May 31, 2009

1947 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் - ஒரு பார்வை.

இந்த ஆண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் மறக்க முடியாத ஆண்டாக இருப்பது ஏன்? என்று கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்ட அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவுக்கும் இது ஒரு மறக்க முடியாத ஆண்டுதான். இதற்க்கு முன் சில வருடங்களாக பிலிம் ரோலுக்கு கடும் தட்டுப்பாடு (இரண்டாம் உலகப்போர் காரணமாக) இருந்ததால் வருடத்துக்கு 15க்கும் குறைவான படங்களே தயாரிக்கப்பட்டு வந்தன். இந்த ஆண்டில் தான் தமிழ் சினிமா வீறுகொண்டு எழுந்து 32 படங்களைத் தயாரித்தது.

இதைவிட முக்கியமான சம்பவம், அடுத்த 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆட்டிப்படைத்தவர் ஹீரோவாக பதவிஉயர்வு அடைந்ததுதான். ஆம் அதுவரை கேரக்டர் ரோல்களிலும், இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்துவந்த எம்ஜியார் இந்த ஆண்டில்தான்
ராஜகுமாரி படத்தின் மூலம் கதாநாயகனானார். அதுவரை பாடத்தெரிந்தவர்கள் தான் கதாநாயகர்கள் ஆக முடியும் என்றிருந்த மாயையையும் உடைத்தார்.

இந்த ஆண்டில் வெளியாகிய சில படங்களைப் பார்ப்போம்.

துளசி ஜலந்தர்

இந்தப் படத்தின் கதை வடிவேல் நாயக்கர். இசை எம் டி பார்த்தசாரதி. ஒளிப்பதிவு தம்பு. இயக்கம் நாகபூஷணம். பூலோகத்தில் வசிக்கும் ஜலந்தர் என்னும் அசுரன் (பி யு சின்னப்பா) பாதாள உலகை வெற்றிகொள்கிறான். மமதையால் தன் மனைவி பிருந்தையை (கண்ணாம்பா) வெறுத்து ஒதுக்குகிறான். அவரை ஆறுதல் படுத்துகிறார் அசுரகுரு சுக்கிராச்சாரியார். ஜலந்தரின் சேஷ்டைகள் தொடருகின்றன. ஒரு பிராமணரின் மனைவியை மானபங்கப் படுத்துகிறான். இதனால் பேராபத்து வரும் என்று குரு எச்சரிக்கிறார். கேட்பதாயில்லை ஜலந்தர். ஜலந்தரின் மனைவி தன் கணவனுக்கு கெட்டது எதுவும் வரக்கூடாது என சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறாள்.

சிவன் தோன்றி, ஜலந்தரின் சடையில் இருக்கும் விஜய சங்கு அங்கு இருந்து விழாத வரையிலும், உன் கற்புக்கு பங்கம் வராத வரையிலும் அவனுக்கு ஆபத்து நேராஅது என வரமளிக்கிறார்.

ஜலந்தரின் பார்வை இப்போது இந்திரலோகம் நோக்கித் திரும்புகிறது. பாதாள லோக அரசனை தளபதியாகக் கொண்டு இந்திரலோகம் மீது போர் தொடுக்கிறான். இந்திரன் அலறி ஓட இந்திராணியை மானபங்கப் படுத்தப் பார்க்கிறான். அப்போது அங்கு தோன்றும் ஜலந்தரின் மனைவி கெஞ்சவே, விட்டு விடுகிறான்.

வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் போது, குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் இந்திரலோக அழகிகளைப் பார்க்கிறான். காமம் தலைகேற அவர்களை விரட்டுகிறான்.ஒரு கன்னி மாட்டிக்கொள்கிறாள். அப்போது நாரதர் தன் சித்து விளையாட்டால் அவளைவிட அழகியாக தோன்றுமாறு மன்மதனை மாற்றி ஜலந்தர் கண்ணில் பட வைக்கிறார். உடனே ஜலந்தர் மன்மதனிடம் செல்ல, அவனோ இவனை மயக்கி அவன் தலையில் இருக்கும் விஜய சங்கை கவர்ந்து கொண்டு கைலாயத்துக்கு ஓடிவிடுகிறான்.

