May 25, 2009

இயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் - கே சுப்ரமணியம் பகுதி -1



தமிழ் என்னும் மொழியை திரைப்படம் பேசத் தொடங்கி 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. 31 ஆம் ஆண்டு ஒரு படம் மட்டுமே வெளியானது. பின் வருடத்திற்க்கு வருடம்
எண்ணிக்கையில் கூடிக்கொண்டே சென்று 40 களில் வருடத்திற்கு 30 படம் என்ற நிலையை அடைந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய கால கட்டத்தில் பிலிம் ரோல்
தட்டுப்பாடு காரணமாக 11000 அடியில் முழுப் படத்தையும் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு திரையுலகம் தள்ளப்பட்டது. மேலும் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக
ஒரு போர் ஆதரவு படம் எடுத்தால் மட்டுமே அடுத்த இரண்டு படங்களுக்கு பிலிம் தரப்படும் என்ற நிபந்தனையையும் அரசு விதித்தது.

எனவே அந்தக்காலகட்டத்தில் வருடத்துக்கு நான்கு படங்கள் மட்டுமே வந்தன. சுதந்திரம் அடைந்த பின் திரைத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு தற்போது வருடத்துக்கு
குறைந்தது 80 படங்கள் வெளிவருகின்றன.ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 இயக்குநர்களாவது தமிழ்சினிமாவில் அறிமுகமாகிறார்கள். எனவே
குறைந்தபட்சம் 1000 இயக்குநர்களாவது தமிழ்சினிமாவில் இருந்திருக்கிறார்கள்.

இதில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? நம் தலைமுறை இயக்குநர்களை விட்டு விடுங்கள். முந்தைய தலைமுறை இயக்குநர்கள் எத்தனை பேரை தெரியும்?


சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்றாலும், அதன் அடிப்படை ஒரு இயக்குநர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தன் பார்வையில்
எப்படி சொல்கிறார் என்பதே. அவர் அறியாமல் ஒரு ஓளித்துணுக்கு கூட படததில் இடம் பெறக்கூடாது. ஒரு நடிகரானாவர் தன் புருவத்தைக்கூட இயக்குநர்
சொன்ன அளவுக்கு மேல் தூக்கிவிடக் கூடாது. அந்த அளவுக்கு ஆளுமைத்திறன் பெற்ற இயக்குநர்களின் பெயர்களை நாம் மறந்து விடுகிறோம்.

சில இயக்குநர்களே தலைமுறைகளைக் கடந்தும் மக்களால் நினைவு கொள்ளப்படுகிறார்கள். அதற்க்கு முக்கிய காரணமாக விளங்குவது அவர்களின்
கலை ஆளுமையும்,கருத்து ஆளுமையுமே. அப்படிப்பட்ட சிறப்பான இயக்குநர்களை நாம் நட்சத்திர இயக்குநர் என்று அழைத்தோமானால் இயக்குநர் கே சுப்ரமணியம்
அவர்களை துருவ நட்சத்திரம் என்று அழைக்க வேண்டும்.

கே சுப்ரமணியம் அவர்களுக்கு எவ்வளவோ சிறப்புகள் இருக்கின்றன.


தமிழ்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர், எஸ் டி சுப்புலக்‌ஷ்மி, எம் எஸ் சுப்புல‌ஷ்மி, டீ ஆர் ராஜகுமாரி, வி என் ஜானகி போன்றவர்களை
அறிமுகப்படுத்தியவர்.

பாபநாசம் சிவனின் இசையையும்,பாடல்களையும் பெருவாரியாகப் பயன்படுத்தியதோடு நில்லாமல் அவரை நன்கு நடிக்கவும் வைத்தவர்.

தமிழின் முதல் குழந்தைகள் படத்தை இயக்கியவர்.

மிகப்பெரும் எழுத்தாளர்களான பிரேம்சந்த் முன்சி, கல்கி ஆகியோரது படைப்புகளை திரைப்படமாக்கியவர்

காடாக இருந்த தேனாம்பேட்டையை திருத்தி காங்கிரஸ் மைதானம் அமையக் காரணமாய் இருந்தவர்.

பல திரைப்படம் சார்ந்த சங்கங்களை துவக்கியவர்.

ஆனால் இதனாலா அவரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்? இல்லை.

70 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இயக்கிய சமுக சீர்திருத்த கருத்துக்கள் உடைய படங்களுக்காகவே.

