November 26, 2008

என் சகியே

திருமணமான புதிதில் உன்னிடம் பேசிக் கொண்டேயிருப்பேன். ஒரு தொடர்வண்டி பயனத்தில் அதே போல் நான் பேசிக்கொண்டே வந்தபோது, எதிர் இருக்கை பயணி புருவம் உயர்த்தினார். அவரிடம் நான் சொல்லலாம் என நினைத்தேன். " நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன். இந்த 25 ஆண்டுகளில் காதலாக யாரிடமும் பேசியதில்லை. இப்போது சேர்த்து வைத்து பேசிக்கொண்டிருக்கிறேன்".

ஒருமுறை அலுவலகத்தில் இருந்து திரும்பிவந்த போது கோபமாய் இருந்தாய். திருமணத்துக்கு இரு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்த மொக்கை கவிதைகளை காட்டி, "யாரை நினைத்து எழுதுயது இது?" என சண்டையிட்டாய். அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே, இன்று வரை அதை அனுபவித்ததில்லை நான். ஆஹா நம் மீதும் பொசசிவ்வாய் இருக்க ஒரு பெண் இருக்கிறாளே!!! . நம்மாலும் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடிந்திருக்கிறதே!!! என்று.

உறவிலும் சரி, நட்பு வட்டாரத்திலும் சரி என்றும் நான் முதன்மையாகவோ, முக்கியமான நபராகவோ கருதப்பட்டதில்லை. வந்தால் சரி என்பார்கள். வராவிட்டால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நீ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டா என்ற பூச்செண்டை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. ஒரு முறை உன் ஊர் திருவிழாவுக்கு சென்றிருந்தாய். நான் தொலைபேசியில் அழைத்த போது சொன்னாய் "போன தடவை ஒவ்வொண்ணுக்கும் கமெண்ட் அடிச்சு சிரிக்க வச்சீங்க, இந்த தடவை நீங்க இல்லாம ஒரே போர்". கால காலமாய் பூச்செண்டு எதிர்பார்த்தவனுக்கு ஆர்கிட் மலர் தோட்டம் அந்த பதில்.

ஜாதி, ஜாதகம் பார்த்து திருமணம் செய்கிறார்களே என்று சமுதாயத்தின் மீது ஒரு வெறுப்பு இருந்தது. காதல் திருமணங்கள் மட்டும் தான் நடக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் இப்போதோ சமுதாயத்தை வணங்கிக்கொண்டிருக்கிறேன். பெண்களை துளியளவு கூட இம்ப்ரெஸ் பண்ண இயலாத தோற்றம், ஆரம்பித்த உடனேயே அறுக்காதடா என நண்பர்களே புலம்பும் அளவுக்கு போரான என் பேச்சு, சராசரி அறிவு, அதற்கும் கீழான வசதி என இருந்த எனக்கு உன்னைப்போல் ஒரு தேவதையை எப்படி காதலித்து அடையமுடியும். வாழ்க ஜாதி,ஜாதகம்.

இதுவரை நான் அடைந்த தோல்விகளெல்லாம் உன்னை திருமணம் செய்ததால் அர்த்தமற்றதாகிப் போய்விட்டது.

எவ்வளவு அழைப்பு வார்த்தைகள் இருந்தாலும் உன்னை அழைப்பது சகி என்று தான். தொடர்ந்து இதுபோலவே என்னை சகித்துக்கொள் என்று வேண்டிக்கொள்ளத்தான்.

37 comments:

anujanya said...

முரளி,

நல்ல பதிவு. நீங்கள் சினிமா பதிவு எழுதுவது ஏன் குறைந்துவிட்டது என்று யோசிக்கையில் we miss you. ஆதலால் இது இந்தப் புனைவுக்குகான வருத்தம் என்று எடுத்துக்கொள்கிறேன். இன்று என்ன ஸ்பெஷல்? திருமண நாள் அல்லது உங்கள் சகியின் பிறந்தநாள்? எதுவாக இருந்தாலும் வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

புதுகை.அப்துல்லா said...

