September 26, 2008

திரைப்பட கல்லூரி இயக்குநர்கள் – எங்கே?

திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றாலே யாருக்கும் புரியாமல் படம் எடுப்பார்கள் என்று வணிக சினிமா தன் கதவுகளை அடைத்து வைத்திருந்தது. 1986 ல் ஆபாவாணன் தலைமையில் ஒரு கூட்டம் பூட்டை மட்டுமல்லாது கதவையும் உடைத்துப் போட்டது, ஊமைவிழிகள் என்னும் படத்தால். அடுத்து வந்த 5 ஆண்டுகளில் அந்த மாணவர்கள் பல வெற்றிப்படங்களை கொடுத்தார்கள். அவர்களில் மூன்று வேறுபட்ட இயக்குநர்களை பார்க்கலாம்

ஆர் அரவிந்த்ராஜ் (கிரைம் திரில்லர்)
ஆர் கே செல்வமணி (உலுக்கிய செய்திகள் + அரசியல்)
ஆர் வி உதயகுமார் (கிராமம்)

ஆர் அரவிந்த்ராஜ்

ஊமைவிழிகள் (1986)

காதலில் தோற்ற செல்வந்தன், இளம்பெண்களின் கண்களை சேகரிக்கிறான். மூழ்கும் நிலையில் உள்ள பத்திரிக்கையின் ஆசிரியர் குழு இதை துப்பு துலக்க முயற்சிக்கிறது. விஐயகாந்த் காவல்துறை அதிகாரி. பரபரப்பான படம். ராத்திரி நேரத்து பூஜையில், மாமரத்து பூ எடுத்து, தோல்வி நிலையென நினைத்தால் போன்ற வெரைட்டியான பாடல்களை மனோஜ் கியான் அமைத்திருந்தனர். ஒரு விளக்கு வெளிச்சத்தில் இருந்து கார் அணிவகுப்பு உருவாகும் காட்சி பெரிதும் பாராட்டப்பெற்றது. ரவிசந்திரன்,ஜெய்சங்கர்,கார்த்திக், அருண்பாண்டியன், சந்திரசேகர், செந்தில், சரிதா,சசிகலா என நட்சத்திரபட்டாளமே இருந்தது இந்தப்படத்தில்.

உழவன்மகன் (1987)
எம்ஜியார் பாணியில் விஜய்காந்த் 2 வேடங்களில் நடித்த படம். செம்மறி ஆடே, சொல்லித்தரவா போன்ற அருமையான பாடல்கள். படத்தில் ரேக்ளா ரேஸ் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருக்கும். இதுவும் கொலை, துப்பு வகை படம்.

தாய்நாடு (1989)

சத்யராஜ் ஆர்மி ஆபிசராக நடித்த படம். டி எம் சௌந்தர்ராஜன் எல்லா பாடல்களையும் பாடினார். இதுவும் துப்பறியும் படமே.



ஆர் கே செல்வமணி

புலன் விசாரனை (1990) – ஆட்டோசங்கர்
கேப்டன் பிரபாகரன் (1991) – வீரப்பன் என விஐயகாந்த்தை தூக்கி நிறுத்தியவர். உலுக்கிய உண்மை சம்பவங்களை படமாக்கியவர் அதிலிருந்து வேறுபட்டு செம்பருத்தி (1992) படத்தை இயக்கினார். ரசிகர்கள் மனதில் ரோஜாவை விதைத்தார். அதன்பின் ஆரம்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை (ராஜீவ் காந்தி கொலை) அரசியல் காரணங்களால் 14 ஆண்டுகள் கழித்து வெளியானது. கண்மனி (1994) குப்பை. ராஜமுத்திரை(1995) மட்டம். மக்களாட்சி (1995) ரகளையான படம். அதன்பின் வந்த அசுரன்,அரசியல்,ராஜஸ்தான், அடிமை சங்கிலி என எல்லாம் அத்துக்கொண்டு போய்விட்டன. இவரது அரசியல் பட அனுபவங்கள் இப்போது மனைவி ரோஜாவுக்கு அக்கட கைகொடுக்கின்றன.


ஆர் வி உதயகுமார்
இவரின் முதல் படம் பக்கா திரில்லர், உரிமைகீதம். கொலையான முதல்வரின் மகன், குற்றவாளியாக கருதப்படுபவருடன் இணைந்து உண்மையை கண்டுபிடிக்கும் படம். பிரபு, கார்த்திக் இணைந்து நடித்த இந்தப்படத்தின் வெற்றி பட உலகை இவரின் மேல் திரும்ப வைத்தது. பின்னர் கிழக்கு வாசலில் உச்சிக்குப்போனார். சின்னக்கவுண்டரால் நட்சத்திர இயக்குநரானார். பின்னர் சிங்கார வேலனில் கமலை கவிழ்த்தார். எஜமானில் ரஜினியை சிறுமைப்படுத்தினார், ராஐகுமாரனில் பிரபுவை ஊற்றி மூடினார் (100 வது படம்). இடையில் பொன்னுமணி தப்பியது. கார்த்திக்குடன் இவர் இணைந்த மற்றொரு படமான நந்தவனதேரு தோல்விப்படம். ஆனால் அதையே விக்ரமன் உல்டா செய்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என எடுக்க அது வெற்றி. கடைசியாக கற்க்கசடற வில் வந்து நிற்கிறார்.

