May 29, 2009

திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் - ஒரு ஒப்பீடு

திமுக

திமுக என்பது அரசாங்க வேலையைப் போன்றது.

1.அரசாங்கத்தில் படிப்படியாக பதவிவுயர்வு கிடைக்கும். அதுபோல இங்கேயும் கிளைச் செயலாளர், நகரம், ஒன்றியம் என படிப்படியாகக் கடந்தே மாவட்டச் செயலாளர் பதவியை அடையமுடியும்.

2. ராணுவ வாரிசுகளுக்கு முதலிடம் என்பதுபோல கட்சியில் சீனியர் தலைகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை உண்டு.

3.வேலையில் இருக்கும்போது இறந்தால் அரசாங்கத்தில் வாரிசுகளுக்கு வேலை உண்டு. அதுபோல் இங்கேயும் (தங்கப்பாண்டியன் - தங்கம் தென்னரசு, புதுக்கோட்டை - பெரி.அரசு)

4. விளையாட்டுத்துறை கோட்டா அரசாங்கத்தில் உண்டு. அதுபோல் இங்கே கலையுலக கோட்டா உண்டு (நெப்போலியன், சந்திரசேகர், ரித்தீஷ்)

5.அரசாங்கத்தில் சில சமயம் பதவிஉயர்வுக்கு, மாறுதலுக்கு கடுமையான முயற்சி செய்து ஆள் பிடிக்க வேண்டும். அதுபோல் இங்கேயும் சரியான ஆளைப்பிடித்து முயற்சி செய்யாவிட்டால் அதே இடத்திலேயே ஆயுள் முழுக்க இருக்க வேண்டியதுதான்.

6. அரசாங்கத்தில் நல்ல பசையுள்ள பதவி கிடைத்துவிட்டால் வசூலில் பெரும் சதவிகிதம் நமக்கே. மேலேயும், கீழேயும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கொடுத்தால் போதுமானது. இங்கேயும் அப்படித்தான்.



அதிமுக என்பது சாஃப்ட்வேர் கம்பெனியைப் போன்றது

1.படிச்சவுடனே ஓரளவுக்கு வேலை கிடைப்பது மாதிரி, கட்சியில சேர்ந்தவுடனே பெரும்பாலும் பதவி கிடைக்கும்.

2. கஷ்டப்பட்டு திறமையைக் காட்டுனா, பிரமோஷன் கிடைக்கிறது மாதிரி இங்கயும் வேகமா
பிரமோஷன் கிடைக்கும்.

3. என்னதான் வேலை தெரிஞ்சாலும் மேலெ இருக்குறவங்கள அனுசரிக்காட்டி எப்படி அப்ரைசல்ல போட்டுப் பார்ப்பங்களோ அதுமாதிரி இங்கயும் சில உப தெய்வங்கள மதிக்காட்டி ஆப்பு வச்சுருவாங்க.

4. ரிசெசன் வந்தா தூக்கியெறியிறது மாதிரி, கட்சி தோத்தாலோ இல்ல பிடிக்காட்டாலோ உடனே தூக்கியெறிஞ்சுவாங்க.அங்க ஹெச் ஆர் மெயில வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கணும். இங்க நமது எம்ஜியார வாட்ச் பண்ணிக்கிட்டெ இருக்கணூம். எப்போ கட்டம் கட்டுவாங்கண்ணு.

5. நமக்கு சம்பளம் வந்தாலும், பெனிபிட்ஸ் வந்தாலும் லாபத்துல பெரும்பங்கு மேலிடத்துக்குத்தான்.

6. வேலை போச்சுன்னா கம்பெனிக்குள்ள நுழைய முடியாதுங்கிறமாதிரி, இங்க லாயிட்ஸ் ரோடுக்குள்ளேயே நுழைய முடியாது. வேலையில இருந்து வந்துட்டம்னா கம்பெனி எப்படி நம்ம மதிக்காதோ,அதே நிலைமைதான் இங்கயும். கட்சியில இருந்து வெளிய வந்துட்டா, செத்தாக்கூட யாரும் வந்து பாக்க மாட்டாங்க.

7. வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போடுறானான்னு அப்பப்போ ஹெச் ஆர் செக் பண்ற மாதிரி, இங்கயும் பல செக்கிங்குகள் உண்டு. உலகத்திலேயே அதிக பேக்ஸ் ரிசீவ் பண்ண பேக்ஸ் மெசின் தலைமைக் கழகத்துல தான் இருக்கு. விரைவில் கின்னசுக்கு அப்ளை பண்ண போறதா கேள்வி.

