November 12, 2008

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா?

தற்போதுள்ள பல தயாரிப்பாளர்கள் வினியோகத்துறையில் இருந்து வந்தவர்களே. முன்பு இருந்த வினியோக கட்டமைப்பு அவர்கள் தயாரிப்பாளார்கள் ஆவதற்கு தேவையான விவரங்களை கொடுத்தது. இப்போது மாறி வரும் வினியோகமுறைகளும், கார்பொரேட் நிறுவனங்களின் நுழைவும் சமன்பாட்டை மாற்றியுள்ளன. இத்துறையில் முன் இருந்த நிலைமை, தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முக்கிய வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக மாறியது, அதன் சாதக பாதகம் இவற்றை பார்க்கலாம்.

வினியோக ஏரியாக்கள்

சிட்டி – சென்னை நகரம்
என் எஸ் சி – பழைய வட ஆற்காடு, தென் ஆற்காடு,
செங்கல்பட்டு மாவட்டங்கள்
சேலம் – பழைய சேலம்,தர்மபுரி மாவட்டங்கள்
கோவை – பழைய கோவை (கொங்கு பெல்ட்)
டிடி - திருச்சி,தஞ்சாவூர்
எம் ஆர் - பழைய மதுரை ராமனாதபுரம் மாவட்டம்
டிகே - திருனெல்வேலி, கன்னியாகுமரி

இதுதவிர ஆந்திர,கேரள,கர்னாடக மாநில உரிமை மற்றும் எஃப் எம் எஸ் எனப்படும் வெளினாட்டு வினியோக உரிமை

கலைப்புலி தாணு

ஜி சேகரன் உடன் இணைந்து என் எஸ் சி, சிட்டி ஏரியாவில் பழைய, புதிய படங்களை வினியோகித்துக் கொண்டிருந்தவர். பழைய படங்களுக்கும் சிறப்பாக விளம்பரம் செய்து ஓட்டியதில் புகழடைந்தவர். சூப்பர் ஸ்டார் என்னும் அடைமொழியை பைரவி படத்துக்காக ரஜினிக்கு சூட்டியவர். முதலில் தயாரித்த யார் பட வெற்றியை தொடர்ந்து நல்லவன், புதுப்பாடகன்,கூலிக்காரன் போன்ற விஜயகாந்த் படங்களையும், கிழக்கு சீமையிலே,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க போன்ற படங்களையும் தயாரித்தவர். ஆளவந்தான், சக்கரகட்டி என ரிஸ்க் எடுக்கவும் இவர் தயங்கியதில்லை. வைகோ கட்சி தொடங்கியதில் இருந்து மதிமுக வில் உள்ளார். 94 மயிலை இடைத்தேர்தலில் கடும் போட்டிக்கிடையேயும் 10,000 க்கும் அதிக வாக்குகள் பெற்றவர். இசை அமைப்பிலும் இவர் ஆர்வம் கொண்டவர். ஜி சேகரன் பின் இவரிடம் இருந்து பிரிந்து ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் மற்றும் பல திகில் படங்களை தயாரித்தார்

ராஜ்கிரண்

எம் ஆர் ஏரியாவின் வினியோகஸ்தரான இவர் ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் என்னும் நிறுவனம் தொடங்கி என்ன பெத்த ராசா (ராமராஜன்), என் ராசாவின் மனசிலே (ந்டிப்பு), அரண்மனைகிளி (இயக்கம் + நடிப்பு) போன்ற படங்களை தயாரித்தார். வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர். இளையராஜாவின் ஆப்த நண்பர்.

