September 14, 2008

திருப்புமுனை இயக்குனர் விக்ரமன்

ஏகபோக அரசர்கள் இருக்கும் உலகிலே இந்த ஏகலைவன் பாட்டும் ஜெயிக்கும் நடுவிலே என்று புதுவசந்தமாய் வந்த விக்ரமன் திரைஉலகில் பலருக்கும் திருப்புமுனையை தந்தவர்.

புதுவசந்தம்

ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்கமுடியும் என்று சொன்ன கதை. ஆர்.பி. சௌத்ரி என்ற தயாரிப்பாளரை உருவாக்கிய படம். அவர் இதற்க்குப்பின் 50 படங்களுக்கு மேல் தயாரித்து, பல இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள்,இசைஅமைப்பாளர்கள்,நடிகர்களை. அறிமுகப்படுத்தினார். எஸ் ஏ ராஜ்குமார் (இசை) அவர்களுக்கும் இப்படம் பெரும் திருப்புமுனை. பாலம் என்னும் படத்தின் மூலம் மறுவாழ்வு பெற்றிருந்த முரளிக்கு இப்படம் நல்ல ஏற்றத்தை தந்தது. சித்தாராவை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. சித்தாரா சேலை,தோடு ஒரு ரவுண்டு வந்தது. சார்லியின் காமெடியும் பாராட்டுபெற்றது.

புதியமன்னர்கள்

ரஹ்மான் இசையமைத்த படம். வைரமுத்துவின் ஆதிக்கத்தில் இருந்து அவர் வெளிவந்த படம். பழனி பாரதியின் பாடல்களை ரஹ்மான் இப்படத்தில் பயன்படுத்தினார். இதன் பின்னரே பழனி பாரதி மற்றும் பல புதிய பாடலாசிரியர்களுக்கு கதவு திறந்தது. விக்ரம்,ஸ்ரீமன்,விவேக்,மோகினி,தாமு,பாபு கணேஷ் நடித்த மாணவர்கள் அரசியலுக்கு வரும் கதை. கட்டும் சேலை மடிப்பிலே நான் கசங்கி போனேனே என்ற கலக்கல் பாடல் இடம் பெற்ற படம்

நான் பேச நினைப்பதெல்லம்

ஆனந்த்பாபு,மோகினி,விவேக் நடித்த காத்லர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் முன்னேறி இணையும் கதை. விவேக் தனி காமெடியனாக புரமோசன் ஆன படம்

கோகுலம்

ஜெயராமை மக்களிடம் கொண்டு சென்ற படம். காதலி, காதலன் இறந்தபின் அவன் வீட்டிற்க்கு உதவும் கதை. சின்னி ஜெயந்த்/வடிவேலு காமெடி பெரிதும் ரசிக்கப்பட்டது

பூவே உனக்காக


யுவராணி,சங்கவி,சுவாதி யின் புண்னியத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த விஜய்யின் வாழ்க்கையை மாற்றி அமைத்த படம். ஒரு மாதிரி படங்களில் நடிப்பவர் என்ற இமேஜ் மாறி பேமிலி ஆடியன்ஸ் விஜய்க்கு வந்தது இந்த படத்தில் இருந்துதான். இதன் பின்னரே காதலுக்கு மரியாதை மூலம் முண்னனி நடிகராய் மாறினார். காதல் என்பது எக்சாம் இல்லை வெற்றி தோல்வி பார்க்க, அது ஒரு பீலிங் என்பதே விஜய்யின் முதல் பன்ச் டயலாக்.

