June 29, 2009

என்னமோ போடா மாதவா - ஜனகராஜ் - பகுதி 1

கதாநாயக கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் அடியெடுத்து வைத்த ஆயிரக்கணக்கானோரில் ஜனகராஜும்
ஒருவர். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ஒரு சிறுவேடத்தில் அறிமுகமாகி பின்னர் பாலைவனச்
சோலை திரைப்படத்தில் ஐந்து கதை நாயகர்களில் ஒருவராக வெளிச்சத்துக்கு வந்த ஜனகராஜ் ஒரு பன்முகக்
கலைஞன். தற்கால மிமிக்ரி ஆர்டிஸ்டுகள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பதியவைத்துக் கொண்டிருக்கும்
ஜனகராஜ் என்ற பிம்பத்துக்கு முற்றிலும் மாறான திறமைகளைக் கொண்ட கலைஞன் ஜனகராஜ். எப்படி
மிமிக்ரிகாரர்கள் செய்யும் கமலின் நாயகன் அழுகையை மட்டுமே வைத்து இவ்வளவுதான் கமல் என்று
சொல்லிவிடமுடியாதோ அதுபோலத்தான் ஜனகராஜும். சில படங்களில் செய்த கோணங்கித்தனமான
உடல் மொழியையும், இழுத்துப் பேசும் பேச்சையுமே ஜனகராஜாக மீடியா கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
அதையும் தாண்டி பல பரிமாணங்களைத் தமிழ்திரையில் காட்டியவர்தான் ஜனகராஜ்.

82ல் தொடங்கிய கவுண்டமணியின் பொற்காலம் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதில் முதல் ஏழெட்டு
ஆண்டுகளில் கவுண்டமணிக்கு சவாலாக விளங்கியவர் ஜனகராஜே. முன்வரிசை கதாநாயகர்களின்
முதல் தேர்வாக ஜனகராஜே விளங்கினார்.

தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், ராஜாதிராஜா, அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியை ஒவ்வொரு
நிலையில் இருந்தும் அடுத்த நிலைக்கு உயர்த்திய படங்களில் ஜனகராஜ் இடம்பெற்றிருந்தார்.

நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள்,உன்னால் முடியும் தம்பி, குணா என கமலின் முக்கிய படங்களிலும்
ஜனகராஜின் பங்கு இருந்தது.

பாரதி ராஜா, பாலசந்தர், மணிரத்னம் ஆகியோரின் படங்களிலும் ஜனகராஜுக்கு தவறாமல் இடம்
கிடைத்தது. இயக்குநர்களில் இவருக்கு அருமையான பாத்திரங்களைக் கொடுத்த இன்னொருவர்
பாண்டியராஜன். கன்னிராசி, ஆண்பாவம், நெத்தியடி, கோபாலா கோபாலா,கும்பகோணம் கோபாலு
என பல படங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாச வேடங்களைக் கொடுத்தார்.

சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோரின் துணையாக கவுண்டமணி மாறியது 80களில் மிக இறுதியில்தான்.
அதுவரை ஜனகராஜே இவர்களின் உற்ற தோழன்.

இந்த தொடரில் ஜனகராஜ் ஏற்ற வித்தியாச வேடங்களை பார்க்கலாம்.

அண்ணாநகர் முதல் தெரு

தாய் மற்றும் தங்கையுடன் வசிக்கும் மிடில்கிளாஸ் மாதவன் ஜனகராஜ். கிராமத்தில் இருந்து வேலை
தேடி வந்து தன் வீட்டில் டேரா போட நினைக்கும் சத்யராஜை விரட்ட பல திட்டங்கள் போடுவதும்,
ஒவ்வோரு திட்டத்தையும் செயல்படுத்தி விட்டு “என்னமோ போடா மாதவா” என தன்னைத் தானே
பாராட்டிக் கொள்வதும், பின் அது பேக்பயர் ஆனதும் புலம்புவதுமாக அருமையாக செய்திருப்பார்.

நண்பனுக்காக கூர்க்கா வேலை வாங்கிக் கொடுப்பதும், அது நிலைக்க திருடன் வேடம் போடுவதும் என
புல் லெங்த் ரோலில் பின்னியிருப்பார் ஜனகராஜ்.