8. கம்பெனியில வாரிசு எல்லாம் ஷேர் வச்சுருக்குவங்களுக்குத்தான். எம்ப்ளாயிக்கு இல்லை. அதுபோல இங்கயும் இரண்டாம் மட்ட மூன்றாம் மட்ட தலைகளுக்கு அந்த பவர் இல்லை.

9. சாப்ட்வேர்ல பிள்ளைக்கு வேலை கிடச்சவுடனே குடும்பம் சந்தோஷப் படும். அப்புறம் போச்சேன்னு வருத்தப்படும். அது இங்கேயும் உண்டு. (இந்தப் பாயிண்டு ரிப்பீட்டா இருக்குண்ணு பார்க்குறீங்களா வேற ஒண்ணும் இல்ல. அம்மாவோட ராசி நம்பர் ஒன்பதாச்சே)

காங்கிரஸ் கட்சி விவசாயம் மாதிரி

1. அதிக நிலம் வச்சிருந்தா தான் விவசாயிக்கு மதிப்பு. அதுபோல அதிக எண்ணிக்கையில கோஷ்டி ஆளுங்க இருந்தாத்தான் இங்க கட்சியில மதிப்பு.

2. பரம்பரை பெருமை விவசாயத்துக்கு அதிகம். அதுபோல இங்கயும்.

3. விவசாய நிலத்தை ரொம்ப நாள் வச்சிருந்தா ஒரு காலத்துல ரியல் எஸ்டேட் ஆகி செம வருமானம் கிடைக்கும். அதுமாதிரி இங்க சும்மாவே வேலை செய்யாம படுத்துக் கிடந்தாலும் பின்னாடி பதவி கிடைக்கும்.

4. எப்பயும் தண்ணியை நம்பித்தான் பொழப்பு. இங்க டெல்லித்தலைமையை நம்பி

5.இப்ப இருக்கிற நிலைமையில புதுசா ஒரு ஆளு எந்தப் பிண்ணனியும் இல்லாம நிலம் வாங்கி விவசாயம் பண்ணி சாதிக்க முடியாது. அதுபோல காங்கிரஸ்ஸுலயும் புதுசா ஒரு ஆளு நுழைஞ்சு சாதிக்க முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சாலை மாதிரி

1. யார் வேணூம்னாலும் லேபரா சேரலாம். வேலை பார்க்கலாம். சுமாரான வருமானம்.
வாழ்க்கையை ஓட்டலாம். வசதி வரவே வராது.

2. விடாம வேலை செஞ்சா போர்மேன் வரைக்கும் போகலாம். அப்படியும் வருமானம் கம்மிதான்.

3. போனஸ்சுக்கு போராடுற மாதிரி அடிக்கடி போராட வேண்டியது இருக்கும். பலன்?

125 comments:

பழமைபேசி said...

முயற்சி கை கூடியிருக்குங்களே விண்மீன்! வாழ்த்துகள்!!

ஆமா, காங்கிரசுக்கு தமிழ்ல என்னங்க??

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எப்பயும் தண்ணியை நம்பித்தான் பொழப்பு. இங்க டெல்லித்தலைமையை நம்பி//


வானம் பார்த்த பூமி நிறைய இருக்குங்க தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//விடாம வேலை செஞ்சா போர்மேன் வரைக்கும் போகலாம். //


நல்லா கவ்னிச்சுருகீங்க தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//விளையாட்டுத்துறை கோட்டா அரசாங்கத்தில் உண்டு. அதுபோல் இங்கே கலையுலக கோட்டா உண்டு (நெப்போலியன், சந்திரசேகர், ரித்தீஷ்)//

கலையுலகத்தைப் பத்தி எழுதறவங்களுக்குக்கூட ஒரு கோட்டா வருதாம் தல.. எதுக்கும் முயற்சி பண்ணிப் பாருங்க..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல.., அப்படியே மற்ற பெரீய கட்சிகள் பத்தியும் போடுங்க...

மதிபாலா said...

அருமையா இருக்குங்க விண்மீன் சார்.


***

ஆமா, காங்கிரசுக்கு தமிழ்ல என்னங்க??//

பேராயக் கட்சி அண்ணாச்சி.

மதிபாலா said...

