November 30, 2008

ஐ ஐ டி யில் பி எச் டி படிப்பு – வாய்ப்புகள்

ஐ ஐ டி க்களில் கீழ்கண்ட துறைகளில் பி எச் டி படிப்பிற்க்கான வாய்ப்புகள் உள்ளன

1 அனைத்து பொறியியல் துறைகள்
2 உயிரி தொழில்நுட்பம்
3 இயற்பியல்,வேதியியல்,கணிதம்
4 மேலாண்மை

கல்வித்தகுதி

1 பொறியியல் துறை
பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓரளவு மதிப்பான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். (70 சதவீதத்துக்கு மேல்). இதில் வெட்டு மதிப்பெண் வரும் விண்ணப்பங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும். இளங்கலை, முதுகலை இரண்டிலும் சராசரியாக 75% இருந்தால் போதுமானது. கேட் மதிப்பெண் அவசியமில்லை. வரும் விண்ணப்பங்கள், இருக்கும் இடங்களின் அடிப்படையில் நுழைவுத்தேர்வும், பின் நேர்முகத்தேர்வும் நடைபெறும். தற்போது பெரும்பாலும் நேர்முகத்தேர்வே நடைபெறுகிறது.

2 உயிரி தொழில்நுட்பம்
இதில் முதுகலை பொறியியல்/தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர்களுக்கு கேட் மதிப்பெண் தேவையில்லை. முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர்களாயின் கேட் மதிப்பெண் தேவை.

3 இயற்பியல்,வேதியியல்,கணிதம்
முதுகலை பட்டத்துடன், கேட் மதிப்பெண்ணும் அவசியம்.

4 மேலாண்மை
மேலாண்மை முதுகலை, பொறியியல் முதுகலை, அறிவியல், கணிதம் முதுகலை போன்ற பட்டம் பெற்ற யாரும் விண்ணப்பிக்கலாம்.

நுழைவு முறைகள்

1 ரெகுலர் (Half Time Research Associate)

எங்கும் பணியில் இல்லாதவர்களுக்கான முறை. (தற்போது வேலையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம், சேர்க்கையின் போது பணியை ராஜினாமா செய்துவிட வேண்டும்). உதவித்தொகை நான்கு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையால் வழங்கப்படும்.

2 குவாலிட்டி இம்ப்ரூவ்மெண்ட் ப்ரொகிராம் (QIP)
கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், மத்திய அரசு பணியில் (DRDO,ISRO,DOS,DGAQA போல) இருப்பவர்கள் நுழைவு முறை. இங்கும் உதவித்தொகை தரப்படும், அவர்களின் பணியிடத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும். தேர்வு பெற்றவுடன், முதல் பருவத்தில் குறிப்பிட்ட நாட்கள் வழிகாட்டியுடன் (GUIDE) ஆலோசனை மற்றும் பணிகள் செய்ய வேண்டும் (பணீயிடத்தில் இருந்து, வந்து போய்) . பின் மூன்று ஆண்டுகள் வளாகத்தில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். படிப்பு முடிந்ததும் தங்களின் பணியிடத்திற்க்கே கட்டாயம் திரும்பி செல்ல வேண்டும். இந்த முறையில் வருபவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெறமுடியாது.

3 ப்ராஜக்ட்
கல்வித்தகுதி இருந்து ரெகுலர் முறையில் தேர்வு பெற முடியாதவர்கள் இதை பின்பற்றலாம். பேராசிரியர்கள் தாங்கள் வெளியிடங்களில் இருந்து பெற்றுள்ள ப்ராஜக்ட்களில் உங்களை இணைத்துக்கொள்வார்கள். குறிப்பிட்ட அளவு அனுபவம் பெற்றவுடன் நுழைவுத்தேர்வில் பங்குபெற்று (எளிதாக இருக்கும்) பி எச் டி யாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்க்கான உதவித்தொகை ஐ ஐ டி யில் உள்ள Industrial Consultancy & Sponsored Research துறை மூலம் வழங்கப்படும். இவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெறலாம்.

4 ஸ்பான்ஸர்ட்/ எக்ஸ்டெர்னல் கேண்டிடேட்
பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தனியார்/அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான முறை. இதில் உதவித்தொகை தரப்பட மாட்டாது. முதல் பருவத்தில் வளாகத்தில் தங்கி, ஆராய்ச்சிக்கு தேவையான பாடங்களை (இது எல்லா நுழைவு முறைகளுக்கும் பொது) படிக்க வேண்டும். பின்னர் தங்கள் பணியிடத்திற்க்கு திரும்பி சென்று ஆராய்ச்சியை தொடரவேண்டும். ஆராய்ச்சிக்கான கட்டமைப்பு உள்ள நிறுவனத்தில் பணிபுரிவோருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும். மேலும் நிறுவனத்திற்க்கும், ஐ ஐ டிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இருக்கவேண்டும். இதற்க்கு கால உச்சவரம்பு கிடையாது.

தேர்வுகள்

நுழைவுத்தேர்வுக்கும், நேர்முகத்தேர்வுக்கும் பெரும்பாலும் அடிப்படையில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வுக்கே முக்கியத்துவம் அதிகம்.

உதவித்தொகை

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 14,500ம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 15,000ம் வழங்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்க்கும் கல்வி கட்டணமாக ரூ 9000 நாம் செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு வளாகத்திலேயே குடியிருப்பு வசதி தரப்படும்.

8 comments:

Cable சங்கர் said...

ஏற்கனவே நிறைய பி.எச்.டி வாங்கிவிட்டதால்.. மேற்கூறிய பி.எச்.டிகளை விட்டு விடுகிறேன்.

Anonymous said...

Thanks for the informative post. Is it 14500 per month or year

புதுகை.அப்துல்லா said...

அண்ணன் கேபிள் சங்கர் சொன்னதை நானும் வழிமொழிகிறேன் :)

முரளிகண்ணன் said...

\\Thanks for the informative post. Is it 14500 per month or year\\

மாதம் ரூபாய் 14,500 தான்.

Viji said...

பயனுள்ள பதிவு

Thamira said...

அண்ணன் அப்துல்லா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

அக்னி பார்வை said...

தகவலுக்கு நன்றி,

ப்ரோஜெக்ட் முறையை பற்றி மேலும் என்கு தகவல் பெறுவது?

Anonymous said...

அட சாமிகளா, இப்பவே தேவைக்கு அதிகமா பிஎச்டி இருக்குது. வேற வேலை எதுவும் கிடைக்கலன்னா மட்டும் பிஎச்டி பண்ணுங்க.இல்லைனா GRE எழுதி US-ல் பிஎச்டி பண்ணுங்க. 14,500 ரூபாய நம்பி ஏமாந்துறாதீங்க. இத JRF = jobless relief fundன்னு கிண்டல் பண்ணுவாங்க, (உண்மையில் junior research fellowship.)

IIT-ல
B-Tech = Product
M-Tech = Byproduct
PHD = Waste Product இப்படி கிண்டல் பண்ணுவங்க.

-PHD பண்ணி நொந்து போனவன்

PS: உதாரணமாக ஒரு சோககதை... http://srishiv.blogspot.com/2008/08/blog-post.html