September 02, 2008

பாலபாரதி இப்படி செய்யலாமா?


பதிவர் சந்திப்புகள் எப்போதும் இரண்டு நாட்களுக்கான உற்சாகத்தைக் கொடுக்கும். வாழ்வதன் மீதான காதலை அதிகப்படுத்தும் அந்த ஒத்த அலை வரிசையினரின் சந்திப்பு. இந்த ஞாயிறு அப்படியில்லை. காரணம் பாலபாரதி.



நான் படித்த சிற்றூரில் நிறத்தாலும் அதிர்ந்து பேசா குணத்தாலும் என் தெருப்பையன்களிடம் நான் அன்னியப்பட்டுபோயிருந்தேன். வகுப்பிலும் வீட்டிலும் செல்லப்பிள்ளை, ஆனால் தெருவில் கிடைக்காத அங்கீகாரம் என்னை அலைக்கழித்தது.என்னை அவர்களிடம் நிரூபிப்பதற்க்காக பலான படங்கள்,சிகரட் என திசை மாறத்தொடங்கினேன். என் தந்தையின் இடமாறுதல் எனக்கு ஏற்படவிருந்த விபத்துக்களை தடுத்து நிறுத்தியது.
ஒரு சிறுகுழுவிடம் எனக்கு கிடைக்காத அங்கீகாரமே என்னை துவளச்செய்தது.



திருநங்கைகள் தங்கள் வாழ்வில் எங்குமே அங்கீகாரம் கிடைக்காமல் வாழ்கிறார்கள். ஒவ்வொருமுறை அது மறுக்கப்படும்போதும் ஒரு காயத்தை அது அவர்கள் மனதில் உண்டாக்குகிறது. வாழ்வின் மீதான காதல்தானே அவர்களை இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளச்செய்கிறது. பாலபாரதியின் அவன் - அது = அவள் படித்தபின் எனக்குத் தோன்றியதெல்லாம் மன வலி என்றால் என்னவென்றே உணராமல் அடிக்கடி மனசு கஷ்டமா இருக்கு என்ற பதத்தை உபயோகிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சிதான்.



இனி திருநங்கைகளை காணும் போதோ அவர்களிடம் உரையாடும் போதோ என்னிடம் அனுதாபத்தொனி இருக்காது. தோழமைத்தொனி மட்டுமே. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.இந்த புனைவு என் மனத்தில் விதைத்ததும் அதைத்தான்.

ஆசிரியர் : யெஸ். பாலபாரதி

தோழமை வெளியீடு விலை: ரூ. 120 பக்கங்கள் : 184


தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்

தோழமை 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை

23 comments:

வெண்பூ said...

நான் இன்னும் படிக்கல முரளி. இந்த வாரத்துல படிச்சிடுவேன்.

narsim said...

//வாழ்வின் மீதான காதல்தானே அவர்களை இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளச்செய்கிறது//

ஆம் முரளி.. ஆழமான சிந்தனை..

நல்ல பதிவு

நர்சிம்

முரளிகண்ணன் said...

வெண்பூ, நரசிம் வருகைக்கு நன்றி

பரிசல்காரன் said...

//வாழ்வதன் மீதான காதலை அதிகப்படுத்தும் அந்த ஒத்த அலை வரிசையினரின் சந்திப்பு//

அருமை!

//மன வலி என்றால் என்னவென்றே உணராமல் அடிக்கடி மனசு கஷ்டமா இருக்கு என்ற பதத்தை உபயோகிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சிதான்.//

புத்தகம் படித்ததன் பாதிப்பு உங்கள் எழுத்திலேயே தெரிகிறது!

Athisha said...

படிச்சு முடிச்சிட்டீங்களா

சொல்லவே இல்ல

Anonymous said...

நானும் படிக்க ஆர்வமாக உள்ளேன்..

jegan said...

Naan unga theru paggama tuition pogum pothu parthirukkiren.Neenga eppa pathalum padichukitte iruppenga unga veetu thinaiyila.Athunala ongaloda wavelength-ku friends kiddakammal irrunthu irrukkalam.Namma orula nall payana iruntha,friend-a vachuka mattanga.-Jegan,BTL.

முரளிகண்ணன் said...

ஜெகன் நீங்க யாரு? நம்ம ஊர் ஆட்கள் பதிவுக்கு வரும் போது அதிக சந்தோசம் கிடைக்கிறது. உங்க ப்ளாக் இன்வைடெட் ரீடர்ஸ்க்கு மட்டும்தானா?.

முரளிகண்ணன் said...

பரிசல்
பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. பெரும்பாலும் நான் feel good movies தான் பார்ப்பேன். feel good stories தான் படிப்பேன். டிவியில் கூட காமெடி மற்றும் பாட்டுதான். அதனால் இந்த புனைவை படிக்கும்போதே மனம் கனத்துத்தான் படித்தேன்.

முரளிகண்ணன் said...

அதிஷா
ஞாயிறு இரவு ஆரம்பித்தேன். பாதிவரை படித்தேன். நேற்று இரவு தான் முடித்தேன்

முரளிகண்ணன் said...

தூயா அவசியம் படியுங்கள்

rapp said...

அடடா, இந்தப் புத்தகம் படிக்க ஆசையாக இருக்கு

முரளிகண்ணன் said...

ராப், நல்லாயிருக்கும். கண்டிப்பா படிங்க

jegan said...

I am youger brother of Thangaprabhu who was your classmate.Probably you would not have remembered me.I am very new to Tamilmanam.Ippathanga oru vazhi poggana intha area-kku varen.As i read day by day, i am getting excited.

Thamiz Priyan said...

எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி உள்ளது. இந்தியா வரும் போது கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டும்.. :)
(நாங்களும் வதிலையில் தான் இருக்கோம்)

முரளிகண்ணன் said...

ஜெகன் சென்ற முறை ஊருக்கு வந்தபோது கூட உங்கள் அண்ணனை சந்தித்தேன். நீங்கள் பதிவுகள் எழுதலாமே?

என் மின்னஞ்சல்
harikrishna2003@gmail.com

முரளிகண்ணன் said...

தமிழ்ப்ரியன் மிக்க மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்

புருனோ Bruno said...

நாவலை வாசித்து விட்டேன்.
லிவ்விங் ஸ்மைலின் புத்தகத்தையும் படித்து விட்டேன். வாடாமல்லி தேடிக்கொண்டிருக்கிறேன். சில நாட்களுக்குள் கிடைத்தால் அதையும் வாசித்து விட்டு ஒரு விமர்சணம் எழுதலாம் என்று நினைத்தேன்.
--
மிக்கேல் கிரைடன் (மைக்கேல் க்ரைடன்) எழுதிய புதினங்களை (உதாரணம் அண்ட்ரோமெடா ஸ்ட்ரென், ஈட்டர்ஸ் ஆப் டெட்) வாசிக்கும் போது எது உண்மை எது கற்பனை என்று எளிதாக கண்டுகொள்ள் முடியாது.

அந்த அளவிற்கு புதின ஆசிரியர் கருத்துகளை சேகரிப்பதில் உழைத்திருப்பார். அதே அளவு அவரின் எழுத்து நடை தாங்கி நிற்கும்

தமிழில் அது போன்ற படைப்புகள் குறைவு. (என் வாசிப்பும் குறைவுதான் சாமி - நான் குமுதமும் சுபாவும் தான் வாசிக்கிறவன் என்பது வேறு விஷயம்) ஒன்று ஆவனப்படம் போன்று வரும் அல்லது கற்பனை என்று எளிதில் தெரிந்து விடும்.

பாலபாரதியின் புதினம் தமிழில் ஒரு புதிய எழுத்து முறையை கொண்டுவந்திருக்கிறது என்று கூறலாம்
--

முரளிகண்ணன் said...

\\அந்த அளவிற்கு புதின ஆசிரியர் கருத்துகளை சேகரிப்பதில் உழைத்திருப்பார். அதே அளவு அவரின் எழுத்து நடை தாங்கி நிற்கும்
\\
\\ஒன்று ஆவனப்படம் போன்று வரும் அல்லது கற்பனை என்று எளிதில் தெரிந்து விடும்.
\\

புருனோ, பாலபாரதி 5 ஆண்டுகள் உழைத்து இதனை எழுதியுள்ளார். அந்த உழைப்பும் அவரின் எழுத்து நடையும் இந்த புனைவுக்கு ஒரு புது பரிமானத்தை தந்துள்ளது.

விரிவான கருத்துக்கு நன்றி. தங்கள் பதிவை மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

புருனோ Bruno said...

பெரும்பாலானவர்கள் (திருநங்கைகளை பற்றிய விபரங்களை, அவர்களின் வாழ்க்கையின் சோகங்களை அறியாதவர்கள்) நாவலின் கதையில், சம்பவங்களில் முழுவதும் ஈடுபட்டு விடுவதால் பாலாவின் எழுத்து நடையும் நாவலின் பின் உள்ள உழைப்பும் எளிதில் புலப்பட்டிருக்காது. --
ஒரு ”கிராபிக்ஸ்” கலைஞரின் மிகச்சிறந்த படைப்பில் (கிராபிக்ஸ் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது உடனடியாக தெரியாதால்) அவருக்கு வெகு குறைவான பாராட்டுக்களே கிடைக்கும்
--
பாலாவின் புதினமும் அது போன்று வந்திருக்கிறது. திருநங்கைகளின் பிரச்சனைகளின் தீவிரத்தில், சோகங்களில் உங்களை பாலாவின் எழுத்து முற்றிலும் மூழ்கடித்துவிட்டதால் பாலாவின் (அபார) எழுத்து நடை, வார்த்தை பிரயோகம், கதை சொல்லும் பாங்கு, புதினத்தின் ஆரம்பத்தில் இரு காலகட்ட கதைகளை மாற்றி மாற்றி சொல்வது போன்றவை குறித்த பாரட்டுகள், விமர்சணங்கள் அவ்வளவாக வரவில்லை. (நீங்கள் கூட எழுதவில்லை :) :) )
--
”அவன் - அது=அவள்” மிக்கேல் கிரைடனின் நாவலை வாசிக்கும் அனுபவத்தை தந்தது.
--
வருங்காலத்தில் பாலா எழுத்து துறையில் பல பெரிய சாதனைகளை சாதிப்பார் என்று உறுதியாக கூறலாம்.

முரளிகண்ணன் said...

புருனோ, உங்கள் கருத்து மிகமிக சரி. என்னை மிகவும் கவர்ந்த புதினம் ஆதவன் அவர்களின் 'என் பெயர் ராமசேஷன்'. ஆனால் தொடர்ந்த மறுவாசிப்பின் மூலமே அதன் நுட்பங்களை அறியமுடிந்தது.

இனிமேல் தான் இதை மறுவாசிப்பு செய்யப்போகிறேன். இரண்டாம் பார்வை பதிவு கட்டாயம் உண்டு. (நானும் பதிவு போடனுமில்லே)

புருனோ Bruno said...

//தமிழில் அது போன்ற படைப்புகள் குறைவு//

மூடுந்து (லாரி) தொழில் பற்றி பாலகுமாரன் ஒரு புதினம் எழுதியிருப்பார் - தலைப்பு நினைவில் இல்லை. இரும்புக்குதிரைகள் என்று நினைக்கிறேன்.

நிஜ தகவல்களை கற்பனையோடு கலந்து வெகு சரளமான தடையற்ற நடையுள்ள கதை அது.

பாலாவின் புதினமும் அது போன்றதே

பாலாவின் இந்த புதின

முரளிகண்ணன் said...

\\மூடுந்து (லாரி) தொழில் பற்றி பாலகுமாரன் ஒரு புதினம் எழுதியிருப்பார் \\

அன்பு புருனோ,

நானும் அதை படித்திருக்கிறேன். அதில் சித்த வைத்தியர் (வளர்ந்த மகன் இருப்பவர்) ஒருவரின் காதலும் ஊடுபாகாக வரும்.

அந்த கதைக்காக தான் செய்த களப்பணியையும் (லாரி பேட்டையை தொடர்ந்து கவனித்தது)பின்குறிப்பாக எழுதியிருப்பார்.


உங்களுக்கு சுபா கதை பிடிக்கும் என்பதால் ஒரு சிறு பகிர்தல்

அவரின் கதைகளில் கண்ணாடி மின்னல் மட்டும் தூண்டில் மிகப்பிடிக்கும்.