September 09, 2008

ரோபோ ஆரம்பம் - மர்மயோகி குழுவினர் நிம்மதி

ரஜினியின் ரோபோ ஆரம்பிக்கப்பட்டவுடன் எல்லோர் கவனமும் அதை நோக்கி திரும்பிவிட்டது. இணைய தளங்கள்,பத்திரிக்கைகள்,பிளாக்குகள் என அனைவரும் அதைப்பற்றியே பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கும் 365 நாட்களுக்கும் செய்தி வேண்டுமல்லவா?


இந்த விஷயத்தில் அதிக சந்தோஷம் அடைந்திருப்பது மர்மயோகி வட்டாரமே. தசாவதார வெற்றியாலும், குசேலன் சுருண்டதாலும் மர்மயோகி பற்றி எழுத வேண்டிய நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டன. ஏனென்றால் எல்லாத்தரப்பும் இவர்களைப் பற்றிய செய்தியைத்தான் அதிகம் படிக்கிறார்கள்.


ரஜினிக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் கமலை விட ரஜினிக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும். இனி மர்மயோகியைப் பற்றி பிரஸ் ரிலீஸ் கொடுத்தால் கூட போடுவார்களா என்பது சந்தேகமே. அதனால் தேவையற்ற செய்திகள் வெளியாகது. ஹைப்பும் எழும்பாது. அந்த படம் எடுக்கப்படும் 2 வருடங்களில் சத்தமில்லாமல் நம் படத்தை முடித்துவிடலாம் என அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

28 comments:

சரவணகுமரன் said...

ச்சீ ச்சீ... இந்த பழம் புளிக்கும் :-)

முரளிகண்ணன் said...

சரவண குமரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வெண்பூ said...

ரெண்டுமே வராம இருந்தாதான் நமக்கு நிம்மதி.. :)

narsim said...

பார்க்கலாம் என்ன தான் எடுக்கறாங்கனு..

நல்லா எழுதியிருக்கீங்க..

நர்சிம்

முரளிகண்ணன் said...

ஆமாம் வெண்பூ, அப்பதான் நம் கவனமும் வேறு பக்கமும் திரும்பும்

முரளிகண்ணன் said...

நரசிம், வருகைக்கு நன்றி.
ஷங்கரின் மேல் எனக்கு நம்பிக்கையே இல்லை. உலக அளவில் டெக்னீசியன்களை பணி அமர்த்தி உள்ளனர். ஆனால் இப்பொழுதும் பாட்டைத்தான் படமாக்குகிறார்கள். பாட்டு இல்லாமல் எடுக்கலாமே?. படம் முடிந்து பார்த்தால் "இந்த கூழுக்கு தானா இருபத்தெட்டு நாமம்" என்று எல்லோரும் பேசப்போகிறார்கள்

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பர் :):):)

rapp said...

மர்மயோகி கதாநாயகி யாருங்க? திரிஷாவா இல்லை வேற யாராவதா?

முரளிகண்ணன் said...

ராப் இப்பொதைய நிலவரப்படி, ஹேமமாலினி மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியில் படம் ஓட அங்குள்ள கதாநாயகி வேண்டும். எனவே கஜோலை அணுகினார்கள். அவர் மறுத்து விட்டார்.
திரிஷா உடன் பேசப்பட்டுள்ளது.
யார் யாரிடம் கால்ஷீட் உள்ளது என விசாரிக்க கூட முடியவில்லை. இணைய தளங்களின் செய்திப்பசியால் அதை உடனே செய்தியாக்கி விடுகிறார்கள் என ராஜ்கமல் வட்டார ஆள் ஒருவர் தெரிவித்தார்

Chef Ramu said...