கே டி குஞ்சுமோன்

ஒரு மாதிரி மலையாள படங்களை பினாமியாக தயாரித்தவ்ர் என்ற வதந்தி உண்டு. நாயகன் (1987) படத்தை என் எஸ் சி ஏரியாவில் வினியோகித்தது இவருக்கு திருப்பு முனையை தந்தது. பின் வசந்த கால பறவை, சூரியன், ஜெண்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற படங்களை தயாரித்தார். காதலனில் அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டியை கிண்டல் செய்ததால் ஜெயலலிதாவின் பாசத்துக்கு உரிமையாகி கேரள மாநில அதிமுக பொறுப்பாளர் ஆனார். ரட்சகன் காலை வாரியதாலும், புத்திர பாசத்துக்காக கோடீஸ்வரன் என்னும் படத்தை தயாரித்ததாலும் காணாமல் போனார். இப்போது காதலுக்கு மரணமில்லை என்னும் படத்தை தயாரிக்கிறார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன்

என் எஸ் சி ரவி என அறியப்பட்டவர். ஜாக்கி சானின் பல படங்களை இங்கு வெளியிட்டவர். காதலுக்கு மரியாதையில் ஜாக்பாட் அடித்தவர் இவர். சங்கிலி முருகன் தயாரித்த இப்படத்திற்க்கு பிண்ணனி இசை அமைக்கும் போது இளையராஜா இது கண்டிப்பாக வெற்றிபெரும் என கணித்து தாணுவை வாங்கச் சொன்னாராம். தாணுவோ இதுபோலத்தான் கற்பூர முல்லைக்கும் (உண்மையில் அது ஓரளவு நல்ல படம், சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் அலையில் காணாமல் போனது). சொன்னார். பாசில் மேல் நம்பிக்கை இல்லை என மறுத்துவிட்டார். ரவிச்சந்திரன் இதை சரியாக கணித்து வாங்கி பெரிய லாபம் அடைந்தார். பின்னர் விக்ரமன் படங்கள் மூலமும் நன்கு சம்பாதித்தார். அதனால் தான் முதன் முதல் பட தயாரிப்பில் இறங்கும்போது விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்க வானத்தை போல படத்தை தயாரித்தார். காரணம் விஜயகாந்துக்கு பி சி ஆடியன்ஸ், விக்ரமனுக்கு பேமிலி ஆடியன்ஸ். எனவே படம் மினிமம் கேரண்டி. பின்னர் ரமணா,ரோஜாகூட்டம்,அன்னியன்,உன்னாலே உன்னாலே,தசாவதாரம், வாரணம் ஆயிரம் (தற்போது கை மாறிவிட்டது) என பல ஹிட் படங்களை தயாரித்தார். சிட்டி என் எஸ் சி ஏரியாவில் பல தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

சிவசக்தி பாண்டியன்

பாடியில் உள்ள சிவசக்தி என்னும் தியேட்டரை லீசுக்கு எடுத்து அங்கு படங்களை திரையிட்டதால் இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது. இவரும் தாணுவைப்போலவே பழைய படங்களை ஓட்டுவதில் வல்லவர். வான்மதி,காதல் கோட்டை,காலமெல்லாம் காதல் வாழ்க, கண்ணெதிரே தோன்றினாள், காதலே நிம்மதி, கனவே கலையாதே, வெற்றிக் கொடு கட்டு ஆகிய படங்களை தயாரித்தவர்.

சேலம் சந்திரசேகரன்

திருடா திருடி படத்தை அங்கு வினியோகித்தவர். பின் சுள்ளான், கஜினி போன்ற படங்களை தயாரித்தார்.

இது போல தியேட்டர் அதிபர்களும் வினியோகத்துறைக்கு வந்து பின் தயாரிப்பாளர்கள் ஆகியுள்ளனர். சென்னை அபிராமி ராமனாதன் ராஜாதி ராஜா, சிவாஜி போன்ற படங்களை வினியோகித்தார். இப்போது பஞ்சாமிர்தம் என்னும் நகைச்சுவை படத்தை தயாரிக்கிறார். உதயம் திரையரங்க பார்ட்னர் மந்திர மூர்த்தியும் தயாரிப்பாளர் ஆனார். கோவையின் புகழ்பெற்ற கேஜி காம்ப்ளக்ஸ், பாபா காம்ப்ளக்ஸ் காரர்களும் பல படங்களை வினியோகித்துள்ளார்கள். இவர்கள் தயாரிப்பாளர்கள் ஆவார்களா என பார்க்கலாம்.

