தேவர் மகன் படத்தின் புகழ்பெற்ற சிவாஜி கணேசன் - கமல்ஹாசன் காட்சியின் உல்டா இது.
மூத்த பதிவர் ஒருவர், சிற்றிலக்கிய உலகில் தூள் கிளப்பி வரும் எழுத்தாளரை பதிவுலகுக்கு
அழைத்து வருகிறார். எழுத்தாளர் எழுதிய பின்னவீனத்துவ கட்டுரையைப் படித்த மொக்கை பதிவர் ஒருவர் தன் தலையால் மானிட்டரை முட்டி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப் படுகிறார். பதிவுலகம் அல்லோல கல்லோலப் படுகிறது.
அதைத் தொடர்ந்து பின்னவீன எழுத்தாளார் மூத்த் பதிவரை சந்திக்க வருகிறார்.
மூ ப : எடுத்த உடனேயே பின்னவீனத்துவம் எழுதாதேன்னு சொன்னேனே கேட்டியா?
ஜோல்னாப் பையை மாட்டிக்கிட்டு, தாடி வளர்த்துக்கிட்டு நீட்ஷேவைப் பேசுற ஆளு
நான் சொல்றதக் கேட்பியா?
பி ந : சார், நான் என் தப்பை உணர்ந்துட்டேன்.சிற்றிலக்கிய உலகத்துக்கே போறேன்.
இனிமே என்னால இங்க எழுத முடியாது.
மூ ப : தாராளமா போ. ஆனா நீயெல்லாம் இப்போ எழுத்தாளர்னு சொல்லிக்கிறதுக்காக
ஆயிரம் ஆயிரமா சந்தாக் கட்டி அதை படிக்க முடியுமா பழைய பேப்பர் கடைக்குப்
போட்டானே, அவனுக்கு ஏதாச்சும் செஞ்சுட்டுப் போ.
இப்போ நான் எழுதுறேன். அதைப் படிச்சு பின்னாடி நல்ல கருத்து உருவாகி, நாடு
நல்லாயிருக்கும். ஆனா அதப் பார்க்க நான் இருக்க மாட்டேன். ஆனா கருத்து நான்
சொன்னது. இது பெருமையா? இல்லேய்யா கடமை. அதப்போல நீயும் நல்ல கருத்த
எழுதேன்யா.
பி ந : இல்ல சார். கும்மியும் எதிர்ப்பதிவுமா இருக்க இந்த மொக்கக் கூட்டத்தில எத
எழுதுனாலும் அது உருப்படியா வராது சார்.
மூ ப : உனக்கு மொதோ பின்னூட்டம் போட்ட நானும் அந்த மொக்கக் கூட்டத்துல ஒருத்தன்
தான்கிறதா நல்லா ஞாபகம் வச்சுக்கப்பூ
பி ந : இலக்கியமே படிக்காம பிந்தங்கியிருக்கிற இந்த மொக்கைக் கூட்டத்துல என்னோட
படைப்புகள வேஸ்ட் பண்ண விரும்பலை சார்.
மூ ப : மொக்கக் கூட்டம்தான். ஆனா பிளாக்குன்னு ஒண்ணு ஆரம்பிச்சப்ப இடுகையப்
போடு, பின்னூட்டத்தப் போடுன்னு ஓடிப்போய் பிளாக் ஆரம்பிச்சவங்கள்ள பாதிப் பய
நம்ம பயதான்,நம்ம பயதான். அவன் மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான். நீ தான்
அவன படிக்க வைக்கணும்.
பி ந : அதுக்குள்ள எனக்கு ரைட்டர்ஸ் பிளாக் வந்துடும் போல இருக்கே சார்?
மூ ப : வரட்டும். எனக்கு வராதா? இல்ல இப்ப எழுதுக்கிட்டு இருக்கிற யாருக்கும்
வராமயேவா போயிடும்?
பி ந : சார், நீங்க பிளாக்க உட்டுட்டு எங்கூட வந்துறங்க. நான் ஆரம்பிக்கிறப் போற சிறு
பத்திரிக்கைக்கு உங்களை எடிட்டராக்குறேன்.
மூ ப : இந்தக் கட்டை இதே வலையுலகத்துல பின்னூட்டம் போட்டே சாகுமே தவிர, சிறு
பத்திரிக்கைக்கு வராதுய்யா.
பி ந : சார், நான் ஏதாச்சும் நல்லது எழுதுவேன் சார்.
மூ ப : உன்னையத்தான்யா நான் நம்ப முடியும். வேற யாரை நம்ப முடியும்.
பி ந : சரி சார் நான் போறேன்.