அக்னிநட்சத்திரம்


மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம். மனைவி ஊருக்கு
கிளம்பும்போது அழுவதும் பின் “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று உற்சாக குரல் எழுப்புவதும்
” நோ தங்கமணி எஞ்சாய்” என்று ஆனந்தப் படுவதும் ஜனகராஜுக்கே அளவெடுத்த சட்டை.

மனைவி இல்லாதபோது புளுபிலிம்,காபரே என அனுபவிக்க வேண்டும் என்று ஒரு தலைமுறைக்கே
அறிவுறுத்திய வேடம். (இல்லாட்டி செய்யமாட்டமா என்ன?).

கன்னிராசி

தன் மாணவி ரேவதியை ஒருதலையாக காதலிக்கும் பாட்டு வாத்தியார் வேடம். டிவியில் பாட சான்ஸ்
கிடைத்ததும் ஊரெல்லாம் பில்டப் செய்வதும், பின்னர் பாட்டைக் கேட்டு அவதிக்குள்ளானவர்களுக்கு
பயந்து பம்முவதுமாய் கலக்கியிருப்பார்.

குரல் வளம் இல்லாத மாணவிக்கு இவர் சொல்லும் வைத்தியமான “ ஹார்லிக்ஸ் பாட்டில், சோடா புட்டி
எல்லாத்தையும் உடைச்சு முழுங்கு” என்னும் வைத்தியம் ராகிங் செய்யும் சீனியர்களுக்கு மிகவும்
உபயோகப்பட்டது.

பத்தினிப் பெண்

ஆர் சி சக்தி இயக்கி ரூபிணி,சித்ரா நடித்த பெண்ணுரிமை கோரும் இந்தப் படத்திலும் முழு நீள வேடமே.
கஷ்டப்படும் ரூபிணிக்கு துணையாக இருக்கும் வேடம். நகைச்சுவைக்கு அவ்வளவு வாய்ப்பில்லாவிட்டாலும்
தேர்ந்த நடிப்பைக் காட்டியிருப்பார்.


பறவைகள் பலவிதம்


ராம்கி,நாசர், நிரோஷா,சபிதா ஆனந்த் ஆகியோரும் நடித்த படம்.பெரிய இடத்தை அடைவோம் என்ற
கனவுகளுடன் விடைபெறும் கல்லூரி மாணவர்கள் இவர்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும்
சமுதாய பிரச்சினைகள் இவர்களை புரட்டிப் போடுகிறது. சில வருடங்கள் கழித்து சந்திக்கும் போது
தங்கள் நிலையை மறைத்து பொய்யாக நடிக்கிறார்கள். அவர்கள் உணமையைப் பேசி இருந்தால் கூட
அவர்களது நிலை மாறியிருக்கும். ஆனால் வீம்புக்காக பொய் சொல்லி மேலும் சிதைகிறார்கள்.
இதில் வேலை இல்லாமல் கல்யாண புரோக்கராக மாறும் ஜனகராஜ் இயல்பான நடிப்பை
வெளிப்படுத்தியிருப்பார்.

உன்னால் முடியும் தம்பி

மகனை வேலைக்கு அனுப்பும் குடிகாரன் பாத்திரம்.

இப்போ ஏம்பா குடிக்கிற?

எம்ஜியார் செத்துப் போயிட்டாரு

முன்ன குடிச்ச?

அப்போ காமராஜர் செத்துப் போயிருந்தாரு

என கலாய்ப்பதும், இந்த ஏரியாவில கொசுத்தொல்லை அதிகமா இருக்கு என்று புலம்பி வீட்டைக்
கயிறைக் கட்டி இழுத்துப் போக முயல்வது என அக்மார்க் குடிகாரனை முன்நிறுத்தியிருப்பார்.

நீ கல்யாணம் பண்ணிக்காத, அப்பத்தான் நாங்க குடிக்க மாட்டோம் என கமலிடம் சத்தியம் செய்வதும்,
பின்னர் எல்லோரும் குடிக்க கூடும் போது, நாம சோத்தைத்தான திங்கிறோம், குடிக்காதீங்கடா என
அனைவருடன் வெளியேறும் காட்சியிலும் அசத்தியிருப்பார்.