அவர் 20 படங்களை இயக்கியுள்ளார். அதில் புராண படங்களை தவிர்த்து 10 சமூக கருத்துள்ள படங்களை இயக்கியுள்ளார்.


அந்தப் படங்களைப் பற்றிய ஒரு பார்வையே இந்தப் பதிவு.


பாலயோகினி (1937)

ஒரு சப் கலெக்டர், அவருக்கு ஒரு மகள், ஒரு விதவை சகோதரி. தன் தந்தையை காவலர்கள் அழைத்து சென்றுவிட்டார்கள், காப்பாற்றுங்கள் எனக்கேட்டு
சப் கலெக்டர் வீட்டுக்கு வருகிறாள் ஒரு சிறுமி. வயதான காவல்காரரும் பரிதாபப்பட்டு அந்த பெண்ணை உள்ளே விடுகிறார். உள்ளே சப் கலெக்டர் இன்னொரு பெண்ணுடன்
உல்லாசமாய்.சிறுமியையும், காவல்காரரையும் விரட்டி விடுகிறார் சப் கலெக்டர். அவர்கள் மேல் பரிதபம் கொண்டு ஆதரிக்கிரார்கள் கலெக்டரின் மகளும், சகோதரியும்.
கோபப்படும் கலெக்டர் இவர்களையும் வீட்டை விட்டு துரத்துகிறார். வேறு வழியில்லாமல் இவர்கள் காவல்காரருடன் சேரியில் சென்று தங்குகிறார்கள். அதனால்
கோபப்படும் கலெக்டரின் சமூகமான பிராமணர்கள் பல தொல்லைகளை சேரி மக்களுக்கு தருகிறார்கள். கலெக்டரின் மகள் எப்படி எல்லாவற்றையும்
மாற்றுகிறாள் என்பதே கதை.இதில் கலெக்டரின் மகளாக நடித்தவர் பேபி சரோஜா. தமிழ்நாட்டின் ஷெர்லி டெம்பிள் என மக்களால் புகழப்பட்டார்.


சேவா சதனம் (1938)

பிரபல எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் எழுதிய நாவலின் உரிமையை வாங்கி எடுக்கப்பட்ட படம். அந்நாட்களில் வயதானவர்களுக்கு குழந்தைகளை
திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி மணமுடிக்கப்பட்ட குழந்தையை மாப்பிள்ளை வீட்டார் மிகவும் கொடுமைப் படுத்துவார்கள்.
மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்கும். இந்தப் படத்தின் நாயகியும் அதுபோல திருமணம் செய்விக்கப் பட்டு கொடுமைப் படுத்தப் படுகிறாள்.
பின் அங்கிருந்து துணிச்சலாக வெளியேறி பிரபல பாடகியாக மாறுகிறாள். சம்பாதித்த செல்வத்தைக் கொண்டு சேவா சதனம் என்னும் அபலைப் பெண்களுக்கான
அமைப்பைத் தொடங்குகிறாள். அவளின் முன்னாள் கணவரோ நம் சம்பிரதாயங்களே இதற்க்குக் காரணம் என்று உணர்ந்து பூணூலை அவிழ்த்தெறிகிறார்.
அவரது சகோதரி பைத்தியமாகிறாள்.இந்தப் படத்தின் நாயகி எம் எஸ் சுப்புலக்‌ஷ்மி.


தியாகபூமி (1939)

இதுவும் பிராமண சமுதாயத்தின் குறைபாடுகளைச் சொன்ன படம்தான். முந்தைய இரண்டு படங்களுக்காகவும் அவரை ஜாதிப் பிரஸ்டம் செய்ததாக ஒரு தகவல் உண்டு.

சாஸ்திரி ஒருவர் தன் மகளை கல்கத்தாவில் இருக்கும் ஒருவனுக்கு திருமணம் செய்விக்கிறார். அவனோ ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் தொடர்பு
கொண்டு கட்டுப்பெட்டியான மனைவியை சித்திரவதை செய்கிறான். ஒரு குழந்தையும் பிறக்கிறது. மனம் வெறுத்து அவள் தன் தந்தையை தேடி வருகிறாள்.