வினியோகத்துறையில் சப்ளை செயின் மானேஜ்மெண்ட் எப்படி நட்க்கிறது என பார்ப்பதற்க்கு முதலில் சிட்டி, எம் ஆர் எப்படி எப்படி பிரிக்கப்பட்டுள்ளது என பார்க்கலாம்.

சிட்டி

முன்பு இது நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

மௌண்ட் ரோட் – சத்யம்/தேவி/ஆல்பட் வகையறா
கீழ்பாக்/புரசை - அபிராமி/சங்கம்/ஈகா
கே கே நகர்/வடபழனி – உதயம்/கமலா/காசி/ஏவிஎம்
ராஜேஸ்வரி
வட சென்னை – மகாராணி/பிருந்தா

90 களின் இறுதி வரையிலும் எந்த படமாக இருந்தாலும் சிட்டியில் நான்கு தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும். திருவான்மியூர், தாம்பரம், அம்பத்தூர் எல்லாம் என் எஸ் சி யை சார்ந்தது.

எம் ஆர்
மதுரை- 2, திண்டுக்கல் -1, தேனி-1, கம்பம்-1, ராம்னாட்-1, விருதுநகர்-1, ராஜபாளையம்-1, காரைகுடி-1 என 10 முதல் 12 பிரிண்ட் வரை மட்டுமே ஒரு படத்துக்கு போடப்படும். படத்துக்கு மொத்த பிரிண்டே 80 தான். இப்போது அது மாறிவிட்டது. சின்ன சின்ன இடங்களிலும் ரீலீஸ் ஆகிறது.

பழைய முறை வினியோகத்தில் சப்ளை செயின், தற்போது அது எப்படி மாறியுள்ளது என்பதும் எம்ஜி, அவுட்ரேட், ஷிஃப்டிங், டிசிஆர் போன்றவையும் அடுத்த பதிவில்.

36 comments:

Busy said...

ur really PHD

:)

Busy said...

Iam The First

SUREஷ் said...

இசை அமைப்பிலும் இவர் ஆர்வம் கொண்டவர்.////////


கூலிக்காரன் படத்துக்கு பெரிய சம்பளம் கொடுத்தாராமே........

Indian said...

//கோவையின் புகழ்பெற்ற கேஜி காம்ப்ளக்ஸ்//

They may not get into movie-making. They already sold/leased their theatre complex to Adlabs. They are into health-care (KG hospitals) for a long time and now ventured into IT and Realty( through KGISL).

அக்னி பார்வை said...

இவங்கல்ல ரவிசந்திரன் தவிர மதவங்கெல்ல field out ஆனவங்க..

சினிமா துறையில் இருக்கும் அனவருக்குமெ ஒரு முறை படம் த்யாரிக்க வெண்டும் என் ஆசை வரும்..சிலர் விதிவிளக்கு...

பாதி தயாரிப்பால்ர்கல் வினியோகிஸ்த்தர்களிடம் இருந்து பணம் வாங்கி தான் கடைசி நேர பட வேலைகளை முடிப்பார்கள்.அப்புறம், வினியோகிஸ்தர்கள் மக்குளடன் நேரிடயக தொடர்ப்பு இருப்பதாக நினைத்டு கொள்வார்கள்..தயாரிப்பாளார் படத்தை போட்டு காட்டுவதை மாற்றாவும் சொல்வார்கல் ..அப்போழுது அவரகல் , இதற்க்கு நாமெ ஏன் படம் தயரிக்ககூடாது என் நினைப்பது சகஜம் தான்.

சரவணகுமரன் said...

யப்பா! எப்படி இப்படி? கலக்குங்க...

