May 13, 2009

கோமாளியான ஷாருக்கான்

ஐபிஎல் தொடங்குவதாக அறிவிப்பு வந்தவுடன், யார் யார் அணிகளை ஏலம் எடுப்பார்கள் என்று பல ஹேஸ்யங்கள் நிலவின. ஆனால் ஷாருக்கான் ஏலம் எடுக்க வந்தது எனக்கு மிக ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் ஷாருக், ஜூஹி, ஜெய்மேத்தா ஆகியோரது கூட்டணியானது மற்ற அணி உரிமையாளார்களை விட நிர்வாக அனுபவம் குறைவானது.

மற்ற அணி உரிமையாளர்கள் எல்லாம் தொழில் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர்கள். பஞ்சாப் அணி பிரீத்தி ஜிந்தாவை முன்னிறுத்தினாலும் அதன் முக்கிய உரிமையாளரான நெஸ் வாடியா பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இதில் மற்ற உரிமையாளர்களுடைய தொழில் அணியின் தோல்வியினால் பாதிக்கப் படாது. மும்பை அணி தோற்றால் யாரும் ரிலையன்ஸ் பிரஸ் கடையில் கொத்தமல்லி வாங்குவதை நிறுத்தப் போவதில்லை. பெங்களூர் தோற்றுவிட்டதே என்று யாரும் கிங்பிஷர் பீரை குடிப்பதிலிருந்து பின் வாங்கப்போவதில்லை. ஆனால் ஷாருக்கின் முக்கிய தொழிலான பிராண்ட் அம்பாசிடர் என்பது வெற்றி தோல்வியை அடிப்படையாகக் கொண்டது.


அமிதாப்புக்கு கோன் பனேகா குரோர்பதியில் கிடைத்த இமேஜே, அவருக்கு விளம்பர காண்டிராக்ட் கிடைக்க காரணம். அதற்க்கு முன் அவரது ஏ பி சி எல் நிறுவனம்
திவாலாகி இருந்தபோது யாராவது அவரை அணுகினார்களா என்ன?

ஷாருக்கைவிட இந்தியாவில் அதிகமானவர்களுக்கு தெரிந்தவர் டெண்டுல்கர்.கடந்த சில வருடங்களாக உடல்நிலை காரணமாகவும், மற்ற வீரர்களின் எழுச்சி காரணமாகவும்
அணி வெற்றியில் டெண்டுல்கரின் பங்கு குறைந்துபோனது. அதனாலும், வயதானதாலும் பல விளம்பர காண்டிராக்டுகள் நீட்டிக்கப்படாமல் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளன.


ஷாருக்குக்கு முக்கிய வருமானமாக இருப்பது விளம்பரங்களில் அவர் தோன்றுவதால் கிடைக்கும் பணமே. நம் விளம்பரத்துறையில் இருப்பவர்கள் வாய்ப்பு கொடுப்பது வெற்றியாளர்களுக்கே. இப்போது கல்கத்தா நைட் ரைடர்சின் தொடர்தோல்வி ஷாருக் ஒரு தோல்வியாளர் என்ற பிம்பத்தை பார்வையாளன் மத்தியில் விதைக்கிறது. ஐபிஎல் பேக் பிளேயர் வலைப்பதிவும் அவரது இமேஜுக்கு பங்கம் விளைவித்து வருகிறது.

