சென்ற ஆண்டு ஜூலை மாதம். இந்த படம் வந்துருச்சா? அல்லது இப்படி ஒரு படம் வெளியாகி இருக்கிறதா என்று ஆச்சரியம் ஏற்படுத்தும்படி ஒரு பதிவர் சுடச்சுட விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தார். யாருப்பா இது? என்ற ஆச்சரியத்துக்கு விரைவில் விடை கிடைத்தது.
மெரினாவில் நடந்த ஒரு பதிவர் சந்திப்புக்கு வந்து அவர் கலந்து கொண்டார். பின்னர்தான் தெரிந்தது அவர் பல திரைப்படங்களுக்கு இயக்கத்திலும், ஸ்க்ரிப்டிலும் பிண்ணனியாக இருப்பது. அதைத் தவிர பலபடங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க வேறு செய்து இருக்கிறார்.
ஆச்சரியம் அடங்கும்முன் அவர் பெயர்க்காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.
“என் பெயரில் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அவரை யாரும் திட்டிவிடக்கூடாதே என்று என் தொழில் பெயரையும் இணைத்துக் கொண்டேன்” என்று.
ஆம். அவர் சென்னை நகரத்தில், முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கேபிள் நிறுவனங்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர். இன்றும் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.
”ஹாரிஸ் இன் த மேஸ்” கதையை பெரும்பாலோனோர் படித்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்லும் போது எதுவும் கிடைக்காது. ஆனால் சரியான பாதையில் செல்லும்போது சாக்லேட், கேக் என கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது நடக்கப் போவது என்பதற்க்கான அறிகுறி.
அதுபோல், இந்த வார ஆனந்த விகடன் 39ஆம் பக்கத்தில் பதிவர் கேபிள் சங்கரின் விளையாட்டு வியூகம் என்ற கதை வெளியாகி உள்ளது. இது அவர் இயற்பெயரான சங்கர் நாராயணன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அச்சில் அவரது படைப்பு வருவது இதுவே முதல் முறை. முதல் சாக்லேட் கிடைத்து விட்டது. இனி அவரின் முழு முதற் நோக்கமான இயக்குநர் பதவியும் விரைவில் கூடிவர அனைத்துப் பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.
பரிசலைப் பற்றி பதிவர்களிடம் சொல்வது என்பது வக்காரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கையும், வார்னேவிடம் பிலிப்பரையும் பற்றி சொல்வதைப் போல.
பரிசலின் படைப்புகள் இதுவரை பல இதழ்களில் வெளிவந்துள்ளன. இந்த வார ஆனந்த விகடனில் அவரது நட்சத்திரம் கதை 50 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. இம்முறை பரிசல் கிருஷ்ணா என்ற புனைப் பெயரில் வந்துள்ளது விசேஷம். தொடர்ந்து அவரது படைப்புகள் வெளியாகி பதிவர்களையும், தமிழ் படிக்கும் வாசகர்கள் அனைவரையும் மகிழ்சிப்படுத்த வாழ்த்துகிறேன்.
32 comments:
வாழ்த்துகள் சங்கர் மற்றும் பரிசல்.
அன்பு நண்பர் கேபிள் ஷங்கர் அவர்களுக்கும் , பரிசல் அவர்களுக்கும் மேலும் மேலும் சாதிக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி வித்யா, சுகுமார் சுவாமிநாதன்
சங்கர் அண்ணனுக்கும், பரிசலுக்கும் வாழ்த்துக்கள்! யாராவது கதையை ஸ்கேன் செய்து போடுங்களேன்.. எங்களை மாதிரி வனாந்திரத்தில் இருப்பவர்களுக்கு பயன்படுமே.. :)
வாழ்த்துக்கள் :) :)
தமிழ்ப்ரியன், உங்கள் கோரிக்கை ஆவண செய்யப்படும்.
டாக்டர், நன்றி
தலைவரே நீங்க எப்போ..?
வாழ்த்துக்கள் சங்கர் அண்ணே மற்றும் கிருஷ்ணா அண்ணே...!
டக்ளஸ், வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி.
சங்கர் அண்ணனுக்கும், பரிசலுக்கும் வாழ்த்துக்கள்! யாராவது கதையை ஸ்கேன் செய்து போடுங்களேன்.. எங்களை மாதிரி வனாந்திரத்தில் இருப்பவர்களுக்கு பயன்படுமே.. :)
தொடர்ந்து விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வந்துகொண்டிருக்கும் பதிவர்களுக்கு பூச்செண்டுகள்!
//”ஹாரிஸ் இன் த மேஸ்” கதையை பெரும்பாலோனோர் படித்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்லும் போது எதுவும் கிடைக்காது. ஆனால் சரியான பாதையில் செல்லும்போது சாக்லேட், கேக் என கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது நடக்கப் போவது என்பதற்க்கான அறிகுறி.
//
//பரிசலைப் பற்றி பதிவர்களிடம் சொல்வது என்பது வக்காரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கையும், வார்னேவிடம் பிலிப்பரையும் பற்றி சொல்வதைப் போல.
//
எங்கேயிருந்து பிடிக்கிறீங்க.. முரளி.. சும்மா பின்னி பெடலெடுக்கிறீங்களே.. மிக்க நன்றி முரளி உங்கள் பதிவுக்கும்,வாழ்த்துக்கும். மற்ற பதிவர்களின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
பிரியமுள்ள கேபிள் சங்கர், மற்றும் பரிசல்காரனுக்கு வாழ்த்துகள்.
அடுத்து நீங்களா முரளி? அட்வான்ஸ் வாழ்த்துகள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
சென்ஷி, வெங்கிராஜா தங்கள் வருகைக்கு நன்றி.
