September 05, 2008

எந்திரம் தி ரோபோ புதிய தகவல்கள்

கதை நடப்பது 2025ல். மனிதர்களைப் போல தோற்றம் உடைய ரோபோக்களை வைத்து உலகை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரி. அதன் மூலம் மக்கள் படும் கஷ்டங்களை அறியும் முக்கிய விஞ்ஞானி அந்த சர்வாதிகாரியிடம் இருந்து தப்புகிறார். அதற்கு உதவும் ரஜினியையே அந்த ரோபோவை போல மாற்றுகிறார். சில உபகரணங்கள் ரஜினி உடலில் பொருத்தப்படுகின்றன. அதன் மூலம் எப்படி அவர் மக்களை விடுவிக்கிறார்? என்பதே கதையின் ஒன் லைன்.

ஐஸ்வர்யா பச்சன் காதலி. ரஜினியும் இவரும் மட்டுமே எல்லா மொழிக்கும். சர்வாதிகாரி,விஞ்ஞானி மொழிக்கு ஏற்ப மாறுவார்கள்.இந்திப் பதிப்பில் முக்கிய இந்தி நடிகர்களை நடிக்க வைக்க ஈராஸ் நிறுவனம் பொறுப்பேற்று இருக்கிறது.

ஏக் துஜே கேலியே,சனம் தேரி கசம், சாகர் மற்றும் சாச்சி 420 போன்ற நேரடி வெற்றிப்படங்களிலும், ஹிந்துஸ்தானி,அப்பு ராஜா போன்ற டப்பிங் படங்களிலும் வெற்றியை ருசித்த கமல் இப்போது அங்கு நிலைமை சரியில்லாததால் தசாவதாரத்தை வெளியிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் தான் மர்மயோகிக்கு கூட ஹேமமாலினி, கஜோல், ரஹ்மான் என்று சேலபில் ஸ்டார் வேண்டும் என அவர்களை தொங்கிக்கொண்டிருக்கிறார்.

ரஜினி அங்கு நடித்ததெல்லாம் பி கிரேட் படங்கள் தான். (அந்தா கானூன், கங்குவா, ராஜகுரு,லட்சத்தில் ஒருவன்). அவர் நடித்த ஏ கிரேட் படத்தில் இரண்டாம், மூன்றாம் கதானாயகனே. (பாட்ஷா வின் மூலமான ஹம்மில் அவருக்கு செண்பகா வின் வேடம்). தென் மாநிலத்தவரைத் தவிர பூர்விக இந்தி மக்கள் (கவ் பெல்ட் உட்பட) அவரை பார்ப்பது ரித்தீஸ் மாதிரித்தான். அதனால் தான் சிவாஜி யை கூட அங்கே டப் செய்யவில்லை.

ஈராஸ் நிறுவனம் இந்தியில், படத்திற்க்கு எதிர்பார்ப்பு ஏற்படுத்த சர்வாதிகாரி,விஞ்ஞானி கேரக்டர்களுக்கு முக்கிய இந்தி நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முதலில் ஷங்கர் வழக்கப்படி இரண்டு பாடல்கள் படமாக்கப்படும். பார்ப்போம் ஐஸ்வர்யா, ரஹ்மான் கூட்டணியில்இந்த படமாவது ரஜினிக்கு இந்தியில் வெற்றி தருகிறதா? என.

21 comments:

சரவணகுமரன் said...

//தென் மாநிலத்தவரைத் தவிர பூர்விக இந்தி மக்கள் (கவ் பெல்ட் உட்பட) அவரை பார்ப்பது ரித்தீஸ் மாதிரித்தான்//

ஏய்! யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்ன? டேய்! பஸ்ஸை கொளுத்துங்கடா... ரயில மறிங்கடா...


ரீத்திஸ் வாழ்க... :-)

narsim said...

//(பாட்ஷா வின் மூலமான ஹம்மில் //அவருக்கு செண்பகா வின் வேடம்கொல குத்து தலைவா..

நர்சிம்

Unknown said...

ரஜினியை ரித்திஷுடன் ஒப்பிட்டு எங்க வீரத்தளபதிக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தி விட்டீர்கள்

வெண்பூ said...

//தென் மாநிலத்தவரைத் தவிர பூர்விக இந்தி மக்கள் (கவ் பெல்ட் உட்பட) அவரை பார்ப்பது ரித்தீஸ் மாதிரித்தான்//

இது நூறு சதவீதம் நிஜம் என்பது ஹிந்தி நண்பர்கள் உடையவர்களுக்கு தெரியும். :)

//பார்ப்போம் ஐஸ்வர்யா, ரஹ்மான் கூட்டணியில்இந்த படமாவது ரஜினிக்கு இந்தியில் வெற்றி தருகிறதா? என.//

எதுக்கு? "நான் எப்ப பிரதமர் ஆவேன் எப்படி ஆவேன்னு தெரியாது" அப்படின்னு வசனம் பேசுறதுக்கா? ஆவற வேலய பாருங்க சார். ஷங்கரே குசேலனோட தோல்வியப் பாத்து நடுங்கிட்டு இருப்பாரு.

வெண்பூ said...

எந்திரமோ? யந்திரமோ? இயந்திரமோ?

படம் கருமாந்திரமா வராம இருந்தா சரி...

ilavanji said...

// அதன் மூலம் எப்படி அவர் மக்களை விடுவிக்கிறார்? என்பதே கதையின் ஒன் லைன். //

கூடவே கடைசில போடும் “2030ல் வல்லரசானது இந்தியா!” ங்கற சங்கரின் அல்பக் காப்ஷனை விட்டுட்டீங்களே! :)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி
சரவண குமரன், நரசிம்,அதிஷா & வெண்பூ

Unknown said...

//
கூடவே கடைசில போடும் “2030ல் வல்லரசானது இந்தியா!” ங்கற சங்கரின் அல்பக் காப்ஷனை விட்டுட்டீங்களே!
//

:)))))))))))

Correct!!!!

rapp said...

//பாட்ஷா வின் மூலமான ஹம்மில் அவருக்கு செண்பகா வின் வேடம்//
ஆஹா, தமிழ்ல ஒரு கன்னட நடிகர் நடிச்ச போலீஸ் கேரெக்டரில்தான், ஹம்மில் ரஜினி நடிச்சிருப்பார்.

rapp said...

//அவரை பார்ப்பது ரித்தீஸ் மாதிரித்தான்//

அப்போ ஹிந்தியில ரஜினி சூப்பர் ஸ்டாருன்னு சொல்லுங்க:):):)

rapp said...

அதென்ன எங்க தல பேர் முன்னாடி தலையெழுத்தை காணோம்? இந்த ஆணவப்போக்கை ப்ளாகுலக மக்கள் என்று மாற்றி கொள்ளப் போகிறீர்கள்? நாங்கள் 2016 இல் ஆட்சிக்கு வரும்போது, விளைவுகள் அதிபயங்கரமாக இருக்கும் என எங்கள் மன்றத்தின் சார்பாக எச்சரிக்கிறோம்

இராப்,
தலைவி,
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

முரளிகண்ணன் said...

இளவஞ்சி, அதான் சிவாஜியிலேயே ஆக்கிட்டாரே ஷங்கர்

முரளிகண்ணன் said...

பிசாசு, ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

ராப், ஹம்மில் இரண்டு தம்பி களையே இரண்டு தங்கை ஒரு தம்பியாக மாற்றினார்கள். அந்த புளோவில் வந்துவிட்டது. மாற்றி விடுகிறேன்

rapp said...

//இளவஞ்சி, அதான் சிவாஜியிலேயே ஆக்கிட்டாரே ஷங்கர்//

இன்னும் ஜுனூன் பாதிப்பில இருந்த 'வெளிய வரலியா நீங்க?' :):):)

முரளிகண்ணன் said...

ராப், இனுமே ரித்தீஷ்ஷை ஜே.கே.ரித்தீஷ் என்றே குறிப்பிடுகிறேன். எதற்கு வம்பு?

முரளிகண்ணன் said...

ராப்
இன்னும் ஆகும் வருஷம் பத்து வெளியவர அதுல இருந்து

Thamira said...

//கமல் இப்போது அங்கு நிலைமை சரியில்லாததால் தசாவதாரத்தை வெளியிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.//

என்ன பிரச்சினையாமாம்?

முரளிகண்ணன் said...

தாமிரா

இந்தி படஉலகில் நிலவும் அரசியல் பல பரிமானங்களை உடையது. தென்னக நாயகர்களை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதை எதிர்க்க முடியாமல் தான் மூன்று சில்வர் ஜூப்ளிக்கு அப்புறமும் கமல் இங்கு திரும்ப நேரிட்டது.

அங்கு ரிலீஸிங் ஸ்டேட்டர்ஜியும் இங்கிருந்து மாறுபட்டது. குறைந்த்து 60 நாட்களுக்கு முன்பிருந்தே சானல்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும் மற்றும் பல பார்ட்டிகள் நடத்த வேண்டும். ஆஸ்கார் தரப்பு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்களின் முந்தைய படமான அந்நியன் இவை ஏதுமின்றி ஒடியது. (பி & சி யில்). ஆனால் ஏ சென்டருக்கு இவை கட்டாய தேவை. கமல் ஏ சென்டரில் வெற்றி பெற விரும்புகிறார். இந்த இழுபறியில் வெளியீடு தள்ளிப்போனது.

இந்த இடைவெளியில் ஜானே து ஜானே நா, சிங் இஸ் கிங் இவை வெற்றி பெற்றன. ரம்ஜான் தொடங்கி விட்டது. 20% பார்வையாளர்கள் குறைந்து விடுவார்கள் (அங்கு). தீபாவளிக்கு சல்மான்,ஷாருக் (இந்தி குசேலன்) வருகின்றன.

எனவே தீபாவளி முடிந்துதான் இந்தி தசாவதாரம்.

அங்கு பல்ராம் நாயுடு பிரணாப் முகர்ஜி என்னும் பெங்காளியாக வருகிறார்

புருனோ Bruno said...

//எதுக்கு? "நான் எப்ப பிரதமர் ஆவேன் எப்படி ஆவேன்னு தெரியாது" அப்படின்னு வசனம் பேசுறதுக்கா? ஆவற வேலய பாருங்க சார். ஷங்கரே குசேலனோட தோல்வியப் பாத்து நடுங்கிட்டு இருப்பாரு.//

வழிமொழிகிறேன்

ஸ்ரீ said...

ரித்தீஸ் கூட இல்லங்க அதை விட கேவலமா கிண்டல் பண்ணி நானே நேரில் பார்த்திருக்கேன். ஒரே காமெடி தான் போங்க.