ஜலந்தரும் விடாமல் துரத்திக் கொண்டு கைலாயம் செல்ல, அவன் கண்ணுக்கு பார்வதி தேவியே அந்த அழகியாக தெரிய தொட்டு விடுகிறான். சும்மா இருப்பாரா சிவன்?. நெருப்பில் தூக்கியெறிகிறார். அதே சமயத்தில் மன்மதன் ஜலந்தர் வேடத்தில் உருவெடுத்து அவன் மனைவி பிருந்தையின் கற்புக்கு பங்கம் விளைவிக்கிறான். ஜலந்தரைக் கொல்ல இருக்கும் இரண்டு தடையும் நீங்கிவிட்டதால் சிவபெருமான் ஜலந்தரைக் கொல்கிறார். அவன் தலை விழுந்து துளசி செடியாக மாறுகிறது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் கிடைக்கிறது.

என்னா கதைப்பா?.

ராஜகுமாரி

கதை வசனம் - கருணாநிதி, இயக்கம் ஏ எஸ் ஏ சாமி, தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். இதற்க்கு முந்தைய ஆண்டுகளில் வெளியான பட்டி விக்கிரமாதித்தன் படத்தில் ரஞ்சன் கதாநாயகன், எம்ஜியார் வில்லன். ஆனால் இருவருக்கும் இடையேயான கத்திச் சண்டைகள் படு பிரபலமாய் இருந்தன. ஜூபிடர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தபோது, எம்ஜியாரை கருணாநிதி தான் ரெக்கமண்ட் செய்ததாக சொல்வார்கள்.கருணாநிதியை ரெக்கமெண்ட் செய்தது இயக்குநர் சாமி. எம்ஜியார் தன் பங்கிற்க்கும் ஒரு
ரெக்க்மண்ட் செய்தார். அவர்தான் சண்டைப் பயிற்சி அளித்த சின்னப்பா தேவர்.

ஒரு நாட்டு ராஜகுமாரியை (தவமணி தேவி), மந்திரவாதி ஒருவர் (எம் ஆர் சுவாமி நாதன்)கடத்தி செல்கிறார் ஏழு கடல் ஏழு மலை தாண்டி. ராஜகுமாரியை மாயக் கம்பளத்தின் உதவியுடன் பறந்து சென்று மீட்கிறார் நாயகன் எம்ஜியார். எம்ஜியாருக்கு பிண்ணனி பாடியது எம் எம் மாரியப்பன் என்னும் பாடகர். இந்தப் படத்திலும் எம்ஜியாரின் கத்திச் சண்டைக் காட்சிகள் பல இடம்பெற்றிருந்தன. மாயாஜாலம், சண்டை, பாடல்கள் என கமர்சியல் ஐட்டங்களால் படம் நல்ல வெற்றி.


நாம் இருவர்

கதை வசனம் - ப நீலகண்டன், இசை -சுதர்சன், இயக்கம்,தயாரிப்பு - ஏ வி மெய்யப்ப செட்டியார். பாடல்கள் அனைத்தும் சுப்பிரமணிய பாரதி. ஆம் அவரின் பாடல்கள் முழுவதையும் ஏவிஎம் ஒரு தொகை கொடுத்து (10000) வாங்கியிருந்தது. பின்னர் பாரதியாரின் பாடல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியபோது, இவர்களின் அனுமதி பெற்றே அதைச் செய்ய முடிந்தது.

