September 29, 2008

1991 ன் அசத்தல் படங்கள்

1991 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவின் முக்கிய படங்கள் வெளியாகின. இந்த படங்களின் மூலம் சிலர் வெளிச்சத்திற்கு வந்தனர். சிலருக்கு தங்கள் திரைவாழ்க்கையின் உச்சமாகவும் இப்படங்கள் அமைந்தன. அனைத்திற்கும் இசை இளையராஜா.

என் ராசாவின் மனசிலே (எலும்பு கடி)

தமிழ் சினிமாவின் முதல் கோடி ரூபாய் கதாநாயகன் அறிமுகமானது இந்த படத்தில்தான். குழந்தை நடசத்திரமாக இருந்த மீனா கதாநாயகியாக தமிழில் நடித்த முதல் படம். வடிவேலுவுக்கும் இதையே முதல்படம் எனலாம். இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கும் முதல்படம். அதுவரை விநியோகஸ்தரராகவும், சில ராமராஜன் படங்களை தன் ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்தவரான ராஜ்கிரண் தன் முறைப்பெண் மீது அளவு கடந்த பாசம் கொண்ட முரடனாக இப்படத்தில் அறிமுகமானார். முதலில் ராமராஜனையே இப்படத்திற்கு கேட்டனர். அவர் குடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன் என மறுத்ததால் ராஜ்கிரணே நடித்தார். அடுத்து இவர் நடித்து இயக்கிய அரண்மனைகிளியும் வெற்றிபெறவும் தன் மூன்றாவது படத்துக்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். சோலப்பசுங்கிளியே, பெண்மனசு ஆழமுன்னு, போடா போடா புண்ணாக்கு, பாரிஜாத பூவே போன்ற சூப்பர்ஹிட் பாடல்கள் வெற்றிக்கு துணைநின்றன. கவுண்டமணி செந்தில் காமெடியும் உண்டு.

கேப்டன் பிரபாகரன் (வீரப்பாயனம்)

விஐயகாந்த்துக்கு கேப்டன் என்னும் அடைமொழியை தந்த அவரது 100 வது படம். புலன்விசாரனை மூலம் தன் மார்க்கட்டை உயர்த்திய செல்வமணிக்கு இயக்கும் வாய்ப்பை வழங்கினார். மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமானார். சரத்,ரம்யாவும் உண்டு. ஆட்டமா தேரோட்டமா, பாசமுள்ள பாண்டியரு என்ற இரண்டு பாடல்கள் மட்டும். சமீபத்திய லயோலா கருத்துகணிப்பில் விஜயகாந்த்தின் சிறந்தபடமாக மக்கள் இதை தேர்வு செய்திருந்தனர்.

சின்னதம்பி (தாலி எதுக்கு?)

ஏன் ஓடியது எதற்கு ஒடியது என எல்லோரும் குழம்பிய படம். 60 ஆண்டு வசூல் சாதனையை உடைத்த படம். பிரபுவின் படங்களில் பெருவெற்றிப் படம். குஷ்புவுக்கும் அப்படியே. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரை தமிழில் நிலைநிறுத்திய படம். லயோலா கருத்துகணிப்பில் குஷ்புவின் சிறந்தபடமாக மக்கள் இதை தேர்வு செய்திருந்தனர். இந்த படத்திற்கு பின்னர் கைம்பெண் வேடம் மனோரமாவின் சொத்தாயிற்று. அவரை புக் செய்யப்போகும் போது ஒரு டஜன் வெள்ளைசேலையுடன் எல்லோரும் போகத்தொடங்கினர். கவுண்டமனி இதில் மாலைக்கண் நோய் கொண்டவராக தனியாவர்த்தனம். இளையராஜா இப்படத்தின் பாடல்களை அரை மணிநேரத்தில் போட்டுக்கொடுத்ததாக கூறுவார்கள். இயக்கம் பி வாசு.

இதயம் (ஒரு தலை ராகம்)

சின்னதம்பியின் அர்த்தமற்ற காதலையே ஆதரித்த மக்கள் ஆத்மார்த்த காதலை விடுவார்களா?. ஹீரா அறிமுகமான படம். இயக்குநர் கதிர், முரளி ஆகியோருக்கு திருப்புமுனையாய் அமைந்த படம்.

