November 22, 2008

1979 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள்

கடந்த 75 ஆண்டுகளில் சிறந்த 10 தமிழ்படங்களை பட்டியலிடுமாறு எந்த பிரபலங்களைக் கேட்டாலும் இரண்டு படஙகள் மட்டும் தவறாமல் அந்த பட்டியலில் இடம் பெறும். அவள் அப்படித்தான் மற்றும் உதிரிப் பூக்கள். இந்த இரண்டுமே 79 ஆம் ஆண்டு வெளிவந்தவை. இவை தவிர இன்னும் ஏராளமான வித்தியாச கதைக் கருவை கொண்ட படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன.

அவள் அப்படித்தான்

பெண் நதியைப் போல. ஆணாதிக்கம் எனும் பெரும் பாறை அவள் போக்கில் குறுக்கிட்டு அவளின் இயல்பு மாறி பயணிக்க வைக்கிறது. அவளின் எல்லைகளை சுருக்குகிறது. மெதுவாக ஓடும் நதியால் அந்த பாறையை என்ன செய்ய முடியும்?. பல யுகங்களின் முடிவில் தான் கூழாங்கல்லாக மாற்ற முடியும். ஆனால் அவளே புதுவெள்ளமாக புறப்பட்டு பிரவாகமாக பொங்கினால் பாறையை உருட்டி விடலாமே?. அவ்வாறு பொங்குபவள்தான் இந்த மஞ்சு [ஸ்ரீபிரியா]. ருத்ரைய்யா இயக்கத்தில், கமல்ஹாசன்,ரஜினி நடித்து வெளியான படம். ஒரு ஆவணப்படம் எடுக்கும் நிகழ்வை கதைக்களமாக வைத்து பெண்ணுரிமையை பேசியபடம். உறவுகள் தொடர்கதை என்னும் இனிமையான பாடலும் உண்டு. ஸ்ரீபிரியா பேசும் பெண்ணிய வசனங்கள் அப்போது அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றினாலும் அதில் இருந்த நிஜம் அனைவரையும் சுட்டது.

உதிரிப் பூக்கள்

மணிரத்னம் சில காலம் முன் ஒரு பேட்டியில் சொன்னது “ உதிரிப் பூக்கள் போல ஒரு படம் கொடுத்து விட்டால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்ததற்கு எனக்கு ஒரு நிறைவு கிடைக்கும்”. எனக்கென்னவோ அதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் விஜயன், அஸ்வினி,சரத் பாபு, சாருஹாசன் நடிப்பில் வெளியான இந்தப்படம் தமிழ்சினிமாவின் மைல்கல் படம். ஊர் பெரிய மனிதரும், பள்ளி தாளாளருமான விஜயன், மனைவி உடல் நலமின்றி இருப்பதால் தன் மைத்துனியை திருமணம் செய்ய நினைக்கிறார். மனைவி இறக்க, பின் இவர் பல தவறுகள் செய்ய, ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் மறக்கவே முடியாத கிளைமாக்ஸ். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் ஹாஜா ஷெரிப்,அஞ்சு. இவர்கள் பங்கு பெறும் அழகிய கண்ணே எனும் பாடலில் காட்டப்படும் தாய், குழந்தைகளுக்கு இடையேயான அன்னியோன்யம் கண்ணில் நீரை வர வழைத்து விடும். மிக குறைவான வசனங்கள். ஆனால் எல்லாமே கத்தியின் கூர்மை. என்றும் இல்லாத திருநாளாய் கடுகடு கணவன் பூ வாங்கி அனுப்புகிறான். அதை பெற்றுக் கொண்ட மனைவி வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்க்கிறாள். மழை வருகிறதா என்று?. இதுபோல பெரும்பாலான காட்சிகள் வசனமே இல்லாமல் சிம்பாலிக்காகவே அமைக்கப்பட்டிருக்கும்.