கவலைய விடுங்க... இருக்கவே இருக்கு ஆடியோ ரிலீஸ். அன்னிக்கு ஜாக்கிசான் மச்சானையும்,அமிதாப் பையனையும் கூப்பிட்டு ”ஜாக்கிசான் மச்சான் ரொம்ப நல்லவர், இனி அவர் என் தோஸ்துனு சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்பதை பெருமையில்லாமல் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறும் இந்த இனிய வேளையில் தமிழ் ஆசான் மு.க விடம் நான் தமிழ் பயின்றேன் .... ”
ஏதாச்சும் அடிச்சு விட்டு மீடியாவ அலர்ட் பண்ணிடலாம்!

முரளிகண்ணன் said...

அப்படித்தான் செஞ்சாகனும். சிவாஜி வெளியாகும் வரை தசாவதாரம் செய்திகளை (கிட்டத்தட்ட ஒரு வருடம்) மீடியாக்கள் கன்டு கொள்ள வில்லை. பின்னர் தான் ஹைப் ஏற்பட்டது. ஜாக்கி வருகை உச்சத்துக்கு கொண்டுபோனது. ஆனால் அது எல்லாமே நல்லதுக்குத்தான். peak at right time தான் நல்லது

அது சரி said...

//
ரஜினிக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் கமலை விட ரஜினிக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும்.
//
ரஜினி இல்லாட்டி விகடனுக்கெல்லாம் பாதி நாளு பிஸினஸே இல்ல! இப்பிடி சினிமாக்காரங்களுக்க்கு மட்டுமில்லாம, பத்திரிக்கை காரங்களுக்கும் சோறு போட்றது ரஜினி!

நக்கீரன் கோபாலை கேட்டா உண்மைய சொல்லுவாரு.

"நக்கீரன் நடத்துனதுல மொதல்ல நஷ்டம் தான் வந்துச்சி. ரஜினி ரசிகன்னு ஒரு புக் ஆரம்பிச்சி, அதுல வ ந்த லாபத்துல தான் சொ ந்தமா பிரஸ் வாங்கி, நக்கீரனையே தொடர்ந்து நடத்த முடிஞ்சது. இன்னைக்கிம் நக்கீரன் வருதுனா அதுக்கு முக்கிய காரணம் ரஜினி ரசிகன் தான்..."

இது நான் சொன்னதுல்ல, கோபாலே ஒரு பேட்டில சொன்னது!

கிரி said...

//ஷங்கரின் மேல் எனக்கு நம்பிக்கையே இல்லை. உலக அளவில் டெக்னீசியன்களை பணி அமர்த்தி உள்ளனர். ஆனால் இப்பொழுதும் பாட்டைத்தான் படமாக்குகிறார்கள். பாட்டு இல்லாமல் எடுக்கலாமே?. படம் முடிந்து பார்த்தால் "இந்த கூழுக்கு தானா இருபத்தெட்டு நாமம்" என்று எல்லோரும் பேசப்போகிறார்கள்//

ஷங்கர் பாட்டை முதலில் எடுப்பது அவரோட செண்டிமெண்ட் விஷயம் ரோபோ க்கு என்றில்லை அனைத்து படங்களுக்குமே அவர் அவ்வாறு தான் செய்வார்.

உங்கள் ரஜினி சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு கருத்து கூற தான் நினைக்கிறேன், ஆனால் கமல் ஆதரவு ஊரில் ரஜினி க்காக பேசினால் அது அர்த்தமற்றது என்று கூறுவதில்லை.

ரஜினியை தாழ்த்தி தான் கமலை உயர்த்த வேண்டும் என்பதில்லை, கமலுக்கென்று எடுத்து கூற பல விஷயங்கள் உண்டு.

முரளிகண்ணன் said...

அன்பு கிரி,

வருகைக்கு நன்றி.

ஷங்கர் நல்ல டைரக்டர் கிடையாது என்பது என் கருத்து. அதனால் தான் அதைச் சொன்னேன்.

ரஜினியை நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியல்வாதியாகவோ,புனிதராகவோ அல்ல.

