September 19, 2008

தலைமுறையை உருவாக்கும் இயக்குனர்கள்

கடந்த 40 ஆண்டுகளில் அதிகமான, சிறந்த படங்களை தந்த இயக்குனர்கள் என்றால் ஸ்ரீதர்,பாலசந்தர்,பாரதிராஜா,மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா இவர்களை சொல்லலாம். இவர்களில் யாருக்கும் இல்லாத சிறப்பு பாரதிராஜாவுக்கு உண்டு. இவரின் உதவி இயக்குனர்கள், பின்னர் அவர்களிடம் உதவியாய் இருந்தவர்கள் என மூன்று, நான்கு தலைமுறை வரையில் இவரது ஆதிக்கம் தமிழ் சினிமாவில் தொடருகிறது.


முதல் : பாக்யராஜ்

இரண்டு : கோலப்பன்,பாண்டியராஜன், பார்த்திபன், வி.சேகர்

மூன்று : விக்ரமன்,கே எஸ் ரவிகுமார், சேரன்

நான்கு : ராஜகுமாரன், ஜெகன்,

மணிவண்ணன் ->செல்வமணி,சுந்தர் சி -> சுராஜ்
இதுபோல பல உதாரணங்களை சொல்லலாம்.

ஸ்ரீதர் அவர்களின் உதவி இயக்குனர்கள் என்றால் சி வி ராஜேந்திரன், கோபு பாபு, சந்தான பாரதி, பி வாசு ஆகியோர். ஆனால் இம்மாதிரி தலைமுறை உருவாகவில்லை.

பாலசந்தரிடம் அனந்து, அமீர்ஜான்,சுரேஷ் கிருஷ்னா,வசந்த், சரண் என்று இருந்தாலும் பெரிய தலைமுறை என்று சொல்ல முடியாது. இதில் அனந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாகவே இருந்தவர். கமலின் அணுக்கத் தோழர். கமல் அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்தார். ஹே ராம் படத்தை அவருக்கே சமர்ப்பனம் செய்தார்

பாலு மகேந்திரா விடம் இருந்து பாலா,அமிர்,வெற்றி மாறன், ராம், சசி ஆகியோர் வந்து இருந்தாலும் அது 1998 க்கு பின்னரே. (20 ஆண்டுகள் கழித்து)
மணி ரத்னம் இன்னும் மோசம். அழகம் பெருமாள், சுசி கணேசன், கண்ணன் என சிலரே சோபித்துள்ளனர்
பாரதிராஜா வின் உதவி இயக்குனர்கள் பெரிய அளவில் வர என்ன காரணம் என்ன என்று பார்க்கும்போது பல செய்திகள் தெரியவருகின்றன. முதலில் மணி ரத்னம் அவர்களுடன் ஒப்பிடுவோம். பின்னர் மற்ற இயக்குனர்களுடன் ஒப்பிடுவோம்.

16 வயதினிலே படப்பிடிப்பு, பாக்யராஜின் வசனம் திருப்தி இல்லை. காட்டு கத்து கத்துகிறார் பாரதி ராஜா. வெறியுடன் சென்ற பாக்யராஜ் திரும்பி வருகிறார். அந்த வசனம் தான் அதன் பின் நடிக்க வாய்ப்பு கேட்பவர்கள் எல்லாம் பேசி காட்டியது. பராசக்திக்குப் பின் புகழ்பெற்றது. ஆத்தா ஆடு வளர்த்தா என்ற வசனம் தான் அது. மணிவண்னனின் கதை நிழல்கள், அது தோல்வி. பின்னரும் அவரிடம் நம்பிக்கை வைத்து அடுத்த கதை கேட்கிறார். அலைகள் ஓய்வதில்லை ஹிட். தன் உதவியாளர்கள் பாக்யராஜ்,மணிவண்னனை தன் படங்களில் நடிக்க வைக்கிறார்.

மணி ரத்னத்தை எடுத்துக் கொள்வோம். அவர் மனைவி அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிரார். "அவர் தனியே அமர்ந்து ஸ்க்ரிப்ட் எழுதுவார். எந்த காட்சிக்கு எவ்வளவு கை தட்டல் கிடைக்கும் என்று சொல்வார்" . இங்கு உதவி இயக்குனர்கள் அவர் இயக்கும் விதத்தை பார்ப்பவர்களே. கதை வேண்டுமெனில் சுஜாதா (உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து) அல்லது செல்வராஜ் (அலைபாயுதே) என விற்பன்னர்களிடம் பெற்றுக்கொள்வார். வசனமும் பாலகுமாரன் (நாயகன்), சுஜாதா (ரோஜா மற்றும் பல படங்கள்) வாங்கிக் கொள்வார்.