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பிஸி,சுரேஷ்,இந்தியன்,அக்னி பார்வை

சரவணகுமரன் said...

அடுத்தது இந்த தலைப்புலயும் ஒரு பதிவு போடுங்க... :-)

"தயாரிப்பாளராகும் சாட்டிலைட் சேனல்கள்"

கார்க்கி said...

நல்ல விவரங்கள். கலக்கறீங்க. ஆஸ்கார் ரவிச்சந்திரனின் அண்ணன் தன் விஷ்வா சுந்தர். புதிய கீதை எடுத்து துவண்டு போனவர். இவர் மூலம்தான் ரவி திரையுலகில் நுழைந்தார்.

Bee'morgan said...

ஏங்க முரளிக்கண்ணன், எங்கிருந்துங்க இத்தனை விவரம் புடிக்குறீங்க.. உங்களின் முதற்தொழிலே சினிமாதானா..?

ஒன்னாங்கிளாசிலிருந்தே 'சினிமா'னு ஒரு elective உங்களுக்கு இருந்திருக்கும் போல.. :) :)

முரளிகண்ணன் said...

சரவண குமரன், கார்க்கி தங்கள் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பீமோர்கன்

நசரேயன் said...

கலக்கல் முரளிகண்ணன்

கிரி said...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்..

விலெகா said...

கலக்குரீங்க முரளி அண்ணன், வழ்த்துக்கள்.

Ŝ₤Ω..™ said...

சூப்பர் முரளி.. ஒன்னும் சொல்லரதுக்கு இல்ல.. வழக்கம் போலவே கலக்கல்..

@ கார்க்கி தல.. முன்பு நான் ஒரு பன்னாட்டு வங்கியில் பணிபுரியும் போது விஷ்வாஸ் சுந்தர் நல்ல பழக்கம்.. ஆனா அவருதான் ஆஸ்கார் ரவியின் அண்ணன்னு எனக்கு தெரியாது.. தகவலுக்கு நன்றி

Ŝ₤Ω..™ said...

இங்கு எங்கள் அண்ணன்.. அஞ்சா நெஞ்சன்.. கலையுலக சிங்கம்.. (அரசியலில் அசிங்கம்..அது வேறு) திரு. விசய T ராசேந்தர் பற்றி குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்த முரளி அவர்களை கண்டிக்கிறேன்..

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்,கிரி,விலெகா,சென்

சூர்யா said...

//பின்னர் ரமணா,ரோஜாகூட்டம்,அன்னியன்,உன்னாலே உன்னாலே,தசாவதாரம், வாரணம் ஆயிரம் (தற்போது கை மாறிவிட்டது) என பல ஹிட் படங்களை தயாரித்தார். சிட்டி என் எஸ் சி ஏரியாவில் பல தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.//

நீங்க கமல் ரசிகராக இருக்கலாம் அதனால் தசாவதாரம் ஹிட் படம் என்று சொல்லாம்.

தசா வால் ரவிக்கு 20 கோடி வரை நட்டம். தசா இந்தி பதிப்பு இன்று வரை வெளி வரவில்லை காரணம் தசா வின் தமிழ் கொடுத்த பாதிப்பே.

தசா வை ரவிசந்திரனே சொந்தமாக தமிழகத்தில் வெளியிட்டார்.

வாரணம் ஆயிரத்தை கை மாற்றி விட முக்கிய காரணம் தசா தான்.

தமிழ்ப்பறவை said...

மொத்தத் திரைத்துறையையும் விடுவதாக இல்லை போல...
அருமையான அலசல் பதிவு...அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்....

புருனோ Bruno said...

உள்ளேன் ஐயா

முரளிகண்ணன் said...

