May 31, 2009

என்னுடைய ட்ரீம் கிரிக்கெட் டீம்

நான் கிரிக்கெட் பார்த்த வரைக்கும், எனக்குப் பிடிச்ச ஆளுங்களை எல்லாம் சேர்த்து உருவாக்குனது இந்த டீம்.

ஆஸ்திரேலிய பெர்த் பிட்ச்சா இருந்தாலும் சரி, ஐதராபாத் டெத் பிட்ச்சா இருந்தாலும் சரி

செஞ்சூரியன் மாதிரி வட்டமா இருந்தாலும் சரி
வெலிங்டன் மாதிரி அஷ்டகோணலா இருந்தாலும் சரி.

லார்ட்ஸ் மாதிரி ஸ்விங் ஆனாலும் சரி, பிரேமதாசா மாதிரி ஸ்பின் படமெடுத்து ஆடினாலும் சரி

பேட்ஸ்மென் உயிரக் கொடுத்து அடிச்சாத்தான் சிக்ஸ் போகும்கிற மாதிரி இருக்குற மெல்போர்ன் ஆனாலும் சரி. பேட்ஸ்மென் தும்முனாலே சிக்ஸ் போயிடுற டாண்டனா இருந்தாலும் சரி


டெஸ்ட்டானும் சரி ஒன் டே ஆனாலும் சரி

20 20 ஆனாலும் சரி இனிமே வரப்போற 10 10 ஆனாலும் சரி

என்னோட டீம் இதுதான்.

இது பெஸ்ட் லெவன் இல்லை. என்னோட இஷ்ட லெவன்.


1. கார்டன் கிரினீட்ஜ்

கிரினீட்ஜ் அடிச்சா பால் பவுண்டரி எட்ஜ்ஜு.
வலது கால தரையில அழுத்தமா ஊணி, இடது கால தூக்கி இவர் அடிக்கிற ஹுக்குக்கும் புல்லுக்கும் நான் அடிமை.
(செல்லமா, நடராஜர் ஷாட்).

2. விரேந்திர சேவாக்

வாக் பண்ணி உள்ள வந்தா எதிரணி பவுலர்களுக்கெல்லாம் கதக்குன்னு இருக்கும்.

3. விவியன் ரிச்சர்ட்ஸ் (கேப்டன்)
ஓப்பனர்கள் எப்படா அவுட் ஆவாங்கண்ணு எதிரணி கேப்டனுக்கு பயமாவும் இருக்கணும். ஐயையோ அப்படி அவுட்டாயிட்டா இவன் வந்துடுவானேன்னு பீதியாவும் இருக்கணும். அதுக்கு நம்மாளை விட்டா வேற யாரு இருக்கா?


4. ஜாவிட் மியாண்டாட்


பிவோட்டல் ரோல் இவருக்குத்தான். வண்டி எந்த நிலைமையில இருந்தாலும் ஸ்டேஷனுக்குள்ள பாதுகாப்பா கரெக்ட் டயத்துக்கு போயிடும், இந்த இஞ்சின் ட்ரைவர் இருந்தா.

5.அரவிந்த டி சில்வா

ஆளப் பார்த்தா அஞ்சடி. அடிச்சா பால் பஞ்சர்டி.
மினி பவர் ஹவுஸ். சிட்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி எதிரணிக்கு அடி விழும்.

6.இயன் போத்தம்

இயன் போத்தம் இல்ல. அடுத்த டீம் போதும் போதும்னு சொல்லற வரைக்கும் அயன் பண்ற போத்தம்.
ஆல் ரவுண்டர் ஸ்லாட் இவருக்குத் தான். சாதாரண மேட்ச் வின்னர் இல்ல. அசாதாரண சீரிஸ் வின்னர்.

7. ஆடம் கில்கிரிஸ்ட்

நான் மட்டுமில்ல, யாரு வேணூம்னாலும் எப்ப வேணூம்னாலும் லெவன் போட்டா இவர்தான் கீப்பிங்குக்கு ஆட்டோமேட்டிக் சாய்ஸ்.

