May 30, 2009

சிறு நகர காதலின் சிரமங்கள்

1. நம் தெருப் பிகர் நம்மை ஏறெடுத்தும் பார்க்காது. ஏனென்றால் நாம் சின்ன வயதில் கிழிந்த டவுசர் போட்டு, சளி ஒழுகிக் கொண்டு சுற்றியது முதல், பரிட்சையில் பெயிலாகி, திருட்டு தம் கட்டி அடிவாங்கியது வரை அவர்களின் மனதில் பதிந்திருக்கும். என்னதான் பின்னாளில் நாம் ஓரளவு பெர்சனாலிட்டி மெயிண்டைன் பண்ணினாலும் கதைக்காகாது. அடுத்த தெரு பையன்களுக்கு சான்ஸ் அதிகம்.அல்லது வாலிப வயதில் அந்த தெருவுக்கு புதிதாக குடிவரும் பையனுக்கும் வாய்ப்பு உண்டு.

2. சிறு நகரங்களில் வசிக்கும் மாத சம்பளக்காரர்கள் தவணை முறையில் வீடு கட்டுவார்கள். அதில் தங்களுக்கு 650 சதுர அடியும், வாடகைக்கு விடுவதற்க்கு 550 சதுர அடியிலும் கட்டுவார்கள். (அப்போத்தானே லோனை அடைக்க வசதியா இருக்கும்). அங்கே பிள்ளைகளுக்கு தனி அறை என்பது வைரஸ் இல்லாத சிஸ்டம் போல. தனிமையில இருந்தாத்தானே பீல் பண்ண முடியும்?


3. அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போற ஆளா இருந்தாலும் கஷ்டம். வீட்டிலே எந்நேரமும் லௌகீக பேச்சுத்தான். அவன் அங்க அரை கிரவுண்டு வாங்கிட்டான். இவன் இங்க சீட்டு போட்டிருக்கான். நீ நல்லா படி. அப்பதான் இங்க வேலை கிடைக்கும், இங்க வேலை கிடைக்கும்னுதான் உரையாடலே இருக்கும். இந்த சூழ்நிலையிலே ஒருத்தனுக்கு எப்படி காதல் துளிர்க்கும்?

4.கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு,உறியடி என ஹீரோவாக மாறும் வாய்ப்பு அதிகம். இங்கே அதிகபட்சம் ஒரு விக்கிபால் டோர்ணமெண்ட் நடக்கும். அதில் மேன் ஆப் தி சீரிஸ் விருது வாங்கினால் கூட 32 ரூபாய்க்கு ஒரு வெங்கலக்கிண்ணி தருவார்கள். அதை தூக்கிக் கொண்டு தெருவில் வந்தால் அஞ்சு, பத்து காசு தர்மம் தான் கிடைக்கும்.

5. கிராமங்களில் திருவிழாவில் பெண்களை இம்பிரஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கும். இங்கே திருவிழாக்கள் சுருங்கிவிட்டன. அதிகபட்சம் ஒரு மெல்லிசைக் கச்சேரி. இப்போது ஆடல் பாடல். இங்கே என்ன வாய்ப்பு கிடைக்கும்?

6. இதையும் மீறி கம்ப்யூட்டர் செண்டர்லயோ, காலேஜிலயோ, கஷ்டப்பட்டோ கால்ல விழுந்தோ யாரையாச்சும் கரெக்ட் பண்ணீட்டாலும் ஈஸியா அத வளர்த்துற முடியுமா?

7. முன்னால சொன்ன மாதிரி சின்ன வீடுங்கிறதால பிரைவசி கிடைக்காது.
எப்படி கவிதை எழுதுறது? எதிர் பார்ட்டிக்கிட்ட இருந்து போன் வந்தா பிரீயா பேசுறது?