அன்பு சூர்யா
நான் கமல் ரசிகன் தான்.ஆளவந்தான்,அன்பே சிவம் எல்லாம் தயாரிப்பாளரை ஏமாற்றியதை ஒத்துக்கொள்ள தயங்கியதே இல்லை. தசாவதாரம் வசூல் சம்பந்தமான பல செய்தி தொகுப்புகள் என்னிடம் உள்ளன. கோவையில் படம் வெளியிட்ட பிரமிட் சாய்மீரா விடம் கேளுங்கள் வசூல் எப்படி என்று?.

பட பட்ஜெட் - ஆஸ்கார் சொன்னபடி - 65 கோடி

முதல் இரண்டு வாரங்களில் வெளினாட்டில் மட்டும் - 75 கோடி வசூல்
சென்னை வசூல் (12 வாரம்) - 10 கோடி
ஆந்திரா - எந்த ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வேண்டுமானலும் பார்த்துக் கொள்ளுங்கள்
கேரளாவிலும் படம் வெற்றியே. சாட்டிலைட் உரிமை 4 கோடியே 1 லட்சம். (சிவாஜியை விட கூடுதலாக 1 லட்சம் கொடுத்து கலைஞர் டிவி வாங்கியுள்ளது)

இந்தியில் சிவாஜி படம் கூடதான் வரவில்லை. தற்போது அங்கு நிலவும் சூழ்னிலையே வேறு. இதுபற்றி என் முந்தைய பதிவொன்றில் எழுதியுள்ளேன்

விரைவில் முழு ஆதாரங்களுடன் தனிப் பதிவே எழுதுகிறேன்.

தங்களிடம் பட தோல்வி பற்றி ஆதாரம் இருந்தால் கொடுங்கள். திருத்திக் கொள்ளுகிறேன்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சென்,புருனோ,தமிழ்பறவை

முரளிகண்ணன் said...

அன்பு சூர்யா

தசாவதார வசூல் செய்திகள் தொடரும்.

the domestic market or rather the regional market, Kamal Hassan’s Dasavataram raked in Rs 3 crore in Chennai, and Rs 21 crore for the whole of Tamil Nadu. In the non-Southern markets, which got about 80% occupancy, the film grossed about Rs 60 lakh in the first three days of its running.

The film is anticipated to rake in close to Rs 100 crore as its theatrical revenue at the end of this week, as Chennai theatre owners state that the bookings for the next 10 days are house-full. If compared to Rajnikant’s Sivaji the film grossed over 25 crore in its first one week. Given the current figures, Kamal Hassan is currently one up.

Source: http://economictimes.indiatimes.com/News/News_By_Industry/Media__Entertainment_/The_Happening_grosses_315_mn_in_US/articleshow/3135416.cms


Kamal Hasan’s Dasavatharam has taken flying start in Andhra Pradesh. Although the film has not received rosy reviews and feedback, the initial collections for the film are extraordinary. The film has got biggest openings in Kamal’s career.

In Hyderabad, the film has witnessed near 100 percent collections in the first three days - Friday, Saturday and Sunday.


It has released in 34 theatres in Hyderabad and Secunderabad and all the shows recorded houseful at all centers.


Source: http://www.telugucinema.com/c/publish/news/dasavatharam_june1508.php


Kamal Hassan’s Rs 165 Crore magnum opus Dasavatharam, released in at least 50 theatres across Kerala on Friday, is already causing jitters to the Malayalam film industry. The Tamil film is running to packed houses with tickets being sold in black for a minimum of Rs 500. Buzzes are that the film will be soon dubbed in English and other universal languages too.


Source: http://www.kollywoodtoday.com/news/dasavatharam-is-running-in-packed-houses-in-kerala/


In UK Box Office Dasavatharam just missed the top 10 in it’s opening weekend (June 13- 15) by a meager $3247 dollars (US Figures) and opened in 11th place. The Total collection for the weekend was $246,777 (US Figures) or Rs.1.05 Crore. As it had the 2nd highest opening ever for a Tamil Movie there in a record 19 Screens for a per theater average of $12,983.