அப்பவே சொன்னேன் ரொம்பப் படம் பார்க்காதீங்க!ரொம்பப் படம் பார்க்காதீங்கன்னு.... சும்மா பயமுடுத்துறது பத்தாதுன்னு எழுதி வேற எங்க அண்ணிய பயமுடுத்துறீங்களே??

:))))

joke apart நீங்கள் எழுதிய அத்தனையும் எனக்கும் பொருந்திப் போகின்றது

புதுகை.அப்துல்லா said...

//இன்று என்ன ஸ்பெஷல்? திருமண நாள் அல்லது உங்கள் சகியின் பிறந்தநாள்? எதுவாக இருந்தாலும் வாழ்த்துக்கள்.

//

ரிப்பீட்டுடுடுடுடுடுடுடுடுடுடு

வெங்கட்ராமன் said...

அழகான கவிதை போல் இருக்கிறது பதிவு.

Ŝ₤Ω..™ said...

முரளி..
***
பெண்களை துளியளவு கூட இம்ப்ரெஸ் பண்ண இயலாத தோற்றம், ஆரம்பித்த உடனேயே அறுக்காதடா என நண்பர்களே புலம்பும் அளவுக்கு போரான என் பேச்சு, சராசரி அறிவு
***
தன்னடக்கம் தேவை தான், அதுக்குன்னு இப்படியா??

உங்க பாணில சொல்லனும்னா இது தான்

***
ஆஹா நம் மீதும் பொசசிவ்வாய் இருக்க ஒரு பெண் இருக்கிறாளே!!! . நம்மாலும் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடிந்திருக்கிறதே!!!
***
பெண்ணின் மனதைத் தொட்டோ??

***
உறவிலும் சரி, நட்பு வட்டாரத்திலும் சரி என்றும் நான் முதன்மையாகவோ, முக்கியமான நபராகவோ கருதப்பட்டதில்லை. வந்தால் சரி என்பார்கள். வராவிட்டால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நீ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டா என்ற பூச்செண்டை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. ஒரு முறை உன் ஊர் திருவிழாவுக்கு சென்றிருந்தாய். நான் தொலைபேசியில் அழைத்த போது சொன்னாய் "போன தடவை ஒவ்வொண்ணுக்கும் கமெண்ட் அடிச்சு சிரிக்க வச்சீங்க, இந்த தடவை நீங்க இல்லாம ஒரே போர்". கால காலமாய் பூச்செண்டு எதிர்பார்த்தவனுக்கு ஆர்கிட் மலர் தோட்டம் அந்த பதில்.
***
அருகில் யாருமே இல்லை என்று வருந்தும் போது பக்கத்துவீட்டு குழந்தை வந்து மாமா என்றளைத்து தலையை மட்டும் எட்டி பார்க்குமே அப்போது கிடைக்கும் களிப்புக்கு இணை மேலே நீங்க சொன்னது தான்..

இந்த பதிவுலயே எனக்கு ஒன்னுதான் பிடிக்கலை..

***
வாழ்க ஜாதி,ஜாதகம்.
***
இருந்தாலும் நீங்க அனுபவிக்கற சந்தோஷத்துக்காக உங்களை மன்னிச்சிவிட்டுடறேன்..

அனுஜன்யா சொன்னது போல இன்று என்ன ஸ்பெஷலாக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

இருவ்ர் மனமும் ஓன்றிவிட்டால் நடப்பது எல்லாமே சந்தோஷமே. அது சரி கதை நாயகனுக்கு ஏன் இவ்வளவு லோ-- செல்ப் எஸ்டீம்?

narsim said...

வாழ்த்துக்கள் முரளிகண்ணன்..

இந்த பதிவ காமிச்சு ஒரு ஒருவாரத்துக்கு சிஸ்டத்துல ஒக்கார அனுமதி வாங்கி இருப்பீங்களே??!!

நல்ல பதிவு முரளி.. வார்த்தைகள் அதுவாக அதனதன் இடத்தில் அம்ர்ந்தது போல் இருந்தது!

Busy said...

