May 31, 2009

மீண்டும் ஒரு தொடர் பதிவு

இது ஒரு தொடர் பதிவு. அருமை நண்பர் ஹாலிவுட் பாலா அழைப்பு விடுத்தார்.

விதிகள் எப்பவும் போலத்தான். கீழே இருக்கிற 32 கேள்விகளுக்கும் (ஏதும் நியுமராலஜியா?) பதில் சொல்லணும். மூணு பேரைக் கூப்பிடணும்.

ரெடி ஸ்டார்ட்.


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பெற்றோர் வைத்த பெயர்தான். எல்லா இடங்களிலும் முரளி கிருஷ்ணாவா எனக் கேட்கும்
போது மட்டும் அப்படிக்கூட இருந்திருக்கலாமா எனத் தோன்றும்.



2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இப்போது அழுகை எல்லாம் வருவதில்லை. ஆத்திரம் மட்டுமே.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ம்ஹூம்.

4).பிடித்த மதிய உணவு என்ன?

பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

விண்டவர் கண்டிலர் ரேஞ்சுல உடனே.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி. அதிலயும் குற்றாலத்தில புலியருவினு ஒன்னு இருக்கும். நம்ம தலைக்கு ரெண்டடி
உய்ரத்தில இருந்து விழும். அதுமாதிரி உயரம் கம்மியான அருவியா இருக்கணும். ஹோன்னு தலையில அடிக்கிற மாதிரி விழுகிற அருவிக்கு நோ.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்களின் பேச்சு.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: அடாப்டபிலிட்டி
பிடிக்காத விஷயம் : சோம்பேறித்தனம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயம் : அன்பு

பிடிக்காத விஷயம் : டயட்ல இருங்கன்னு கண்டிக்கிறது


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..

நண்பர்கள்.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நீலம்.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எதுவும் இல்லை.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பிங்க் (அப்போதான் பெண்கள் எடுத்துக்கிடுவாங்க)

14.பிடித்த மணம்?

காலைத் தேநீரின் மணம்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

SUREஷ் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்.


டி வி ராதாகிருஷ்ணன் :பதிவர்களிடம் மிகப் பிரியமாக பழகுவார்


கார்த்திகைப் பாண்டியன் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்

காரணம் : இவங்களைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கத்தான்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


ஹாலிவுட் பாலா : அவருடைய எல்லா திரை விமர்சனங்களும்.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ரொமாண்டிக் காமெடி

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்

21.பிடித்த பருவ காலம் எது?

விண்டர்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இந்தவார ஜூனியர் விகடனும், ரிப்போர்டரும்.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கடந்த மூன்று வருடமாக ஒன்றே (என் பையனின் படம்)


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் : சிரிப்பு

பிடிக்காத சப்தம் : அழுகை


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெங்களூர் தான் அதிகபட்சம் நான் சென்றது


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கணும்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்ன தப்பு செஞ்சேன்னே சொல்லாம நண்பர்கள் என்னை ஒதுக்கும்போது.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

அப்படி எதுவும் ஸ்பெசிபிக்கா இல்லை.


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இதுக்கு நான் நீட்சேவைத் தான் துணைக்கழைக்கணும்


31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

பதிவு போடுறது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வேற வழியில்ல. வாழ்ந்துதான் கழிக்கணும்

27 comments:

நாடோடி இலக்கியன் said...

பிடித்த உணவை கொஞ்சம் சுருக்கமா சொல்லியிருக்கலாமே,இப்படி விலாவாரியாச் சொல்லி ஏங்க அம்மாவின் சமையலை ஞாபகப்படுத்தறீங்க.அதுவும் இன்னைக்கு சண்டேவேறு.....

கார்த்திகைப் பாண்டியன் இந்த தொடரில் ஏற்கனவே பங்கேற்றுவிட்டார் என நினைக்கிறேன் முரளி.

புருனோ Bruno said...

//பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.
//

நாக்கில் எச்சில் :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடுஎன்ற பெயரில் ஏற்கனவே போட்டுவிட்டேன். தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//(கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்),//


ஆஹா..,

Anonymous said...

தலை

வாழ்த்துகள். நட்சத்திர வாரம் முடியும்போது வந்து வாழ்த்துற ஏன்னோட சுறுசுறுப்பை நெனச்சா எனக்கே அரிக்குது - புல்லுதான் :-)

அதுசரி மூணு பேரை கூப்பிடணும்னு மரபைச் சொல்லிட்டு யாரையும் கூப்பிட்டாத உங்களை பாராட்டுறேன் :-)

சாத்தான்குளத்தான்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
பிடிக்காத விஷயம் : டயட்ல இருங்கன்னு கண்டிக்கிறது//

ஓ........