ஒவ்வொரு மனிதனிடம் ஒரு கதை இருக்கும், அதை எப்படி காட்சிப்படுத்துவது என்பதே இயக்கம். பாரதிராஜா தன் உதவியாளர்களின் கதையை திரைக்கதையாக்குகிறார், பின்னர் காட்சிப்படுத்துகிறார். எவ்வாறு தன் கதை மாற்றம் பெறுகிரது என்பதை அணு அணு வாக காண்பவனுக்கு கிடைக்கும் அனுபவம் அவனை மெருகேற்றும். மணி ரத்னம் தன் ஸ்க்ரிப்டை தன் பாணியில் படமாக்குகிறார். திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் அவரின் கண்ணசைவில் பணிகளை நிறைவேற்றுகிறார்கள். இங்கு உதவி இயக்குனரும் ஒரு பணியாளரே. எப்படி கோணங்கள் வைப்பது, பெர்பெக்ஷன் போன்றவற்றை கற்றுக் கொள்ளலாமே தவிர இயக்குவதை அல்ல.

இதனால் தான் மணிரத்னம் படங்களில் குழந்தைகள் ஒரே மாதிரி பேசுகிறார்கள், பெண்கள் ஒரே மாதிரி பாவம் காட்டுகிறார்கள். நாயகர்களும் ஒரே டோனில் பேசுகிறார்கள். படங்களிலும் ஒருவித டெம்பிளெட் வந்துவிடுகிறது. பாரதி ராஜாவின் படங்களில் உதவியாளர்களின் தாக்கமும் இருப்பதால் தான் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என பலவித கேரக்டர்கள், கதைகளங்கள், கேரக்டர் மாடுலேஷன்கள் அமைகின்றன.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்

இதற்க்கான கருவை கொடுத்த பதிவர் பைத்தியக்காரனுக்கு நன்றிகள்

மணிரத்னம் படங்களின் டெம்ப்லேட் பற்றி பதிவர் பினாத்தல் சுரேஷ் அவர்கள் இரண்டு வருடம் முன்பு ஒரு பதிவு எழுதி இருந்தார். அவருக்கு என் நன்றிகள்.

25 comments:

கே.என்.சிவராமன் said...

முரளி,

வழக்கம் போல் பதிவு உங்கள் பாணியில் நன்றாக வந்திருக்கிறது. தொடருங்கள்.

அடுத்தவர் சொல்லும் கதைகளை ரசிக்கும் ரசனை பாரதிராஜாவிடம் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதும், அந்த உணர்ச்சியில் திளைப்பதும் அவரது பலம். அதுவே சில நேரங்களில் பலவீனமாகவும் மாறிவிடுகிறது. இந்த பலம் இருப்பதால்தான் அவரால் தலைமுறைகளை உருவாக்க முடிந்தது. முடிகிறது.

போதிய பணத்தை பாரதிராஜா தர மாட்டார். ஆனால், நல்ல கதையை யார் சொன்னாலும் கண்கலங்க அவனை அணைத்து கொண்டாடும் இயல்பு அவரிடம் உண்டு. மற்றவர்களிடம் அது இல்லை. தனக்கு மட்டுமே கதை சொல்லவும், ரசிக்கவும் தெரியும் என்ற ஈகோ, அவர்களுக்குள் இருக்கும் ரசிகனை அமுக்கிவிடுகிறது. 'சொன்னதை மட்டுமே செய்டா..' என உதவியாளர்களிடம் பேசுபவர்கள்தான் இங்கு அதிகம்.

பிறகு ஒரு வார்த்தை. இந்தப் பதிவுக்கான 'கரு'வை நான் தரவில்லை. உங்களுக்குள் புதையுண்டு இருந்ததை அடையாளம் காட்டினேன். அவ்வளவுதான்.

நான் சொல்லவில்லையென்றாலும் வேறு நண்பர்கள் உங்களுக்கு அடையாளம் காட்டியிருப்பார்கள். அல்லது நீங்களே கண்டெடுத்திருப்பீர்கள்.

உங்கள் அளவுக்கு தமிழ் சினிமா குறித்த அறிவு எனக்கில்லை. எனவே முழு பாராட்டும் உங்களுக்கே உரியுது. இது போன்ற பதிவை என்னால் எழுத முடியவில்லை என்பதிலிருந்தே இது தெரியவில்லையா?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

anujanya said...

முரளிகண்ணன்,

நீங்கள் தமிழ் சினிமா பற்றி எழுதும் பல பதிவுகளை எதனாலோ தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தேன் படிக்காமலே. நல்ல அவதானிப்புடனும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது உங்கள் கட்டுரை. மணி படங்கள் எவ்வளவு trendy ஆக இருந்தாலும், ஒருவித அலுப்பு தரும் காரணத்தை அழகாக விளக்குகிறீர்கள்.

அனுஜன்யா

சரவணகுமரன் said...

ஆழமான ஆய்வு... அருமையா வந்திருக்கு பதிவு... வாழ்த்துக்கள்...

சரவணகுமரன் said...

மனோபாலாவும் பாரதிராஜாவின் உதவி இயக்குனர்தானே?

சரவணகுமரன் said...

ஷங்கர், அவருடைய உதவி இயக்குனர்கள் பற்றியும் உங்கள் வரும் பதிவில் சொல்லுங்கள்.

சரவணகுமரன் said...

எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜாவிடமும் வசந்திடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்று நினைக்கிறேன். கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு காட்சியில் வருவார்.

நந்தா said...

முரளி கண்ணன் கலக்கல் பதிவு. அடுத்த பகுதியை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

உங்களது கடந்த சில பதிவுகள் முற்றிலும் புதிய பரிமாணமாய் இருக்கின்றது. குறிப்பாக விஜயகாந்த் பற்றிய பதிவு.

தொடருங்கள்.

http://blog.nandhaonline.com

சரவணகுமரன் said...

பாலு மகேந்திரா -> சீமான்

சென்ஷி said...

வழக்கம்போல அழகான ஆனால் ஆழமான கட்டுரை முரளி.. வாழ்த்துக்கள்..

Bee'morgan said...

மிகத் தெளிவான அலசல்.. படிக்கும் போதே, அட ஆமாம்ல என்று எண்ண வைக்கிறது.. காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக..

முரளிகண்ணன் said...

பைத்தியக்காரன் தங்கள் ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

அனுஜன்யா தங்கள் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

சரவணகுமரன் தங்கள் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

நந்தா உங்களின் பாராட்டு உற்சாகத்தை தருகிறது

லக்கிலுக் said...

உங்களது இந்த சினிமா தொடர் பதிவுகள் சுவாரஸ்யமான பத்திரிகைத் தொடருக்கான அனுபவத்தை தருகிறது. தொடருங்கள்.

முரளிகண்ணன் said...

ஷென்சி,பீமோர்கன், லக்கி தங்கள் வருகைக்கு நன்றி

narsim said...

முரளி கண்ணன்.. வழக்கம்போல் கலக்கல்..

அருமையான களம்.. அதை அருமையாக கையாண்டிருக்கிறீர்கள்.. அத்தனை விபரங்களும் அருமை!

இரண்டு மூன்று முறை படிக்கத்தூண்டும் பதிவு.. தொடருங்கள்..

நர்சிம்

Unknown said...

16 வயதினிலே, கலைமணி தானே வசனம், பாக்யராஜ் எப்படி வந்தார்

Unknown said...

16 வயதினிலேக்கு கலைமணி தானே வசனம், பாக்யராஜ் எப்படி வந்தார்

முரளிகண்ணன் said...

\\16 வயதினிலேக்கு கலைமணி தானே வசனம், பாக்யராஜ் எப்படி வந்தார்\\

வருகைக்கு நன்றி ஜபருல்லா,

பாரதிராஜாவே சொன்னது அது. இணைந்தே பணியாற்றினார்கள். கிரெடிட் ஒருவருக்கு கொடுத்தார்கள்

Subash said...

நல்ல விளக்கம்
நல்ல ஆராய்ச்சி
நன்றி
( அனா பாரதிராஜா படங்கள் அவ்வளவாக பிடிக்கதில்லைஇ மணி தான் Fav )

கானா பிரபா said...

//சரவணகுமரன் said...

பாலு மகேந்திரா -> சீமான்//

சீமான் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருக்கவில்லை.

முரளிகண்ணன் said...

சுபாஷ்,கானாபிரபா வருகைக்கு நன்றி

Costal Demon said...

நன்றாக அலசியிருக்கிறீர்கள்...மென்மேலும் படிக்கத் தூண்டுகிறது. தொடருங்கள்

இராம்

முரளிகண்ணன் said...

ராம் தங்கள் வருகைக்கு நன்றி