8. ரிச்சர்ட் ஹேட்லி

இந்த சுல்தான் ஆப் சீம் அன்ட் சுவிங் தான் நம்ம டீமோட ஒன் சேஞ் பவுலர். இவர் போடுற லெக் கட்டர பார்த்தா அடுத்து உக்கார்ந்திருக்குற பேட்ஸ்மெனோட வாய் நெயில் கட்டரா ஆயிடும்.

9. வாசிம் அக்ரம்

நாலஞ்சு ரீப்ளே பார்த்தாத்தான் பால் எப்படி ஸ்விங் ஆச்சுன்னே சொல்ல முடியும் கமாண்டேட்டரால. இந்த டெயில் எண்ட் டெர்மினேட்டர் இருக்குற வரைக்கும் எந்த டீம் வாலும் ஆடாது.

10. ஷேன் வார்னே

பாம்புப் புத்துக்குள்ள கையை விட்ட படையப்பாவ பார்த்துருக்கோம். ஆனா புத்துக்குள்ள காலை விட்ட மாதிரி நடுங்குற பேட்டப்பாக்களை பார்க்கலாம் இவர் பவுலிங் பண்ணுறப்போ.

11. கர்ட்லி அம்புரோஸ்

பெர்த்துல இவர் பவுலிங் போட்டா விக்கெட் கீப்பர் தேர்ட் மென்லதான் நிக்கணும். 22 யார்ட் என்ன 44 யார்டுல பிட்ச் இருந்தாலும் லென்த்துல போடுவாரு எங்காளு.

37 comments:

தர்ஷன் said...

Me the first

தர்ஷன் said...

ம்ம் அருமை
Test போட்டிகளை பொறுத்த வரை உங்கள் வரிசை சிறப்பாக இருப்பதாகவே கருதுகிறேன்
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை சில மாற்றங்கள் வரலாம்
அரவிந்த டீ சில்வா எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த வீரர் அவரை உங்கள் வரிசையில் சேர்த்திருப்பது சந்தோசம்
What about Ian healy?

புருனோ Bruno said...

// இவர் போடுற லெக் கட்டர பார்த்தா அடுத்து உக்கார்ந்திருக்குற பேட்ஸ்மெனோட வாய் நெயில் கட்டரா ஆயிடும்.
//

சூப்பர் :) :) சூப்பர்

புருனோ Bruno said...

//பிவோட்டல் ரோல் இவருக்குத்தான். வண்டி எந்த நிலைமையில இருந்தாலும் ஸ்டேஷனுக்குள்ள பாதுகாப்பா கரெக்ட் டயத்துக்கு போயிடும், இந்த இஞ்சின் ட்ரைவர் இருந்தா.//

கேப்டனுடன் சண்டை என்றால் வண்டி நகராகம் கூட நிற்கலாம்

Unknown said...

சூப்பர் டீம்

பினாத்தல் சுரேஷ் said...

1. சீக்கா
2. ஹேடன்
3. சச்சின்
4.வெங்சர்க்கார்
5. கூச்
6. பார்டர்
7. ஹீலி (விகீ)
8. கும்ப்ளே
9. மெக்ரா
10. வால்ஷ்
11. சந்திரசேகர்

வரீங்களா ஒண்டிக்கு ஒண்டி?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்ன அநியாயம் கபில்தேவ் இல்லாமல்?


நல்லவேளை அவரை 12த்மேனாக்க வில்லை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பதிமூன்றாவது பதிவு தல..

இன்னும் எத்தனை வெச்சிருக்கீங்க

இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உண்மையில் போத்தம், கபில், இம்ரான் போன்றவர்களில் ஒருவரேதானா தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழீஷ் ஓட்டுப் போட்டாச்சு தல

தமிழ்மணத்துல முடியல தல

முரளிகண்ணன் said...

தர்ஷன் தங்கள் வருகைக்கு நன்றி.

இயன் ஹீலி பேட்டிங் கில்லியுடன் கம்பேர் செய்யும் போது ஒரு மாற்றுக் குறைவுதானே தர்ஷன்?


வாங்க டாக்டர்.
\\கேப்டனுடன் சண்டை என்றால் வண்டி நகராகம் கூட நிற்கலாம்\\

சூப்பர்.

