May 27, 2009

எனக்கு ஏன்?

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஆனாலே, இரவு வைபவத்துக்கு எங்கள் ரூம் தயாராகத் தொடங்கிவிடும். பாரிஸ் கார்னருக்குப் போய் ஆப்பிள், பப்பாளி, கொய்யா,திராட்சை, தர்பூசணி என கலந்து கட்டி கிலோ கணக்கில் வாங்கி வருவோம். பொறுமையாக அதைக்கழுவி பின் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு அதைச் சுற்றி வட்ட வடிவில் அமர்ந்து கொள்வோம். அதுமட்டுமே இரவு உணவு. ஆளுக்கொரு பழத்துண்டை கையில் எடுத்து கொரித்துக்கொண்டே பிக்பாஸ், எட்டு வழிச்சாலை, விராட் கோலி என சம்பிரதாயமாக ஆரம்பிப்போம்.

சரியாக பதினைந்தாவது நிமிடத்தில் அரட்டை அலுவலக மற்றும் தெருப் பெண்களிடத்தில் வந்து நிற்கும். அப்போது அதுவரை சப்பென்றிருந்த ஹைப்ரிட் பப்பாளி கூட கொல்லிமலைத்தேனில் ஊறவைக்கப்பட்ட பண்ருட்டி பலா போல இனிக்கத் தொடங்கும்.

இந்த பழக்கத்தை எங்கள் ரூமில் ஆரம்பித்து வைத்தவன் ரகு. ரசனைக்காரன். முற்போக்குவாதி. அவன் பாணியில் சொன்னால்

“மச்சான், இது ராஜ போதைடா. நாலு கிலோ பழத்தைச் சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருக்கும் போது யாராச்சும் அடிச்சாக்கூட சிரிக்கத் தாண்டா தோணும். மதுரைப் பக்கம் பாரு மதியம் மட்டன் குழம்பு, ராத்திருக்கி புரோட்டா சால்னான்னு காரமாத் தின்னு என்னேரமும் சுர்ருன்னே இருப்பாங்க. ஆ வூன்னா அரிவாளத் தூக்குவாங்க. பழம் சாத்வீகம்டா”.

ரகுவிற்கு நாலு மாதத்திற்கு முன் திருமணம் நடந்து இப்போது ஆறு கிலோமீட்டர் தள்ளி இருக்கிறான். இந்தவார சண்டே ப்ருட் டின்னரின் கடைசி ரவுண்டில் இருந்தபோது, கதவைத் தட்டி உள்ளே வந்தான்.

என்னடா இன்னேரத்தில என்று ஆரம்பித்தவுடன், இந்த வாரமும் என் மாமனார்,மாமியார் வந்து தொலைஞ்சுட்டாங்கடா என்று புலம்பினான்.

ஆமாம். ரகுவின் மாமனார் வீடு செங்கல்பட்டு. ஞாயிற்றுக்கிழமையானால் காலையில் மின் தொடர் வண்டியைப் பிடித்து மாமனார் மாமியார் இருவர்ம் ரகுவின் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ரகுவோ ஞாயிறை அனுபவிக்கத் துடிப்பவன்.


“ஆறு நாளும் கஷ்டப்படுறோம். ஞாயிற்றுக்கிழமையாச்சும் காலைல பத்து பததரை வரைக்கும் தூங்கணும். அப்புறம் மெதுவா எந்தரிச்சு பொறுமையா எல்லா வேலையையும் செஞ்சிட்டு, லைட்டா சாப்பிட்டுட்டு, கதவு ஜன்னல எல்லாம் மூடிட்டு ஹால்ல பெட்டை போடணும். நெருக்கமா படுத்துக்கிட்டே சேனல் சேனலா மாத்தி டிவி பார்க்கணும். விளம்பர இடைவேளை மாதிரி அப்பப்போ கொஞ்சிக்கணும்.”

இதெல்லாம் ஒரு பிள்ளை பெறக்கிறவரைக்கும் தான். அப்புறம் கனவுதான். இதை அனுபவிக்க விடாம ஞாயித்துக் கிழமையானா பெட்டியத்தூக்கிட்டு வந்துடுறாங்க. இவ என்னடான்னா, எங்க அப்பா வந்திருக்கிறாரு, மரியாதையில்லாம தூங்குறீங்கன்னு ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி விடுறாடா. போதாக்குறைக்கு இதெல்லாம் எங்கப்பாவுக்கு வாங்கிட்டு வாங்கன்னு லிஸ்ட் வேற என்று புலம்பிக் கொண்டேயிருப்பான்.