நெத்தியடி

சமையல்காரர் வேடம். இழவு வீட்டுக்கு வந்த உறவினரின் திருகாணி தொலைந்துவிட அவர்கள் புலம்புவதும்,

தன் மகன் பாண்டியராஜன் தான் அதை எடுத்திருப்பான் என்று நினைத்து, ”வேலுலுலு, நம்மப்
பத்தி என்னா நினைப்பாங்க” என்று இழுத்து வசனம் பேசுவதும், கை நடுங்காமல் இருக்க துண்டால்
அதை கட்டிக்கொண்டு பேசுவதும் அருமை.


கிழக்கு வாசல்


தன்னைத் தானே சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவனை வருத்ததுடன் பார்க்கிறாள் சிறு பெண். அவளை
தத்தெடுத்து வளர்க்கிறான். பின்னர் அந்தப் பெண் அடைக்கலமாவது ஒரு தாசியின் வீடு. தாசி இறக்க
சூழ்நிலையால் தாசியாகிறாள் அந்தப் பெண். அவளைக் காத்து நல்ல வாழ்க்கை கிடைக்க பாடுபடுகிறான்.
வண்டிக்கார தேவராக இந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் ஜனகராஜ். தன் வழக்கமான உடல்மொழியைத்
தவிர்த்து புதிதாய் நடித்திருப்பார் இந்தப்படத்தில்.

புதுப் புது அர்த்தங்கள்

வயலினிஸ்ட் ஜாலி. ஜாலியாகவே இருப்பவர் பல பெண்களைக் கவிழ்க்கிறார். இறுதியில் வலிப்பு நோய்
உள்ள பெண்ணை வீழ்த்தும்போது மனம் திருந்தி ராமனாகிறார். இதில் ஆரம்பக் காட்சிகளில் மிஸ்டர்
பீனை காப்பியடித்திருந்தாலும் பின்னர் தன் ஒரிஜினாலிட்டியைக் காட்டியிருப்பார்.


உரிமை கீதம்


வேலை இல்லாத பிரபுக்கு ஆதரவாய் இருக்கும் சலவைத் தொழிலாளி வேடம். ரத்த தானம் செய்து பணம்
கொடுப்பது, பிரபுவின் தாய் சவ அடக்கத்துக்கு உதவுவது என மனதைத் தொடும் வேடம்.

கேளடி கண்மணி

தான் காணூம் கனவுகள் பலிப்பதால் அவதிக்குள்ளாகும் ஒரு அச்சக உரிமையாளர் வேடம். ராதிகாவை
ஒரு தலையாக காதலிப்பதும், பின் தன் நண்பந்தானே மணக்கப் போகிறான் என ஆறுதல் படுவதுமாய் மிக
இயல்பாய் நடித்திருப்பார்.


ஒரு இடுகையில் அடங்குபவரா நம் ஜனகராஜ்? இன்னும் இருக்கு.

43 comments:

ஆயில்யன் said...

//தன் மாணவி ரேவதியை ஒருதலையாக காதலிக்கும் பாட்டு வாத்தியார் வேடம். டிவியில் பாட சான்ஸ்
கிடைத்ததும் ஊரெல்லாம் பில்டப் செய்வதும், பின்னர் பாட்டைக் கேட்டு அவதிக்குள்ளானவர்களுக்கு
பயந்து பம்முவதுமாய் கலக்கியிருப்பார். //

கலக்கல் படம் அதுவும் பாட்டு கிளாஸ் இண்ட்ரோ சீன் செம காமெடி :))

ஆயில்யன் said...

ஆமாம் சித்தப்பு இந்த பஞ்சாயத்து பன்னிங்களெல்லாம் எங்க போவுது???


இப்படி ஒரு படம் வந்துச்சே - வைகாசி பொறந்தாச்சு...???? - அது பார்ட் 2ல வருமா ....?
:))

ஆயில்யன் said...