ரோசாப்பூ ரவிக்கைக்காரி

சிவகுமாரின் 100 வது படம். தீபா நாயகி,இது ஒரு பீரியட் பிலிம். சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் வண்டிச்சோலை என்னும் கிராமத்தில் நடைபெற்ற கலாசார மாற்றங்களை திரையில் பிரதிபலித்த படம். செம்பட்டை (சிவகுமார்) அந்த கிராமத்தில் சிறு சிறு வேலை செய்துவருபவர். அவருக்கு நகரத்து நாகரீகப் பெண் (தீபா) மனைவியாக அமைகிறார். தீபாவுக்கு, தன் தந்தையின் நண்பரும் வனத்துறை அதிகாரியுமான சிவசந்திரனுடன் தொடர்பு ஏற்படுகிறது. சிவகுமாருக்கு இது தெரியவந்ததும் தற்கொலை செய்து கொள்கிறார். வெத்தலை வெத்தலை வெத்தலையோ, உச்சி வகுடெத்து பிச்சிபூ வச்ச கிளி போன்ற பாடல்கள் கொண்டது. இப்படத்தின் பல காட்சிகள் சிம்பாலிக்காக அமைக்கப்பட்டிருக்கும்.

சுவரில்லாத சித்திரங்கள்

இயக்குனராக பாக்யராஜின் முதல் படம். சிறுநகரத்தில் கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்கள் குடியிருக்கும் தெருவொன்றில் நடைபெறும் சம்பவங்களே படம். கதானாயகியை ஒரு தலையாக காதலிக்கும் பாக்யராஜ், அவளை காதலிக்க அந்த தெரு தையல் கடையில் டாப் அடிக்கும் சுதாகர். தையல் காரர் கவுண்டமணி என இயல்பான பாத்திரங்கள். தண்ணி எடுக்கப்போகும் போது காதலனுக்கு சிக்னல் கொடுக்கும் காட்சிகள் யதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கும். பாக்யராஜ் தான் ஒருதலையாய் காதலித்தவளுக்காக ஒரு ஊமை கைம்பெண்ணை மணந்து கொள்வதும், ஆனால் இவர் செய்த தியாகம் அர்த்தமற்றதாகி விடுவதுமாய் முடிவு அமையும். காதல் வைபோகமே என்னும் துள்ளல் பாடல் இப்போது சுந்தர் சி யின் படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.


அழியாத கோலங்கள்

பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரதாப், ஷோபா மற்றும் சிறு வேடத்தில் கமல் நடித்த படம். இந்தி இசை அமைப்பாளர் சலீல் சௌத்ரி இசை அமைத்த படம். 15 வயதில் இருக்கும் விடலை பையன்களுக்கு வரும் காமத்தைப் பற்றி பேசிய படம். பூவண்ணம் போல நெஞ்சம் என்னும் காவியமான பாடல் கொண்ட படம்.

புதிய வார்ப்புகள்

இப்படபிடிப்பிற்கு ஹீரோயின் உட்பட அனைவரும் லொக்கேஷனுக்கு சென்று விட்டார்கள். இரண்டு, மூன்று நாள் படபிடிப்பும் முடிந்து விட்டது. ஹீரோ யார் என்று இயக்குனர் பாரதிராஜா யாரிடமும் சொல்லவில்லை. உதவி இயக்குனர் பாக்யராஜ் வாய் விட்டு கேட்டு விட்டார். நீதான்யா ஹீரோ என்கிறார் இயக்குனர். படமும் வெற்றி. இப்படத்தில் இடம் பெற்ற தந்தன தந்தன தாளம் வரும் பாடல் பல ஆண்டுகளுக்கு திரையில் காதல் வரும்போது குறிப்பால் உணர்த்த பயன்பட்டது.