சூரிய வம்சம்

நாட்டமைக்குப்பின் சரத்குமார்க்கு வெற்றிப்படம் இதுதான். அதன்பின் இன்னும் கூட இப்படி ஒரு வெற்றிப்படம் தரவில்லை. நாடாளுமன்றத்தேர்தலில் திருனெல்வேலித் தொகுதியில் இவர் போட்டி போட்ட போது, நாட்டாமையையும்,இதையும் நெல்லை செல்லும் எல்லா அரசு பேருந்துகளிலும் போட்டு வெளுத்தனர். இந்தியில் அமிதாப் நடிக்க ரீமேக் செய்யப்பட்டு ஊற்றிக்கொண்டது. தந்தைக்குப் பிடிக்காத மகன் முன்னேறும் கதை. காதல் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ஜா, தகுதி பார்த்து வர? என்ற வசனம் பல இளைஞர்களை அப்போது கனவில் ஆழ்த்தியது.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

கார்த்திக்குக்கு கடைசி சூப்பர் ஹிட் படம். திணறிக்கொண்டிருந்த அஜீத்தை ரெப்ரெஸ் செய்த படம். துண்டு துக்கடா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ரமேஸ் கண்ணா வை முழு நீள காமெடியனாக மாற்றிய படம். நன்றி பாராட்டுதல் கதைக்கரு.

வானத்தை போல

சின்ன கவுண்டருக்குப்பின் பெரிய வெற்றி இல்லாமல் தவித்த விஜயகாந்துக்கு அதை கொடுத்தபடம். ஆஸ்கார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய படம். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இப்படம் வெற்றி பெற்றால் பத்து படமாவது எடுப்பேன் இல்லையென்றால் வினியோகத்துக்கே போய் விடுவேன் என்றார். படம் ஓடி ரமணா,அன்னியன்,தசாவதாரம் போன்ற மெகா பட தயாரிப்பாளராய் மாறினார்.

அதன்பின் இவர் எடுத்த உன்னை நினைத்து சுமாராய் ஓடியது. ப்ரியமான தோழி, சென்னைகாதல் போன்றவை தோல்வி அடைந்தது. இவரின் இரண்டாம் படமான பெரும் புள்ளி இவருக்கு கரும்புள்ளியாய் அமைந்தது. அது மாணவன் ஆசிரியையை காதலிக்கும் கதை. என் உயிர்த் தோழன் புகழ் பாபுவும்,சுமா ரங்கனாத்தும் நடித்தது.

இவரின் பலம்

பேமிலி ஆடியன்ஸ்க்கு ஏற்ற வகையில் கதை பண்னுவது
இனிமையான பாடல்கள், நகைச்சுவை யுடன் அதை கொடுப்பது
எல்லோரும் நல்லவரே என்னும் வகையில் கதாபாத்திரங்களை அமைப்பது
இவரின் எல்லா படங்களும் தெலுங்கில் பெரு வெற்றி பெற்றவை. இங்கு அடிவாங்கிய ப்ரியமான தோழி அங்கே வசந்தம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி அடைந்தது. (இருமொழி படமாகவே இது எடுக்கப்பட்டது. இங்கே மாதவன், அங்கே வெங்கடேஷ்).

இவரின் பலவீனம்

பிண்னனி இசை. இன்னும் லலலா லலல்லா வையே பிடித்து தொங்குவது.புதிய தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தாது

தற்போது விஜயகாந்த்,மீரா ஜாஸ்மின் நடிப்பில் மரியாதை என்னும் படம் இயக்க உள்ளார். தன் குறைகளை களைந்து அதை வெற்றிப்படமாக கொடுக்க வாழ்த்துக்கள்.

25 comments:

சி தயாளன் said...

சினிமா உலகின் முக்கியமானவர்கள் பற்றி அரிய தகவல்களை தந்துள்ளீர்கள்.. நன்றி.. தொடருங்கள்

narsim said...

//ஏகபோக அரசர்கள் இருக்கும் உலகிலே இந்த ஏகலைவன் பாட்டும் ஜெயிக்கும் நடுவிலே //

கலக்கல் ஓப்பனிங் தல..

கோகுலத்தில் காமெடிகள் பேசப்பட்ட ஒன்று..

நல்ல பதிவு..