தளபதி (மார்டன் மஹாபாரதம்)

சாட்டிலைட் தொலைக்காட்சி, இணையம் இல்லாமலேயே சிவாஜி பட அளவுக்கு ஹைப் கிளம்பிய படம். பட வெளியீட்டுக்கு முன்னர் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தன. கேசட் ரெக்கார்டிங் சென்டர்களில் இப்பாடல்களை தொடர்ந்து பதிந்து கொண்டே இருந்தார்கள். கமல் ரசிகர்களான நாங்களே குணாவுக்கு போகாமல் இப்படத்தின் முதற்காட்சிக்கு சென்றோம். கர்ணன் ரஜினி, துரியோதனன் மம்முட்டி. அர்ஜீனாக கார்த்திக்கை கேட்டனர். அவர் 15 லட்சம் சம்பளம் கேட்டதால் அர்விந்த்சாமி கலெக்டராக அறிமுகமாகி பல இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்தார். ராக்கம்மா கையை தட்டு, காட்டுக்குயிலு மனசுக்குள்ள, யமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சின்னத்தாயவள் போன்ற பாடல்களை மணிரத்னத்துக்கு போட்டுக்கொடுத்து அவரிடம் இருந்து விடைபெற்றார் இளையராஜா.

குணா (அபிராமி அபிராமி)

இரவு முழுவதும் வெடி, காலை தளபதி, மதியம் வான்கோழி பிரியாணியை முடித்துவிட்டு தலைவர் படத்துக்கு 4 மணி ஷோ. அரைமணி நேரத்திலேயே தூங்கிவிட்டோம். படம் முடிந்து இரவு, தெருவில் ரஜினி ரசிகர்கள் கையில் லட்டை வைத்துக்கொண்டு அபிராமி அபிராமி என ஓட்ட கமலை வைது கொண்டே தூங்கினோம். இரண்டு மூன்று நாட்களுக்கு தெருவில் காலையே வைக்கவில்லை.

இப்போது எங்காவது,

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் சேர்ந்து இங்கு குப்பையாக கொட்டி வச்ச உடம்பு

பந்தபாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்குப்போகும்?

போன்ற வரிகளை கேட்கும் போதோ, நண்பர்களுடனான பேச்சில், தொலைக்காட்சியில் இப்படத்தின் ஞாபகத்தெரிப்புகள் வரும் போது மனது சொல்கிறது, கௌரவமான தோல்விதான் என்று.

இதுதவிர பிரம்மா(சத்யராஜ்) ,தாலாட்டு கேட்குதம்மா (பிரபு, இயக்குநர் ராஜ்கபூர் அறிமுகம்), கோபுர வாசல் (பிரியதர்ஷன் இயக்கம், கார்த்திக்) மாநகரகாவல் (விஜயகாந்த்) போன்ற படங்களும் வந்தன.

இளையராஜா,அடுத்த ஆண்டு ரஹ்மான் வரப்போகிறார் என்று ஒரு காட்டு காட்டியதாகவே தோன்றுகிறது

56 comments:

Thamiz Priyan said...

நல்ல தொகுப்பு.
அந்த நேரத்தில் ஊரில் கமல், ரஜினி ரசிகர்களுக்கிடையே சிறு சண்டை கூட வந்ததாக ஞாபகம்.

வெட்டிப்பயல் said...

எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள் தான். ஆனா இவ்வளவு பெரிய தலைங்களுக்கு நடுவுல ராஜ் கிரண் படம் அடைஞ்ச வெற்றி தான் ஆச்சரியம்.

எல்லா படமுமே நான் தியேட்டர்ல பார்த்த படங்கள் தான் :)

தளபதி, குணா ரெண்டும் தீபாவளி ரிலீஸ். அந்த தீபாவளி மறக்கவே முடியாதது. குணா படத்தை இப்ப பெருமையா ஏத்துக்குற கமல் ரசிகர்களும் அப்ப அதை வெறுக்கவே செய்தார்கள் :)

முரளிகண்ணன் said...

\\ரஜினி ரசிகர்களுக்கிடையே சிறு சண்டை கூட வந்ததாக ஞாபகம்.
\\

தமிழ்பிரியன், மதுரை அபிராமி காம்ப்ளக்ஸ்ல் இரண்டு படமும் ரிலீஸ். பெரிய அடிதடி. கத்திக்குத்து கூட விழுந்ததா ஞாபகம் (யாருக்கோ)

முரளிகண்ணன் said...

வெட்டியார் வருகைக்கு நன்றி.

\\குணா படத்தை இப்ப பெருமையா ஏத்துக்குற கமல் ரசிகர்களும் அப்ப அதை வெறுக்கவே செய்தார்கள் \\

ஆமாம். அதற்கடுத்து சிங்காரவேலன் வந்து இன்னும் கடுப்பேற்றியது. தேவர்மகன் பார்த்தபின்தான் அது தணிந்தது.

அத்திரி said...

இந்தப் படங்களில் நான் அதிகமாக பார்த்தது சின்ன தம்பி+ கேப்டன் பிரபாகரன்( கிடட்த்தட்ட 30 தடவை அதுவும் சின்னதம்பியை ஒரு ஷோ காத்திருந்து பார்த்தேன்) தளபதியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ரஜினி நடித்த ஒரு சில படங்களில் இது முதலிடம்.

முரளிகண்ணன் said...