பி ஆர் பந்துலு அண்ணன், டி ஆர் மகாலிங்கம் தம்பி. அன்புச் சகோதரர்கள். ஆனால் பந்துலுவின் குடிப்பழக்கத்தாலும், தவறான நண்பர்களாலும் இருவரிடையே பிரிவினை ஏற்படுகிறது. பின்னர் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே கதை. டி ஆர் மகாலிங்கத்தின் ஜோடி டி ஏ ஜெயலட்சுமி.

இந்தப் படத்துக்காக காரைக்குடியிலேயே (தேவகோட்டை) ஸ்டியோ உருவாக்கப் பட்டது. ஸ்டியோ என்றால்? வெறும் கீற்றுக் கொட்டகைதான். முழுக்க முழுக்க கீற்றுக் கொட்டகை போட்டு படம் எடுத்தார் ஏவிஎம். இந்தப் பட நாயகன் தேசாபிமானம் கொண்டவன். அதனால் பாரதியாரின் தேசபக்திப் பாடகல்கள் பயன்பட்டன. இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது வானொலியில் இப்பட பாடல்களே அடிக்கடி ஒளிபரப்பப்பட்டன.


மிஸ் மாலினி

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர் கே நாராயணன் கதையில் எஸ் எஸ் வாசன் தயாரித்த படம். மாலினி (புஷ்பவல்லி) அழகிய இளம்பெண். தன் உடல்நிலை சரியில்லாத தந்தையுடன் ஏழ்மையில் வாடி வருகிறாள். அவள் தோழி சுந்தரியின் பேச்சைக் கேட்டு கலாமந்திரம் என்னும் குழுவில் சேருகிறாள். நாயகியாகி பெரும்புகழ் அடைகிறாள். அப்போது சம்பத் (கொத்தமங்கலம் சுப்பு) என்பவன் அவளை காதலிப்பது போல நடித்து அவள் பணத்தை சுருட்டி விடுகிறான். இதற்கிடையே தோழி சுந்தரியுடன் பிணக்கு வேறு.ஆனால் தோழி பின்னால் கை கொடுக்கிறாள். மீண்டும் கலாமந்திரம் ஆரம்பிக்கப்பட்டு முன்னேறுகிறார்கள்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி

ஒளிப்பதிவு - டபிள்யூ ஆர் சுப்பாராவ், இயக்கம், தயாரிப்பு - மார்டன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம்.

அரசி சிந்தாமணி (மாதுரி தேவி) மூன்று கேள்விகள் கேட்பார். சரியான பதில் சொன்னால்
அவரை திருமணம் செய்து கொள்ளலாம்,நாடும் கிடைக்கும். பதில் தெரியாவிட்டால் தலையை வெட்டி விடுவார். நாயகனின் தந்தை (ஆசையைப்பாரு), அண்ணன்கள் அனைவரும் பதில் தெரியாமல் தலையை இழக்கிறார்கள். நாயகன் தன் நண்பன் உதவியுடன் முதலில் கேள்விகளுக்கான பதிலை தேடிச் செல்கிறான்.

அந்த மூன்று கேள்விகளின் விடையும் மூன்று கதையாய் இருக்கிறது. அந்தக் கதைக்கான முடிச்சை அவிழ்க்கச் சென்றால் அங்கும் ஒரு கதை சொல்லப்பட்டு கேள்வி கேட்கப்படுகிறது.(கதைக்குள் கதை உத்தி)

ஒரு வழியாக எல்லா முடிச்சையும் அவிழ்க்கிறான் நாயகன். அத்தனை கதைகளுமே அவன் வாழ்க்கையோடு தொடர்பு உடையவையே. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மாண்டேஜ் உத்தியில் படமாக்கப்பட்டவை. கேமிராமேன் பெரும் புகழ் பெற்றார் இப்படத்தின் மூலம்.

