1992 ஆம் ஆண்டின் படங்கள், தமிழ் திரையுலகைச் சார்ந்த பலரின் அந்தஸ்தை உயர்த்தியவையாகும். அவை பற்றிய ஒரு பார்வை.
சின்னகவுண்டர்
விஜயகாந்த் அதுவரையில் பெரும்பாலான படங்களில் ஆக்சன் ஹீரோவாகவே நடித்து வந்தார். சில படங்களிலேயெ கிராமிய வேடங்களையும்,வித்தியாச வேடங்களையும் ஏற்றார். ஒரு பொறுப்புள்ள, நீதி தவறாத தலைவர் வேடத்தில் அவர் நடித்தது மிக மிக குறைவே. மக்களின் மனதில், இவர் நல்ல தலைவராகவும் இருப்பார் என்ற இமேஜை முதன் முதலில் விதைத்த படம் என்றுகூட இப்படத்தை சொல்லலாம். நாடோடி மன்னன்,ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் இவர் ஆளக்கூடியவர் என்ற இமேஜ் எம்ஜியாருக்கு மக்கள் மனதில் படிந்ததைப்போல. இது விஜயகாந்துக்கு இமேஜ் மேக் ஓவர் படம். இதற்கடுத்து ரமணா வை சொல்லலாம். ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம். சுகன்யா கதாநாயகி. நகைச்சுவைக்கு கவுண்டமணி செந்தில். முத்து மணி மாலை,அந்த வானத்தை போல, கண்னுபட போகுதய்யா போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த .பம்பர விற்பனையை அதிகரித்த படம்
மன்னன்
ரஜினிகாந்த்,விஜயசாந்தி,குஷ்பூ, கவுண்டமணி நடிக்க இளையராஜா இசையில் பி வாசு இயக்கிய படம். சிவாஜி நடித்த ஒரு படத்தையே, சிவாஜி புரடக்சனுக்கு உல்டா பண்ணித்தர வாசுவால்தான் முடியும். இந்த படம் பின்னர் சிரஞ்சீவி,நக்மா நடிக்க தெலுங்கில் ரீமேக் ஆனது. காதலன், பாட்சா வெற்றிக்கு பின் இங்கு நக்மா அலை வீசிய போது இங்கே டப் ஆகி வந்து வாழ்க்கை ஒரு வட்டம் என நிரூபித்தது. நல்ல வசூல் செய்த படம். ரஜினி சொந்தக்குரலில் அடிக்குது குளிரு என்ற பாடலை பாடிய படம். அம்மா என்றழைக்காத,சண்டி ராணியே, கும்தலக்கடி, என் ராஜாவின் போன்ற பாடல்கள். பெண்களுக்கு எதிரான வசனங்கள் நிறைந்த படம். அம்மாவை வாழ்த்தியும், காதலி/மனைவியை மட்டமாக பேசுவதாலோ என்னமோ, தன் மகன்கள் ரஜினி ரசிகன் ஆவதை பல பெண்கள் விரும்புகிறார்களோ என தோன்றுகிறது. ரஜினி/ஜெயலலிதா பிரச்சினையின் போது கூட சண்டிராணியே என்ற பாடல் அமர்க்களப்பட்டது. ஆனால் பார்க்க சலிப்பு வராத படம். இப்படத்தை மதுரை சோலமலை தியேட்டரில் ஒரு பெண் 100 நாட்கள் தொடர்ந்து பார்த்து பரிசு பெற்றார். குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்கிறாங்க என்ற கவுண்டரின் பன்ஞ் புகழ் பெற்றது.