அத்திரி அவர்களே,

அப்போது நானும் சின்னதம்பியை பலமுறை பார்த்தேன்

அதன்பின் ஹம் ஆப்கே ஹெய்ன் கோன் பல தடவை.

அத்திரி said...

நான் பார்த்த முதல் ஹிந்தி திரைப்படமும் அதுதான் நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் அந்தப் படம் 25 நாட்கள் ஓடியது. எனக்கு தெரிந்து நெல்லையில் அதிக நாட்கள் ஓடிய ஹிந்தி திரைப்படம் இதுதான்.

thamizhparavai said...

அருமை... பழைய பள்ளிக்கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள்....
மாநகர காவல் இசை ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

புருனோ Bruno said...

கமல் தனது காலத்திற்கு அப்பால் (ahead of times) உள்ள ரசனையை வைத்து எடுத்த படம் குணா.

10 வருடம் கழித்து வெளியிட்டிருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் - காதல் கொண்டேன் வெற்றி பெற்றது போல். (கண்களால் கைது செய் இன்னும் 10 வருடம் கழித்து வெளிவந்தாலும் தோல்வி தான் என்பது வேறு விஷயம்)

புருனோ Bruno said...

//இளையராஜா,அடுத்த ஆண்டு ரஹ்மான் வரப்போகிறார் என்று ஒரு காட்டு காட்டியதாகவே தோன்றுகிறது//

ஹி ஹி ஹி

நான் சொன்னால் ராஜா ரசிகர்கள் கோவிக்க போகிறார்கள்...

1. இந்த படங்களில் orchestrationனில் ரஹ்மானின் பங்கு எத்தனை

2. கங்கை அமரனும் ரஹ்மானும் வெளிவந்த பின்னர் இளையராஜா ஆர்கெஸ்ட்ரேஷனில் சிறைச்சாலை தவிர ஒரு படத்திலாவது மிரட்டினாரா

thamizhparavai said...

அரண்மனைக்கிளி பாடல்கள் அனைத்துமே இப்போது கேட்டாலும் தேன்.
ரகுமானின் இசையில் புகழடைந்த மின்மினி(சின்ன சின்ன ஆசை) ,இதிலும் பாடி இருப்பார்கள்(ராத்திரியில் பாடும் பாட்டு)....
//போன்ற பாடல்களை மணிரத்னத்துக்கு போட்டுக்கொடுத்து அவரிடம் இருந்து விடைபெற்றார் இளையராஜா.
//
காரணம் ஏதேனும் தெரியுமா..?
தெரிந்தால்(தெரிந்தவர்கள் ) சொல்லவும்...

புருனோ Bruno said...

இளையராஜாவிடமிருந்து கங்கை அமரனும் ஏ.ஆர்.ரகுமானும் வெளிவந்த பின் அவர் (சிறைச்சாலை தவிர்த்து) எந்த படத்திலும் மிரட்ட வில்லை என்பது கசப்பான உண்மை.

இளையராஜா ஒரு சிறந்த composer ஆனால் orchestrationல் அவருக்கு உதவியது கங்கை அமரனும் ஏ.ஆர்.ஆரும் தான் என்று இசைத்துறையில் சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.

இருவரும் வெளிவந்த பின் வந்த ராஜாவின் படங்கள் வெறும் மெலடி மட்டுமே இருந்தது. தளபதி போலவோ, புது புது அர்த்தங்கள் போலவோ, வருஷம் 16 போலவோ, புன்னகை மன்னன் போலவோ இசைக்கோர்ப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் வெளியேறியது தான் என்கிறார்கள்
--
ராஜா ரசிகர்கள் இதை கண்டிப்பாக மறுப்பார்கள். ஆனால் திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் என்ன தோன்றுகிறது

புருனோ Bruno said...

// கோபுர வாசல் //

வாசலிலே !!

புருனோ Bruno said...

தளபதி படத்தில் ரஜினி கர்ணனின் பிரதிபலிப்பு என்பதை காட்ட சூர்யா என்று பெயர் வைத்து மட்டுமல்லாது ரஜினி வரும் காட்சிகளிலெல்லாம் அவர் பின்னால் சூரியன் வேறு வரும்

நல்ல காலத்திலேயே மணிரத்னம் படம் பாதி இருட்டு. இதில் சில்லவுட் விளைவு வேற என்றாலும் இன்று வரை டீக்கடை முதல் துணிக்கடை வரை ரஜினி படம் வரையப்பட்டுள்ள இடங்களில் அதிக இடங்களில் இருப்பது அந்த பட கெட் அப் தான்

புருனோ Bruno said...

தளபதி

படத்தின் டைட்டிலின் போது காட்டப்படும் காட்சிகளை கவனித்தால் 1991ல் (இன்றைய தொழிற்நுட்பம் இல்லாவிட்டால் கூட) எப்படி அந்த மலைப்பாதையை இவ்வளவு ரம்மியமாக எடுத்தார்கள் என்று வியப்பாக இருக்கும்

புருனோ Bruno said...