அணியின் வெற்றியை தன் வெற்றிபோல் கொண்டாடுவதும், தோல்வியை தன் தோல்விபோல் எடுத்துக் கொள்வதும் ரசிகனுக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கலாம். ஆனால் ஒரு நிர்வாகிக்கு? தன் தொழிலில் ஏற்படும் வெற்றிக்கும், தோல்விக்கும் தான் பொறுப்பு ஏற்க்க வேண்டும். ஐ பி எல் என்பது தொழிலைத் தாண்டி கௌரவம்,பிராண்ட் பார்மேஷன் என பல சிக்கலான கூறுகளைக் கொண்டது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எடுத்துக் கொள்ளலாம். சென்ற முறை படுதோல்வி, ஆனால் இந்த முறை அரைஇறுதி வாய்ப்பு பெறும் நிலையில் உள்ளார்கள். அவர்களது உரிமையாளார்கள் தோல்வியின் போது எப்படி ரியாக்ட் செய்தார்கள்?. தங்கள் முகத்தைக் காட்டிக்கொள்ளாமலேயே அணியைக் கட்டமைத்தார்கள். ஆனால் ஷாருக் முதல் ஐபிஎல்லின் முதல் போட்டியில் மெக்கல்லம் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் ஆடி ஏதோ தானே அடிப்பது போல பில்ட் அப் செய்து கொண்டார். அணி தோல்வி அடையும் போது சோகமான முகத்துடன் சிகரெட் பிடிக்கிறார். இதுதான் இப்போது வினையாகி விட்டது.
அணியின் தோல்வியும் அவரது சொந்த தோல்வியாகவே பார்க்கப்பட்டு, அவரது விளம்பர நிறுவனங்கள் இப்போது யோசிக்கத் தொடங்கியுள்ளன.

பஞ்சாப் தோற்றால் பிரீத்தியை அது பாதிக்காது. ஏனென்றால் அவருக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அவர் அழகுக்கு. வயதாகும் போது அது எப்படியும் குறைந்துவிடும்.

அவர் இந்த துறையில் கால் வைத்தது முதல் தப்பென்றால், அடுத்த தவறு அணி கோச் செலக்‌ஷன். அணி வீரர்களும், கோச்சையும் காட்டிதான் விளம்பரதாரர்களை பிடிக்க முடியும். எனவே தான் இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கோச்சான ஜான் புக்கானனை பிடித்தார்.

ஆனால் அதற்க்குமுன், அவரது முறைகளைப் பற்றி ஷேன் வார்னே பல முறை கமெண்ட் அடித்துள்ளார். அவரது கோச்சிங்கிக்கான வெற்றி என்பதைவிட தனிப்பட்ட பிளேயர்களின் பங்களிப்பே காரணம் என்று வார்னே தெரிவித்திருந்தார். அந்த ஆஸ்திரேலிய கனவு அணியில் இருந்த வார்னே, லேமன் ஆகிய இருவரும் இப்போது கோச்சாக இருந்து வெற்றி பெறுகிறார்கள் என்பதில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம்.

தவறான கோச் தேர்வு, அவரை முழுமையாக நம்பி வீரர்களை நம்பாமை, வெற்றி வேண்டுமென அதிகப்படியான நெருக்குதலை வீரர்களுக்குத் தருவது போன்றவை தோல்விக்குக் காரணம். ஆனால் மீடியாக்களில் அதை தன் தோல்விபோல காட்டி, தன்னையே கோமாளியாக்கிக் கொண்டார் ஷாருக்.

42 comments:

சரவணகுமரன் said...

முரளிகண்ணன், நன்றாக ஆய்வு செய்து இருக்கிறீர்கள்

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி சரவணகுமரன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஐ பி எல் என்பது தொழிலைத் தாண்டி கௌரவம்,பிராண்ட் பார்மேஷன் என பல சிக்கலான கூறுகளைக் கொண்டது.
//


விளையாட்டைத் தாண்டி... தொழில் என்று வந்த போதே தொழிலதிபர் அதை யோசித்திருக்க வேண்டும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அவங்களுக்கு இதெல்லாம் விளையாட்டாப் போச்சு..,

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்

பழூர் கார்த்தி said...

:-))

மிகவும் உண்மை உங்கள் கருத்துக்கள்..

ஒரு ஹீரோவாய் தோற்றமளித்த ஷாருக்கான் காமெடியனாய் மாறி விட்டார்..

பேக் ஐபிஎல் பிளேயர் ப்ளாக் அவரையும், அவரது அணியையும் கிழிகிழியென்று கிழிக்கிறது..

கார்க்கிபவா said...

