May 08, 2009

துப்பு

மதியத்திலிருந்து இது பத்தாவது போன். ரெண்டு நாளாச்சு இன்னுமா முடியல என்று மேலதிகாரி காய்ச்சுகிறார். அவரும் என்ன செய்வார்? பாவம். போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியைப் பற்றிய விபரம் அது. அவரை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் மொத்த கும்பலையும் வளைத்துவிடலாம். வெயிட் வெயிட் நான் யாரென்று சொல்லவில்லையே?. நான் ராஜி. நார்காட்டிக்ஸ் பீரோவில் அசிஸ்டெண்ட் கமிசனர்.

என் டீகோடிங் டீமைப் பார்த்தேன். அவர்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனபாடில்லை. அனைவர் கண்களிலும் சோர்வு. ஓக்கே கைய்ஸ், வீ வில் டேக் அ திரி அவர்ஸ் பிரேக். ஆஃப்டர் தட் வி வில் மீட் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.

கணவர் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். கல்லூரி பேராசிரியர். உள் அறையை எட்டிப் பார்த்தேன். அருமைப் புத்திரன் கம்ப்யூட்டரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ஏதோ பிளாக் எழுதுகிறேன் பேர்வழி என்று கடந்த மூன்று மாதமாக அதையே கட்டிக் கொண்டு அலைகிறான். தூக்கத்தில் பின்னூட்டம், இடுகை என புரியாத மொழியில் புலம்புகிறான்.

நான் வந்ததைக் கவனித்தவன், அம்மா ஒரு டீ என்று ஆர்டர் போட்டான். வெளியிலே அதிகாரி என்றாலும் வீட்டிலே சமையல்காரிதானே என்று புலம்பியபடியே போட்டு எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றேன்.

அவன் கீ போர்டில் ஏதோ ஸ்டிக்கர் ஒட்டியிருக்க என்ன எனக் கேட்டேன்?. அவன் அதற்க்கு அம்மா இது தமிழ் 99 ஸ்டிக்கர். எந்த ஆங்கில எழுத்துக்கு எந்த தமிழ் எழுத்து என்பது என தெரிவதற்க்காக என்றான். பொறி தட்டியது. வேகமாக ஓடி கைப்பையில் இருந்த அந்த காகிதத்தை எடுத்துக் கொடுத்து டைப் அடிக்கச் சொன்னேன்.

திரையில் பார்த்தால் எல்லாம் பெயர்களாய் வந்தன. இடையிடையே ரைனா, தோனி என கேள்விப் பட்ட பெயர்களும் இருந்தன. எங்கள் பரபரப்பை பார்த்தபடியே அருகே வந்தார் என் கணவர்.

மானிட்டரைப் பார்த்தவர், ”என்னடா ஏதோ அம்மாவும் மகனும் சீரியஸ்சா டிஸ்கஸன் பண்ணுறேங்கிளேன்னு வந்தா ஐ பி எல் பிளேயர்ஸ் பெயரை டைப் பண்ணி விளையாடிக்கிட்டு இருக்கீங்க?. என்றார்.

உடனே சுதாரித்த நான் கணவரிடம் இவங்க எல்லாம் ஐ பி எல் பிளேயரா? இது முக்கியமான தடயம், இதை டீகோட் பண்ணிதான் ஒருத்தனை பிடிக்கணும் என்று விளக்கினேன்.

சற்று நேரம் அதையே உற்றுப்பார்த்தவர், இவங்க எல்லாருமே வேற வேற டீம். குறிப்பிட்டு சொல்ற ஒற்றுமையும் இல்லை. பனியன் நம்பர் பார்த்தாக் கூட ரைனா 3, தோனி 7 என்றார்.

ஆஹா, அப்படியே எல்லார் நம்பரையும் பார்த்துச் சொல்லுங்க பார்ப்போம் என்றேன். கிடைத்தது ஒரு சௌகார் பேட்டை லேண்ட்லைன் நம்பர்.

உடனே மேலதிகாரியிடம் பேசினேன். சார் கண்டுபிடிச்சாச்சு. ஆளு சௌகார்பேட்டை. முக்கியமா அவன் இருக்குற இடத்துக்குப் பக்கத்துல ஒரு பிரவுஸிங் செண்டர் இருக்கும்.

44 comments:

Ramesh Ramasamy said...

உங்கள் ஒரு பக்க கதை சூப்பர் ஸ்பீடு!

நன்னாருக்கு :)

அறிவிலி said...

வித்தியாசமான கற்பனை. சூப்பர்.

Thamiz Priyan said...

கலக்கல்ண்ணா!

மாதவராஜ் said...

ம்....
இப்படியும் எழுதுவீங்களா....

சரவணகுமரன் said...

அட...

கடைக்குட்டி said...

நீரோடையா இது ??????

துப்பு -------

டாப்பு :-)

Vidhya Chandrasekaran said...

நல்லாருந்தது.

கார்த்திகைப் பாண்டியன் said...

சூப்பர் முரளி.. வித்தயாசமான சிந்தனை.. :-)

Suresh said...

சும்மா நச் கதை வேகம் ;) அருமை

anujanya said...

அடுத்த விகடன் ஒரு பக்கக் கதை பிரபலம் தயாரா :)

நல்லா இருக்கு முரளி.

அனுஜன்யா

Cable சங்கர் said...

நல்லாருக்கு தலைவரே..

நாடோடி இலக்கியன் said...

அருமை, வித்யாசமான நாட் .

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
Vadielan R said...

செம கதை நன்றாக இருந்தது குறையவில்லை கதையின் வேகம்

சிவக்குமரன் said...