தளபதி :

தமிழ் வெளியீட்டில் மம்முட்டி இறப்பார்

அந்த படத்தில் நான் ரசித்த காட்சி (ஏற்கனவே கவனிக்க வில்லையென்றால் அடுத்த முறை கவனிக்கவும்)

கடைசியில் தூப்பாக்கி சூடு நடந்ததும் சுபா தலையை குனிந்து கொள்வார். அதன் பின் அவர் பார்க்கும் போது ரஜினி எழவும் முகத்தில் ஒரு (சிறு) நிம்மதி அடுத்த நொடியே மறைந்து விடும். Hats off to Maniratnam and Shobana. வேறு இயக்குனர்கள் என்றால் அது nasty காட்சியாக மாறியிருக்கும்

புருனோ Bruno said...

ராக்கம்மா கையை தட்டு பாடல் குறித்த ஒரு செய்தி இங்கே இருக்கிறது

புருனோ Bruno said...

தளபதி : புத்தம் புது பூ பூத்ததோ பாடல் திரைப்படத்தில் இடம் பெற வில்லை என்றே நினைக்கிறேன்

புருனோ Bruno said...

பிரம்மா :

“எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்” மற்றும் “இவள் ஒரு” என்று இரு பாடல்கள் ஒரே ட்யூனில் வந்த படம்.

rapp said...

ராக்கம்மா கையத்தட்டு, யப்பா, மறக்கவே முடியாத பாட்டு. இதக் கொஞ்ச நாள் கழிச்சி வெக்கமே இல்லாம காப்பியடிச்சிட்டு, அனு மாலிக்(படம்:போல் ராதா போல், பாடல்: துத்துத்தூ துத்துத்தாரா) ஒரு இண்டர்வ்யூ கொடுத்ததை, எல்லாரும் காறி காறி துப்பினது மறக்கவே முடியாது. யமுனை ஆற்றிலே பாட்டு இன்னிவரைக்கும் அடக்கஒடுக்கமா சீன் போடுற பெண்கள் பாடறத்துக்கு உபயோகப்படற பாட்டு(சின்ன பாட்டு வேற, மனப்பாடம் பண்றதும் ஈசி). இந்தப் படத்துல ரஜினி சார், பானுப்பிரியா மேடம் காம்பினேஷன் பாட்டை நீளத்துக்காக நீக்கிட்டாங்க, அதனால தன் காரெக்டர் கிளாமர் இல்லாம, தன் மார்கேட்டே சரிய இந்தப் படம் ஒரு காரணம்னு எல்லாம் ஒரு சமயம் பானுப்பிரியா மேடம் பேட்டி கொடுத்ததா நியாபகம்.

இந்த வருஷம் பாடகி ஸ்வர்ணலதாவுக்கு செம கலக்கல் வருஷம். போவோமா ஊர்கோலம், ராக்கம்மா, குயில் பாட்டு இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இத வெச்சு அவங்க கேரள நம்பூதிரிக் கிட்ட இருந்து தாயத்து வாங்கி சான்ஸ் வாங்கினாங்கன்னெல்லாம் சும்மா வதந்திகளா சொழட்டி சொழட்டி அடிச்சது:):):)

அதே மாதிரி 'போடா போடா புண்ணாக்கு' பாட்டோட பின்னணி சுவாரசியமானது. 'கண்மணி அன்போடு காதலன்' பாட்டோட சிலேடையும், இதோட சிலேடையும் ஒன்னுன்னுக் கூடப் படிச்சிருக்கேன்:):):)

என் ராசாவின் மனசிலே, வடிவேலுவோட முதல் படம், ஆனா மீனாவின் முதல் படம்(கதாநாயகியாக) இது இல்லைன்னு நினைக்கிறேன். இதய வாசல்னு(கவுண்டமணி, ரமேஷ்அரவிந்த், சரத்குமார், விவேக் நடித்தது) நினைக்கிறேன். உறுதியாகக் கூறமுடியவில்லை.

குணாவுக்கப்புறம் 'பார்த்த விழி' பாட்டை பாடித்தான் ஸ்கூலில் பெரிய கிளாஸ் பசங்க எல்லாம் வரிசையில் நிப்பாங்க, பார்க்கவே ஜாலியா இருக்கும்:):):)

பிரம்மா கவுண்டமணி சார், சத்யராஜ் சார் காமடி ஆஹா, மறக்க முடியாத ஒன்னு.

முரளிகண்ணன் said...

அத்திரி,
அந்த படம்தான் ஷோலேய்க்கு அப்புறம் பல ஊர்களில் ஓடிய இந்திப்படம் என நினைக்கிரேன். மாதுரி திக்சித்துக்கு ரசிகர் மன்றம் வைக்கலாமா என கூட யோசித்தோம்.

