November 21, 2008

காதலர் ஈகோவை மையமாக கொண்ட காதல் திரைப்படங்கள்

பெருநகர காதலர்களுக்கு ஜாதி,மதம்,பெற்றோர் போன்ற டிரடிசனல் வில்லன்கள் எல்லாம் இப்போது இல்லை. பல புதிய வில்லன்கள் வந்துவிட்டார்கள். அவர்களில் முக்கியமானவராக இருப்பவர் திருவாளர் ஈகோ. ஈகோவை அடிப்படையாக கொண்டு வந்த திரைப்படங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
அன்பே வா

பீல் குட் படம் என்றாலே ஞாபகத்துக்கு வரும் படம். எம் ஜி யார், சரோஜா தேவி நடித்த இப்படத்துக்கு பல சிறப்புகள். ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜியார் நடித்த ஒரே படம், காதலுக்காக எம்ஜியார் வருந்திய படம், ஏ சி திருலோகசந்தர் இயக்கத்தில் எம்ஜியார் நடித்த ஒரே படம், காதலர் ஈகோவை காட்சிப்படுத்திய முதல் படம் என.

பல திறமைகள் கொண்ட நாயகனை நாயகி வியக்கிறாள். ஆனால் காதலைச் சொல்லவிடாமல் ஈகோ தடுக்கிறது. நாயகனும் சொல்வதாய் இல்லை. ஒரு கட்டத்தில் நாயகி தனது முறைப்பையனை மணக்க ஒத்துக்கொள்கிறாள். பின்னர் அனைவருக்கும் உண்மை தெரிய சுபம்.

இப்படத்தில் எம்ஜியார் பேசும் காதல் தோல்வி வசனம் " இதுவரை நான் அடைந்த வெற்றிகளெல்லாம் இந்த ஒரே தோல்வியில் அர்த்தமற்றதாகிப் போய்விட்டதே" . பாடல்களும், நாகேஷின் நகைச்சுவையும் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் என்று சரோஜா தேவி பாடுவதும், அதற்க்கு எம்ஜியாரின் ரியாக்ஷன்களும் கலக்கலாக இருக்கும். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,அன்பே வா போன்ற காதல் பாடல்களும், ஏ நாடோடி என்ற கலாட்டா பாடலும் இப்பொழுதும் கேட்கத் தூண்டுபவை.
எதிர்பாராத விபத்தாக அஜித்தின் ஆழ்வார் படத்தை ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அப்பொழுது எனக்கு தோன்றியது "இந்த கதையை எடுத்ததுக்கு பதிலா அன்பே வா படத்தை ரீமேக் பண்ணியிருக்கலாமெ இவங்க என்று?" நாகேஷ் வேடத்துக்கு விவேக், அசோகன் வேடத்துக்கு அப்பாஸ் இல்லையென்றால் வினீத். புண்ணாக்கு புண்ணியகோடி யாக (நாயகியின் அப்பா) மணிவண்ணன் அல்லது வேறு காமெடியன் என போட்டு எடுத்திருக்கலாம். லவ் பேர்ட்ஸ் பாட்டை யுவனை வைத்து ரீமிக்ஸ் செய்து, அசின் அபினயம் பிடிக்க, அதை அஜீத் கலாய்க்க அடடா.
ஏவிஎம் கூட திருப்பதி படம் எடுத்ததற்க்கு பதிலா இப்படி ஒரு படம் எடுத்திருக்கலாம்.
நிழல் நிஜமாகிறது

கமல்,சுமித்ரா,சரத்பாபு, அனுமந்து நடித்து எம் எஸ் விஸ்வனாதன் இசையமைத்த இந்தப்படத்திலும் நாயகியின் ஈகோவே காதலுக்கு தடையாய் அமைகிறது. சுமித்ராவின் அண்ணன் சரத்பாபு, அவரின் நண்பர் கமல். சுமித்ரா தனக்குத்தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளுடன் வாழும் பெண். அவளுக்கு கமலின் யதார்த்தமான வாழ்க்கைமுறை பிடிக்காமல் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவமானப்படுத்துகிறாள். காலப்போக்கில் கமலின் திறமைகளைக் கண்டு (பரதனாட்டியம், பாடல்) காதலிக்க நினைக்கிறாள். ஆனால் ஈகோ. பின் தான் நல்லவனாக நினைக்கும் தன் அண்ணனைவிட கமல் நல்லவன் என உணர்ந்து ஈகோவை தூக்கியெறிந்துவிட்டு வாழ்க்கையில் இணைகிறாள்.