Source: http://www.boxofficemojo.com/intl/uk/?yr=2008&wk=24&p=.htm


In Malaysia Box Office Dasavatharam has opened very strongly at number 2 position with an amazing collection of $601,037 (US Figures) or Rs.2.56 Crore in it’s opening weekend (June 12- 15) As it had the 2nd highest opening ever for a Tamil Movie there as well in a record 58 Screens for a per theater average of $10,363.


Source: http://www.boxofficemojo.com/intl/malaysia/?yr=2008&wk=24&p=.htm


This is a historic moment for all of us from South India to be very proud of. As Dasavatharam has placed 7th in the overseas weekend box office for the week ending June 13-15. This data is taken from a well known authentic infact one of the leading box office reporting sites in the world called Boxofficemojo.com. Dasavatharam is the First Time a Tamil Movie has ever been placed in the top 10 at the International Box Office chart being published in this website with a total collection of $4,632,719 (US Figures) The collection equals to approximately 19.7 Croes for 3 days.


Source: http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=24&p=.htm


Dasavathaaram (also spelt as Dasavatharam) has not only lived up to the hype it created but it has, in fact, surpassed it. The film has witnessed a never-seen-before opening and is still sustaining the same tempo even after completing almost two weeks in theatres.


Some theatres are running 45 shows during the weekends. In total, it is said that nearly 400 shows are running in the city over weekends. There is a house full board outside theatres on weekends for all shows. If one does not book tickets in advance, then surely he or she will be reading the house full sign at the entrance instead of watching the film.


The business that the film does on weekdays is incredible! Theatre occupancy is anywhere around 90% on weekdays. It looks like Dasavathaaram is making people take leave from their work or study just like IPL did!


Indeed this is an epic from Kamal Haasan!


Source:

http://tamil.galatta.com/entertainment/livewire/id/Dasavathaaram_ruling_the_box_office_16398.html


In UK Box Office Dasavatharam on it’s 2nd weekend (June 20- 22) is in the 19th position with a collection of $88,311 (US Figures) or Rs.37.63 Lakhs. The drop of 64.2 % is the norm for all Tamil Movies being released there. It will without a doubt become the 2nd Highest Grossing Tamil Movie ever there by next weekend behind Sivaji although this is the only “overseas” market where it has no chance of catching up to Sivaji’s gross. As Dasavatharam is clearly way ahead in terms of “overall” collection in all other territories combined. But More on that later. So in two weeks at the UK Box office it has collected a total of Rs.1.82 Crore!

Source: http://www.boxofficemojo.com/intl/uk/?yr=2008&wk=25&p=.htm


In Malaysia Box Office Dasavatharam on it’s 2nd weekend (June 19-22) is rock steady with a collection of 394,001 (US Figures) or Rs.1.68 Crore. The 2nd week hold in Malaysia is the best ever for a Tamil Movie. Another strong hold next week and it will have an excellent chance of becoming the Highest Grossing Tamil Movie in Malaysia of all time beating Sivaji. So in two weeks at the Malaysia Box office it has collected a total of Rs.5.15 Crore!

Source: http://www.boxofficemojo.com/intl/malaysia/?yr=2008&wk=25&p=.htm


In it’s 2nd weekend (June 20-22) at the International Box Office Dasavatharam has placed 11th (again a record for a Tamil Movie) as reported by Boxofficemojo.com with a collection of $3,416,778 (US Figures) or Rs.14.56 Crore. Which brings the total collection of Dasavatharam from 13 territories to $ $11,653,212 (US Figures) or Rs.49.67 Crore in just two weeks.


Source: http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=25&p=.htm


Summary: When you compare the “Overall” Box Office Collections of DASAVATHARAM to Sivaji from last year during the same time frame it becomes very clear who is in the lead clearly...it is DASAVATHARAM BY MILES! Here’s the Link for Sivaji’s International Collection reported by the same Boxofficemojo.com after 2 weeks from 13 territories (same as Dasavatharam) from last year (2007).


