May 26, 2009

இயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் – கே சுப்ரமணியம் பகுதி -2

இந்த பகுதியில் சுப்ரமணியம் அவர்கள் இயக்கிய புராணங்களின் அடிப்படையிலான படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பவளக்கொடி (1934)

அப்பொழுது தமிழிலும்,இந்தியிலும் புகழ்பெற்று விளங்கிய ராஜா சாண்டோ அவர்களிடம் தான் கே சுப்ரமணியம், பட உருவாக்கத்தை கற்றுக் கொண்டார். அதன்பின்னர் இவர் இயக்கிய படம் இது. அப்பொழுது (இப்பொழுதும்) பவளக்கொடி கதை நாடகமாக நடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நாடகத்தில் நடித்தவர்கள் எம் கே தியாகராஜ பாகவதர் மற்றும் எஸ் டி சுப்புலக்‌ஷ்மி. இவர்களை வைத்தே படமும் எடுக்கப்பட்டது. படத்திற்க்கு பாடல்கள் மற்றும் இசை பாபநாசம் சிவன். 55 பாடல்கள். தயாரிப்பு காரைக்குடி அழகப்பா செட்டியார்.

அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்த மகன் புலேந்திரன். அவன் பவளத்தீவில் இருக்கும் தேரைக் கேட்டு அடம் பிடிக்கிறான். அதனால் அர்ஜுனன் தேரை கவர்ந்துவர செல்கிறான். அந்தத் தீவின் இளவரசி பவளக்கொடிக்கும் அர்ஜுனனுக்கும் காதல் வர அங்கேயே தங்கிவிடுகிறான் அவன். கணவன் வராததால் சந்தேகப்பட்டு அல்லி அங்கு வருகிறாள். அர்ஜுனனின் காதல் விவகாரம் தெரிந்தால் பிரச்சினையாகிவிடுமே என்று கிருஷ்ணர் பல தந்திரங்களை செய்து அனைவரையும் ஒன்று சேர்க்கிறார்.

இந்தப்பட நாயகி எஸ் டி சுப்புலக்‌ஷ்மியையே பின்னாட்களில் சுப்ரமணியம் திருமணம் செய்துகொண்டார்.
.
நவீன சதாரம் (1935)

மன்னரின் மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க முயல்கிறார் மந்திரி. நிச்சயமும் ஆகிவிடுகிறது. ஆனால் அவர் மகனோ ஒரு வணிகரின் மகளைக் காதலிக்கிறான். வெகுண்டெழுந்த மந்திரி அரசகுமாரனை சிறையில் அடைக்கிறான். கொத்திதெழுந்த மக்கள் இளவரசனின் ஆசையை நிறைவேற்றுகிரார்கள்.

நவீன சாரங்கதாரா (1936)

நவீனம் என்றால் வேறொன்றுமில்லை. ஏற்கனவே ஒரு கதை படமாக்கப்பட்டிருந்து, வேறொருவரும் அதை படமக்க நினைத்தால் அப்பட பெயருக்குமுன் ஏதாவது இணைத்துக் கொள்வார்கள். அல்லது தங்கள் கம்பெனியின் பெயரை படத் தலைப்புடன் இணைத்துக் கொள்வார்கள். எல்லோரும் அறிந்த கதை என்பதால் வேறு தலைப்பு வைக்கத் தயங்கினார்கள்.