மூ ப : போயிட்டு வர்றேன்னு சொல்லுங்க. உடனே கிளம்புறங்கிளா, உங்கள கூட்டிட்டு
வந்து பதிவு போட வச்சு, அதுக்குப் பின்னூட்டம் போட்ட எனக்கு, நாலு
பின்னூட்டம் போட்டுட்டு போகலாம்ல.
பி ந : சரி சார். கூடவே தமிழிஷ்லயும், தமிழ்மணத்திலயும் ஓட்டுப் போட்டுறேன்

34 comments:
me the first
post the best
யாருங்க அந்த இரண்டு பதிவர்களும்? மற்றொரு “நச்” பதிவு.
ஸ்ரீ....
அண்ணா வாங்கண்ணா.
\\post the best\\
நல்ல பதிவு போடுன்னு சொல்றீங்களா
இல்லை
பதிவு நல்லாயிருக்குன்னு சொல்றீங்களான்னு தெரியலை.
சினிமா பத்தி படிச்சு போரடிக்குது
நட்சத்திர வாரத்துலயாச்சும் நாலு காமெடி போஸ்ட் போடுன்னு எல்லோரும் சொன்னாங்கன்னு
நானும் போட்டேன்.
பொடி வைக்காம சொல்லுங்கண்ணா.
ஸ்ரீ வருகைக்கு நன்றி
சரி சார். கூடவே தமிழிஷ்லயும், தமிழ்மணத்திலயும் ஓட்டுப் போட்டுறேன் /////////
ஒட்டு போட்டாச்சு
மொக்கையும் நையாண்டியும் எங்க ஏரியா சாமி...
அதுலே நாங்க கும்மி அடிச்சி பொழைப்ப ஓட்டிகிட்டு இருக்கோம். அது உங்களுக்கு பொறுக்கலையா... இப்படி நீங்கல்லாம் எங்க இடத்தை பிடிச்சிகிட்டா நாங்க எங்க சாமி போவோம்....
ஆவ்வ்வ்வ்வ்வ்
சுரேஷ் குமார் வருகைக்கும் ஓட்டுக்கும்
நன்றி.
நையாண்டி நைனா,
அந்த ஏரியாவில உங்களை அடிக்க
முடியுமா?
நட்சத்திர வாரம், வேறு வழியில்லை. கண்டுக்காதீங்க
கலக்கல் முரளி :-)
நன்றி லக்கி.
ஓட்டுக்கள் போட்டாச்சு தல..,
எனக்கு நவீனத்துவமே பிடிபடாது.... அதப் பத்தி ஒருவிரீ....வா சொல்லிக்கொடுங்களேன்
முரளி கண்ணன்,
அது வடிவேலு இங்கிலீஷ்.
போஸ்ட் இஸ் பெஸ்ட் என்று வாசித்துக்கொள்ளவும்.
நட்சத்திரமானதக்கு வாழ்த்துகள் முரளி
:-)
இது நல்லா இருக்கு ஆனா யாருனு தெரியவில்லை, மேலும் இந்த இலக்கியம் பின்நவினத்துவம் எல்லாம் நமக்கு புரியாது
ஒருவேளை தெரிந்து படித்தால் இன்னும் சுவையாக இருந்து இருக்ககூடும்
நீங்க தானா அது ... நான் வேற முரளினு நினைத்து விட்டு விட்டேன்..
உங்க இந்த புரோபைல் போட்டோ தான் ரொம்ப பரீட்சியம் :-) அதான் லேட்டா வாழ்த்துகள்
சகலகலாவல்லவன் முரளிகண்ணன் அவர்கள் வாழ்க... அப்டியே சிவாஜியும் கமலும் பேசின மாதிரியே இருக்கு.. :))
//மூ ப : போயிட்டு வர்றேன்னு சொல்லுங்க. உடனே கிளம்புறங்கிளா, உங்கள கூட்டிட்டு
வந்து பதிவு போட வச்சு, அதுக்குப் பின்னூட்டம் போட்ட எனக்கு, நாலு
பின்னூட்டம் போட்டுட்டு போகலாம்ல.
பி ந : சரி சார். கூடவே தமிழிஷ்லயும், தமிழ்மணத்திலயும் ஓட்டுப் போட்டுறேன்/
ங்கொக்கமக்கா.. :))
பட்டாசு! வீடியோ லிங்கோட குடுத்திருக்கலாம்! நட்சத்திரமா கலக்குறீங்க தல! வாழ்த்துகள்!
எழுத்தாளர் எழுதிய பின்னவீனத்துவ கட்டுரையைப் படித்த மொக்கை பதிவர் ஒருவர் தன் தலையால் மானிட்டரை முட்டி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப் படுகிறார்.