ஆண் பாவம்

மொதலாளி உங்களுக்கு காபி வேணும்னா என்கிட்ட கேளுங்க உங்களுக்கும் எனக்கும் தனியா

மாஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

:)))))))))))

ஆயில்யன் said...

//தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், ராஜாதிராஜா, அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியை ஒவ்வொரு
நிலையில் இருந்தும் அடுத்த நிலைக்கு உயர்த்திய படங்களில் ஜனகராஜ் இடம்பெற்றிருந்தார்.//


ரஜினியின் கண்டிப்பாக இடம் பெறும் நடிகராக இருந்தவர் - பாட்ஷா ஜனகராஜ் பட வரிசையில் முதன்மையானது - நகைச்சுவை பாத்திரமாக அல்லாத ரோல்!

நையாண்டி நைனா said...

Good.
Good..
Good...
Nadakkattum
nadakkattum nanbaa

முரளிகண்ணன் said...

ஆயில்யா வாங்க வாங்க

இன்னும் ரெண்டு பார்ட் இருக்கு.

வைகாசி, ஆண்பாவம்,அபூர்வ சகோதரர்கள், அண்ணாமலை

பட்டியல் போட்டா நீளமாகிக்கிட்டே போகும்.

அப்பவும் வந்து ஆதரவு கொடுங்க

முரளிகண்ணன் said...

நன்றி நையாண்டி நைனா.

ஆயில்யன்,

பாட்ஷாவை விட நாயகன் ஜனகராஜ் இன்னும் பெட்டர் இல்லியா?

:-)))

Jayaprakash Sampath said...

palaivana cholai la irunthu illa aarambichirukaNum? :)

முரளிகண்ணன் said...

ஐகாரஸ் பிரகாஷ் சார்,

வருகைக்கு நன்றி.

ஆர்டர் படி எழுதாமல் ரேண்டமாக எழுதலாம் என நினைத்தேன்.

அடுத்த பகுதியில் அதை எழுதுகிறேன்.

கே.என்.சிவராமன் said...

முரளி,

சினிமாவின் துணை நாயகர்கள் குறித்தும் அழுத்தமான பதிவுகளை எழுத வந்திருக்கும் உங்களுக்கு ஒரு உம்மா... :-) தொடருங்கள்..

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லோகு said...

படிக்காதவனில் வரும் 'தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா' காமெடியும் மிக ரசிக்கப்பட்ட ஒன்று தானே..

சென்ஷி said...

:)

அடுத்த பாகத்திற்க்காய் காத்திருக்கிறோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னமோ போடா மாதவா ....

மறக்க முடியாத வரிகள்


ஒரு யதார்த்தமான நடிப்பு ஜனகராஜ்ஜிடம் உண்டு

உன்னால் முடியும் தம்பியில் குடிபோதையில் வீட்டை கயிறு கட்டி இழுக்கும் காமெடி மறக்க முடியாது ...

இன்னும் எத்தனையோ .... சொல்ல அளவு இல்லையே...

அக்னி பார்வை said...

நிஜமாக ரொம்ப நல்ல பதிவு....

வினோத் கெளதம் said...

ஜனகராஜ் ஜனரஞ்சக நடிகர்..அருமையான இடுகை..

Raju said...

\\மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம்.\\

ஆஹா, அப்ப தாமிரா, ஆதியோட குரு ஜனகராஜ்தானா..?

என்னோட மைண்ட்லயும் சில படங்கள் மிச்சமிருக்கு, பார்ட்-2 ல வருதான்னு பாப்போம்.

Vidhya Chandrasekaran said...

நைஸ்.
அடுத்த பாகத்திற்க்கு வெயிட்டிங்.

சிநேகிதன் அக்பர் said...

வழக்கம் போல் கலக்கல் பதிவு.

இன்னும் அவரை நினைவில் வைத்திருப்பது அவர் திறமைக்கு கிடைத்த வெற்றி.

என்ன பதிவர் சந்திப்புக்கு போக வில்லையா.

உங்கள் காமெடி பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

நல்ல பதிவு.உழைப்புக்கு பாராட்டுக்கள்.
ஜனகராஜ் நீங்கள் சொன்ன மாதிரி பன்முக கலைஞன்.