தல,

பல மாற்றுக்கருத்து இருக்கு. கடந்த ஐ.பி.எல் முடிவிலும் சரி, இப்பவும் சரி, லாபமான டீம் எதுன்னு தெரியுமா? கொல்கத்தாதான்.. முதல் அவ்ருடமே பிரேக் ஈவன் செய்தது அவர்கள் மட்டும் தான். கிரிக்கெட் பற்றி தெரியாமல் புச்சனனை நம்பி ஏமார்ந்தது அவரது அனுபவமின்மையத்தான் காட்டுது.. ஆனா அவர்கள் அணிக்கு வேலுயு சேர்த்தது ஷாருக்கின் போன வருட கலாட்டாத்தான்..

/பஞ்சாப் தோற்றால் பிரீத்தியை அது பாதிக்காது. ஏனென்றால் அவருக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அவர் அழகுக்//

அப்படியென்றால் ப்ரீத்தியை விட அழகானவர்களுக்கு வாய்ப்பி கிடைத்திருக்கனுமே!!! இங்கே அழகு என்பதோடு பிரபலம் என்ற இமேஜும் தேவை.. அடுத்த ஷாருக் படம் வந்து சதமடித்தால் ஐபிஎல் தோல்வி மறைந்துவிடும்..

கார்க்கிபவா said...

//பேக் ஐபிஎல் பிளேயர் ப்ளாக் அவரையும், அவரது அணியையும் கிழிகிழியென்று கிழிக்கிறது//

இந்த பிளாகை ஒரு நாலைக்கு பத்தாயிரம் பேர் படிக்கிரார்களா? இந்தியா பெருசுங்க.. ரொம்ப பெருசு..

கார்க்கிபவா said...

ஷாரூகுக்கு பயங்கரமான் பிசினஸ் மூளை.. இந்த வருடமே அவர் அணியை நல்ல விலைக்கு விற்று ஒதுங்கினாலும் ஒதுங்குவார்..

அவர் இருக்கும் வரை அந்த அணிக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பது பெரிய விஷயமே இல்லை.. அவரின் கடைசி மொக்கை ப்டமான ரப் நே பனா தி ஜோடியின் கலெக்‌ஷன் தெரியுமா?சினிமாவில் அவர் பெறும் வெற்றி போதும், விளம்பரத்துரையில் காலம் தள்ள

ஐ.பி.எல்லின் வெற்றித்தொகை சென்னை அணி ஃப்ளிண்டாஃபுக்கு கொடுத்ததை விட குரைவு.. இங்க ஸ்பான்சர்கள்தான் முக்கியம்.. அதுக்கு எப்பவும் ஷாருக் போதும்..

anujanya said...

அணியின் தலைமை மிக முக்கியம். கங்குலி (வேறு எதிர்மறை குணாதிசியங்கள் இருந்தாலும்) உணர்வு பூர்வமாக வீரர்களை எப்போதும் கவர்வார். அணியின் தலைவர், கோச் எல்லாருமே வெள்ளைக்காரர்கள் என்றால் அனுபவம் இல்லாத இந்திய இளைஞர்களுடன் communication செய்வதிலும் சிக்கல். 4 captains theory வேறு.

புகானனின் அபத்தங்கள் மற்றும் அவருக்கு மிக உயர்ந்த தளத்தில் ஆடியுள்ள அனுபவமின்மை இவற்றை கவாஸ்கர் சுட்டிக்காட்டிய போது ஷாருக் ஆணவமாக 'கவாஸ்கர் 20-20 ஆடியது இல்லை. அவருக்கு என்ன தெரியும்' என்று கேட்டார்.

தாதா, வங்காள மக்கள், என் தம்பி, கார்க்கி இவர்களை பார்த்தால் பாவமாக இருந்தாலும், ஷாருக்குக்கு இது நல்லா வேணும்.

கிட்டத் தட்ட மல்யாவும் ஷாருக் போலவே அரை வேக்காடு தான். Deccan Chronicle/Nita Ambani ஆகியோரின் maturity அவரிடமும் இல்லை.

ஆனால் எங்கோ படித்தது - KKR is the only franchise to make money by shrewd marketing efforts. - எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

பழூர் கார்த்தி, தங்கள் வருகைக்கு நன்றி.