(லாலாலா லால்லா லாலா...
யோவ் எஸ்.ஏ.ராஜ்குமார்.. இது வலைப்பதிவு.. இங்கல்லாம் வரக்கூடாது..)

நர்சிம்

முரளிகண்ணன் said...

டொன்லீ முதல் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

நர்சிம் தொடர் ஆதரவுக்கு நன்றி.

வெட்டிப்பயல் said...

நல்ல பதிவு... இவர்கிட்ட அஸிஸ்டெண்டா இருந்து டைரக்டரானவங்க பத்தி லிஸ்ட் கொடுப்பீங்கனு பார்த்தேன் :)

குட்டிபிசாசு said...

முரளி,

விக்ரமனுடைய படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நல்லவர்களாக இருக்கும், இல்லாவிடில் ரொம்ப நல்லவர்களாக இருக்கும்.

புதுவசந்தம்...
எனக்கு மிகவும் பிடித்த படம். இதில் கே.எச்.ரவிகுமார் இணை இயக்குனர்.

பூவே உனக்காக...
எஸ்.ஏ.சி யின் பலான படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜயின் வாழ்க்கையில் விளக்கேற்றிய படம்.

என்னத் தான் ராமராஜன் போல இவரையும் டெம்ப்லெட் படமெடுப்பவர் என்று எல்லாரும் கிண்டலடித்தாலும், குறைந்த பட்ஜெட்டில் குடும்பப்பாங்கான நல்ல ஹிட் படங்களை கொடுத்து தயாரிப்பார்களை காப்பாற்றியவர்.

rapp said...

//சித்தாரா சேலை,தோடு ஒரு ரவுண்டு வந்தது//
அட நதியா தோடு தெரியும், சித்தாரா தோடுக் கூடவா வந்தது?

இவரோட மிகப் பெரிய பலவீனம்(தற்போது) என்னன்னா, இன்னமும் குமுதம், விகடன் போன்ற பிரபலப் பத்திரிகைகளில் வரும் நகைச்சுவைத் தோரணங்களை எக்கச்சக்கமா உபயோகப்படுத்தறது. ஆரம்பத்தில் அது கைக்கொடுத்தது, ஆனா இப்போ பட்டிமன்றங்களில் இருந்து, அசத்தப் போவது, கலக்கப் போவதுன்னு எல்லா நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் இதையேத் தானே செய்றாங்க. கடைசி பத்து பதினைந்து நிமிடங்கள் வரைக்கும் இப்படிப்பட்ட காட்சிகளை வரிசைப்படுத்தி சலிப்பேற்படுத்தறார்.

முரளிகண்ணன் said...

பாலாஜி, தங்கள் வருகைக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

குட்டி பிசாசு,
தங்கள் ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

ராப், நீங்கள் சொல்வது சரியே.

சரவணகுமரன் said...

feel good படங்களை அள்ளி கொடுத்தவர். சீக்கிரம் பழைய பார்ம்க்கு வரட்டும்.

கார்க்கிபவா said...

எல்லாம் சரி.. ஆனால் அவரால் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிகொள்ள தெரியவில்லை.. இதனால் தான் பல பெரிய இயக்குனர்கள் இப்போது சொத்தை படங்களையே தருகிறார்கள்... இரண்டாவது, ஒரு மாதிரியான ட்ரீட்மெண்ட்.. அவருன் கடைசி படங்களான சென்னைகாதல், பிரியமான தோழி, உன்னை நினைத்து போன்ற படங்களிலும் அதே உத்தி... அவரின் மற்றொரு முக்கியமான படம் அட பேர் மறந்து போச்சே.. கார்த்திக், அஜித்,ரோஜா எல்லாம் இருப்பாங்க...

Bleachingpowder said...