பசி

இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஷோபா பெற்றார். துரை இயக்கிய இந்தப் படம் சென்னை குடிசை வாழ் மக்களை ஓரளவு எதார்த்தமாக பிரதிபலித்தது. விஜயன், டெல்லி கணேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏழ்மையிலும் கண்ணியம் தவறாதவர்கள் குடிசை வாழ் மக்கள் என்ற கருத்தை சொன்ன படம்.

கன்னிப்பருவத்திலே

ராஜேஷ்,வடிவுக்கரசி,பாக்யராஜ் நடித்த படம். பாலகுரு இயக்கி சங்கர் கணேஷ் இசைஅமைத்த படம். வடிவுக்கரசியின் கணவர் ராஜேஷ் தாம்பத்ய வாழ்வில் ஈடுபடும் தகுதி இல்லாமல் இருக்கிறார். பாக்யராஜ் இடையில் வருகிறார். சிக்கல்கள். இப்படத்தில் இடம்பெற்ற நடையை மாத்து சரியான நாட்டுப்புற பாணி குத்துப் பாடல். பட்டு வண்ண ரோசாவாம் என்ற அருமையான மெலடியும் உண்டு.

மாந்தோப்புக்கிளியே

சுருளிராஜனை மக்கள் இன்னும் மறக்காமல் இருக்கும்படி செய்த படம். இதில் அவர் ஏற்று நடித்த கஞ்சன் கதாபாத்திரம் ஒரு டிரெண்ட் செட்டர். எம் ஏ காஜா இயக்கிய இப்படத்தில் தீபா,சுதாகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

நிறம் மாறாத பூக்கள்

பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் விஜயன்,ரத்தி,ராதிகா, சுதாகர் நடித்த படம். ரத்தி இதில்தான் அறிமுகம். ஆயிரம் மலர்களே மலருங்கள், முதன் முதலாக காதல் டூயட் போன்ற இனிமையான பாடல்கள்.

ஆறில் இருந்து அறுபது வரை

நான் கமல் ரசிகனாக இருந்தாலும், ரஜினி நடிப்பிற்க்கும் மிகப் பெரிய ரசிகன் நான். ரஜினியின் ஆன்மீக, பெண்ணடிமை மற்றும் அரைகுறை அரசியல் கருத்துக்களுக்காகவே அவரை விமர்சிப்பேன். நண்பர்களுடனான விவாதங்களில் ரஜினியின் நடிப்பை யாராவது விமர்சித்தால் நான் சொல்லுவது ”முள்ளும் மலரும், ஆறில் இருந்து அறுபது வரை எல்லாம் பார், பின் பேசு”. ஒரு கண்டிப்பு மிகுந்த அண்ணனாக அமர்க்களப்படுத்தியிருப்பார் இந்த படத்தில். இந்த ஆண்டில் ரஜினியின் அன்னை ஓர் ஆலயம், தர்மயுத்தம்[ ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு] போன்ற படங்களும் வந்தன.

கல்யாண ராமன்

ஜி ரங்கராஜன் இயக்கிய முதல் படம். கமல் இருவேடம், ஒன்று எத்துப்பல். ஸ்ரீதேவி இணை. எத்துப்பல் அப்பாவி கமல் கலக்கியிருப்பார். பின் இந்த இயக்குனர் மீண்டும் கோகிலா, கடல்மீன்கள் போன்ற படங்களையும் இயக்கினார். இவருக்கு உதவவே கமல் மகராசன் படத்தில் நடித்தார்.

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

ஸ்ரீதர் இயக்கத்தில் விஜயகுமார், லதா,ஜெய்கணெஷ் நடிக்க வெளியான படம். நானே நானா, அபிசேக நேரத்தில், என் கல்யான வைபோகம் உன்னோடுதான், குறிஞ்சி மலரில் போன்ற இளையராஜாவின் அதி பயங்கர ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.