ஆனால் சாஸ்திரியும் பிரச்சினையுடன் இருக்கிறார். தன் ஊரில் வெள்ளம் ஏற்படும் போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவுகிறார் அவர். சாதிப் பிரஸ்டம் செய்யப்பட்டு தற்போது
அவர் சேரியில்.தன் குழந்தையை அவர் மெய்மறந்து பாடிக்கொண்டிருக்கும் போது அருகில் வைத்து விட்டு மும்பை செல்கிறாள் மகள்.

அங்கே அவள் வேலைக்கு சேருமிடம் அவளது நெருங்கிய உறவினர் வீடு. சொத்துக்கள் அனைத்தும் அவளுக்கே. பின் சென்னை திரும்புகிறாள் புதுப்பெயருடன். தான தர்மங்கள்
செய்து பிரபலமாகிறாள். தன் குழந்தையை தற்செயலாக கண்டுபிடிக்கும் அவள் தன்னுடனே வைத்து வளர்க்கிறாள். அந்தக் குழந்தையோ உண்மை தெரியாததால்
தாத்தா வீட்டிற்க்கே ஓடிப் போகிறாள். போலிஸ், புகார், பத்திரிக்கை செய்தி என இவளது புகைப்படம் வெளியாக அதை பழைய கனவன் பார்த்து விடுகிறான்.

சேர்ந்து வாழுமாறு கணவன் கோர்ட்டுக்கு செல்ல, இவல் மறுக்கிறாள். வேண்டுமானால் நான் ஜீவனாம்சம் தருகிறேன் என்று சொல்கிறாள். எல்லோரும்
சேர்ந்து வழுமாறு கட்டாயப் படுத்த அதை மறுத்து சுதந்திரத்துக்கு பாடுபடும் இயக்கத்தில் இணைகிறாள்.

மனம் திருந்திய கணவனும் அதே இயக்கத்திக் சேர்ந்து விடுதலைக்கு போராடுகிறான். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய அரசால் முதலில் தடை செய்யப்பட்டு பின்னர் வெளியானது.


பக்த சேதா (1940)

இதுவும் தீண்டாமைக் கொடுமையை பேசிய படம். சேதா என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. அவர் பக்தியை மெச்சி விஷ்ணு தினமும் அவருக்கு காட்சி கொடுக்கிறார்.
இதைக் கண்ட கௌரவர்களின் குரு துரோணரின் மகள் வியப்படைகிறாள். சேதாவின் மகன் சேவாவை காதலிக்கிறாள். இதை அறிந்த துரோணர் பல இடைஞ்சல்களைத்
தருகிறார். இறுதியில் அவர்கள் இருக்கும் சேரியை கொளுத்தச் சொல்கிறார். பின்னர்தான் தெரிகிறது அவர் மகளும் அங்கேதான் இருக்கிறாள் என்று. பதறி ஓடுகிறார்.
ஆனால் அவர்கள் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இறைதுதி செய்து கொண்டிருக்கிரார்கள். பின்னர் அனைவரும் சமம் என உணருகிறார்கள்.


பவளக்கொடி,கச்ச தேவயானி, ராஜா பிர்த்துஹரி போன்ற புராண படங்கள் அடுத்த பகுதியில்.



References

1. வலம்புரி சோமனாதன் எழுதிய ”தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்ரமணியம்” அல்லயன்ஸ் வெளியீடு

2. விட்டல்ராவ் எழுதிய ”தமிழ்சினிமாவின் பரிமாணங்கள்”.

34 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

me the first

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மேலும் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக
ஒரு போர் ஆதரவு படம் எடுத்தால் மட்டுமே அடுத்த இரண்டு படங்களுக்கு பிலிம் தரப்படும் என்ற நிபந்தனையையும் அரசு விதித்தது.//


aahaa... நல்லாயிருக்கே கதை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்கும்//

அவரும் கிழவியாகத்தானே இருப்பார்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//. வேண்டுமானால் நான் ஜீவனாம்சம் தருகிறேன் என்று சொல்கிறாள்.//


ஆஹா...,

நாட்டில அன்னைக்கே சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்களே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பக்த சேதா (1940)//


தல இது இந்த நூற்றாண்டில் ஒருவான கதையா..,

சில நூற்றாண்டுகளுக்கு முன்பே கதையில் சேர்த்து விட்டார்களா?

இல்லை மூலக் கதையிலேயே இதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா?

இந்தப் படங்களின் டிவிடிக்கள் எங்காவது கிடைக்கிறதா? தல

கிடைக்கும் வாய்ப்பு ஏதாவது இருக்கிறதா?