Romba Nalla Anubavam...............

முரளிகண்ணன் said...

அனுஜன்யா, அப்துல்லா,சென்,வெங்கட்ராமன்,
கேபிள் சங்கர்,நர்சிம், பிஸி தங்கள் வருகைக்கு நன்றி.

விசேஷம் ஏதுமில்லை. பிரிவின் காரணமாக ஒரு ஏக்கம், அதனால் அசைபோடப்பட்ட பழைய ஞாபகங்கள்

Dr.Rudhran said...

very good. keep writing

முரளிகண்ணன் said...

ருத்ரன் சார், தங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி

கார்க்கிபவா said...

நான் தான் முதலில் வந்து படித்தேன். என்ன சொல்வதென்று தெரியாமல் போய் விட்டேன். புனைவா உண்மையான்னு தெரியாம போயிட்டேன். நல்ல இருக்குங்க. வார்த்தைகள் நிஜமா வரல. பிரிவுக்காக இந்த பதிவுன்னா அதன் நோக்கம் முழுமையா நிறைவேறியிருக்கு. வேற என்ன சொல்ரதுன்னு தெரியல..

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி கார்க்கி. என் உணர்வுகளை புரிந்து கொண்டதற்க்கு

rapp said...

//ஜாதி, ஜாதகம் பார்த்து திருமணம் செய்கிறார்களே என்று சமுதாயத்தின் மீது ஒரு வெறுப்பு இருந்தது. காதல் திருமணங்கள் மட்டும் தான் நடக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் இப்போதோ சமுதாயத்தை வணங்கிக்கொண்டிருக்கிறேன். பெண்களை துளியளவு கூட இம்ப்ரெஸ் பண்ண இயலாத தோற்றம், ஆரம்பித்த உடனேயே அறுக்காதடா என நண்பர்களே புலம்பும் அளவுக்கு போரான என் பேச்சு, சராசரி அறிவு, அதற்க்கும் கீழான வசதி என இருந்த எனக்கு உன்னைப்போல் ஒரு தேவதையை எப்படி காதலித்து அடையமுடியும். வாழ்க ஜாதி,ஜாதகம்.//

வாவ் சூப்பர்:):):)

rapp said...

இவ்ளோ சூப்பரா எழுதுனீங்கன்னா, அடிக்கடி அவங்க ஊருக்கு போயிடுவாங்க, அப்போதான இப்டி நீங்க உருகி எழுதறத படிக்கிற வாய்ப்பு நெறயக் கிடைக்கும்னு:):):)

rapp said...

//உறவிலும் சரி, நட்பு வட்டாரத்திலும் சரி என்றும் நான் முதன்மையாகவோ, முக்கியமான நபராகவோ கருதப்பட்டதில்லை. வந்தால் சரி என்பார்கள். வராவிட்டால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நீ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டா என்ற பூச்செண்டை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. ஒரு முறை உன் ஊர் திருவிழாவுக்கு சென்றிருந்தாய். நான் தொலைபேசியில் அழைத்த போது சொன்னாய் "போன தடவை ஒவ்வொண்ணுக்கும் கமெண்ட் அடிச்சு சிரிக்க வச்சீங்க, இந்த தடவை நீங்க இல்லாம ஒரே போர்". கால காலமாய் பூச்செண்டு எதிர்பார்த்தவனுக்கு ஆர்கிட் மலர் தோட்டம் அந்த பதில். //


அப்டில்லாம் இல்ல, நமக்குப் பிடிச்சவங்க நம்மை கண்டுக்கனும்னு நாம எதிர்பாக்கறதால இப்டி நம்ம எல்லாருக்கும் தோணும்னு நெனைக்கிறேன்:):):) கரெக்டா:):):) என்னதான் நண்பன் மிஸ் பண்றேன்னு சொன்னாலும் உங்க மனைவி சொல்றா மாதிரி வருமா:):):) சூப்பர் முரளி சார்:):):)

முரளிகண்ணன் said...

ராப், நன்றிகள்

பரிசல்காரன் said...