சிம்பிள் சுந்தர் நடத்தும் ஒன்லிரஜினி.காம் உங்களுக்கு நன்கு தெரியும். அதில் மற்ற நடிகர்களை எவ்வளவு கேவலமாக எழுதுவார்கள் என்று தெரியுமல்லவா?. அவர் நியாயமான கேள்வி இருந்தால் கூட பின்னூட்டங்களை அனுமதிக்க மாட்டார். இங்கு தமிழ்மணத்தில் வானத்தின் கீழே என்ன செய்கிறார்கள் என உங்களுக்குத் தெரியும்.

மாயவரத்தான் அவர்கள் என்னைதாக்கி வெளியிட்ட பின்னூட்டத்தையும் நான் அனுமதித்தேன். ஆனால் அது இன்னொரு பதிவரையும் தாக்கவே அதை நான் தூக்கினேன்.

கருத்து திணிப்பு கூடாது என்பதற்காகவே எதிர்வினையாகவே சில பதிவுகள் எழுதினேன்.

வாருங்கள் விவாதிப்போம். நல்ல கருத்து யாரிடம் இருந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.

ஆதரவுக்கு நன்றி.

என்றும் உங்கள் இனிய நண்பனாக இருக்க விரும்புகிறேன்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அதுசரி.

\\நக்கீரன் நடத்துனதுல மொதல்ல நஷ்டம் தான் வந்துச்சி. ரஜினி ரசிகன்னு ஒரு புக் ஆரம்பிச்சி, அதுல வ ந்த லாபத்துல தான் சொ ந்தமா பிரஸ் வாங்கி, நக்கீரனையே தொடர்ந்து நடத்த முடிஞ்சது. இன்னைக்கிம் நக்கீரன் வருதுனா அதுக்கு முக்கிய காரணம் ரஜினி ரசிகன் தான்..."\\


தமிழ்நாட்டில் வேறெந்த நடிகரை விடவும் ரஜினிக்கு ரசிகர் கூட்டம் மிக அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவரால் பலர் சம்பாதித்தனர். பலரை வாழவைத்தார். ஆனால் அரசியல் தெளிவு அவருக்கு இல்லை என்பது என் கருத்து. நடிகராக அவரை ரசிக்கிறேன். எந்திரனை பார்ப்பேன். மிக மிக நல்லவர்,புனிதர் என்று ஊடகங்கள் கட்டமைக்கும்போது எதிர்க்கிறேன். அதற்கு சரியான காரணங்கள் என்னிடமுள்ளன. அதனால் எதிர்பதிவுகள் எழுதுவேன்.

ஜனநாயக நாட்டில் இது தப்பில்லைதானே?

கிரி said...

//ஷங்கர் நல்ல டைரக்டர் கிடையாது என்பது என் கருத்து. அதனால் தான் அதைச் சொன்னேன்//

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை.

//சிம்பிள் சுந்தர் நடத்தும் ஒன்லிரஜினி.காம் உங்களுக்கு நன்கு தெரியும். அதில் மற்ற நடிகர்களை எவ்வளவு கேவலமாக எழுதுவார்கள் என்று தெரியுமல்லவா?.//

மறுக்கிறேன் முரளிக்கண்ணன் நீங்கள் கூறுவது போல ரஜினியை தமிழ்மணத்தில் அனைவரும் கேவலப்படுத்தி எழுதுவதை விட மோசமாக கண்டிப்பாக எழுதுவதில்லை. குறிப்பாக குசேலன் படம் வெளி வந்த சமயத்தில் மற்றும் ரஜினி தன் கருத்தை தெளிவாக சொல்லாத நேரத்தில், தமிழ்மணத்தில் வந்த பதிவுகள் அனைத்தும் நியாயம் என்றால் சுந்தர் செய்ததும் கண்டிப்பாக நியாயம் தான் (இத்தனைக்கும் சுந்தர், தமிழ்மணத்தில் எழுதிய அளவு கேவலமாக எழுதவில்லை).