Cable சங்கர் said...

பின்னிட்டீங்க தலைவரே..

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

\\தல இது இந்த நூற்றாண்டில் ஒருவான கதையா..,

சில நூற்றாண்டுகளுக்கு முன்பே கதையில் சேர்த்து விட்டார்களா?

இல்லை மூலக் கதையிலேயே இதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா?

\\

இது மஹாபாரதத்தின் ஒரு கிளைக்கதை என்று சொல்வார்கள்.

மற்றொரு சாரார், மஹாராஷ்டிரத்தில் வாழ்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவரின் கதை என்றும் சொல்வார்கள்.

கான்கிரீட்டான ஆதாரம் இல்லை.


வருகைக்கு நன்றி கேபிள் சங்கர்

நையாண்டி நைனா said...

padichittu vaaren...
late aanaa..nammai romba pinnaaal thallirraanga.

நையாண்டி நைனா said...

padichitteen.

pala vishayangalil naama munnodiyaaka irunthirukkirom.
nandri.

மண்குதிரை said...

உங்கள் பழைய பதிவுகளையும் இன்றைக்குத்தான் வாசித்தேன். நல்லா இருக்கு.

தராசு said...

அருமை, தலைவரே, படிக்க படிக்க ஆர்வம் மேலிடுகிறது. இத்தனை நாள் எங்க போயிருந்தீங்க, அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க.

anujanya said...

முரளி முத்திரையுடன் இருக்கும் பதிவு. 'தியாக பூமி' கல்கியின் கதையா?

இந்த சுப்ரமணியம் - பத்மா சுப்ரமணியம், அபஸ்வரம் ராம்ஜி, (ராம்ஜியின் அண்ணன் பெயர் நினைவில் இல்லை) இவர்களின் தந்தை தானே?

அனுஜன்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை முரளி

எம்.எம்.அப்துல்லா said...

sexer started.

o.k!o.k!

:)

Mahesh said...

ஆஹா... உங்க சினிமா ஞானம் அசர வைக்குது !!!

அத்திரி said...

தல அசத்தல்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நையாண்டி நைனா.

மண்குதிரை, மிக்க மகிழ்ச்சி.

தராசு, நாளைக்குள் போட்டு விடுகிறேன்.

புருனோ Bruno said...

முரளி,

60 வருடங்களுக்கு முன்னர் வந்த திரைப்படங்களின் கதை பிரமிக்க வைக்கிறது.

இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் எப்படி சமுக சமத்துவம் பிற மாநிலங்களை விட அதிக அளவில் இருக்கிறது என்ற கேள்விக்கு இது வரை நான் இரண்டு காரணங்களை மட்டுமே நினைத்திருந்தேன் 1. பெரியார் 2. காமராசர்

மூன்றாவது முக்கிய காரணம் இது போன்ற திரைப்படங்கள் என்று புரிகிறது

புருனோ Bruno said...

தியாகபூமி (1939) கதையை எழுதியது யார் என்றும் கூறியிருக்கலாம் ;)

முரளிகண்ணன் said...

அனுஜன்யா, தியாக பூமி கல்கியின் கதைதான். தொடராக வெளிவந்தது. கதை எழுதும் போதே படமும் எடுக்கப்பட்டதால், ஓவியத்திற்க்குப் பதில் படத்தின் ஸ்டில்களே பயன்படுத்தப்பட்டன.


ஆம் நீங்கள் கூறுவது சரிதான்.

பத்மா சுப்ரமணியம், அபஸ்வரம் ராம்ஜி யும் இவரது குழந்தைகளே.

மேலும் சிந்து சமவெளி முதல் இந்திராகாந்தி வரை (indus valley to indira gandhi) என்னும் அருமையான டாக்குமெண்ரி படட்தை எடுத்த கிருஷ்ணசாமியும் இவரது புதல்வரே.


96 தேர்தலுக்கு முன், ரஜினியின் பேட்டி ஒன்று தூர்தர்ஷனில் வெளியாகி கலக்கியதே. அதை இயக்கியவரான ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் ரமணனும் சுப்ரமணியத்தின் புதல்வர்தான்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி டிவி ராதாகிருஷ்ணன் சார், எம் எம் அப்துல்லா, மகேஷ், அத்திரி.

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் புருனோ.