ரோஜா
உலகத்திற்கு ரஹ்மானை அறிமுகம் செய்த படம். மணிரத்னத்தை இந்திய அளவுக்கு உயர்த்திய படம். சாந்தாராம் விருது தயாரிப்பாளர் பாலசந்தருக்கு கிடைக்க காரணமாய் இருந்த படம். அரவிந்த்சாமி கதானாயகனாய் நடித்த முதல் படம். இளையராஜாவிடம் இருந்து பிரிந்து மற்ற இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த வைரமுத்து பாடல் வரிகளில் அசத்திய படம். சின்ன சின்ன ஆசை,காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை போன்ற மறக்க கூடாத பாடல்கள் நிறைந்த படம். வசனம் - சுஜாதா
சூரியன்
வில்லன் வேடங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்த சரத்குமார் ஹீரோ ஆகிய படம். தேவாவின் முதல் பெரிய பட்ஜெட் படம். குஞ்சுமோனை பெரிய தயாரிப்பளார் ஆக்கிய படம். பவித்ரன் இயக்கத்தில் ரோஜா நாயகியாய் நடிக்க நகைச்சுவைக்கு கவுண்டமணி. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, ஆ இங்க பூசு என்ற கவுண்டரின் அதிரடி நகைச்சுவை வெற்றியை அதிகப்படுத்தியது. லாலாக்கு டோல் டப்பிமா மூலம் பிரபுதேவாவுக்கும் நல்ல புகழ் கிடைத்தது. ஷங்கர் இப்பட உதவி இயக்குனர். இப்படத்தின் வெற்றிக்குப்பின் குஞ்சுமோன் - பவித்ரன் - சரத் ஐ லவ் இந்தியா என்னும் படத்தை துவங்கினர். இடையில் சில மனஸ்தாபங்களால் கூட்டணி உடைய, சரத் டைரக்டர் ஆதரவு நிலை எடுத்து, ஜி கே ரெட்டி (விஷால் தந்தை) தயாரிப்பில் அப்படத்தை தொடர்ந்தனர். குஞ்சுமோன் ஷங்கரை வைத்து ஜெண்டில்மேன் தொடங்கினார். பதினெட்டு வயது, நீலகிரி, லாலாக்கு போன்ற ஹிட் பாடல்கள் நிறைந்தது.
தேவர் மகன்
சிவாஜி,கமல்,ரேவதி,நாசர், கௌதமி,வடிவேல் நடித்த பல தேசிய,மாநில விருதுகளை அள்ளிய ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட படம். வடிவேலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். பரதன் இயக்கத்தில், இளையராஜா இசையில், பி சி ஸ்ரீராமின் இயக்கத்தில், கமலின் திரைக்கதை வசனத்தில் வந்த அசத்தல் படம். போற்றிப் பாடடி பெண்ணே, இஞ்சி இடுப்பழகி, சாந்துப் பொட்டு போன்ற பாடல்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன
அண்ணாமலை
முரட்டுகாளைக்குப் பின் ரஜினிக்கு திரையுலக வாழ்வில் பெரும் திருப்புமுனையை கொடுத்த படம். சுரேஷ்கிருஷ்னா இயக்கத்தில், தேவாவின் இசையில் சண்முக சுந்தரம் வசனத்தில் ஓடு ஓடு என்று ஓடிய படம். இன்றும் முக்கிய நாட்களுக்கு தங்கள் துருப்புசீட்டாக தொலைக்காட்சிகள் வைத்துள்ள படம். இப்படத்திற்க்குப் பின்னர் ரஜினியின் புகழ் சமகால நடிகர்கள் எட்ட முடியாத இடத்துக்கு சென்றது எனலாம். இதன்பின்னர் ரஜினியும் படங்களை குறைத்துக் கொண்டார். அவரது பட வெளியீடு திருவிழாவானது. அரசியல் பொடி வைத்து பேசும் வசனம் அதற்க்கு முன் சில படங்களில் இருந்தாலும் இப்படத்திற்குப்பின் அது முக்கியத்துவம் பெற்றது. இப்படம் வெளிவரும் முன்னர் எற்பட்ட ரஜினி/ஜெயலலிதா மோதலால் இப்பட வசனங்கள் முக்கியத்துவம் பெற்றன. அண்ணமலை அண்னாமலை, வந்தேண்டா பால்காரன், கொண்டையில் தாழம்பூ, வெற்றி நிச்சயம், ஒரு பெண்புறா போன்ற அசத்தல் பாடல்களை தேவா அமைத்திருந்தார். குஷ்பூ, ஜனகராஜ்,மனோரமா, சரத்பாபு நடித்தது. பாலசந்தர் தயாரிப்பு.
