November 13, 2008

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா – பகுதி 2

தமிழ்சினிமாவில் நடைமுறையில் இருக்கும் வினியோக முறைகள்.

நேரடி வெளியீடு

தயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவது. இதற்க்கு தயாரிப்பாளரிடம் பெரிய நெட்வொர்க் இருக்க வேண்டும். தமிழக திரையரங்குகள், அவற்றின் கேட்ச்மெண்ட் ஏரியா [அந்த குறிப்பிட்ட திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் – எங்கெல்லாம் இருந்து? எவ்வளவு பேர்? அவ்ர்களின் பொருளாதார பலம்?] போன்ற விபரங்கள் தெரிய வேண்டும்.

உதாரணமாக சென்னை – சத்யம் எனில் – அர்பன் பேமிலி ஆடியன்ஸ், நல்ல வேலை பார்ப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், காதலர்கள் என பணத்தை பற்றி கவலைப்படாதவர்கள். நகரம் முழுவதிலும் இருந்து வருவார்கள்.

சென்னை – கமலா எனில், வடபழனி,கே கே நகர், சாலிகிராமம், கிண்டி,அசோக் நகர் ஆகியவற்றில் உள்ள நடுத்தர வகுப்பினர், மேன்ஷனில் தங்கியுள்ள வேலை பார்க்கும்/படிக்கும் மாணவர்கள்

அம்பத்தூர் – ராக்கி எனில் அம்பத்தூர்,ஆவடி,அண்ணா நகர்,திருமங்கலம் பகுதி மக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள்.

அருப்புக்கோட்டை – மகாராணி என்றால் அந்த ஊர் மக்களும், சுற்றியுள்ள கிராம மக்களும்.

இதுபோல தமிழக திரையரங்குகளின் ஜாதகத்தை அறிந்திருந்தால் தான் தங்களின் படத்திற்க்கேற்ற திரையரங்கில் படத்தை வெளியிடமுடியும். இதில் சங்கரிடம் இணை இயக்குனராக இருந்து பின் சாக்லேட் படத்தை தயாரித்தவரும், மதுர, அரசாங்கம் படங்களின் இயக்குனருமான மாதேஷ் கில்லாடி. முதல்வன் படத்தை இவ்வாறு வெளியிட்டு நல்ல லாபம் பெற்றனர். பாபா,சிவாஜி படங்களுக்கும் இவரிடம் ஆலோசனை பெறப்பட்டது என்பார்கள். பெரிய நடிகர், இயக்குனர் படங்களை இம்முறையில் வெளியிடுவது எளிது. சிறிய/புதுமுகங்கள் நடிக்கும் படமெனில் தியேட்டர் கிடைக்காது. தயாரிப்பாளர் தியேட்டர் வாடகையை கொடுத்து படத்தை ஓட்டிக் கொள்ள வேண்டும்.

கமிஷன் முறை

இதில் இருந்து தான் வினியோகஸ்தர்கள் வருகிறார்கள். தயாரிப்பாளரிடம் இருந்து பெட்டியை வாங்கிச் சென்று அவர்கள் ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவார்கள். தியேட்டர் உரிமையாளர் பங்கு போக மீத தொகையை தயாரிப்பாளரிடம் சேர்ப்பிப்பார்கள். தயாரிப்பளாரிடம் கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்.

இன்னொரு முறையில், பட தயாரிப்பின் போதோ அல்லது லேபில் படம் இருக்கும் போதோ குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளருக்கு கொடுத்து பெட்டியை வாங்கிச் செல்வார்கள். பின் தியேட்டர் உரிமையாளர் பங்கு, தன் பணம் போக மீத தொகையை மட்டும் தயாரிப்பாளரிடம் கொடுப்பார்கள். பின் தயாரிப்பு, அவர்களுக்கு கமிஷன் தொகையை கொடுக்கும். இம்முறையில் முன்னதை விட கமிஷன் சதவீதம் அதிகம். ஏனெனில் முன்னதாக பணம் கொடுத்து உதவுவதால்.