சாரங்கதாரன் (எம் எஸ் மணி பாகவதர்) அழகிய இளவரசன். அவன் படத்தை வரைந்து பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி பெண் கேட்கிறார்கள். அவன் அழகில் மயங்கிய பேரழகி சித்ராங்கி *எஸ் டி சுப்புலக்‌ஷ்மி), அவனைக் காண்பதற்க்காக அவன் நாட்டுக்கெ வருகிறாள். ஆனால் மன்னர் அவளை முதலில் பார்த்து, மயங்கி மணக்க முறபடுகிறார். அவளும் பல சாக்கு போக்குகளை சொல்லி தப்பிக்கிறாள். ஒரு வழியாக சாரங்கதாரனைப் பார்த்து, காதலைச் சொல்லும் வேளையில் மன்னர் பார்த்து விடுகிறார். மகனின் மீது கோபப்பட்டு அவன் கைகளை வெட்டுமாறு ஆணையிடுகிறார். அங்கே ஓடிச்செல்லும் சித்ராங்கி கை வெட்டுப்பட்டவனை அணைத்தபடியே மயங்கிவிழுகிறாள். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மன்னரை எதிர்க்கிறார்கள். அப்போது வரும் ஒரு பெண் சன்னியாசி (இந்து பாலா) சாரங்கதாரனின் கைகளை இணைக்கிறார். சுபம்.

இதில் வரும் பெண் சன்னியாசி பாத்திரம் மூலக்கதையில் இல்லை. சுப்ரமணியத்தால் இணைக்கப்பட்டது.

பக்த குசேலன் (1936)

இந்தப்பட கதையை சொல்ல வேண்டுமா என்ன?. குசேலனாக நடித்தவர் பாபநாசம் சிவன். குசேலரின் மனைவியாகவும், கிருஷ்ணனாகவும் இருவேடத்தில் நடித்தவர் எஸ் டி சுப்புலக்‌ஷ்மி. ஒரே படத்தில் ஆண்,பெண் என இருவேடத்தில் ஒரு நடிகர்/நடிகை நடித்தது இதுவே முதல் முறையாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தப்படத்திற்க்கு ஒளிப்பதிவாளர் சைலன் போஸ் என்னும் வங்காளி. இவர் அப்பொழுது பெரும்புகழுடன் விளங்கியவர். குசேலன் கிருஷ்ணரைப் பார்ப்பதற்க்காக பாடிக் கொண்டே செல்லும் காட்சிகளை சில் அவுட் உத்தியில் அழகாக படமாக்கியிருந்தார்.

கச்ச தேவயானி (1941)

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டி ஆர் ராஜகுமாரி அறிமுகமான படம். முதலில் இப்படத்தில் நடிக்க மற்றொறி நாயகியையே தேர்வு செய்திருந்தார்கள். புக் செய்யப் போனபோது, அந்த வீட்டில் இருந்த வேலைக்காரியை கவனித்த சுப்டமணியம் தன் மனதை மாற்றிக் கொண்டார். பலத்த எதிர்ப்புக்கிடையே வேலைக்காரியையே நாயகியாக்கினார்.

அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வித்தை தெரிந்தவர். அவர் மகள் தேவயானி. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் தொடர்ந்து நடக்கும் போரில், எத்தனை அசுரர்கள் இறந்தாலும் சுக்கிராச்சாரியார் அவர்களை உயிர்ப்பித்து விடுகிறார். கடுப்பான தேவர்களின் குரு பிரகஸ்பதி, அந்த வித்தையை கற்று வர கசன் (கொத்தமங்கலம் சீனு) என்பவனை அனுப்புகிறார். யார் வந்து கேட்டாலும் அட்மிஷன் ஓகே, ஆனால் சிலபஸ் என் சாய்ஸ் தான் என்று அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுக்காமல் காலம் கடத்துகிறார் சுக்கி.

இதற்க்கிடையில் கசனுக்கும் தேவயானிக்கும் காதல் மலருகிறது.

அசுரர்களுக்கு கசனின் நோக்கம் தெரிந்து, அவனை கொல்கிறார்கள். ஆனால் தேவயானி தன் தந்தையிடம் மன்றாடி அவனை உயிப்பிக்கிறாள். இந்த செத்து செத்து விளையாடும் விளையாட்டு அடிக்கடி தொடருகிறது. கடுப்பான அசுரர்கள் கசனை எரித்து, சாம்பலாக்கி தண்ணியில் கலந்து குருவை குடிக்க வைத்து விடுகிறார்கள்.