நிலமை அப்படி போகுதா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெங்களூர் தான் அதிகபட்சம் நான் சென்றது//


என்னைய மாதிரியே தானா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடர்பதிவிற்கு அமைத்ததற்கு நன்றி தல..,

ஏற்கனவே சங்கிலிக்குள் வந்து விட்டதால் மேம்படுத்தி விடுகிறேன்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடர்பதிவில் எதிர்மறை ஓட்டுகள் வாங்கிக் குவித்த ஆள் நானாகத்தான் இருக்கும் தல..,

Jackiesekar said...

நல்ல ஒரு சுய புரானம்

முரளிகண்ணன் said...

வாங்க நாடோடி இலக்கியன்.

சென்ற மாதம் அதிகமா பதிவுகள படிக்க முடியாததால இப்படி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.

ஓகே. ஏதாவது பண்ணலாம்.

@புருனோ

டாக்டர் நீங்களும் நம்ம ஆளு தானா?

முரளிகண்ணன் said...

@சுரேஷ்,

சில பதிவுகளை படிக்காம விட்டதால
இப்படி ஆயிடுச்சு. மன்னிக்கவும்.

அண்ணாச்சி,

கூப்பிட்டு இருக்கேனே?
சுரேஷ், டிவி ராதாகிருஷ்ணன்,கார்த்திகைப் பாண்டியன் மூணூ பேரையும்.

ஆனா அதிலுயும் பாருங்க ரெண்டு பேரு முன்னமே எழுதிட்டாங்களாம்.

:-((

முரளிகண்ணன் said...

அண்ணாச்சி,

நான் கூடவா உங்களுக்கு தலை?


ஜாக்கி, இது சுய புராணமா?

கேட்டாங்க, சொல்லுறோம். அவ்ளோதான்.

Venkatesh Kumaravel said...

சாப்பாடு கேள்விக்கு 'சுவையான' பதில்... காலேஜ் வெக்கேஷன் வரப்போகுதுங்க... நாங்களும் வீட்டுக்கு போய் இதையெல்லாம் சாப்பிடுவோம்ல!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கிடுவோம்

எம்.எம்.அப்துல்லா said...

//
குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ்.

//



அய்யோ...இது இரத்த பூமியா இருக்கு. நான் கிளம்புறேன்

:))

நர்சிம் said...

எல்லாக் கேள்விகளுக்கும் கலக்கலான பதில்கள் தல.

அதுவும் ‘இருக்கணும்’ பதிவு போடுறது ரெண்டும் சூப்பர் பதில்கள்.

வெண்பூ said...

மத்த பதிலெல்லாம் ஓகே.. ஆனா

//
பிடித்த மதிய உணவு என்ன?
//

இந்த கேள்விக்கான பதில்ல..... நீங்க நம்ம ஆளு தல.. :)))))

அது ஒரு கனாக் காலம் said...

நீங்களும் வாலி போல தானா, அவரும், திருவெல்லிக்கேணி விட்டு வெளியில் எங்கும் போகவில்லை என கேள்வி...

நல்ல பதில்கள் .... சில இடத்தில நழுவிடீங்க ...அப்படின்னு நினைக்கிறேன்

thamizhparavai said...

பிடித்த உணவு விரிவுரை சூப்பர்...
அருவிக்குளியல் என் டேஸ்ட்தான்

Starjan (ஸ்டார்ஜன்) said...

கடைசியாக அழுதது எப்பொழுது?

இப்போது அழுகை எல்லாம் வருவதில்லை. ஆத்திரம் மட்டுமே.


கமல் படங்கள் வந்தா மட்டும் ?.....

பாலா said...

சாப்பாட்டில் இண்ட்ரஸ்டே இல்லாத எனக்கே.. நாக்கில் எச்சி ஊறுற ரேஞ்சுக்கு விவரிச்சி இருக்கீங்களே...!!

உங்க வீட்டில்.. லஞ்ச், ஒரு கட்டு கட்டிட வேண்டியதுதான்..!! :) :)

கோபிநாத் said...

கலக்கல் பதில்கள் ;)

Cable சங்கர் said...

அந்த சாப்பாட்டு மேட்டர் நாக்கில எச்சில் ஊற வச்சிருச்சே.. உங்க இளம தொந்திக்கான காரணம் அதுதானோ..?

அப்புறம் அந்த அருவி..மேட்ட்டர்.. அவ்வளவு கிட்ட விழற் அருவில போய் நின்னா.. அப்புறம் தலை இப்படி ஆகாம என்னவாகும்..?:):)

அகநாழிகை said...

நல்ல பதிவு. பல விவரங்களை அளித்திருக்கிறீர்கள். சாப்பாட்டு விஷயம் அருமை.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Vidhya Chandrasekaran said...

\\பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்:(

அத்திரி said...

அழகான சுய புராணம்