தல.., அப்படியே மற்ற பெரீய கட்சிகள் பத்தியும் போடுங்க...//

எது மதிமுக , பாமக .....தேமுதிக....இவுங்களா ???

தெளிவா சொல்லுங்க சார்....அவுங்க படிச்சாலாவது சந்தோஷப்படுவாய்ங்க.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பழமைபேசி, சுரேஷ், மதிபாலா

மதிபாலா said...

வரு"""கை"""க்கு நன்றி பழமைபேசி, சுரேஷ், மதிபாலா/

பின்னூட்டத்திலும் அரசியல். ஏத்துகிடப் படாது.

:))))

ஹிஹிஹிஹி. பொழுது போவலை.

அதான் கும்மலாம்னு...

மதிபாலா said...

மைக் டெஸ்டிங்...மைக் டெஸ்டிங்..

யாரும் இல்லையா?

முரளிகண்ணன் said...

சரியான பஞ்ச் மதிபாலா.

அமர்க்களம்.

முரளிகண்ணன் said...

நான் இருக்கேனே.

முரளிகண்ணன் said...

கா கா தே கா மாதிரி

மதிபாலா said...

சரியான பஞ்ச் மதிபாலா.

அமர்க்களம்.//

அரசியல் களத்திலே ஓப்பீடு பண்ணின உங்க பதிவு அபாரம்.

Thamiz Priyan said...

கலக்கல் முரளி அண்ணே!

மதிபாலா said...

கா கா தே கா மாதிரி//

அது என்ன கா கா தே கா ???

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பின்னூட்டத்தில் கூட.

ம.தி. பாலா இருக்கார்

மு.க. இருக்கார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மதிபாலா said...

கா கா தே கா மாதிரி//

அது என்ன கா கா தே கா ???//


அது கு. அ. நடத்திய கட்சி

நூழிலையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைத்தவற விட்ட கட்சி

மதிபாலா said...

நான் இருக்கேனே./

நீங்க போதுமே....!

முரளிகண்ணன் said...

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் - குமரி அனந்தன் ஆரம்பித்த கட்சி.

அதில் அவர் மட்டுமே உறுப்பினர் என்று கிண்டலாக கூறுவார்கள்.

அதுபோல என் பதிவில் இப்போதைக்கு
நான் மட்டும் தானே இருந்தேன்.
அதுதான்

மதிபாலா said...

கு. அ. ./

அது என்ன கு.அ??

நூலிழையில்../

அம்மாம் பெரிய நூலா ? எதை வச்சு நூப்பாங்க?

முரளிகண்ணன் said...

சுரேஷ்,

நூலிழையில் ஆட்சியைத் தவற விட்டார்களா?

குமரி அனந்தனும், தமிழிசை சௌந்தரராஜனும் மிக சந்தோஷப்
படுவார்கள்

மதிபாலா said...

அதுபோல என் பதிவில் இப்போதைக்கு
நான் மட்டும் தானே இருந்தேன்.
அதுதான்/./


அதான் சுரேஷ் சார் வந்துட்டாரே...

டி. ஆர் ஓட ல.தி.மு.க அளவுக்கு வளந்த்துடுச்சி போங்க.

அடுத்து ஒரிசா மாநில ஆட்சி தான் பாக்கி

முரளிகண்ணன் said...

ஏன் ஒரிசா ஒர்ரி சா (கவலைக்கடல்)
ஆகணூமா?

சரவணகுமரன் said...

சூப்பர்...

மதிபாலா said...

சரி இப்ப உங்க கட்சிய வா. பா. ரா வோட ரா.கா அளவுக்கு வளர்த்த முயற்சிப்போம்.

என்ன சொல்றீங்க?

சரவணகுமரன் said...

பாமக - தெருவுல வித்தை காட்டுற மாதிரி...

சரவணகுமரன் said...

மதிமுக - லாப நோக்கம் இல்லா நிறுவனம்.

மதிபாலா said...

ஏன் ஒரிசா ஒர்ரி சா (கவலைக்கடல்)
ஆகணூமா?/

ஏய் என் கட்சி லதிமுக...
கலைஞர் பேரு முக.
ஸ்டாலின் இனிஷியலு முக.
அழகிரி கட்சி பேரு திமுக
ஜெயலலிதா கட்சி பேரு அதிமுக
விசியகாந்து கட்சி பேரும் தேமுதிக.
புடிக்குது ஆச்சிய லதிமுக...