நினைத்தாலே இனிக்கும்

பாலசந்தர் இயக்கம். கமல்,ரஜினி,ஜெயபிரதா, எம் எஸ் வி இசை, கண்னதாசன் பாடல்கள். வேறெதுவும் சொல்ல வேண்டுமா?
பாலசந்தர் இயக்கிய நூல் வேலியும் இந்த ஆண்டுதான் வந்தது. கமல் ரஜினி இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் இந்த ஆண்டில் வந்ததே.

இப்படி பல வித்தியாச படங்கள் வந்தாலும் வசூலில் சாதனை படைத்த படம் சிவாஜியின் திரிசூலம். இப்படத்தில் மூன்று வேடம். அதில் அப்பா வேடம், சூழ்னிலையால் பிரிந்துவிட்ட தன் மனைவியிடம் தொலைபேசியில் பேசும் காட்சியின் வாய்ஸ் மாடுலேஷன் மிமிக்ரி கலைஞர்களால் இப்பொழுது உபயோகிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பல படங்கள் வணிக ரீதியிலும் சிறப்பாக இருந்தாலும் பஞ்ச கல்யாணி என்னும் படமும் பாப்பாத்தி என்னும் படமும் வினியோகஸ்தர்களை மகிழ்சிப்படுத்தியது. அழகிய சலவைத் தொழிலாளி, அவள் வளர்க்கும் கழுதை, ஒரு மைனர், ஒரு காதலன் இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை பி சி செண்டர்களை கலக்கியது. ரதி தேவி நாயகியாக நடித்த பாப்பாத்தி படம் வயது வந்தவர்களுக்கு மட்டும். நாயகி மேலாடை இன்றி நடித்த படம். இதுவும் பரபரப்பாக ஓடியது.

எந்த ஆண்டிற்க்கும் டாப் டென் பாடல்களை பட்டியலிடலாம். இந்த ஆண்டிற்கு அதை செய்தால் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான். இந்த ஆண்டின் சிறந்த மெலடி மற்றும் துள்ளல் இசைப் பாடல்களை ஒரு எம்பி3 ஆக பதிந்தால் விற்பனை ஓகோவென இருக்கும்.

42 comments:

cable sankar said...

மிக நல்ல பதிவு முரளி கண்ணன்.. நான் கமல் ரசிகனாக இருந்தாலும், ரஜினி மிக இயல்பான நடிப்பை நினைதாலே இனிக்கும் படத்தில் மீண்டும், மீண்டும்பார்த்து ரசித்தவன்..மேலும் உஙக்ள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

Viswa said...

வாழ்த்துக்கள் நண்பரே !

தொடர்ந்து எழுதுங்கள்

rapp said...

முரளிக்கண்ணன் சார், அருமை:):):) இந்தப் படமெல்லாம் இந்த ஆண்டில் வந்ததுன்னு தெரியாது. நீங்க போடற கலெக்ஷன் ரொம்ப ரொம்ப கலக்கல்:):):)

அவள் அப்படித்தான், அருமையானப் படம். அதுவும் ரஜினி சாரின் காட்சிகள், அப்புறம் அக்கா அக்கான்னு கூப்டு வேலையக் காட்டும் அபீஸ் ப்யூன், அவங்களை ஸ்ரீபிரியா அவர்கள் டீல் பண்ற விதம், அவ்ளோ சூப்பரா இருக்கும்.

உதிரிப்பூக்கள், சான்சே இல்ல, அதுவும் அஸ்வினி இறந்தப்புறம் குழந்தைகள் அவங்க சித்தி வீட்டுக்கு வந்து சாப்பாடு கேக்குமே, அதுவும் வருத்தமில்லாம, எந்த வித்தியாச உணர்ச்சியும் காட்டாம, பசிக்கிது, அங்க கிடைக்கல, அடுத்தது சித்தின்னு வந்து கேக்குற சீனை பார்த்தா எனக்கு இப்பவும் அவ்ளோ கஷ்டமாகிடும்.