//அவர் நியாயமான கேள்வி இருந்தால் கூட பின்னூட்டங்களை அனுமதிக்க மாட்டார்//

அது என்னுடைய தளம் இல்லை எனவே என்னால் கருத்து கூற இயலாது.

//இங்கு தமிழ்மணத்தில் வானத்தின் கீழே என்ன செய்கிறார்கள் என உங்களுக்குத் தெரியும்//

தமிழ்மணம் முழுவதும் ரஜினியை தாறுமாறாக விமர்சித்த போது உங்களுக்கு அது தவறாக தோன்றவில்லையா? என்னமோ உலகத்திலேயே குசேலன் படம் தான் கேவலம் என்பது போல எல்லோரும் விமர்சித்தார்களே! எனக்கு தெரிந்து தமிழ்மணத்தில் அவர் ஒருத்தர் தான் ரஜினிக்கு ஆதரவாக எழுதுகிறார் தொடர்ந்து. அந்த ஒன்றிக்கே (அவர் கமல் பற்றி கூறியதற்காக கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்) பலர் கோபம் அடைந்தால் ரஜினியை திட்டி பலர் பதிவு போட்ட போது ரஜினி ரசிகர்களுக்கு எப்படி இருந்து இருக்கும்? இதில் மூத்த பதிவர்களும் அடக்கம்.

//மாயவரத்தான் அவர்கள் என்னைதாக்கி வெளியிட்ட பின்னூட்டத்தையும் நான் அனுமதித்தேன். ஆனால் அது இன்னொரு பதிவரையும் தாக்கவே அதை நான் தூக்கினேன்.//

இதை தவறு என்று நான் கூறவில்லை, தொடர்ந்து இருந்தால் மேலும் அதிகம் ஆகி இருக்கும் என்றே கருதுகிறேன். உங்கள் நிலையில் நீங்கள் செய்தது சரி தான்.

//கருத்து திணிப்பு கூடாது என்பதற்காகவே எதிர்வினையாகவே சில பதிவுகள் எழுதினேன்.//

நீங்கள் பெரும்பாலும் நடு நிலையாக எழுதுவதாக எழுதுகிறீர்கள், ஆனால் உண்மையில் ரஜினியை கிண்டல் செய்வதாகவே இருக்கும். எப்படி இருந்தாலும் கடைசியில் கமல் ஆதரவாளன் என்றே பதிவு வந்து விடுகிறது. கமல் மற்றும் ரஜினி ரசிகனாக இருப்பவர்கள் நடு நிலையுடன் இருவரையும் வைத்து எழுதுவது என்பது நடக்காத ஒன்று.

//வாருங்கள் விவாதிப்போம். நல்ல கருத்து யாரிடம் இருந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.//

நன்றி முரளி கண்ணன் அதனாலேயே உங்களிடம் கூறுகிறேன். தமிழ்மணம் முழுவதும் கமல் ஆதரவாளர்களே எனவே ரஜினி பற்றி எந்த பதிவில் சென்று அதற்க்கு பின்னூட்டம் போட்டாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது. அதனாலேயே தற்போது ரஜினி பற்றிய பதிவுகளில் என்னுடைய கருத்தை தெரிவிப்பதில்லை. எனக்கு ரஜினி பிடிக்கும், அதற்காக இதுவரை கமலை கேவலப்படுத்தும் படி ஒரு பதிவு கூட போட்டதில்லை. என் பதிவுகள் ரஜினிக்கு ஆதரவாக மட்டுமே இருக்குமே தவிர அதில் எந்த ஒரு விஷயத்திலும் நான் கமலை இழுத்தது கிடையாது. இங்கு ரஜினியை எதிர்த்தால் மட்டுமே அவர் அறிவாளி என்பது போல எல்லோரும் நடந்து கொள்கிறார்கள். இருந்து விட்டு போகட்டும். இத்தனைக்கும் நான் ரஜினி க்கு ஆதரவாக ஒரு பதிவும் சத்யராஜை எதிர்த்து ஒரு பதிவும் தான் போட்டேன்..அதற்கே என்னமோ கொலை குற்றம் செய்தது போல எல்லோரும் கொந்தளித்து விட்டார்கள் :-)