இதச் சொன்னா உனக்கு ஏன் வொரி பா???

முரளிகண்ணன் said...

அய்யா மதி,

உங்க சுருக்கெழுத்த புரிஞ்சுக்க கூடிய
அளாவு மதி இல்லா பாலன் நான்.

விவரமா போடுங்க

சரவணகுமரன் said...

பாஜக - கோவில் திருவிழாவுக்கு கடை போடுறவுங்க

மதிபாலா said...

பாமக - தெருவுல வித்தை காட்டுற மாதிரி...//

எந்த ஊர் தெருவுல மரத்த எல்லாம் வெட்டிப் போட்டு வித்த காட்டுறாங்க தல???

**

மதிமுக - லாப நோக்கம் இல்லா நிறுவனம்.//

கரீக்ட்டு , தொண்டர்களுக்கு லாப நோக்கம் இல்லாத நிறுவனம்..

இது எப்படி இருக்கு?

முரளிகண்ணன் said...

வாங்க சரவண குமரன்

மதிமுக மேட்டர் சூப்பர்

முரளிகண்ணன் said...

மதி

வா பா ரா --- ரா கா மேட்டர் என்ன?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வா.பா.ரா.க.

கூட்டணி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.


அதைப் பின்னாலில் அதிமுக, திமுக எல்லோரும் பின்பற்றினார்கள்

மதிபாலா said...

சரி இப்ப உங்க கட்சிய வா. பா. ரா வோட ரா.கா அளவுக்கு வளர்த்த முயற்சிப்போம்.

என்ன சொல்றீங்க?//

இதுதானே புரியல ?

வாழப்பாடி ராமமூர்த்தியோட ராஜிவ் காங்கிரஸ் தெரியாதா உங்களுக்கு???

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கே இந்தப் பதிவு

சரவணகுமரன் said...

தேமுதிக - புது புது துறைகளில் முதலீடு செய்யும் டைனமிக் பிசினஸ்மேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாஞ்சொன்னது ரைட்டு

முரளிகண்ணன் said...

தமிழக ராஜிவ் காங்கிரஸ் இல்லியா
நீங்க த ரா கா ந்னு போட்டுருந்தா
ஸ்ட்ரைக் ஆகியிருக்கும்

வா பா ரா ந்னு போடாமா வா ரா ந்னு
போட்டிருக்கலாம்

(மீசையில மண் ஒட்டல)

மதிபாலா said...

தேமுதிக - புது புது துறைகளில் முதலீடு செய்யும் டைனமிக் பிசினஸ்மேன்..//

ஆமாம். ஆமாம். போன தேர்தல்ல கூட ஓட்டைப் பிரிக்கும் துறையை தேர்ந்தெடுத்து சல்லிசா லாபம் பார்த்ததா கேள்வி.

பாவம் நின்ன வேட்பாளர்களுக்கு தான் பட்டை நாமம்...

முரளிகண்ணன் said...

சரவண குமரன் கலக்குறீங்க.

சரவணகுமரன் said...

சமக, நாமக, லதிமுக - பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்.

மதிபாலா said...

(மீசையில மண் ஒட்டல)//

வுடுங்க பாஸு....

தண்ணிக்குள்ள வுழுந்தா மீசைலே எப்படி மண்ணு ஒட்டும்...இது கூட தெரியாதா எனக்கு?

முரளிகண்ணன் said...

அரசியல இப்போ தண்ணீங்கிறாங்களாஅ?

முன்னாலே குட்டை, சாக்கடைன்னு
சொல்லுவாங்க?

மதிபாலா said...

சரவண குமரன் பட்டையக் கெள்ப்புறாரு போங்க.

எப்படியோ ஒரு நல்ல பதிவை கும்மிப் பதிவாக்கின பெருமை நம்மையே சாரும்.

சரவணகுமரன் said...

//எந்த ஊர் தெருவுல மரத்த எல்லாம் வெட்டிப் போட்டு வித்த காட்டுறாங்க தல???//

குரங்கு வித்தை காட்டுவாங்களே தல...

முரளிகண்ணன் said...

\\எப்படியோ ஒரு நல்ல பதிவை கும்மிப் பதிவாக்கின பெருமை நம்மையே சாரும்\\

இதுதான் உச்ச பட்ச காமெடி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தண்ணீண்ணா சாதாரணத் தண்ணி இல்லீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிரியாணியும் சேர்ந்தது

மதிபாலா said...