இந்தமுறை புதன்கிழமை ஆப்பர்சூனிட்டி பேப்பரோடு வந்து, இதெல்லாம் அப்ளை பண்ணீட்டிங்களா என்று வேறு கடுப்பேற்றினாராம்.

டேய், எங்க பெரியக்கா மாப்பிள்ளைலாம் வீட்டுக்கு வரப்போறார்னு தகவல் வந்த உடனேயே ஒட்டடை அடிக்க ஆரம்பிச்சுடுவோம், போர்வை, தலகாணி உறையெல்லாம் துவைச்சிருவோம். அவர் வந்த உடனே ஒரு அண்ணன் அயிரை மீன் வாங்க ஆத்துக்கு ஓடுவான், இன்னோரு அண்ணன் விரால் மீன் வாங்க கண்மாய்க்கு ஓடுவான். அப்படியா இப்பல்லாம் எதிர்பார்க்குறோம்? சம உரிமை கூட கிடைக்க மாட்டேங்குதே என்று தன் மராத்தான் புலம்பலை தொடர்ந்தான்.

சரி விடுடா, நீதான் ஆணும் பெண்ணும் சமம்னு சொல்ற முற்போக்குவாதியாச்சேடா. நீ ஆசைப்பட்ட சமத்துவம் இப்பவாவது நடக்க ஆரம்பிச்சிருக்கேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதானே? என்று கேட்டேன்.

அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று.

46 comments:

ஆ.ஞானசேகரன் said...

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று.//

அது சரி

இராகவன் நைஜிரியா said...

// சரியாக பதினைந்தாவது நிமிடத்தில் அரட்டை அலுவலக மற்றும் தெருப் பெண்களிடத்தில் வந்து நிற்க்கும். //

வரவேண்டிய இடத்துக்குத்தான் வந்து இருக்கு.

வெட்டிப்பயல் said...

//அப்போது அதுவரை சப்பென்றிருந்த ஹைப்ரிட் பப்பாளி கூட கொல்லிமலைத்தேனில் ஊறவைக்கப்பட்ட பண்ருட்டி பலா போல இனிக்கத் தொடங்கும்.
//

கடலூர்ல படிக்கும் போது வாரா வாரம் வீட்ல வருவாங்க. அப்ப சீசன் இருந்தா நிச்சயம் பலாப்பழம் இருக்கும். அதுக்கு தேனே தேவையில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அந்த சுவை இருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//ஆறு நாளும் கஷ்டப்படுறோம். ஞாயிற்றுக்கிழமையாச்சும் காலைல பத்து பததரை வரைக்கும் தூங்கணும். அப்புறம் மெதுவா எந்தரிச்சு பொறுமையா எல்லா வேலையையும் செஞ்சிட்டு, லைட்டா சாப்பிட்டுட்டு, கதவு ஜன்னல எல்லாம் மூடிட்டு ஹால்ல பெட்டை போடணும். நெருக்கமா படுத்துக்கிட்டே சேனல் சேனலா மாத்தி டிவி பார்க்கணும். விளம்பர இடைவேளை மாதிரி அப்பப்போ கொஞ்சிக்கணும்.”//

நிஜமாலுமே ரசனையான ஆள் தான் :)

வெட்டிப்பயல் said...
This comment has been removed by the author.
வெட்டிப்பயல் said...

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று.//

இது எதார்த்தம் :)

தினேஷ் said...

//மதுரைப் பக்கம் பாரு மதியம் மட்டன் குழம்பு, ராத்திருக்கி புரோட்டா சால்னான்னு காரமாத் தின்னு என்னேரமும் சுர்ருன்னே இருப்பாங்க. ஆ வூன்னா அரிவாளத் தூக்குவாங்க//
பயபுள்ள மக்கா இப்படி சொல்லி சொல்லியே இன்னும் எங்களை எல்லாம் அருவாள் தூக்குறவங்கள வச்சிருக்கீங்களே ...

thamizhparavai said...