முரளிகண்ணன் said...

தமிழ்பறவை
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். மாநகரகாவல் பற்றி திருத்தி விடுகிறேன்.

முரளிகண்ணன் said...

ப்ருனோ தங்கள் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி. பல பதிவுகளுக்கு மேட்டர் கொடுத்துள்ளீர்கள்

முரளிகண்ணன் said...

ராப், நீங்கள் கூறியவற்றில் சிலவற்றை எழுதலாம் என நினைத்தேன் (பானுப்ரியா). தங்கள் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி. பல பதிவுகளுக்கு மேட்டர் கொடுத்துள்ளீர்கள். நல்ல வேளை நீங்கள், வெட்டிபயல், குட்டி பிசாசு, புருனோ போன்றவர்கள் இதை விட்டுவிட்டு வேறு பக்கம் போய்விட்டீர்கள். இல்லையென்றால் என் பாடு திண்டாட்டம்.

ஆதவன் said...

//தமிழ் சினிமாவின் முதல் கோடி ரூபாய் கதாநாயகன் அறிமுகமானது இந்த படத்தில்தான்//

rajini is the first actor in the tamil to reach 1 cr mark. movie mapillai. its released on the year 1990 diwali.

Shankar said...

பின்னி பெடல் எடுத்தீங்க....இது தான் எனது முதல் வருகை. அப்படியே என்ன பள்ளி நாட்களுக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள். எங்கள் குடும்பம் வறுமையில் இருந்ததால் சினிமா பார்க்க வழியில்லை. யாராவது நண்பர்கள் ஓசியில் கூட்டிட்டு போனால் தான் உண்டு. நெல்லையிலே தளபதி படம் ஒன்னேகால் ரூபா டிக்கெட்டில் பார்த்தது. அன்று முதல் ரஜினி ரசிகன் ஆனேன். ம்ம்ம்....மறக்க முடியுமா?
--ஷங்கர்---

சரவணகுமரன் said...

//அவரை புக் செய்யப்போகும் போது ஒரு டஜன் வெள்ளைசேலையுடன் எல்லோரும் போகத்தொடங்கினர்.//

//மணிரத்னத்துக்கு போட்டுக்கொடுத்து அவரிடம் இருந்து விடைபெற்றார் இளையராஜா//

சூப்பர்

முரளிகண்ணன் said...

ஸ்பைடர் வருகைக்கு நன்றி

மாப்பிள்ளை, சிரஞ்சீவியின் மச்சினர் தயாரிப்பு. அபிஷியாலக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 43 லட்சம். இதை அப்பொதைய பத்திரிக்கைகளில் (சினிமா எக்ஸ்பிரஸ்) தெரிவித்திருந்தனர். நாம் வெள்ளையை மட்டும் பேசுவோமே.

1989 release maappillai.

முரளிகண்ணன் said...

சங்கர் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

சரவண குமரன்
வருகைக்கு நன்றி

யோசிப்பவர் said...

கமலின் சிறந்த படங்களுள் ஒன்று குணா!! ஆனால் அவரது நல்ல படங்கள் ஓடாது என்ற ராசிப்படியே, இதுவும் தியேட்டரை விட்டு ஓடியது. இதிலிருந்து தெரிவது கமல் ரசிகர்களுக்கு வேண்டியதும் அவர் பிம்பம்தானேயன்றி, அவரது நல்ல படங்கள் அல்ல!! அப்புறம் எதற்கு கமல் ரசிகனாயிருக்கனும்?!

சி தயாளன் said...

அருமையான பதிவு.. என் காலத்துக்கு முந்தய படங்களைப் பற்றி அபூர்வமான தகவல்கள்...

narsim said...

முரளி கண்ணன்..

வழக்கம் போல் கலக்கல்.. மறுபடியும் 91க்கே போய் படங்களை பார்த்த உணர்வு..


நர்சிம்

வெட்டிப்பயல் said...

//யோசிப்பவர் said...
கமலின் சிறந்த படங்களுள் ஒன்று குணா!! ஆனால் அவரது நல்ல படங்கள் ஓடாது என்ற ராசிப்படியே, இதுவும் தியேட்டரை விட்டு ஓடியது. இதிலிருந்து தெரிவது கமல் ரசிகர்களுக்கு வேண்டியதும் அவர் பிம்பம்தானேயன்றி, அவரது நல்ல படங்கள் அல்ல!! அப்புறம் எதற்கு கமல் ரசிகனாயிருக்கனும்?!
//

யோசிப்பவர்,
வெறும் ரசிகர்களால மட்டுமே ஒரு படம் ஹிட்டாகறதில்லை. அப்படி ஹிட் ஆகியிருக்கனும்னா அஜித் படம் எல்லாமே ஹிட் ஆகியிருக்கனும். ரஜினிக்கு அடுத்த ஓப்பனிங் அவருக்கு தான்.(அப்படியே அது க்ளோஸ் ஆகிடுங்கறது வேற விஷயம்)