சுவரில்லாத சித்திரங்கள் தான் கோவையோட இன்னொரு முகத்தை காட்டின படம்ல. அந்த லக்ஷ்மி அக்கா சீன் கூட கொஞ்சம் பிரபலம்ல.
அழியாதக் கோலங்கள் படத்த காப்பியடிக்க முயற்சிக்காதவங்கலே இல்லைல்ல:):):)

புதிய வார்ப்புகள் தான் ரதி அவர்களுக்கு முதல் படம்னு நெனச்சிருந்தேன், நிறம் மாறாத பூக்களா முதல் படம் ?

//இந்த படத்தில் சிவகுமாரும் இருப்பார்//

ம்ஹூம் இந்தப் படத்தில் சிவகுமார் இல்லைன்னு நினைக்கிறேன். ரஜினி தம்பியா எல்.ஐ.சி.நரசிம்மன் நடிச்சிருப்பார்.

நினைத்தாலே இனிக்கும் படமே ரஜினி சார் ஓகேவா இருக்காருன்னு சொல்றத்துக்கு எடுத்ததுதானே? அவங்க சேர்ந்து நடிச்ச கடைசிப் படமும்.

அதிரை ஜமால் said...

நல்ல முயற்சி முரளி கண்ணன்.

ரஜினியின் படங்களில் சில மிகவும் அருமையானவை.

அதில் எனக்கு பிடித்ததில்

புவனா ஒரு கேள்வி குறி

SUREஷ் said...

வசூலில் சாதனை படைத்த படம் சிவாஜியின் திரிசூலம். ///////
இது ஒரு சாதனைப் படம். ஷோலே பாடலை தமிழ் படுத்தி அமிதாப், தர்மேந்திரா செய்த எல்லா வித்தைகளையும் சிவாஜியே செய்து, நான் சொல்வதைவிட, நீங்கள் இரண்டு பாடல்களையும் பார்த்தால் மட்டுமே நான் சொல்வது புரியும்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கேபிள் சங்கர், விஸ்வா, ராப்,அதிரை ஜமால்.

ராப்,

\\ம்ஹூம் இந்தப் படத்தில் சிவகுமார் இல்லைன்னு நினைக்கிறேன்\\

சரிசெய்து விடுகிறேன்.

SUREஷ் said...

கல்யாண ராமன்
இதற்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டாம் பாகம் வெளியிட்டார்கள்

SUREஷ் said...

சிவகுமார் பு.ஒ.கே.கு. படத்தில்

SUREஷ் said...

குஞ்சம் வைத்த சட்டை, கல்லூரி முடித்த மாணவன் என படையப்பாவை விட திரிசூலம் அசத்தும்

SUREஷ் said...

எம் ஏ காஜா ///இவர் அவர்தானே

SUREஷ் said...

ஆறில் இருந்து அறுபது வரை

இது ஒரு நெகடிவ் அப்ரோச் படம். இவர் போண்ற அண்ணனுக்கு இது போன்ற தம்பிகள் வரவரவே மாட்டார்கள்

SUREஷ் said...

கமல் ரஜினி இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் இந்த ஆண்டில் வந்ததே.


ஹாஹாஹாஹாஹா

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

அத்திரி said...

யப்பா யாராவது முரளிக்கு சினிமா துறையில ஏதாவது பிஹெச் டி பட்டம் குடுங்கப்பா.

நீங்க சொன்ன இரு படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும் நாடக ஒத்திகை காட்சிகள் நல்ல நகைச்சுவை. இந்த மாதிரி கூத்தை எங்க ஊர்ல சின்ன வயசுல நாடகம் போடும் போது நேர்லயே பாத்துருக்கேன்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி, நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் மிகமிக அருமையாக இருக்கும்.பாக்யராஜை சிறந்த வில்லனாக காட்டிய படம் கன்னிப்பருவத்திலே. மாந்தோப்பு கிளிய்ந்ந் படத்தில் சுருளி சாப்பிடும் பொழுது ஊறுகாயை பார்த்து கொண்டே சாப்பிடும் காட்சி நல்லா இருக்கும்.