8. அனேகமாக ஒன்னொரு தெருவிலும் குறைந்தது ஒரு வீடாவது இருக்கும் பின்வரும் வகையில். அந்த வீட்டின் வாரிசுகள் திருமணமாகியோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளியூரில் இருப்ப்பார்கள். கணவர் ரிட்டயராகும் வயதில் இருப்பார். மனைவியிடம் லீனியண்ட்டாகவும் இருப்பார். அம்மாதிரி வீடுகளில் பிற்பகல் முதல் முன்மாலை வரை (உச்சிக்காலம் முதல் சந்தியாகாலம் வரை) தெருப் பெண்கள் கூடி கும்மியடிப்பார்கள். அதில் கோல நோட் எக்சேஞ், சமையல் குறிப்பு ஆகியவை 1 சதவிகிதமும், புறணி 99 சதவிகிதமும் இருக்கும். யார் யாரை பார்க்கிறர்கள் முதல் பலவும் அலசப்படும். இந்த ரா அதிகாரிகளிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலிப்பது கடினம்.

9. கிராமங்களில் வயல், காடு என பல மறைவிடங்கள். பெருநகரங்களில் பீச்,பிளாசாக்கள்.
சிறு நகரத்தில் மூன்று நான்கு தியேட்டர்கள் தான் இருக்கும். அங்கே காதலியை கூட்டிப் போனால் அடுத்த நாள் ஐ நா சபை வரைக்கும் தெரிந்துவிடும். லைப்ரரி என்று ஒன்று இருக்கும். அங்கு கூட்டிப் போனால் காதல் வராது. ஆஸ்துமா தான் வரும்.

10. பேரூராட்சி, நகராட்சி என்ற பெயரில் ஒரு பூங்கா ஒன்றை அமைத்து இருப்பார்கள். அது நம் தமிழ்மணப் பூங்கா போல ஆரம்பத்தில் அட்டகாசமாக துவங்கி பின் வழக்கொழிந்து போயிருக்கும். அங்கேயும் சென்று காதல் செய்ய முடியாது.

இவ்வளவு பிரச்சினையையும் மீறி சிறு நகரங்களில் காதலிப்பவர்களுக்கு வந்தனங்கள்.

48 comments:

அகநாழிகை said...

முரளிகண்ணன்,
ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்
நன்றாக இருக்கிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

சென்ஷி said...

கிராமத்தானுக்கு எல்லாத்துலயுலமே வாய்ப்பு அதிகம்ங்கறத இந்த பதிவு நிரூபிச்சுடுச்சு :)

அத்திரி said...

//அதில் கோல நோட் எக்சேஞ், சமையல் குறிப்பு ஆகியவை 1 சதவிகிதமும், புறணி 99 சதவிகிதமும் இருக்கும். யார் யாரை பார்க்கிறர்கள் முதல் பலவும் அலசப்படும். இந்த ரா அதிகாரிகளிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலிப்பது கடினம்.//

ஆமா தல ரொம்ப ரொம்பக் கஷ்டம்.....

Venkatesh Kumaravel said...

அண்ணே... ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள் நான் இந்த ஜெனரேஷன் ஆசாமி என்பதால் அவ்வளவாக ஒன்றிவிட முடியவில்லை.. ஆனாலும் நல்ல சுவையான பதிவு!

முரளிகண்ணன் said...

அகநாழிகை,சென்ஷி,அத்திரி வருகைக்கு நன்றி.


வெங்கி, இது உங்களுக்கே நியாயமா?

நாங்கள்ளாம் என்ன ஸ்டோன் ஏஜ் ஆசாமிகளா?

நாங்களும் இந்த ஜெனரேஷன் தாம்ப்பா.

தீப்பெட்டி said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க...

நல்லா சுவரஸ்யமா எழுதி இருக்கிங்க

சிவக்குமரன் said...

ஹா ஹா ஹா .....அருமை.

வெட்டிப்பயல் said...

வேற என்ன சொல்றது...

வழக்கம் போல கலக்கல் தான் :)

கே.என்.சிவராமன் said...

