May 27, 2009

குட் புட் பேட் புட் கலந்துரையாடல்

இப்போதுள்ள தாத்தாக்கள் எல்லாம் பேரன்களிடம் இருந்து பிஸ்ஸா,பர்கர் என்று வாங்கி மொக்கிக் கொள்கிறார்கள். பீச்சில் வாக்கிங் போய் அருகம்புல் ஜூஸ் குடிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு ஆயாவிடம் சுண்டல் கடலை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாட்டின் இறந்தகாலச் சொத்து.அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை என்று கொள்ளுப்பாட்டிகளின் வலைப்பூவில் சுப்புணி பாட்டி என்னும் பதிவர் ஒரு இடுகையை வெளியிட பற்றியெறிகிறது பதிவுலகம்.

அதைப்படித்து அண்டார்டிகாவில் வசிக்கும் பதிவர் ஆர்கே, சென்னை வலைப்பதிவர்களுக்கு மெயில் அனுப்பி, ஒரு கருத்தரங்கு நடத்துங்களேன் என்று கேட்டுக்
கொண்டதையடுத்து, வலைப்பதிவர்கள் கான்பரன்ஸ் காலில் ஆலோசிக்கத் தொடங்குகிறார்கள்.


நர்சிம் : ஏதாச்சும் செய்யணும் லக்கி.


லக்கிலுக் : தென்மேற்க்குப் பதிப்பகத்தில ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கு. அங்க இடம் கேட்டா நமக்கு கொடுத்துருவாங்க.


கார்க்கி : சகா, என்னைக்கு வேணும்னாலும் நடத்துங்க. ஆனா ஞாயிறு வேண்டாம். ஆறு மணி டிரெயின்ல ஹைதை ரிட்டர்ன் போகும் போது வறுத்துக்கிட்டே போக, கஷ்டப்பட்டு யாரையாச்சும் கரெக்ட் பண்ணி வைக்கிறேன். ஆனா நீங்க நிகழ்ச்சியெல்லாம் ஞாயித்துக் கிழமை நடத்துறீங்க. முடிய மணி எட்டாயிடுது. வேற வழியில்லாம
காசினி ட்ராவல்ஸ்ல போக வேண்டியிருக்கு.

கேபிள் சங்கர் : ஏன் கார்க்கி, அதிலயும் டக்கர் பிகர்லாம் வருமே.


அப்துல்லா : அதெல்லாம் அவன்கிட்ட பேசாதில்லண்ணே.


நர்சிம் : விஷயத்துக்கு வாங்கப்பா. கருத்தரங்குன்னா ஒரு எக்ஸ்பர்ட் அதப்பத்தி பேசுனா நல்லாயிருக்கும்.


முரளிகண்னன் : மாயாபஜார்ல ரங்காராவ் கல்யாண சமையல் சாதம்னு சாப்பாட்டப் பத்தி பாடியிருக்காரு. அவரை கூப்பிடுவோம்.


அப்துல்லா : அண்ணே, கருத்தரங்கு சொர்க்கத்தில இல்லை.


முரளிகண்ணன் : அப்புறம் எஜமான்ல,பிஸ்தாவுல


ஆதி : இவருக்குல்லாம் யாருய்யா கால் போட்டது?


கேபிள் சங்கர் : என்க்குத் தெரிஞ்சு சரவண பவன்ல சாப்பாடு சுத்தமா, ஆரோக்கியமா இருக்கும்.

அதிஷா : ஆமாமா உடனே அண்ணாச்சிய கூப்பிடுங்க. மனசுக்குள் : அப்பாடா எப்படியாச்சும் அவர்கிட்ட பேசி நாலஞ்சு குட்டிக்கதைக்கு மேட்டர் தேத்திரணும்.


லக்கிலுக் : நீ என்ன நினைக்கிறய்னு எனக்குத் தெரியும் அதிஷா. அவரே இப்ப களி திண்ணுக்கிட்டு இருக்காரு.


புருனோ : அப்பல்லோ சீப் டயட்டீசியன் எனக்குத் தெரிஞ்சவருதான். அவரை கூப்பிடுவோம். அவரும் ஒரு வலைப்பதிவர்தான். நிச்சயம் வருவார்.

நர்சிம் : பதிவர்களைத் தாண்டி பொது மக்களையும் நாம சுண்டி இழுக்கணும். அப்பதான் சமுதாயத்துக்கு நல்லது. மக்களை எப்படி அதிகம் வரவைக்கிறது?


முரளிகண்ணன் : பொன்னுச்சாமி, அஞ்சப்பர் கடையில இருந்து புரோட்டின் டயட் ஏற்பாடு பண்ணலாம். நல்ல அட்ராக்‌ஷன் இருக்கும்.