கார்க்கி,

பிரீத்திக்கு அழகு மட்டும் சினிமா பிரபலம் என்பதுதான் அடிப்படை.

ஆண்களுக்கு வெற்றியாளர் என்ற இமேஜ் மிக முக்கியம்.

தற்போது எடுக்கப்பட்ட சர்வேயில் ஷாருக்குக்கு மதிப்பு குறைவு ஏற்பட்டுள்ளதாக விளம்பர நிறுவனங்களில் பணியாற்றுவோர் தெரிவித்துள்ளார்கள்.

பேக்பிளேயர் பிளாக்கின் பாலோயர்களே 6000ஐ நெருங்குகிறது.
படிப்பவர்கள் 20000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அனைவருமே வாங்கும் சக்தி உள்ளவர்கள், டிசிஷன் மேக்கர்ஸ் என்ற வகையில் வருபவர்கள்தான்.

ஷாருக் அம்பாசடராக உள்ள கார்,வாட்ச் ஆகியவற்றை வாங்கும் வசதியில் உள்ளவர்கள் யார்?

ஆங்கில வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் தானே?

முரளிகண்ணன் said...

அனுஜன்யா தங்கள் வருகைக்கு நன்றி.

ஐபிஎல் முதல் தொடரில் மும்பை தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்ற போதும். அவர்கள் காட்டிய மெச்சூரிட்டி அபாரமானது.


கார்க்கி,

நன்கு யோசித்துப் பாருங்கள். ஷாருக் இமேஜ் சரிந்துள்ளதா? இல்லையா?

அதுவும் வாங்கும் வளம் உள்ளவர்களிடம்?

அடுத்த தொடருக்கு கலகத்தாவுக்கு இந்த அளவு வருமானம் கிடைக்குமா?

அடுத்தவரிடம் அணியைத் தள்ளி விட்டாலும் இமேஜ் போனது போனதுதானே?

Mahesh said...

அவரோட அதிகப்பிரசங்கித்தனமான (அல்லது கோமாளித்தனமான) பேச்சுக்கள்... படு சைல்டிஷா இருந்தது....

கார்க்கிபவா said...

//நன்கு யோசித்துப் பாருங்கள். ஷாருக் இமேஜ் சரிந்துள்ளதா? இல்லையா?//

உண்மைதான். ஆனா அடுத்த படம் ஹிட்டடடித்தால் மாறிவிடும் என்றுதான் நானே சொல்லியிருக்கேன்..

//அதுவும் வாங்கும் வளம் உள்ளவர்களிடம்?//

ம்ம்..ஆஅமாம்

//அடுத்த தொடருக்கு கலகத்தாவுக்கு இந்த அளவு வருமானம் கிடைக்குமா?//

நிச்சயமா.. நோக்கியாவும் ரீபாக்கும் மூன்று அவ்ருட ஒப்பந்தம்.கிட்டத்டட்ட இப்ப இருக்கும் அனைத்து ஸ்பான்சர்களும் மூன்று வருட ஒப்பந்தமே..

//அடுத்தவரிடம் அணியைத் தள்ளி விட்டாலும் இமேஜ் போனது //

ஷாருக்கிற்கு இது பார்ட் டைம்.. வேறு டிவி ஷோவிலோ, படத்திலோ அதை எளிதில் சரிசெய்து விடுவார்...

Athisha said...

கார்க்கியை அப்படியே வழிமொழிகிறேன்.

சாருக்கானுக்கு இது ஒரு பார்ட்டைம் இன்வஸ்ட்மென்ட் அதுலயும் அவரு நல்லா காசு பார்த்துட்டாரு.. அவரோட இமேஜ் சரிஞ்சாலும் இன்னொரு படம் வந்து வெற்றியடைந்துவிட்டாலே போதும் ..

மற்றபடி கொல்கட்டாநைட் ரைடர்ஸ் அணியே ஒரு ஜோக்தான் இந்த மற்றும் சென்ற ஐபிஎல்லில்.