குருவுக்கு தர்மசங்கடம். ஒருபக்கம் மகள். இன்னொரு பக்கம் அவனை உயிர்ப்பித்தால் தன் வயிற்றையல்லவா கிழித்துக் கொண்டு வெளியே வருவான் என்று பயம். அதனால் உள்ளே இருப்பவனிடம் அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

அப்பா, சாமி வெளியே வந்ததும் என்னை உயிர்ப்பித்து விடடா என்று. கசனும் வெளியே வந்து சுக்கியை உயிர்ப்பிக்கிறான். ஓடிவருகிறள் தேவயானி.

கசன் அவளிடம், “உன் அப்பாவுக்கு உயிர் கொடுத்ததால் நான் உனக்குத் தாத்தா, எனவே உனக்கு டாட்டா” என்று கூறிவிட்டு தேவலோகம் செல்கிறான்.

காதல் தோல்வி என்றாலே படம் வெற்றிதானே.

ராஜா பிர்த்துஹரி (1944)

ஒரு ராஜா வுக்கு சாகாவரம் தரும் மாங்கனி கிடைக்கிறது. அதை அவர் தன் ஆசைநாயகிக்கு தருகிறார். அவளோ தன் கள்ளக் காதலனுக்கு தருகிறாள். அது அப்படியே பல கை மாறி ராஜாவுக்கே வந்து வாழ்க்கை ஒரு வட்டம் என்று நிரூபிக்கிறது.

சமூகத்தின் மீதான நம்பிக்கையும், மதிப்பீடுகளும் தகரவே துறவியாகிறார் ராஜா பிர்த்துஹரி. இவர் வரலாற்றில் வாழ்ந்த வட இந்திய மன்னர். பின்னர் திருவள்ளுவரைப் போல மூன்று பால்களில் (சிருங்கார சதகம், வைராக்கிய சதகம், நீதி சதகம்) என உலக நீதியை பாடல்களாக எழுதுகிறார்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய தம்பு என்பவர் பின்னாட்களில் பிரபல ஒளிப்பதிவாளராக மாறினார்.


கே சுப்ரமணியம் அவர்களின் ஏனைய சமூகப் படங்கள், அவரது தொழில் நுட்பக் கலைஞர்கள் அடுத்த பகுதியில்.

33 comments:

வெட்டிப்பயல் said...

கலக்கல்...

வழக்கம் போல :)

முரளிகண்ணன் said...

நன்றி வெட்டிப்பயல்.

ஷண்முகப்ரியன் said...

எப்படி இத்தனை தகவல்களையும் சேகரித்து அதனை அச்சிட்டீர்களோ,முரளி கண்ணன்!
நினைத்தாலே எனக்குப் பிரம்மிப்பாக இருக்கிறது.உண்மையில் நல்ல பணி.

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்

புருனோ Bruno said...

//கசன் அவளிடம், “உன் அப்பாவுக்கு உயிர் கொடுத்ததால் நான் உனக்குத் தாத்தா, எனவே உனக்கு டாட்டா” என்று கூறிவிட்டு தேவலோகம் செல்கிறான்.

காதல் தோல்வி என்றாலே படம் வெற்றிதானே. //

சூப்பர் :) :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நவீன சாரங்கதாரா (1936)//


ஆனால் சிவாஜி நடித்த சாரங்கதாராவுள்ள கல்யாயணம் முடிஞ்சு பல சமாச்சாரங்கள் வித்தியாசமாய் இருக்குமே தல..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பக்த குசேலன் (1936)//


படம் வெற்றி தானே தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அப்பா வயிற்றில் பிறந்த ஆள் தம்பியா தல..,

அது ஒரு கனாக் காலம் said...