விக்ரமனோட திருஷ்டினா அது நான் பேச நினைப்பதெல்லம் படமும் அப்புறம் கொஞ்ச நாள் முன்னாடி பரத்தை வைத்து ஒரு அடிதடி மசாலா படத்தை எடுத்திருந்தார், பேரு கூட மறந்து போச்சு. எந்த அறுவை படமென்றாலும் காசு கொடுத்தாச்சேனு முழுசா பாத்துட்டு தான் வருவேன், ஆனா இந்த படத்த பாத்துட்டு தாங்க முடியாம இடைவேளையோட வெளியே வந்துட்டேன்

முரளிகண்ணன் said...

கார்க்கி
உன்னைடத்தில் என்னை கொடுத்தேன் தான் அது. பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேனே.

முரளிகண்ணன் said...

ப்ளீச்சிங் பவுடர்

வருகைக்கு நன்றி

கே.என்.சிவராமன் said...

முரளி கண்ணன்,

தொடர்ந்து தமிழ் சினிமா தொடர்பான உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.

'விமர்சனப் பூர்வமாக இல்லை, வெறும் தகவல்களாக இருக்கின்றன' என சிலர் சொல்லக் கூடும். அல்லது 'தொடர்ந்து சினிமா பத்தியே எழுதாதீங்க... சலிப்பா இருக்கு' என வேறு சில நண்பர்கள் அன்புடன் அறிவுரைகள் சொல்லலாம்.

எது எப்படியிருப்பினும், பதிவுகளில் ஒரு ஆவணமாக தங்கள் திரைப்படம் குறித்த பதிவுகள் அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து எழுதுங்கள். பின்னாளில் நீங்களே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு டாக்குமெண்டேஷனாக இவை மாறியிருக்கும்.

பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுமே ஒவ்வொரு தகவலை சொல்வது இந்த டாக்குமெண்டேஷனை மெருகேற்றிக் கொண்டே இருக்கின்றன.

வாழ்த்துக்கள் நண்பா.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முரளிகண்ணன் said...

\\வாழ்த்துக்கள் நண்பா.

தோழமையுடன்
பைத்தியக்காரன்\\

தங்கள் கருத்துக்கள் எனக்கு மிக உற்சாகத்தை கொடுக்கிறது. தொடர்ந்து எழுதுவேன். நன்றி

புருனோ Bruno said...

//இவரின் பலம்//

1. இரட்டை அர்த்த நகைச்சுவை இல்லாதது
2. அருமையான பாடல் வரிகள். ஆரவாரமில்லாத இசை

//இவரின் பலவீனம்//

ஒரே பாட்டை படத்தில் 3 அல்லது நான்கு முறை காட்டுவது :) :)

//அவரின் மற்றொரு முக்கியமான படம் அட பேர் மறந்து போச்சே.. கார்த்திக், அஜித்,ரோஜா எல்லாம் இருப்பாங்க...//
எனக்கும் பெயர் மறந்து விட்டது. ஆனால் பாடல் ஞாபகம் இருக்கிறது

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

புருனோ Bruno said...

இடுகைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாது. என்றாலும் எழுதுகிறேன்

//ரஹ்மான் இசையமைத்த படம். வைரமுத்துவின் ஆதிக்கத்தில் இருந்து அவர் வெளிவந்த படம். //

ஒரு மாற்று கருத்து - ரமுத்துவின் ஆதிக்கத்தில் இருந்து ஏ.ஆர்.ஆர் வெளிவந்த படம் தெனாலி (2000 நவம்பர்) என்பது என் கருத்து.

2000 மே மாதம் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு தான் ரஹ்மான் வேறு பாடலாசிரியர்களை தேடினார். வைரமுத்து ஹேரிஸ் ஜெயராஜுடன் சேர்ந்து மின்னலே செய்தார்.