//ஞாயிற்றுக்கிழமையாச்சும் காலைல பத்து பததரை வரைக்கும் தூங்கணும். அப்புறம் மெதுவா எந்தரிச்சு பொறுமையா எல்லா வேலையையும் செஞ்சிட்டு, லைட்டா சாப்பிட்டுட்டு, கதவு ஜன்னல எல்லாம் மூடிட்டு ஹால்ல பெட்டை போடணும். நெருக்கமா படுத்துக்கிட்டே சேனல் சேனலா மாத்தி டிவி பார்க்கணும். விளம்பர இடைவேளை மாதிரி அப்பப்போ கொஞ்சிக்கணும்.”//
ஆஹா... என்னே ரசனை...

நாகு (Nagu) said...

எங்க ஊர் பலான்னா பலாதான். இப்படி தேன்ல எல்லாம் போட்டு அதன் ருசிய கெடுக்க மாட்டோம். :-)


கடைசி வரி 'நச்'.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எங்க அப்பா வந்திருக்கிறாரு, மரியாதையில்லாம தூங்குறீங்கன்னு ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி விடுறாடா.//


ஒரு ஆம்பிளையோட கஷ்டம் இன்னொரு ஆம்பிளைக்குத்தான் தெரியும். என்ன ஒரு யதார்த்தம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அப்படியா இப்பல்லாம் எதிர்பார்க்குறோம்? சம உரிமை கூட கிடைக்க மாட்டேங்குதே என்று தன் மராத்தான் புலம்பலை தொடர்ந்தான்.//



வேறென்ன செய்ய முடியும்..

வாழ்க மு.க. அவர்கள்..,

வளர்க உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் அவர்தம் பணி

Mahesh said...

அதானே... ஏன்??

முரளிகண்ணன் said...

வாங்க ஞானசேகரன். வருகைக்கு நன்றி.

ராகவன், நைஜீரிய பதிவர் சந்திப்பு எல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு?

முரளிகண்ணன் said...

வாங்க வெட்டிப்பயல்,

பண்ருட்டி பக்க ஆளுங்க நிறைய இருக்காங்க போல.இன்னொருத்தரும் தேனைக் கலந்து சுவையை குறைக்க மாட்டோம்னு வந்து சொல்லியிருக்காரு.

வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.

முரளிகண்ணன் said...

\\பயபுள்ள மக்கா இப்படி சொல்லி சொல்லியே இன்னும் எங்களை எல்லாம் அருவாள் தூக்குறவங்கள வச்சிருக்கீங்களே \\

சூரியண்ணே, நாமல்லாம் ஒரே ஊர்க்காரவுங்க. கண்டுக்காதீங்க.

வாங்க தமிழ்பறவை. கருத்துக்கு நன்றி

முரளிகண்ணன் said...

ஆஹா, நாகு அவர்களே, நீங்க பலாச்சுளையை புரபைல்லயே வச்சுருக்கீங்க.

வாங்க சுரேஷ். தொடர் ஆதரவுக்கு நன்றி.

மகேஷ், அதான் ஏன்?

Jackiesekar said...

அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று//

முரளி இதுதான் எழுத்தாளர் சுஜாதா ஸ்டைல்


வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

//. அப்போது அதுவரை சப்பென்றிருந்த ஹைப்ரிட் பப்பாளி கூட கொல்லிமலைத்தேனில் ஊறவைக்கப்பட்ட பண்ருட்டி பலா போல இனிக்கத் தொடங்கும்.
//

சூப்பர் சூப்பர்

புருனோ Bruno said...

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று. //

சூப்பர்

இதை சிறுகதை போட்டிக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன்

Cable சங்கர் said...

முடிவு அருமை..

முரளிகண்ணன் said...

வாங்க ஜாச்கி சேகர்.

டாக்டர் அனுப்பிவிடுவோம் போட்டிக்கு.

ஒண்ணா ரெண்டா ஆயிரத்தி ஐநூறாச்சே.

மூணு சண்டே புரூட் டின்னருக்கு வரும்.



வாங்க கேபிளார். நன்றி

சென்ஷி said...

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று.//

அது சரி ;)

தராசு said...

அய்யே, லீவு நாள்ல பழமா சாப்பிடுவாங்க...,,,

நல்ல புனைவு தலைவரே. ஆனா, முடிவு சீக்கிரம் வந்துருச்சோன்னு தோணுது!!!!

கார்க்கிபவா said...

முடிவு
முரளி
முத்திரை..

வினோத் கெளதம் said...

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று.//

அருமை..சூப்பர்..