முரளி கண்ணன்,

உங்க சினிமாப் பதிவுகள் சூப்பர் என்றாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு இது போலவும் எழுதுங்கள்..

கடைசி வரிகள் (சகி) அருமையிலும் அருமை!

பரிசல்காரன் said...

@ அப்துல்லா

//நீங்கள் எழுதிய அத்தனையும் எனக்கும் பொருந்திப் போகின்றது//

எல்லாப் பக்கமும் ஒரே கமெண்ட்டா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகை.அப்துல்லா said...

எல்லாப் பக்கமும் ஒரே கமெண்ட்டா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


//

பரிசல் அண்ணே

ஒத்த கருத்து உள்ளவர்களிடம் ஒத்த சிந்தனை இருப்பதில் வியப்பென்ன??

நசரேயன் said...

முரளியின் மலரும் நினைவுகள் அருமை. எல்லாமே அழகான வரிகள்.
வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி பரிசலார்

கிரி said...

//நம்மாலும் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடிந்திருக்கிறதே!!! //

;-)

முரளிகண்ணன் இதை போல நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நன்றாக இருந்தது

முரளிகண்ணன் said...

நன்றி நசரேயன்

முரளிகண்ணன் said...

நன்றி கிரி

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க அண்ணே! இந்த விஷயத்திற்கு மத, சம்பிரதாயத்திற்கு நானும் வாழ்க கோஷம் போட்டுக்கிறேன்..:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சும்மா நச்சுன்னு இருக்கு

அருண்மொழிவர்மன் said...

உண்ம்மையிலேயே அனுபவித்து எழுதியது போல இருக்கிறது. சிலவேளை இந்த ஓவர் அன்புதான் உங்கள் பதிவுகள் சமீபகாலமாக குறைந்ததன் காரணமோ

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ்ப்ரியன்,சுரேஷ்,
அருண்மொழிவர்மன்

Nithi said...

நல்ல பதிவுங்க.:):):)

பாசகி said...

ரொம்ப காதலோட, மனதிருப்தியோட எழுதியிருக்கீங்க. கதையல்ல நிஜமா இருந்தா என்றும் தொடர வாழ்த்துக்கள்!

அத்திரி said...

//எவ்வளவு அழைப்பு வார்த்தைகள் இருந்தாலும் உன்னை அழைப்பது சகி என்று தான். தொடர்ந்து இதுபோலவே என்னை சகித்துக்கொள் என்று வேண்டிக்கொள்ளத்தான்.//

அனுபவம் பேசுகிறது..........!!!!!!!

பிரிவு வந்தாதான் அவங்களோட அருமை தெரியுது போல

இந்த விசயத்துல மட்டும் எல்லோருடைய மனநிலையும் ஒரே மாதிரிதான் இருக்கு.??!!

விலெகா said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

கோபிநாத் said...

அண்ணே செம டச்சிங்....வாழ்த்துக்கள் ;))

முரளிகண்ணன் said...

நித்யா,பாசகி,அத்திரி,விலெகா,
கோபினாத்
தங்கள் வருகைக்கு நன்றி

thamizhparavai said...

முரளி சார்...
வித்தியாசமான பதிவு உங்களிடமிருந்து. எண்ணங்களும் எளிமையாக கவிதை ஜிகினா பூசாமல் இருப்பது கண்ணைக்கூசாமல் படிக்க வைக்கிறது.

//இதுவரை நான் அடைந்த தோல்விகளெல்லாம் உன்னை திருமணம் செய்ததால் அர்த்தமற்றதாகிப் போய்விட்டது//
சென்ற பதிவில் வந்த வரிகளையே அழகாக இடம் மாற்றிப் பொருள் பொதியச் செய்து விட்டிர்கள்.( கன்வெர்ஷன் ஆஃப் நெகடிவ் டூ பாசிட்டிவ்)..
//வாழ்க ஜாதி,ஜாதகம்//
இதுக்கு இப்படியொரு அர்த்தம் இருக்கா...

முரளிகண்ணன் said...

தமிழ்பறவை, வருகைக்கு நன்றி