இதுதவிர தேவராஜ் (செந்தூரப்பூவே), ரமேஷ் குமார் (அதர்மம்) போன்றவர்களும் வணிக வெற்றி அடைந்தனர். மற்றவர்கள் தயங்கியபோது விஜய்காந்த் இவர்களை நம்பினார். இவர்களும் அவரை கைவிடவில்லை. சென்ற தலைமுறையை சேர்ந்தவர்கள் எங்களால் வணிக படங்கள் செய்யமுடியும் என நிரூபித்து விட்டனர். வரும் தலைமுறை?

இப்பொழுது திரைப்பட கல்லூரி இயங்குகிறதா என்றே தெரியவில்லை. பேராசிரியர்,இயக்குநர் நியமனத்தில் பல பிரச்சினைகள் என்கிறார்கள். எந்தெந்த துறைகளில் சேர்க்கை நடைபெறுகிறது என்றே தெரியவில்லை.

திரைப்பட கல்லூரி மாணவர்களே, ரித்விக் கட்டக், ஜான் ஆப்ரஹாம் ரேஞ்ச் படங்கள் எங்களுக்கு வேண்டாம். அதற்காக பேரரசு, பி வாசு மாதிரி படங்களை எடுத்து விடாதீர்கள். இரண்டுக்கும் இடையில் எங்களை மகிழ்விக்குமாறு படங்களை எடுக்க படியுங்கள்

35 comments:

Athisha said...

அண்ணா மிக நல்ல பதிவு ,

சமீப காலமாக திரைப்படக்கல்லூரி மாணவர்கள் யாரும் நல்ல ஜனரஞ்சகமான படங்களை எடுத்ததாக தெரியவில்லை

இதற்கு அவர்களது பாடத்திட்டமும் , பயிற்சியின் தரமும் கூட காரணமாக இருக்கலாம்,

அது தவிர திரைப்பட கல்லூரி நடிகர்களும் சமீபகாலமாக குறைந்து வருவதை கவனித்தீர்களா....

thamizhparavai said...

நல்ல தகவல் பகிர்வு...
செல்வமணியின் முதல் மூன்று படங்களுமே வெள்ளிவிழாப் படங்கள்.
'மக்களாட்சி' பார்த்துவிட்டு மீண்டு வருவார் என எதிர்பார்த்தேன்..ஆளையே காணவில்லை.
விஜயகாந்த்துடன் சேர்ந்து 'தி மே டே' என்றொரு ஆங்கிலப்படம் எடுப்பதாக ஆரம்பித்தார்.. நல்லவேளை எடுக்கவில்லை.
இதே அரவிந்தராஜ்தான் விஜயகாந்த்தின் 125வது படமான 'உளவுத்துறை'யை இயக்கினார் என நினைக்கிறேன்...

முரளிகண்ணன் said...

\\அது தவிர திரைப்பட கல்லூரி நடிகர்களும் சமீபகாலமாக குறைந்து வருவதை கவனித்தீர்களா\\

ஆமாம் அதிஷா.

முரளிகண்ணன் said...

தமிழ்ப்பறவை உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

\\இதே அரவிந்தராஜ்தான் விஜயகாந்த்தின் 125வது படமான 'உளவுத்துறை'யை இயக்கினார் என நினைக்கிறேன்\\

ஆமாம்.

புதுகை.அப்துல்லா said...

திரைப்பட கல்லூரி மாணவர்களே, ரித்விக் கட்டக், ஜான் ஆப்ரஹாம் ரேஞ்ச் படங்கள் எங்களுக்கு வேண்டாம். அதற்காக பேரரசு, பி வாசு மாதிரி படங்களை எடுத்து விடாதீர்கள். இரண்டுக்கும் இடையில் எங்களை மகிழ்விக்குமாறு படங்களை எடுக்க படியுங்கள்
//

அழகு :)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அப்துல்லா.

rapp said...

ஆர்.வி.உதயக்குமார் சார்தானே, சிவாஜி சார் சத்யராஜ் சார் காம்பினேஷனில் புதிய வானம் எடுத்தார். அப்புறம் கிழக்கு வாசல் மறந்துட்டீங்களே

வெட்டிப்பயல் said...

ஆபாவணனோட இணைந்த கைகளை விட்டுட்டீங்க?

அதுவும் ஒரு கலக்கு கலக்கன படம் தான்.

சிங்கார வேலன் காமெடில பட்டையை கிளப்பின படம். ஆனா சரியா ஓடலை. கவுண்டர் அந்த படத்துல சான்சே இல்லை. கமலையே அவர் தூக்கி சாப்பிட்டிருப்பார்.

முரளிகண்ணன் said...

ராப் கிழக்கு வாசல் சேர்த்திருந்தனே?

சிவாஜி,ரஜினி,கமல்,விஜய்காந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் கவுண்டமணி,செந்தில்,விவேக்,வடிவேலு யாரையும் இவர் அப்ப விட்டுவைக்கலை.

முரளிகண்ணன் said...

வெட்டியார்,

இணைந்த கைகள் என் கே விசுவநாதன் என்பவர் இயக்கியதால் விட்டுவிட்டேன். இவர் இரட்டைவேட ஸ்பெஷலிஸ்ட் காமிராமேன். சங்கிலிமுருகன் படங்களின் ஆஸ்தானம்.

சிங்காரவேலன் கவுண்டர் கலக்கல். மற்றும் அதில் வடிவேல் கமலுக்கு அறிமுகமானதால் தான் தேவர்மகன் வாய்ப்பு.

rapp said...

அச்சச்சோ, சாரி சார், ஆமாம்.

rapp said...

ஆமாம் நீங்க இன்னுமா தூங்க போகலை, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................

பரிசல்காரன் said...

சின்னக்கவுண்டரின் காட்சி அமைப்புகளும்., வசனங்களும், பாடல் வரிகளும் - அப்ப்ப்ப்பா! ச்சான்ஸே இல்லை!

அட, இவரு கமலை வெச்சு எடுக்கறாருப்பா என்று ஒரே குஷியாகி சிங்காரவேலன் போனால்... ச்சே! வெறுக்கடிச்சாரு மனுஷன்!

இயக்குனர்கள் பாடலாசிரியர்களாய்... என்றொரு பதிவு போடுங்க கண்ணன் சார். கண்டிப்பா என் ஓட்டு ஆர்.வி.உதயகுமாருக்குதான். (நிலவே முகம் காட்டு.. எனைப் பார்த்து ஒளியேற்று...)

முரளிகண்ணன் said...

ராப், தொடர் ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

ஆமாம் பரிசல்,
அதற்கு முன்தான் குணா வந்திருந்தது. இவர் சிங்காரவேலன் குறித்து கொடுத்த பேட்டியில் 'கமலை அழகாக காட்டியிருக்கிறேன்' என்றார். ரசிகர்கள் எல்லாம் நொந்து போய்விட்டார்கள்.

இயக்குநர் பாடலாசிரியர் என்றால் நம்ம டி ஆர் வேற இருக்காரே? இப்போ மிஷ்கின்,பேரரசு?

அருண்மொழிவர்மன் said...

இந்த திரைப்பட கல்லூரி இயக்குணர்களிற்கு அப்போது ஒரு பிதாமகனாக ஆபாவாணன் விளங்கினார். அது போலவே விஜயகாந்த். 88 முதல் 90 களின் தொடக்கம் வரை இவர் வெகு வேகமாக முன்னேறிய போது இப்படங்கள் அவருக்கு வெகுவாக கைகொடுத்தன. அப்போது தான் தாணுவும் படங்களை தயாரிக்க தொடங்கியிருந்தார் (நல்லவன்). அதே போல ராம்கி கூட இக்கூட்டணியின் மைந்தன் தான்

narsim said...

//ரித்விக் கட்டக், ஜான் ஆப்ரஹாம் ரேஞ்ச் படங்கள் எங்களுக்கு வேண்டாம். அதற்காக பேரரசு, பி வாசு மாதிரி படங்களை எடுத்து விடாதீர்கள். இரண்டுக்கும் இடையில் எங்களை மகிழ்விக்குமாறு படங்களை எடுக்க படியுங்கள்//

இதைவிட நல்ல வேண்டுகோள் விடுக்கமுடியுமா என்பது ஐயமே..

கலக்கல்

நர்சிம்

கார்க்கிபவா said...

வழக்கம் போல் ஃபுல் மீல்ஸ் முரளி.. அருமை..

//இயக்குனர்கள் பாடலாசிரியர்களாய்... என்றொரு பதிவு போடுங்க கண்ணன் சார். கண்டிப்பா என் ஓட்டு ஆர்.வி.உதயகுமாருக்குதான். (நிலவே முகம் காட்டு.. எனைப் பார்த்து ஒளியேற்று...)/

"பாவை புருவத்தை வளைப்பது ஒருவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிந‌யம்.."

எங்காளு இருக்காருப்பா...

புருனோ Bruno said...

//இயக்குனர்கள் பாடலாசிரியர்களாய்...//

ஆமால் கூட போட்டிக்கு ஷங்கர் எழுதிய ஒரு பாட்டையும் (அது என்ன தெரியுமா) சேர்த்துக்கொள்ளுங்கள்

புருனோ Bruno said...

நீங்கள் அனைவரும் கூறுவது போல் சிங்கார வேலன் அவ்வளவு மோசமான் படம் இல்லை என்றே நினைக்கிறேன் :) :)

முரளிகண்ணன் said...

அருண்மொழி வர்மன் வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

முரளிகண்ணன் said...

நர்சிம் உங்கள் தொடர் ஆதரவுக்கு மகிழ்ச்சி

முரளிகண்ணன் said...

கார்க்கி ஒரு தலை ராகம் பாடல்களின் வரிகளை அடிக்க முடியுமா? இது குழந்தை பாடும் தாலாட்டு பாடல் வரிகள் அனைத்தும் எதிர் உருவகத்தில் அமைந்திருக்கும்

முரளிகண்ணன் said...

காதலன் படத்தில் வரும் சைதாப்பேட்டை பேட்டை ராப் தானே?

முரளிகண்ணன் said...

சிங்கார வேலன் மோசமில்லை தான். கிழக்கு வாசல், சின்னகவுண்டர்க்கு பின் அது வந்ததால் ஒரு ஏமாற்றம்

Subash said...

அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

நன்றி சுபாஷ்

வெண்பூ said...

அருமை.. ஆபாவாணனின் படங்கள் என் சிறு வயதுகளில் மிகவும் வித்தியாசத்தை காட்டியவை. நல்ல தொகுப்பு..

செல்வம் said...

முரளி....ஆனா சிங்காரவேலன் அவ்வளவு மோசமில்லை என்ற டாக்டரின் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன்.

கமலையே தூக்கிச் சாப்பிட்ட நம் கவுண்டரின் கவுண்ட்டர்கள் இன்றும் நம் தொலைக்காட்சிகளுக்குத் தீனி போட்டு வருகின்றன. கதை ஏதோ கொஞ்சம் ஏனோ தானோ என்று இருக்கும் என்பதற்காக இப்படிப் போட்டு ஓட்டக் கூடாது.

நந்தா said...

சிங்காரவேலன் டீ.வி சினிமாக்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட படமோ என்று பலமுறை யோசிக்க வைத்த படம். என்ன காரணத்திற்காக இங்கே பல பேருக்கு பிடிக்க வில்லை என்று தெரியவில்லை. ஆனால் கலக்கல் காமெடியான படம் என்பது என் எண்ணம்.

ஒரு சில படங்கள் என்ன காரணத்திற்காக தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் கலக்கியது என்ற விஷயம் இன்று வரை பெரும் புதிரே. சின்ன தம்பி, போன்ற படங்களின் வரிசையில் எஜமான் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற தனி நபர் துதி பாடும் படங்களைச் சேர்க்கலாம்.

நல்ல வேளையாய் சின்ன கவுண்டரில் இது கொஞ்சம் கம்மி. இப்படத்தின் வெற்றிக்கு கவுண்டமணியையும், செந்திலையும், இளையராஜாவையும் கூட சொல்லலாம்.

ஆனால் என்னைக் கேட்டால் கதாநாயகர்கள் நகைச்சுவை நடிகர்களாய் கலக்கிய வரிசையில் சிங்கார வேலன் கண்டிப்பாய் முக்கிய இடம் பெறும்.

ஆபாவாணனிற்குப் பிறகு தமிழில் அவருடைய இடத்தைப் பிடிக்குமளவிற்கு இன்னும் வேறு யாரும் வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.

முரளிகண்ணன் said...

வெண்பூ தங்கள் வருகைக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி செல்வம்.

சிங்காரவேலன் எனக்குப்பிடித்த படமே.

ஆனால் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன. ஒ ரங்கா ஸ்ரீ ரங்கா கொப்பரத்தேங்கா என பாடல்களும் அப்படியே. கமல் குணாவுக்குப்பின்னும், உதயகுமார் சின்னக்கவுண்டருக்குப்பின்னும் இணைந்த படம் இப்படியா? என கேட்க வைத்துவிட்டது.

முரளிகண்ணன் said...

நந்தா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

யப்பா! எவ்வளவு விஷயங்கள்!!

தல, டமால்னு ஜான் அப்ரஹாமைக் கவுத்துட்டீங்களே :(

nagoreismail said...

ராபர்ட் - ராஜசேகரன் பற்றி எழுதுங்களேன்