//என்றும் உங்கள் இனிய நண்பனாக இருக்க விரும்புகிறேன்.//

நன்றி முரளிகண்ணன்..உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன். அது ரஜினி பற்றி விவாதத்தால் பிரச்சனை வருகிறது என்றால் பேசாமல் ஒதுங்கி கொள்கிறேன்.

பின் குறிப்பு: உங்க பின்னூட்ட பெட்டி திறக்க மாட்டேன் என்கிறது நீண்ட நேரம் ஆகிறது, முடிந்தால் சரி செய்யவும்.

முரளிகண்ணன் said...

\\எப்படி இருந்தாலும் கடைசியில் கமல் ஆதரவாளன் என்றே பதிவு வந்து விடுகிறது. கமல் மற்றும் ரஜினி ரசிகனாக இருப்பவர்கள் நடு நிலையுடன் இருவரையும் வைத்து எழுதுவது என்பது நடக்காத ஒன்று.
\\

அன்பு கிரி

இதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நடுநிலையாக எழுதவே விரும்புகிறேன். எனவே கூடிய மட்டும் ரஜினி பதிவுகளை இனி எழுதப்போவதில்லை.

வெண்பூ said...

// கிரி said...
தமிழ்மணம் முழுவதும் கமல் ஆதரவாளர்களே//

இதை வன்மையாக கண்டிக்கிறேன் கிரி. அமெரிக்காவின் கொள்கை போல "நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் எதிரிகளுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்பது போல் உள்ளது உங்கள் வாதம்.

நானும் அதே பிரச்சினையில் ரஜினியை எதிர்த்து பதிவு போட்டேன். ஆனால் கண்டிப்பாக நான் கமல் ஆதரவாளன் கிடையாது. சிவாஜி படம் வந்த போது, அதை திருட்டு விசிடியில் கண்டிப்பாக பார்க்கக்கூடாது என்று காத்திருந்து தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அதுதான் அவர் படங்களின் ரசிகனாக நான் அவருக்கு செய்த மரியாதையாக கருதுகிறேன்.

உங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்கள் எல்லாம் உங்கள் எதிரிகள் அல்ல கிரி.

வெண்பூ said...

FYI....
கமலின் சீரியஸ் படங்களை கண்டிப்பாக பார்க்கமாட்டேன் (டிவியில் போட்டு பார்க்க வேறு படம் இல்லாமல் போனால் அன்றி) ஆனால் அவரது எல்லா காமெடி படமும் பார்த்துவிடுவேன். ரஜினி படங்களை எல்லாம் பார்த்துள்ளேன் (பாபா, குசேலன் தவிர்த்து). நான் கமல் ஆதரவாளானா? ரஜினி ஆதரவாளனா? நான் ரஜினிக்கு எதிராக எதுவுமே சொல்லக்கூடாதா என்ன? உடனே கமல் ஆள் என்று முத்திரை குத்தி விடுவீர்களா???

வெண்பூ said...

//முரளிகண்ணன் said...

அன்பு கிரி

இதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நடுநிலையாக எழுதவே விரும்புகிறேன். எனவே கூடிய மட்டும் ரஜினி பதிவுகளை இனி எழுதப்போவதில்லை.
//

எனக்கு இதில் உடன்பாடில்லை முரளி. நீங்கள் உங்கள் மனதில் பட்டதை எழுதுகிறீர்கள். அவ்வளவே.

இந்த பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் இந்த பதிவு எழுதியதையே கேள்விக்குறியாக்குகிறீர்கள்.

ம‌ன்னிக்க‌வும்.

Chef Ramu said...

இது பிரசவ வைராக்கியம் மாதிரி இல்லையே, முரளி??? :)))))))
நடக்கட்டும், நடக்கட்டும் ;)

முரளிகண்ணன் said...

\\இந்த பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் இந்த பதிவு எழுதியதையே கேள்விக்குறியாக்குகிறீர்கள்.

ம‌ன்னிக்க‌வும்.
\\

வெண்பூ,
நாம் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம். இதில் நான் ஒன்றும் வருத்தப்பட போவதில்லை. நான் தீவிர கமல் ரசிகனாக இருப்பதால், ரஜினி பற்றி எழுதும் போது, அதன் நோக்கத்தை யாரும் சந்தேகிக்க வாய்ப்புள்ளது. மிக அத்தியாவசியம் என்றால் எழுதுவேன் என்ற அர்த்தத்தில் தான் கூறியுள்ளேன்.

\\இதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நடுநிலையாக எழுதவே விரும்புகிறேன். எனவே கூடிய மட்டும் ரஜினி பதிவுகளை இனி எழுதப்போவதில்லை\\

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி வெண்பூ.

கிரி said...

// வெண்பூ said...
இதை வன்மையாக கண்டிக்கிறேன் கிரி. அமெரிக்காவின் கொள்கை போல "நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் எதிரிகளுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்பது போல் உள்ளது உங்கள் வாதம்.//

:-))) வெண்பூ அப்படி எல்லாம் எதுவும் இல்லை, முரளி கண்ணன் அவர்களிடம் பேசும் போதும் ரசிகன் என்ற பார்வையில் கூறினேன், மற்றபடி நீங்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடே. சாதாரணமாக பேசி இருந்தால் அதாவது இந்த பதிவை வைத்து பேசாமல் பொதுவாக பேசி இருந்தால் ரஜினி எதிர்ப்பு என்ற முறையில் தமிழ்மணத்தில் ரஜினிக்கு எதிர்ப்பு அதிகம் என்ற முறையில் பேசி இருப்பேன். இந்த பதிவு ரஜினி கமல் பற்றியது என்பதால் அவ்வாறு கூறினேன் எனவே தவறாக நினைக்க வேண்டாம்.


//உங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்கள் எல்லாம் உங்கள் எதிரிகள் அல்ல கிரி.//

நன்றி வெண்பூ. நான் யாரையும் எதிரியாக கருதுவதில்லை, அப்படி கருதி இருந்தால் தமிழ்மணத்தில் பெரும்பாலனவர்கள் கூட பேசவே முடியாது :-) கருத்து வேறுபாடுகள் வேறு நட்பு வேறு. இதை என்னுடன் கருத்து மோதலில் ஈடு பட்டவர்களுடன் கேட்டு பாருங்கள் சொல்வார்கள். வருத்தம் உண்டு ஆனால் நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை, மற்றவர்கள் வேண்டும் என்றால் புரிந்து கொள்ளாமல் இருக்க வாய்ப்புண்டு.

//நான் கமல் ஆதரவாளானா? ரஜினி ஆதரவாளனா? நான் ரஜினிக்கு எதிராக எதுவுமே சொல்லக்கூடாதா என்ன? உடனே கமல் ஆள் என்று முத்திரை குத்தி விடுவீர்களா???//

இதற்க்கு மேலேயே நான் பதில் கூறி விட்டேன். ரஜினி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? விமர்சிக்க கூடாது என்று கூற. நான் விமர்சனத்தை பற்றி எதுவும் கூறவில்லை, தரம் தாழ்ந்து விமர்சித்ததை பற்றி மட்டுமே கூறுகிறேன். விமர்சனம் என்பது அனைவருக்கும் பொது தான். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கூட்டத்தோடு கொலை செய்தால் கலவரம் என்பது போல அந்த சமயத்தில் எப்படி கேவலமாக விமர்சித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும், நான் அவர்களை மட்டுமே கூறுகிறேன், தங்கள் கருத்தை நாகரிகமான முறையில் தெரிவித்தவர்களை அல்ல. புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ரஜினியை விமர்சிக்க கூடாது என்று சொன்னால் அதை விட முட்டாள் தனமான பேச்சு எதுவும் இல்லை.