கடகம்

ராஜகுமாரியைத் தயாரித்த ஜூபிடர் இதே ஆண்டில் தயாரித்தது தான் இந்தப் படமும். நாயகனாக அறிமுகமானார் ஜெயகுமார் என்ற பட்டதாரி. கட்டுமஸ்தான உடல், அழகிய முகத்துடன் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர். சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறார் என்று செய்தி வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அற்புத் சக்தி வாய்ந்த கடகம் (பிரேஸ்லெட்) ஒன்று. அதற்க்காக ஹீரோவும் வில்லனும் மோதுகிறார்கள் (டி எஸ் பாலய்யா). எதற்க்கு? அப்போதுதான் இளவரசி (சூர்யகுமாரி) கிடைப்பார். இதற்க்கிடையில் ஒரு கோமாளி வில்லனும் (டீ ஆர் ராமசந்திரன்) கடகத்துக்காக மோதுகிறான். இவன் குயுக்தி படைத்தவனும் கூட. கடைசியில் தமிழ்சினிமா வழக்கப்படி ஹீரோவுக்கே கடகம்.

ஆனால் நிஜத்தில் ஹீரோ பாவம். இப்படத்தின் தோல்வியால் அடுத்த வாய்ப்பு எதுவும்
கிடைக்காமலேயே திரையுலகை விட்டு விலகினார்.

மதனமாலா

நாயகன் - ஸ்ரீராம்(அறிமுகம்), நாயகி - ரஜனி, வில்லன் - சி எஸ் டி சிங். ஏராளாமான கத்திச் சண்டைகள் நிறைந்த வழக்கமான சாகசப் படம். பின்னாட்களில் ஸ்ரீராம் குணசித்திர நடிகராக மாறினார்.

சண்பகவல்லி

கந்தர் பிலிம்ஸ் தயாரிப்பு. டி எஸ் பாலய்யா நாயகன். விஜயாள், ஏ எவ் பெரியநாயகி ஜோடிகள். கூடு விட்டு கூடு பாயும் விக்கிரமாதித்தனாக டி எஸ் பால்ய்யா நடித்திருந்தார். சில பாடல்களையும் இப்படத்தில் அவர் பாடினார்.

29 comments:

Dr.SUREஷ் said...

வந்தாச்சு..,

Dr.SUREஷ் said...

//அடுத்த 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆட்டிப்படைத்தவர் ஹீரோவாக பதவிஉயர்வு அடைந்ததுதான். //

சுதந்திரம்,,,,

சுதந்திரம்.....,

வந்தாச்சு.....,

வந்தாச்சு........,

Dr.SUREஷ் said...

//அதுவரை பாடத்தெரிந்தவர்கள் தான் கதாநாயகர்கள் ஆக முடியும் என்றிருந்த மாயையையும் உடைத்தார்.//


முதல் புரட்சி..,

Dr.SUREஷ் said...

//உன் கற்புக்கு பங்கம் வராத வரையிலும் அவனுக்கு ஆபத்து நேராஅது//


இதெல்லாம் டூ மச்..,

Dr.SUREஷ் said...

//. உடனே ஜலந்தர் மன்மதனிடம் செல்ல, அவனோ இவனை மயக்கி அவன் தலையில் இருக்கும் விஜய சங்கை கவர்ந்து கொண்டு கைலாயத்துக்கு ஓடிவிடுகிறான்.//


கருமம், கருமம்...,

Dr.SUREஷ் said...

//அதே சமயத்தில் மன்மதன் ஜலந்தர் வேடத்தில் உருவெடுத்து அவன் மனைவி பிருந்தையின் கற்புக்கு பங்கம் விளைவிக்கிறான்.//


இது வேறயா...?

Dr.SUREஷ் said...

//அவன் தலை விழுந்து துளசி செடியாக மாறுகிறது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் கிடைக்கிறது.//ஃபினிசிங் டச் வெச்சாச்சில்ல...,

இனி எல்லாமே பக்தி தான்...,


கடவுள் பக்தி நல்லா வளரும்.

வாழ்க...., கதாசிரியர்..,

Dr.SUREஷ் said...