கேபிள் நன்றிக்கும் நன்றி.
பைத்தியக்காரன் சார்,
ஆசையிருக்கு யார்க்கர் போட
அதிர்ஷ்டமிருக்கு புல்டாசாகன்னு
என் நிலைமை இருக்கு சார்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
வாழ்த்துகள்..
சங்கருக்கும், பரிசலுக்கும் வாழ்த்துகள். இருவருமே நல்ல, சுவாரஸ்யமாக எழுதுபவர்கள். இருவரின் வெற்றிக்குப்பின்னும் நிறைய உழைப்பு இருக்கிறது. இனி மென்மேலும் சாதிக்கவும் வாழ்த்துகள்.
முரளி, பட்சி சொல்கிறது அடுத்தது நீங்கள் என்று. நீங்களே இப்படிப் போட்டுக் கொள்ள முடியாது. ஆனால், இவ்வளவு அழகாக எனக்கு எழுத வராது. அதனால், நீங்களே அதை எழுதி, என்னிடம் கொடுத்து விடவும். என் வலையில் போட்டுவிடலாம் :)
அனுஜன்யா
எனது இனிய நண்பர் கேபிள் ஷங்கருக்குக் கிடைத்த வெற்றி எனக்கே கிடைத்த வெற்றியாகும்.வாழ்க வெல்க ஷங்கர்.நன்றி முரளிகண்ணன்.
அன்பு நண்பர் கேபிள் ஷங்கர் அவர்களுக்கும் , பரிசல் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். நண்பா.. விகடன்ல வடகரை வேலன் அண்ணாச்சியோட கதையும், கே. ரவிஷங்கரோட கவிதைகளும் வந்து இருக்கு... அவங்களுக்கும் வாழ்த்துக்கள்..
கார்க்கி நன்றி.
அனுஜன்யா, ஹென்றி புளோபீல்ட்
தனக்கு சுவராசியமாக கமெண்டிரி சொல்ல வராது என்று சொல்வதுபோல் இருக்கிறது.
ஷண்முகப்பிரியன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ஆமாம், கார்த்திகைப்பாண்டியன் இவர்களது படைப்பைப்பார்த்த உடனேயே பதிவு எழுதிவிட்டேன். வேறெதையும் பார்க்கவில்லை.
அண்ணாச்சிக்கும், ரவிஷங்கருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இருவருக்கும் வாழ்த்துகள்
கேபிளாருக்கும் பரிசலுக்கும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
முரளி
பதிவர் சந்திப்பில் உங்களைச் சந்திக்க முடியாமல் போனாலும் :-( கேபிளாரைச் சந்தித்தேன். அதிகம் அவரோடு பேச முடியாமல் போனாலும் அவர் அதிக நேரம்பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது :-)
பரிசலார் தொலைபேசியில் பேசியதோடு சரி. விகடன் பதிவர்களை தத்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது வாழ்த்துகள் இருவருக்கும்
ரொம்ப டயர்டாக இருக்குது டீ குடிச்சிட்டு வந்து வாழ்த்துகள் சொல்றேன்.!
தீப்பெட்டி,அதிஷா வருகைக்கு நன்றி.
அண்ணாச்சி வாங்க வாங்க.
பதிவர்களின் வேடந்தாங்கலா விகடன் மாறிவருவது மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது அண்ணாச்சி.
ஆதி, அப்போ பதிவு சைஸுக்கு ஒரு வாழ்த்துப் பின்னூட்டம் எதிர்பார்க்கலாம்.
///அதுபோல், இந்த வார ஆனந்த விகடன் 39ஆம் பக்கத்தில் பதிவர் கேபிள் சங்கரின் விளையாட்டு வியூகம் என்ற கதை வெளியாகி உள்ளது. இது அவர் இயற்பெயரான சங்கர் நாராயணன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அச்சில் அவரது படைப்பு வருவது இதுவே முதல் முறை. முதல் சாக்லேட் கிடைத்து விட்டது. இனி அவரின் முழு முதற் நோக்கமான இயக்குநர் பதவியும் விரைவில் கூடிவர அனைத்துப் பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.
////
வழிமொழிகிறேன்
இரண்டு தல'களுக்கும் வாழ்த்துக்கள் ;)
நான்கு நண்பர்களுக்கும் வாழ்த்துகள். மற்றொரு எழுத்தாளர் டீ குடிக்கப்போய்விட்டதால் அப்புறமாக வாழ்த்திக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.. அந்த வக்கார்,வார்னே மேட்டர் அருமை முரளி..
அவர்கள் சாதித்தார்கள்!
சாதித்த அவர்களை பற்றி எழுதியமைக்கு
மகிழ்ச்சி!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com
//”ஹாரிஸ் இன் த மேஸ்” கதையை பெரும்பாலோனோர் படித்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்லும் போது எதுவும் கிடைக்காது. ஆனால் சரியான பாதையில் செல்லும்போது சாக்லேட், கேக் என கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது நடக்கப் போவது என்பதற்க்கான அறிகுறி.
//
//பரிசலைப் பற்றி பதிவர்களிடம் சொல்வது என்பது வக்காரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கையும், வார்னேவிடம் பிலிப்பரையும் பற்றி சொல்வதைப் போல.
//
சூப்பர் உவமைகள்
வாழ்த்துகள் கேபிள் மற்றும் பரிசல்... பரிசல் பதிவுகள் பார்த்து தான் எழுத வந்தேன்
வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் அண்னன்,பரிசல்,ரவிசங்கர் மற்றும் வாடகரை வேலன் !!!
என்ன முரளி நீங்க எப்ப? அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !
மறத்தமிழன்.
வாழ்த்துக்கள்...
Post a Comment