இப்படத்தில் கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ போன்ற அருமையான பாடல்களை எம் எஸ்வி அமைத்திருந்தார்.
கமல் பாடுவதாக வரும் "ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானோ, ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே" போன்ற வரிகள் கதானாயகியை கடுப்பேற்றும்.
கம்பன் ஏமாந்தான் பாடலில் " இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே" எனவும் வெறுப்பேற்றுவார்.

குஷி

ஜோதிகாவுக்கு நட்சத்திர அந்துஸ்து வழங்கிய படம். மும்தாஜ்க்கு கவர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்திய படம். என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருந்த விஜய்யை நிமிர்த்திய படம்.

சூர்யாவின் குறும்பான வசனம்,இயக்கம், ஜீவாவின் ஒளிப்பதிவு, வெளி நாட்டு பாடல்களை சுட்டு தேவா அமைத்த துள்ளலான இசை என இளைமைத்துடிப்போடு வந்த படம்

நாயகன்,நாயகி சந்திக்கிறார்கள். தவறான புரிதல்கள் பின்னர் அதை உணர்ந்து நேசிக்கத் தொடங்குகையில், நாயகியின் ஈகோ குறுக்கே வருகிறது. தங்களின் நண்பர்களான காதல் ஜோடியை சேர்த்துவைக்க முயலுகையிலும் சண்டை. இறுதியில் இணைகிறார்கள்.

படத்தின் கதையை முதலில் சொல்லி ஆரம்பிக்கும் படம் இது. பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிக்க வெற்றி பெற்றது. இந்தியில் கரீனா கபூர் நாயகி. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.
இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜான் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் விஜய்,ஜெனிலியா நடிப்பில் உருவான சச்சின் படத்திலும் ஈகோவே காதல் தடையாக வருமாறு அமைக்கப்பட்டிருந்தது.

உன்னாலே உன்னாலே

ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வந்த படம். வினய் நாயகனாகவும், கஜோலின் கஸின் தனுஷா இணை நாயகியாகவும் அறிமுகமானார்கள். சதா நாயகி. இப்படத்தில் காதல் வந்த பின்னர் ஈகோ வருகிறது.

கதாநாயகி பொசசிவ் கேரக்டர் உள்ளவரா?, இல்லை ஈகோ அதிகமானவரா? அல்லது பெண்களுக்கே உண்டான இன்செக்யூரிட்டி மனப்பானமை கொண்டவரா என குழம்புமாறு காட்சி அமைப்புகள் இந்த படத்தில். எது எப்படியோ ஈகோவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
கதாநாயகியால் நாயகனை புரிந்துகொள்ள முடியவில்லை. காம்ப்ளக்ஸ் இல்லாத மற்றொரு நாயகி அவனை புரிந்து கொள்கிறாள்.

நாயகியின் எந்த குணம் காதலனை புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது?
கதாநாயகி பொசசிவ் கேரக்டர் உள்ளவரா?, இல்லை ஈகோ அதிகமானவரா? அல்லது பெண்களுக்கே உண்டான இன்செக்யூரிட்டி மனப்பானமை கொண்டவரா என குழம்புமாறு காட்சி அமைப்புகள் இந்த படத்தில். எது எப்படியோ ஈகோவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
உன்னாலே உன்னாலே, ஜுன் போனால், ஒரு நாள் இன்றுன் போன்ற சிறப்பான பாடல்களும், எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்களும் படத்தின் பலம்.

32 comments:

நவநீதன் said...

நல்லா எழுதீருக்கீங்க....

நிலாக்காலம் said...

வழக்கம் போலவே நல்ல பதிவு. :-)

'ஜாதி மல்லி' படத்தில் முகேஷும் குஷ்பூவும் ஈகோ காரணமாகக் காதலை மறைத்து, இறுதியில் ஈகோவைக் கைவிட்டு வாழ்க்கையில் இணைவார்கள்.

கிரி said...

//அவர்களில் முக்கியமானவராக இருப்பவர் திருவாளர் ஈகோ//

ஹா ஹா சூப்பர்

//ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜியார் நடித்த ஒரே படம்//

அப்படியா!!!!

//லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் என்று சரோஜா தேவி பாடுவதும், அதற்க்கு எம்ஜியாரின் ரியாக்ஷன்களும் கலக்கலாக இருக்கும்//

உண்மை :-)

//வெளி நாட்டு பாடல்களை சுட்டு தேவா அமைத்த துள்ளலான இசை //

ஹி ஹி ஹி

அத்திரி said...