முன்னாலே குட்டை, சாக்கடைன்னு
சொல்லுவாங்க?//

எல்லாமே தண்ணிதானே தல ? குட்டைன்னா தேங்கியிருக்கிற தண்ணி..

சாக்கடைன்னா , ரெண்டு வகை

ஒண்ணு நம்மூரு சாக்கடை - நம்ம பண்ற அசுத்தத்தால எல்லாப்பக்கமும் அடைச்சிக்கிட்டு கரேன்னு தேங்கி கொசுக்களை பரப்புற சாக்கடை..

இன்னொண்ணு - வெளிநாட்டு சாக்கடை - வூட்ல இருக்குற தண்ணிய விட க்ளீனா சாக்கடைல தண்ணி போகும்.

மேட்டரு என்னமோ சாக்கடை தான் , ஆனா இடத்துக்கு இடம் மாறுது இல்லியா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

50 போட்டது நாந்தான்

முரளிகண்ணன் said...

மினரல் வாட்டரா? தலை?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இன்னொண்ணு - வெளிநாட்டு சாக்கடை - வூட்ல இருக்குற தண்ணிய விட க்ளீனா சாக்கடைல தண்ணி போகும்.//



நாங்க வெளிநாடு பார்த்ததில்லையே

நீங்க சொல்றதுதான்

மதிபாலா said...

தண்ணீண்ணா சாதாரணத் தண்ணி இல்லீங்க///

இவரோட உள்குத்துக்கு நான் வரலே...

நாளைக்கு தான் சனிக்கெழமே. நாளைக்கு தான் பர்மிஷன். இன்னிக்கு இல்லே. வூட்ல வைவாங்க.

முரளிகண்ணன் said...

டிராவிட் மாதிரி இருந்த என்
பதிவு உங்க புண்ணியத்தால
இப்போ சேவாக் ஆயிடுச்சு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிரியாணியும் தண்ணியும் தல இங்க மின்ரல்வாட்டர் சைடு டிஷ்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அரசியல்ல இறங்குனா அப்படித்தான் தல

தானா கூட்டம் சேரும்.

ஆனா நான் ஓட்டப் போட்டுட்டேன்

முரளிகண்ணன் said...

இதுவரைக்கும் என் பதிவில
இவ்வளோ கமெண்ட் வந்ததே இல்லை

சுரேஷ்,மதிபாலா,சரவண குமரன்
கூட்டணிக்கு நன்றி

மதிபாலா said...

நாங்க வெளிநாடு பார்த்ததில்லையே
/

வெளிநாடு பாக்க வெல்லாம் வேண்டாம்.அப்புறம் நம்ம நாட்ட பத்தி கொற சொல்ல தோணும். அப்புறம் கொற சொல்ற ஆளப் பாத்து இன்னாமா பீலா வுடுறாண்டா அப்படின்னு நாக்கு மேல பல்லப் போட்டு பேசுவாய்ங்க.

அதக் கேட்டுட்டு நாலு பேரு தலக்கனம் புடிச்சவனாம் அவன் னு வைத்தி வப்பாய்ங்க.

அப்புறம் யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாய்ங்க.

இதெல்லாம் தேவையா பாஸூ.

நம்மூர்ல இல்லாதது என்ன இருக்கு வெளிநாட்ல. எல்லாம் கான்கிரீட் காடுக தான்.

மனசுக்குள்ள இருக்குற இடைவெளி இந்தியா பாகிஸ்தான் பிரச்ச்சினையைக் காட்டிலும் பெரிசு.

Vinitha said...

சசி தரூர் எப்படி காங்கிரஸ் உள்ளே நுழைஞ்சி, இப்போ சென்டரல் மினிஸ்டர் கூட ஆயிட்டார்?

அப்புறம் அன்புமணி கட்சி பத்தி ஒன்னும் சொல்லலே? பதவி ஏற்பு விழாவுக்கு பழைய மந்திரி போகலே?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கவலைப் படாதீங்க

மறுமலர்ச்சி திராவிட பாலா

உங்களுக்கு இங்கேயே பொண்ணு பார்த்திரலாம்.

எந்தக் கட்சில வேணும்னு சொல்லுங்க

டாபிக் மாறக் கூடாதுல்ல அதுக்குத்தான் கட்சி..,

மதிபாலா said...