எம்ஜி - மினிமம் கேரண்டி

இம்முறையில் வினியோகஸ்தர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு, குறிப்பிட்ட ஏரியாவுக்கு எம்ஜி கொடுத்து பெட்டிகளை வாங்கிக் கொள்வார். உதாரணமாக ஏகன் படம் கோவை ஏரியாவுக்கு 2 கோடி, 5 வருடத்திற்க்கு என்று வைத்துக் கொள்வோம். படத்தை திரையரங்கில் வெளியிட்டு விளம்பரம் செய்து வசூலான தொகையை கணக்கெடுத்துக் கொண்டே வருவார்கள். தியேட்டர் பங்கு போக வரும் வசூலில் வினியோகஸ்தர் கொடுத்த எம்ஜி+ அவரது கமிஷனை முதலில் எடுத்துக்கொள்வார். அதற்க்குப் பின் வரும் வசூலில் [வசூல் ஆனால்] தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் பிரித்துக் கொள்வார்கள். படம் படுத்துக்கொண்டால் தயாரிப்பாளர் எம்ஜி யில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை. எல்லா ரிஸ்க்கும் வினியோகஸ்தருக்கே. இம்முறையில் ரஜினியின் பல படங்களை வாங்கி லாபம் சம்பாதித்தவர்கள், குசேலன் படம் ஊற்றிக்கொண்டதும் எம்ஜியை கவர் செய்ய வில்லை யென நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களின் முக்கிய வாதம் தவறான தகவலை கொடுத்தார்கள் என்பதே.

எம்ஜியார் அவர்களை மினிமம் கேரண்டி ராமச்சந்திரன் என்றே சொல்வார்கள். அவரது படங்கள் எம்ஜியை எளிதாக கவர் செய்து விடும். சிலர் விளையாட்டாக சொல்வார்கள் அவர் மேக்ஸிமம் கேரண்டி ராமசந்திரன் என்று. அது உண்மைதான் என இப்பொழுதும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அவுட்ரைட்

இம்முறையில் வினியோகஸ்தர் படத்தை பார்த்தோ/ பார்க்காமலோ ஒரு தொகையை கொடுத்து குறிப்பிட்ட ஏரியாவுக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு படத்தை வாங்குவது. இதில் எவ்வளவு லாபம் வந்தாலும் வினியோகஸ்தருக்கே. நஷ்டமும் அவருக்கே. பெரும்பாலான படங்கள் இம்முறையில் தான் வினியோகம் செய்யப்படுகின்றன. சின்னதம்பி,கரகாட்டக்காரன்,காதலுக்கு மரியாதை,வாலி,காதல் கோட்டை, உள்ளத்தை அள்ளி தா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற எதிர்பார்ப்பு இல்லாத படங்களை இம்முறையில் வாங்கிய வினியோகஸ்தர்கள் பண மழையில் நனைந்தார்கள். இம்முறையில் படம் வாங்க நல்ல அனுபவம் தேவை. கணிப்பு சரியாக செய்பவர்கள் உச்ச்த்திற்கு செல்வார்கள். ஏரியா தியேட்டர் உரிமையாளர்களிடம் நல்ல தொடர்பும், மக்கள் ரசனையை கணிக்கும் ஆற்றலும் தேவை.


இனி வினியோகஸ்தர்கள் படத்தை கணிக்கும் விதத்தைப் பார்ப்போம். இதற்க்கு முக்கிய கருவியாய் இருப்பது டிசிஆர் [டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட்].

ஒரு திரையரங்கில் தினமும் ஆகும் கலெக்‌ஷன் பற்றிய ரிப்போர்ட் இது. எந்த காட்சியை எவ்வளவு பேர் பார்த்தார்கள், எந்த வகுப்பு நிறைந்தது? பெண்கள்/ஆண்கள் டிக்கெட் எவ்வளவு? போன்ற விபரங்கள் இதில் இருந்து கிடைக்கும்.

இதில் நமக்கு கிடைக்கும் விபரங்கள்

1. ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் இந்த ஏரியாவில் எவ்வளவு நாள் ஓடும்?
2. படத்திற்க்கு முதல் வகுப்பு கலெக்‌ஷன் எந்த நடிகருக்கு நன்றாக இருக்கும், பெண்கள் கூட்டம் யாருக்கு வருகிறது?, கீழ் வகுப்பு ரசிகர்கள் யாருக்கு வருகிறார்கள்?
3. ஒரு நடிகரின் தோல்வி பட கலெக்‌ஷன்/ வெற்றி பட கலெக்‌ஷன் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?. இந்த வித்தியாசம் குறைவாக உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும் [அஜீத்].
4. நகரத்தில் யார் படம் [கமல்,மணிரத்னம்], கிராமத்தில் யார் படம் [விஜயகாந்த்,ராமராஜன், ஹரி, கே எஸ் ரவிகுமார்] நல்ல கலெக்‌ஷன் கொடுக்கும்?.
5. கவர்ச்சி [பத்து பத்து, வேள்வி, மேகம்], ஹாரர் (சிவி, மை டியர் லிசா], பக்தி [பாளையத்தம்மன், ஆடிவெள்ளி] போன்ற படங்களுக்கு குறிப்பிட்ட ஏரியாவில் எவ்வளவு பொடென்ஷியல்?
6. ஜாதி போன்ற காரணங்களால் (கார்த்திக், சரத்குமார்] குறிப்பிட்ட ஏரியாவில் வசூல் எப்படி?