Namma Illam said...

கொஞ்சம் எங்களுக்கு பழக்கம் இல்லாத பழைய லிஸ்ட் மாதிரி இருக்கு.. :)

முரளிகண்ணன் said...

நன்றி அதிஷா.


பினாத்தல் சார்,

மோதிப் பார்ப்போம். எங்க டீமுக்கு
வாய்ப்பு கொஞ்சம் அதிகம்தான்.

சுரேஷ்,

இம்ரான் மோர் கேப்டன்ஷி ஓரியண்டட்

கபில் விட போத்தம் பேட்டிங் சூப்பரா
இருக்கும். இது எனக்குப் பிடிச்ச ஆளுங்களோடதுதானே.

பிளேர் இருக்குற ஆளுகளாதான் எனக்குப் பிடிக்கும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பதினொன்று என்பது கொஞ்சம் கஷ்டம்தான்..,

முரளிகண்ணன் said...

வாங்க தமிழ்ப்ரியன்.

உங்க வயசு 15 ஆ?

Krish said...

சச்சின் இல்லாம ஒரு டீமா?

முரளிகண்ணன் said...

பினாத்தல் சார்

இப்போ டீடெயிலா வர்றேன்.

உங்க டீமிலே ரெண்டு லெக் ஸ்பின்னர்.

கும்ளேக்குப் பதில் முரளிதரன் இருந்தா வெயிட்டா இருக்கும்.

சீக்காவை நாங்க ஈஸியா தூக்ககிடுவோம்.

(ரிச்சர்ட்ஸ்க்காக சந்திராவா? பலே பலே)

வெங்சர்க்கார் 20-20, ஒண்டேக்கு ?

பார்டர்தானே கேப்டன்?

முரளிகண்ணன் said...

கிருஷ்

சச்சின வச்சு நீங்க ஒரு டீம் கொடுங்க.

கார்க்கிபவா said...

சச்சின் இல்லாமலா? ஓக்கே.. தோனி? ரைட்டு விடு.. ஆனா மெக்ரா?

anujanya said...

இஷ்டமான பதினொன்று என்றால், நீங்க நிச்சயம் டெஸ்ட், ஒன் டே, 20-20 என்று தனித் தனியே தான் போடணும் முரளி. The game has become highly specialised now.

இனி என்னுடைய சாய்ஸ்.
டெஸ்ட்:
Greenidge
Gavaskar/Hayden
Viv Richards
Sachin/Lara
Mianded/Dravid
Gilley (The only undisputed choice)
Kapil/Hadlee
Akram
Warne
Holding
Ambrose

One Day:

Gilley
Sehwag
Sachin
Viv Richards
Ponting
Bevan
Kapil
Akram
Kumble
Ambrose
McGrath

Twenty-20:

Gilley
Hayden
Raina
Yuvraj
Dilshan
Rohit Sharma
Yusuv Pathan
Kapil/Flintoff
Akram
Bret Lee
Warne/Bhaji

Twenty-20 இல், பழைய பெருசுங்க (Viv, Sachin, பாண்டிங்) இவர்களையே சேர்க்கவில்லை. அப்படிப் பார்த்தால் Bradman, Hutton, Sobers, Worrel என்று டெஸ்டில் Viv Richards இடமே ஆட்டம் காணும்.

ஆனால் இந்த ஆட்டக்காரர்களில் யாரும் தராத மகிழ்ச்சி தந்தவர்கள்:

G R Vishwanath
David Gower
Azharuddin
Mark Waugh
VVS

These guys are poets.

முரளி, சென்னை வரும்போது இதுக்குன்னே ஒரு செஷன் அதிஷாவோட வெச்சுக்கலாம் - of course in a suitable venue.

அனுஜன்யா

shabi said...

சேவாக்குக்கு பதில் வேறு யாரும் இல்லயா

முரளிகண்ணன் said...

அனுஜன்யா,

உங்க சாய்ஸ் அசத்தல்.

இந்த wristy players பத்தி
அடிக்கடி பேசிக்கிருவோம்.