தெனாலி பட பாடல் வெளியீட்டின் போது ஏன் வைரமுத்து பாடல் எழுதவில்லை என்று கேட்ட போது ரஹ்மான் கூறிய பதில் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது (அது ஒரு அருமையான வாழ்க்கை தத்துவம்)

“எந்த ஒரு விஷயமும் - நல்லதோ கெட்டதோ - தொடர்ந்து கொண்டே இருக்க் முடியாது ஒரு நாள் முடிவிற்கு வந்து தான் ஆகனும்.” உறவில் விரிசல் என்பது வதந்தியிலிருந்து தக்வலானது இந்த பேட்டிக்கு பின்னர் தான்

அதன் பின்னர் 2001 - 2002ல் ரஹ்மானின் கவனம் பாம்பே ட்ரீம்ஸ் பக்கம் சென்று விட்டது.

அதன் பின்னர் 2002 பிப்ரவரியில் வெளிவந்த கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் மட்டுமே இருவரும் இணைந்தார்கள்.

அதன் பின்னர் வைரமுத்து ரஹ்மான் இசையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தது 2004 வெளிவந்த ஆய்த எழுத்தில் தான் (கண்களால் கைது செய் பாடல்களை எழுதியது யார் என்று நினைவில்லை)
--
வைரமுத்துவை விட்டு விலகிய பின்னர் இளையராஜா தடுமாறியதை விட வைரமுத்துவை விட்டு விலகிய பின்னர் ரஹ்மான் அதிகம் தடுமாறினார் என்பது என் கருத்து
--
ஆனால் சோகம் என்னவென்றால், தனது 1992-2002 பார்ம்மில் 10 சதவிதம் மட்டுமே காட்டும் ரஹ்மானையும், அல்லது தனது 1980 - 1992 பார்மில் 5 சதத்தை மட்டுமே காட்டும் இளையராஜாவையுமே முந்த அடுத்த தலைமுறை வரவில்லை.
--
ஒரு பாடல் அல்லது இரு பாடல் ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை

சொல்லப்போனால் ஒரே படத்தில் உள்ள 5 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆன கடைசி படம் எது

நீயூ தானா

அல்லது அதன் பின்னர் எதாவது படம் வந்துள்ளதா
--
தெரிந்தவர்கள் கூறவும்
--
இசை பற்றி இடுகை எழுதும் போது இந்த தகவல்களை உபயோகித்துக்கொள்ளலாம்

புருனோ Bruno said...

முருங்கைக்காய், ஐஸ் புருட், பா..லூ...குறித்த ஆய்வு இடுகை எப்பொழுது வரும்

:)

முரளிகண்ணன் said...

புருனோ அவர்களே

அந்த படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.

தங்கள் பதிவுகளும் சரி பின்னூட்டங்களும் சரி, எனக்கு தகவல் களஞ்சியங்கள்


பாக்யராஜ் அவர்களைப்பற்றி எழுதும் முன் உங்களிடம் கலந்து விட்டே செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன்

புருனோ Bruno said...

//பாக்யராஜ் அவர்களைப்பற்றி எழுதும் முன் உங்களிடம் கலந்து விட்டே செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன்//

பெயர் சொல்லாமலே ஆளை கண்டுபிடிக்கும் அளவு நம்மோடு கலந்து விட்ட நகைச்சுவை தான் பாக்யராஜின் பலம் :) :)

Karthik Palaniappan said...

His films are mainly male oriented.
Only heros sacrifice for womens.They are portrayed as kind hearted.

Bleachingpowder said...
This comment has been removed by the author.
Bleachingpowder said...

ரொம்ப சாரி, என்னுடைய பதிவிற்கு காப்பி செய்த வாக்கியத்தை போன பின்னூட்டத்தில் இங்கே பேஸ்ட் பன்ணிட்டேன்;)

//His films are mainly male oriented.
Only heros sacrifice for womens.They are portrayed as kind hearted.//

இத நினைச்சு சந்தோச படுங்க கார்த்திக், நமக்காக படம் எடுக்க இவர் ஒருத்தராவது இருக்காறே, பாலசந்தர் மாதிரி பொண்ணுங்க முந்தானைய புடிச்சுட்டே எல்லா படத்தையும் எடுக்காம ;))

Please take this comment lightly. I too have high regards on KB