மனதில் வைத்து கொள்ளாமல் வெளிப்படையாக கேட்ட உங்கள் கேள்விகளுக்கு என் நன்றி வெண்பூ.

Thamira said...

இவ்வளவு மைல்டான பதிவுல ஒரு பின்னூட்டம் போடலாம்னு உள்ள வந்தா.. என்னுதிது.? கொலவெறி தாக்குதல்கள்.? அமைதி.. அமைதி..

அது சரி said...

//
முரளிகண்ணன் said...
வருகைக்கு நன்றி அதுசரி.

தமிழ்நாட்டில் வேறெந்த நடிகரை விடவும் ரஜினிக்கு ரசிகர் கூட்டம் மிக அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவரால் பலர் சம்பாதித்தனர். பலரை வாழவைத்தார். ஆனால் அரசியல் தெளிவு அவருக்கு இல்லை என்பது என் கருத்து. நடிகராக அவரை ரசிக்கிறேன். எந்திரனை பார்ப்பேன். மிக மிக நல்லவர்,புனிதர் என்று ஊடகங்கள் கட்டமைக்கும்போது எதிர்க்கிறேன். அதற்கு சரியான காரணங்கள் என்னிடமுள்ளன. அதனால் எதிர்பதிவுகள் எழுதுவேன்.

ஜனநாயக நாட்டில் இது தப்பில்லைதானே?

//

த‌ப்பே இல்லீங்க‌ முர‌ளி. நீங்க‌ என்ன‌ நினைக்கிறீங்க‌ளோ அதை தான் எழுதிறீங்க‌. இதுல‌ த‌ப்பென்ன‌? எல்லாருக்கும் ர‌ஜினி பிடிக்கும், அத‌னால‌ எல்லாரும் ர‌ஜினியை பாராட்டி தான் எழுத‌னும்னு எதுவும் இல்லை.

நானும் ர‌ஜினி ர‌சிக‌ன் தான். ந‌டிக‌ர் ர‌ஜினியை என‌க்கு பிடிக்கும். ஆனால், த‌னி ம‌னித‌ர் ர‌ஜினியை அதைவிட‌ பிடிக்கும். அத‌ற்கும் கார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன‌.

நீங்க‌ள் எழுதுவ‌தில் என‌க்கு எ ந்த‌ எதிர்ப்பும் இல்லை. உண்மையில் நீங்க‌ள் எழுதுவ‌தை வ‌ர‌வேற்கிறேன்!

அது சரி said...

//
முரளிகண்ணன் said...

அன்பு கிரி

இதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நடுநிலையாக எழுதவே விரும்புகிறேன். எனவே கூடிய மட்டும் ரஜினி பதிவுகளை இனி எழுதப்போவதில்லை.

//

இது சரியில்லீங்க முரளி. நான் படித்தவரை நீங்கள் ரஜினியை பற்றி தரக்குறைவாக, தனிப்பட்ட முறையில் எதுவும் எழுதவில்லை.

கிரி அவருக்கு பிடிச்சதை எழுதறாரு. நீங்க உங்களுக்கு பிடிச்சதை, பிடிக்காததை எழுதிறீங்க. இதில் தப்பென்ன?

தொடர்ந்து எழுதுங்க பாஸ். நீங்க எழுதுறது பிடிக்காட்டி, பிடிக்கலைன்னு சொல்லப்போறோம். அதுக்காக நீங்க எழுதுறதை நிறுத்தாதீங்க!

முரளிகண்ணன் said...

தாமிரா, அமைதியாகி விட்டோம்

முரளிகண்ணன் said...

@அதுசரி, தங்களின் தார்மீக ஆதரவுக்கு நன்றி