\\G R Vishwanath
David Gower
Azharuddin
Mark Waugh
VVS \\

pleasure of text மாதிரி pleasure of
batting இவங்கதான்.

ஒரு சின்ன சந்தேகம்

எம் எல் ஜெயசிம்மா அசாஎ மாதிரி ஆடுவருன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
நீங்க பார்த்து இருக்கீங்களா?

முரளிகண்ணன் said...

கார்கி, எனக்கு மெக்ரா பிடிக்கும்.

ஆனா ஒபெனிங் ஸ்லாட் ரெண்டு
இடம்தானே இருக்கு. அதுல எனக்குப் பிடிச்சவங்க இவங்கதான்.

முரளிகண்ணன் said...

ஷபி,

சேவாக் க்குக்கப் பதிலா எவ்வளோ பேர் இருக்காங்க.

ஆனா சேவாக் ஆடும்போது அப்படியே
அட்ரினிலின் சுரந்து நமக்கு ஏறுமே ஒரு ஜிவ்.

அதுக்குக்தான் சேவாக்.

கோபிநாத் said...

குட் டீம் ;)

அக்னி பார்வை said...

நான் கிரிக்கெட் ஆடி நீங்க பார்க்குல... பார்த்திருந்தா,ட்ரீம் டீம் இது தான்

1.அக்னிபார்வை
2.அக்னிபார்வை
3. “
4. “
5. ”
6. “
7. “
8. “
9. “
10. “
11.அக்னிபார்வை

anujanya said...

ஜெய்சிம்மா பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். பார்த்தது இல்லை. ஹ்ம்ம், இப்ப தான் ஞாபகம் வருது கவாஸ்கர், விஸ்வநாத் எல்லாமே இப்போது டிவி இல் பார்த்து தெரிந்து கொண்டது தான் - ஏனென்றால் நான் யூத், எனக்கே அவ்வப்போது மறந்தாலும் :)

இனிமே இந்த மாதிரி போட்டு வாங்காதீங்க முரளி :)

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

அனுஜன்யா

நீங்க யூத்துதான்.

\\அப்படிப் பார்த்தால் Bradman, Hutton, Sobers, Worrel என்று டெஸ்டில் Viv Richards இடமே ஆட்டம் காணும்.
\\

இதெல்லாம் உங்க தாத்தா சொல்லி நீங்க கேட்டு தெரிஞ்சுக்கிட்டது தானே?

Cable சங்கர் said...

ரிச்சர்ட்ஸ், மியாண்டாட், ஆகியோரை பற்றிய கமெண்டுகள் சூப்பர். முரளி.

ஸ்ரீ.... said...

மைதானம், வீரர்கள் குறித்த அருமையான பதிவு. சச்சினுக்கு ஏன் இடம் தரவில்லை?

ஸ்ரீ....

பிரகாஷ் said...

Arumayana padivu ungalala


mattum cinemavo cricketo arasiyalo teliva alasa mudiyudu?

நர்சிம் said...

அருமையான பதிவின் மூலம் நட்சத்திர வாரத்தை முடித்தற்கு வாழ்த்துக்கள் முரளி. கலக்கல் டீம்

மார்க் வாஹ்’

Arun said...

மியாண்டட் உடன் ஒப்பிடும்போது டெண்டுல்கர் ஜெயசூரிய ஆகியோர் எவ்வளவோ பரவாயில்லை..அவர்களை விட்டுவிட்டீர்களே..

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

Venkatesh Kumaravel said...

டாப் க்ளாஸ் பதிவு! டீம் ஓக்கே... டெஸ்டுக்கு சேவாக் தேவையா? ஒண் டேவுக்கும் ஒரு டீம் போடுங்க! இல்ல... தொடர் பதிவாக்கிடுங்க... மக்கள் எல்லாரும் XI செல்கட் பண்ணுவோம்! (மைக்கேல் பெவனை டீமில் போட்ட அனுஜன்யாவுக்கு ஒரு 'ஓ'!)

மேவி... said...

sorry boss

எனக்கு கிரிக்கெட் தெரியாது

இவங்க எல்லாம் யாரு ????

நான் basket ball பிளேயர்

அத்திரி said...

நல்ல வரிசை