இவைதவிர ரஜினியின் பாண்டியன், கமலின் சிங்காரவேலன், கார்த்த்க்கின் அமரன், பி சி ஸ்ரீராம் இயக்கிய முதல் படம் மீரா, பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், ரோஜா அறிமுகமான செம்பருத்தி ஆகியவை வெளிவந்தன.
பாக்யராஜின் ராசுக்குட்டி, சுந்தராஜன்,சத்யராஜ் இணைந்த திருமதி பழனிசாமி ஆகிய படங்களும் வந்தன.
பின்னாட்களில் பெரும் கமர்ஷியல் நாயகனாக உருவெடுத்த விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பும் இந்த ஆண்டுதான் வெளிவந்தது.
இந்த ஆண்டின் பல படங்களின் பாடல்கள் அருமையானவை. அப்போது சிடி பிளேயர் இங்கு புழக்கத்தில் இல்லாத காலகட்டம். கேசட் ரிக்கார்டிங் கடைக்காரர்கள் காட்டில் கடைசியாக அடைமழை பொழிந்த ஆண்டு என இதை சொல்லலாம்
இந்த ஆண்டில் பல தேசிய விருதுகளும் தமிழ்படங்களுக்கு கிடைத்தன.
இசை அமைப்பு - ரஹ்மான், பாடல் - வைரமுத்து - ரோஜா படத்திற்க்காக
சிறந்த பாடகி - ஜானகி, ஆடியோகிராபி- பாண்டுரங்கன், சிறந்த துணை - நடிகை - ரேவதி, சிறந்த மாநில மொழி திரைப்படம் , தேர்வாளர்களின் சிறப்பு விருது - சிவாஜி என ஐந்து விருதுகளை தேவர்மகன் தட்டி வந்தது.
1993 ஆம் ஆண்டின் படங்கள் பற்றிய அசத்தலான பார்வைக்கு இங்கே செல்லுங்கள். டாக்டர் புருனோ அசத்தியுள்ளார்.

33 comments:
:)
நல்ல சுவையான தகவல்கள்.. விஜயகாந்தைப் பற்றிய கருத்துக்கள் அருமை..
கமர்ஷியல் நாயகனாக உருவெடுத்த விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பும் இந்த ஆண்டுதான் வெளிவந்தது.??/?/////
விஜயின் முதல் படம் நாளை தீர்ப்பு கிடையாது. அவர் குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற படம் முதல் படம். பின்பு வசந்தராகம் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கமல் முதல் படம் என்றால் மட்டும் சட்டென களத்தூர் கண்ணம்மா என்கிறார்கள். விஜய் படம் என்றால் இந்த வெற்றி படத்தை மறந்து போகிறீர்களே...
தமிழ் சினிமா, சுட்டிகாட்டியதற்க்கு நன்றிகள். திருத்திக்கொள்கிறேன்
கலக்குறீங்க முரளி. அண்ணாமலை படம் பன்ஞிங் டயலாக் தான் பெஸ்ட். நான் தனியாக சென்று பார்த்த முதல் திரைப்படம் இதுதான் ( தம்பிகளோடு சேர்ந்து). தியேட்டரே களை கட்டியது
அத்திரி வருகைக்கு நன்றி
சின்னகவுண்டர் :
மொய்விருந்து என்ற சில மாவட்டங்களில் மட்டும் இருந்த பழக்கத்தை அனைவரும் அறிய வைத்த படம்
//சின்ன சின்ன ஆசை,காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை போன்ற மறக்க கூடாத பாடல்கள் நிறைந்த படம்.//
தமிழா, தமிழா !!
// பதினெட்டு வயது, நீலகிரி, லாலாக்கு போன்ற ஹிட் பாடல்கள் நிறைந்தது.//
பதினெட்டு வயது பாடல் எந்த ட்யூனை காப்பி அடித்தது என்ற பொது அறிவு விஷயம் விடுபட்டுள்ளது :) :)
அண்ணாமலை :
Super Star என்று விளக்குகளாலும் RAJNI - ர ஜ் னி என்று எழுத்துகள் Z Axisல் செல்லும் டைட்டில் அறிமுகமான படம் இது தான்
இதற்கு பின் வந்த படங்கள் அனைத்திலும் (15 வருடங்களாக) இதே டைட்டில் தான் இடம் பெறும். (ஹோ.ஹோ என்ற அதே இசையுடன்)
அதை மாற்றியது ஷங்கர் தான்
//அம்மாவை வாழ்த்தியும், காதலி/மனைவியை மட்டமாக பேசுவதாலோ என்னமோ, தன் மகன்கள் ரஜினி ரசிகன் ஆவதை பல பெண்கள் விரும்புகிறார்களோ என தோன்றுகிறது.// வித்தியாசமான, நம்பக்கூடிய பார்வை :-)
1992க்கே மறுபடி போன மாதிரி இருந்தது பதிவு. புத்தகமாகக் கொண்டு வரும் ஐடியா இருக்கிறதா?
பட்டையை கிளப்பிய வருஷமாச்சே.
சூரியன் படமே ஷங்கர் இயக்கம் தான்னு சொல்லுவாங்க. அந்த மொட்டை செண்டிமெண்டால தான் சரண்ராஜ்க்கு ஜெண்டில் மேன்ல மொட்டை போட்டதும்னும் சொல்லி கேள்விபட்டிருக்கேன். அதே மாதிரி பிரபு தேவாவை பயன்படுத்துனது. அடுத்த படத்துல நாயகனாவே பயன்படுத்தினார் ஷங்கர் :)
அண்ணாமலை கூட பாலச்சந்தர் தயாரிப்பு தான். அவர் காட்டுல தான் அதிக மழை. ரோஜா, அண்ணாமலை ரெண்டும் வசூல்ல பட்டையை கிளப்பிய படங்கள். ரெண்டுலயும் பாட்டு செம ஹிட்டு. ஒண்ணு தேவா இன்னொன்னு ரஹுமான் :)
//அம்மாவை வாழ்த்தியும், காதலி/மனைவியை மட்டமாக பேசுவதாலோ என்னமோ, தன் மகன்கள் ரஜினி ரசிகன் ஆவதை பல பெண்கள் விரும்புகிறார்களோ என தோன்றுகிறது.//
இதை நான் இத்தனை நாளா யோசிக்கவே இல்லையே. நல்ல சிந்தனை :)))
தேவர் மகனும், பாண்டியனும் ஒண்ணா ரிலிஸ் ஆச்சுனு நினைக்கிறேன். இதுக்கு அப்பறம் ரஜினி, கமல் படம் ஒரே நாள்ல ரிலிஸாகறது நின்னுடுச்சு.
1993ல் வந்த சில படங்கள் பற்றிய குறிப்புகள் http://www.payanangal.in/2008/09/1993.html
பு.பா.பூ.சூ.போ போல் என்று நினைக்கிறேன்
சுரேஷ், வருகைக்கு நன்றி.
\\புத்தகமாகக் கொண்டு வரும் ஐடியா இருக்கிறதா\\
சும்மா மொக்கைக்காகத்தான் எழுதுகிறேன். நீங்கள் இப்படி கேட்டது மிகுந்த மகிழ்ச்சி.
வருகைக்கு நன்றி வெட்டிபயலார், நீங்களும் கொஞ்சம் களத்தில இறங்கினா அனல் பறக்குமே
\\இதுக்கு அப்பறம் ரஜினி, கமல் படம் ஒரே நாள்ல ரிலிஸாகறது நின்னுடுச்சு.
\\
இதன்பின் 95,2005 ல் இணைந்து வெளிவந்தது
புருனோ உங்கள் பதிவு விலாவாரியாக அசத்தலாக இருந்தது.
\\பு.பா.பூ.சூ.போ போல் என்று நினைக்கிறேன்\\
நீங்கள் பூனையா? சிங்கம்.