கடைசி வரி வரைக்கும் வேகம் குறையல. ரொம்ப நல்லாயிருக்கு.

மாசற்ற கொடி said...

ரொம்ப நல்லா இருக்கு !

நரசிம் மாதிரி உங்களின் எழுத்துகளும் காட்சியை கண் முன்னே விரிக்கிறது

அன்புடன்
மாசற்ற கொடி

Raju said...

நல்லாருக்கு...!

Anonymous said...

நல்லா இருக்கு.. எங்களின்ட இடத்தில (சிலோன்) சிறுகதைகளில் கடைசியாக " (யாவும் கற்பனை) " என்டு போடுவினம். அப்படி போட்டால் நல்லா இருக்கும். சில கதைகளை வாசிக்கும் போது, அது கதை என்டாலும் ஏதோ அனுபவத்தை எழுதின மாதிரி ஒரு குழப்பம். புனைவு என்டு டாக் செய்து இருக்கிறியள் தான். ஏதோ சொல்லோனும் என்டு பட்டது.. சொல்லுறன்..

நையாண்டி நைனா said...

"சுபா புஞ்சா அறிமுகமான படம் +
சொர்ணக்கா புகழ் பெற்ற படம் "

இதை டீ-கோடு பண்ணி பாரு நண்பா.

முரளிகண்ணன் said...

ரமேஷ் ராமசாமி,அறிவிலி,தமிழ்ப்ரியன்,மாதவராஜ், சரவணா குமரன் தங்கள் வருகைக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

கடைக்குட்டி, வித்யா,கார்த்திகைப் பாண்டியன், சுரேஷ், அனுஜன்யா

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றிகள்

முரளிகண்ணன் said...

கேபிள் சங்கர், நாடோடி இலக்கியன், வடிவேலன், சிவக்குமரன், மாசற்ற கொடி வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி

முரளிகண்ணன் said...

வாங்க டக்ளஸ்.

ட்ரையம்ப், இனி எழுதும்போது யாவையும் கற்பனை என்று சேர்க்கப் பார்க்கிறேன். வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி

நையாண்டி நைனா. மச்சி தூள்னு சொல்றீங்க.

உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் அர்ஜூனின் முதல் படம்

புருனோ Bruno said...

// முக்கியமா அவன் இருக்குற இடத்துக்குப் பக்கத்துல ஒரு பிரவுஸிங் செண்டர் இருக்கும்.//

நக்கலா :) :)

ஆயில்யன் said...

வாவ் ! கலக்கலுங்க டக்டக்ன்னு திரில்லிங்க் கிளப்பிடுச்சு !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல கதை சூப்பர்.., அந்த பிரவுசிங் செண்டர் மேட்டர்தான் புரியல...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

யாராவது சௌகார்பேட்டை பதிவர் இருக்காங்களா..,

Unknown said...

அண்ணே நல்லாருக்கு.நம்ம டெண்ட்ட
தூக்கிடுவிங்க போலிருக்கு.

Mahesh said...

அட்டகாசம் முரளி.... ஆதியோட "மிக்ஸ்ட் ஊறுகாய்"ல பச்சி சொன்ன லிஸ்ட்ல நீங்களும் இருப்பீங்களே !!

சின்னப் பையன் said...

அட்றா சக்கை... அட்றா சக்கை..

கோபிநாத் said...

அண்ணே கதையில கூட பதிவர்கள் எப்படி எல்லாம் உதவி பண்றாங்க..!! ;)))

கலக்கல் கதை அண்ணாச்சி ;)

தீப்பெட்டி said...

நல்லாயிருந்தது...

தராசு said...

அருமை தலைவரே,

சரியான திருப்பங்களை இணைத்து திருப்பு திருப்புன்னு திருப்பீட்டீங்க.

புருனோ Bruno said...

//யாராவது சௌகார்பேட்டை பதிவர் இருக்காங்களா..//

சௌகார்பேட்டை பக்கத்தில் இருப்பது நான் தான்

Venkatesh Kumaravel said...

நையாண்டி நைனா : செம கமெண்ட்டு! வழிமொழிகிறேன்!
ஆனா அது என்ன அது பிரௌசிங் செண்டர்?

முரளிகண்ணன் said...

புருனோ. ஆயில்யன், சுரேஷ், ரவிஷங்கர், மகேஷ், சின்னப் பையன், கோபிநாத்,தீப்பெட்டி, தராசு தங்களின் வருகைக்கும் பின்னூடத்திற்க்கும் நன்றி.

வெங்கி ராஜா,

பிரவுசிங் செண்டர்களில் தமிழ் 99 பற்றிய விளம்பரங்கள் சமீபத்தில் செய்யப்பட்டது.

கடத்தல் செய்பவர்களுக்கு ஐடியா தோன்ற ஏதாவது தூண்டுகோள் வேண்டுமல்லவா?

அதனால்தான் பிரவுசிங் செண்டர்

நசரேயன் said...

சரி வேகம்..கலக்கல்

முரளிகண்ணன் said...

நன்றி நசரேயன்

கார்க்கிபவா said...

உங்களுக்கு எப்போ நாங்க வாழ்த்து சொல்லனும் சகா? அடுத்த வாரமா?

Anonymous said...

நல்லா இருக்கு முரளி.

முரளிகண்ணன் said...

கார்க்கி,

அதற்க்கு இன்னும் சற்று நாளாகுமென நினைக்கிறேன்.


வடகரை வேலன் சார், நன்றி

ஷண்முகப்ரியன் said...

Interesting,MURALIKANNAN.

முரளிகண்ணன் said...

நன்றி ஷண்முகப்பிரியன் சார்

கிரி said...

நடத்துங்க நடத்துங்க