அப்துல்லா : ஏண்ணே மிச்சம் விழுந்தா எடுத்துக்கிட்டு போயிரலாம்னு பார்க்குறீங்களா?


லக்கிலுக் : ஸ்னாக்ஸ்,காபி எல்லாம் பதிப்பகத்து தலையில கட்டீரலாம். கூட்டம் சேர்க்கிறதுக்கு கவர்ச்சி இருந்தா நல்லயிருக்கும்.


முரளிகண்ணன் : ஸ்ரேயா,நயன் எல்லாம் நல்லா ஸ்லிம்மா இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு டிப்ஸ் கொடுக்கச் சொன்னா.

அப்துல்லா : நல்ல வேளை இந்த ஆளு டீ ஆர் ராஜகுமாரி, சில்க்ன்னு ஆரம்பிக்கலை.


அதிஷா : பாஸ், இவங்கெல்லாம் பப்ளிக் பங்சன்னா ரொம்ப கிளாமரா வருவாங்க. ஏதாச்சும் கிழம் இவங்களப் பார்த்து மூச்சு விட மறந்துட்டா என்ன பண்றது?

கேபிள் சங்கர் : பதிப்பகம் பக்கத்திலதான கமல் வீடு. அவர கூப்பிட்டா?

நர்சிம் : அப்ப ஒரு ட்ரான்ஸ்லேட்டரையும் நாம ரெடி பண்ணனும்.


லக்கிலுக் : 85 வயசிலயும், டெல்லிக்கும் சென்னைக்கும் சண்டிங் அடிக்கிறவரு எங்க தலைவர். அவரக் கூப்பிட்டா நல்லாயிருக்கும்.

அதிஷா : ஏன் ஜெயலலிதா கூடத்தான் ஸ்ட்ராங்கா இருக்காங்க.


நர்சிம் : பதிவுலக அரசியலே தாங்க முடியல. இதில நிஜ அரசியல் வேறயா?


ஆதி : பைத்தியக்காரன், ஜியோவ்ராம் மாதிரி ஆளுங்களுக்கு கால் போடுங்கப்பா. அவங்க ஏதாச்சும் உருப்படியா சொல்லுவாங்க.


லைனில் வருகிறார் பைத்தியக்காரன். விவரம் சொல்லப்படுகிறது.


பைத்தியக்காரன் : இதை சாப்பிடு, அதை சாப்பிடு என்று சொல்றது அதிகாரத்தின் உரையாடல். அதுவும் சாகப் போற வயசில இருக்குறவங்கள அதை சாப்பிடு,
இதை சாப்பிடாதேன்னு சொல்றது உச்சபட்ச வன்முறை. இதற்க்கு எதிராத்தான் என்குரல் ஒலிக்கும். என்னால் முடியாவிடடாலும் ஜ்யோவ்ராம் துணையுடன்
இந்த கட்டமைப்பை தகர்ப்பேன்.

இப்போ நான் சொல்லும் விஷ்யம் கூட உங்கள் மீதான என் அதிகாரத்தின் உரையாடல்தான். அதை எதிர்க்க உங்களுக்கும் உரிமை உண்டு.


பதிவர்கள் : நல்லா புரிஞ்சிடுச்சு சார். ஆட்டையைக் கலைச்சிடுறோம்.

51 comments:

மதன் சிந்தாமணி said...

பதிவுகள் super!முரளி என்ன, எப்போதும் சாப்பாடு சாப்பாடுன்னுட்டு
வீட்ல ஒன்னும் கிடைக்கிரதில்லயா

நையாண்டி நைனா said...

"இடியாப்ப" சிக்கலா இருக்கும் பதிவுலகதையும் அதன் செயல்பாடுகளையும் "புட்டு புட்டு" வாய்த்த முரளிக்கு தர்ம அடி கொடுத்து அவரது உடலை "இட்டிலி"யாக வீங்க வைத்து அவரை "சட்னி" ஆக்க அனைத்து பதிவர்களும் அணிதிரண்டு வாரீர்..

யே தில் மாங்கே "மோர்".

முரளிகண்ணன் said...

நன்றி மதன் சிந்தாமணி.


நையாண்டி நைனா வருகைக்கு நன்றி

Athisha said...

இதுதான் உங்க முதல் காமெடி பதிவுனு நினைக்கிறேன்.. கலக்கல்ண்ணா

கார்க்கிபவா said...

ங்கொய்யால... டக்கர் பீஸு..

நடுவாப்புல நம்ம கஷ்டத்தையும் சொல்லிட்டிங்க.. ஞாபகத்துல வச்சுக்கொங்கப்பா....

சகா, பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க..

முரளிகண்ணன் said...