(ரிக்கி பாண்டிங் கேப்டன் பொறுப்பை ஏற்பார் மற்றும் அடுத்த வருடத்தொடரிலும் கலந்து கொள்ளுவார்னு வதந்தி வேறு உலவுது ஐயோ ராமா )

Cable சங்கர் said...

எனக்கென்னவோ ஷாருக்கை அவ்வளவாக பாதிக்காது என்றுதான் தோன்றுகிறது முரளீ.. ஆனால் உங்களுடய பதிவு அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

murali...mmmmm ;-))))

அத்திரி said...

தல என்னே ஒரு அருமையான ஆராய்ச்சி

Thamira said...

இரும்படிக்கிற இடத்தில ஒரு ஈ சுத்தி சுத்தி வந்ததாம்.. அது நாந்தான்.!

முரளிகண்ணன் said...

மகேஷ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கார்க்கி & அதிஷா, நான் சொல்ல வந்ததே அதுதான், இமேஜ் அடிவாங்கியுள்ளது.

கேபிளார், டிவிஆர் சார், அத்திரி தங்கள் வருகைக்கு நன்றி.

ஆதி, இங்க என்ன என்டிடிவி விவாதமா நடக்குது?

மணிஜி said...

chakde murali

shabi said...

ஷாருக் சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டாரு

ராஜ நடராஜன் said...

//ஷாருக்குக்கு முக்கிய வருமானமாக இருப்பது விளம்பரங்களில் அவர் தோன்றுவதால் கிடைக்கும் பணமே//

விளம்பரம் சைடு பிசினஸ்ன்னு நான் நினச்சுகிட்டிருந்தேன்.அவர் கடைசியா நடிச்ச படம் என்ன?எப்ப?

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

சூப்பர் அலசலுங்கண்ணே..

எல்லாரும் தேர்தல்ல மூழ்கிட்டோமா.. இந்தச் சனியனை நினைச்சுப் பார்க்க நேரமில்லாமப் போச்சு.

ஞாபகப்படுத்தினதுக்கு நன்றிகள்..!

Vidhya Chandrasekaran said...

ஷாரூக்ங்கறாதல வந்த. வரிசையா மெகா மொக்கை படங்களைக் குடுத்தாலும் கலெக்ஷ்ன்ல கிங்குன்னே அவரு:)

குசும்பன் said...

தல என்னது கொல்கத்தான்னு ஒரு டீம் இன்னும் இருக்கா?

முரளிகண்ணன் said...

தண்டோரா, சபி தங்கள் வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன்,

அவரது கடைசி படம் ரப் நே பனாதி ஜோடி, வழக்கமான காதல் மொக்கை. ஆனாலும் நல்ல வசூல்.வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ தான் அவர் படங்கள் வருகின்றன. சம்பள அடிப்படை அல்லது சதவீத அடிப்படை எப்படிப் பார்த்தாலும் 20 கோடிக்கு அருகில் கிடைக்கும். ஆனால் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் தொகை இதைவிட பல மடங்கு அதிகம்.

முரளிகண்ணன் said...

உண்மைத்தமிழன் அண்ணா வணக்கங்கண்ணா.

வித்யா வருகைக்கு நன்றி

குசும்பன், கொல்கத்தான்னு ஒரு மாநில டீமும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ன்னு ஒரு உலக 20 20 டீமும் இன்னும் இருக்கு.

ஷாருக் இப்போ நியுமராலஜி பார்க்குறாராம். பேரை மாத்த.

நசரேயன் said...

நல்ல ஆராய்ச்சி

முரளிகண்ணன் said...

நன்றி நசரேயன்

அருண்மொழிவர்மன் said...

இது பற்றி நானும் யோசித்ஹ்டிருக்கின்றேன். அதுவும் பல தலைவர்கள் என்ற புதிய முறையை அறிவித்து அதன் போது எழுந்த விமர்சனங்களுக்கு இவர் நடந்த கொண்ட விதமும், அணி தோல்வி மேல் தோல்வி தழுவ, அணி வென்றால் மட்டுமே ஆட்டத்தை பார்ப்பேன் என்று சொல்லி இந்தியா திரும்பியதும் பெரிய சறுக்கல்கள். இத்தனை கேவலமாக தோற்கும் அளாவுக்கு கேவலமா அணியில்லை கொல்கத்தா. ஆனால் இவர் தந்த அழுத்தங்களும் தோல்விக்கு ஒரு காரணாம்....