முரளி,

தனிப்பட்ட மடலில் எனக்கு ஏன் காதல் வரவில்லை அல்லது நான் ஏன் யாரையும் காதலிக்கவில்லை அல்லது என்னை ஏன் யாரும் காதலிக்கவில்லை என நீங்கள் சொல்லியிருக்கலாம். இப்படி பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டாம். அப்படியென்ன கோபம் என் மீது? :-(

சிறு நகரத்தில் பிறந்து, வாழ்ந்த
பைத்தியக்காரன்

முரளிகண்ணன் said...

நன்றி தீப்பெட்டி.

நன்றி சிவக்குமரன்.

நன்றி வெட்டிப்பயல்.

பைத்தியக்காரன்,

நாமெல்லாம் ஒரே இனம்.

கார்க்கிபவா said...

அப்படி போடுங்க சகா.. சேம் ப்ளட்... :((((

முரளிகண்ணன் said...

கார்க்கி, உனக்கும் ஆகலியா?
உனக்கும் ஆகலியா? உனக்கும் ஆகலியா?

கடைக்குட்டி said...

சூப்பர் தல..

அனுபவப் பதிவுபோல..

கடைக்குட்டி said...

இங்கு நன்றி சொல்லாமல் என் கடைக்கு வந்து மொய் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...

நர்சிம் said...

“சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போலயே?”

நர்சிம் said...

இதுல இன்னொரு பாயிண்ட்டும்.. ரொம்ப கஷ்டப்பட்டு கரெக்ட் பண்ணா.. முரட்டுப் பய எவனாவது ரெண்டு தடிமாடோட வந்து, ‘ஜி,அது நம்ம பார்ட்டி, ஒதுங்கிக்க’ன்னு டரியல கிளப்புவாங்க..

எல்லாத்தையும் மீறீத்தானப்பா கரை ஏத்தனும்

முரளிகண்ணன் said...

கடைக்குட்டி,

மொய் என்ன, சீர் வரிசையே செஞ்சிடுறேன்.

@நர்சிம்

\\“சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போலயே?”

\\

தலைவரே, இதை புனைவுங்குற
லேபிள்ல நான் எழுதியிருக்கணும்னு
நினைக்கிறேன்.

\\எல்லாத்தையும் மீறீத்தானப்பா கரை ஏத்தனும்\\

உங்களுக்குமா?

லோகு said...

அருமையான அலசலுங்க..
ஒருவேளை உண்மையான ஆதங்கமோ??

முரளிகண்ணன் said...

அய்யா லோகு

இதெல்லாம் அப்சர்வேஷன்ஸ்

ஆதங்கமில்லை.

மொதல்ல லேபிள மாத்திடுறேன்

ரமேஷ் வைத்யா said...

ayyo paavam...

முரளிகண்ணன் said...

ரமேஷ்ணா

என்ன மும்தாஜ் ஸ்டைல்ல சொல்றீங்களா?

அய்ய்ய்யோ பாவவவவம்னு

ஆயில்யன் said...

//இதையும் மீறி கம்ப்யூட்டர் செண்டர்லயோ, காலேஜிலயோ, கஷ்டப்பட்டோ கால்ல விழுந்தோ யாரையாச்சும் கரெக்ட் பண்ணீட்டாலும் ஈஸியா அத வளர்த்துற முடியுமா?//
முடியவே முடியாதுங்க :(

ஆயில்யன் said...

//அனேகமாக ஒன்னொரு தெருவிலும் குறைந்தது ஒரு வீடாவது இருக்கும் பின்வரும் வகையில். அந்த வீட்டின் வாரிசுகள் திருமணமாகியோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளியூரில் இருப்ப்பார்கள். கணவர் ரிட்டயராகும் வயதில் இருப்பார்.///

ஆமாம் பாஸ் ஆமாம் :(

எங்க ஏரியாவே ரிட்டையர்ட் ஆளுங்க ஒன்லி ஏரியா :((((

ஆயில்யன் said...