நன்றி அதிஷா, கார்க்கி

சென்ஷி said...

:)))

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

முரளி,

சிரிச்சு, சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு!

தராசு said...

இப்படி எழுதுவீங்கன்னா நீங்கதான் நிரந்தர நட்சத்திர பதிவர்.

அடுத்தவங்கள கலாய்க்கறதுல ஒரு அலாதி சந்தோஷம் தான் போங்க.

Mahesh said...

முரளி.... நீங்கதா எழுதுனீங்களா? சூப்பர்... உங்களோட இன்னொரு முகம் கலக்கல்....

ஆமா....என்னது ஃப்ரூட் சலாட், புரோட்டின் டயட்னு எதோ டயடீஷியன் பதிவு மாதிரி இருக்கு...

நர்சிம் said...

ரசித்துப் படித்தேன் முரளி..அதிகாரத்தின் உரையாடல் கலக்கல்..

அது ஒரு கனாக் காலம் said...

யார்க்கர் , ஹால்ப் ஸ்பின் , லெக் ஸ்பின், ஹூக்லி எல்லாம் சேர்ந்த கலவையப்பா இது, ... கலவிணா மாதிரி சுகம்

Cable சங்கர் said...

முரளி.. காமெடியிலும் கலக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.. அதிலும் உங்களுக்கு எல்லா கேரக்டர்களின் பேச்சுக்கள் அறிந்தவர் ஆதாலால் மிக இயல்பாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

//அடுத்தவங்கள கலாய்க்கறதுல ஒரு அலாதி சந்தோஷம் தான் போங்க.//

உங்களவிடவா தராசண்ணே.. எங்க டவுசர் கழண்டது எங்களுக்குதானே தெரியும்.

TBCD said...

இப்பத் தான் ஒருத்தர்.சிரிச்சி நாளாச்சி என்றார்..

அதுக்குள்ளே ஒரு சிரிப்பு மருந்தா..

கலக்கல்..!!

முரளிகண்ணன் said...

சென்ஷி,தராசு, பாரி அரசு வருகைக்கும் ரசிப்புகும் நன்றி.

மகேஷ் எழுதினது நாந்தான். இப்போ கொஞ்சம் டயட் கண்ட்ரோல்ல இருக்கேன். அதான் எழுத்திலயும் வந்துடுதுன்னு நினைக்கிறேன்.

முரளிகண்ணன் said...

நர்சிம், அது ஒரு கனாக்காலம், கேபிள் சங்கர், டி பி சி டி தங்கள் வருகைக்கு நன்றி

குடந்தை அன்புமணி said...

கலக்கிட்டீங்க முரளி அண்ணே... அதற்காக ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை கார்க்கி பேச்சை கேட்டு வேறு கிழமைக்கு மாத்திடாதீங்க... தாம்பரத்தில இருந்து நானே வந்துட்டு போறேன்... அவருக்கென்ன...

Vidhya Chandrasekaran said...

ROTFL வகை:)

முரளிகண்ணன் said...

வாங்க குடந்தை அன்புமணி. அடுத்த மீட்டிங் ஞாயிறுதான். அவசியம் வந்துடுங்க.


நன்றி வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

சரவணகுமரன் said...

முரளிகண்ணன், பட்டாசு...

அதுவும் உங்களை நீங்களே, சூப்பர்...

முரளிகண்ணன் said...

அமிர்தவர்ஷினி அம்மா வருகைக்கு நன்றி

நன்றி சரவண குமரன் .

அக்னி பார்வை said...

சான்ஸே இல்ல கலக்குங்க முரளி

பரிசல்காரன் said...

முரளி..

கை குடுங்க! மாஸ் பீஸு!

(தலைப்பு தமிழ்ல இருந்ததால FOODங்கறத PUTன்னு படிச்சு பயந்துட்டேன்...)

Suresh said...

ஹா ஹா சிரிப்பும் மனம் புண்படாமல் அழகாய் ரசிக்கும் படி இருந்தது நண்பா

selventhiran said...

எக்ஸலண்ட்

எம்.எம்.அப்துல்லா said...

தீபாவளி இன்னைக்கே வந்த மாதிரி இருந்துச்சு

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்..!!

thamizhparavai said...

ROTFL....

புருனோ Bruno said...

// பைத்தியக்காரன் : இதை சாப்பிடு, அதை சாப்பிடு என்று சொல்றது அதிகாரத்தின் உரையாடல். அதுவும் சாகப் போற வயசில இருக்குறவங்கள அதை சாப்பிடு,
இதை சாப்பிடாதேன்னு சொல்றது உச்சபட்ச வன்முறை. இதற்க்கு எதிராத்தான் என்குரல் ஒலிக்கும். என்னால் முடியாவிடடாலும் ஜ்யோவ்ராம் துணையுடன்
இந்த கட்டமைப்பை தகர்ப்பேன்.
//

:) :) :) :)

வெட்டிப்பயல் said...

