September 12, 2008

கர்ணன் -- ஒளிப்பதிவு மேதை?

உலக அறிவியல் வளர்ச்சியை இரண்டு கட்டங்களில் சொல்வார்கள். முதலில் தொலைநோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்தது, பின்னர் அதையே தலைகீழாய் திருப்பி நுண்ணோக்கியாய் மாற்றி அணு,வைரஸ் போன்றவற்றை ஆராய்ந்தது. ஆங்கில சயின்ஸ் பிக்சன் படங்களையும் இந்த இரண்டில் அடக்கி விடலாம். ஒன்று வானில் இருந்து ஏதாவது வரும். இல்லையென்றால் சாதாரண பிராணி அசுரத்தனமாகும்.

சி சென்டர் ரசிகர்களால் காமிரா மேதை என புகழப்பட்ட கர்ணனும் இதே தத்துவத்தை பின்பற்றினார். தரையில் குழி தோண்டி காமிராவை வைத்து வைத்து எடுக்கும் லோ ஆங்கிள் ஷாட், மரத்தின் மேல் காமிராவை வைத்து எடுக்கும் டாப் ஆங்கிள் ஷாட் இரண்டையும் அவர் தன் கதாநாகியர் மீது பிரயோகித்தார். ரசிகனை குதூகலப்படுத்தினார்.

மீனாவின் தாயார் ராஜ் மல்லிகா, சித்தி ராஜ் கோகிலா, ஜெயமாலா, மாதவி,சுகந்தி ஆகியோரை மற்றோர் கோணத்தில் காட்டியவர்.
இவரது ஜம்பு, எங்க பாட்டன் சொத்து,ரெட்டை குழல் துப்பாக்கி,ஜான்ஸி போன்ற படங்கள் எம்ஜியாரின் படங்களுக்கு இணையான ரீ ரீலீஸ் மதிப்பு
பெற்றவை.

இவர் பட சண்டைக்காட்சிகளை பார்த்தவர்கள் யாரும் தலைவலியில் இருந்து தப்ப முடியாது. பட இடைவேளையில் அதிக டீ விற்பனை ஆனதே இதற்க்கு ஆதாரம். சமவெளியில் தொடங்கும் சண்டைக்காட்சி பள்ளத்தாக்குகள்,மலைகள்,பாலைவனம் என பிரயாணித்து மீண்டும் சமவெளியில் முடியும்.இதன் மூலம் பார்வையாளனுக்கு குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை போன்ற அனைத்து நிலப்பிரிவுகளுக்கும் சென்ற திருப்தி வரும். ஒரு வகையில் பார்த்தால் அவர் பின்னவீனத்துவ வாதி. கட்டுடைப்புக்கு அவர் பட சண்டைக்காட்சிகளே உதாரணம். பல வகை நிலங்களை காட்டுவதையும் அடிபடுவோரின் உணர்ச்சிகளையும் நாம் தொடர்புபடுத்திக்கொள்லலாம்.

ஆறு,குளம்,குட்டை என சகல நீர்நிலைகளிலும் நாயகியரை குறைந்த வெள்ளை உடையில் குளிக்கவைத்தவர். பரிகாராமாக நாயகர்களுக்கு தொப்பி முதல் ஷூ வரை கடின ஒளி ஊடுருவாத தோல் ஆடை அணிவித்தவர். ஆணை புனிதமாக போற்றிய கட்டுடைப்பு.

அவருடன் அதிகப்படங்களில் பணியாற்றியவர்கள் அசோகன் மற்றும் ஜெய்சங்கர். விஜயகாந்த்,கார்த்திக்,ராதாரவி ஆகியோருடனும் கலைச்சேவை புரிந்துள்ளார். சி சென்டர் ரசிகர்கள் கதானாயகனுக்காகவும்,மசாலாவுக்காகவும் தான் படம் பார்ப்பார்கள். இயக்குனருக்காக அவர்கள் படம் பார்த்தால் அது விட்டலாச்சார்யாக்காகவும், கர்ணனுக்காகவும் தான்.