Source: http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2007&wk=25&p=.htm


As you can see the collection figures of Sivaji was $3,705,252 (US Figures) or Rs. 15.8 Crore. Whereas the Box Office figures for Dasavatharam after the same time period from the same amount of territories is Rs.49.67 Crore. Therefore it can easily be proclaimed as the Highest Grossing Movie in the History of Tamil Cinema and one of the Biggest ALL TIME BLOCKBUSTERS ever to come out of India with collections from it’s home state “TAMIL NADU” still to be added. Assuming the Budget as reported by various medias as well as in interviews given by the director of the movie and the producer Mr. Aascar Ravichandran is somewhere around 65-70 croes. The overseas collection in another 2 weeks itself will surpass the production cost of the movie therefore whatever it makes back at home are pure profits. If one were to make an educated guess of the total collection of DASAVATHARAM including all the languages it had dubbed and released in, the televisions rights, audio sales and future dvd sales of the movie the final number will be earth shattering. A BLOCKBUSTER OF EPIC PROPORTIONS ANY WAY YOU LOOK AT IT.


Great deal of research and time has spent on putting DASAVATHARAM’S BOX OFFICE REPORT TOGETHER as we want all the medias reporting on DASAVATHARAM TO HAVE “AS MANY OFFICIAL AND AUTHENTIC NUMBERS AS POSSIBLE.” Which is why there are various different sources included in this report in addition to one primary source. Bad Reviews, Mixed Reviews or Excellent Reviews never decides the fate of a movie at the box office. It can certainly help or hurt it a little bit but it’s ultimately the paying public who are the judges when it comes to which movies becomes a BLOCKBUSTER or a Flop. In the case of DASAVATHARAM the public has given it two BIG thumbs up and welcomed it with open arms despite a continuous effort from a lot of people from different sectors to downplay it’s success at the Box Office….the actual numbers however tell an entirely different story altogether which cannot be ignored.


One of the World’s BEST ACTOR MR. KAMAL HAASAN has done INDIA very proud by not only acting in TEN different characters but also writing the story, screenplay and dialogues for his ambitious project. We must all salute and applaud him for always trying to experiment and for never giving up in his quest to take INDIAN CINEMA to the World Stage.


We kindly request you to take a look at all the facts and figures provided here and after careful review of your team members to inform the public in any and all ways you see fit to the real status of this RECORD BREAKING BLOCKBUSTER CALLED DASAVATHARAM

முரளிகண்ணன் said...

என்னைப் பொருத்தவரையில் சுப்ரமணியபுரம் தசாவதாரத்தை விட மேல். ஆனால் பட வசூலில் குறைவில்லை என்பதற்க்காகவே இந்த பதில்கள். நான் கமலின் தீவிர ரசிகன் தான். கமலின் உச்சக்கட்டம் தசாவதாரம் இல்லை. வெற்றிப்பாதையில் அதுவும் ஒரு படிக்கல்.

20 கோடி நஷ்டம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

starjan said...

முரளி,
பெரிய கதாநாயகர்களால் மோசம் போன தயாரிப்பாளர்கள் நிறையபேர் உண்டு . அவர்கள் வாழ்வு இறைவனுக்கே வெளிச்சம் .

starjan said...

முரளி,
பெரிய கதாநாயகர்களால் மோசம் போன தயாரிப்பாளர்கள் நிறையபேர் உண்டு . அவர்கள் வாழ்வு இறைவனுக்கே வெளிச்சம் .

முரளிகண்ணன் said...

அன்பு ஸ்டார்ஜான்

கமல் வசூல்ரீதியாக தோல்விப்படங்கள் குடுத்தது உண்மைதான். நான் கமல் என்னும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞனுக்குத்தான் ரசிகன். இருந்தாலும் தசாவதாரம் 20 கோடி நஷ்டம் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை

கோபிநாத் said...