ஆனா நான் ஓட்டப் போட்டுட்டேன்//

யாருக்கு தல?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அரசாங்க வேலை

சாஃப்ட்வேர்

விவசாயம்

மில்வேலை

எல்லாமே தல உபயம்தான்

மதிபாலா said...

சசி தரூர் எப்படி காங்கிரஸ் உள்ளே நுழைஞ்சி, இப்போ சென்டரல் மினிஸ்டர் கூட ஆயிட்டார்?

அப்புறம் அன்புமணி கட்சி பத்தி ஒன்னும் சொல்லலே? பதவி ஏற்பு விழாவுக்கு பழைய மந்திரி போகலே?//

இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சிருச்சாமே??

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழீஷ், தமிழ் மண ஓட்டுகள்தான்

மதிபாலா said...

மறுமலர்ச்சி திராவிட பாலா

உங்களுக்கு இங்கேயே பொண்ணு பார்த்திரலாம். //

அப்புறம் வீட்ல சொல்றதா வேண்டாமா? இல்ல என் சம்சாரம் புதுசா ஒரு பொண்ணப் பாத்தா கோவிச்சிக்க மாட்டாங்களா தல?

மதிபாலா said...

டாபிக் மாறக் கூடாதுல்ல அதுக்குத்தான் கட்சி..,//

அது மேட்டரு...

நமக்கு சப்ஜெக்ட் முக்கியம். அண்ணன் முரளிகண்ணன் 50க்கே இவ்வளவு பின்னூட்டம் வந்ததில்லேங்கிறாரு. நாம 200க்கு ப்ளான் பண்ணறோம்னு தெரியாமே...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மத்தியில் கூட்டணி ஆட்சிதான் தல


பேச்சுவார்த்தையில் சமாளிச்சிடலாம்

குறைந்தபட்சம் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வச்சிடலாம்

மதிபாலா said...

சசி தரூர் எப்படி காங்கிரஸ் உள்ளே நுழைஞ்சி, இப்போ//

இதுல ஒரு நுண்ணரசியல் இருக்கு.

சோனியாவோட உதவியாளர் ஜார்ஜ் , ஒரு மலையாளி.

அதனாலேதான் அந்தோணி மற்றும் 6 கேரள மத்திய அமைச்சர்கள் , எம்.கே நாராயணன் , சிவசங்கர் மேனன் அப்படீன்னு ஒரு மலையாளக் கூட்டமே டெல்லியை லாபி பண்ணுது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்பல்லேம் அமெரிக்க சபைல பதவி கிடைக்காதவங்களுக்குக் கூட இந்தியாவுல வேலை கொடுக்கறாங்க தல

மதிபாலா said...

குறைந்தபட்சம் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வச்சிடலாம்//

ஆகா ,இவுரு குடும்பத்துல குழப்பம் பண்ணுறாருடோவ்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாமெல்லாம் கேரள பிரதர்ஸ்னு சொல்லி சன்னமா ஒரு மினிஸ்டர் போஸ்ட் வாங்கீறுவோம்

மதிபாலா said...

இப்பல்லேம் அமெரிக்க சபைல பதவி கிடைக்காதவங்களுக்குக் கூட இந்தியாவுல வேலை கொடுக்கறாங்க தல//

இதென்ன புரியலையே ...

மதிபாலா said...

நாமெல்லாம் கேரள பிரதர்ஸ்னு சொல்லி சன்னமா ஒரு மினிஸ்டர் போஸ்ட் வாங்கீறுவோம்//

இது நல்ல யோசனையா இருக்கே.

இனி எண்ட மொழி மலையாளம்

இனி எண்ட ஊரு திருச்சூரு

இனி எண்ட ஆட்டம் கதகளி..

இனி எண்ட ஸ்டெட்டு கேரளா.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சசி வேலை வாங்கிட்டாருல்ல தல அதுதான்

மதிபாலா said...

சசி வேலை வாங்கிட்டாருல்ல தல அதுதான்//

அதச் சொன்னீங்களா...சசி அமெரிக்காவுல வேலைல இல்ல தல. ஐ.நா சபைலே.

அதுவும் ஒருவிதத்துல உண்மைதான். அமெரிக்கா சொல்றத கேக்கத் தானே ஐ.நா சபையே.

நம்மூரு பஞ்சாயத்து மாதிரிதான்.