28 comments:

narsim said...

அருமையான விபரங்கள் தலைவா.. மிக நல்ல பதிவு.. நல்ல தொழில் நுட்ப விபரங்கள்!

இன்னும் எதிர்பார்த்து..

நர்சிம்

கோவி.கண்ணன் said...

//சி சென்டர் ரசிகர்களால் காமிரா மேதை என புகழப்பட்ட கர்ணனும் இதே தத்துவத்தை பின்பற்றினார். தரையில் குழி தோண்டி காமிராவை வைத்து வைத்து எடுக்கும் லோ ஆங்கிள் ஷாட், மரத்தின் மேல் காமிராவை வைத்து எடுக்கும் டாப் ஆங்கிள் ஷாட் இரண்டையும் அவர் தன் கதாநாகியர் மீது பிரயோகித்தார். ரசிகனை குதூகலப்படுத்தினார்.
//
மாறுபட்ட கோணத்தில் நன்றாக புகழ்ந்து இருக்கிறீர்கள். ஜம்பு படம் பார்த்த நினைவு, மாதவி இருவேடங்களில் ஒரு படத்தில் நடித்து இருந்தார், அதையும் பார்த்து இருக்கிறேன். தமிழ்படத்தில் மலையாள வாசனையை முதன்முதலில் கொண்டுவந்தவர் இவர் தானே.

முரளி கண்ணன்,
'பெயர்பெற்றவர்களின்' புகழ்ச்சி குறித்து எழுதி லக்கிலுக்க்குக்கு போட்டியாக வந்துவிடுவீர்கள் போல தெரிகிறது.

சூப்பர்... பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

வெண்பூ said...

நல்ல அனாலிஸிஸ் முரளி. அப்படியே ஒரு ரெண்டு போட்டோ போட்டிருக்கலாம் :)))) (அவரோட போட்டோ இல்ல. அவர் எடுத்த படத்துல இருந்து நடிகைகளோட போட்டோ)

கோவி.கண்ணன் said...

//எடுக்கும் டாப் ஆங்கிள் ஷாட் இரண்டையும் அவர் தன் கதாநாகியர் மீது பிரயோகித்தார். ரசிகனை குதூகலப்படுத்தினார்.//

தப்பு தப்பு, பம்பரம் சுழலும் லொகசன்களையும் அவர்தான் நடு ஆங்கிள் ஷாட் வைத்து எடுத்தார்.

ஆக 3 ஆங்கிள் !

ஒளிப்பதிவாளாரா ? ஒளிக்காத பதிவாளரா ?

:)

SurveySan said...

//ரெட்டை குழல் துப்பாக்கி//

ஸேம் ப்ளட்! :)

முரளிகண்ணன் said...

நர்சிம் ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

கோவி யார் வருகைக்கும், தகவலுக்கும் நன்றிகள்.

முரளிகண்ணன் said...

வெண்பூ, படம் போட்டா வீட்டில என் படத்துக்கு மாலை போட வேண்டியதுதான்

முரளிகண்ணன் said...

சர்வேசன் சார், வாங்க வாங்க

RATHNESH said...

கர்ணன் கொடை வள்ளல் என்பதை நிரூபித்தவர்.

கோவி.கண்ணனின் //ஒளிப்பதிவாளாரா ? ஒளிக்காத பதிவாளரா ?// வார்த்தைகளை இரவல் கொள்கிறேன். (மாதவி இரட்டை வேடத்தில் நடித்த "ஏதோ" படமாம். கோவி.கண்ணன்! அப்பாவி வேடம் உங்களுக்குப் பொருந்தவில்லை)

தனி வாழ்க்கையில் கர்ணன் மிகவும் வேறுபட்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் நம்பியார் போல்.

முரளிகண்ணன் said...

ஆமாம் ரத்னேஷ்,

அவர் ஒரு கட்டத்தில் திரைஉலகில் இருந்து விலகி, தற்போது சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பவர் என்று ஒரு பத்திரிக்கையில் படித்திருக்கிறேன்

சரவணகுமரன் said...

