எந்த தமிழ் கதாநாயகனுக்கும் இல்லாத சிறப்பு இவருக்கு உண்டு. இதுவரை எதிர்நாயகனாக நடித்ததில்லை, மற்றும் தமிழைத்தவிர வேறு மொழியில் நடித்ததில்லை. இவரின் 90% படங்களை இரண்டு வகையில் அடக்கிவிடலாம்.
சீருடை அணிந்த போராளி
இதில் காவல்துறை,ராணுவம்,உளவுத்துறை,மாவட்ட ஆட்சியர், வழக்கறிஞர், தேர்தல் அதிகாரி இவை அடங்கும்
சீருடை அணியாத போராளி
இதில் பகைவனால் பாதிக்கப்பட்டு போராடுபவர், தன்னிச்சையாக நீதி நேர்மைக்கு போராடுபவர் அல்லது ஊர் பெரிய மனிதராக இருந்து போராடுபவர் இவை அடங்கும்
இதுதவிர மீதி படங்களிலும் வல்லவராகவும், நல்லவராகவுமே இவரின் பாத்திரம் படைக்கப் பட்டிருக்கும். இவை அல்லாமல் வித்தியாசமான வேடங்களில் நடித்தது என்றால் 3 படங்களை குறிப்பிடலாம்
1 நானே ராஜா நானே மந்திரி
இதில் ஈகோ அதிகமான பண்ணையார் வேடம். ஜீவிதா காதலி, ராதிகா மானேஜர். தன்னை விட பெரிய மீசை வைத்திருக்கும் கவுண்டமணியின் ஒருபக்க மீசையை எடுக்கச சொல்லி அவரை ஒத்த மீசை குப்பு சாமி ஆக்கும் காட்சியும், தன்னை புகழ்ந்து வேலை கேட்பவனை இன்னொரு முறை சொல்லு என பலமுறை கேட்டு வெறுப்பேற்றும் காட்சியும் நல்ல நகைச்சுவை. மயங்கினேன் சொல்ல தயங்கினேன் என்னும் அருமையான பாடலும் உண்டு.
2 தழுவாத கைகள்
இதில் எட்டு குழந்தைகளுக்கு அப்பா வேடம். அம்பிகா நாயகி. ஒரு குடும்பத்தை உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித தந்தாரே அப்பா என்னிம் கலக்கல் பாடலும் உண்டு.
3 பாட்டுக்கு ஒரு தலைவன்
இதில் மனமுதிர்ச்சி அடையாத இளைஞன் வேடம். ஷோபனா நாயகி. நீண்ட இடைவேளைக்குப்பின் ஜிக்கி பாடிய நினைத்தது யாரோ நீ தானே என்னும் பாடல் இடம்பெற்ற படம்.
இப்போது அரசியல் தலைவர் ஆகிவிட்டதால் இனி இதுபோன்ற வேடங்களில் இவரை பார்ப்பது அரிது.
33 comments:
உங்கள் சினிமா தொகுப்புக்களை விடாமல் படித்து வருகிறேன். மிகவும் நன்றாக உள்ளது.
விஜய காந்தின் இன்னும் சில வித்தியாசமான படங்களை குறிப்பிட்டிருக்கலாம்.
எனக்கு சட்டென்று நினைவிற்கு வருபவை:
வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, என் புருசந்தான் எனக்கு மட்டும் தான், சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஹானஸ்ட் ராஜ், ரமணா போன்றவை அவரது சிறந்த படங்கள்.
இனிக்கும் இளமை எனும் படத்தில் அவர் வில்லனாக அறிமுகமானார் என எங்கோ படித்த ஞாபகம். டௌரி கல்யாணம் என்ற விசு படத்தில் சின்ன வேடத்தில் வருவார். நூறாவது நாள் படத்திலும் சின்ன வேடம்தானே!! உங்களின் சினிமாப்பற்றிய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. கிரிக்கெட் பற்றியும் நிறைய எழுதுங்கள்.
me the first?
//இதுவரை எதிர்நாயகனாக நடித்ததில்லை//
அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கிட்டது கமல்தான். விஜயகாந்த்தோட முதல் படமோ ரெண்டாவது படமோ கமல் படமா(அதாவது வில்லனா) அமைஞ்சிருக்க வேண்டியது. கமல் இவரோட தோற்றத்தை பற்றி மட்டமாகக் கூறி, இவரை நீக்க வெச்சார்னும், அதனாலத்தான் இவருக்கு ரொம்ப வெறியாகி நடிச்சா கதாநாயகனா நடிச்சு, பெரிய இடத்தை பிடிக்கணும்னு சபதமெடுத்துக்கிட்டாராம். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கறத்துக்கு முன்ன தந்த நார்மலான பேட்டிகள் பலவற்றில் இந்தத் தகவலைக் கூறியுள்ளார். ஆனா கமல் அப்படிப்பட்டவரான்னு எனக்கு இன்னிவரைக்கும் ஆச்சர்யமா இருக்கு
எனக்கும் கூட நானே ராஜா நானே மந்திரி ரொம்பப் பிடிக்கும். தழுவாத கைகள், பிற்பாதி பயங்கர இழுவையாப் போய்கிட்டு இருந்ததால நான் அந்தப் படத்தை முழுசாப் பார்த்ததில்லை.
// ராஜா நானே மந்திரி
இதில் ஈகோ அதிகமான பண்ணையார் வேடம். ஜீவிதா காதலி, ராதிகா மானேஜர். தன்னை விட பெரிய மீசை வைத்திருக்கும் கவுண்டமணியின் ஒருபக்க மீசையை எடுக்கச சொல்லி அவரை ஒத்த மீசை குப்பு சாமி ஆக்கும் காட்சியும், தன்னை புகழ்ந்து வேலை கேட்பவனை இன்னொரு முறை சொல்லு என பலமுறை கேட்டு வெறுப்பேற்றும் காட்சியும் நல்ல நகைச்சுவை. மயங்கினேன் சொல்ல தயங்கினேன் என்னும் அருமையான பாடலும் உண்டு.//
ஹா ஹா ஹா இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.
ஐஸ் வெள்ளிங்கிரி மலை வசனத்தை மறக்கவே முடியாது..:-))))
விஜயகாந்திடம் கவுண்டர் மாட்டிகிட்டு படும் பாடு செம காமெடி
இவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு ரஜினி கமல் போன்றவர்களின் 100 வது படம் ஓடாத போது இவருடைய கேப்டன் பிரபாகரன் அடைந்த வெற்றி எப்படி பட்டது என்று அனைவரும் அறிந்த ஒன்று
அதிக முறை காவலராக நடித்தவர் என்ற சிறப்பும் உண்டு
ரஜினி போலவே கறுப்பாக இருந்தும் அப்போது வெற்றி பெற்றவர்
முரளிக்கண்ணன் பட்டாசா பதிவு போட்டு தாக்குறீங்க
//இதுதவிர மீதி படங்களிலும் வல்லவராகவும், நல்லவராகவுமே இவரின் பாத்திரம் படைக்கப் பட்டிருக்கும். இவை அல்லாமல் வித்தியாசமான வேடங்களில் நடித்தது என்றால் 3 படங்களை குறிப்பிடலாம்
1 நானே ராஜா நானே மந்திரி
2 தழுவாத கைகள்
3 பாட்டுக்கு ஒரு தலைவன்//
ஆமா என்னங்க முரளிக்கண்ணன் இப்படிப் பண்ணிட்டீங்க. ஒரு பதிவுப் போடறதா இருந்தா நல்லா ஆராய்ந்துப் பார்த்து போடக்கூடாது? இந்த பொறுப்பில்லாத்தனத்தை நான் உங்க பதிவுல எதிர்பார்க்கலை.
பின்ன என்னங்க, அவர் EXTRA TERRESTRIAL ஜந்துவா நடிச்ச 'நரசிம்மா' என்கிற அதிமுக்கிய படத்தை எப்படி நீங்க குறிப்பிட மறந்தீங்க? இந்த மாதிரி ஒரு காரெக்டரை உலக சினிமாக்களில் நீங்க பார்த்ததுண்டா? :):):)
நான் ஜாலியா போட்ட முந்தையப் பின்னூட்டத்தை யாரும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ் :):):)
//நானே ராஜா நானே மந்திரி//
ஃபுல் அண்ட் ஃபுல் நல்ல காமெடி. நான் பல தடவை பார்த்து ரசித்த் படம். முதல் காட்சி ல் இருந்த்தே காமெடி ஆரம்ப்பிச்சிடும்.