நாட்டாமை தான் தீர்ப்பு சொல்லுவாரு. அதுக்கு ஆமாஞ்சாமி போட நெறைய பேரு இருப்பாங்க இல்லியா , அதுமாதிரிதான் ஐ.நா சபையும்..!

முரளிகண்ணன் said...

மதி, உங்களுக்கா புரியல?

ஐநா, சசி தரூர்

முரளிகண்ணன் said...

தெலுங்கு ஆளுங்க சோனியா அம்மா
பக்கத்துல கம்மி போல.

33 ஜெயிச்ச்சும் ஆந்திராவுக்கு அல்வா
தான் கிடைச்சது

மதிபாலா said...

மதி, உங்களுக்கா புரியல?

ஐநா, சசி தரூர்//

புரிஞ்சிடுச்சி தல.

கற்பூரம் உடனே பத்திகிடும். நாம கற்பூரம் இல்லியே ...என்ன செய்ய?

( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்..!)

மதிபாலா said...

33 ஜெயிச்ச்சும் ஆந்திராவுக்கு அல்வா
தான் கிடைச்சது//

அதவிட உத்தரபிரதேசத்துக்கு கொடுத்தது மெகா அல்வா..ஒரு கேபினட் கூட இல்லே.

முரளிகண்ணன் said...

நீங்க கற்பூரம் இல்ல பாஸ்பரஸ்

முரளிகண்ணன் said...

வுடுங்க அடுத்து உபிக்குத்தானே பிரதமர்.

நம்ம உ பி இல்லை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உ. பி .கள் எப்பவும் அல்வா வாங்கத்தானே.,

மதிபாலா said...

நீங்க கற்பூரம் இல்ல பாஸ்பரஸ்//

ஆஹா பாஸ்பரஸ் குண்டு வெச்சிருந்தான்னு தூக்கி தீவிரவாதக் கேசுல உள்ள போடலாம்னு பாக்கீகளா ??

அதானே நடக்காதுன்றேன்.

மதிபாலா said...

நம்ம உ பி இல்லை//

உத்திரப் பிரதேசம்
உடன் பிறவா சகோதரி
உடன் பிறப்பு


ஆஹா , என்னே தமிழின் பெருமை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிரதமர் வருவதற்கு முன் து. பி. வருமாமே

முரளிகண்ணன் said...

து மு வந்தாச்சில்லே இனி மேல து பி
வாய்ப்பு அதிகம்தான்

மதிபாலா said...

உ. பி .கள் எப்பவும் அல்வா வாங்கத்தானே.,//

நீங்க எந்த உ.பியைச் சொல்றீங்க?

எனக்கு தெரிஞ்சு அல்வா வாங்குனுது தாயம்மா ( கஸ்தூரி) , கொடுத்தது ராஜராஜசோழன் - எம்.ஏ ,எம்.எல்.ஏ , (சத்யராஜ்) - அவருக்கு வாங்கிக் கொடுத்தது அல்வா வாசு...

இதுல யாரு உ.பி.?? சத்யராஜ் கூட உ.பி இல்ல அவுரு தி.க.

மதிபாலா said...

து.மு - ஆமாம் ஸ்டாலின்.

து.பி -??????

அப்ப ம.மோ.சி பிரதமரா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாகராஜ சோழன் ஒரு விவிங் கேரக்டர்னு சொல்றாங்களே தல..,

முரளிகண்ணன் said...

ம மோ சி பிரதமரா?

இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சத்யராஜ் மதுரைக்கு மன்னர் ஆயிட்டார் தெரியுமா தல

முரளிகண்ணன் said...

விவிங் ஆ இல்லே லிவிங் ஆ?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

போத்தீஸ் விளம்பரம் வருதே தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழும் கதாபாத்திரம்தான்

மதிபாலா said...

இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கு//

அட அவுருக்கே இருக்கு போங்க.

மதிபாலா said...

100

மதிபாலா said...

100

மதிபாலா said...

100

மதிபாலா said...

ரைட்டு நாந்தான் நூறு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆஹா..,,,

அவர் வந்தா எல்லோரும் எந்திரிச்சு மரியாதை கொடுக்கறாங்க அதுனால அந்த சந்தேகம் தேவையில்லை தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ.க்கெ. தல

கடமை அழைக்கிறது. புறப்படுகிறேன்

மதிபாலா said...