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அருண் மொழி வர்மன்

மாதவராஜ் said...

புக்கானன் பண்ணிய அழிச்சாட்டியங்கள் நைட் ரைடர்ஸை, தோல்வியை விரட்டி விரட்டி அடைய வைத்திருக்க்ன்றன. கங்குலி, இஷாந்த் ஷர்மா, அகர்கர் எல்லாம் எனக்குப் பிடித்த வீரர்கள். பார்க்க பரிதாபமாய் இருந்தது.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவராஜ் சார்.

புருனோ Bruno said...

ஷாருக் சொந்த செலவில் சூண்யம் வைத்துக்கொண்டார்

--

கொல்கத்தா அணி ”கைப்புள்ள” ஆகியதில் அவருக்குத்தான் நஷ்டம்

--

இன்று தெரியாவிட்டாலும் அடுத்த வருடம் இதே நேரம் நீங்கள் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்

--

//இதில் மற்ற உரிமையாளர்களுடைய தொழில் அணியின் தோல்வியினால் பாதிக்கப் படாது. மும்பை அணி தோற்றால் யாரும் ரிலையன்ஸ் பிரஸ் கடையில் கொத்தமல்லி வாங்குவதை நிறுத்தப் போவதில்லை.//

மேலும் அம்பானி இப்படி அணித்தேர்வு, தலைவர் தேர்வு, மைதானத்தில் நிற்பது போன்றவற்றில் ஈடுபடவில்லை

//ஆனால் ஷாருக்கின் முக்கிய தொழிலான பிராண்ட் அம்பாசிடர் என்பது வெற்றி தோல்வியை அடிப்படையாகக் கொண்டது.//

உண்மைதான.
இந்த தோல்விக்கு பின்னர் அவரது விளம்பரங்கள் குறைவதை நாம் பார்க்கலாம்

முரளிகண்ணன் said...

வருகைக்கும் தங்களது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி புருனோ

மணிகண்டன் said...

ஒருவேளை ஷாரூக்கானிற்கு இது ஒரு விளையாட்டுப்பொருளாக இருக்கலாம். அதே போன்று அடுத்த வருடம் / அதற்கு அடுத்த வருடம் இந்த அணியினை விற்று லாபம் பார்க்கலாம்.

FakeIPLPlayer பிரபலம் அடைந்ததற்கு ஷாரூக்கின் பிரபலம் ஒரு காரணம். அதை தவிர, மிகவும் interesting ஆக எழுதுவதும் மற்றொரு காரணம்.

இந்தியாவில் முன்னணி கதாநாயகனுக்கு ரசிகர் பட்டாளம் எப்பொழுதும் இருந்துக்கொண்டு தான் இருக்கும்.

Unknown said...

எப்போதும் வெற்றி பெறுபவனுக்கு சின்ன சின்ன தோல்விகள் அவசியம்

முரளிகண்ணன் said...

மணிகண்டன், தனா, கலையரசன் தங்கள் வருகைக்கும் கருத்துக்களாஉக்கும் நன்றி

புருனோ Bruno said...

http://fakeiplplayer.blogspot.com படித்தீர்களா

அதில் உள்ள பட்டப்பெயர்கள் என்னவென்று தெரியுமா

--

மற்றப்படி எழுத்து நடை அபாரம்

மாதிரிக்கு இரண்டு வரிகள்
==
Bhookha has his own theories derived from some complex mathematical calculations done on his laptop. And given the results I am quite convinced that he uses pirated Microsoft software.
==
Why would someone pay us to lose a match when we are doing the same for free?
==

Sambath said...

Mika nalla pathivu murali.
Nanraaka aaivu seithu ullergal

Sambath

Raju said...

Do you know KKR is making profit? They are going to take the initial investment of $15 million out, selling a 20% stake.

Win or lose, it makes biz sense!