கல்கி என்று சென்ற பின்னூட்டத்தில் சொல்லிவிட்டேன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

பிரமான சமுதாயத்திருக்கு எதிரா படம் எடுத்தாருன்னு சொல்லி அக்ரகாரத்த விட்டு இவர வெளில அனுப்பிட்டாங்க...

மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட இன்னொரு பாரதி இவர்

சென்ஷி said...

நட்சத்திர வாரத்துல துருவ நட்சத்திர இயக்குனர்!

இவரைப்பற்றிய செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்ததுண்டு. ஆனால் தொகுப்பாக படிப்பது இங்குதான் முதன்முறை..

மிக்க நன்றி முரளி!!

Thamira said...

மீ த லேட்டு.! நட்சத்திர வாழ்த்துகள் முரளி.! முதல் பதிவே உங்கள் தளத்தில் விளையாடியிருக்கிறீர்கள்.. தொடரட்டும்.!

அப்புறம் ப்ரொபைலில் நான் எடுத்த படத்தை வைக்கிறதுதானே.? ஹிஹி..

செல்வம் said...

முரளி எப்படி இருக்கீங்க....நட்சத்திரமாக மின்னுவதற்கு வாழ்த்துக்கள்...ஆரம்பமே உங்கள் தளத்தில் அடித்து ஆரம்பித்து விட்டீர்கள்...நச்சுனு ஒரு புனைவும் இருக்கனும்...ஆமா சொல்லிப்புட்டேன்

தீப்பெட்டி said...

இந்த கட்டுரையில் உங்க உழைப்பு தெரியுது பாஸ்...

நல்ல பதிவு..

Unknown said...

Maduraiyil sadth guru smaaj Kalooriyil perasiriyaraga irunthu sameepathil kaalamagiya Thirumathi Neela Krishnamurthi avargalin thanthaithan Director K.S. Avarudaya padathil Ivarum nadithullargal.

anushmadhu

Starjan (ஸ்டார்ஜன்) said...

நட்சத்திரத்துக்கே நட்சத்திரமா !!!!....

நல்வாழ்த்துக்கள் முரளி !

அந்த காலத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட கதைகள் வந்தன .
இப்பவெல்லாம் எங்கே வருது ???...

வெட்டிப்பயல் said...

சினிமாவை எவ்வளவு சக்தி வாய்ந்த மீடியமா அன்னைக்கு பயன்படுத்தியிருக்காங்க...

இதுல ஒவ்வொரு கதையும் ஆச்சரியமா இருக்கு... ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஷால், பரத் எல்லாருக்கும் இந்த படத்தை எல்லாம் போட்டுக் காட்டணும் :-)

துளசி கோபால் said...

நல்வரவு நட்சத்திரமே.

இந்தவாரம் முழுசும் நல்லாவே நடக்குமுன்னு பட்சி சொல்லுது:-))))


இனிய வாழ்த்து(க்)கள்.

கோபிநாத் said...

அண்ணாச்சிக்கு கலக்குறிங்க...;))

இந்த படத்தை பற்றி எல்லாம் படிக்கும் போது அப்பவே எம்புட்டு கஷ்டப்பட்டு உருப்படியாக எடுத்திருக்காங்க. கிரேட் ;)

முரளிகண்ணன் said...

பித்தன், சென்ஷி தங்கள் வருகைக்கு நன்றி.

ஆதி, நம்ம பதிவுக்கு என்ன திருஷ்டியா படப் போகுது?
நீங்க எடுத்த படத்த வைக்க?


நல்லா இருக்கேன் செல்வம். நிச்சயம் ஒரு புனைவு உண்டு.

நன்றி தீப்பெட்டி

முரளிகண்ணன் said...

அன்ஷுமது, தங்கள் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி.

வாங்க ஸ்டார்ஜான்.

வாங்க வெட்டி, என்ன பண்றது?.

டீச்சர், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டீச்சர்.

வாங்க அண்ணாச்சி.

RV said...

முரளி,

அருமையான பதிவுகள், இன்னும் எழுத மாட்டீர்களா என்று ஏங்க வைக்கிறது.
கே. சுப்ரமண்யத்தின் படங்கள் இன்று ஏதாவது பார்க்க கிடைக்குமா? இன்னும்ப் பிரிண்ட், டிவிடி ஏதாவது கிடைக்குமா?