ஒரு படத்துக்கு வில்லன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கவர்ச்சி நாயகி/நடன மங்கை முக்கியமாக இருந்த காலகட்டம். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி சகோதரிகள் உச்சத்தில் இருந்த போது தமிழ் திரையுலகில் நுழைந்தவர் சில்க் ஸ்மிதா. இயற்பெயர் விஜயலட்சுமி, ஆந்திர மாநிலம் சூலூருவை சேர்ந்தவர். 1979 ல் வண்டிச்சக்கரம் படத்தில் ஸ்மிதா என்னும் பெயரில் தன் திரை வாழ்க்கையை துவங்கினார். அந்த படத்தில் அவரின் திரைப்பெயர் சில்க். பின்னர் அப்பாத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டார்.
வண்டிச்சக்கரத்தில் அறிமுகமான அவர் பல படங்கள் ஓட சக்கரமாய் இருந்தார். பத்து ஆண்டுகள் தமிழ் திரைஉலகின் கனவுக்கன்னியாய் கோலோச்சினார். இவரின் நடனம் இருந்தால் மட்டுமே படத்தை வாங்குவேன் என வினியோகஸ்தர்கள் அடம் பிடித்தனர். படப்பிடிப்பு இடைவேளையில் இவர் கடித்து வைத்த ஆப்பிள் 300 ரூபாய்க்கு ஏலம் போனது. இவர் கதாநாயகியாக நடித்த சில்க் சில்க் சில்க், போலிஸ் போலிஸ் போன்ற படங்கள் சி சென்டர்களில் நல்ல ஒட்டம் ஓடின.
ரஜினி,கமல்,விஜயகாந்த்,சத்யராஜ் போன்ற அனைத்து நடிகர்களின் படத்திலும் இடம்பிடித்தார். அனுராதா, டிஸ்கோ சாந்தி யின் வரவுக்கு பின்னால் இவரின் மார்க்கெட் சரிந்தது. இன்றைய தலைமுறை நடிகர்களில் விஜய் வரை நடித்தவர்.
1981 அலைகள் ஓய்வதில்லை
கதாநாயகிக்கு ஆதரவாக இருக்கும் அண்ணி வேடம். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
1982 மூன்றாம் பிறை
வயதான கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு இளைஞனை விரும்பும் கேரக்டர். இவர் கமலுடன் இணைந்து ஆடிய பொன்மேனி உருகுதே என்ற பாடல் யாராலும் மறக்கமுடியாத ஒன்று
1983 மூன்றுமுகம்,
சகலகலா வல்லவனில் கமலுடன் இவர் ஆடிய நேத்து ராத்திரி யம்மா, 25 ஆண்டுகள் கழித்து சிவாஜி வரை நிலைத்து நின்றது.
அடுத்த வாரிசு
ரஜினியை பணமில்லாததால் நிராகரிக்கும் பாத்திரம். பேசக் கூடாது வெறும் பேச்சில் இல்லை சுகம் என்னும் பாடலில் இருவரின் கெமிஸ்ட்ரி அருமையாக இருக்கும்
தங்க மகன்
இதிலும் ரஜினியுடன் இவர் இணைந்து ஆடிய அடுக்கு மல்லிகை என்னும் பாடல் அசத்தல் ரகம்
கோழி கூவுது
ஏதோ மோகம் என்னும் பாடலில் பிரபு உடன் நடித்திருப்பார்.
சூரக் கோட்டை சிங்கக்குட்டி
இதில் பிரபுடன் இணை. காளிதாசன், கம்ப தாசன் என்னும் இனிமையான பாடல் உண்டு
1985 பாயும்புலி
ரஜினியுடன் இவர் ஆடிய ஆடி மாச காத்தடிக்க பாடல் மிக பிரபலம்
1988 ஜீவா, கனம் கோர்ட்டார் அவர்களே
ஜீவாவில் புகைப்படக்காரராய் சத்யராஜ் மாடலாக சில்க். அந்த பாடலின் ஸ்டில்கள் இன்றும் பிரபலம்.
1989 பிக்பாக்கெட்
போலிஸ் அதிகாரியாக இவர் நடித்த படம். மஞ்சக் குருவி என்னும் பாடலும் உண்டு.
1994 தோழர் பாண்டியன்
1995 ஸ்படிகம்,கோயம்புத்தூர் மாப்பிள்ளை
ஸ்படிகம், இது வீறாப்பு என சுந்தர் சி நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. ஒரிஜினலில் மோகன்லால். இவர் ஆட்டக்காரி. இருவரையும் இணைந்து விலங்கு போட்டு அழைத்து செல்லும் ஸ்டில் அருமையாக இருக்கும். விஜய்யுடன் இணைந்து கோயம்புத்தூர் மாப்பிள்ளை யில் இவர் ஆடிய அண்ணாமலை தீபம் பாடலும் ஹிட்டே.
இவர் கதானாயகியாய் நடித்து ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய அன்று பெய்த மழையில் என்னும் படத்திலும், தம்பிக்கு ஒரு பாட்டு என்னும் படத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
1996
டிசம்பர் 23 அன்று குடும்ப வாழ்வில் (தாடிக்காரர்?) ஏற்பட்ட பிரச்சினைகளால் தன் முப்பத்தைந்து வயதில் (பிறந்த தேதி டிசம்பர் 2, 1960) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பிற்குப்பின் சுபாஷ் என்னும் அர்ஜூன்,ரேவதியுடன் இவர் நடித்த படம் வெளிவந்தது.
டீ ஆர் ராஜகுமாரிக்குப்பின் கண்ணாலேயே அனைவரையும் கவர்ந்த இவர் காலங்களை கடந்தும் நம்மிடையே இருப்பார்
போட்டோ கர்ட்டஸி
http://www.dailomo.com/
36 comments:
அவரை பற்றி எழுதாமல் தமிழ் சினிமா வரலாறு முழுமையடையாது முரளி. நல்ல பதிவு..
தலைவா..
இதுபோல இன்னும் எத்தனி மேட்டர் கைல வெச்சிருக்ககீங்க?!
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டவை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக நடித்தார். ”அடியேய் மனம்..” என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது.
நாளைக்கை சங்கத்த தொடங்கிரேன் உங்கள தலைவரா போட்டு
வலையுலகில் எங்கள் தலைவியின் புகழ்பரப்பும் அண்ணன் அஞ்சாநெஞ்சன் வலையுல அல்டிமேட்ஸ்டார் மு.க வாழ்க
1996
டிசம்பர் 23 அன்று குடும்ப வாழ்வில் (
இல்லை சார்
அது செப்டம்பர் 23, திங்கள் கிழமை. எனக்கு நன்றாக் ஞாபகம் இருக்கிறது.
செப்டம்பர் 28 சனி கிழமை எங்கள் கல்லூரியின் “டாம்போனேட்” விழா. அதற்கான ஏற்பாட்டு கூட்டம் நடந்தது அந்த திங்கள். அன்று தான் இந்த செய்தி குறித்து பேசிக்கொண்டிருந்தது நினைவு இருக்கிறது
--
//நாளைக்கை சங்கத்த தொடங்கிரேன் உங்கள தலைவரா போட்டு
வலையுலகில் எங்கள் தலைவியின் புகழ்பரப்பும் அண்ணன் அஞ்சாநெஞ்சன் வலையுல அல்டிமேட்ஸ்டார் மு.க வாழ்க//
initials மு.க நன்றாக இருக்கிறதே
அவசர போலிஸ் 100ல பாக்யராஜ் ஜோடியா சின்னப்பாப்புவா வந்து "பாவா, பாவா"னு சொல்லி கலக்கனார் :)
லக்கி மேன்ல கவுண்டரை மயக்க குலு குலு கூல் சாப்பிட்டு கலக்கினார்...
ஆனா இவரோட பெஸ்ட்னா அலைகள் ஓய்வதில்லை தான்...
//படப்பிடிப்பு இடைவேளையில் இவர் கடித்து வைத்த ஆப்பிள் 300 ரூபாய்க்கு ஏலம் போனது//
அடப்பாவிகளா!
//கமலுடன் இணைந்து ஆடிய பொன்மேனி உருகுதே என்ற பாடல் யாராலும் மறக்கமுடியாத ஒன்று //
தூள் கிளப்பும்
//ரஜினியுடன் இவர் இணைந்து ஆடிய அடுக்கு மல்லிகை என்னும் பாடல் அசத்தல் ரகம் //
உண்மையாகவே
//குட்டிபிசாசு said...
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டவை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக நடித்தார். ”அடியேய் மனம்..” என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது//
ஆமாங்க! செம பாட்டு ..மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்
ஆனா இவரோட இறுதி ஊர்வலத்தில் முன்னணி நடிகைகள் நடிகர்கள் யாரும்
(ரேவதி, ரஞ்சிதா, ரோகினி, அர்ஜுனைத் தவிர) கலந்துக்கலை இல்லைங்களா?
//1996
டிசம்பர் 23 அன்று குடும்ப வாழ்வில் (
இல்லை சார்
அது செப்டம்பர் 23, திங்கள் கிழமை. எனக்கு நன்றாக் ஞாபகம் இருக்கிறது.
//
ஆமாம், ஏன்னா இந்த பரபரப்பு அடங்கினக் கொஞ்ச நாளில்(தீபாவளி முடிந்து) மாணவர் நாவரசு மறைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
//பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டவை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக நடித்தார். ”அடியேய் மனம்..” என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது//
வழிமொழிகிறேன். இந்தப்பாடலை இன்னொரு காரணத்திற்காகவும் மறக்கமுடியாது. என்னன்னா, அவ்ளோ நல்லப் பாட்டுக்கு ஸ்மித்தா அவ்ளோ நல்லா ஆடுவாங்க, ஆனா பக்கத்தில் தியாகராஜன் ஒரு கொடுமைப்படுத்துவாரே, யப்பா, பாக்கும்போது பாலு மஹேந்திரா அவர்களை எப்படில்லாம் திட்டத் தோணும் தெரியுமா? இப்போல்லாம் மானாட மயிலாட டைப் நிகழ்ச்சிகளில் சொல்றாங்களே 'நான் சிங்க்னு' அதுக்கு வடிவம் கொடுத்த மாதிரி இருக்கும் அவரோட பங்களிப்பு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................................
//அனுராதா, டிஸ்கோ சாந்தி யின் வரவுக்கு பின்னால் இவரின் மார்க்கெட் சரிந்தது.//
டிஸ்கோ சாந்தி அவர்கள் சரிங்க, ஆனா அனுராதா, ஸ்மித்தா அவர்களோட ஒரே காலக்கட்டத்தில் நடிச்சவங்க இல்லைங்களா? அவங்க, ஸ்மித்தா ஆதிக்கம் செலுத்திக்கிட்டு இருந்த காலக்கட்டத்துலயே திருமணமெல்லாம் முடிச்சு, நீலா மாலா சீரியலில் நடிக்கப் போயிடலை?
//ஆமாம், ஏன்னா இந்த பரபரப்பு அடங்கினக் கொஞ்ச நாளில்(தீபாவளி முடிந்து) மாணவர் நாவரசு மறைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது//
சரியாக சொன்னீர்கள்
நாவரசு மரணம் (கொலை) நடந்தது நவம்பர் 1996
Silk Silk Silk & Police Police
nalla padangal
good post
வருகைக்கு நன்றி ராப்.
வருகைக்கு நன்றி வெண்பூ. அருமையான நடிகை, நம் திரையுலகம் ஆட்டக்காரியாக மட்டுமே பார்த்தது
\\இதுபோல இன்னும் எத்தனி மேட்டர் கைல வெச்சிருக்ககீங்க?!
\\
பரிசலாரே ரொம்ப சோதிக்க மாட்டேன். இன்னும் கொஞ்சம் தான்.
\\நாளைக்கை சங்கத்த தொடங்கிரேன் உங்கள தலைவரா போட்டு
\\
அதிஷா, இப்படித்தான் சோனா மேட்டர்லயும் சொன்னீங்க. ஒன்னும் நடக்கலையே?
\\அது செப்டம்பர் 23, திங்கள் கிழமை. எனக்கு நன்றாக் ஞாபகம் இருக்கிறது.
\\
புருனோ, வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. திருத்திக் கொள்கிறேன்
\\பாக்யராஜ் ஜோடியா சின்னப்பாப்புவா வந்து "பாவா, பாவா"னு சொல்லி கலக்கனார் :)
\\
பாலாஜி, வருகைக்கு நன்றி. இணைத்துக் கொள்கிறேன்
\\அடியேய் மனம்..” என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது\\
குட்டி பிசாசு வருகைக்கு நன்றி,
தகவலை இணைத்துகொள்கிறேன்
//படப்பிடிப்பு இடைவேளையில் இவர் கடித்து வைத்த ஆப்பிள் 300 ரூபாய்க்கு ஏலம் போனது//
கிரி, இப்போதைய விலையில் 6000 ரூபாயாவது இருக்கும்.
\\”அடியேய் மனம்..” என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது\\
ஆமாம் மறந்து விட்டேன்.
தகவலை இணைத்துகொள்கிறேன்
\\அவ்ளோ நல்லப் பாட்டுக்கு ஸ்மித்தா அவ்ளோ நல்லா ஆடுவாங்க, ஆனா பக்கத்தில் தியாகராஜன் ஒரு கொடுமைப்படுத்துவாரே, யப்பா, \\
\\மானாட மயிலாட டைப் நிகழ்ச்சிகளில் சொல்றாங்களே 'நான் சிங்க்னு' அதுக்கு வடிவம் கொடுத்த மாதிரி இருக்கும் \\
ஆமாம் ராப். 100% சரி
நான் அண்மையில் ஒரு பெண்ணின் கதை-சில்க்..என்ற புத்தகத்தைப் படித்தேன்.அதைப்பற்றி எழுதலாமென எண்ணியிருந்தேன்...அதற்குள் நீங்கள் முந்திவிட்டீர்கள்...... முடிந்தால் அந்த புத்தகம் படித்துப்பாருங்கள்....
ராப்,
\\ஆனா அனுராதா, ஸ்மித்தா அவர்களோட ஒரே காலக்கட்டத்தில் நடிச்சவங்க இல்லைங்களா? \\
சில்க் உச்சத்தில் இருக்கும் போது தான் அனுராதா வந்தார். தங்க மகன் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். அப்போது பிரபலமாக இருந்த பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளில், ஒருமுறை சில்க்கின் படத்தை போட்டு ஆயிரம் அனுராதா வந்தாலும் என்னை அசைக்க முடியாது என்ற கமெண்டை பார்த்த ஞாபகம் இருக்கிறது. வந்த இரண்டு மூன்று வருடங்களில் இவர் வாய்ப்புகளை அவர் குறைத்துவிட்டார்
\\Silk Silk Silk & Police Police
nalla padangal\\
கானா பிரபா,
இதில் ஏதும் உள்குத்து இல்லையே?
\\நான் அண்மையில் ஒரு பெண்ணின் கதை-சில்க்..என்ற புத்தகத்தைப் படித்தேன்.அதைப்பற்றி எழுதலாமென எண்ணியிருந்தேன்...அதற்குள் நீங்கள் முந்திவிட்டீர்கள்...... முடிந்தால் அந்த புத்தகம் படித்துப்பாருங்கள்\\
மோகன் தங்கள் வருகைக்கு நன்றி,
உங்களுடைய கோணத்தில் அதை எழுதலாமே?
மிக்க அருமை முரளி அவர்களே!! அவர் நடித்த கோழி கூவுது பாடல்களையும் மறக்க முடியாதவை...
வருகைக்கு நன்றி புகழேந்தி, ஏதோ மோகம் என்னும் பாடலில் கலக்கி இருப்பார்.
லயனம்
-------------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
முரளி
சில்க் பதிவு அருமை! 3 அல்லது 4 வருடம் முன்பு உருப்பாடத நாரயணம் சில்க் பற்றி எழுதிய பதிவை நீங்கள் படித்தது உண்டா?
மீண்டும் சில்கின் நினைவு கூறலுக்கு நன்றி!
மயிலாடுதுறை சிவா...
மு.க சில்குக்கு இன்னைக்கும் இருக்கும் மவுச பாருங்க. உங்க மற்ற பதிவுகளை விட இதுக்கு பின்னூட்டமா வந்து குமியுது பாருங்க :)
வருகைக்கு நன்றி தறுதலை. லயனம் மலையாளப்படம் என்பதால் சேர்க்கவில்லை.
வருகைக்கு நன்றி மயிலாடுதுறை சிவா.
நாராயணன் (உருப்படாது) அவர்களின் எல்லா பதிவுகளும் படித்துள்ளேன். குறிப்பாக புதுப்பேட்டை பட சமயத்தில் அவர் வடசென்னை பற்றி எழுதிய இடுகைகள் அவர் மாஸ்டர் பீஸ் எனலாம்.
\\மு.க சில்குக்கு இன்னைக்கும் இருக்கும் மவுச பாருங்க. உங்க மற்ற பதிவுகளை விட இதுக்கு பின்னூட்டமா வந்து குமியுது பாருங்க\\
ஆமாம் அப்துல்லா, ஆண்கள் ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு மட்டுமே ரசிகராய் இருப்பார்கள். ஆனால் எல்லா அழகான நடிகைகளுக்கும் அவர்கள் ரசிகராய் இருப்பார்கள்.
மறக்க முடியுமா???
Post a Comment