எல்லா படத்திலும் சென்னைத்தமிழ் காமெடி கொஞ்சம் அலுப்பு.அடுத்து
காட்டு கத்தல் காமெடி.தமிழ் சினிமாவின் சாபம் இந்த காட்டுக் கத்தல் காமெடி.

கவுண்டமணி 10000000000 டெசிபெல்ஸ்.

சபாபதி/அடுத்த வீட்டுப்பெண்/
அறிவாளி/நல்லதம்பி/
க.ப.பிரம்மச்சசாரி பாருங்கள் கததலே இருக்காது.

காட்டுக் கத்தல் ஆரம்பித்தது 1970 என்று நினைக்கிறேன்.ஆரம்பித்தவர்
தேங்காய் சீனுவாசன்.

Jackiesekar said...

வேனு வந்தவங்க தப்பா நினைப்பாங்க திருகானியை கொடுத்துடு என்ற சொல்லும் போது ஜனகராஜ் சூப்பர் தலை

Anonymous said...

http://englishkaran.blogspot.com/2009/04/blog-post_20.html

இவரைப் பற்றி நான் ஏற்கனவே ஒரு இடுகையைப் போட்டிருந்தேன். இருப்பினும் இவரைப் பற்றி இன்னும் விலாவரியாக படிப்பதில் அவரின் ரசிகன் என்பதில் சந்தோசம் அடைகிறேன். பகிர்தலுக்கு நன்றி.

சரவணகுமரன் said...

சூப்பர் நைனா... :-)

முரளிகண்ணன் said...

வாங்க லோகு, அதெல்லாம் அடுத்த பாகம் (கே பாலி ஞாபகமிருக்கா?)

வாங்க சென்ஷி.

நன்றி ஸ்டார்ஜான்

அக்னிபார்வை
\\நிஜமாக ரொம்ப நல்ல பதிவு...\\

அப்போ இத்தன நாள் சொன்னதெல்லாம் சும்மாவா?

:-((


நன்றி வினோத் கௌதம்

முரளிகண்ணன் said...

டக்ளஸ்சண்ணா

\\ஆஹா, அப்ப தாமிரா, ஆதியோட குரு ஜனகராஜ்தானா..?\\

வலையுலகில் தங்கமணி என முதலில் நாமகரணம் சூட்டியது
கப்பிபயல் என்ற பதிவர் என நினைக்கிறேன். (கப்பியா இல்லை கைப்புள்ளையா? தவறிருந்தால்
திருத்தவும்)

பின்னர் அது புழக்கத்துக்கு வந்தது. சின்னப்பையன்,தாமிரா என அனைவரும் அதை உபயோகித்தார்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி வித்யா.

அக்பர்,

தவிர்க்க முடியாத சூழலால் சந்திப்புக்கு செல்ல முடியவில்லை.

\\உங்கள் காமெடி பதிவுகளை எதிர்பார்க்கிறேன்\\

விரைவில் எழுதுகிறேன். நன்றி.


ரவிஷங்கர், தங்கள் பகிர்தலுக்கு நன்றி.

வாங்க ஜாக்கி சேகர்.

இங்கிலிஸ்காரன்: சுட்டிக்கும் வருகைக்கும் நன்றி.

சரவணகுமரன் : டாங்ஸ்பா

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் முரளி.
எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் ஜனகராஜ்தான்.
"கன்னி ராசி" மறக்கமுடியாதப் படம்.
அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்.

"உழவன்" "Uzhavan" said...

" என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா "காமெடிதான் இன்றைக்கும் கல்யாணம் ஆனவர்கள் சொல்றது. பதிவு தொடரட்டும்...

கார்க்கிபவா said...

கலக்கு.. இன்னும் நல்லா கலக்கு. கலக்கிட்டியா? அதுல இருந்து ஒரு நூறு கிராம் கொடு..

:))))

முரளிகண்ணன் said...

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி உழவன்

நன்றி கார்க்கி

வெட்டிப்பயல் said...

வேணு.. திவ்வானிய கொத்துடு. வந்திருக்கவங்க தப்பா நினைப்பாங்க...

வேணு.. திவ்வானிய கொத்துடு. வந்திருக்கவங்க தப்பா நினைப்பாங்க...

இது தான் அந்த டயலாக் :)

அசத்தல் நடிகரைப் பற்றிய அசத்தல் பதிவு :)

வெட்டிப்பயல் said...

//வலையுலகில் தங்கமணி என முதலில் நாமகரணம் சூட்டியது
கப்பிபயல் என்ற பதிவர் என நினைக்கிறேன். (கப்பியா இல்லை கைப்புள்ளையா? தவறிருந்தால்
திருத்தவும்)//

இதை ஆரம்பித்தவர் என் குருநாதர் "டுபுக்கு"... வலையுலக காமெடி கிங் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு....முரளி

ஸ்ரீ.... said...

நல்ல பதிவு. பதிவர் சந்திப்பு குறித்த எனது இடுகையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (நீங்கள் வராதது ஏமாற்றமே!).

ஸ்ரீ....

சுரேகா.. said...

கலக்குறீங்கண்ணே!

அதேபோல்

சீதா என்றொரு படத்தில் வில்லன் ரோல் பண்ணியிருப்பார். அவருக்கு அடியாள் நம்ம இயக்குநர் ஷங்கர்.

அதேபோல் வாய்க்கொழுப்பு..
பின்னியிருப்பார்.

நீங்க கண்டிப்பா சொல்லிருவீங்க இருந்தாலும் ஒரு முந்திரிக்கொட்டைத்தனந்தான்..ஹி.ஹி..

உண்மைத்தமிழன் said...

அண்ணனின் நடிப்பில் கன்னிராசிதான் பெஸ்ட்டு..

அபூர்வ சகோதரர்கள் நகைச்சுவையை மறக்க முடியுமா..?

நாயகனிலும், குணாவிலும் பண்பட்ட நடிப்பு..

நாயகனில் கமல் சரண்யாவின் கழுத்தில் தாலியைக் கட்டியவுடன் கமலின் முதுகில் தலையால் முட்டி ஒரு பாசம் காட்டுவார் பாருங்க..

இயக்கம்தான் என்றாலும், அண்ணனின் ஆக்ஷன் அருமை..

குணாவோடு கமலின் ராஜபாட்டைக்குள் இவருக்கு இடமில்லாமல் போனது..

அது ஒரு தனிக்கதை.. பாவம்..

Cable சங்கர் said...

/ஒரு இடுகையில் அடங்குபவரா நம் ஜனகராஜ்? இன்னும் இருக்கு//

அதானே முரளி.. வழக்கம் போல..

பயமில்லாதவன் said...

எப்படி நைனா இப்படி ல எழுத தொனுது

சேவியர் said...

அருமை. ஆனா இந்த தலைப்பில ஒருத்தர் ரொம்ப காலமா எழுதறாரே ...ம்ம்... காப்பிரைட் வாங்கலையோ :)

http://vijaygopalswami.wordpress.com/2009/06/14/madhava-3/

ராமகுமரன் said...

நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்

chennaivaasi said...

nice article murali sir...kalakiteenga...kandippa...Gopal Chettiar Character in Kaadhal Ooviyam & Mudhal Mariyadhai padatha pathiyum ezhudhunga...

BTW, on character artiste, you should write an article about Senthaamarai. He is one that had done good work but not appreciated much.

நர்சிம் said...

//அக்னிநட்சத்திரம்

மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம். //

வரலாறு..

என்னமோ போடா மாதவா, பின்றியேடா மாதவா போன்ற வார்த்தைகள் ஒரு கலக்கு கலக்கியதை மறக்கவே முடியாது.

நர்சிம் said...

கலக்கல் முரளி.

ஷங்கி said...

நல்ல ஆராய்ஞ்சு, அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! அடுத்த பகுதிக்கு waiting!
அப்புறம் ரெகுலர் கஸ்டமர் நீங்க, நம்ம பக்கம் வரமாட்டேங்கிறீங்க, ரொம்ப அறுவையாயிருக்கோ?!