அவர் வந்தா எல்லோரும் எந்திரிச்சு மரியாதை கொடுக்கறாங்க அதுனால அந்த சந்தேகம் தேவையில்லை தல
//

அம்மா வந்தா கூடத்தான். சொல்லப்போன ம.மோ.சி வந்தா எழுந்துக்கலேன்னா ஒண்ணும் பிரச்சினையில்ல.

அம்மா வந்தா எழுந்துக்கலேன்னா கட்டம் கட்டி புஸ்ஸுதான்.

மதிபாலா said...

கடமை அழைக்கிறது. புறப்படுகிறேன்//

ஓக்கே தல. அதே கடமையும் , உறக்கமும் அழைக்கிறது.

பார்க்கலாம்.......

இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டு யாரும் இல்லேன்னா நானும் கடையை சாத்திடுவேன்.

ஸ்ரீ.... said...

பதிவர் முரளிக்கண்ணனைத் தேடி அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆட்டோக்கள் வலைவீச்சு! காணத் தவறாதீர்.

அருமையான உதாரணங்கள். எல்லாக் கட்சிகளைப் பற்றியும் எளிமையாக விளக்கிவிட்டீர்கள்.

ஸ்ரீ....

Sanjai Gandhi said...

ஹிஹி.. :))

நீங்க சொல்லி இருக்கிறது தமிழக காங்கிரஸ்.. :)

காங்கிரஸ் தேசிய கட்சி சாமியோவ்.. தமிழ்நாட்டை மட்டும் வச்சி கணக்குப் போடக் கூடாது. எங்க பிரதமரே பின்புலம் இல்லாம புதுசா வந்தவர் தானாக்கும்.. :)

Bruno said...

:) :)

கடைக்குட்டி said...

டாக்டர் வெளயாண்டுருக்கார் போல...


பதிவை விட பின்னூட்ட விவாதம் சூப்பர்..

கட்சிகளைப் பற்றிய ஒரு வரி கமெண்ட் அருமை :-)

வால்பையன் said...

கலக்கிடிங்க போங்க
செம காமெடி

Venkatesh Kumaravel said...

//அதுபோல அதிக எண்ணிக்கையில கோஷ்டி ஆளுங்க இருந்தாத்தான் இங்க கட்சியில மதிப்பு.//

இதுதான் டாப்பு!

ராஜ நடராஜன் said...

நீங்கள் விண்மீனா!வாழ்த்துக்கள்.ஒப்புமை சிறப்பை பாராட்டிகிட்டே பின்னூட்டம் வந்ததும்தான் தெரிந்தது.

மீண்டும் வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

வந்தது வந்தோம் முழுசாப் பின்னூட்டத்த பார்த்திட்டே போகலாமுன்னு பார்த்தா அது அனுமார் வால் மாதிரி நீளுது.

எம்.எம்.அப்துல்லா said...

அடடா...இங்க ஒரு மாநாடே நடந்திருக்கு!நான் இல்லாமப் போய்ட்டேனே

:(

கோபிநாத் said...

\\முரளிகண்ணன் said...
இதுவரைக்கும் என் பதிவில
இவ்வளோ கமெண்ட் வந்ததே இல்லை
\\

அண்ணே இதையும் நோட் பண்ணியிருக்கோம்ல்ல...இனி இருக்கு...! ;))

மதிபாலா said...

அடடா...இங்க ஒரு மாநாடே நடந்திருக்கு!நான் இல்லாமப் போய்ட்டேனே

:(
//

அட தெரியாதா ? வா பா ரா வோட த ரா கா மாநாடு நடந்துச்சி.

தெருமுக்குல எல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தோமே , பாக்கலியா?

கிரி said...

:-)))

மதிபாலா said...

வணக்கம் கிரி சார்.

:)))

Cable சங்கர் said...

வர வர உங்க நகைச்சுவை உணர்ச்சி பெருக்கெடுக்க ஆரம்பிச்சிருச்சு.. முரளி... பின்றீங்க..

அத்திரி said...

நல்ல ஒப்பீடு.........அதிலும் காங்கிரசு........கிகிகிகி

லக்கிலுக் said...

சூப்பர் :-)

na.jothi said...

கலக்கலா இருக்கு ஒப்பிடும் ,
ஓட்ட(பின்னூட்ட)ங்களும்

na.jothi said...

125

na.jothi said...

125!!

Neels said...

Super alasal..romba nalaikku appuram vai vittu sirithen..Nandri