ரஜினிக்கு கூட பாபா, குசேலன் எல்லாம் ஃபிளாப் தானே. விஜய்க்கு ஆதி, குருவி ரெண்டும் செம அடி. இத்தனைக்கும் குருவில ஓப்பனிங் குத்து பாட்டு இருந்தது. குத்து பாட்டு இல்லாததால தான் ஆதி ஃபிளாப் ஆச்சுனு சொல்லிட்டு இருந்தாரு தள ;) (தமிழ் சினிமா வெளங்கினா போல தானு சொல்றீங்களா?)

என்னால இன்னும் ஏத்துக்க முடியாது தோல்வி "ஹே ராம்" தான். இந்த படத்தை மக்களுக்கு புரிய வெச்சி ரசிக்க வெச்சிருக்கனும். மீடியாக்கள் அதை செய்திருந்தால் தமிழ் சினிமா இன்னும் நல்ல படங்களை கொடுத்திருக்கும்.

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
ஸ்பைடர் வருகைக்கு நன்றி

மாப்பிள்ளை, சிரஞ்சீவியின் மச்சினர் தயாரிப்பு. அபிஷியாலக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 43 லட்சம். இதை அப்பொதைய பத்திரிக்கைகளில் (சினிமா எக்ஸ்பிரஸ்) தெரிவித்திருந்தனர். நாம் வெள்ளையை மட்டும் பேசுவோமே.

1989 release maappillai.
//

அது சிரஞ்சிவி தெலுகில் நடித்து ஹிட் ஆன அத்தைக்கு எமுடு அம்மாயிக்கு மொகுடு படத்தோட ரீமேக் தான். ப்ரொட்யூசர் அல்லு அர்விந்த் (அல்லு அர்ஜினோட அப்பா). ஆனா நமக்கு சம்பளம் பத்தியெல்லாம் தெரியாது...

நீங்க ரஜினியோட ரீமேக் படங்களை பத்தி கூட எழுதலாம். நம்ம டாக்டரை விட தலைவர் அதிக ரீமேக் படங்களில் நடித்துள்ளார் :) (கடைசி படம் கூட ரீமேக் தான்)

முரளிகண்ணன் said...

வருகைக்கும் தங்கள் தகவல்களுக்கும் நன்றி வெட்டிப்பயலார் அவர்களே

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி டொன்லீ

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நர்சிம்

முரளிகண்ணன் said...

யோசிப்பவர் தங்கள் வருகைக்கு நன்றி.

கமலின் ஆடல், இளமை துள்ளும் நடிப்பால் கவரப்பட்டுத்தான் ரசிகனானேன். அந்த வயதில் குணா பிடிக்கவில்லை. அடிபட்டு வாழ்க்கை என்றால் என்ன என்று உணர்ந்த பின்னரே கமலை கலைஞனாக ரசிக்க முடிந்தது. குணா,மஹாநதி,ஹேராம்,குருதிப்புனல், அன்பேசிவம் படங்களின் அடிநாதத்தை உணர ஒரு வயது கட்டாயம் வேண்டும். இப்போது அது இருக்கிறது.

இனியா said...

நீங்கள் குறிப்பிட்ட வெற்றிப்படங்களில் எல்லாம்
ஒருவரே கதாநாயகன். நம்ம இசைஞானிதான் அவர்.
எல்லாமே காலத்தால் மறக்க முடியாதப் பாடல்கள்.
எத்தனை முறை கேட்டாலும் அழுக்காதப் பாடல்கள்.

ப்ருனோ சொல்வது மிகையான கற்பனையே
அன்றி வேறெதுவும் இல்லை.
கம்பனுக்கு கவிதை எழுத உதவி செய்தது வைரமுத்துன்னு சொல்ற
மாதிரி இருக்கு.

இரா. வசந்த குமார். said...

யாராவது சொல்வார்கள் என்று பார்த்தேன். யாரும் சொல்லவில்லை. நானே சொல்லிடறேன்.

தலைவரின் 'ராக்கம்மா கையத் தட்டு'வில் ஷோபனா ஒரு திருவாசகம் பிட்டு பாடுவாங்க. 'குனித்த புருவமும்...'! மூணு வருஷம் கழிச்சு பத்தாவது படிக்கும் போது, மனப்பாடச் செய்யுள் இது!

தலைவர் புண்ணியத்தில், 'ராக்கம்மாவை' வரிக்கு வரி மனப்பாடம் பண்ணியதால், பரிட்சை சமயத்தில் சும்மா அருவி மாதிரி பொங்கி வந்திச்சு.

செல்வம் said...