யப்பா...முரளி அண்ணாச்சி கலக்குறிங்க..;))

\\கலைப்புலி தாணு\\\

மகளிர்மட்டும் படத்தில் கூட இவர் நடித்தார். ஆளவந்தான் படத்திற்காக மகாராணி பக்கத்தில் உள்ள சொந்த வீட்டை வித்துட்டார். இப்போ சக்கரகட்டியில் எதை எல்லாம் வித்தாரோ..பாவம்.!


அண்ணாச்சி...இதயக்கோவில் படத்தை எடுத்தவார் கூட ஒரு வினியோகஸ்தர் கம் தயாரிப்பாளர் தானே!!!??

கோபிநாத் said...

\\விரைவில் முழு ஆதாரங்களுடன் தனிப் பதிவே எழுதுகிறேன்.\\\

கலக்கல் பதில் அண்ணாச்சி...நேரம் கிடைக்கும் போது போடுங்கள் ;))

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கோபிநாத்

cable sankar said...

//தசா வால் ரவிக்கு 20 கோடி வரை நட்டம். தசா இந்தி பதிப்பு இன்று வரை வெளி வரவில்லை காரணம் தசா வின் தமிழ் கொடுத்த பாதிப்பே.

தசா வை ரவிசந்திரனே சொந்தமாக தமிழகத்தில் வெளியிட்டார்.

வாரணம் ஆயிரத்தை கை மாற்றி விட முக்கிய காரணம் தசா தான்.//


நான் இதற்கு விளக்கம் கொடுக்கலாம் என்று நினைத்திருந்த போது முரளிகண்ணனின் ஆதாரமே போதும் என்று விட்டுவிட்டேன்..

தசாவதாரத்தை வாங்க.. வால்ட்டிஸ்னியும், யூடிவியும் 80 கோடி வரை கேட்டு விற்க மறுத்துவிட்டார் ரவி.. ஏனென்றால் கண்டிப்பாய் இந்த படம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கைதான்..

வாரணம் ஆயிரம் திரைப்படம் விற்கபட்டதற்கான காரணம் நஷ்டமல்ல.. ஏற்கனவே கெளதமுக்கும் ரவிக்கும் 14கோடிக்கு ஃப்ர்ஸ்ட் காப்பியில் பேசப்பட்ட படம் பட்ஜெட் எகிறி 21கோடி ஆனது.. அதை ரவியிடமிருந்து கெளதமே 24க்கு வாங்கி, அழகிரிக்கு 28க்கு கொடுத்தாய் தகவல். இதனால் தெரிவிப்பது என்னவென்றால் நஷ்டம் என்பதே சும்மா காதில் புகை சமாச்சாரம் தான்.

முரளிகண்ணன் நானே நீங்கள் இந்த விஷயத்தை பற்றி எழுதவேண்டும் என்று நினத்திருந்தேன்.. உஙக்ள் பதிவு அருமை.

முரளிகண்ணன் said...

கேபிள் சங்கர்,

தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. திரைத்துறையுடன் தொடர்பு கொண்ட தங்களின் தகவல்கள் எனக்கு உற்சாகத்தை அளிக்கின்றன.

narsim said...

முரளி கண்ணன்..

அருமையான தொகுப்பு..

வில்லன்களை பற்றி தகவல்கள் கொடுங்கள் தலைவா.. வீரப்பா டு சுமன்..

நர்சிம்

rapp said...

எனக்கு இப்போ வரைக்கும் சந்தேகம் என்னன்னா, ஒரு பெரிய ஸ்டார் நடிச்சு வந்த படம் ஓடலைன்னா பாதிக்கப்படறது விநியோகஸ்தர்களா இல்லைன்னா தயாரிப்பாளர்களான்னு, இந்தப் பதிவிலிருந்து ஒரு ஐடியா கெடச்சிருக்கு.

கிரி said...

கலைபுலி தானி பீனிக்ஸ் பறவை போல தான்..எத்தனை தோல்வி நஷ்டம் பார்த்தாலும் அதிலிருந்து மீண்டு வருகிறார்.