கார்க்கி said...

ஆறிலிருந்து அறுபது வரை.. தலைவர் அப்படியே போயிருந்தால் சூப்பராயிருக்கும்.. ஆனால் நான் அவரை த்லைவர் என சொல்லியிருப்பேனா? அது கிடக்குது, அருமை சகா.. நிறைய தகவல்கள்

முரளிகண்ணன் said...

அத்திரி, கார்க்கி வருகைக்கு நன்றி

அரவிந்த் said...

உண்மையில் இது போன்ற நல்ல படங்கள் ஒரே ஆண்டில் வந்துள்ளன என்பது நல்ல விஷயம்.. இப்போது?? ம்ம்.. எல்லாம் நம்ம நேரம்..

நீங்கள் குறிப்பிட்ட அனைத்து படங்களிலும் (ஓரிரெண்டு தவிர), மற்றவை அனைத்தும் கதை, இயக்கம், இசை மட்டும் படமாக்கப்பட்ட விதங்களுக்காவே வெற்றி பெற்றவை அல்லது தற்போது அறியப்படுபவை.

புரிஞ்சுதா??

அசோக் said...

வாழ்த்துக்கள் நண்பரே !

தொடர்ந்து எழுதுங்கள்.......

அசோக் said...

வாழ்த்துக்கள் நண்பரே !

தொடர்ந்து எழுதுங்கள்........

வெண்பூ said...

முரளி.. அசத்திட்டீங்க.. எவ்ளோ துல்லியமான விவரங்கள். அதுவும் 30 வருசத்துக்கு முன்னால இருந்து. அதிலயும் அப்ப வந்த சீன் படத்தை பத்தியெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்குறது ஆச்சர்யம். பாராட்டுக்கள்.

கானா பிரபா said...

எல்லாமே முத்தான படங்கள் தமிழ் சினிமாவின் பரிமாணத்தை ஒவ்வொரு படங்களுமே உணர்த்துகின்ற 1079 உண்மையில் ஒரு பொற்காலம் தான். அருமையான தொகுப்புக்கு நன்றி

நிலாக்காலம் said...

கலக்கலா தொகுத்து எழுதிருக்கீங்க! வாழ்த்துக்கள்! :-)

'அழியாத கோலங்கள்', அந்தப் படம் வெளியான நேரத்தில் மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். படத்தின் வெற்றி பற்றித் தெரியவில்லை. ஒரு வருடம் முன்பு தொலைக்காட்சியில் பார்த்த போது மிகவும் வியந்து போனேன். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பே 'துள்ளுவதோ இளமை' போல எடுத்திருந்தார்கள். ஆனால் 'துள்ளுவதோ இளமை' படத்தைக் காட்டிலும் 'அழியாத கோலங்கள்' வெகு இயல்பாகவே இருந்தது.

விலெகா said...

நண்பர்களுடனான விவாதங்களில் ரஜினியின் நடிப்பை யாராவது விமர்சித்தால் நான் சொல்லுவது ”முள்ளும் மலரும், ஆறில் இருந்து அறுபது வரை எல்லாம் பார், பின் பேசு”.
ஒரு கண்டிப்பு மிகுந்த அண்ணனாக அமர்க்களப்படுத்தியிருப்பார் இந்த படத்தில்.
உண்மையை அப்புடியே சொல்லியிருக்கிறீர்கள்

விலெகா said...

அருமையான படைப்பு.,அருமையான தகவல்கள்.,கலக்குறீங்க் அண்ணன்

விலெகா said...

அருமையான படைப்பு.,அருமையான தகவல்கள்.,கலக்குறீங்க் அண்ணன்

புருனோ Bruno said...

ஆறில் இருந்து அறுபது வரை --> இது போன்ற படங்கள் ஏன் இப்பொழுது வருவதில்லை

சகாதேவன் said...