அந்த பதிவரை பார்க்க பாவமா தெரியலிய்யா உங்களுக்கு ?....
-:)
நல்லாயிருக்கப்பூ.. நல்லாயிருக்கு.
:)))
அந்த மொக்க பதிவர் அந்த பின்னவீனத்துவ பதிவர்க்கு போட்ட பின்னூட்டங்கள்...
1)கும்மி கமெண்டுக்கு..
மொக்க பதிவுக்கு..
2) அனானி கமெண்ட் எடுத்துட்டா என்ன? கும்முற மேட்டர பதிக்கணும். பத்திக்குற மேட்டர கும்முவோம்
கலக்கல் பதிவு தல...
//அவன் மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான். நீ தான்
அவன படிக்க வைக்கணும்.//
இது இப்படி வந்திருக்கணுமோ...
நீ அவன படிக்க வையி... ஆனா அவன் மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான். மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான்.
பதிவாய்யா இது.. பதிவே இல்லைய்யா..
நாம பதிவு போட்டா அதைப் படிச்சுட்டு பொறவு பின்னூட்டம் போடணும்.. நேத்து பதிவு ஆரம்பிச்சவங்க எல்லாம் படிக்காமலேயே பின்னூட்டம் போடறாங்க!
அப்பு.. நீ சொன்னியே.. அந்த பத்திரிக்கை எடிட்டர் வேலை.. அதை எனக்கு கொடுத்துரு..எனக்கு பின்நவீனத்துவம் எல்லாம் வராது.. கவுஜ எழுதி பொழச்சுக்கறேன்..
“அய்யா உடம்பு வலிக்குதுங்களாய்யா”
“அது ஒண்ணும் இல்ல.. ரொம்ப நாளாச்சா பத்து எடத்துல ஓட்டு குத்தி..”
”டாக்டரை வேணா வரச்சொல்லட்டுங்களாய்யா..”
”டாக்டர் எதுக்கு அப்பு.. நமக்கு நம்ம கையேதான் உதவி.. ஒரு பத்து பின்னூட்டம் அனானியா போட்டா போதாதா?”
போற்றிப்பாடடி பொன்னே..
ப்ளாக்கர் கையடி மவுஸே..
எட்டுப் பேரில் எழுதும் பதிவன் இவன் தாண்டி..
வார்டுப்ரெஸ்ஸை சேர்த்து ட்விட்டர்குலம்தாண்டி.........................
சான்ஸே இல்லைங்க முரளி கண்ணன்.. ஜூப்பர்..
:-)))))) சிரிப்பை நிறுத்தவே முடியல. ஆமா என்ன தான் நடக்குது இங்கே?
செம.. செம.. செம...
கலக்கல்..
நிஜமாவே இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்குமோன்னு நான் நினைக்கிறேன். முதல் தரம் :)
பின்னவீனத்துவம்
அப்படினா என்ன தல
நன்றி சுரேஷ்
நன்றி ரமேஷ்ண்ணா
நன்றி சுரேஷ்
நன்றி சஞ்சய்காந்தி
நன்றி வெங்கிராஜா
நன்றி ஸ்டார்ஜான்
பித்தன், தீப்பெட்டி, சென்ஷி தங்களின்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வெட்டிப்பயல், நீங்க சொன்னதுதான்
ஆப்டா இருக்கு. நன்றி
பினாத்தலார்,
வாங்க வாங்க.
அருமையான எக்ஸ்டென்சன்.
கலக்கீட்டிங்க தலைவரே. சான்ஸே இல்லை. மிக்க நன்றி.
\\போற்றிப்பாடடி பொன்னே..
ப்ளாக்கர் கையடி மவுஸே..
எட்டுப் பேரில் எழுதும் பதிவன் இவன் தாண்டி..
வார்டுப்ரெஸ்ஸை சேர்த்து ட்விட்டர்குலம்தாண்டி\\
பின்னீட்டிங்க பினாத்தலார்
சோம்பேறி, தீபா, வண்ணத்துப் பூச்சியார், சின்ன அம்மினி, அத்திரி
தங்களின் வருகைகு நன்றி
அண்ணே கலக்கிட்டிங்க ;))
உங்க ஆசை போலேவே ஒட்டு குத்தியாச்சி ;))
சந்திப்பு அருமை - நடிகர் திலகமும் உலக நாயகனும் சந்தித்தது அருமை.
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவரின் நிலை என்ன ? விரைவினில் குணமடைய நல்வாழ்த்துகள்
அருமை அருமை...நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் பல உண்மைகள் இதில் ஒழிந்துள்ளது...வாழ்த்துக்கள்
கலக்கல்முரளி.. பையத்தேன் வருவான்..
Post a Comment