வழக்கம் போல் அருமை.நீங்கள்குறிப்பிட்டதில் நிழல் நிஜமாகிறது தான் அருமையான ஈகோ படம்.கமல்,சரத் பாபு,ஷோபா,சுமித்ரா, ஷோபாவுக்கு கடைசியில் ஜோடி ஆகிறவர் அனைவரின் நடிப்புமே இயல்பாக இருக்கும். ஆமா அவர் பெயர் என்ன முரளி

Ŝ₤Ω..™ said...

***
" இதுவரை நான் அடைந்த வெற்றிகளெல்லாம் இந்த ஒரே தோல்வியில் அர்த்தமற்றதாகிப் போய்விட்டதே"
***
நச்சு வசனம்.. படம் பார்க்காத என்னைப் போன்றவர்களுக்கு புதிய விடயம்..

Ŝ₤Ω..™ said...

***
எதிர்பாராத விபத்தாக அஜித்தின் ஆழ்வார் படத்தை ஒரு முறை பார்க்க நேர்ந்தது
***
எதிர்பாராம நடக்கறது தானே விபத்து.. நீங்க என்ன என்னைப் போல தெரிந்தே “ஏகன்” படம் போயிருந்தா அது தான் தப்பு..

Ŝ₤Ω..™ said...

***
"ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானோ, ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே"
***
இந்த வரியில் உள்ளது போல் பெண்கள் அடுப்படியில் தங்கள் ஆத்திரத்தை காட்டினால்.. அய்யோ நாம் என்ன ஆகிறது??

கார்க்கிபவா said...

அவ்வளவுதான் படங்கள் வந்திருக்கா இல்லை அடுத்த பாகம் வருமா தல?
குஷியில் விஜய் சொல்லும் சன்னமான் மயிறு வசனம் ஈகோக்கு நல்ல எடுத்துக்காட்டு. சூர்யாவின் மாஸ்டர் பீஸ்..

முரளிகண்ணன் said...

அத்திரி அவர் பெயர் அனுமந்து. பல படங்களில் குணசித்திர வேடங்களில் கலக்கியிருப்பார்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நவனீதன்,கிரி,நிலாகாலம்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சென், கார்கி.

\\அவ்வளவுதான் படங்கள் வந்திருக்கா இல்லை அடுத்த பாகம் வருமா தல?
\\

கார்கி சில இருக்கு, சுவராசிய தகவல்கள் தோன்றினால் பகிர்ந்து கொள்கிறேன்

Cable சங்கர் said...

காதல் திரைபடங்களில் ஒன்று காதல்ர்களுக்குள் பிரச்சனை இருக்க வேண்டும், அல்லது காதலுக்கு பிரச்சனை இருக்க வேண்டும், அப்படியில்லாத படங்கள் ஒடியதாக தெரியவில்லை.. மிக அருமையான பதிவு முரளி கண்ணன்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கேபிள் சங்கர்

கோபிநாத் said...

கலக்கல் ;))

விலெகா said...

வழக்கம்போல் நல்ல பதிவு.,ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடல் இன்றும் கூட பட்டி தொட்டியெல்லாம் கலக்குகிறது.அஜித் ஆழ்வார் படத்த்ற்கு பதில் இதில் நடித்து இருக்கலாம் உண்மையான கூற்று.

நசரேயன் said...

நான் எல்லாம் ஈகோ இல்லாமா கருத்து சொல்லி விட்டேன், அடுத்த பதிவு கதைக்கு எனக்கு கருத்தும் கிடைச்சுருச்சு.
நன்றி முரளிகண்ணன்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கோபிநாத், விலெகா.

thamizhparavai said...

ஈகோவை வைத்து இத்தனை படங்களா...? பகிர்ந்தமைக்கு நன்றி முரளி சார்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டண்டணக்கா. டணக்கா, டண்டணக்கா


திருடா திருடி


அசோகன் பாத்திரத்தில் சென்னைப் பெண்ணை வைத்துப் பாருங்கள். அன்பே வா திருடா திருடி ஆகிவிடும்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்,தமிழ்பறவை,சுரேஷ்

சரவணகுமரன் said...

நல்ல பதிவு, முரளிகண்ணன்...

கல்லூரி காதல் கதை முக்கால்வாசியில் ஈகோவுக்கு முக்கிய பங்கு உண்டு....

அரவிந்த் said...

உங்களால மட்டும் எப்படிங்க இதெல்லாம் முடியுது??..

(நான் கேட்டது பதிவைப் பற்றி மட்டுமல்ல.. ஆழ்வார் பார்த்தது பற்றியும்தான்)

narsim said...

எத்தனை ஆங்கிளில் சினிமாவை பார்க்க முடியுமோ அத்தனை கோணத்தையும் பதிவிடும் முரளி கண்ணன் வாழ்க!!

வாழ்வே மாயமும் இந்த வகையில் வருமோ?? லைட்டா..

நல்ல பதிவு.. அடுத்து ?? வில்லன்களைப் பற்றி கேட்டேனே தல..

Busy said...

//உங்களால மட்டும் எப்படிங்க இதெல்லாம் முடியுது??..

(நான் கேட்டது பதிவைப் பற்றி மட்டுமல்ல.. ஆழ்வார் பார்த்தது பற்றியும்தான்)//


Repeatu..................:)

Poornima Saravana kumar said...

//இதுவரை நான் அடைந்த வெற்றிகளெல்லாம் இந்த ஒரே தோல்வியில் அர்த்தமற்றதாகிப் போய்விட்டதே//

வசனம் சூப்பர்..நான் ரொம்ப குட்டி பாப்பாவா இருக்கும் போது பார்த்த படம்ங்க அதனால வசனங்கள் எல்லாம் சரியா நினைவு இல்லை.. பதிவு அருமை..

வெண்பூ said...

வித்தியாசமான லிஸ்ட் முரளி.. பாராட்டுக்கள்..

முரளிகண்ணன் said...

வரிகைக்கு நன்றி பூர்ணிமா சரண், வெண்பூ

rapp said...

//லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் என்று சரோஜா தேவி பாடுவதும், அதற்க்கு எம்ஜியாரின் ரியாக்ஷன்களும் கலக்கலாக இருக்கும்//

எல்லாம் சரி, ஆனா சரோஜாதேவி அவர்களோட மேக்கப்தான் பயமுறுத்தும்:):):)

நிழல் நிஜமாகிறது கொஞ்சம் ஆணாதிக்க வசனங்கள் நிறைந்திருந்தாலும், ஷோபா அவர்களின் பாகம் தான் சூப்பரா இருக்கும். அது எல்லாத்தையும் ஈடுகட்ற அளவுல இருக்கும்.

குஷில என்னதான் படம் பாட்டு எல்லாம் நல்லாருந்தாலும், விவேக் ரொம்பப் பிடிக்கும்:):):)

உன்னாலே உன்னாலே படத்தை விட கிளைமேக்ஸ் எனக்கு ரொம்பப்பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா தோணும். இதுல ஈகோ இருந்தாலும், சிலப் பெண்களுக்கு ஆண்களிடம் சில குணங்கள் பிடிக்காது. (இப்போ எனக்கே, வாரணம் ஆயிரம்ல வர்ற அப்பா கேரெக்டர் சுத்தமா பிடிக்காது. அதே சமயம் அவரை பிடிக்கிற பெண்களும் இருக்காங்க) அதால, அது அவங்களோட(காதலன் வினய்) கூடப்பிறந்த குணம், மாத்திக்க மாட்டாங்க, அதே சமயம் தன்னாலையும்(சதா) இதை டாலரேட் பண்ண முடியாதுன்னு சதா பிரிஞ்சிடுவாங்க. பொஸசிவ்னெஸ் கொஞ்சம், ஈகோ கொஞ்சமே கொஞ்சம், ஆனா நான் மேலே சொல்லிருக்கும் காரணம்தான் முக்கியக் காரணம்னு நினைக்கிறேன்.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி ராப்.

உன்னாலே உன்னாலே வை பெண்ணின் கோணத்தில் என்னால் யோசிக்க முடியவில்லை.

தங்களின் கோணம் சரி.

அக்னி பார்வை said...

அன்பே வா அருமையான படம் அதிலும் , தலைவர் கலக்கியிருப்பார்

Anonymous said...

Ungalluku theriyatha vizhayamaga ithu orrukathunu nenaikiren.

Nizhal nijamaguirathu is the remake of telugu movie "Chilakamma Cheppindi" directd by eranki sharma who was the assistant of KB. Later KB remade this movie in tamil starring Shoba, kamal, sarath babu, anumanth and sumithra. The intresting part is kamal dos the role rajini did in telugu. Chilakamma Cheppindi is one of the thalivar movie have not seen it yet.

Anonymous said...

Ungalluku theriyatha vizhayamaga ithu orrukathunu nenaikiren.

Nizhal nijamaguirathu is the remake of telugu movie "Chilakamma Cheppindi" directd by eranki sharma who was the assistant of KB. Later KB remade this movie in tamil starring Shoba, kamal, sarath babu, anumanth and sumithra. The intresting part is kamal dos the role rajini did in telugu. Chilakamma Cheppindi is one of the thalivar movie have not seen it yet.

Selva