பாக்கியராஜின் தாவணிக்கனவுகள் பார்த்தீகளா?
அதில் அவர் சினிமா ஆசையில் சென்னை வந்து துணைநடிகை ராதிகாவால் சின்ன சின்ன வேஷங்களில் நடிப்பார். ஒருநாள் பாரதிராஜா தான் டைரக்ட் செய்யும் காட்சியில் ஹீரோவும் சரியில்லை வசனமும் சரியில்லை என்று பேக் அப் சொல்வார். நான் என்ன நினைத்தேனோ அதையே டைரக்டரும் சொன்னார் பார் என்று அந்த காட்சிஎப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ராதிகாவிடம் சொல்லி நடித்துக் காட்டுவார்.

"பள்ளியில் பரீட்சை எழுதாமலேயே நீ பாஸ் ஆனபோது பெருமையாக இருந்தது. பெரியவளானதும் தாவணி வாங்கிக்கொடு. எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள் என்றாய்.அப்போதும் பெருமையாக இருந்தது. இன்று நான் கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டு வந்திருக்கிறேன். அந்த தேதியில் நீ வளைகாப்பே வைத்துக்கொள்ளலாம் என்கிறாயே" என்பார்.

பார்த்துக்கொண்டிருந்த டைரக்டர் பாரதிராஜா, பாக்கியராஜிடம், இனி இந்தப் படத்திற்கு ஹீரோவும் நீதான், ரைட்டரும் நீதான் என்று சொல்வார்.

புதிய வார்ப்புகள் படத்தில் அஸிஸ்டன்ட் பாக்கியராஜ் ஹீரோ ஆனது இப்படி ஒரு சந்தர்ப்பம்தானோ என நான் அன்றே நினைத்தேன். படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அப்படித்தானோ என்று தோன்றுகிறது.

சகாதேவன்

நாடோடி இலக்கியன் said...

நல்ல பதிவு முரளிக் கண்ணன்.
இப்போதுதான் உங்கள் பதிவிற்கு வருகிறேன்.நிறைய சுவையான தகவல்கள்.

ரஜினி ஒரு அற்புதமான நடிகர் என்பது மறுக்கமுடியாது,அவரின் படங்களில் எனக்குப் பிடித்தது முள்ளும் மலரும்,எங்கேயோ கேட்ட குரல் மற்றும் தில்லு முல்லு.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அரவிந்த்,அஷோக்,வெண்பூ

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கானாபிரபா, விலெகா,புருனோ, சகாதேவன், நிலாக்காலம்

நல்லதந்தி said...

தெரிஞ்சி போச்சி!தெரிஞ்சி போச்சி!.
முரளி எனக்கும் உங்களுக்கும் ஒரே வயசன்னு தெரிஞ்சி போச்சி!.கலக்குங்க தலைவா!.எனக்கு நீங்க சொன்ன விஷயம் எனக்குத்தெரிஞ்சாலும்,அதை கொண்டு சேர்க்கிற தன்மை இருக்கே,அடடா,இதை என்ன சொல்லிப் பாராட்டுவது.இதற்க்கு இணை,துணை எல்லாம் நீங்கதான்!.

நசரேயன் said...

நல்ல தகவல் நிறைந்த பதிவு முரளிகண்ணன்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்.

முதல் வருகைக்கு நன்றி நாடோடி இலக்கியன்

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நல்லதந்தி

தமிழ்ப்பறவை said...

'அவள் அப்படித்தான்' பார்க்க விரும்பி இன்னும் பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
'உதிரிப்பூக்கள்' பலமுறை பார்த்த படம்.இப்படம் 'சிற்றன்னை' என்னும் புதுமைப் பித்தனின் கதையினை மூலக்கதையாகக் கொண்டது என்னும் விபரத்தையும் சேர்த்திருக்கலாம். க்ளைமேக்ஸ் அபாரம். ஒரு வில்லனாகக் காட்டியவனின் முடிவுக்குக் கூட நம்மைக் கண்கலங்க வைத்த படம்.("அப்பா குளிக்கப் போறேம்ப்பா").இப்படத்தினைப் போல் கிராமங்களை வெகு இயல்பாகக் காட்டிய படங்கள் மிகக்குறைவு.
'ரோசாப்பூ ரவிக்கைக்காரி‍' இப்படத்தில் வரும் இன்னொரு இனிமையான பாடல்,"என்னுள்ளில் எங்கோ".

'சுவரில்லாத சித்திரங்கள்' இசை கங்கை அமரன். இப்படத்தில் ஃபேமஸ் டயலாக்..."சரோஜாஆ", "என்னங்க டெய்லர்?"..

'அழியாத கோலங்கள்' இது தமிழில் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் முதல் படம் என நினைக்கிறேன். இளையராஜா பிஸியாக இருந்ததால், சலீல் சௌத்ரி இசையமைத்தார்.பாடல் நன்றாக இருக்கும்.

ஆறிலிருந்து அறுபது வரை சற்று மிகைப்படுத்தப் பட்ட, விக்ரமன் பாணிப்ப்டமென்பது என் எண்ணம்.(கண்மணியே காதல் என்பது)

வழக்கம்போல நல்ல அலசல் முரளி சார்...

முரளிகண்ணன் said...

தமிழ் பறவை வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

பாபு said...

அழியாத கோலங்கள் என்னோட favourite
இப்போ கூட அந்த படம் டி.வி யில் போட்டால் பார்க்க உட்கார்ந்து விடுவேன்.
உதிரிப்பூக்கள் பார்த்திருந்தாலும்,திரும்ப பார்க்க நினைத்து நேற்றுத்தான் அந்த d.v.d வாங்கினேன்
அந்த song "அழகிய கண்ணே" சான்ஸே இல்ல.

நீங்க சொன்ன மாதிரி இந்த வருட பாடல்களை மட்டும் ஆடியோ c.d. போட்டால் சூப்பர் sales இருக்கும்

SurveySan said...

அசத்தல். எப்படிங்க, இவ்ளோ மேட்டர் தெரியுது உங்களுக்கு?
அமக்களம்.

//இந்த ஆண்டின் சிறந்த மெலடி மற்றும் துள்ளல் இசைப் பாடல்களை ஒரு எம்பி3 ஆக பதிந்தால் விற்பனை ஓகோவென இருக்கும்.//

உண்மை!

narsim said...

முரளி.. கலக்கல்..

சுவரில்லாத சித்திரங்களில் கவுண்டமணியின்.."ஆறுமுகம் இப்ப குளுகுளுனு இருக்குமே" வசனம் மறக்க முடியாதது!!

நல்ல நினைவுகள்.. நினைவாற்றல்!!

முரளிகண்ணன் said...

பாபு, சர்வேசன், நர்சிம் தங்கள் மேலான வருகைக்கு நன்றி

புதுகை.அப்துல்லா said...

"சரோஜா"
"என்னங்க டைலர்?"
"குப்பை கூட்டுறியா?"
"ஆமாங்க டைலர்!"
"சரி..கூட்டு..கூட்டு"

சுவரில்ல்லா சித்திரத்தில் இந்த வசனம் அடிக்கடி வரும்.இந்த வசனத்தில் கவுண்டரின் மாடுலேஷன் அசத்தலாக இருக்கும்.

(வேற என்னத்த சொல்ல...அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே )

nagoreismail said...

if you add robert-rajasekaran's "paalaivana solai", the article will complete

logesh aravindan said...

yesterday too i watched the movie uthiri pookal in dvd--courtesy mosbaer. fantastic, superb -- these words are an understatement. the climax brings tears, which creates sympathy for late vijayan, who did a memorable performance of his career.
thanks friends for this blog