கலக்கல்...

//
அதிஷா : பாஸ், இவங்கெல்லாம் பப்ளிக் பங்சன்னா ரொம்ப கிளாமரா வருவாங்க. ஏதாச்சும் கிழம் இவங்களப் பார்த்து மூச்சு விட மறந்துட்டா என்ன பண்றது?
//

இது டாப்பு :)

குசும்பன் said...

//கேபிள் சங்கர் : ஏன் கார்க்கி, அதிலயும் டக்கர் பிகர்லாம் வருமே.


அப்துல்லா : அதெல்லாம் அவன்கிட்ட பேசாதில்லண்ணே.//

இதுவும் பைத்தியகாரனின் பேச்சும் கலக்கலின் உச்சகட்டம்!

அத்திரி said...

தல் கலக்கல்............இந்த கார்க்கி பயல இப்படி வாரிட்டிங்களே..........

Venkatesh Kumaravel said...

கார்க்கி இப்புடி போடுவார்னு எதிர்பார்த்தேன்... நீங்க! நல்லா இருக்குண்ணே!

மணிநரேன் said...

கலக்கல் முரளி...

தினேஷ் said...

//ஏதாச்சும் செய்யணும்//
போட்டாச்சுல பின்னூட்டத்த ...

Thamira said...

எதிர்பார்க்கவே இல்லை, பின்னிட்டீங்க முரளி.. இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு சீரியஸான விஷயத்தை மிக முதலில் கொஞ்சம் தயக்கம் தந்தது. ஆனால் கொஞ்சம் கூட அந்த எண்ணம் வராமல் கலக்கிட்டீங்க.. அதிஷா, பைத்தியக்காரன் கமெண்ட்ஸ் கலக்கல்.!

கோபிநாத் said...

அட்டகாசம் ;)

MSK / Saravana said...

நீங்க இப்படியும் எழுதுவீங்களா??
ரசித்து சிரித்தேன்..

கூடவே நட்சத்திரம் வாழ்த்துக்கள்.. :)

ஜெகதீசன் said...

:)))

கே.என்.சிவராமன் said...

முரளி,

நேத்து லீவு. இப்பத்தான் பதிவ படிச்சேன். கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சுகிட்டு இருக்கேன்... அதுவும் பைத்தியக்காரனை வச்சு எழுதினது இருக்கே... அது டாப்பு... தொடர்ந்து இப்படி சிரிக்க வைங்க...

அளவிலா சிரிப்புடன்
பைத்தியக்காரன்

தமிழன்-கறுப்பி... said...

ரணகளம்..

:)))))

மங்களூர் சிவா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா said...

டாக்டர் ருத்ரனும் , ஷாலினியும் படிச்சா வெறுத்துடுவாங்க
:))))))))))))

மங்களூர் சிவா said...

// பைத்தியக்காரன் : இதை சாப்பிடு, அதை சாப்பிடு என்று சொல்றது அதிகாரத்தின் உரையாடல். அதுவும் சாகப் போற வயசில இருக்குறவங்கள அதை சாப்பிடு,
இதை சாப்பிடாதேன்னு சொல்றது உச்சபட்ச வன்முறை. இதற்க்கு எதிராத்தான் என்குரல் ஒலிக்கும். என்னால் முடியாவிடடாலும் ஜ்யோவ்ராம் துணையுடன்
இந்த கட்டமைப்பை தகர்ப்பேன்.
//

ROTFL
:))))

மங்களூர் சிவா said...

//கேபிள் சங்கர் : ஏன் கார்க்கி, அதிலயும் டக்கர் பிகர்லாம் வருமே.


அப்துல்லா : அதெல்லாம் அவன்கிட்ட பேசாதில்லண்ணே.//

பாவம்யா கார்க்கி விட்டுடுங்க
:))))))))

"உழவன்" "Uzhavan" said...

நானும் குட் டச் பேட் டச் மாதிரி ஏதோ கலந்திரையாடல்னு நம்பி வந்தேன்.. நான் மான் கராத்தேல கிங்குணே. சகா வாங்கிக்குறேன் :-))))

லக்கிலுக் said...

வாவ்.. கலக்கல்!

இப்போதான் ஒவ்வொரு ஸ்டார் பதிவா படிச்சிக்கிட்டிருக்கேன் :-)

Deepa said...

சுப்புணிப் பாட்டி ஆட்டோ அனுப்புது... எஸ்கேப் ஆயிக்கோங்க.

Deepa said...

:-)))))))