யார்க்கரா ???? சும்மா பூந்து விளையாடறீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒரு ராஜா வுக்கு சாகாவரம் தரும் மாங்கனி கிடைக்கிறது. அதை அவர் தன் ஆசைநாயகிக்கு தருகிறார். அவளோ தன் கள்ளக் காதலனுக்கு தருகிறாள். அது அப்படியே பல கை மாறி ராஜாவுக்கே வந்து வாழ்க்கை ஒரு வட்டம் என்று நிரூபிக்கிறது//



ஒரு மனுஷனைச் சுற்றி இத்தனை கள்ளக் காதல் இருந்தால் அந்த ஆள் என்னதான் செய்வது?


மெகா சீரியல் எடுத்தால் பே வாட்ச் விட அதிக ரசிகர்களைச் சென்றடையும் தல..

புராணக் கதைன்னு சொல்லி ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணி வாங்கிடலாம்.

அகில உலகத்தையும் நம்ம பக்கம் திருப்பிடலாம். தல..

எம்.எம்.அப்துல்லா said...

2nd six er

:)

Jackiesekar said...

நல்ல ஒரு வராலாற்று பதிவு வாழ்த்துக்கள்

சென்ஷி said...

//கலக்கல்...

வழக்கம் போல :)/

ரிப்பீட்டே :)

முரளிகண்ணன் said...

வாங்க டாக்டர்.

சுரேஷ்

இந்த குசேலன் வெற்றிதான்.

அப்பா வயித்தில பிறக்கல, கிழிச்சிட்டு வெளியே வர்றான். ஆனா உயிர் கொடுத்தனால தம்பி முறைன்னும் சொல்லலாம்.

மெகா சீரியல் நல்ல ஐடியா.

முரளிகண்ணன் said...

அது ஒரு கனாக்காலம், நன்றி.

அப்துல்லான்னே அம்பயராகிட்டீங்களா?

வருகைக்கு நன்றி ஜாக்கி, சென்ஷி

குசும்பன் said...

எசமான் கொஞ்சம் குமால்டியா டிபரண்ட் காட்டுங்க எசமான்!

தகவல்களஞ்சியத்தை மற்ற நாட்களில் தொடரலாம்!

நர்சிம் said...

//ஷண்முகப்ரியன் said...
எப்படி இத்தனை தகவல்களையும் சேகரித்து அதனை அச்சிட்டீர்களோ,முரளி கண்ணன்!
நினைத்தாலே எனக்குப் பிரம்மிப்பாக இருக்கிறது.உண்மையில் நல்ல பணி.
//

முரளி கண்ணன்.. நட்சத்திரப் பதிவுகள் ஜொலிக்கின்றன.

ஆரம்பமே அசத்தல்.


கே.சுப்ரமணியம் பற்றிய அரிய தகவல்களை அறியச் செய்ததற்கு நன்றிகள் பல.

அடுத்த பதிவு எப்பொழுது என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Cable சங்கர் said...

வழக்கம் போல் கலக்கல்..

முரளிகண்ணன் said...

குசும்பன், ரெண்டு பதிவு தானேப்பா சினிமாவில போட்டிருக்கேன்.

அடுத்தது மாத்திடுறேன்.


நன்றி நர்சிம்

முரளிகண்ணன் said...

குசும்பன், ரெண்டு பதிவு தானேப்பா சினிமாவில போட்டிருக்கேன்.

அடுத்தது மாத்திடுறேன்.


நன்றி நர்சிம்

முரளிகண்ணன் said...

நன்றி கேபிள் சங்கர்.

மறத்தமிழன் said...

முரளி,

உங்களின் சினிமா மீதான காதல் வியக்க வைக்கிறது.
புள்ளி விபரங்களும் அருமை.

"யார் வந்து கேட்டாலும் அட்மிஷன் ஓகே, ஆனால் சிலபஸ் என் சாய்ஸ் தான்"
மிகவும் ரசித்தேன்.
தோழமையுடன்,
மறத்தமிழன்.

முரளிகண்ணன் said...