முரளிகண்ணன் said...

நன்றி சென்ஷி.

வருகைக்கு நன்றி தராசு.

நன்றி கார்க்கி

வாங்க வினோத் கௌதம்

Jackiesekar said...

தலைவரே நான் கடலூர்காரன் பொறந்தது பண்ரூட்டி போதுமா, நாங்க ஒரு போதும் தேன் தொட்டு சாப்பிட்து இல்லை அப்படியே சாப்ிடலாம் அதுவே தேன் போலதான் இருக்கும்

சரவணகுமரன் said...

:-)

சரவணகுமரன் said...

ரவுண்டு கட்டி பழம் சாப்பிடுறது ஆகட்டும்... நெருக்கமா படுத்துகிட்டு டிவி பார்க்குறது ஆகட்டும்... நிஜமாவே அந்தாளு ரசனைக்காரரு...

நையாண்டி நைனா said...

நல்ல புனைவு, அதிரடி முடிவு.

முரளிகண்ணன் said...

ஜாக்கி சேகர்,

கொல்லிமலித்தேனை கட் பண்ணிடுறேன்.

வாங்க சரவணகுமரன்.

நையாண்டி நைனா மிக்க நன்றி

Sanjai Gandhi said...

//சரி விடுடா, நீதான் ஆணும் பெண்ணும் சமம்னு சொல்ற முற்போக்குவாதியாச்சேடா. நீ ஆசைப்பட்ட சமத்துவம் இப்பவாவது நடக்க ஆரம்பிச்சிருக்கேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதானே? என்று கேட்டேன்.//

இம்புட்டு நல்லவரா நீங்க? :))

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று//

இவர் பேர் ரகு இல்ல முரளி. இவர் தான் திருவாளர் பொதுஜனம். அதாவது, ஊருக்கு தான் அட்வைஸ்.. :)

Sanjai Gandhi said...

நட்ச்சதிர வாழ்த்துகள் சாமியோவ்.. ;)

Sanjai Gandhi said...

//அப்போது அதுவரை சப்பென்றிருந்த ஹைப்ரிட் பப்பாளி கூட கொல்லிமலைத்தேனில் ஊறவைக்கப்பட்ட பண்ருட்டி பலா போல இனிக்கத் தொடங்கும்.//

எப்டிமா... எப்டி.. சும்மா கொல்லிமலை அருவியாட்டம் கொட்டுதே.. ;))

Vidhya Chandrasekaran said...

அசத்தல் நடை:)

முரளிகண்ணன் said...

வாங்க சஞ்சய்காந்தி.

நன்றி வித்யா

மறத்தமிழன் said...

ரகுவின் ரசனைக்கும், முரளியின் மதுரை நடைக்கும் சொட்டு !!!

அன்புட‌ன்,
மற‌த்த‌மிழ‌ன்.

anujanya said...

அக்மார்க் முரளி பதிவு. டாக்டர் கொடுத்த பட்டம் சரிதான். உவமைப் பதிவர்தான் நீங்க.

நானும் ரகு, அதாவது உங்க கட்சி தான். எனக்கு ஏன்?

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

மறத்தமிழன் தங்கள் வருகைக்கு நன்றி.

அனுஜன்யா, நான் ரகு இல்ல.

உங்களுக்குமா? :-))))

எம்.எம்.அப்துல்லா said...

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று. //


நம்ப கதை மாதிரியே இருக்கு ;0)

கிரி said...

சண்டே ல காலைல நேரத்துல எழுந்திருப்பது..... ரொம்ப கொடுமை தான்

நல்ல இருக்குங்க கதை

கோபிநாத் said...

\\அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று\\

அது ;)))

அண்ணாச்சி கதையில ரொம்ப வேகம்...சின்னதாக கீதே!!

நாடோடி இலக்கியன் said...

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்?//

:)

வால்பையன் said...

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று.//

எல்லோருமே அப்படி தான் நினைப்பாங்க போல!

தமிழன்-கறுப்பி... said...

ரசனையான கதை,


ஆனா அதுசரி! :)

மங்களூர் சிவா said...

// சரியாக பதினைந்தாவது நிமிடத்தில் அரட்டை அலுவலக மற்றும் தெருப் பெண்களிடத்தில் வந்து நிற்க்கும். //

ரொம்பா ஸ்லோ

//அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று./

ஹா ஹா
:)))