பாஸ் மொத்தத்தில என்னோட சோகத்தை கொஞ்சமா குத்தி கிளறி எடுத்துட்டீங்க!

Jackiesekar said...

அடப்பாவி பைத்தியக்காரனையே பீல் பன்ன வச்சி்டியே பரட்டை

சிநேகிதன் அக்பர் said...

நான் தொடந்து உங்கள் பதிவுகளை வசித்து வருகிறேன்

இந்த வார பதிவுகள் உங்களின் இன்னொரு முகத்தை காட்டுகின்றன (பன்முக திறமையை சொல்கிறேன் )

உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்கிறோம் தல

இந்த பதிவு அனுபவ பதிவாகவே தோன்றுகிறது .

லக்கிலுக் said...

காதலிப்பது இவ்வளவு சிரமமா?

எனக்கு கடையில் சிகரெட்டு வாங்குவதுதான் அந்த வயதில் சிரமமாக இருந்தது :-)

அது ஒரு கனாக் காலம் said...

அட போங்க சார், வல்லவனுக்கு புல்லும் ஆய்தம்.... கவிதையும், காட்சியும் மனசிலேயே ஓடும்.... அதுக்கு வசந்த மாளிகை ஒன்றும் வேண்டாம்...

பதிவு நல்லாவே இருந்தது... நான் வல்லவன் இல்லே, ஒரு நல்லவன் ... காதல்ல ஒரு விரல் நகம் கூட உராய்ந்தது கிடையாது.

ஷண்முகப்ரியன் said...

லைப்ரரி என்று ஒன்று இருக்கும். அங்கு கூட்டிப் போனால் காதல் வராது. ஆஸ்துமா தான் வரும்.//

இது போல அனாயசமான நகைச்சுவை.யதார்த்தமான மெல்லிய பரச்சினைகள்.பாஸு சட்டர்ஜியின் படம் பார்த்ததைப் போல இருந்தது,முரளிகண்ணன்.வாழ்த்துகள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கிராமங்களிலும் ஏறக்குறைய இதே கதைதான். இம்ப்ரஸ் பண்ண வாய்ப்புகள் நீங்கள் சொன்ன அள்வு உண்டு. மற்றபடி தோட்டம், காட்டில் எல்லாம் காதல் வளர்த்த முடியாது.

ஒரு எபிசோடு காதலுக்கு மட்டுமே கம்மங்காடு பயன்படும். மீண்டும் சந்திக்க நினைத்தால் கண்டிப்பாக புரளிபேசும் பெருமாட்டிகளின் பார்வையில் சிக்கியே தீரவேண்டும்.

பாரதிராஜா சைஸ் கிராமங்களில் இதெற்கெல்லாம் வாய்ப்பெ இல்லை. காதல் உணர்வு வரும்போதே திருமணங்களை முடித்துவிடுகிறார்கள். இன்னும்கூட அப்படித்தான். செகண்ட் இன்னிங்ஸ்தான் காதலாக மாறுகிறது.


இப்படியே போனால் காதல் மெல்ல இனிச் செத்து விடும்.

காதலை வளர்க்க எத்தனையோ இளைஞர்கள் முயற்சி செய்தாலும் காதல் செத்துக் கொண்டுதான் இருக்கிறது.

பெருநகரங்களைப் பார்த்து வெந்து கொண்டே இருப்பதுதான் சிறு நகர ,கிராம காதலின் நிலை

Thamiz Priyan said...

நாங்க இதுக்காகவே எங்களுக்கு சம்பந்தமில்லாத ஏரியாவுக்கு சைட் அடிக்க போய்டுவோம்... அதனால் அந்த ஏரியா பசங்களொட அடிக்கடி பைட் எல்லாம் நடக்கும்.. ;-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

முரளி...அனுபவம் பேசுகிறது??? :-))

Naresh Kumar said...

இது பதிவா இல்லை புலம்பலா???