இது எதுவுமே எனக்கு தெரியாத தகவல்கள்.

பெரிய ஆளா இருப்பாரு போல? :-)

கோவி.கண்ணன் said...

//RATHNESH said...
கர்ணன் கொடை வள்ளல் என்பதை நிரூபித்தவர்.

கோவி.கண்ணனின் //ஒளிப்பதிவாளாரா ? ஒளிக்காத பதிவாளரா ?// வார்த்தைகளை இரவல் கொள்கிறேன். (மாதவி இரட்டை வேடத்தில் நடித்த "ஏதோ" படமாம். கோவி.கண்ணன்! அப்பாவி வேடம் உங்களுக்குப் பொருந்தவில்லை)
//

ரத்னேஷ் அண்ணா,
உண்மையிலேயே படம் பெயர் தெரியாது, இவ்வளவு எழுதிவிட்டு படம் பெயரை தெரிந்தே மறைக்க என்ன இருக்கிறது ?

அந்த பழைய துன்புறுத்தலால் கதாநாயகி ஒவ்வொருவரையும் தேடி தேடி கொலை செய்வாள். அந்த கொலைக்கு முன் கண்ணாடியில் பல்லி நகர முடியாமல் திணறுவதை டைரக்சன் சிம்பளாக காட்டுவார்கள். சவரக்கத்தியை வைத்து கொலை செய்வார் மாதவி.

முரளிகண்ணன் said...

சரவணகுமரன்,
உங்கள் வயது 25 எனில் நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

முரளிகண்ணன் said...

கோவிஜி,

அவரின் பல படங்களில் மாதவி நடித்துள்ளார். ஜான்ஸி,புதிய தோரனங்கள் குறிப்பிடத்தக்கவை. எல்லாமே பழிவாங்கும் கதைகள்தான். இரட்டைவேடம் என்பதால் ஜான்ஸி என நினைக்கிறேன். கதாநாயகன்& வில்லன் இதுதாண்டா போலிஸ் ராஜசேகர்.

கோவி.கண்ணன் said...

//இரட்டைவேடம் என்பதால் ஜான்ஸி என நினைக்கிறேன். கதாநாயகன்& வில்லன் இதுதாண்டா போலிஸ் ராஜசேகர்.//

இருக்கலாம்.

கோவி.கண்ணன் said...

//தனி வாழ்க்கையில் கர்ணன் மிகவும் வேறுபட்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் நம்பியார் போல்.

12/9/08 12:23
//

கண் கெட்ட பிறகு கர்ணனுக்கு 'அதி தேவதா பவ !'

புருனோ Bruno said...

//(அவரோட போட்டோ இல்ல. அவர் எடுத்த படத்துல இருந்து நடிகைகளோட போட்டோ)//

ஹி ஹி ஹி :) :)

நேயர் விருப்பம் போலிருக்கிறது

குட்டிபிசாசு said...

முரளி,
என்னதான் பலான படங்களாக இருந்தாலும். கர்ணனுடைய படங்களில் சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கும்.

கர்ணன் பற்றி சினிமா எக்ஸ்பிரஸில் நான் படித்தது.

http://www.cinemaexpress.com/archaics/150204/serials/serial1.asp

முரளிகண்ணன் said...

குட்டி பிசாசு, தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

Unknown said...

அந்த நாள் நியாபகம் வந்ததே! வந்த்தே!நாங்கள் அவர் படத்திற்கு லைப் மெம்பெர்.கௌபாய் வில்லன்கள்/ஹீரோக்கள் வருவார்கள்
bACKGROUNDIL THE GOOD,BAD,UGLY இசை யாரையாவது குதிரையில் கட்டி இழுத்து வருவார்கள். விசில் பறக்கும்.அவர் படத்தில்; சீன்கள் புஷ் புஷ் என்று பெருக்கல் குறியோடு எகிறும். காரணம் சென்சார்.
"சொல்லு கண்ணா சொல்லு" படம் சென்சார் செய்யபட்டு(ரத்த களரி ஆக்கப்பட்டு) ஒன்லி titles மிஞ்சியது.அந்த titlesக்கு "A" சர்டிபிகேட் வழகங்கப்பட்டது.
என்று சொல்லுவார்கள்.
இது எப்படி இருக்கு?

