60 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் குப்பை கொட்டிவரும் நிறுவனம் ஏவிஎம். 1947 ல் ஏ வி மெய்யப்பன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின் அவரது புதல்வர்களால் நடத்தப்பட்டு வருகிறது. சகோதரர்களில் முதலில் முருகன், பின்னர் குமரன், தற்போது பாலசுப்பிரமணியன் பிரிந்து விட்டனர். சரவணன் மற்றும் அவர் புதல்வர் குகன் மட்டும் முன்னர் சிவாஜி படத்தையும் தற்போது அயன் படத்தையும் தயாரிக்கிறார்கள். பாலசுப்பிரமணியன் விஐய் நடிக்க வேட்டைக்காரன் என்னும் படத்தை தயாரிக்கப்போகிறார். முருகன்,குமரன் சின்னத்திரையில் புகுந்து விட்டனர். ஏவிஎம் வரலாற்றை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்
1947-1979 – ஒரளவு நல்ல படங்கள்
1982-1994 - நத்திங் பட் மசாலா
1994-2001 - சின்னத்திரை காலம்
2002 - ? - மீண்டும் மசாலா
ஒரளவு நல்ல படங்கள்
நாம் இருவர்,அந்தநாள்,வாழ்க்கை,களத்தூர் கண்ணம்மா, அன்பே வா போன்ற ஒரளவு நல்ல படங்கள் இந்தக்காலத்தில் எடுக்கப்பட்டன. இந்தி,தெலுங்கு படங்களும் எடுத்தார்கள்.
நத்திங் பட் மசாலா
ஏவிஎம் மறைந்தபின் இரண்டு ஆண்டுகள் புது படமெடுக்காது இருந்தனர். பின்னர் வணிக மசாலாவை அரைத்து தங்கள் கணக்கைத் தொடங்கினர். தலைமை சமையல்காரராக எஸ் பி முத்துராமன் பணியமர்த்தப்ட்டார். இக்காலத்தில் மசாலா நன்றாக அரைக்கத்தெரிந்தவராவோ, சகாய விலையில் அரைப்பவராவோ யாராவது தென்பட்டால் அவர்களையும் அமுக்கினார்கள்.
இந்தக் காலத்தில் ரஜினியை வைத்து முரட்டுக்காளை, பாயும்புலி, போக்கிரிராஜா, மிஸ்டர் பாரத், மனிதன், ராஜா சின்ன ரோஜா, எஜமான் போன்ற படங்களையும், கமலை வைத்து சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களையும் தந்தார்கள்.
விஐய்காந்த்தை வைத்து சிவப்பு மல்லி,வெள்ளைப்புறா ஒன்று,மாநகர காவல், சேதுபதி ஐ பி எஸ். மற்றும் அர்ஜீனை வைத்து சங்கர் குரு, தாய்மேல் ஆணை, சொந்தக்காரன் போன்ற படங்களையும் தந்தனர்.
பாக்யராஜை வைத்து முந்தானை முடிச்சு, விசுவை வைத்து சம்சாரம் அது மின்சாரம், ராமநாராயணன் மூலம் சிவப்புமல்லி, சுந்தர் ராஜன் மூலம் மெல்லத் திறந்த்து கதவு. பாரதி ராஜா – புதுமைப்பெண். பின்னர் பிரபு-சூரக்கோட்டை சிங்க குட்டி, மோகன் – வசந்தி, ராம்கியுடன் ஒருபடம் என கலந்து கட்டி அடித்தனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் எல்லோருமே ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் போது புக் செய்யப்பட்டவர்கள். வெற்றி பெற்றவுடன் அமுக்கப்பட்டவர்கள். பட தயாரிப்பு வியாபாரம் இதில் என்ன தவறு? என்கிறீர்களா.
இவர்கள் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நேரத்தில்தான், இன்றுவரை தரமான படங்கள் என்று சொல்லப்படும் 16 வயதினிலே, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே,மூன்றாம் பிறை போன்ற படங்கள் வந்து தமிழ்சினிமா புதுப்பொலிவுடன் இருந்தது. இவர்கள் முரட்டுக்காளை,சகலகலா வல்லவன் என்று எடுத்து போக்கையே மாற்றிவிட்டார்கள். தொடர்ந்தும் அதைச்செய்தார்கள். தரமான இயக்குநர்களை வைத்து இவர்களும் நல்ல படம் தந்திருந்தால் தமிழ்சினிமா இன்னும் முன்னேறியிருக்கும்.
சின்னத்திரை காலம்
1990 க்குப்பின் இவர்கள் படங்கள் சறுக்கத்தொடங்கின. திருட்டு வீடியோ\விசிடி பிரச்சினை வேறு. 94 க்குப்பின் சின்னத்திரை பக்கம் ஒதுங்கி நிம்மதியாக, உங்கள் சாய்ஸ் என்று இருந்தனர். அங்கும் இவர்கள் செட் பிராப்பர்டிக்களை விடவில்லை. வீட்டு வேலைக்காரர் யூனிபார்ம் உட்பட பழையவற்றை உபயோகப் படுத்தினர். 1997 பொன்விழாவுக்காக ராஜீவ்மேனன் இயக்கத்தில் மின்சார கனவு படத்தை மட்டும் இக்காலத்தில் எடுத்தனர். ஏ ஆர் ரஹ்மான்,அரவிந்த்சாமி,பிரபுதேவா,கஜோல் என அவர்கள் கொள்கைப்படி பீக்கில் இருந்தவர்களையே பயன்படுத்தினர். எனினும் படம் தோல்வி. இந்தக்காலத்தில் சன்டிவி இவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்தது. அவர்களின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இவர்கள் அரங்கில் படமாக்கப்பட்டன. இவர்களின் படங்கள் அனைத்தையும் வாங்கியது.
மீண்டும் மசாலா
கையில் புது படமிருந்தால் தான் சேனலில் மதிப்பு இருக்கும் என்பதற்காக மீண்டும் பட தயாரிப்பில் இறங்கினார்கள். பார்த்தேன் ரசித்தேன் வெற்றியில் இருந்த சரண், தில் விக்ரம் உடன் இனைந்து ஜெமினியை துவக்கினர். படம் வெற்றி. பின்னர் சின்னத்திரை நடிகர்களை வைத்து அன்பே அன்பே என்னும் உப்புமா, விக்ரமன் – பிரியமான தோழி, சூர்யா – பேரழகன், அஜீத், பேரரசு – திருப்பதி, ஷங்கர், ரஜினி – சிவாஜி என வெற்றி பெற்றவர்களை வைத்து கலந்து கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இனியாவது
வாய்ப்புத்தேடும் திறமைசாலிகளை அரவணைப்பார்களா?
29 comments:
//பார்த்தேன் ரசித்தேன் வெற்றியில் இருந்த சரண், தில் விக்ரம் உடன் இனைந்து ஜெமினியை துவக்கினர். //
மீண்டும் தமிழ் திரையுலகில் “ரவுடி” படங்கள் வருவதற்கு திருப்புமுனையாக இருந்த ப்டம் அது. (ஓ போடு மறக்க முடியுமா)
அது சரி
தில் வெளியான பிறகா ஜெமினி படத்தயாரிப்பு துவங்கப்பட்டது ?
எஸ் பிக்ஷர்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் போன்றவர்கள் கூட சில நல்ல திரைப்படங்களை அளித்திருக்கிறார்கள்
ஆனால் 1980க்கு (அது தவறில்லை என்றாலும்) பிறகு ஏ.வி.எம் முற்றிலும் வணிக நோக்கிலேயே செயல் பட்டது போல் தான் இருக்கிறது
--
//இவர்கள் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நேரத்தில்தான், //
இவர்கள் மூன்றாவது இன்னிங்க்சை ஆரம்பித்த போது தமிழில் வந்திருந்த படங்கள்
அழகி
அன்பே சிவம்
லேசா லேசா
சொல்ல மறந்த கதை
பைவ் ஸ்டார்
இயற்கை
ம்ம்ம்ம்ம்.....
சரண், தில் விக்ரம் உடன் இனைந்து ஜெமினியை துவக்கினர். படம் வெற்றி. பின்னர் சின்னத்திரை நடிகர்களை வைத்து அன்பே அன்பே என்னும் உப்புமா, விக்ரமன் – பிரியமான தோழி, சூர்யா – பேரழகன், அஜீத், பேரரசு – திருப்பதி, ஷங்கர், ரஜினி – சிவாஜி என வெற்றி பெற்றவர்களை வைத்து கலந்து கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்///
நல்ல சினிமாக்கள் சில நேரங்களில் மட்டுமே ஓடும். மசாலா படத்தை எப்படியாவது ஓட்டி விடுவார்கள்.
நன்றாக ஆராய்ந்து தந்திருக்கிறீர்கள்.
அவ்வளவும் உண்மைதான்.
அவர்களுக்கு உறைத்தால் சரி
வருகைக்கு நன்றி புருனோ.
ஜெமினி குறுகியகால தயாரிப்பு. தில் வந்த பின்னரே பூஜை என நினைக்கிறேன். எதற்கும் சரிபார்த்து திருத்தி விடுகிறேன்.
வருகைக்கு நன்றி தமிழ்சினிமா
வருகைக்கு நன்றி சுபாஷ்
adai Madaiyarkalae!!!!!!!!
AVM padam eduppathu avan ishtam
Athil nallathu kettathu ellam irukku
Avarkal vyabara nokkathail than padam edutharkal.
Enge Yaravathu OC il padam panni kondirukkerarkala? Enakku puriyavillai?
Nee Enna sollaverae?
AVM Pichaieyeduppathai parkkavenduma?
//இந்தக் காலத்தில் ரஜினியை வைத்து முரட்டுக்காளை, பாயும்புலி, போக்கிரிராஜா, மிஸ்டர் பாரத், மன்னன், ராஜா சின்ன ரோஜா, எஜமான் போன்ற படங்களையும், கமலை வைத்து சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களையும் தந்தார்கள்.//
மன்னன் படத்தை தயாரித்தது சிவாஜி பிலிம்ஸ்
இவர்கள் தயாரிப்பில் வந்த சம்சாரம் அது மின்சாரம் மிக மிக நல்ல படம். லோ பட்ஜெட் தரமான கதை..உங்கள் இந்த பதிவு பக்க சார்போடு இருப்பதாக கருதுகிறேன்..
மேலும்
மின்சார கனவு தமிழில் வெற்றி படம் ..இந்தியில் தோல்வி படம்
ஜெமினிக்கு பின்னர் சிவாஜிக்கு முன்னர் இவர்கள் தயாரிப்பில் வந்த அனைத்து படங்களுமே தோல்வி படமே ..திருப்பதி உள்பட. ஏன் சூர்யா நடித்த ஒரு படமும்..
இவர்களும் நல்ல படங்களை எடுத்து இருக்கிறார்கள் .. ஆனால் மக்கள் ஆதரவு இல்லாமல் போனதால் மினிமம் கியாரண்டிக்கு மாறி விட்டார்கள்..
தோல்வி படங்கள் எடுத்து கையை சுட்டு கொள்ள அவர்கள் என்ன தவம் செய்கிறார்களா?
ரஜினி உதவி செய்ததால் தான் அவர்களின் பல சொத்துகள் சிவாஜியால் காப்பற்றபட்டன
ஸ்பைடர்,
\\மிஸ்டர் பாரத், மன்னன், ராஜா சின்ன \\
மனிதன் என்று சொல்ல வந்தது மாறிவிட்டது.
திருத்திவிடுகிறேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தில் வெளிவந்தத் 2001ல் . அது விகரமுக்கு சேதுவிற்க்கு பின் கிடைத்த ஒரு பெரிய வெற்றி, மேலும் தனனை அனைத்து தளங்களில் வெளிபடித்தி கொள்ள அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. தரணி என்ற நல்ல திரைகதை அமைப்பாளாருக்கும் கிடைத்த வெற்றி.
ஜெமினி வெளி வந்தது 2002ல்.
ஏவி எம் ரீலிஸ் நாளை முன்பு பூஜை போட்ட நாள் அன்றே சொல்லி விடுவார்கள். சிவாஜி , ஏகன் படங்கள் விதி விலக்கு.இதை போல திட்டமிட்டு படம் எடுபப்தால் வரும் ஆதாயம் கணக்கில்லாதது.
மேலும் தொழிலாளருக்கு விபத்து காப்பீடு, பி எப் போன்றவற்றை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தவர்கள் அவர்க்ளே.
ஏவி எம் போன்ற நிறுவனங்கள் வீழ்ந்தால் அது தமிழ் சினிமாவிற்க்கு நிஜமாகவே ஆபத்து.
நல்ல சினிமா மசாலா சினிமா என்று பதம் பிரிப்பதற்க்கு முன்னால் ஏவிஎம்மின் ஒரு படம் ஓடினால் தமிழ் சினிமா தொழிலாளர்களே புத்துணர்ச்சி அடைவார்கள். காரணம் கிடைக்கும் லாபம் மிக அதிகம்
//இவர்கள் தயாரிப்பில் வந்த சம்சாரம் அது மின்சாரம் மிக மிக நல்ல படம். லோ பட்ஜெட் தரமான கதை.//
உண்மைதான்.
புருனோ, அந்தப்படம் ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற படம். 13 லட்சம் செலவில் (1987) எடுக்கப்பட்டது. அந்த படத்துக்கப்போட்ட செட்டே அதை விட பல மடங்கு வாடகையாக வசூலித்தது.
எல்லாரும் இப்பிடித்தானே படமெடுக்குறாங்க. நல்ல படத்தை மக்கள் எப்பவும் ஆதரிக்கிறாங்க. சமயத்துல நல்ல படம் எடுக்குறேன்னு பிராண்டி வெச்சிர்ராங்க. அதான் ஓட மாட்டேங்குது.
ஒங்க கணக்குப்படி பாத்தா எல்லாருமே இந்த வகைதான். காசு பாக்கத்தான் தொழில். நல்ல படம் இல்லைன்னு தோணுச்சுன்னா நிராகரிக்க வேண்டியது நம்முடைய கடமையும் கூட.
//இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் எல்லோருமே ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் போது புக் செய்யப்பட்டவர்கள். வெற்றி பெற்றவுடன் அமுக்கப்பட்டவர்கள். //
ஓடுற குதிரை மீது பணம் கட்டுபவர்கள். இருந்தாலும் சில சமயம் குதிரை படுத்துக் கொள்ளும், விக்ரமன் டைரக்சனில் பிரியமான தோழி படு ஊத்தல்.
சரியான அலசல். பாராட்டுக்கள் முரளி கண்ணன், விரலிடுக்கில் தமிழ் சினிமா உலகத்தையே வைத்திருக்கிறிர்கள்.
வருகைக்கு நன்றி ராகவன்.
தொழில்தான், இருந்தாலும் அந்த துறையினால் மிக உச்சிக்குப் போனவர்கள், அந்த துறைக்கு ஏதாவது செய்திருக்கலாமே என்ற ஆதங்கமே பதிவாக வெளிபட்டுவிட்டது.
கோவியார் தங்கள் வருகைக்கு நன்றி
முரளிகண்னன்,
நாலு காசு சம்பாதிக்கத்தான் தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் சினிமா படம் எடுப்பது.இல்லாவிட்டால் ஐம்பது வருடத்துக்கு மேல் ஒரு நிறுவனம் சினிமாவில் தாக்குபிடித்திருக்க முடியாது.ஏவிஎம் டிரெண்டை மாற்றவில்லையென்றால் தமிழர்கள் 80களில் அமிதாப் படத்தை பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்.இன்று கேரள சினிமாவுக்கு நடப்பது தமிழ் சினிமாவுக்கும் நடந்திருக்கும்.
கமர்ஷியல் சினிமா இல்லையென்றால் தமிழ்திரைப்படத்துறை டெக்னிக்கலாக இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது.
முரளி,
ஒட்டுமொத்தமாக ஏ.வி.எம்-மை குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஏ.வி.எம் இல்லையென்றால் வேறொரு பீ.வி.எம் வந்திருக்கும்.
காரணம், நம் மக்கள் எல்லாவிதமான படங்களையும் ரசிப்பவர்களே. நீங்கள் குறிப்பிட்டமாதிரி நல்ல படங்களை மட்டுமே தொடர்ந்து நமது சமூகம் ஆதரித்துக்கொண்டிருக்காது, இருக்கவும் இயலாது. கதையோ கலையோ இல்லாத வெறும் மசாலாத்தனமான படங்களும் வரும்தான். அவை ஓடுவதும் பொருளாதாரரீதியாக கனவுத்தொழிற்சாலைக்கு நல்லதே.
நமது மக்களின் கல்வியறிவு மேம்பட்டு இலக்கியம், இசை என ரசனை மேம்படும்போது நீங்கள் குறிப்பிடும் தரத்தையொத்த சினிமாக்கள் பெருக வாய்ப்பு உண்டு.
அதுவரை பெருமூச்சே கதி.
அன்புடன்
முத்துக்குமார்
//இனியாவது
வாய்ப்புத்தேடும் திறமைசாலிகளை அரவணைப்பார்களா//
முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறீர்கள் முரளி கண்ணன்..
ஆம்.. தமிழ்திரையுலகம் சீரான கதையோட்டத்துக்கு திரும்பும் பொழுதெல்லாம் சகலகலாவல்லவன், முரட்டுக்காளை போன்ற மசாலா படங்களை வெளியிட்டு திசையின் போக்கை மாற்றிவந்திருக்கிறது. மிக பாரம்பர்யம் மிக்க நிறுவனம் உங்கள் வேண்டுகோளை ஏற்றால் தமிழ் பட உலகுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
அருமையான பதிவு.. கலக்குங்கள் முரளி..
நர்சிம்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
செல்வன், முத்துக்குமார், நர்சிம்
செல்வன் அவர்களே,
\\நாலு காசு சம்பாதிக்கத்தான் தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் சினிமா படம் எடுப்பது\
ஷங்கர் கமர்ஷியல் படங்களைத்தான் எடுக்கிறார். ஆனால் அவர் சம்பளத்தில் காதல்,கல்லூரி,வெயில், புலிகேசி போன்ற முயற்சிகளை ஆதரிக்கிறார் இல்லையா?
அதுபோல ஏவிஎம் சில படங்களையாவது தந்திருக்கலாமே?
\\ஏவிஎம் டிரெண்டை மாற்றவில்லையென்றால் தமிழர்கள் 80களில் அமிதாப் படத்தை பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்\\
அப்போது ஆந்திர டப்பிங் (கிருஷ்ணா, சோபன்பாபு), விட்டலாச்சார்யா படங்கள், டூபான் குயின், கன்பைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா டைப படங்களும் வந்து கொண்டிருந்தன. ஆங்கில படங்களும் வந்து கொண்டிருந்தன. தனித்தனி ஆடியன்ஸ். ஒரு பெரிய நிறுவனமும் மசாலா படத்தை மட்டும் ஆதரிக்கும் போது அந்த சமன்பாடு மாறிவிடுகிறது.
முத்துக்குமார் அவர்களே,
\\அவை ஓடுவதும் பொருளாதாரரீதியாக கனவுத்தொழிற்சாலைக்கு நல்லதே\\
அவை மட்டுமே ஓடினாலும் நல்லதில்லையே?
\\நமது மக்களின் கல்வியறிவு மேம்பட்டு இலக்கியம், இசை என ரசனை மேம்படும்போது நீங்கள் குறிப்பிடும் தரத்தையொத்த சினிமாக்கள் பெருக வாய்ப்பு உண்டு.
\\
விரைவில் நடக்க விரும்புவோம்
ஏவிஎம் தயாரித்த முரட்டு காளையாவது கொஞ்சம் பரவாயில்லை, சகல கலா வல்லவன் தான் ரொம்ப மோசம்...இளையராஜாவின் பாடல்களும் அப்படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்...நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை...மிகச்சிறந்த பாதையில் பயணித்து கொண்டிருந்த தமிழ் சினிமா முற்றிலும் மசாலாவாகி போனது ஏவிஎம் தயாரித்த படங்களால் தான்...
//வருகைக்கு நன்றி புருனோ.
ஜெமினி குறுகியகால தயாரிப்பு. தில் வந்த பின்னரே பூஜை என நினைக்கிறேன். எதற்கும் சரிபார்த்து திருத்தி விடுகிறேன்.//
தில் வெளியாகி, காசியும் வெளியான பின்னரே ஜெமினி படப்ப்பிடிப்பு தொடங்கப்பட்டது. காசிக்காக மிகசுன் தன்னை சருத்தி (கண்ணை) நடித்த விக்ரம் நிறைய நாட்களுக்கு பிறகு fresh ஆக நடித்த படம் இது என்று சொன்னதாக நினைவு
வருகைக்கு நன்றி செல்வில்கி
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அருண்மொழிவர்மன்
அறுபதுகளில் இவங்க நிறையப் பேரை ஸ்டார் ஆக்கினாங்க. நானும் ஒரு பெண்(விஜயகுமாரி,ராஜன், புஷ்பலதா), சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும்(ஜெய் ஷங்கர்), அன்னை இப்படி வித்தியாசமான கதையம்சமுள்ள பல நல்ல தரமான படங்களை பெரியவர் இருந்தவரை தொடர்ந்து தந்துக்கொண்டிருந்தார்கள். காசேதான் கடவுளடா, படம்தான் எழுபதுகளில் தொடர்ச்சியாக வந்த சின்ன பட்ஜெட் நகைச்சுவை படங்களுக்கு வித்திட்டது என நினைக்கிறேன்
Post a Comment