மனக்கணக்கு - சினிமாக்கார வேலை விட்டுட்டீங்களே :)
நல்லா இருக்கு உங்க பதிவுகள். தொடருங்கள் ப்ளீஸ்.
உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது தோழரே.
நானே ராஜா நானே மந்திரி நல்ல நகைச்சுவை படமும் கூட. :-)
வைதேகி காத்திருந்தாள் விட்டுட்டீங்க?
போன பதிவு பின்னூட்டத்திலியே விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோரியன் ஆரம்பக்காலம் பற்றி எழுதுங்கள் என போடலாம்னு நினைத்தேன்..
கலக்கிட்டீங்க!
அடுத்த பதிவுல சுருளிராஜனைப்பத்தி எழுதுங்க தலைவா..
(சில்க்! சில்க்! சில்க்! கண்ணீர் அஞ்சலி!.. இவண் ஸ்மிதா பாசறை! என்று நண்பர்களோடுஅவர் இறந்த அன்று போஸ்ட்டர் ஒட்டிய ஞாபகம் வந்துபோனது உங்களின் முந்தைய பதிவை படிக்கும்பொழுது!அதோடு வீட்டில் வாங்கிய தர்ம அடியும்)
சினிமாவில் பல அவமானங்களிடையே போராடி ஜெயித்தவர். அடுத்து ஒரு படம் டைரக்ட் செய்ய போறாராம். நானே ராஜா நானே மந்திரி படத்தில் உள்ள அவருடைய மேனரிசங்களைதான் இன்னனும் மிமிக்ரி செய்து கொண்டு இருக்கிறார்கள். ரஜினி, கமல் அடுத்து அந்த தலைமுறை நடிகர்களில் நீண்ட காலம் ஹிட் கொடுத்தவர்.
நல்ல பதிவுகள். கலக்குங்க... :-)
முதல் தடவையா வர்றேன்.. ப்ரொபைல்ல இருக்க குட்டி சூப்பர். :)
வருகைக்கு நன்றி சத்யப்ரியன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
வருகைக்கு நன்றி வினையூக்கி, இனிக்கும் இளமையில் கதானாயகனே என நினைவு. சரிபார்க்கிரேன். கிரிக்கெட் பற்றியும் எழுதுகிறேன். ஊக்கத்திற்க்கு நன்றி
வருகைக்கு நன்றி ராப், நீங்கள் கூறியுள்ள தகவல் சரிபார்க்கிரேன். ஆனால் எனக்கென்னவோ அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது
காரணங்கள்
அவர் நடிக்க வந்த புதிதில் முண்ணனி நட்சத்திரங்களுக்கு ஒரு மாதிரியும், பிற நடிகர்கள், டெக்னீசியன்களுக்கு ஒரு மாதிரியும் சாப்பாடு இருந்ததாம். ஒரு முறை கதானாயகிக்கு முன்னால் சாப்பிடப்போன போது (ராதிகா என் நினைவு) அவமானப்படுத்தப் பட்டாராம். அதனால் முன்னேற வேண்டும் என வெறி ஏற்பட்டதாகவும், பின்னர் அவரின் படங்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவு வழங்க எல்லொரையும் அறிவுறுத்தியதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிரார்.
அப்படி கமல் நடந்திருந்தால் மனக்கனக்கு (ஆர்.சி.சக்தி இயக்கம்) என்னும் படத்தில் ஒளிப்பதிவாளராக விஜய்காந்த் நடித்த போது, கமல் இயக்குனராக கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே? என்னதான் ஆர்.சி.சக்தி நண்பராய் இருந்தாலும்?
விஜய்காந்த் வந்தபோது அவர் ரஜினிக்கு மாற்றாகத்தான் கருதப்பட்டார். எனவே இவருக்கு அவரை அவமானப்படுத்த அவசியமில்லை. பதினாறு வயதினிலே படத்தில் ரஜினியை உதவி இயக்குனர்கள் மதிக்காத போது, நீங்கள் அவர் வீட்டு வாசலில் நின்று, அவர் கால்ஷீட் கேட்கும் நிலை வரும் என்று சொன்ன தீர்க்க தரிசி அவர்.
\\ஐஸ் வெள்ளிங்கிரி மலை வசனத்தை மறக்கவே முடியாது\\
கிரி அதில் உங்கள் பெயர் இருப்பதாலா?. வருகைக்கு நன்றி கிரி
வாங்க ரமி, வருகைக்கு நன்றி
\\மனக்கணக்கு - சினிமாக்கார வேலை விட்டுட்டீங்களே :)\\
அதை இணைத்துக்கொள்கிரேன் சுரேஷ் சார்.
தங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தங்கள் சித்தம் என் பாக்கியம்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மைபிரண்ட்.
நர்சிம், ஏதும் டெலிபதி இருக்கிறதா என்று தெரியவில்லை. சுருளி ராஜன் அவர்களைப் பற்றி எழுதலாம் என நினைத்து, சில விவரங்களில் தெளிவு தேவைப்பட்டதால் பாதியில் நிறுத்தினேன். விரைவில் எழுதுவேன்.
\\ராஜா நானே மந்திரி படத்தில் உள்ள அவருடைய மேனரிசங்களைதான் இன்னனும் மிமிக்ரி செய்து கொண்டு இருக்கிறார்கள்\\
ஆமாம் சரவண குமரன், வருகைக்கு நன்றிகள்
ஆரம்பகால படம் ஒன்றில் வில்லனாக நடித்திருக்கிறார். முழுநேர குடிகாரராக, வில்லுவண்டியில் வருவார். படம் பெயர் நினைவில்லை.
முதல் வருகைக்கு நன்றி காயத்ரி.
\\ப்ரொபைல்ல இருக்க குட்டி சூப்பர். :)
\\
என் மகனிடம் இதை சொல்லி விடுகிறேன்
யோசிப்பவர், தங்கள் வருகைக்கு நன்றி
Super narration. I like it. thankyou
தமிழ் நெஞ்சம், வருகைக்கு நன்றி
காலையில் ஒரு பின்னூட்டம் போட்டேன் காணவில்லை.
செந்தூரப்பூவே, வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்டக் காவல் காரன் போன்ற படங்களிலும் இவரின் வேடங்கள் சிறப்பு
ராப் : அவர் EXTRA TERRESTRIAL ஜந்துவா நடிச்ச 'நரசிம்மா' என்கிற அதிமுக்கிய படத்தை எப்படி நீங்க குறிப்பிட மறந்தீங்க? // ஹிஹி.. இது ஜூப்பருங்க.!
\\காலையில் ஒரு பின்னூட்டம் போட்டேன் காணவில்லை\\
கானா பிரபா, என்ன ஆச்சுன்னு தெரியலையே?
அடுத்த பதிவு உங்களோட ஏரியா (பாடல்கள்).
உங்கள் ஆதரவும் கருத்துக்களும் தேவை
ஒரு காலத்துல நான் விஜயகாந்த் ரசிகனாதான் இருந்தேன்...
எனக்கு சின்ன வயசுல பிடிச்ச படங்கள்
காலையும் நீயே மாலையும் நீயே (பிரபு, விஜயகாந்த்)
சட்டம் ஒரு விளையாட்டு
அம்மன் கோவில் கிழக்காலே
சின்ன கவுண்டர்
செந்தூர பூவே
பூந்தோட்ட காவல்காரன்
புலன் விசாரனை
கேப்டன் பிரபாகரன்
நல்லவன்
கூலிக்காரன்
ஏழை ஜாதி
இப்ப பார்த்து பிடித்த படங்கள்
ரமணா
நானே ராஜா நானே மந்திரி (சின்ன வயசுல இந்த படம் ஏனோ பிடிக்கல)
வானத்தை போல...
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
நரசிம்மா (முதல் பாதி... செம காமெடியா இருக்கும் :P )
Post a Comment