புருனோ,
\\பதினெட்டு வயது பாடல் எந்த ட்யூனை காப்பி அடித்தது என்ற பொது அறிவு விஷயம் விடுபட்டுள்ளது \\
கந்தா கந்தா, சஷ்டிக்கு கவசம் பாடி வர்ரேன்யா
// முரளிகண்ணன் said...
வருகைக்கு நன்றி வெட்டிபயலார், நீங்களும் கொஞ்சம் களத்தில இறங்கினா அனல் பறக்குமே
//
நிறைய ஆராய்ச்சி பண்ணனும். முயற்சி செஞ்சி பாக்கறேன் :)
\\இதுக்கு அப்பறம் ரஜினி, கமல் படம் ஒரே நாள்ல ரிலிஸாகறது நின்னுடுச்சு.
\\
இதன்பின் 95,2005 ல் இணைந்து வெளிவந்தது
//
ஆமாம்... அதை யோசிக்கவேயில்லை :)
//1992க்கே மறுபடி போன மாதிரி இருந்தது பதிவு. புத்தகமாகக் கொண்டு வரும் ஐடியா இருக்கிறதா?
//
PDFஆவது மாத்தி வைங்க. நிறைய பேருக்கு ரெஃபரன்ஸுக்கு பயன்படும்.
கலக்கல் முரளி.. ரோஜா, தேவர் மகன் என மறக்க முடியாத படங்கள்..
நல்ல பதிவு
நர்சிம்
சூரியனில் ஷங்கர் உதவி இயக்குநர் அல்ல. இணை இயக்குநர். பவிதரனும், ஷங்கரும் ஏக காலத்தில் ஸாVயிடம் உதவி இயக்குநர்களாக பணி செய்தவர்கள். அப்பொழுது அவர்களுக்குள், யார் முதலில் படம் பண்ணினாலும், மற்றவர் அந்தப் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்களாம். பவித்ரனுக்கே முதல் வாய்ப்பு கிடைத்ததால், அதில் ஷங்கர் இணை இயக்குநராக பணிபுரிந்தார் என்று படித்த ஞாபகம்.
வெட்டியார்,
\\நிறைய ஆராய்ச்சி பண்ணனும். முயற்சி செஞ்சி பாக்கறேன் :)
\\
முயற்சி செய்யவும்
\\PDFஆவது மாத்தி வைங்க. நிறைய பேருக்கு ரெஃபரன்ஸுக்கு பயன்படும்\\
உளவுத்துறை அளவுக்கு நான் ஒர்த் இல்லீங்க
வருகைக்கு நன்றி நர்சிம்
ஓய் கலக்கிக்கிட்டே போறீர்.
பரதன் மலையாள டைரக்டரா? அவர் வேறு படம் ஏதும் எடுத்திருக்கிறாரா??
இன்று வரையிலும் கமலின் சிறந்த ஸ்கிரிப்டு எது என்று கேட்டால் தேவர் மகனைக் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். இது சாதி வெறியை ஊட்டிய படம் என்று கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் அரசியல் செய்ய வாய்ப்பளித்த படம் என்றும் சொல்லலாம்.
ஆமா என்ன அமரன் படத்தை சாதாரணமாய் விட்டு விட்டீர்கள். சந்திரர சூரியனே, கார்த்திக் சொந்தக் குரலில் பாடி கல்லூரி மாணவர்கள் மத்தியில் பஸ்ஸில் பாடுவதற்கென்றே ரொம்ப நாள் உபயோகப்படுத்தப் பட்டு வந்த "வெத்தலை போட்ட சோக்குலதான்"பாட்டு இடம் பெற்ற படம்.
Sorry,
//ஸாVயிடம் //
SAC என்று போட வந்தது 'ஸாV 'ஆகிவிட்டது
யோசிப்பவர் ஒவ்வொரு முறையும் நல்ல தகவல்களைத் தருகிறீர்கள். நன்றி. திருத்தி விடுகிறேன்
//ஒவ்வொரு முறையும் நல்ல தகவல்களைத் தருகிறீர்கள்//
அந்ந்ந்ந்ந்தத காலத்துல இதை விட்டா நமக்கு வேற என்ன வேலை?!;-))
நந்தா
\\பரதன் மலையாள டைரக்டரா? அவர் வேறு படம் ஏதும் எடுத்திருக்கிறாரா??