மணிரத்னத்துக்கு போட்டுக்கொடுத்து அவரிடம் இருந்து விடைபெற்றார் இளையராஜா.

இதற்கு காரணம் என்ன என்று சொல்லமுடியுமா?? முரளி. தெரிந்து கொள்ள‌ ரொம்ப ஆவலாக உள்ளது..

மற்றப்படி உங்கள் தொகுப்புகள் அனைத்தும் கலக்கல். சினிமா மேல என்னா ஒரு Passion.

Simply Great. :-)

kavi said...

கல்லூரி நாட்களில் தீவிர ரஜினி ரசிகரான நான் பார்த்த முதல் நாள் முதல் காட்சி திரைப்படம் தளபதி மட்டும்தான். இன்றும் என் கல்லூரிக் கால நண்பர்களுடன் படம் பார்த்த நினைவுகள் மனதில் அப்படியே இருக்கின்றன. என் நண்பன் ஒருவன் கூட ராக்கம்மா பாடலுக்கு எழுந்து நடனமாடியதை மறக்கவே முடியாது.

kavi said...

கல்லூரி நாட்களில் தீவிர ரஜினி ரசிகரான நான், முதல் நாள் முதல் காட்சி பார்த்த திரைப்படம் தளபதி மட்டுமே.கல்லூரி நண்பர்களுடன் பார்த்த அந்த நாட்களை இன்றும் மறக்க முடியாது. என் நண்பன் கூட ராக்கம்மா பாடலுக்கு எழுந்து நடனமாடியது இன்னும் நிழலாடுகிறது.

ஆளவந்தான் said...

//கடைசியில் தூப்பாக்கி சூடு நடந்ததும் சுபா தலையை குனிந்து கொள்வார். அதன் பின் அவர் பார்க்கும் போது ரஜினி எழவும் முகத்தில் ஒரு (சிறு) நிம்மதி அடுத்த நொடியே மறைந்து விடும். Hats off to Maniratnam and Shobana. வேறு இயக்குனர்கள் என்றால் அது nasty காட்சியாக மாறியிருக்கும்//

That climax scene (EE adichaan ) copied from God Father III.

Shame on you MANI

புருனோ Bruno said...

//என்னால இன்னும் ஏத்துக்க முடியாது தோல்வி "ஹே ராம்" தான்.//

அது கூட பரவாயில்லை. அந்த படம் புரிய சிறிது வரலாறு தெரிந்திருக்க வேண்டும்

என்னால் புரிந்து கொள்ள முடியாதது அன்பே சிவம் தோல்வி அடைந்தது தான்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு முதற்கண் நன்றிகள் செல்வம்,வசந்தகுமார்,ஆளவந்தான்,புருனோ,இனியா மற்றும் கவி. விரிவான பதில்கள் நாளை தருகிறேன். மன்னிக்கவும்

thamizhparavai said...

வாங்க இனியா கருத்துக்கு நன்றி....
எனது மதிப்பிற்குரிய புருனோ அவர்கள் இதே கருத்தை(...?) இதற்கு முன் சர்வேசனின் பதிவிலும் போட்டிருந்தார்.(தற்போது மீண்டும் கட் காப்பி,பேஸ்ட் செய்திருக்கிறார்)
இதற்கு பதிலளிக்க வேண்டாம். ஏனெனில் இது வேறு பதிவு. இதில் குழப்ப வேண்டாம் என எண்ணி ஒதுங்கி இருந்தேன்.உங்களின் கருத்தைப் பார்க்கவும் சரி நமது கருத்தையும் சொல்லி விடலாமென துணிந்து விட்டேன்.
முதலில் இளையராஜாவின் குணம் அனைவருக்கும் தெரியும். அவர் நினைப்பது, சொன்னது மட்டுமே இசையில் வரும். ஒரு துளி கூ(ட்)டவோ,குறை(க்க)வோ அனுமதிக்க மாட்டார். பாடகர்களிடம் கேட்டுப் பாருங்கள்.(எஸ்.பி.பி,ஜானகி யிடம் மட்டும் இவரே கூறி விடுவார் சில சங்கதிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என).
முரளிகண்ணன் மணிரத்னத்தின் உதவி இயக்குனர்கள் பற்றிக் கூறும்போது சொல்லிய,திரைக்கதையில் மணிரத்னத்தின் தனித்த ஆளுமைதான் இளையராஜாவுக்கும் பொருந்தும்.
கங்கைஅமரனால் தான் ராஜாவின் பாடல்கள் மெருகேறியது எனில், தனித்து இசையில் கங்கை அமரன் செய்த சாதனை என்ன?(வாழ்வே மாயம் தவிர)
இல்லை இல்லை அவர் ஆர்கெஸ்ட்ரேஷனில்தான் உதவினார்,மெட்டெல்லாம் ராஜாவினுடையது எனில் ,கங்கை அமரன் இசையமைத்த பாடல்களில் எத்தனை பாடல்கள் மெட்டு சரியில்லாவிடினும் ஆர்கெஸ்ட்ரேஷ்னில் நம்மைக் கவர்ந்தது?
கங்கைஅமரன் அதிகம் பேசுபவர்.ஆனால் அவரே இதுபோல் சொன்னதில்லை.
சரி.. ரகுமான் விஷயத்திற்கு வருவோம். இளையராஜா 91ல் இசையில் கலக்கியதற்கு ரகுமான் தான் காரணமெனில்,சில விஷயங்கள் எண்ணிப்பார்ப்போம். ரகுமான் 92ல் ரோஜா பண்ணினார். அதற்கு முன் ஏதோ ஒரு மலையாளப்படம் பண்ணி இருக்கிறார்.தனி ரெகார்டிங் ஸ்டுடியோ அமைத்து விளம்பரப்பாடல்கள் பண்ணி இருக்கிறார்.அப்படி இருக்கையில் அவர் அந்த காலகட்டத்தில் இளையராஜாவிற்கு இசைப்பிச்சை போட்டிருந்திருப்பார் என்று சொன்னால் ... எனக்கு வேறு ஒரு பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.இங்கு வேண்டாம்...
புருனோ சார்... சிறைச்சாலை மட்டும்தான் காதுகளைத் திறந்து வைத்துக்கொண்டு பார்த்திருப்பார் போல....

'காதலுக்கு மரியாதை' பின்னணி இசை ரகுமானோ,கங்கைஅமரனோ சி.டியில் ராஜாவிற்கு அனுப்பி வைத்ததா..? 'காதல் கவிதை' படப் பாடல்களும், பின்ன்ணி இசையும் ராஜா ஏதோ மண்டபத்தில் வாங்கியதா..?காசி,அழகி,சொல்ல மறந்த கதை,சேது,பிதாமகன்,ஹே ராம்,விருமாண்டி இதெல்லாம் பார்க்கவே இல்லையா... கேட்கவே இல்லையா..?
நீங்கள் கேட்கலாம். எண்ணிக்கை குறைந்துள்ளதே என...நல்ல படம் வேண்டும் அல்லவா நல்ல இசை மனதில் நிற்க...அதற்காக ராஜாவே படம் இயக்க வேண்டுமா...? உலகம் கிராமமானதில் கலாசார மாற்றம் வந்துவிட்டதில் மக்கள் ரசனை மாறிவிட்டது.
ராஜா என்றுமே ராஜாதான்....

வெட்டிப்பயல் said...

//புருனோ bruno said...
//என்னால இன்னும் ஏத்துக்க முடியாது தோல்வி "ஹே ராம்" தான்.//

அது கூட பரவாயில்லை. அந்த படம் புரிய சிறிது வரலாறு தெரிந்திருக்க வேண்டும்

என்னால் புரிந்து கொள்ள முடியாதது அன்பே சிவம் தோல்வி அடைந்தது தான்.//

அன்பே சிவத்துல காட்சிகளை விட வசனங்கள் ஆட்சி செய்யும். ஆனா ஹே ராம் முழுக்க காட்சிகளும் குறியீடுகளும் தான். அது ஜெயிச்சிருந்தா இன்னும் நிறைய படங்கள் சினிமாவா காட்சி ஊடகமா அனுகியிருக்கும் என்பது என் எண்ணம்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு மிகுந்த நன்றி தமிழ்பறவை, வெட்டிபயல்

இரா. வசந்த குமார். said...

'அன்பே சிவம்'மின் தோல்விக்கு எனக்குத் தோன்றும் முக்கியமான காரணம், கிட்டத்தட்ட அதே நேரத்தில் வெளியான 'தூள்'.

கோபிநாத் said...

முரளி அண்ணே வணக்கம் ;)

உங்க எல்லா பதிவையும் படிச்சிக்கிட்டு வரேன். கலக்குறிங்க ;)

உங்கள் சேவை எங்களுக்கு தேவை ;)

கோபிநாத் said...

அப்புறம் இனியா மற்றும் தமிழ்ப்பறவைக்கு ஒரு ஸ்பெசல் ரீப்பிட்டே ;))

ராஜா எப்பவும் ராஜாதான் ;)

SELVA THE GHILLI said...

Murali,

As per my knowledge, rajinikanth received 1.25C as salary for "THALAPATHY". At the same time he received 1C from other producer for some other movie. then rajini called GV and returned 25 lakhs. When rajini received 1C salary, mumbai medias wrote it as big news especially filmfare.

Selva

நசரேயன் said...

நல்ல தகவல், உங்க பதிவுகளை ஒரு புத்தகமா போட்ட சக்கை போடு போடும்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி வசந்த குமார், கோபிநாத், செல்வா, நசரேயன்
தங்களின் ஊக்கத்திற்க்கு நன்றிகள்