//நாம் இருவர்//


மகான் காந்தியே மகான் பாட்டு நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது

யமகா காந்தி யமகா என்று பாடப் பட்டது.

Dr.SUREஷ் said...

//நாம் இருவர்//


டி.ஆர். காதலிக்கும் பெண்ணை அவரது அப்பாவுக்கு திருமணம் முடிவு செய்வார்கள் தல..,

படத்தில் கொலைக் காட்சி கூட வரும். கத்தியில் இருக்கும் எழுத்தை வைத்துக் கண்டுபிடிப்பார்கள்.

Dr.SUREஷ் said...

//கட்டுமஸ்தான உடல், அழகிய முகத்துடன் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர். //


ஹீரோயின் பத்தி சொல்றீங்களோன்னு நினைச்சேன்

ஸ்ரீ.... said...

மற்றொரு நல்ல பதிவு. ஆமாம்! நீங்க பிறந்த வருஷம் என்ன ?

ஸ்ரீ....

வண்ணத்துபூச்சியார் said...

super...

keep rocking..

வெண்பூ said...

அருமை.. சுதந்திரம் கிடைத்தபின் வெளியான முதல் படம் நாம் இருவர் என்று கேள்விபட்டேன். ஆனால் அதே ஆண்டில் இத்தனை படங்கள் என்பது ஆச்சர்யமான செய்தி..

T.V.Radhakrishnan said...

வழக்கம்போல பல அரிய தகவல்கள்..நன்றி முரளி..
மிஸ்.மாலினி பின்னாளில் ."சோ" நடிப்பில் மிஸ்டர் சம்பத் என்றபெயரில் மீண்டும் படமாக வந்தது

முரளிகண்ணன் said...

சுரேஷ் தங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்ரீ பழைய படம் பத்தி எழுதுனா உடனே வயசா?

நன்றி வண்ணத்துப்பூச்சியார்.

வாங்க வெண்பூ

டி வி ராதாகிருஷ்ணன் சார், வருகைக்கும் கூடுதல் தகவல்களுக்கும் நன்றி

புருனோ Bruno said...

//துளசி ஜலந்தர்//

இன்றைய தேதியில் இந்த கதையை வைத்து எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் படம் எடுக்கலாம்

அல்லது

ஷகிலா படம் எடுக்கலாம்

புருனோ Bruno said...

//ஒரு வழியாக எல்லா முடிச்சையும் அவிழ்க்கிறான் நாயகன். அத்தனை கதைகளுமே அவன் வாழ்க்கையோடு தொடர்பு உடையவையே. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மாண்டேஜ் உத்தியில் படமாக்கப்பட்டவை. கேமிராமேன் பெரும் புகழ் பெற்றார் இப்படத்தின் மூலம்.//

அந்த கால ஸ்லம் டாக் மில்லியனர் ????

புருனோ Bruno said...

மாண்டேஜ் என்றால் என்ன தலைவா

புருனோ Bruno said...

சுரேஷின் மறுமொழிகள் டாப்

வெங்கிராஜா said...

//ஒரு பிராமணரின் மனைவியை//
//இந்திராணியை//
//குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் இந்திரலோக அழகிகளைப் பார்க்கிறான்//
//அவளைவிட அழகியாக தோன்றுமாறு மன்மதனை//
//பார்வதி தேவியே அந்த அழகியாக தெரிய தொட்டு விடுகிறான்//

அதிபயங்கர படமா இருக்கு... சின்ன லெவல்-லயாச்சும் பிட் எல்லாம் உண்டா? டி.வி.டி-யில பார்த்தீங்களா தல? ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்-ல கூட இது மாதிரி எல்லாம் போட மாட்டானே!

முரளிகண்ணன் said...

வாங்க டாக்டர்.

மாண்டேஜ் காணொளியோடு விரைவில்
சொல்கிறேன்.