ஷிஃப்டிங்

ஒரு ஏரியாவில் மொத்தம் 200 தியேட்டர் எனில் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம் அதிக பட்சம் 30-40 தியேட்டர்களில் மட்டுமே படம் போடப்படும். இதில் முதலில் அதிக கேட்ச்மெண்ட் ஏரியா உள்ள 10 தியேட்டர்களில் ஓட்டப்பட்டு, பின்னர் குறைவான கேட்ச்மெண்ட் உள்ள ஏரியாவுக்கு மாற்றப்படும். இதுவே ஷிஃப்டிங் எனப்படும். முதலில் பெரிய ஊர்களில் திரையிடப்பட்டு பின்னர் சிறு ஊர்களுக்கு மாற்றப்படும்.

எந்த நடிகர், எந்த கதை, எவ்வளவு செலவு செய்து எடுத்தால் லாபம் கிடைக்கும் என வினியோகஸ்தருக்கு அனுபவ அறிவு இருப்பதால் அவர் தயாரிப்பாளர் ஆவது எளிதாக இருக்கிறது. ஆனாலும் சினிமாவின் வெற்றி விதியை யாராலும் சுலபமாக கணிக்க முடியாததால் அவர்கள் தோல்வியும் அடைகிறார்கள்.

17 comments:

விலெகா said...

அண்ணனுக்கு வணக்கம்:)

விலெகா said...

நாந்தான் நம்பர் 1.

விலெகா said...

வாழ்த்துக்கள்! வழக்கம்போல் அருமையான தவல்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சங்கரிடம் இணை இயக்குனராக இருந்து பின் சாக்லேட் படத்தை தயாரித்தவரும், மதுர, அரசாங்கம் படங்களின் இயக்குனருமான மாதேஷ் கில்லாடி. முதல்வன் படத்தை இவ்வாறு வெளியிட்டு நல்ல லாபம் பெற்றனர். பாபா,சிவாஜி படங்களுக்கும் இவரிடம் ஆலோசனை பெறப்பட்டது என்பார்கள்.///////////





முரளி கண்ணன் சாரையும் கேட்கலாம்

thamizhparavai said...

எனக்குத் தெரியாத பல விஷயங்களை எளிமையாக விளக்கி வருகிறீர்கள்...
நன்றி முரளி சார்...

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி விலெகா,சுரேஷ்,தமிழ்பறவை.

நசரேயன் said...

நல்ல தகவல் முரளிகண்ணன், கோடம் பாக்கத்துல படம் எடுக்கிறவங்க உங்க கிட்டயும் ஆலோசனை கேட்டால் நல்லா இருக்கும்

கிரி said...

//சிலர் விளையாட்டாக சொல்வார்கள் அவர் மேக்ஸிமம் கேரண்டி ராமசந்திரன் என்று.//

:-))

//சினிமாவின் வெற்றி விதியை யாராலும் சுலபமாக கணிக்க முடியாததால் அவர்கள் தோல்வியும் அடைகிறார்கள்//

எத்தனை அனுபவம் உள்ள ஆளாக இருந்தாலும் இதற்க்கு விதி விலக்கு அல்ல :-(

திரை வணிகமே ஒரு சூதாட்டம் தான்

குடுகுடுப்பை said...

என்ன ஹீரோவா போட்டு எடுக்கச்சொல்லுங்கண்ணே

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்,கிரி, குடுகுடுப்பை

narsim said...

ஆஜர் முரளிகண்ணன்.. நல்ல,பல தெரியாத‌ தகவல்கள்..

நர்சிம்

யோசிப்பவர் said...

தெரியாத பல தகவல்களை கொடுக்கிறீர்கள். உங்களுக்கு தொடர் நன்றி!!!!!:-)

புருனோ Bruno said...

உள்ளேன் ஐயா

நவநீதன் said...

// அருப்புக்கோட்டை – மகாராணி என்றால் அந்த ஊர் மக்களும், சுற்றியுள்ள கிராம மக்களும்.//
எங்க ஊரு மகாராணி தியேட்டர் பத்தி உங்களுக்கு எப்டிங்க்னா தெரியும்??

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி யோசிப்பவர்,புருனோ,நர்சிம்

முரளிகண்ணன் said...

நவனீதன், தங்கள் வருகைக்கு நன்றி.


\\எங்க ஊரு மகாராணி தியேட்டர் பத்தி உங்களுக்கு எப்டிங்க்னா தெரியும்??
\\
விருதுனகர்,அருப்புக்கோட்டை யில் என் தந்தை பணியாற்றியதால்

கோபிநாத் said...

அண்ணாச்சி வழக்கம் போல கலக்கல்..;))

இதுல கூடவா சாதி எல்லாம்...;(