நல்லாயிருக்கு!!!

Sukumar said...

என்னா ஆராய்ச்சி... என்னா ஆராய்ச்சி... அண்ணே அவ்வளவ்வும் உண்மை.... அப்டியே பீல் பண்ண வச்சிடீங்க

Sukumar said...

வாழ்த்துக்கள்... உங்களது இந்த பதிவு குட் ப்ளாக் ஆக யூத்புல் விகடனில் வெளிவந்திருக்கிறது....

புருனோ Bruno said...

// அது நம் தமிழ்மணப் பூங்கா போல ஆரம்பத்தில் அட்டகாசமாக துவங்கி பின் வழக்கொழிந்து போயிருக்கும். //

ஹி ஹி ஹி

புருனோ Bruno said...

அதனால் தான் சிறு நகரங்களில் பெரும்பாலான காதல்கள் டியூசன் செண்டர்களில் வருகிறதோ :) :)

Cable சங்கர் said...

அது சரி நீங்க எங்க காதலிக்க ஆரம்பிச்சீங்க முரளி..

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அடேடே, எங்கேயோ சுத்திக்கிட்டிருந்தப்ப இதைப் பார்த்தேன். சூப்பர், முரளி கண்ணன்!

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கோபிநாத் said...

அடங்கொக்காமக்க...நானும் முரளி அண்ணாச்சியும் தான்னு நினைச்சிக்கிட்டு வந்தா!!! இங்க ஒரு கூட்டமேல்ல இருக்கு ;-))

முரளிகண்ணன் said...

ஆயில்யன், ஜாக்கி சேகர், அக்பர்
தங்கள் வருகைக்கு நன்றி.

லக்கிலுக், அது ஒரு கனாக்காலம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்களௌக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்.

சுரேஷ், அப்படியே உங்க பின்னூட்டத்த
ரிப்பீட்டுக்கிறேன்

தமிழ்பிரியன் :-))

டிவிஆர் சார் இது புனைவுதான்.

நரேஷ். நியாயமா இது?

முரளிகண்ணன் said...

சுகுமார் சுவாமிநாதன்,

வருகைக்கும் இனிப்புத் தகவலுக்கும் நன்றி.

டாக்டர் நீங்க டியூசன் செண்டர்லயா?
:-)))))

கேபிள்ஜி நம்ம மேட்டர் ஆரம்பிக்காமலேயே முடிஞ்சிடுச்சு

முரளிகண்ணன் said...

வருகைக்கு மிக்க நன்றி எல் ஏ ராம்.

கோபிநாத் கூல்.

மங்களூர் சிவா said...

ஹா ஹா
நல்லா அலசியிருக்கீங்க!!!
:))))

Vidhya Chandrasekaran said...

மலரும் நினைவுகள் / பட்ட கஷ்டங்கள்?? எனிவேஸ் நைஸ்:)

"உழவன்" "Uzhavan" said...

இதுமட்டுமல்ல.. ஒரு ஆர்வக் கோளாறுல சைட் அடிச்சாலே, மாமன் மச்சான் மட்டுமில்லாம போற வர்ற அவன் சாதிக்காரன்லாம் வந்து நம்ம கும்மு கும்முனு கும்முவாம்..

Balamurugan said...

balamurugan,

yes i am also from a small town from madurai, i experinced the same experiences like you. ways i saw most people are developing love.
1.school yes this is the only place to mingle with girls( that too for co-ed people)

2. tution but this also very tough as pressure to score higher proceeds.mostly students getting low scores are gaining girlfreinds( case effect or corelations)

3. next is only when going to college that too requieres convent education and nice personality

4. lot of problems are there also because most persons from town are not mingled with girls but persons from city got expreince of mingling with girls

5. also persons (from city) due to their previous experinec on mingling with girls exel more than town player who still thinks weather he can talk to a girl or not.

6.even after that some town palyers due to his originality and creativity( blocked until that time) exels all other players and get some good love in life