நன்றி மறத்தமிழன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அப்பா வயித்தில பிறக்கல, கிழிச்சிட்டு வெளியே வர்றான்.//


ஒருவேளை சிசேரியன் மாதிரி இருக்குமோ.

anujanya said...

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆ,

எப்படி எப்படி முரளி இதெல்லாம். எங்கே இருந்து பிடிக்கிறீர்கள் இத்தனை தகவல்களை?

அப்புறம் 'முத்து முழுங்குவது' போல கத எழுதுறது! இன்னம் கூட அத நினெச்சு விட்ட சான்ஸ எண்ணி நொந்து போறேன் :)

அனுஜன்யா

Unknown said...

சார்!!! அட்டகாசம்....
ஆமா இந்த கச்சதேவயானி டீ.வீ.டீ கெடைக்குமா?????

கதிரவன் said...

பிரம்மிப்பா இருக்குது முரளிகண்ணன் - இவ்ளோ தகவல்களை தெரிஞ்சு வச்சிருக்கற உங்களோட சினிமா மீதானா காதல் !! வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

@சுரேஷ்
மருத்துவருக்கே சந்தேகமா?

வாங்க அனுஜன்யா. நீங்க இன்னும் மகேஸை மறக்கலியா?
மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.


கமல், பட பிரிண்ட் கிடைச்சா நாம் நிச்சயம் பார்த்துடுவோம்.


கதிரவன், தங்கள் வருகைக்கு நன்றி.

வெட்டிப்பயல் said...

Thala, one small question...

Did you watch these movies?

ore paata irukumnu naan ivvalavu pazhaiya padangalai paakarathillai...

Also expecting some Anubava pathivu and comedy post from you :)

நாகு (Nagu) said...

இந்தப் படங்கள் எல்லாம் இப்ப பாக்க முடியுமா? இதையெல்லாம் டிஜிட்டைஸ் பண்ணி மக்களுக்கு கிடைக்க வைக்கலாமே?

முரளிகண்ணன் said...

வெட்டிப்பயல் & நாகு,

இந்தப்படங்களின் பிரதிகள் எங்கே கிடைக்கும் என அவ்வப்போது விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இன்னும் சரியான நபரை நான் சந்திக்கவில்லை.

சில படங்களின் கிளிப்பிங்ஸ்களை பார்த்துள்ளேன்.

இதே காலகட்டத்தில் வந்துள்ள சாந்த சக்கு பாய், ஸ்ரீ வள்ளி போன்ற படங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகியுள்ளன. எனவே அங்கு எதுவும் சோர்ஸ் கிடைக்குமா என்றும் பார்க்கலாம்.

மோசர்பியர் நிறுவனத்திடம் விசாரிக்கலாம் என்றும் உள்ளேன்.

ஆனால் இது பற்றி தீவிர முயற்சியில் இன்னும் நான் ஈடுபடவில்லை என்பதே உண்மை.


வெட்டி, காமெடி பதிவுக்கு முயற்சிக்கிறேன்.

கோபிநாத் said...

\\பவளக்கொடி (1934)\\

எங்க பெரியம்மா வீட்டுல ஒரு பாட்டி சொல்லி கேட்டுகிறேன் இந்த கதையை..;))

கலக்குறிங்க அண்ணாச்சி ;))

நல்லதந்தி said...

//முதலில் இப்படத்தில் நடிக்க மற்றொறி நாயகியையே தேர்வு செய்திருந்தார்கள். புக் செய்யப் போனபோது, அந்த வீட்டில் இருந்த வேலைக்காரியை கவனித்த சுப்டமணியம் தன் மனதை மாற்றிக் கொண்டார்.//

அந்த நடிகை ஜோதிலட்சுமி,ஜெயமாலினியின் அம்மாவான தனலட்சுமி!. இவரது உறவினர்தான் அந்த வீட்டில் வேலை செய்த ராஜாயி! * பிற்காலத்து இராஜகுமாரி!