\\
பரதன் ஆவாரம்பூ என்ற வினீத்,நந்தினி,நாசர்,கவுண்டமணி நடித்த படத்தையும் இயக்கியுள்ளார். அந்த பட பாடல்களான சாமிகிட்ட சொல்லிவச்சு, ஆலோலம் பாடி போன்ற பாடல்கள் செமை ஹிட். நந்தினியை அந்த படத்தில் அருமையாக உபயோகப்படுத்தியிருப்பார் பரதன். :-)))))))))))))
//யார் முதலில் படம் பண்ணினாலும், மற்றவர் அந்தப் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்களாம். பவித்ரனுக்கே முதல் வாய்ப்பு கிடைத்ததால், அதில் ஷங்கர் இணை இயக்குநராக பணிபுரிந்தார் என்று படித்த ஞாபகம்.//
இதை ஷங்கரே தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு வார இதழில் எழுதிய போது கூறியுள்ளார்
முரளிகண்ணன் - பதிவு சூப்பரா இருந்தது. செம்பருத்தி பட பாடல்கள் அந்த வருசத்தோட highlight.
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை, சில மாதங்களாகவே நான் படித்து வருகிறேன் ....நன்றி.........
நான் இப்போதுதான் புதிதாகப் பதிப்பிக்க ஆரம்பித்துள்ளேன் , உங்களுக்கு நேரம் இருந்தால் என்னுடைய பதிவுகளை
பார்த்து உங்கள் கருத்துகளை கூறுங்கள்.....
முகவரி http://arivili.blogspot.com/
பரதன் இயக்கத்தில், இளையராஜா இசையில், பி சி ஸ்ரீராமின் இயக்கத்தில், கமலின் திரைக்கதை வசனத்தில் வந்த அசத்தல் படம்.
//பம்பர விற்பனையை அதிகரித்த படம்//
இதுல உள்குத்து எதுவும் இல்லையே ;-)
//டப் ஆகி வந்து வாழ்க்கை ஒரு வட்டம் என நிரூபித்தது.//
:-)))
//ரஜினி சொந்தக்குரலில் அடிக்குது குளிரு என்ற பாடலை பாடிய படம்//
"பாடிய" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அம்மாவை வாழ்த்தியும், காதலி/மனைவியை மட்டமாக பேசுவதாலோ என்னமோ, தன் மகன்கள் ரஜினி ரசிகன் ஆவதை பல பெண்கள் விரும்புகிறார்களோ என தோன்றுகிறது.//
அவர்கள் வேண்டும் என்றால் இருக்கலாம், அவர்கள் பிள்ளைகளுடன் பார்த்து மகிழலாம், ஆனால் அவர்கள் பிள்ளைகள் ரஜினி ரசிகன் ஆக வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்பது என் கருத்து.
//உலகத்திற்கு ரஹ்மானை அறிமுகம் செய்த படம்//
அந்த படம் வந்த பிறகு இளையராஜாவின் ஆதிக்கம் தமிழ் திரை உலகில் குறைந்து விட்டது.
சூரியன் படத்தில் சத்யசோதனை மற்றும் டேய்! நாராயணா! வசனம் ரொம்ப பிரபலம். அதில் வரும் அனைத்து காமெடியுமே சூப்பர். உண்மையிலேயே நல்ல விறுவிறுப்பான படம்.
//தேவர் மகன்//
பாண்டியன் வெளி வந்த போது உடன் வந்த படம். பொங்கலுக்கு என்று நினைக்கிறேன்.. தலை படம் சங்காகிடிச்சு :-((((
//வந்தேண்டா பால்காரன்,//
அதகளமான பாட்டு..படம் பட்டாசு. இந்த படம் பார்க்கும் போதெல்லாம் நான் ரஜினி ரசிகன் இல்லை :-)
வழக்கம் போல எல்லாம் அருமை
Post a Comment