எஸ் ஜே சூரியா? :-)))))


வெங்கிராஜா,

படம் பிளாக் அன்ட் ஒயிட் . அவ்வளாவா எபெக்ட் இருக்காது.
:-(

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//எல்லா முடிச்சையும் அவிழ்க்கிறான் நாயகன். //


எப்படி இதை கவனிக்காம போனோம்..,

RamKumar said...

நல்ல பதிவு முரளி. சமீபத்தில் தான் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமனி படத்தை பார்த்தேன். அதில் நாயகனின் அண்ணன்கள் தான் சிந்தாமனி கையால் இறந்து போவார்கள் , அவரின் அப்பா உயிரோடு தான் இருப்பார், அவர்தான் அண்ணன்களுக்கு ஏற்பட்ட கதியை நாயகனுக்கு சொல்லுவார்.

நன்றி,
ராம்குமார்

முரளிகண்ணன் said...

ராம்குமார்

டி வி டி யா இல்லை தியேட்டர் பிரிண்டா?

நம்ம நண்பர்கள் பலரும் இந்த படங்களைப் பார்க்கணும்னு விரும்புகிறார்கள்.

மேலதிக தகவல்கள் சொன்னால் மிக உதவியாக இருக்கும். நன்றி.

சுரேஷ்

குறும்பு.

சகாதேவன் said...

//பந்துலுவின் குடிப்பழக்கத்தாலும் தவறான நண்பர்களாலும் இருவரிடையே பிரிவினை.....//

பந்துலு, சுகுமாரை(டி.ஆர்.மகா) தன் பிள்ளை போல் நினைப்பார். சுகுமார்தான் சினிமா எடுக்கிறேன் என்று சொத்தை இழந்து கொலைப்பழிக்கும் ஆளாவார். கோர்ட்டில் பந்துலு தானே கொலை செய்ததாக சொல்ல, அவங்க அப்பா சாரங்கபாணி வந்து வி.கே.ராமசாமியை கொலை செய்தது தான் என்றும் கத்தியில் ஆர் என்று இருக்கும். என் பேர் ராமசாமி என்று ஒப்புக்கொள்வார். மற்ற காரெக்டர்களின் பேர் நினைவில்லை.
நீங்கள் சொன்ன மற்ற படங்கள் எனக்கு தெரியாது. நாம் இருவர் நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
சகாதேவன்

RamKumar said...

ஆயிரம் தலையை ஆன்லைனில் பார்த்தேன் , இப்பொழுது லிங்க் கிடைக்கவில்லை. கிடைத்தால் தருகிறேன்.

ராஜகுமாரி திரைப்படம் கூகிள் வீடியோவில் உள்ளது. இந்த லிங்க் மூலம் கானலாம். தங்கள் பதிவில் அதை பற்றி படித்து படம் பார்த்தேன் , முதல் பாதி நிறைய பாடல்

http://www.techsatish.net/2007/05/24/rajakumari-live-tamil-movie-links/

நன்றி,
ராம்குமரன்

முரளிகண்ணன் said...

சகாதேவன் தங்கள் வருகைக்கும்,

தகவலுக்கும் நன்றி. திருத்தி விடுகிறேன்.

ராம்குமார்,

மிக்க நன்றி.

பூங்குழலி said...

நல்ல தொகுப்பு .ஆனால் "ஆயிரம் தலைவாங்கிய ......." சிந்தாமணியாக நடித்தது வி.என் .ஜானகி .அவரின் தந்தையாக எம்.ஜி.சக்கரப்பாணி நடித்திருப்பார் .

gangram said...

//ஐந்து வயதுப் பையனுக்கு ஹேராமும்,நான் கடவுளும் பிடிக்குமா? அவனுக்குப் பிடித்தது சண்டைப் படம்,மீசை அரும்பியபின் காதல் படம், கொஞ்சம் அடிபட்ட பின் அன்பே சிவம், மகாநதி//
வாஸ்தவமான உண்மை .