Unknown said...

அந்த நாள் நியாபகம் வந்ததே! வந்த்தே!

நாங்கள் அவர் படத்திற்கு லைப் மெம்பெர்

கர்ணன் படத்திற்கு என்று சில சமுட்த்ரிக லக்ஷநகள் உள்ளன .
அவை யாவன?

இரண்டு காலுக்கு கிஷே காமிரா ஓடும்

யாரையாவதுகுதிரையில் கட்டி இழுத்து வருவர்கள் (background music good,bad and ugly)

பெண் குதிரை வோடுமபோது டுப்பு என்பது தெரியும்

படத்தில்; சீன்கள் புஷ் புஷ் என்று பெருக்கல் குறியோடு எகிறும். காரணம் சென்சார்

"சொல்லு கண்ணா சொல்லு" படம் சென்சார் செய்யபட்டு(ரத்த களரி ஆக்கப்பட்டு)

ஒன்லி TITLES மிஞ்சியது. அந்த TITLESக்கு "A" சர்டிபிகேட் வழகங்கப்பட்டது என்று சொல்லுவார்கள்

அந்த படம் சரியாக இல்லை என்பது இன்றும் துக்கம் நெஞ்சை அடைக்கிறது

Pl. comment Murali Kannan.

Unknown said...

அந்த நாள் நியாபகம் வந்ததே! வந்த்தே!

நாங்கள் அவர் படத்திற்கு லைப் மெம்பெர்

கர்ணன் படத்திற்கு என்று சில சமுட்த்ரிக லக்ஷநகள் உள்ளன .
அவை யாவன?

இரண்டு காலுக்கு கிஷே காமிரா ஓடும்

யாரையாவதுகுதிரையில் கட்டி இழுத்து வருவர்கள் (background music good,bad and ugly)

பெண் குதிரை வோடுமபோது டுப்பு என்பது தெரியும்

படத்தில்; சீன்கள் புஷ் புஷ் என்று பெருக்கல் குறியோடு எகிறும். காரணம் சென்சார்

"சொல்லு கண்ணா சொல்லு" படம் சென்சார் செய்யபட்டு(ரத்த களரி ஆக்கப்பட்டு)

ஒன்லி TITLES மிஞ்சியது. அந்த TITLESக்கு "A" சர்டிபிகேட் வழகங்கப்பட்டது என்று சொல்லுவார்கள்

அந்த படம் சரியாக இல்லை என்பது இன்றும் துக்கம் நெஞ்சை அடைக்கிறது

Unknown said...

FINE

rapp said...

இவரைப் பற்றி ஜாஸ்தி தெரியாது. நீங்க போட்ட பதிவு பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். இவர் ஒரு பிரபலமானக் காமிரா மேதைன்னு நெறயப் பேர் பேட்டியில் சொல்லிக் கேட்டிருக்கேன், நீங்கதான் நல்லா அலசி பதிவிட்டிருக்கீங்க:):):)

முரளிகண்ணன் said...

கிருஷ்ணமூர்த்தி சார்,

தங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் நல்ல ரசிகர். நீங்கள் குறிப்பிட்டுள்ள சொல்லு கண்ணா சொல்லு நான் பார்க்கவில்லை

:-(((

பகிர்தலுக்கு நன்றிகள்

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...
ஆமாம் ரத்னேஷ்,
அவர் ஒரு கட்டத்தில் திரைஉலகில் இருந்து விலகி, தற்போது சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார்.//

திரு.கர்ணன் இறந்து ஒன்றரை வருடத்திற்கு மேலாகிவிட்டதாகத் தகவல் முரளி..

முரளிகண்ணன் said...

உண்மைத்தமிழன் அண்ணா,

நான் அறிந்த தகவல் 4 ஆண்டுகளுக்கு முந்தையது. எனவே உங்கள் தகவல் சரி என நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி