September 18, 2008

தமிழ் திரைஇசையில் சமையல் பாடல்கள்

இந்த 75 ஆண்டுகளில்,பாடல்கள் இல்லாமல் வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உடனே நினைவுக்கு வருபவை அந்த நாள்,குருதிப்புனல்,கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்றவை. 1940 களில் வந்த படங்களில் குறைந்தது 40 பாடல்கள் இருக்கும்.

இதைப்பற்றி கவிஞர் வாலி ஒருமுறை கூறும் போது, முதல்ல நாப்பது பாட்டுன்னான்,அப்புறம் இருபதுன்னான், அப்புறம் பத்துப்பாட்டு அஞ்சு பாட்டுன்னான் இனிமே நிப்பாட்டுன்னுவான் என்றார்.

இந்த பாடல்களில் பெரும்பாலும்

காதலன் காதலி டூயட் பாடல்கள் (இவை 50% க்கு மேல் இருக்கும்)

காதல் தோல்வி பாடல்கள்

கலாட்டா பாடல்கள் (காதலி/நண்பன்)

தத்துவ பாடல்கள்

எழுகவே டைப் புரட்சி பாடல்கள்

கதநாயகன்/நாயகி அறிமுகப் பாடல்கள்

கவர்ச்சி நடன பாடல்கள்

கானா/குத்து பாடல்கள்

போன்ற வகையை சார்ந்தே அமையும்.

உணவை மையமாக வைத்து பாடப்பட்ட பாடல்கள் மிக குறைவே. அப்படி பாடப்பட்ட பாடல்கள் சில

1 கல்யான சமையல் சாதம்

மாயாபஜார் திரைப்படத்தில் கடோத்கஜன் வேடத்தில் வரும் எஸ் வி ரங்காராவ் பாடும் இப்பாடலில் ஏகப்பட்ட உணவு வகைகள் வரும்.
புளியோதரையும் சோறு, பொருத்தமாய் சாம்பாரு, மந்தார பஜ்ஜி இங்கே? சொஜ்ஜி எங்கே? சுவையான சீனிப்புட்டு, லட்டு என நமக்கு பசி ஏற்படுத்தி விடுவார்கள்.

2. நித்தம் நித்தம் நெல்லு சோறு

மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் கிராம் உணவு வகைகள் அனைத்தும் இடம் பிடித்திருக்கும். நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் மணக்குதைய்யா எனத் தொடங்கி எல்லா வகைகளையும் சொல்லும். பாடல் கடைசியில் தன் காதலை சூசகமாக சொல்லுவார் கதானாயகி. தான் பெண் எனவே உடைத்து சொல்ல முடியாது என்னும் வரியில் அப்பாடல் முடியும்.

3. தூக்கு சட்டிய தூக்கி பார்த்து

எஜமான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. ரஜினி தன் பண்னையில் வேலை செய்பவர்கள் சாப்பாட்டை கவுண்டமணி உதவியுடன் தூக்கிச் சென்று ருசி பார்க்கும் போது பாடும் பாடல். இப்பாடலிலும் பல ஐட்டங்கள் இடம்பெறும். செட்டி நாட்டு ஆச்சி சுட்ட முட்டை தோசை நாக்கு பேசும் என கலக்கலாக இருக்கும்.

4. சமைத்து காட்டுவோம்

உன்னால் முடியும் தம்பி படத்தில் இடம் பெற்றது. மனோரமா விடம் சவால் விட்டு கமலும்,தாரணியும் சமைக்கும் போது பாடும் பாடல். இதில் சமைப்பதற்க்கான செய்முறையே அதிகம் இடம்பெற்றிருக்கும். கருகப் பிள்ளை எங்கே? சாம்பார் பொடி எங்கே? என சமையல் முயற்சிகள் சிரிப்பை வரவழைக்கும்

5. மட்டன் கறி கொண்டு வரட்டா?

பிஸ்தா படத்தில் இடம் பெற்ற பாடல். சர்வராக இருக்கும் கார்த்திக் தங்கள் உணவகத்தில் இருப்பவைகளை வருபவர்களிடம் சொல்லி ஆர்டர் கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும். ஏறக்குறைய எல்லா அசைவ உணவு வகைகளும் இப்பாடலில் இடம் பிடித்திருக்கும்.

6. என்ன வேணும் தின்னுங்கடா டோய்

உயர்ந்த உள்ளம் என்னும் படத்தில் இடம் பெற்றது. கமல் ஒரு அறிமுகமில்லாத ஜோடியின் கல்யானத்திற்க்காக விருந்து கொடுப்பது போல் அமைக்கப் பட்டிருக்கும். இதில் உணவு வகைகளை விட உபசரிப்பு தொனியே அதிகம் இருக்கும்.

இவை தவிர அன்னக்கிளி (முத்து முத்தா பச்சரிசி குத்தத்தான் வேணும்),திருப்பாச்சி (அரைச்சு வச்ச நெல்லுக்கும் ஆட்டி வச்ச மாவுக்கும்)போன்ற படங்களில் விஷேசங்களில் பாடும் பாடலில் உணவு வகைகள் இடம் பிடித்து இருக்கும். நினைவிருக்கும் வரை படத்தில் வரும் காத்தடிக்குது காத்தடிக்குது பாடலில் வரும் பாவம் இந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்தது யாரு என்ற வரிகள் மறக்க முடியாதது.

தமிழில் இதுவரை வந்திருக்கும் பாடல்களில் இவ்வகை பாடல்கள் 0.01% சதவீதமே


16 comments:

குட்டிபிசாசு said...

முரளி,

நீங்க சொன்ன 0.01% விட குறைவான பாடல்கள் தான் தமிழில் வந்திருக்கு... நான் யோசிச்சி பார்த்ததில் நீங்க சொன்னதுக்கு மேல எனக்கு தோணல...

புதுகை.அப்துல்லா said...

ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! திருப்தியான சாப்பாடு !
:))

narsim said...

கலக்கல் முரளி கண்ணன்.

ஃபுல் மீல்ஸ் சாப்ட்ட மாதிரி இருக்கு..

அருமையான பதிவு.. அபாரமான விவரங்கள்!


கலக்குங்க முரளி!

நர்சிம்

முரளிகண்ணன் said...

வாங்க குட்டி பிசாசு. தமிழ் பாடல்கள்ல இது குறைவுதான்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அப்துல்லா, நர்சிம்.

பரிசல்காரன் said...

ரூம் போட்டு யோசிப்பீங்களா சாரே?

ரங்குடு said...

ஏன் சார் இந்தப் பாடல்களை விட்டுட்டீங்களே?

1. சமையலுக்கும் மையலுக்கும் ஓரெழுத்து பேதம் (டி.எம்.எஸ்/பி.சுசிலா)
2. வரதப்பா வரதப்பா
3. அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது (டி.எம்.எஸ், படம் பத்தாம் பசலி)
4. என்ன சமையலோ (எஸ்.பி.பி )

கானா பிரபா said...

Manipoor Maamiyaar - Samayal paadame: SPB

சரவணகுமரன் said...

நல்ல தொகுப்பு...

D said...

Boss....Ithayum sethukonga...

"Soru thinnu naalachu" from Ninaivu chinnam....

Malaysia vaasudevan and Senthil...

Paata upload pannitu link tharen...

YOjimbo...

D said...

Here is the link for the folder....

Go for the song...Sooru Thinnu...

http://www.esnips.com//web/dha007-Treasure/

முரளிகண்ணன் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள் கானா பிரபா,

முரளிகண்ணன் said...

அருமையான தகவல்கள் ரங்குடு, அடிக்கடி வந்து ஆதரவு தாருங்கள்

முரளிகண்ணன் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள் யோஜிம்போ

முரளிகண்ணன் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள் சரவணகுமரன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தில்: உன் சமையல் அறையில்