ அண்ணா?? :((
\\
ம்ம்ம்...சிம்பிள் உங்களை அவருக்கு பிடிக்கலைன்னு அர்த்தம்...கிகிகிகிகிகிகி ;))))
//
கோபிநாத் பின்னூட்டத்தை மட்டும் விட்டது ஏனோ அண்ணா!! :((
கோபியையும் உங்களுக்கு பிடிக்கலைன்னுதானே அர்த்தம்...
ஹி..ஹி..ஹி..ஹி.. :)))
டிஸ்கி: இந்த பின்னூட்டத்திற்கு பதில் போடலைன்னா என்னையும் பிடிக்கலைன்னு வேற யாராச்சும் வந்து கேப்பாங்க சாக்கிரத! :)))
சென்ஷி வருகைக்கு நன்றி.
\\டிஸ்கி: இந்த பின்னூட்டத்திற்கு பதில் போடலைன்னா என்னையும் பிடிக்கலைன்னு வேற யாராச்சும் வந்து கேப்பாங்க சாக்கிரத! :)))
\\
பதில் போட மறக்கலை, மறக்கலை,மறக்கலை.
கோபிநாத் தங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment